இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கர்த்தரைக் குறித்து மட்டுமே மேன்மைபாராட்டக்கடவன்!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
கர்த்தரைக் குறித்து மட்டுமே மேன்மைபாராட்டக்கடவன்!
Permalink  
 


கடந்த சனிக்கிழமை என்னை சந்திக்க வந்த நம் சகோதரர்களோடு ஆண்டவரைப் பற்றியும் அவரது திட்டங்கள் பற்றியும் சிறிது நேரம்  பேசிக்கொண்டு  இருந்தேன. அந்நேரம் ஆண்டவர் எனக்கு வெளிப்படுத்திய  சில ஆவிக்குரிய முக்கிய  காரியங்கள் மற்றும்  தேவன் என்னை நடத்தியவிதம்  குறித்து நான் சொல்லி கொண்டு இருந்தபோது அதுகுறித்த லேசான  பெருமை என் மனதில்  எழுந்தது. 
 
அந்த சம்பாஷணைகளை முடித்து ஜெபித்துவிட்டு  சில காரியங்களினிமித்தம் மிக அவசரமாக வீட்டுக்கு  கிளம்பிய நான், PART TIME வேலைபார்க்கும் முதலாளியிடம் இருந்து அழைப்பு வந்திருந்ததால், அங்கு போய் என்னவென்று கேட்டுவிட்டு  கிளம்பலாம் என்று அங்குசென்றேன்.
 
ஆனால் அவரோ என்அவசரங்கள் எதையுமே சற்றும் பொருட்படுத்தாது ஒவ்வொரு நாளும்  "தான் காலையில் இருந்து இரவுவரை  என்னென்ன சாப்பிடுகிறார்" என்பதை ஒரு பெரிய லிஸ்டாக எழுதி வைத்துகொண்டு, இதை எனக்கு கணினியில் டைப்பண்ணி ஒரு PRINT  எடுத்து வைத்துவிட்டு போங்கள் என்று சொல்லிவிட்டு வெளியில் சென்றுவிட்டார்.
 
வருமானவரி மற்றும் கணக்கு மட்டுமே எழுதுவதாக சொல்லிதான் நான் அவரிடம் வேலை செய்துவருகிறேன்! ஆனால் அவரோ இன்று  இந்த வேலையே கொடுத்தது, அதுவும் எனது அவசரமான நிலையில் இப்படி  2 பிஸ்கட், 1 பாதம், 4 பிஸ்தா  2 சப்பாத்தி என்று எழுதி கொண்டு இருக்க வேண்டிய நிர்பந்தத்தில் மிக வெறுப்பாகிபோனேன்.  "என்ன ஆண்டவரே?  உம்மை குறித்து அதிகமதிகமாக எழுதவேண்டும் என்று அதிக ஆர்வமாக இருக்கும் எனக்கு, சம்பந்தமே இல்லாமல்  இப்படி யார் யார் சாப்பிடுவதையோ எழுதவைத்து என்னை பாடு  படுத்துகிறீர்? என்று வாய்விட்டு சொன்னேன்.
 
உடனே ஆண்டவர் "சற்று நேரத்துக்கு முன்னர்தானே உன்னை பற்றி மிக பெருமையாக  மேன்மைபாராட்டி பேசிவிட்டு வந்தாய், அப்பொழுது உனக்கு நல்ல இனிப்பாக இருந்தது அல்லவா? இந்த கசப்பான வேலையையும் நீ செய்தே ஆகவேண்டும்.  உனக்கு இந்த வேலையும்  வரலாம் இதற்க்கு கீழான வேலைகூட வரலாம் உன்னை குறித்து மேன்மை  பாராட்டினால்  நீ ஒன்றுக்கும் லாயக்கு இல்லாமல்போய், இதுபோன்ற தேவையற்ற காரியங்களை செய்து  அடுத்தவனின்  கால்களை கழுவும் நிலைக்கு தள்ளப்படலாம் என்பதுபோன்று  கடுமையாக எச்சரித்துவிட்டார்.
 
உடனே என்னுடய தவறை உணர்ந்து இனி எனக்கு அளிக்கபட்ட தேவனின்கிருபை குறித்து யாரிடமும் பெரிதாக பேசக்கூடாது என்ற முடிவோடு  (வாலை சுருட்டி கொண்டு) கொடுத்த வேலையே சரியாக செய்து முடித்துவிட்டு ஆண்டவரிடம் மன்னிப்பு கேட்டவாறு வீடுபோய் சேர்ந்தேன்!
 
தேவனின் பார்வையில்  "நான்" என்ற எண்ணமே ஒரு தவறான எண்ணமாகவே தெரிகிறது. "நான் செய்தேன்" "நான் அறிந்துகொண்டேன்" நான் பெரியவன்" போன்ற வார்த்தைகளை  உபயோகிப்பதே தேவனுக்கு ஏற்றதாக தெரியவில்லை!          
 
லூக்கா 14:11 தன்னைத் தான் உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத்தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார்.
 
தாழ்மையுள்ளவர்களுக்கு தேவன் என்றும் கிருபை அளிக்க நாடுகிறார்     
 
யாக்கோபு 4:6 அவர் அதிகமான கிருபையை அளிக்கிறாரே. ஆதலால் தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறாரென்று சொல்லியிருக்கிறது.

ஆம்! பெருமையுள்ளவர்  யாராக இருந்தாலும் சரி. அவர் எவ்வளவுபெரிய ஆவிக்குரிய மனிதராக இருந்தாலும் சரி அல்லது எதைகுறித்து ஒருவர் பெருமை பாராட்டினாலும் சரி! அது தேவனுக்கு நிச்சயம் உகந்தது அல்ல!  எனவே தேவனின் கிருபையில் நிலைநிற்க வாஞ்சிப்போர் எந்நிலையிலும் தாழ்மையாய் இருக்க பயில்வது அவசியம்!
   
எரேமியா 9:24 மேன்மைபாராட்டுகிறவன் பூமியிலே கிருபையையும் நியாயத்தையும் நீதியையும் செய்கிற கர்த்தர் நான் என்று என்னை அறிந்து உணர்ந்திருக்கிறதைக்குறித்தே மேன்மைபாராட்டக்கடவன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; இவைகளின்மேல் பிரியமாயிருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.


-- Edited by SUNDAR on Monday 25th of July 2011 10:13:19 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard