கடந்த வாரத்தில் என் மனைவி ஜெபகூட்டம் ஒன்றிற்கு சென்றிருந்தாள். அங்கு செய்தி கொடுத்த ஒரு அருமையான ஊழியக்கார சகோதரி சொன்ன ஒரு சாட்சி இது!
"அந்த சகோதரி ஒருவிசுவாசியின் வீட்டுக்கு ஜெபிப்தர்க்காக சென்றிருந்தார்களாம். இளம் வயதான அந்த பெண்ணின் கணவர் வெளியே சென்றிருக்க, அந்த சகோதரியிடம் ஆண்டவரைபற்றி எடுத்து சொல்லிவிட்டு, அவர்களுக்காக ஜெபித்து விட்டு புறப்பட்டபோது அந்த சகோதரி குடிப்பதற்கு கொஞ்சம் பாயாசமும் கொடுத்து ரூ.100/- காணிக்கையும் கொடுத்தார்களாம். ஆனால் ஆண்டவரோ "அந்த காணிக்கையை வாங்காதே அதை திரும்ப கொடுத்துவிடு என்று திட்டமாக கட்டளையிட, காரணம் புரியாமல் அப்பெண்ணிடம் "ஆண்டவர் இந்த காணிக்கையை வாங்க என்னை அனுமதிக்க வில்லை, காரணம் என்னவென்பது தெரியவில்லை இதை நீங்களே வைத்துகொள்ளுங்கள்" என்று திருப்பி கொடுத்து விட்டு, "இவ்வீட்டில் உள்ள பிரச்சனை என்னவென்பதை என்னிடம் சொல்ல விரும்பினால் சொல்லலாம்" என்று கூறவே, உடனே அந்த விசுவாசியாகிய சகோதரி அழஆரம்பித்து விட்டார்களாம். "எங்கள் வீட்டில் இருப்பதே இந்த நூறு ரூபாய் மட்டும்தான். என் கணவர் மிக அதிகமாக கடன் வாங்கி விட்டார் அந்த கடன்களை திருப்பி கொடுக்க முடியாமல் அதிகமான சங்கத்தில் இருக்கும் நாங்கள், இந்த நூருரூபாயில் விஷம் வாங்கி எங்கள் வாழ்க்கையை முடித்துகொள்ள தீர்மானித்திருந்தோம் அவ்விஷத்தை கலந்து குடிப்பதற்காகவே இன்று நான் பாயாசம் செய்திருக்கிறேன் இடையில் நீங்கள் வந்ததால் உங்களுக்கு ஏதாவது கொடுக்கவேண்டும் என்று எண்ணி பாயாசம் மற்றும் இருந்த இந்த பணத்தையும் கொடுத்தேன்" என்றுசொல்லி அதிகமாக அழுதார்களாம்.
அவர்களுக்கு ஆண்டவரின் கிருபைபையை பற்றி அதிகமாக எடுத்து சொல்லி
ஆறுதல் வார்த்தைகளை சொல்லி அவர்கள் தற்கொலை முடிவை மாற்றியதாகவும் இன்று அந்த குடும்பம் ஒரு நல்லநிலையில் இருப்பதாகவும் சொல்லி முடித்தார்களாம்.
இந்த சாட்சியை கேட்டுகொண்டிருந்த என் மனைவியிடம் ஆண்டவர் 'உன் பேக்கில்
வைத்திருக்கும் பணத்தை எடுத்து என் மகளுக்குகொடு என்று" கட்டளை யிட்டாராம். (எங்கள் தசமபாக பணதித்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை என் மனைவி எப்பொழுதும் பேக்கில் வைத்திருபதுண்டு. திடீர் என்று யாருக்கு
உதவி தேவை என்றாலும் கொடுப்பதற்கு அதை வைத்திருக்க சொல்லியுளேன்)
ஆண்டவர் அந்த பணத்தை எடுத்து இந்த ஊழியக்கார சகோதரிககு கொடுக்க சொன்னதும், நல்ல வசதியுள்ள பெண்போல தெரிந்த அவர்களுக்கு பணத்தை எடுத்து கொடுக்க சற்று தயங்கிய அவள், பின்னர் மனம் உறுத்தவே அந்த பணத்தை எடுத்து எவ்வளவு பணம் இருக்கிறது என்று எண்ணியிருக்கிறாள். உடனே ஆண்டவர் "பணத்தை எண்ணாமல் இருப்பதை அப்படியே எடுத்துகொடு" என்று
கடுமையாக அதட்டினாரம் உடனே பணத்தை எல்லாம் எடுத்து கொடுத்திருக்கிறாள்.
என் மனைவி அவ்வளவு சீக்கிரத்தில் யாருக்கும் பணத்தை கொடுத்துவிடுபவள் அல்ல. அவளின் குணத்தை அறிந்து அவளை அதட்டி கொடுக்க வைத்த ஆண்டவர், கண்டிப்பாகவும் கனிவுடனும் பேசுகிறவர் யாருக்கு என்ன தேவை என்பதையும் அதை யாரிடம் இருந்து எப்படி வாங்கி கொடுக்கவேண்டும் என்பதையும் சரியாகவே அறிந்திருக்கிறார் என்பதை இதன் மூலம் அறிய முடிகிறதல்லவா?
ஆண்டவரின் வார்த்தைகளை கேட்டறியாத பலர் ஆண்டவர் பேசுவார் என்ற நம்பிக்கையே இல்லாமல் எல்லோரையுமே சந்தேக கண்கொண்டு பார்க்கின்றனர். ஆனால் நான் உறுதியாக சொல்கிறேன் நம் ஆண்டவர் "பேசும் தெய்வம்"!
இதை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட:
பேசும் தெய்வம் இயேசு!
பேசாத கல்லோ மரமோ நீரல்ல!
என்ற பாடல் எனக்கு மிகவும் பிடித்ததும் உண்மையானதும் நம் ஆண்டவருக்கு சரியாக பொருந்தகூடிய ஒன்றும் ஆகும்!
இஸ்லாமியர்கள் சொல்வதுபோல் நம் இறைவன் மிகப்பெரியவராக இருந்தாலும், அவர்கள் காட்டும் இறைவன்போல் எப்பொழுதும் மனுஷனுக்கு ரொம்ப தூரத்தில் விலகி இருக்காமல், நம் அருகிலேயே இருந்து நாம் இன்ப துன்பங்களில் பங்கெடுப்பவரும் மிக சிறியவர்களின் வேண்டுதல்களுக்குகூட செவிசாய்த்து அவர்கள் கூப்பிடும் தூரத்திலேயே இருந்து பேசி வழிகாட்ட வல்லவரான நாம் ஆண்டவராகிய இயேசுவைப்போல் ஒரு தெய்வமில்லை!
-- Edited by SUNDAR on Saturday 30th of March 2019 02:31:23 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
முழுஇருதயதோடும் முழுமனதோடும் ஒரே நோக்கமாய் தேவனை தேடும் பொது தேவன் நிச்சயமாய் பேசுவர்.
முன்னாடி பேசினார் இப்பொழுதெல்லாம் பேசுகிறதில்லை அதற்குதான் வேதம் கொடுத்து இருக்கிறார் என்று என்னிகொண்டிருந்தால் அவர்களுக்கு தேவன் அப்படிதான் தெரிவார் ..
அவர் மாறுபாடுள்ளவனுக்கு, மாறுபாடுள்ளவராகவும், அவர் புனிதனுக்கு புனிதனாகவும் தோன்றுகிறார்.
அவர் பேசுகிறவர் என்று எண்ணி என்னோடு பேசும் ஆண்டவரே என்று எப்போது கேட்டுகொண்டே இருந்தால் கட்டாயம் பேசுவார்.
அவர் நேரடியாக பேசமாட்டார் வேதத்தின் மூலமாகதான் பேசுவார் அல்லது தீர்க்கதரிசனத்தின்மூலமாகத்தான் பேசுவார் என்று எண்ணினால் உங்கள் விருபதின்படியே உங்களுக்கு பேசுவார்.
நாமே தேவன் இப்படிதான் பேசுவார் என்று ஒரு முடிவுக்கு வந்துவிட்டால் அதைதவிர்த்து தேவனே முன்வந்து எதையும் செய்கிறதில்லை .
ஏனெனில் நாமே தேவனுக்கு ஒரு எல்லையை உண்டாகி விடுகிறோம்.
வேதத்திலே எத்தனையோ தேவதாசர்களுடன் பேசி இருக்கிறார். ஏன் நம்மோடு பேசமாட்டாரா........! கட்டயாம் பேசுவார் ஆனால் நம் இருதயமும் மனசும் மாறவேண்டும்.
தேவன் பேசுகிற சத்தத்தை நான் கேட்டபடியால்தான் நான் இவ்வளவு வைராக்கியமாய் சொல்லுகிறேன்.
நம் தேவன் பேசுகிறவர். அவர் பேசுகிற சத்ததைகூட நாம் கேட்காவிட்டால் அவருடைய பிள்ளைகள் என்று சொல்லிகொள்வதே வீண்தான்.
__________________
கற்பனையைக்கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும்அறியான்.(பிரசங்கி 8 :5 )