எனக்கு ஒரு மூத்த சகோதரரும் இரண்டு இளைய சகோதரரும் உண்டு. நாங்கள் நால்வரும் ஒரே தாயின் வயிற்றில் பிறந்திருந்தாலும் ஒரே தாய் தகப்பனின் கண்காணிப்பில் ஒரே சூழ்நிலையில் வளர்ந்திருந்தாலும் எங்கள் ஒவ்வொருவர் குணநலன்களுக்கும் மிகப்பெரிய வேறுபாடுகள் உண்டு.
நான் எளிதில் யாருக்கும் இரங்கிவிடுவேன்,. அடுத்தவர் சொல்வதை எல்லாம் அப்படியே உண்மை என்று நம்பிவிடுவேன். யார் துன்பபட்டாலும் என்னால் தாங்கவே முடியாது, உடனே என் கண்களில் கண்ணீர் வந்துவிடும். யாரையும என்னிடம் எந்த ஒரு காரியத்துக்கும் கெஞ்சிநிற்க அனுபதிப்பது இல்லை. என்னால் முடிந்தால் என்ன எதுவென்று கேட்காமல் உடனேஅவர்களுக்கு உதவி விடுவேன். மனுஷர்கள்மீது மட்டுமல்ல கோழி/பூனை/நாய் என்றே எல்லா மிருங்களையும்கூட மனுஷ உயிர்களுக்கு சமமாகவே பாவிப்பேன். மனுஷர்களை விட அவைகளை அதிகம் நேசிப்பேன்.
ஆனால் எனது அண்ணனோ சிறு வயதில் இருந்து கண்டினமான குணமுடையவன். ஒரு கோழியை கொல்வது என்றாலோ அல்லது எங்காவது சண்டைக்கு போக வேண்டும் என்றாலோ அவன்தான் முதலில் நிற்பான். எதற்கும் அவ்வளவு சீக்கிரத்தில் கலங்கவே மாட்டான். அடுத்தவர் மனம் புண்படும் என்று சற்றும் யோசிக்காமல் பேசிவிடுவான் அடித்துவிடுவான். மற்றுமுள்ள எனது இரண்டு தம்பிகளுமே என்னை போன்றதொரு இரக்கமுள்ளவர்கள் பொறுமையுள்ளவர்கள் அல்ல மிக கொடூரமாககூட அவர்கள் நடந்துள்ளனர்.
எனது தம்பி ஒருவனின் திருமணம் நடந்தபோது இரண்டு ஆடுகளைவாங்கி அவர்கள் மூன்றுபேரும் சேர்ந்து அவைகள் கதறகதற தொடையில் கத்தியை வைத்து அறுத்து, கொன்று உரித்து காலையில் மட்டன் சமைத்துபோட்ட சம்பவம் எனக்கு இன்று நினைத்தாலும் மனதை பதறவைக்கும்.
இங்கு நான் சொல்லவருவது என்னவெனில்,
எனக்குள்ள இரக்கம் என்ற குணம் என்னால் வளர்க்க்பட்டதோ அல்லது நான் விரும்பி ஏற்றுக் கொண்டதோ அல்லது நானாக விரும்பி செய்வதோ அல்ல! அந்த குணத்துக்காக நான் பலமுறை வெறுப்படைந்துள்ளேன்! நான் மட்டும் ஏன் இப்படி அடுத்தவர்கள் நலனைபற்றியே யோசித்துகொண்டு என் வாழ்வில் கோட்டை விடுகிறேன் என்றுகூட வருந்தியதுண்டு. இந்த குணம் அது நான் பிறந்தபோதே தானாகவே தேவனால் எனக்கு கொடுக்கப்பட்ட ஒரு ஈவு அல்லது வரம் என்றே நான் கருதுகிறேன்!
எனவே தேவன் தந்துள்ள அந்த இரக்கத்தையே இங்கு எல்லோர் மீதும் அதிகமாக காட்டுகிறேனேயன்றி, இதில் நான் பெருமைபடுவதர்க்கு எதுவுமே இல்லை? தேவன் கொடுத்த இரக்கத்தை நான் பிறருக்கு இலவசமாக கொடுத்துவிட்டு பிறப்பிலேயே தேவனால் இரக்ககுணம் கொடுக்கப்படாத என் அண்ணன் செய்யும் காரியத்துக்கு அவனுக்கு தண்டனை கிடைக்கவேண்டும் என்றுநான் எதிர்பார்க்க விரும்ப வில்லை. அவனுக்கு கொடுக்கப்படாதன் அடிப்படையில் அவன் நடக்கிரானேயன்றி மற்றபடி அவன் பல குணங்களில் மிக நல்லவனே!
இந்த உலகில் நன்மையான ஈவுகள் என்று கருதப்படும் இரக்கம்/ அன்பு/விசுவாசம்/
யாக்கோபு 1:17நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது; அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை.
அவரிடம் இருந்து இலவசமாக பெற்ற சில காரியங்களை நான் அதிகமாக பிறரிடம் காண்பிபதனால் நான் மேன்மைபாராட்ட இங்கு எதுவுமே இல்லை! அதன் அடிப்படையில் பார்த்தால் என்னுடய கிரியைக்கு எந்த மேன்மையும் இல்லை! எல்லாமே என்னை நடத்துகிற தேவனாலேயே ஆகும் என்றே நான் கருதுகிறேன்!
ரோமர் 9:16ஆகையால் விரும்புகிறவனாலுமல்ல, ஓடுகிறவனாலும் அல்ல, இரங்குகிற தேவனாலேயாம்.
ஆனால் ஆண்டவராகிய இயேசு சொல்வதுபோல் "இரக்கமில்லாதவனுக்கு இரக்கமில்லாத தீர்ப்பும்" நிச்சயம் உண்டு. அதற்க்கு வேறுசில விளக்கங்கள் இருக்கின்றன.....
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)