எங்கள் ஊரில் ஒவ்வொரு அமாவாசை அன்றும் அதிகாலைவரை பிராத்தனை செய்கிறார்கள். (ஆலயத்தில் அல்ல). தங்களின் குறைகள், தேவைகள் இன்னும் பல்வேறு காரியங்களுக்காக அந்த ஊழியரிடம் சென்று இரவு முழுதும் செலவிடுகின்றனர்.
அநேகர் அவரைத் தேடி போகின்றனர். இதுபற்றி வேதம் போதிப்பது என்ன?
விளக்கம் அறிந்தவர்களிடம் உண்மையை அறிய விரும்புகிறேன்.
எங்கள் ஊரில் ஒவ்வொரு அமாவாசை அன்றும் அதிகாலைவரை பிராத்தனை செய்கிறார்கள். (ஆலயத்தில் அல்ல). தங்களின் குறைகள், தேவைகள் இன்னும் பல்வேறு காரியங்களுக்காக அந்த ஊழியரிடம் சென்று இரவு முழுதும் செலவிடுகின்றனர்.
அநேகர் அவரைத் தேடி போகின்றனர். இதுபற்றி வேதம் போதிப்பது என்ன?
விளக்கம் அறிந்தவர்களிடம் உண்மையை அறிய விரும்புகிறேன்.
சகோதரர் அவர்களே!
அமாவாசை, பௌர்ணமி போன்ற தினங்களை பற்றிய அனேக பாரம்பரிய கதைகள் இந்து மதத்தில் உண்டு. இவ்விரண்டு தினங்களும் இந்து சாத்திரப்படி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றன. அதன் அடிப்படையில் உருவானதுதான் இந்த "அமாவாசை முழு இரவு ஜெபம்" என்று கருதுகிறேன்.
நம்முடைய பரிசுத்த வேதாகமத்திலும் அமாவாசைதினத்துக்கு ஓரிரு இடங்களில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதை அறியமுடிகிறது:
I சாமுவேல் 20:5தாவீது யோனத்தானை நோக்கி: இதோ, நாளைக்கு அமாவாசி, நான் ராஜாவோடே பந்தியிருந்து சாப்பிட வேண்டியதாயிருக்கும்
மேலேயுள்ள வசனத்தின் அடிப்படையில், ராஜாவின் முக்கிய ஊழியக்காரர்கள் அமாவாசை தோறும் ராஜாவுடன் பந்தி இருந்தததை அறியமுடிகிறது.
II இராஜாக்கள் 4:23அப்பொழுது அவன்: இது அமாவாசியும் அல்ல, ஓய்வுநாளும் அல்லவே; நீ இன்றைக்கு அவரிடத்துக்குப் போகவேண்டியது என்ன என்று கேட்கச்சொன்னான்
மேலேயுள்ள வசனங்களின் அமாவாசையை ஒய்வுநாளோடு இணைத்து முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதை அறியமுடிகிறது!
மேலும்:
யோபு 38:33வானத்தின் நியமங்களை நீ அறிவாயோ? அது பூமியையாளும் ஆளுகையை நீ திட்டம்பண்ணுவாயோ?
என்று வசனம் சொல்கிறபடியினாலும், வேத வசனங்களின் அமாவாசி தினத்துக்கு ஏதோ சில முக்கியத்துவங்கள் கொடுக்கப்படுள்ளதாலும் அன்றைய தினம் முழு இரவு ஜெபத்தில் ஈடுபடுவதில் சிலநன்மைகள் கிடைக்க வாய்ப்பிருக்கலாம் ஆனால் அதுபற்றி வேதம் வேறு எந்த விளக்கமும் சொல்லவில்லை. மாறாக "குறிகேளாமலும், நாள் பாராமலும் இருப்பீர்களாக" என்றே நம்மை எச்சரிக்கிறது. எனவே இந்த புதிய உடன்படிக்கை காலத்தில் அமாவாசைக்குமட்டுமல்ல எந்த நாளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை என்றே நான் கருதுகிறேன்.
ஆனால் அமாவாசை முழு இரவு ஜெபத்தில் இந்து சம்பந்தபட்ட அனேக பிசாசுகள் ஆடுவதாகவும், அந்நேரம் அநேகருக்கு பிசாசு பிடியில் இருந்து விடுதலை கிடைப்பதாக நம்ப தகுந்தவர்கள் மூலம் நான் கேள்விப்பட்டுள்ளேன். அதிகம் ஜெபிக்கும் வல்லமையான தேவ ஊழியர்களால் நடத்தப்படும் அமாவாசை ஜெபத்தில் பெலகீனத்தை ஏற்ப்படுத்தும் பிசாசுகள்கூட ஓடுகின்றன.
எனது கருத்து என்னவெனில்:
பொதுவாக எந்த நாளாகினும் இரவுமுழுவதும் தேவனை தேடி ஜெபித்தாலும் தேவனின் பிரசன்னத்தை மிகஅதிகமாக உணரவே முடியும். அதற்க்கு அமாவாசை பௌர்ணமி என்று எதுவும் நாள் கணக்கு நம் தேவனுக்கு நிச்சயம் இல்லை மனுஷர்களே சில குறிப்பிட்ட நாட்களை முக்கியப்படுத்துகிரார்கள் என்றே நான் கருதுகிறேன்.
ரோமர் 14:5அன்றியும், ஒருவன் ஒருநாளை மற்றொரு நாளிலும் விசேஷமாக எண்ணுகிறான்; வேறொருவன் எல்லா நாட்களையும் சரியாக எண்ணுகிறான்; அவனவன் தன்தன் மனதிலே முழு நிச்சயத்தை உடையவனாயிருக்கக்கடவன்.
தான் நம்பும்/செய்யும் காரியத்தை குறித்த முழு நிச்சயம் உடையவனாக ஒரு காரியத்தை செய்தால் அதனால் எந்த பாதிப்பும் இல்லை என்பதே வேதம் சொல்லும் கருத்து.
தனி மனிதனாக அமர்ந்து இரவு முழுவதும் ஜெபித்தால் என்பது சற்று சிரமமான காரியம். எனவே ஜெபிக்க வாஞ்சிப்பவர்கள் இவ்வாறு தேவ ஊழியர்கள் நடத்தும் கூட்டத்த்தில் செற்று ஜெபித்து வருவதில் தவறேதும் இல்லை. இவ்வாறு முழு இரவு ஜெபங்களுக்கு சென்று வந்த ஒருசகோதரிககு தேவன் அதிகமதிகமாக வேதத்தில் உள்ள உண்மைகளை போதித்ததை நான் அறிந்திருக்கிறேன். நானும் கூட இதுபோன்ற முழு இரவு ஜெபங்களுக்கு செல்வதுண்டு!
தேவனை தேடவேண்டும் என்ற வாஞ்சையோடு எந்த நாளில் எங்கு சென்று ஜெபித்தாலும் அது நிச்சயம் பயனுள்ளதே!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)