இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: அதிகம் ஒப்புவிக்கபட்டவனிடம் அதிகம் கேட்கப்படும்!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2008
Date:
அதிகம் ஒப்புவிக்கபட்டவனிடம் அதிகம் கேட்கப்படும்!
Permalink  
 


ஆவிக்குரிய காரியங்களில் அதிக ஆர்வமுள்ள நாம் தேவன் நம்மோடு பேசவேண்டும், தேவனின் வெளிப்பாடுகளை நாம்பெறவேண்டும், தேவ வழிநடத்துதலை நாம் உணரவேண்டும் என்பதுபோன்று  அதிகமாக ஏதாவது எதிர்ப்பார்க்கிரோம். சிலரது ஆவிக்குரிய அனுபவங்களை கேட்கும்போது அல்லது பார்க்கும்போது 'ஐயோ' ஆண்டவர்  நமக்கும் இதுபோல் வல்லமையையும் வரங்களையும் தரமாட்டாரா? என்ற ஏக்கம் நமக்குள்  ஏற்ப்படுகிறது!  
 
ஆனால் ஆவிக்குரிய வரங்ககளை பொறுத்தவரை அவைகள்  சதாரணமான  ஓன்று  என்று யாரும் எண்ணிவிட வேண்டாம் வரங்களையும் வெளிப்பாடுகளையும் பெறுவது எனபது  கத்திமேல் நடக்கும் ஒரு நிலைக்கு சமம்!  ஒருபுறம் அது மேன்மையான ஒன்றுபோல் தெரிந்தாலும், இன்னொருபுறம் தேவனால்  வழங்கப்படும் ஒவ்வொரு வல்லமை மற்றும்  வரங்களுக்கு பின்னாலும்  அனேக நிபந்தனைகள்  ஒளிந்திருக்கிறது. என்பதை நாம் அறியவேண்டும்!  
 
பெற்ற வரங்களை சரியாக தேவனுக்கேற்ற வகையில்  பயன்படுத்த சிறிது தவறினாலும்,  மறறவர்களைவிட  அதிகமதிகமாக  தண்டிக்கப்படவும் தேவனால் தள்ளிவிடப்படவும் நேரிடும்.
 
மத்தேயு 7:23 அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.
 
இவ்வாறு தேவனால் தள்ளிவிடப்பட்டு கள்ள தீர்க்கதரிசியாகவும், கள்ள தூதனாகவும் மாறிப் போவதைவிட  வல்லமைகள் வரங்கள் வெளிப்பாடுகள் போன்றவற்றை  அறியாமல் இருப்பதே மேல்  என்றே நான் கருதுகிறேன். இந்த உண்மையை  அறிந்தால் அநேகர் இதுபோன்ற வரங்கள் மற்றும் வல்லமைகளின்   எதிர்பார்ப்பிலிருந்து நிச்சயம் விலகிவிடுவார்கள்.        
 
இந்த உலகில் ஒரு முதலாளி  தன்னிடம் வேலைபார்ப்பவர்களுக்கு அவனவன் தகுதிக்குஏற்ப ஊதியத்தை நிர்ணயிக்கிறார்!  எவருக்கு  அதிக  சம்பளம் கொடுக்கப் படுகிறதோ, அவரின்  பொறுப்பும் அதிகமாக இருக்கும்! ௦௦௦௦5000 ரூபாய் சம்பளம் வாங்கும ஒரு பியூன்  எந்த பொறுப்பும் இல்லாமல் காரியங்களை செய்யலாம் ஆனால் அவர் செய்த தவறுக்குகூட அவருக்குமேல் நிலையில் இருக்கும் அதிகாரியே பொறுப்பேற்க வேண்டும். ஒரு சாதாரண போலீஸ்காரரின் தவறுக்கு காவல் ஆய்வாளரே பதில்சொல்லி ஆகவேண்டிய நிலை இன்று உலகில்  உள்ளது.
 
அதேபோல் யார் தேவனிடமிருந்து அதிக வெளிப்பாடுகளையும் உண்மைகளையும் அறிந்து கொண்டார்களோ அவர்களின் பொறுப்பு, சாதாரண விசுவாசிகளின் பொருப்பைவிட  மிக மிக அதிகமாகும்! சாத்தானின் கண்களும் எப்பொழுதும் அவர்மேல் நோக்கமாகவே இருக்கும். பெற்ற வரங்களை வைத்து இந்த உலகில் சொகுசு வாழ்க்கை வாழ முற்ப்பட்டால் அவர்களை சாத்தான் ஒருநாளும் சும்மா விடவே மாட்டான்!
 
ஆண்டவராகிய இயேசுவால்  நேரடியாக உணர்த்தப்பட்ட பவுல் இந்த உலக இன்பங்களை துறந்து தன்னுடய வாழ்க்கை முழுவதையும் இயேசுவுக்காக செலவளித்ததொடு அவர் மனதில் இருந்த காரியத்தை  இவ்வாறு பயத்துடன் சொல்கிறார்:
 
I கொரிந்தியர் 9:16 சுவிசேஷத்தை நான் பிரசங்கித்துவந்தும், மேன்மைபாராட்ட எனக்கு இடமில்லை; அது என்மேல் விழுந்த கடமையாயிருக்கிறது; சுவிசேஷத்தை நான் பிரசங்கியாதிருந்தால், எனக்கு ஐயோ.
 
இவர் இவ்வாறு கூறுவதற்கு காரணம் இவர் இயேசுவின் மூலம் நேரடியாக போதிக்கப்பட்டதால் இவர் எந்த போக்கும் சொல்லவே முடியாது. சுவிசேஷத்தை பிரசங்கித்தே ஆகவேண்டும்!    
 
ஒருவருக்கு அதிகம் கொடுக்கப்பட்டால் அவரிடம்  அதிகம்கேட்கப்படும் என்பதை  நமது ஆண்டவரும் ஒரு உவமை மூலம் தெளிவாக சொல்லியிருக்கிறார்       
 
லூக்கா 12:48   எவனிடத்தில் அதிகங் கொடுக்கப்படுகிறதோ அவனிடத்தில் அதிகங்கேட்கப்படும்; மனுஷர் எவனிடத்தில் அதிகமாய் ஒப்புவிக்கிறார்களோ அவனிடத்தில் அதிகமாய்க் கேட்பார்கள்!
 
அதுபோலவே தேவனுடைய ராஜயத்தின் ரகசியங்கள் மற்றும் ஆவிக்குரிய வரங்கள் அதிகமாக வழங்கப்பட்டால் அவரிடம் தேவனின் எதிர்பார்ப்பும் அதிகமாக இருக்கும்! அவன் எந்த சாக்கு போக்கும் சொல்ல முடியாது!
 
உதாரணமாக நமது ஆண்டவராகிய இயேசுவை எடுத்துகொண்டால், அவர் சகல பிசாசின் கிரியைகளையும் முறியடிக்கும் வல்லமை பெற்றிருந்தார். தொட்டதை எல்லாம் குணமாக்கினார், மரித்தவர்களைகூட எழுப்பின்னார். அவர் செய்ய முடியாத அதிசயம் என்று ஓன்று இராதபடிக்கு  தேவனுக்குரிய அனைத்து வல்லமைகளையும் அவர் பெற்றிருந்தார். 
 
அவர் பூமியில் வாழ்ந்தபோது எப்பொழுதும் அவரை சுற்றி அனேக மக்கள் பின் சென்றார்கள். அவருக்கென்று 12 சீடர்கள் இருந்தார்கள் ஒரு VIP யாகவே  அநேகரால் மதிக்கபட்டு, அனேக இடங்களில் சுற்றி திரிந்து, தேவனின் ராஜ்யத்தை
குறித்த காரியங்களை அதிகாரத்தோடு போதித்தார்.
 
ஆனால்,  அனைத்து வல்லமையும் அவர் பெற்றிருந்த்தர்க்காவும இவ்வளவு மேன்மையுள்ளவராக அநேகரால் மதிக்கப்படும்  ஒரு நிலையில் இந்த பூமியில் வாழ்த்ததற்க்கெல்லாம் சேர்த்து ஒட்டு மொத்தமாக, சிலுவையில் அதிகமான  கிரயத்தை செலுத்த வேண்டிய  நிலைக்கு தேவனால் நடத்தப்பட்டார்!
 
சாத்தானுக்கு சொந்தமான இந்த பூமியில் ஆவிக்குரிய வரங்கள் மற்றும் வல்லமை வெளிப்பாடுகள் பெற்ற ஒருமனிதனை உலகமக்கள் போற்றாதவரை, புகழாதவரை, உயர்த்தாதவரை  அவன் கண்டுகொள்வது இல்லை!  ஆனால் உலகமக்கள் உயர்த்தி போற்றி புகழ்ந்துவிட்டாலோ அதன்பின்னர் சாத்தானின் கண்கள் அந்த மனுஷனின் மேல் எப்பொழுதும் நோக்கமாகவே இருக்கும்.  ஓன்று அவர் அறியாமலேயே அவருக்குள் பெருமையை புகுத்தி, அவரை கள்ள தீர்க்கதரிசியாக மாறிவிடுவான். அல்லது சிறு தவறு செய்தாலும் அதற்க்கு தேவனிடமிருந்து கடுமையான  தண்டனையை வாங்கிதாராம்ல் அவன் ஓய்வதில்லை.       
 
கர்த்தருக்கு சித்தமானால் தொடரும்........


-- Edited by SUNDAR on Monday 25th of July 2011 03:43:23 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2008
Date:
RE: அதிகம் ஒப்புவிக்கபட்டவனிடம் அதிகம் கேட்கப்படும்!
Permalink  
 


வார்த்தையாலேயே ராஜ்யங்களை கட்டவும், இடிக்கவும் நாட்டவும் பிடுங்கவும் வல்லமைபெற்று ராஜாக்களோடு சமமாக பேசி வல்லமையாக செயல்பட்ட எரேமியாவின் புலம்பல் வார்த்தைகள் அவன் எவ்வளவு பரிதாபமாக இருந்திருப்பான் என்றே எண்ண தோன்றுகிறது   
 
புலம்பல் 3:2 அவர் என்னை வெளிச்சத்திலே அல்ல, இருளிலே அழைத்து நடத்திவந்தார்.14. நான் என் ஜனத்தார் யாவருக்கும் பரியாசமும், நித்தம் அவர்கள் கின்னரப் பாடலுமானேன்.
15. கசப்பினால் என்னை நிரப்பி, எட்டியினால் என்னை வெறிக்கச்செய்தார்.
16. அவர் பருக்கைக் கற்களால் என் பற்களை நொறுக்கி, என்னைச் சாம்பலில் புரளப்பண்ணினார்.
17. என் ஆத்துமாவைச் சமாதானத்துக்குத் தூரமாக்கினார்; சுகத்தை மறந்தேன்.
 
ஒரு கட்டத்தில் தன்பிறந்தநாளையே சபித்து பேசியுள்ள விரக்தியான வார்த்தைகள் நாம் இருதயத்தை பிழிவதாகவே இருக்கிறது!
 
எரேமியா 20:14
நான் பிறந்தநாள் சபிக்கப்படுவதாக; என் தாயார் என்னைப் பெற்ற நாள் ஆசீர்வதிக்கப்படாதிருப்பதாக.
 
பவுலை போலவே, ஆண்டவராகிய இயேசுவோடு உடனிருந்து அனேக அற்ப்புதங்க்ளை செய்த பேதுரு மற்றும் இயேசுவின் சீஷர்கள் எல்லோருமே அவரவர் பெற்ற மேன்மையான வரங்களுக்கு ஏற்ப  அனேக துன்பங்களையும் சங்கடங்களையும் அனுபவித்தார்கள் எனபது அனைவரும் அறிந்த உண்மை!
 
ஸ்தேவானை எடுத்து கொள்ளுவோம்:
 
அப்போஸ்தலர் 6:8 ஸ்தேவான் விசுவாசத்தினாலும் வல்லமையினாலும் நிறைந்தவனாய் ஜனங்களுக்குள்ளே பெரிய அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தான்.

மிகவிரைவிலேயே அவன்  கொடூரமாக கல்லெரியபட்டு  இரத்த சாட்சியாக மரிக்க நேரிட்டது! 
 
அப்போஸ்தலர் 7:59 அப்பொழுது. கர்த்தராகிய இயேசுவே, என் ஆவியை ஏற்றுக்கொள்ளுமென்று ஸ்தேவான் தொழுதுகொள்ளுகையில், அவனைக் கல்லெறிந்தார்கள்.
 
ஆண்டவரின் வார்த்தையினிமித்தம் பவுல் தான் அனுபவித்த உபத்திரியங்களை  பட்டியலிடுவதை  கேட்டாலே நம்முடைய மனது பதறுகிறது!
 
II கொரிந்தியர் 11:23.  நான்  அதிகமாய் அடிபட்டவன், அதிகமாய்க் காவல்களில் வைக்கப்பட்டவன், அநேகந்தரம் மரண அவதியில் அகப்பட்டவன். 24. யூதர்களால் ஒன்றுகுறைய நாற்பதடியாக ஐந்துதரம் அடிபட்டேன்;
25. மூன்றுதரம் மிலாறுகளால் அடிபட்டேன், ஒருதரம் கல்லெறியுண்டேன், மூன்றுதரம் கப்பற்சேதத்தில் இருந்தேன், கடலிலே ஒரு இராப்பகல் முழுவதும் போக்கினேன்.
26. அநேகந்தரம் பிரயாணம்பண்ணினேன்; ஆறுகளால் வந்த மோசங்களிலும், கள்ளரால் வந்த மோசங்களிலும், என் சுயஜனங்களால் வந்த மோசங்களிலும், அந்நிய ஜனங்களால் வந்த மோசங்களிலும், பட்டணங்களில் உண்டான மோசங்களிலும், வனாந்தரத்தில் உண்டான மோசங்களிலும், சமுத்திரத்தில் உண்டான மோசங்களிலும், கள்ளச்சகோதரரிடத்தில் உண்டான மோசங்களிலும்;
27. பிரயாசத்திலும், வருத்தத்திலும், அநேகமுறை கண்விழிப்புகளிலும், பசியிலும் தாகத்திலும், அநேகமுறை உபவாசங்களிலும், குளிரிலும், நிர்வாணத்திலும் இருந்தேன்.
27 பிரயாசத்திலும், வருத்தத்திலும், அநேகமுறை கண்விழிப்புகளிலும், பசியிலும் தாகத்திலும், அநேகமுறை உபவாசங்களிலும், குளிரிலும், நிர்வாணத்திலும் இருந்தேன்.
 
ஆனால் இன்றைய ஊழியர்களின் சாதனை நிலை பற்றி பார்த்தால்!
 
நான் எண்பது முறை வெளிநாட்டுக்கு பறந்திருக்கிறேன்!
இருபது முறை 5 ஸ்டார் ஓட்டலில் தங்கியிருக்கிறேன்
பாஸ்டர், டாக்டர், ரேவேரெண்ட, ஆயர் போன்ற பட்டங்கள் பெற்றுள்ளேன்      
நாற்ப்பது முறை 1 லட்ச்சத்துகுமேல் பலன் செலவு செய்திருக்கிறேன்
எப்பொழுதுமே A/c காரில் பவனி வந்திருக்கிறேன்!
என்னுடய வாழ்வுக்கு போதுமான அளவுக்கு பணம் வைத்திருக்கிறேன்
என் பயனுக்கு மிகப்பெரிய பாஸ்டர் பெண் கொண்டுள்ளேன்!   
மாதம் 5000௦௦௦ ரூபாய்க்குமேல் மருந்துக்கும் மருத்த்துவருக்கும் செலவு செய்கிறேன்   
இரண்டு பிள்ளைக்கும் இரண்டு சபை கட்டிகொடுத்திருக்கிறேன்!
 
இப்படி அடுக்கிகொண்டே போவார்கள்!  
 
கர்த்தர் இன்றைய ஊழியர்களை அதிகமாக  ஆசீர்வதித்திருக்கிறார் ஆனால் ஏனோ  ஆதியிலிருந்த ஊழியர்களையும் தீர்க்கதரிசிகளையும் ஆசீர்வதிக்க மறந்துவிட்டார் போலும்.
 
கர்த்தருக்கு சித்தமானால் தொடரும்......     
 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
அதிகம் ஒப்புவிக்கபட்டவனிடம் அதிகம் கேட்கப்படும்!
Permalink  
 


 Sundar wrote
_____________________________________________________________________________________________
ஸ்தேவானை எடுத்து கொள்ளுவோம்:
 
அப்போஸ்தலர் 6:8 ஸ்தேவான் விசுவாசத்தினாலும் வல்லமையினாலும் நிறைந்தவனாய் ஜனங்களுக்குள்ளே பெரிய அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தான்.

மிகவிரைவிலேயே அவன்  கொடூரமாக கல்லெரியபட்டு  இரத்த சாட்சியாக மரிக்க நேரிட்டது! 
_______________________________________________________________________________________________
 
சகோதரர் சுந்தர் அவர்களே,
 
வேதத்தில் கற்பனையை கை கொள்கிறவன் ஒரு தீங்கும் அறியான் என்று சொல்ல பட்டு உள்ளது
 
அதே போல் உங்கள் வார்த்தைகளில் பல வார்த்தைகள் துன்பத்திற்கு காரணம் மனிதனுடைய தவறே என்று சொல்லியுள்ளீர்கள்  
 
எனக்கு ஒரு சந்தேகம்
 
ஸ்தேவான்
ரோமியா
பவுல் மற்றும்
இயேசுவின் சீடர்கள் இவர்கள் அனைவரும்
 
எத்தனையோ கஷ்டங்கள்  வேதனைகளை அனுபவித்து இருக்கின்றார்கள் இறந்தும் இருக்கிறார்கள்
 
இவர்கள் தேவனுடைய கற்பனையை கை கொல்லவில்லையா..?
 
அல்லது இவர்களுடைய  வேதனை துன்பம் மரணம் அனைத்திற்கும் காரணம் அவர்களுடைய தவறா....?


-- Edited by EDWIN SUDHAKAR on Wednesday 27th of July 2011 03:28:21 PM

__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2008
Date:
Permalink  
 

EDWIN SUDHAKAR wrote:
 
சகோதரர் சுந்தர் அவர்களே,
 
வேதத்தில் கற்பனையை கை கொள்கிறவன் ஒரு தீங்கும் அறியான் என்று சொல்ல பட்டு உள்ளது
 
அதே போல் உங்கள் வார்த்தைகளில் பல வார்த்தைகள் துன்பத்திற்கு காரணம் மனிதனுடைய தவறே என்று சொல்லியுள்ளீர்கள்  
 
எனக்கு ஒரு சந்தேகம்
 
ஸ்தேவான்
ரோமியா
பவுல் மற்றும்
இயேசுவின் சீடர்கள் இவர்கள் அனைவரும்
 
எத்தனையோ கஷ்டங்கள்  வேதனைகளை அனுபவித்து இருக்கின்றார்கள் இறந்தும் இருக்கிறார்கள்
 
இவர்கள் தேவனுடைய கற்பனையை கை கொல்லவில்லையா..?
 
அல்லது இவர்களுடைய  வேதனை துன்பம் மரணம் அனைத்திற்கும் காரணம் அவர்களுடைய தவறா....?
 

சகோ.  எட்வின் அவர்களே! தங்கள் கேள்வி நியாயமான ஓன்று தான். என்னுடைய மனதிலும் பலமுறை எழுவதும், என் வீட்டிலும் அடிக்கடி புலம்புவதுமான ஒரு கேள்வியே!

ஒரு வகுபறையில் கடைசி பெஞ்சில் இருக்கும் படிக்காத மாணவர்கள் குறித்து ஆசிரியருக்கு எந்த அக்கரையும் இருக்காது. மேலும் படிக்காத கீழ்படியாத பிள்ளைகள் குறித்து பெற்றோருக்குகூட அக்கறை  இருக்காது.  ஆனால் நன்றாக படிக்கும், முதல் பெஞ்சில் இருக்கும் மாணவர்கள் எப்பொழுதும் ஆசிரியர்  பார்வையில் இருப்பதோடு வீட்டில் பெற்றோர் மற்றும் எல்லோருமே அவர்களை குறித்து விசாரித்து ஊக்குவிப்பதும் ஒரு பாடத்தில் மதிப்பெண் குறைந்தால்கூட அவர்களை கடிந்துகொண்டு  போதிப்பதும் இயல்புதானே!
 
அதுபோல் ஏதாவது சாக்குபோக்கு சொல்லிக்கொண்டு தேவனுடய வார்த்தைப்படி
கீழ்படிந்து வாழவிருப்பாத 99 பேர் பற்றி சாத்தானும் கவலைப்படுவதில்லை, தேவனும் பெரிதாக எதுவும் செய்ய விரும்புவது இல்லை! ஆனால் அவரது  சித்தத்தை நிறைவேற்ற விளையும் ஒவ்வொரு மனுஷன் மேலேயும் சத்துருவின் கண்களும், தூதர்களின் கண்களும், தேவனின் கண்களும் நோக்கமாக இருக்கின்றன! இந்நிலையில், தேவனோடு மிகநெருங்கி பழகி அவர் சித்தம் அறிந்து, அதன்படி  வாழவிளைபவன்  செய்யும் ஒவ்வொரு சிறு பிழைகூட மிகப் பெரிய தண்டனையை கொண்டுவரும்.
 
தேவனை முகமுகமாக அறிந்த மேன்மையான மனுஷனாகிய  மோசேயின் வரலாறை சற்று நினைவுபடுத்தி பாருங்கள்.அவன் செய்த தவறு என்ன வென்பது   ஒரு போருடேஅல்ல அதை செய்ததுயார் என்பதன் அடிப்படையிலேயே தண்டனை தீர்மானிக்கப்படுகிறது. ஆகினும் மோசே என்னும் அந்த தேவமனிதன் இம்மையில் கானானுக்குள் பிரவேசிக்கும் பாக்கியத்தை இழந்து போனாலும், நித்திய கானானுக்குள் பிரவேசிக்கும் பாக்கியத்தை  பெற்றிருப்பார் என்பதை அவர் மறுரூப மலையில் தரிசனமாகி இயேசுவுடனே சம்பாஷித்ததை வைத்து அறிய முடியும்!   
  
சங்கீதக்காரன்  புலம்புவதை பாருங்கள்!
 
சங்கீதம் 73:14 நாள்தோறும் நான் வாதிக்கப்பட்டும், காலைதோறும் தண்டிக்கப்பட்டும் இருக்கிறேன்
    
தேவனின் வார்த்தைகளை கண்டுகொள்ளாமல் சொகுசாக வாழ்பவனுக்கு எதுவுமே தெரியாது. அவர்களுக்கு உணர்வுள்ள  இருதயமும்  இல்லை  அவனை யாரும் கண்டுகொள்ளபோவதும் இல்லை. ஆனால்.   
 
பிரசங்கி 9:12  மச்சங்கள் கொடிய வலையில் அகப்படுவதுபோலவும், குருவிகள் கண்ணியில் பிடிபடுவதுபோலவும், மனுபுத்திரர் பொல்லாதகாலத்திலே சடிதியில் தங்களுக்கு நேரிடும் ஆபத்தில் அகப்படுவார்கள்.
 
தேவனின் வார்த்தைப்படி வாழவிளைபவ்னுக்கு காலைதோறும் தண்டனையும் நாள்தோறும் வாதிக்கபடுதலும் நிச்சயம் உண்டு!
 
இங்கு எரேமியா, பவுல் போன்ற தேவ மனுஷர்கள் தேவனின் வார்த்தைகள் படி வாழ்ந்தவர்கள்தான்! ஆனால் மோசே மீறியது போல அற்பமான மீறுதலுக்கு கூட அவர்கள் அனுபவிக்கும் தண்டனை மிக கடினமானதாக  இருக்கும்!    
 
அதற்க்கு என்னுடய வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவமே சாட்சி!
 
பையில் வைத்திருக்கும் பணத்தை எடுத்து கீழேபோடு என்று சொன்னார்.  ஆனால் நான் கீழேபோடவில்லை. அது பெரிய மீறுதல் போல் எனக்கு தெரியவும் இல்லை. திடீர் என்று பசி எடுத்தால் சாப்பிடவேண்டுமே என்ற நோக்கத்திலேயே பணத்தை  வைத்திருந்தேன். ஆனால் அந்த சிறிய மீறுதலுக்கு நான் அனுபவித்த தண்டனை  மிகப்பெரிது என்றே சொல்லவேண்டும்!
 
அதுபோல் தேவனை நன்றாக அறிந்த மனுஷர்கள் செயும் தவறுகள் சத்துரு தூஷிப்பதர்க்கு வழி செய்வதால், அம்மனிதர்களின் சிறு சிறு மீறுதல்கள்கூட அவர்களுக்கு பெரிய தண்டனைகளை வாங்கிகொடுக்கிறது!  தலைமை நீதிபதியின் மகன் தவறு செய்தால் உலகமே அதை அருவருக்குமே!  சர்வலோக நியாயாதி பதியில் பிள்ளை தவறுசெய்தால் சாத்தான் பிராதுபண்ணாமல் சும்மா விடுவானா ஆகினும் இதுபோன்ற கடும் தண்டனைகள் மூலம் அம்மனிதன் உணர்வடைந்து  ஒருநாளில் தேவனின் சித்தத்தை சரியாக செய்துமுடிக்க வாய்ப்புண்டு.
 
எனவே இங்கு மீறுதலின் தன்மை வேண்டுமானால் மாருபடலாமேயன்றி, தவறு இல்லாமல்  தண்டனை என்பது நிச்சயம் இல்லை. நமது மீறுதலே நம்மை  தண்டனைக்கு நேராக வழிநடத்தும்!  என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை!  
 
பிரசங்கி சொல்வதுபோல் இங்கு துன்பம் என்பதும் பாடுகள் என்பதும் உலகத்தாருக்கு வருவதுபோலவே தேவ மனிதர்களுக்கும்  வரத்தான் செய்கிறது!  
 
பிரசங்கி 9:2 எல்லாருக்கும் எல்லாம் ஒரேவிதமாய்ச் சம்பவிக்கும்; சன்மார்க்கனுக்கும் துன்மார்க்கனுக்கும், நற்குணமும் சுத்தமு முள்ளவனுக்கும் சுத்தமில்லாதவனுக்கும், பலியிடுகிறவனுக்கும் பலியிடாதவனுக்கும், ஒரேவிதமாய்ச் சம்பவிக்கும்
 
இந்த திரியில் நான் விளக்குவதுபோல், உலகத்தாரை விட மிக கடுமையான தண்டனைகள்கூட  தேவனின் வழியில் வாழ்பவர்களுக்கு வரும்! ஆனால் "உலகத்தாரோ என்னதான் துன்பம் வந்தாலும் நடக்கும் காரியத்துக்கான  காரணத்தை அறியாமல் இந்த மாயையான  உலகத்தின்மீதே நோக்கமுள்ளவர்களாக கண்கள் மூடப்பட்ட நிலையில், இருதயம் அடைபட்ட நிலையில்  வாழ்வார்கள ஆனால தேவனின் வழியில் நடப்பவர்களுக்கு, நடக்கும்/நடக்கபோகும் அத்தனை காரியத்துக்கும் சரியான காரணத்தை தேவனிடமிருந்த அறிந்து கொள்ள முடியும் அத்தோடு அவர்களுக்கு தங்கள் வாழ்க்கையை பற்றிய ஒரு  திடநம்பிக்கை (HOPE) தேவனுக்குள் நிச்சயம் உண்டு! அந்த நம்பிக்கை ஒருபோதும் வீண்போவது இல்லை இம்மையில்  சாத்தானின் பிடியில் இருக்கும் இந்த உலகில் அவர்கள் அனேக துன்பங்களை அனுபவித்தாலும்:
 
சகரியா 14:7 ஒருநாள் உண்டு, அது கர்த்தருக்குத் தெரிந்தது; அது பகலுமல்ல இரவுமல்ல; ஆனாலும் சாயங்காலத்திலே வெளிச்சமுண்டாகும்.
 
அப்பொழுது இழந்த எல்லாவற்றையும் நாம் நித்தியத்துக்கும்  சுதந்தரித்துகொள்ளும் பாக்கியம் உண்டு என்பதே தேவவார்த்தையின்படி வாழ்வதிலுள்ள மேன்மை!      
       
வெளி 21:7 ஜெயங்கொள்ளுகிறவன் எல்லாவற்றையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்;
 
 
குறிப்பு:
நான் அறிந்தவரை வேதபுத்தகத்தில் தேவனின் தாசனாகிய தாவீதுபற்றி சொல்லும் போது மட்டுமே வசனம் இவ்வாறு சொல்கிறது:
 
இராஜாக்கள் 15:5 தாவீது ஏத்தியனாகிய உரியாவின் சங்கதி ஒன்றுதவிர கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டதிலே தான் உயிரோடிருந்த நாளெல்லாம் ஒன்றையும் விட்டு விலகாமல், அவர் பார்வைக்குச் செம்மையானதைச் செய்துவந்தான்.
 
யோபுவைபற்றி சொல்லும்போது "உத்தமன், சன்மார்க்கன் மற்றும் தேவனுக்கு பயந்தவன்" என்றே வேதம் சொல்கிறது! தாங்கள் குறிப்பிட்டுள்ள  மற்ற தேவ மனிதர்கள்  நிலைபற்றி உறுதியாக வேதம் தெரிவிக்காதவரை நாம் ஒருமுடிவுக்கு வரமுடியாது. மேலும் பிரசங்கி 8:5 கற்பனையைக் கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும் அறியான்;  என்று வசனம் சொல்வதையும்  நாம் மறுக்க முடியாதே!  
 


-- Edited by SUNDAR on Thursday 28th of July 2011 03:44:49 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



இளையவர்

Status: Offline
Posts: 29
Date:
RE: அதிகம் ஒப்புவிக்கபட்டவனிடம் அதிகம் கேட்கப்படும்!
Permalink  
 


அன்பு சகோதரர் சுந்தர் அவர்களே,

இந்த தளத்தில் பதிவுகளை கொடுக்கும் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுவின் நாமத்தில் வாழ்த்துகள்.

சகோ. எட்வின் உள்ளத்தில் எழுந்த அதே கேள்வி என் உள்ளத்திலும் எழுந்தது. நான் கேட்கவில்லை அவர் கேட்டுவிட்டார். நன்றி சகோ. எட்வின் அவர்களே. சகோ. எழுப்பிய கேள்விக்கு வேதத்தின் வழியாக தாங்கள் அளித்த விளக்கம் ஏற்றுக்கொள்ள கூடியதே.

தேவன் உங்களை ஆசிர்வதிப்பாராக...

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2008
Date:
Permalink  
 

இந்த உலகத்தில் தேவனை அதிகம் அறிந்து அவர் சித்தப்படி சரியாக வாழ விரும்பும் எந்த ஒரு மனுஷனையும் இந்த உலகத்தின் அதிபதியாகிய சாத்தான் அவ்வளவு சீக்கிரம் இந்த் உலக இன்பத்தை அனுபவிக்க விட்டுவிட மாட்டான். அதற்க்கு ஆதி கிறிஸ்த்தவர்களும் ஆண்டவரால் நடத்தபட்ட தீர்க்கதரிசிகளுமே சாட்சி! அப்படி ஒருவர் உலக இன்பங்களை அனுபவித்து  வாழ்கிறார் என்றால் அவர தன்னுடய ஆவிக்குரிய வாழ்வை  ஒருமுறை அலசிப்பார்ப்பது அவசியம்.  
  
துன்பமும் பாடுகளும் சங்கடமும் வேதனையும் சோதனையும் தேவ பிள்ளைகளை அதிகமாக வாட்டுகிறது. ஆனால் இவை அனைத்தும்  அவர்களை பரிசுத்தபடுத்தி ஜொலிக்க வைக்கதானேயன்றி அவர்களை கவிழ்த்துபோடுவதர்க்கு வருவது இல்லை. 
 
சத்துருவின் திட்டங்களை எல்லாம் தேவன் நமக்கு சாதகமாகவே திருப்பி விடுகிறார் ஆகினும் இந்த சரீரமானது தேவனால் உயிர்ப்பிக்கப்படும்வரை 
அது  சாத்தானுக்கு சொந்தமானதாக  இருப்பதால் அதில் அவன்  வேதனை களை கொண்டுவது வாடிக்கையான ஓன்று! எனவே  சாவுக்கேதுவான இந்த சரீரம் இருக்கும் வரை மனுஷனுக்கு நோவும் இருக்கத்தான் செய்யும்! 
 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard