இதனைக் கண்டதும் மற்ற ஊழியர்களுக்கு மிகவும் ஆச்சரியம். என்னப்பா அவர் உன்னை அப்படி திட்டுகிறார். ஆனால் அதை நீ கண்டுகொண்டதாகக் கூட தெரியவில்லையே. எப்போதும் முகத்தை சிரித்தபடியே வைத்துக் கொண்டு வேலை செய்ய உன்னால் மட்டும் எப்படி முடிகிறது என்று கேட்டார்கள்.
இதற்கு அந்த ஊழியர் அளித்த பதில், அந்தத் தெருவின் முனையில் இரு காதலர்கள் பேசிக்கொண்டிருக்கும் இடத்தை சுட்டிக் காண்பித்து ‘‘அங்கே பாருங்கள்! புரியும்’’ என்றார்.
அங்கே பார்த்தும் புரியாத விழிகளோடு ‘‘புரியவில்லையே!’’ எனக் குழப்பமாகச் சொன்ன ஊழியர்களிடம் கேட்டார், ‘‘அந்தக் காதலன் தன் காதலியிடம் ஏதோ ஒன்றைக் கொடுக்க முயற்சி செய்கின்றான், தெரிகின்றதா?’’
‘‘ஏதோ பரிசுப் பொருள் போல் தெரிகிறது. ஏதோ கோபம் காரணமாக காதலன் எவ்வளவுதான் கொடுக்க முயற்சி செய்தாலும் காதலி அந்தப் பரிசுப்பொருளைப் பெற்றுக்கொள்ளவேயில்லை.’’
புதிய இளைஞன் கூறினான், ‘‘அந்தப் பெண் அந்தப் பரிசை வாங்காதவரை அந்தப் பரிசுப்பொருள் யாருக்குச் சொந்தம்?’’
‘‘நிச்சயம் அது அந்தக் காதலனுக்குத்தான் சொந்தம்’’ என்று சொன்னார்கள் மற்றவர்கள்.
அப்போது...
இந்தப் பதிலைக் கேட்டு சிரித்துக்கொண்டே சொன்னார்.
‘‘அதேதான் என் கதையிலும்... மேலதிகாரி தனது மூர்க்கத்தனத்தையும், கோபத்தையும் என்னிடம் தருவதற்கு எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் நான் அதை வாங்கிக் கொள்ளவேயில்லை. அதனால்தான் நான் அந்த கோப வார்த்தைகளால் கவலையுறவில்லை. அவர் என்னிடம் தந்த கோபத்தை நான் வாங்கிக்கொள்ளவேயில்லை’’ என்றார். இதைக் கேட்ட மற்ற ஊழியர்கள் திகைத்து நின்றனர். எந்த பிரச்சினையும், அதன் மீது நாம் காட்டும் ஆர்வத்தைப் பொறுத்தே அமையும். எதையும் நாமாக ஏற்றுக் கொள்ளாமல் நம்மிடம் வந்து சேராது. அது திட்டாக இருந்தாலும் சரி, பிரச்சினையாக இருந்தாலும் சரி..
__________________
காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)