ராசி பலன் மற்றும் ஜாதகம் கைரேகை ஜோசியம் பார்ப்பது போன்ற காரியங்கள் இன்று நேற்று அல்ல, அது ஆதி காலத்தில் இருந்தே வைத்திருக்கிறது என்பதை அறியமுடியும். பெரும்பாலான மன்னர்கள் தங்கள் அரசவையிலேயே (குடும்ப வக்கீல் குடும்ப டாக்டர் போல) அரசவை ஆஸ்த்தான ஜோதிடர்களையும் சாஸ்திரிகளையும் குறி சொல்பவர்களையும் வைத்திருந்திருக்கிறார்கள் எனபதை மன்னர் கால வரலாறுகளின் மூலம் அறியமுடியும்.
பார்வோனின் காலத்தில் எகிப்த்திலும் ஜோஷ்யர்களும் சாஸ்த்திரிகளும் மந்திர வாதிகளும் இருந்திருக்கிறார்கள் என்பதையும் அவர்கள் "ஒரு சாதாரண கோலை சர்ப்பமாக மாற்றும் அளவுக்கு திறமை பெற்றிருந்தார்கள் என்பதையும் அறிய முடிகிறது.
யாத் 7:11. அப்பொழுது பார்வோன் சாஸ்திரிகளையும் சூனியக்காரரையும் அழைப்பித்தான். எகிப்தின் மந்திரவாதிகளும் தங்கள் மந்திரவித்தையினால் அப்படிச் செய்தார்கள்.12 அவர்கள் ஒவ்வொருவனாகத் தன் தன் கோலைப் போட்டபோது, அவைகள் சர்ப்பங்களாயின;
ராஜாதி ராஜாக்கள் அரசாண்ட பாபிலோன் தேசத்திலும் ஜோசியர்கள் சாஸ்த்திரிகளும இருந்திருக்கிறார்கள் என்பதையும் ராஜாவானவர் தேவையான நேரங்களில் அவர்களை அழைத்தனுப்பி ஆலோசனைபெற்றார் என்பதையும் அதன் அடிப்படையிலேயே ராஜாவாகிய நேபுகாத் நேச்சார் தான் கண்ட சொப்பனத்துக்கு பொருளறிய சாச்த்திரிகளையும்/ஜோஷியரையும் அழைத்தனுப்பினார் என்பதையும் கீழ்கண்ட வசனங்கள் மூலம் அறியமுடிகிறது.
தானியேல் 2:2அப்பொழுது ராஜா தன் சொப்பனங்களைத் தனக்குத் தெரிவிக்கும் பொருட்டு சாஸ்திரிகளையும் ஜோசியரையும் சூனியக்காரரையும் கல்தேயரையும் அழைக்கச்சொன்னான்; அவர்கள் வந்து, ராஜசமுகத்தில் நின்றார்கள்.
அதேபோல் கர்த்தரின் ஜனங்களாகிய இஸ்ரவேல் தேசத்திலும் அநேகர் நாள் நட்சத்திரம் பார்க்கிரவர்களாகவும் அமாவாசி கணிப்பவர்களாகவும் இருந்திருக் கிறார்கள் என்பதை கீழ்கண்ட கர்த்தரின் கடிந்துகொள்ளுதல் மூலம் அறிய முடிகிறது
ஏசாயா 47:13உன் திரளான யோசனைகளினால் நீ இளைத்துப்போனாய்; இப்பொழுதும் ஜோசியரும், நட்சத்திரம் பார்க்கிறவர்களும், அமாவாசி கணிக்கிறவர்களும் எழும்பி, உனக்கு நேரிடுகிறவைகளுக்கு உன்னை விலக்கி இரட்சிக்கட்டும்.
இவ்வாறு ஆதி காலம் தொட்டு அநேகரால் நம்பபட்டு வருவதும் இன்றும் அனேக ஜனங்களால் நம்பபடுவதும் பல பத்திரிக்கைகளில் தவறாமல் பிரசுரிக்கபட்டு, படித்தவர்கள் கூட அந்த ராசிபலனை பர்த்திவிட்டே சில காரியங்களை செய்யுமளவுக்கு மக்கள் மனதில் பதிந்துவிட்டதுமாகிய ராசி மற்றும் ஜோசியம் கணிப்பு முற்றிலும் பொய் என்றோ தவறு என்றோ யாராலும் கூறிவிடமுடியாது என்றே கருதுகிறேன்.
காரணம் நமது வேதாகமத்திலேயே ஸ்திரீகள் அஞ்சனம் பார்த்தும், குறி சொல்லியும் கணித்து சொல்லப்பட இரண்டு சம்பவங்கள் உண்மையாகவே இருந்திருக்கின்றன.
யுத்த நேரத்தில் ஒரு ஸ்திரி சவுலுக்கு அஞ்சனம் பார்த்து சாமுவேல் மூலம் சொல்லப்பட்ட வார்த்தைகள் அப்படியே நிறைவேறின
I சாமுவேல் 28:19கர்த்தர் உன்னுடைய ஜனமாகிய இஸ்ரவேலரையும் பெலிஸ்தர் கையில் ஒப்புக்கொடுப்பார்; நாளைக்கு நீயும் உன் குமாரரும் என்னோடிருப்பீர்கள்; இஸ்ரவேலின் பாளயத்தையும் கர்த்தர் பெலிஸ்தரின் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றான்.
அதேபோல் பவுல் சுவிசேஷம் சொல்லிவந்த காலகட்டங்களில் அவருக்கு எதிர்ப் பட்ட குறிசொல்லும் ஆவியையுடைய ஒரு ஸ்திரி:
அப்போஸ்தலர் 16:16நாங்கள் ஜெபம்பண்ணுகிற இடத்துக்குப் போகையில் குறிசொல்ல ஏவுகிற ஆவியைக்கொண்டிருந்து, குறிசொல்லுகிறதினால் தன் எஜமான்களுக்கு மிகுந்த ஆதாயத்தை உண்டாக்கின ஒரு பெண் எங்களுக்கு எதிர்ப்பட்டாள்.
17. அவள் பவுலையும் எங்களையும் பின்தொடர்ந்து வந்து: இந்த மனுஷர் உன்னதமான தேவனுடைய ஊழியக்காரர், இரட்சிப்பின் வழியை நமக்கு அறிவிக்கிறவர்கள் என்று சத்தமிட்டாள்.
அவள் குறிப்பார்த்து சத்தமிட்டுசொன்ன வார்த்தைகள் உண்மையாகவே இருந்தன.
எல்லாவற்றிக்கும் மேலாக நமதாண்டவராகிய இயேசுவின் பிறப்பையும் அவர் பிறக்க போகும் இடத்தையும் இதுபோன்ற சாஸ்த்திரிகள் அவரின் நட்சத்திரம் உதித்ததை வைத்து முன்னமேயே கணித்து அவர் யூதருக்கு ராஜாவேன்பதை முன்னமேஅறிந்து அவரை பணிந்துகொள்ளவந்தார்கள் என்று வேதம் சொல்கிறது.
மத்தேயு 2:2யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்து கொள்ள வந்தோம் என்றார்கள்.
இதன் அடிப்படையில் பார்த்தால் கர்த்தரின் வார்த்தையை கேட்டு அதை ஜனங்களுக்கு சொல்லி முன்னறிவிக்கும் தீர்க்கதரிசி என்னும் ஞான திருஷ்டிகாரன் ஒருவகை என்றால், தேவனின் நியமணகளையும் அவர் வானத்து ராசிகளை கையாளும் விதத்தையும் ஆராய்ந்து அதன் மூலம், எது எங்கு எப்படி நடக்கும் என்பதை முன்னமே அறிந்துகொள்ளும் சாஸ்த்திரம்பார்த்தால் என்பது இன்னொரு நிலை என்பதை அறிந்துகொள்ளமுடியும்!
இவ்வாறு ஜோசியம் பார்த்து குறி சொல்லி சாஸ்த்திரங்கள் பார்த்து கண்டறியபட்ட அனேககாரியங்கள் சரியாகவே நிறைவேறினாலும் நமதுஆண்டவர் இகாரியங்களை செய்யகூடாது என்று பல வசனங்கள் மூலம் திடமாக கட்ட்டளையிட்டுள்ளார்:
லேவியராகமம் 20:27அஞ்சனம்பார்க்கிறவர்களும் குறிசொல்லுகிறவர்களுமாயிருக்கிறபுருஷனாகிலும் ஸ்திரீயாகிலும் கொலைசெய்யப்படவேண்டும்; அவர்கள்மேல் கல்லெறிவார்களாக; அவர்கள் இரத்தப்பழி அவர்கள்மேல் இருக்கக்கடவது என்று சொல் என்றார்.
இவ்வாறு குறிசொல்கிறவர்கள் கொலை செய்யப்பட வேண்டும் என்கிற அளவுக்கு கடுமையான கட்டளையை தேவன் கொடுத்துள்ளார் என்றால், அதில்
ஏதோ நமது கண்களுக்கு மறைவான மிகப்பெரிய தவறு ஒளிந்திருக்கவேண்டும் என்றே நான் கருதுகிறேன்......
-- Edited by SUNDAR on Saturday 16th of July 2011 11:13:03 AM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
எனது முதல் மகன் பிறந்து சுமார் 15 நாட்களில் அவனுக்கு ஒரு வாயிற்று வலி வர ஆரம்பித்தது. சுமார் அரைமணி நேரம் அவன் சத்தமிட்டு அழும் அழுகையை பார்க்க சகிக்கமுடியாது. மருத்துவரிடம் போனால், ஏதாவது ஒரு ஊசி மற்றும் மருத்து கொடுப்பார், அந்நேரத்துக்கு அது சரியாகிவிட்டலும், மீண்டும் மறுநாள் அதேவலி வந்து அவன் துடிப்பதை பார்த்து என்னால் சகிக்க முடியவில்லை. ஆண்டவரிடம் அதிகமாக மன்றாடினேன் இறுதியில் ஒருநாள் அதற்க்கான காரணத்தை அறியவைத்தார்.
எனது மனைவி இந்து குடும்பத்தை சார்ந்தவள். அதனால் என் மகன் பிறந்த சில நாட்களில் நான் வெளியூர் போயிருந்தபோது, எனக்கு தெரியாமல் அவனுக்கு ஜாதகம் எழுத சென்றிருந்தனராம். அவன் ஜாதகத்தை கணித்த அந்த ஜோசியர் "இவன் ஒரு வயிற்றுவலிகாரன், இவனுக்கு ஒரு வயிற்றுவலி வரும். அது 1வயது வரை நிச்சயம் இருக்கும்" என்று திருவாய் மலந்து சொல்லியனுப்பினாராம். அவர் சொல்லி ஒரு வாரத்துக்குள் அதே வயிற்றுவலி அவனை தாக்கியது.
ஆண்டவரை அதிகம் நம்பும் நான், என் மாமியாரிடம் "நீங்கள் ஜாதகம் எழுதியதாலும், அந்த ஜோசியன் "வயிற்றுவலி வரும்" என்று சாபம்போல வாய் விட்டதாலுமே இந்த வயிற்று வந்துள்ளது. என் தேவன் எல்லோரிலும் பெரியவர் இந்தவலியை தேவன் விரைவில் நிச்சயம் குணப்படுத்துவார். அப்பொழுதாவது இந்த ஜாதகம் பார்ப்பதை நீங்கள் கைவிடவேண்டும்" என்று சவால்விட்டு, உறுதியாக விசுவாசித்தேன். சரியாக மூன்றாவது மாதம் அந்த வயிற்றுவலி நின்று போனது.
இதை நான் இங்கு சொல்ல இரண்டு முக்கிய காரணம் உண்டு.
தேவ சாயலில் உருவான மனிதன் சொல்லும் வாய் சொல்லுக்கு ஒரு குறிப்பிட்ட வல்லமை இருக்கிறது. அவ்வார்த்தைகளை இன்னொருவர் அப்படியே நம்பி விசுவாசிக்கும்போது அது பல நேரங்களில் உண்மையாகிவிடுகிறது
அடுத்து "நம் தேவன் எந்தஒரு காரியத்தையும் எப்பொழுது வேண்டுமானாலும் தன் சித்தப்படி மாற்றிவிட வல்லவர்! அவர் எல்லாவற்றிக்கும் மேலானவர்"
பைபிளை பொறுத்தவரை "வானத்தின் நியமனங்களே பூமியை ஆள்கிறது" என்றும் "ராசிகளை அதனதன் காலத்தில் வரப்பண்ணுகிறவர் தேவனே" என்ற அடிப்படையில் கூறப்பட்டுள்ளது.
யோபு 38:32இராசிகளை அதினதின் காலத்திலே வரப்பண்ணுவாயோ? துருவச்சக்கர நட்சத்திரத்தையும் அதைச் சேர்ந்த நட்சத்திரங்களையும் வழிநடத்துவாயோ?
என்று யோபுவை பார்த்து தேவன் கேட்பதால். இக்காரியங்களை எல்லாம் செய்பவர் அல்லது நிர்ணயித்தவர் அவரே என்பது நமக்கு புலனாகிறது! இவ்வாறு ராசிகளை நியமித்து ஆளும் சர்வவல்ல தேவனை நாம் அறிந்துகொண்டால் பின்னர் அவர் நியமனத்தால் நடத்தப்படும் ராசிகளை பற்றி அறிந்து கொள்ளவேண்டிய அவசியமே இல்லையே!
ஜோஷ்யத்தில் உண்மை இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம் ஆனால் தேவன் குறிகேட்பதையும்/நாள்பார்ப்பதையும் தடை செய்துள்ளதால் அது நமக்கு தேவையில்லை!
என் ராசி/நட்சத்திரம் எதுவும் எனக்கு தெரியாது. நான் நாள் பார்ப்பது, சகுனம்
பார்ப்பது, ஜாதகம் பார்ப்பது, ஜோசியம் பார்ப்பது, குறி கேட்பது எதுவும் செய்வது கிடையாது. ஆகினும் எந்த குறைவுமின்றி சுகமாகவே தேவன் என்னை வாழ வைத்துள்ளார். ஆண்டவரை அறிந்துகொண்ட நாளில் இருந்து, கடந்த 19 வருடங்களாக என்னுடய உடம்பில் ஒரு இன்ஜக்சன்கூட போட்டது இல்லை.
ஆண்டவர் கொடுத்த மூன்று குழந்தைகளை (மூத்தவனுக்கு வயது 19) வளர்த்து வரும் நான், மருத்துவமனைக்கு என்று ஒரே நேரத்தில் அதிகம் செலவழித்தது ரூ2000/- அதுவும் எனது மகள் பிறந்தபோது நடந்த மருத்துவமனை செலவே!
எந்த ராசியும் ஜோசியமும் பார்க்காமலேயே இன்றுவரை எனக்கு எந்த குறையும் இல்லாமல் தேவன் என்னை போஷித்து நடத்துகிறார்.
ராசியும் ஜோசியமும் பார்ப்பவர்கள் எந்த துன்பமும் இல்லாமல் வாழ்கின்றனரா? சற்று யோசிக்கவும்!
எங்கள் வீட்டுக்கு பக்கத்து தெருவில் வசித்த ஒரு வசதி படைத்தவர் என்ன செய்தாலும், எங்கும் சென்றாலும் நாள் நட்சத்திரம், சகுனம் பார்க்காமல் செய்யவே மாட்டார்! அவ்விஷயத்தில் அவர் மிகவும் எச்சரிக்கையானவர்! ஆனால் ஒருநாள் அவர்கள் குடும்பத்தோடு ஒரு கோவிலுக்கு சென்ற போது அவரால் சென்ற வேன் விபத்துக்குள்ளாகி அவரும் அவர் குடும்பத்தினர் பலரும் மரித்துபோனார்கள்.
அந்தோ! அவருக்கு அவர் நம்பிய நாள் நட்சத்திரம் ஜோசியம் எதுவுமே கைகொடுக்கவில்லை!
ஆண்டவர் ஒருவரே தீமையினின்று ரட்சிக்க வல்லவர்! வேறு எதுவுமே நம்மை ரட்சிக்க முடியாது! என்று ஆண்டவர் சவாலாக சொல்லும் வார்த்தை இதோ:
மற்ற மதத்தினவர்கள் மட்டுமல்லாமல் கிறிஸ்தவர்களும் கூட இப்படிப்பட்ட காரியங்களை செய்கிறார்கள் என்பதை பார்க்கும்போது சற்று கஷ்டமாகத்தான் இருக்கிறது.
லேவியராகமம் 19:31 அஞ்சனம் பார்க்கிறவர்களை நாடி, குறிசொல்லுகிறவர்களைத் தேடாதிருங்கள்; அவர்களாலே தீட்டுப்படவேண்டாம்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.
வசனம் செய்யாதிருங்கள் என்று ஒரு காரியத்தை சொன்னால் அதை செய்யாதிருப்பதுதான் நல்லது.
நாம் மீறி செய்தால் அதற்கு பொறுப்பு முழுவதும் நாமாகத்தான் இருக்கமுடியுமே தவிர வேறு யாரோ அல்ல....
இன்றைய காலகட்டத்தில் தன் மகனுக்கோ / மகளுக்கோ திருமணம் என்றதும் எல்லாரும் நல்ல நாளை பார்கிறார்கள்.
இன்னும் ஒருசிலர் மறைமுகமாக ஜாதகத்தையும் பார்கிறார்கள் அதுமாதிரமல்லாமல் செய்வினை / ஏவல் என்று பல காரியங்களுக்காக தேவன் செய்யகொடாது என்று சொன்ன காரியங்களை எல்லாம் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
மேலும் பிசாசுகள் நடக்கபோகிறவற்றை ( நடந்தவற்றை) ஓருஅளவுக்கு அறிந்திருக்கின்றன
அவைகளை நாடினால் அவகள் உங்களுக்கென்று விதியை ( உன் வாழ்வில் என்ன நடைபெறவேண்டும்) எழுதும் அதை விசுவாசித்தால் / அறிக்கையிட்டால் வாழ்க்கை கப்பல் அதை நோக்கி திரும்பும்
தேவனுக்கு பிடிக்காத எந்த ஒரு காரியத்தையும் நாம் துணிந்து செய்யும்போது முதலில் அது ஒன்றுமில்லாதது போல் சாதாரணமாக இருந்தாலும் இறுதியில் அது "கொலை பாதகம்" வரை நம்மை இழுத்து செல்லும் சங்கிலியாவே மாறிவிடும்.
அதுபோல் இந்த இந்த ஜோஷ்யம் குறி சொல்லுதலை நம்மி ஏமாந்து குழந்தைகளை நரபலியிடும் நிலை வரை சென்றவகளை பற்றிக்கூட நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.
தேவனின் பாதியில் நல்லதை நினைத்து நல்லதை செய்தால் நல்லதே நடக்கும் மற்றபடி தீயவர்கள் எந்த ஜோஷ்யரிடம் போனாலும் அவர்களுக்கு வரப்போகும் தீமைக்கு தப்பிவிடவே முடியாது.
ஏசாயா 47:17. ஆகையால் தீங்கு உன்மேல் வரும், அது எங்கேயிருந்து உதித்ததென்று நீ அறியாய்; விக்கினம் உன்மேல் வரும், நீ அதை நிவிர்த்தியாக்கமாட்டாய்; நீ அறியாதபடிக்குச் சடிதியாய் உண்டாகும் பாழ்க்கடிப்பு உன்மேல் வரும்.
12. நீ உன் சிறுவயதுமுதல் பிரயாசப்பட்டுப் பழகிவருகிற உன் ஸ்தம்பன வித்தைகளையும், உன் திரளான சூனியங்களையும் நீ அநுசரித்து நில்; அவைகளால் உனக்குப் பிரயோஜனம் உண்டோ, பலன் உண்டோ, பார்ப்போம்.
13. உன் திரளான யோசனைகளினால் நீ இளைத்துப்போனாய்; இப்பொழுதும் ஜோசியரும், நட்சத்திரம் பார்க்கிறவர்களும், அமாவாசி கணிக்கிறவர்களும் எழும்பி, உனக்கு நேரிடுகிறவைகளுக்கு உன்னை விலக்கி இரட்சிக்கட்டும்.
15. உன் சிறுவயதுமுதல் நீ பிரயாசப்பட்டு எவர்களுடன் வியாபாரம்பண்ணினாயோ, அவர்களும் அப்படியே இருப்பார்கள், அவரவர் தங்கள் போக்கிலே போய் அலைவார்கள்; உன்னை இரட்சிப்பார் இல்லை.
13 நாள் உண்டகாததற்கு முன்னும் நானே இருக்கிறேன்; என்கைக்குத் தப்புவிக்கத்தக்கவன் இல்லை; நான் செய்கிறதைத் தடுப்பவன் யார்?
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)