இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: "எல்லாம் தேவ சித்தம்" என்று வாழ்வதே மிகசிறந்த தேவபக்தி!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2008
Date:
"எல்லாம் தேவ சித்தம்" என்று வாழ்வதே மிகசிறந்த தேவபக்தி!
Permalink  
 


ஒரு சிறிய கதை சொல்கிறேன் ஒருவேளை உங்களுக்கு தெரிந்திருந்தால் மன்னிக்கவும்:
 
ஒரு துறவி ஒருவர் இருந்தார். அவர்  வீடுவீடாக சென்று உணவு கேட்டு உண்ணுவது வழக்கம். ஒருநாள் அவர் ஒரு வீட்டில் உணவு தரும்படி வேண்டினார். பிள்ளைக்கு தாய்ப்பால் கொடுத்து கொண்டிருந்த அந்த தாய், அப்படியே எழுந்து  வந்து அந்த துறவிக்கு உணவளித்தார்கள். அப்பொழுது தற்செயலாக அந்த பெண்ணின் துணி விலகியிருந்த மார்பு பகுதியை கவனித்த துறவி "தாயே என்ன இது" என்று கேட்டாராம். உடனே அந்த தாய் "இது என் குழந்தைக்கு பால் புகட்டுவதற்காக  கடவுளால் கொடுக்கப்பட்டது" என்று சொன்னார்களாம். அதை கேட்ட துறயின் மனதில்  "ஒரு குழந்தை பிறப்பதற்கு முன்னேயே அதற்க்கு என்ன தேவை என்பதை அறிந்து அதற்க்கு தேவையான உணவை தாயிடத்தில் பக்குவமாக தயாரித்து வைத்திருக்கும் கடவுளுக்கு நமக்கு என்ன தேவை என்பதை அறிந்து நமக்கு தேவையானதை தரமுடியாமலா போய்விடும்.இனிமேல் நான் உணவுக்காக வீட்டு வீடாக அலைவது கிடையாது. ஒரே இடத்தில் அமர்ந்து கடவுளை தேடுவேன் அவன் எனக்கு தேவையானதை தருவார்" என்று ஒரு மரத்தடியில் அமர்ந்து விட்டாராம். துறவி மரத்தடியில் அமர்ந்து விட்டத்தை அறிந்த ஊர் மக்கள் ஒவ்வொருவராக  அவர் இருக்கும் இடத்திலேயே சென்று உணவளிக்க ஆரம்பித்தார்களாம்.......
 
நமது வேதாகமத்தின் வார்த்தைகளின் மூலமும்,  தேவன் மனிதனை படைக்கும் முன்னர் அவன் இன்பமாய் வாழ்வதற்கு என்னென்ன தேவை என்பதை நுணுக்கமாக அறிந்து, அனைத்தையும் முதலில் படைத்து  பின்னரே மனிதனை படைத்தார் என்பதை அறியமுடிகிறது .
 
ஆதி 1: 26. பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக; அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார்.
 
மனுஷனுக்கு தேவையான எல்லாவற்றையும் முதலில் படைத்த தேவன் அவை அனைத்தின் மேலும் ஆளுகை செய்யும் அதிகாரத்தை மனுஷனுக்கு கொடுத்து எல்லாவற்றையும் அவனது பாதங்களுக்கு கீழ்படுத்தினார்.
 
எபிரெயர் 2:7 அவனை தேவதூதரிலும் சற்றுச் சிறியவனாக்கினீர்; மகிமையினாலும் கனத்தினாலும் அவனுக்கு முடிசூட்டி, உம்முடைய கரத்தின் கிரியைகளின் மேல் அவனை அதிகாரியாக வைத்து, சகலத்தையும் அவனுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர் என்று சொன்னான்.
 
இன்னும் அவனுக்கு என்ன தேவை என்றாலும் அவரை சார்ந்துகொண்டால் அனைத்தையும் அவர் தருவதற்கு விருப்பமுள்ளவராகவே இருக்கிறார். இந்த கருத்தை  தாவீதுக்கு தேவன் சொன்ன வார்த்தைமூலம் நாம் அறிந்துகொள்ள முடியும். அனேக ஸ்திரிகளை தாவீதுக்கு கொடுத்த தேவன் இன்னும் உனக்கு தேவை என்றால் என்னிடம் கேட்டிருக்கலாமே என்று ஆதங்கபடுகிறார்.
   
II சாமுவேல் 12:8 உன் ஆண்டவனுடைய வீட்டை உனக்குக் கொடுத்து, உன் ஆண்டவனுடைய ஸ்திரீகளையும் உன் மடியிலே தந்து, இஸ்ரவேல் வம்சத்தையும், யூதா வம்சத்தையும் உனக்குக் கையளித்தேன்; இது போதாதிருந்தால், இன்னும் உனக்கு வேண்டியதைத் தருவேன்.
 
"என்னிடம் கேள்" "என்னை சார்ந்துகொள்" என்பதே இந்த வார்த்தைகள் நமக்கு உணத்தும் உண்மையாகும்
 
மேலும் நாம் கேட்பதற்கு  முன்னமே நமக்கு இன்னது தேவை என்றும் அவர் அறிந்திருக்கிறார்
 
மத்தேயு 6:8  உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்
 
எனவே நாம் நமது தேவைகளை பற்றி சிறிதும் கவலைப்படாமல் தேவனின் சித்தபடி வாழ விரும்பி அவரது ராஜ்யத்துக்குண்டானவைகளையும் அதன் நீதியையும் மாத்திரம் தேடினால் போதும் மற்ற எல்லா தேவைகளும் நமக்கு கூட கொடுக்கப்படும் என்பது அதிநிச்சயம்!
 
மத்தேயு 6:33 முதலாவது தேவனுடையராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.
 
ஆனால் மனுஷனோ இன்று என்ன செய்கிறான்? தேவன் எதை தேடசொன்னாரோ அதை மாத்திரம் விட்டு விட்டு வேறுஎல்லாவற்றையும் தேடிக்கொண்டு இருக்கிறான்.
 
நிறைய பணத்தையும் வசதியையும் தேடுகிறான், நல்ல வேலையே தேடுகிறான், நல்ல வீட்டை தேடுகிறான், நல்ல மனைவியை தேடுகிறான், உலக பொருட்கள் எல்லாவற்றிலுமே பிரதனமானவற்றை தேடி தன் சுயபெலத்தால் பெற்றுக்கொள்ள அதிகமாய் வாஞ்சிக்கிறான்! ஆனால் தேவனையும் அவர் நீதியையும் தேடுவதர்க்கோ  அவனுக்கு சற்றும் விருப்பமில்லை!     
 
சங்கீதம் 53:2 தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க, தேவன் பரலோகத்திலிருந்து மனுபுத்திரரைக் கண்ணோக்கினார்.
சங்கீதம் 14:3 எல்லாரும் வழிவிலகி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்; நன்மை செய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை.
ஒருவன்கூட தேவன் எதிர்பார்க்கும் சரியான வழியில் தேவனையும் அவரது நீதியையும் தேடாமல் எல்லோருமே வழிவிலகி கேட்டுபோனோம்!  இந்நிலையில் தேவன் மனுஷனிடம் முக்கியமாக எதிர்பார்ப்பது தேவனையும் அவரது நீதியையும் மட்டும் தேடி அதை மாத்திரம் சார்ந்துகொண்டு மற்ற எல்லா உலக தேவைகளையும் பின்னுக்கு தள்ளிவிடும் மனுஷனையே!   
 
கர்த்தருக்கு சித்தமானால் தொடரும்......
 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2008
Date:
RE: "எல்லாம் தேவ சித்தம்" என்று வாழ்வதே மிகசிறந்த தேவபக்தி!
Permalink  
 


மனுஷனானவன் உலக தேவையான  தன்னுடய எல்லா காரியங்களிலும் தேவனை சார்த்து அவரது சித்தத்துக்கு தன்னை விட்டுகொடுத்து வாழ்வதையே தேவன்  விரும்புகிறார். எந்த ஒரு காரியத்துக்கும் தேவனை சர்ந்துகொள்ளும் பச்சத்தில் அவர் வழிநடத்துதல் நிச்சயம் உண்டு ஆனால் சுயமாக தங்கள் காரியங்கள் சாதிக்க விரும்புகிறவர்களை  தேவன் அவர்கள் வழியிலேயே விட்டுவிடுகிறார். நலம் பொலம் எதுவும் சொல்வதில்.
 
கிறிஸ்த்தவத்துக்குள்ளும்   சில சகோதரர்கள் "நடப்பது எல்லாமே தேவனின் சித்தமும்  அவருடய திட்டபடியும்தான் நடக்கிறது எனவே மனுஷர்களாகிய நாம் எது செய்தாலும் செய்யாவிட்டாலும்   தேவனின் சித்தமே நிறைவேறும்" என்ற கருத்தை தெரிவித்து சுவிசேஷம் சொல்லுதல், வேத வார்த்தைகளின்படி வாழுதல் மற்றும் நித்திய நரகம் போன்றவற்றை மறுத்து வருகின்றனர்.
 
அவர்களின் கருத்துக்ககளில்  அடிப்படையில் சில உண்மைகள் இருப்பதை யாரும்
மறுக்க முடியாது. காரணம் தேவனின் அனுமதியில்லாமல் இந்தஉலகில் ஒன்றுமே நடக்க முடியாது. ஆகினும் அவர்கள் சொல்லுக்கும்  செயலுக்கும் இடையில் வேறுபாடுகள் இருப்பதால் அவர்களின் விசுவாசம் வீணாகிப்போய், அதனால் தேவனுக்கு எந்த பலனும் இல்லாமல் எல்லோருக்கும் இடரலாகவே அவ்வார்த்தைகள் அமைகிறது.
 
"எல்லாம் தேவனின் சித்தம்" என்று வாழ்வதே மிக சிறந்த தேவபக்தி" என்று நான் எழுதியிருந்தேன். ஆம்! அந்த நிலை ஒரு மேன்மையான நிலையும் தேவன் மனிதனிடம் எதிர்பார்க்கும் ஒரு நிலையுமாக இருக்கிறது. அனால்  அப்படிபட்ட தேவபக்தி எவ்வாறு இருக்கவேண்டும் என்பதையும் நான் இங்கு விளக்கிட விரும்புகிறேன்
    
"எல்லாம் தேவனின் சித்தம்" என்று வாழ்பவன், தனகென்றோ தன்னுடய மனைவி பிள்ளைகளுக்கேன்றோ எந்த ஒரு  எதிர்கால திட்டத்தையும் வகுக்ககூடது. தன்னுடய வாழ்க்கை முழுமையுமே தேவனின் கரத்தில் அவரது சித்தம் நடக்க ஒப்புவிக்க வேண்டும்.  பாதி தேவன் கரத்தில் ஒப்புகொடுத்துவிட்டு மீதியை தன்னுடய கையில் எடுத்துகொள்ள கூடாது.
 
உதாரணமாக: இன்றைய திருமணங்களில் "ஆண்டவரே என் மகன்/மகளுக்கு நல்ல வரனை  கொடுங்கள். இந்த திருமண காரியங்கள்  அனைத்தையும் உம்முடய கரத்தில் ஒப்புவிக்கிறோம். உம்முடைய சித்தப்படி நடத்தும் " என்று  ஜெபித்துவிட்டு தாங்கள் மனதுக்குள் குறைந்தது இந்தனை பவுன் நகை  மற்றும் ரொக்கம்
வேண்டும். இவ்வளவு படித்திருக்கவேனும். இப்படி நிறம் இருக்க வேண்டும் என்ற நோக்கமாகிய தாங்கள் மறைமுக நோக்கங்களை தேவனுடைய கரத்தில் திணித்து,
மனுஷர்கள் தங்கள் சித்தத்தோடு தேவனின் சித்தத்தை கலப்பதர்க்காகவே
முயற்ச்சிகள் செய்கிறார்களேயன்றி முழுவதும் தேவனுடய கரத்தில் ஒரு காரியத்தை ஒப்புகொடுப்பது இல்லை. 
  
அதுபோல் மனுஷர்கள் தாங்கள் சொந்த வாழ்க்கையிலும்கூட  ஊழியம் சம்பந்தமான காரியங்கள் வேலை/வீடு படிப்பு போன்ற காரியங்களிலும் தாங்கள் மனதில் ஒரு ஆசையை வைத்துகொண்டு ஒப்புக்கு தேவனின் சித்தப்படி நடக்க வேண்டும் என்று ஒப்புகொடுக்கின்றனர். இது போன்று தானே திட்டம் தீட்டி தன்னுடய வாழ்க்கையை அமைத்துக்கொண்டு "எல்லாம் தேவ சித்தம் அதன்படி தான் நடக்கும்" என்று அடுத்தவர்களுக்கு போதனை செய்வது ஒரு மிகப்பெரிய மாய்மால பாவம் ஆகும்.  
 
எல்லாம் தேவ சித்தப்படிதான் நடக்கும்" என்று மனதார நம்பினால், தேவன் யாருக்கு எந்த சூழ்நிலையிலும் பொல்லாங்கு செய்பவர் அல்ல. மேலும் அவர் சர்வவல்லவராகவும் உங்களுடய வாழ்க்கையையும் உங்கள் சந்ததிகள்  வாழ்க்கையையும் சந்ததிக்கு சந்ததிகள் வாழ்க்கையையும் முற்றிலும்
பொறுப்பெடுத்து சரியான வழியில் நடத்தி செல்ல வல்லவராகவும் இருக்கிறார் எனவே அவரது கையில் உங்கள் எதிர்கால திட்டங்கள் அனைத்தையும் ஒப்பு கொடுத்துவிட்டு "தேவனே உம்முடைய கரத்தில் என்னுடய வாழ்க்கை முழுவதையும் உள்ளது உள்ளபடியே ஒப்புகொடுக்கிறேன். எனக்கென்று எந்த ஒரு திட்டமும் இல்லை எதிர்பார்ப்பும் இல்லை. இந்த உலகில் நீர் கட்டளையிட்ட வார்த்தைகளை கைகொண்டு நடக்க அப்பியாசிப்பது மட்டுமே என்னுடய பணி மற்றபடி என்னுடய வாழ்க்கை/என் பிள்ளைகள் வாழ்க்கை  என்னுடய எதிர்கால திட்டங்கள் எல்லாவற்றையும் நீர் பார்த்துகொள்ளும் என்று சொல்லி தேவன் கரத்தில் விட்டுவிடவேண்டும். 
 
இதுவே தேவன் எதிர்பார்க்கும் ஒரு மேன்மையான நிலையாகும். இப்படிபட்ட மனுஷர்களையே தேவன் தேடுகிறார். இவர்களை கொண்டுதான்   தேவன் பெரிய காரியங்களை சாதிக்க முடியும்.  
 
ஆனால் நாம் அவ்வாறு செய்கிறோமா? நாமோ நம்முடய மூளை அறிவால் நம்முட வாழ்க்கையை நலமாக அமைத்துக்கொள்ள தேவையான திட்டங்களை எல்லாம் நாமே  தீட்டுகிறோம். நல்ல வீட்டை கடன் வாங்கியாவது காட்ட முயல்கிறோம்.  நல்ல வரனை வரதட்சணை கொடுத்தாவது அடைய முயற்ச்சிக் கிறோம்.மூளையை  நன்றாக தீட்டி பணம் சம்பாதிக்கும் வழிகளை ஆராய்கிறோம். இத்தனை சபைகளை கட்டி முடிக்கவேண்டும் என்று தேவனின் அனுமதி யில்லாமலே தீர்மானம் எடுக்கிறோம், எந்த தேவ வழி நடத்துதலும் இல்லாமல்  சபை மூப்பர்களை எல்லாம் பின்னுக்கு தள்ளிவிட்டு தன்னுடய பிள்ளைகளை தன்னுடய சபைக்கு வாரிசாக நியமிக்கிறோம். எல்லாவற்றையும் செய்துவிட்டு பின்னர் தேவனே  உம்முடைய சித்தபடி நடத்தும்  என்று தேவன் பேரில் பழியை
போடுகிறோம். இப்படிபட்டவர்கள்  தேவனின் சித்ததத்தை பற்றி பேசவே அருகதை யற்றவர்கள் என்றே நான் கருதுகிறேன்.  
 
"நடப்பதெல்லாம் தேவனின் சித்தம்" என்ற மேன்மையான கருத்தை  போதித்து விட்டு, ஆனால் தாங்களோ தங்களின் அனைத்து வாழ்க்கையும் தேவனின் கரத்தில் ஒப்புகொடுத்து வாழாமல், தங்கள் சுய மாம்ச சித்தங்களை செய்து கொண்டு வாழ்பவர்கள் "தெரிந்துகோள்ளபட்டவர்களையும்  வஞ்சிப்பதற்கே  முயல்கிரார்களே யன்றி"  வேறொன்றும் இல்லை என்பதே எனது கருத்து.
   


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



இளையவர்

Status: Offline
Posts: 29
Date:
Permalink  
 

"" எல்லாம் தேவனின் சித்தம்" என்று வாழ்பவன், தனக்கென்றோ தன்னுடைய மனைவி பிள்ளைகளுக்கென்றோ எந்த ஒரு எதிர்கால திட்டத்தையும் வகுக்ககூடாது ""
உண்மைதான் சகோதரரே,"எல்லாம் தேவனின் சித்தம்" என்று வாழ்ந்தாலும், என்னுடைய குடும்பத்தில் ஏற்படும் குடும்ப கஷ்டங்களுக்காக அல்லது மக்களின் எதிர்கால வாழ்க்கைக்காக தேவனிடத்தில் ஜெபிப்பது தவறா? தேவனிடத்தில் என் மக்களின் எதிர்கால வாழ்க்கை நன்கு அமையவேண்டும் என்று கேட்டு பெற்றுக்கொள்வது தவறா? அல்லது மக்களின் எதிர்காலம் எப்படி இருந்தாலும் அதுதான் தேவ சித்தம் என்று விட்டுவிட வேண்டுமா?
மத்தேயு 7 : 7 கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள் அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்.
8. ஏனென்றால், கேட்கிற எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும்.
9. உங்களில் எந்த மனுஷனானாலும் தன்னிடத்தில் அப்பத்தைக்கேட்கிற தன் மகனுக்குக் கல்லைக் கொடுப்பானா?
10. மீனைக்கேட்டால் அவனுக்குப் பாம்பைக்கொடுப்பானா?
11. ஆகையால், பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா
தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?
அதேபோல, ஆதியிலே ஆதாம் ஏவாள் பாவத்தில் விழுந்தது, இஸ்ரவேல் மக்கள் எகிப்திற்கு சென்றதும் பின்பு எங்களை காப்பாற்றும் ஆண்டவரே என்று கூக்குரலிட்டதும், சவுல் ராஜா கீழ்ப்படியாமைக்கு சென்றதும் இன்னும் பரி. பவுலுக்கு இயேசு தரிசனமானதும் இவைகள் எல்லாமே தேவ சித்தமா? நாமாக தேவனுக்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டியது இல்லையா? நாம் ஜெபிக்க வேண்டியது அவசியம் இல்லையா? விபத்துகள் நடப்பது எல்லாம் தேவ சித்தமா? (தேவ பிள்ளைகளுக்கு) நம்முடைய எதிர்கால திட்டங்களை தேவனுடைய கைகளிலே தேவ சித்தத்திற்கு ஒப்புக்கொடுப்பது அல்லது தேவ ஆசிர்வாதம் வேண்டி ஜெபத்திலே ஒப்புக்கொடுப்பது தவறா?
 
தவறாக கேள்வி கேட்டிருக்கிறேன் என்றால் என் அறிவீனத்தை மன்னிக்கவும்.
வேத வசனத்தை தவறாக புரிந்து இருக்கிறேன் என்றால் விளக்கவும்.
"எல்லாம் தேவனின் சித்தம்" என்பதை தவறாக புரிந்து இருக்கிறேன் என்றால் விளக்கவும்.
உங்களின் நேரத்தை வீணடிக்கிறேன் மன்னிக்கவும் சகோதரரே.
"எல்லாம் தேவனின் சித்தம்" என்று வாழ விரும்புகிறவன் தான் ஆனாலும் மேலே கேட்ட கேள்விகள் என் உள்ளத்திலே வருகிறது.
இயேசுவின் நாமத்தில் நன்றி சகோதரரே.


__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2008
Date:
Permalink  
 

சகோ. MUTHU wrote:
 
//தவறாக கேள்வி கேட்டிருக்கிறேன் என்றால் என் அறிவீனத்தை மன்னிக்கவும்.  வேத வசனத்தை தவறாக புரிந்து இருக்கிறேன் என்றால் விளக்கவும். "எல்லாம் தேவனின் சித்தம்" என்பதை தவறாக புரிந்து இருக்கிறேன் என்றால் விளக்கவும். உங்களின் நேரத்தை வீணடிக்கிறேன் மன்னிக்கவும் சகோதரரே.///
 
முதலாவதாக சகோதரர் அவர்கள் இத்தளத்தில் எந்தவிதமான கேள்வியை கேட்பதற்கும் தயங்கவோ அல்லது பாரப்படவோ வேண்டாம் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.  நான் எழுதும் கருத்துக்கள் எல்லாம்  100௦௦% சரி என்று சாதிப்பவன் நானல்ல. காரணம் நானும் ஒரு மனுஷனே! என்னிடமும் தவறுகள் இருக்கவோ அல்லது தவறான கருத்துக்களை எழுதவோ வாய்ப்புகள் நிச்சயம் உண்டு. நான் எழுதிய பல கருத்துக்களை ஆவியானவர் கண்டித்ததன் அடிப்படையில் திருத்தி யிருக்கிறேன். எனவே தாங்கள் கருத்துக்களை தாராளமாக முன்வைக்கலாம் தாங்கள் போன்றவர்களின் இவ்விதமான கேள்விகள் என்னுடய ஆவிக்குரிய வாழ்வுக்கு உறமூட்டுபவைகளாகவே அமையுமே தவிர  மற்றபடியல்ல! 
 
சகோ. MUTHU wrote:
//"எல்லாம் தேவனின் சித்தம்" என்று வாழ்ந்தாலும், என்னுடைய குடும்பத்தில் ஏற்படும் குடும்ப கஷ்டங்களுக்காக அல்லது மக்களின் எதிர்கால வாழ்க்கைக்காக தேவனிடத்தில் ஜெபிப்பது தவறா? தேவனிடத்தில் என் மக்களின் எதிர்கால வாழ்க்கை நன்கு அமையவேண்டும் என்று கேட்டு பெற்றுக்கொள்வது தவறா? அல்லது மக்களின் எதிர்காலம் எப்படி இருந்தாலும் அதுதான் தேவ சித்தம் என்று விட்டுவிட வேண்டுமா?////    
 
இந்த செய்தியானது "எல்லாம் தேவ சித்தம்" "எல்லோருக்கும் மீட்பு" என்று சொல்லி செய்துகொண்டு,  சுவிசேஷம்  சொல்லுதல், தேவனின் வார்த்தைகள்படி வாழ விளைதல், பிறருக்காக ஜெபித்தல் போன்ற காரியங்களை தேவையற்றது என்று விமர்சிப்பவர்கள் "தேவ சித்தப்படி சரியாக  வாழ்வது" என்றால் என்ன வென்பதை  அறியவேண்டும் என்ற நோக்கிலேயே எழுதப்பட்டது.      
 
என்னுடய முந்தய  பதிவுகளில்"எல்லாமே தேவசித்தம் என்று வாழ்வதே சிறந்தது" என்று எழுதியிருந்தாலும், நான் எந்த இடத்திலும் நம்முடய தேவைகளை குறித்தோ அல்லது நம்முடய காரியங்களை குறித்தோ தேவனிடத்தில் விண்ணப்பிக்ககூடாது என்றுஎழுதவில்லையே. மாறாக நம்முடய தேவைகளுக்கு நம்முடய சுய புத்தியை சாராமல் தேவனை சார்ந்துகொண்டு அவரை நோக்கியே  விண்ணப்பிக்கவேண்டும் என்றே தேவன் எதிர்பார்க்கிறார் என்றே எழுதியிருக்கிறேன்.
  
எனவே நம்முடய காரியங்கள் அனைத்தையும் ஒரு தகப்பனிடம் சொல்வதுபோல் தேவனிடம் ஒப்புவித்துவிட்டு, பின்னர் அவரது சித்தபடி சகலமும் நிறைவேர விட்டுவிடவேண்டும். உதாரணமாக நாம் ஆண்டவராகிய இயேசுவின் ஜெபத்தை எடுத்து கொள்ளுங்கள்
 
மத்தேயு 26:39 சற்று அப்புறம்போய், முகங்குப்புற விழுந்து: என் பிதாவே, இந்தப்பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படிசெய்யும்; ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்.
 
அதாவது "என்னுடய ஆசை அல்லது என்னுடய மாம்ச விருப்பம் இவ்வாறு இருக்கிறது ஆனால் அதன்படிதான் நடக்கவேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை. உம்முடைய சித்தமே இங்கு நிறைவேறுதல் அவசியம்" என்பதே இந்த ஜெபத்தின் அடிப்படை செய்தி. இங்கு "நான்" "என்னுடய என்ற சுய சித்தம்   சாகவேண்டும். அதுபோலவே  நம்முடைய ஜெபங்களும் இருக்க வேண்டும் என்பதுவே எனது அடிப்படை கருத்தும் கூட!   
 
இந்த உலகில் நடக்கும்  அனேக காரியங்களில் எது சரியானது எது சரியில்லாதது என்பது பகுத்தறியும் தன்மை நமது மாம்ச அறிவுக்கு கிடையாது. தேவனின் அனுமதியிலாமல்  சாத்தானால்  நம்மை எதுவும் செய்துவிட  முடியாது. தேவன் 
நம்முடைய நன்மைக்கேயல்லாமல் நம்மீது எந்த அனுமதியையும் சாத்தானுக்கு கொடுப்பதில்லை.   நாம் சரி என்று நினைப்பது சரியும் அல்ல. நாம் தவறு என்று கருதுவது தவறும் அல்ல. ஆனால் தேவன் அனைத்தையும் அறிந்தவர்! எனவே 500௦௦ வருடங்களுக்கு அப்பால் உள்ளதையும் அறிந்துள்ள தேவனின் சித்தப்படி நடக்க ஒப்புகொடுக்கும் போது அவர் எல்லாவற்றையும் சரியாகவே நடத்துவர். அதுவே தேவன்பேரில் நாம் வைக்கும் ஒரு முழுமையான விசுவாசம் என்பதே எனது கருத்து.
 
மேலும் ஒரு முக்கியமான காரியத்தை நான் இங்கு தெரிவிக்க விரும்புகிறேன்:
 
இந்த உலகில் எந்த ஒரு பொருளையோ அல்லது மனுஷனையோ அல்லது மிருகங்களையோ எடுத்துகொண்டாலும் அதில் முதல் தரம் இரண்டாம்தரம் மூன்றம்தரம் என்று தரவரிசை உண்டு. பள்ளியில் படிப்பானாலும் சரி, நம்முடய நண்பர்கள் அல்லது தேவ ஊளியர்களானாலும் சரி, எல்லாவற்றிலும் ஒரு தரவரிசை உண்டு!   
 
ஏன் இயேசுவின் 12 சீடர்களில் கூட அதுபோன்று இயேசுவின் மார்பில் சாயும் அளவுக்கு தகுதியுள்ளவர் இயேசுவை மிக அதிகமாக விசுவாசித்தவர், அவரை விசுவாசிக்காதவர், காட்டிகொடுத்தவர் என்று தர வரிசை உண்டு.   
 
அதுபோல் ஆவிக்குரிய நிலையிலும் தரவரிசை உண்டு! 
 
மத்தேயு 16:27 மனுஷகுமாரன் தம்முடைய பிதாவின் மகிமை பொருந்தினவராய்த் தம்முடைய தூதரோடுங்கூட வருவார்; அப்பொழுது, அவனவன் கிரியைக்குத்தக்கதாக அவனவனுக்குப் பலனளிப்பார்.
 
அதாவது ஆண்டவரிடமிருந்து பெறப்போகும் பலனில் அவனவன் கிரியைக்கு தகுந்பாகுபாடு உண்டு என்பதையே இவ்வசனம் நம்மக்கு உணர்த்துகிறேன்!
 
I கொரிந்தியர் 3:12 ஒருவன் அந்த அஸ்திபாரத்தின்மேல் பொன், வெள்ளி, விலையேறப்பெற்ற கல், மரம், புல், வைக்கோல் ஆகிய இவைகளைக் கட்டினால், 13. அவனவனுடைய வேலைப்பாடு வெளியாகும்; நாளானது அதை விளங்கப்பண்ணும். ஏனெனில் அது அக்கினியினாலே வெளிப்படுத்தப்படும்; அவனவனுடைய வேலைப்பாடு எத்தன்மையுள்ளதென்று அக்கினியானது பரிசோதிக்கும். 14. அதின்மேல் ஒருவன் கட்டினது நிலைத்தால், அவன் கூலியைப் பெறுவான்
 
இங்கு நான் எழுதுவது எல்லாமே  வெளிப்படுத்தின விசேஷம் சொல்லும்  ஒரு மேன்மையான ஜெயம்கொள்ளும்  நிலையை அடையும்படிக்கு தேவனால் போதிக்கபட்டது.
 
தாங்கள் கேட்டதுபோல் நான் ஜெபிக்க கூடாதா? இதை கேட்ககூடாதா\ எனக்கு ஒரு வீடு வேண்டாமா? என்னுடய பிள்ளைகளுக்கு சரியான்  படிப்பை தரவேண்டாமா? எனக்கு நல்ல சுகத்தை கேட்கக்கூடாதா? எனக்கு ஒரு பைக்காவது வேண்டாமா?  எனக்கு நல்ல மனைவி வேண்டாமா?  போன்ற எந்த ஒரு நிலைபாடும் தவறு என்றோ அது ஆண்டவர் பார்வையில் பாவமானது என்றோ நான் குறிப்பிட விரும்பவில்லை. ஆனால் இவ்வாறு நம்முடைய சொந்த வாழ்வுக்கும் சொந்த வீட்டக்கும் சொந்த குடும்பத்துக்கும் ஜெபிக்கும் காரியங்கள் எல்லாம் ஆவிக்குரிய வாழ்வின் இரண்டாம்தர நிலை என்பதே என்னுடய தீர்வு!
 
அதாவது ஆண்டவராகிய இயேசுவின் வார்த்தைபடி இப்பூமியில் தேவனுக்குரியவைகளை மாத்திரம் நாம் தேடினால் போதும் நம் வாழ்வுக்கு தேவையான அனைத்துமே  நமக்கு கூட கொடுக்கப்படும் என்பதை நான் அனுபத்தில் அறிந்ததால் இங்கு எழுதுகிறேன்.
 
மத்தேயு 6:33 முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.
 
ஆனால் என்ன? என்னுடய தேவை ஆயிரம் இருக்கலாம்!  அவர் மிக சரியாக அளந்துதான் போஷிப்பார்! அவர்   கொடுப்பதை வைத்து  திருப்தியாக இருக்கவும் மனரம்யமாக வாழவும் பழகவேண்டும் அவ்வளவுதான்!
 
மற்றபடி இதுகூட வேண்டாமா? அதுகூட வேண்டாமா?என்ற கேள்வி நிச்சயம்  தவறல்ல! ஆனால் அதில் மேன்மை  இல்லை!     
  
கேளுங்கள் தரப்படும் என்று சொன்ன தேவனே நீங்கள் கேட்பதற்கு முன் என்ன தேவை என்று அறிந்திருக்கிறார். காலம் வரும்போது  நிச்சயம் நமது தேவனை நிறைவேற்றுவர் என்று எண்ணி அவரது சித்தத்துக்கு ஒப்புகொடுத்து வாழ்வதே சிறந்தது.
 
பிலிப்பியர் 4:6 நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்.
 
ஆனால் "இது இப்படித்த்தான் நடக்கவேண்டும்" என்று தேவனை கட்டாயபடுத்தும் ஜெபம் வேண்டாமே!  தேவ சித்தப்படி நடக்க நமது வாழ்க்கையை விட்டுகொடுத்து ஜெபிக்கலாமே என்பதே இங்கு எனது அடிப்படை கருத்து. 
 
நான் சொல்வதன் கருத்து சகோதரர் அவர்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.  புரியவில்லை என்றால் தேவ சித்தமானால் ஒரு நல்ல உதாரணம்
தர விளைகிறேன்.


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



இளையவர்

Status: Offline
Posts: 29
Date:
Permalink  
 

மிகவும் நன்றி சகோதரரே,
தங்களின் கருத்தை அறிந்ததோடு, என்னுடைய நிலையையும் உணர்த்தி இருக்குறீர்கள், இன்னும் அதிகமாக புரிந்துகொள்ள தேவன் உதவி செய்வார் என் விசுவாசிக்கிறேன்.
 
// "இது இப்படித்த்தான் நடக்கவேண்டும்" என்று தேவனை கட்டாயபடுத்தும் ஜெபம் வேண்டாமே! தேவ சித்தப்படி நடக்க நமது வாழ்க்கையை விட்டுகொடுத்து ஜெபிக்கலாமே என்பதே இங்கு எனது அடிப்படை கருத்து. //
 
என்னுடைய விருப்பங்களை ஆண்டவரிடம் சொல்லுவேன் ஆனாலும் ஆண்டவரே நீர் விரும்பும்படி எல்லாவற்றையும் செய்யுங்க என்று சொல்லிவிடுவேன். ஏனெனில், நம்முடைய நினைவுகளை விட ஆண்டவரின் நினைவுகள் எல்லாமே உயர்ந்தவைகள் என்று அறிந்தவன்.
 
தங்களின் உதாரணத்தை அறிய விரும்புகிறேன்.
 
நன்றி சகோதரரே, தங்களின் பணி சிறக்க ஆண்டவரிடம் ஜெபிக்கிறேன்.


__________________


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
"எல்லாம் தேவ சித்தம்" என்று வாழ்வதே மிகசிறந்த தேவபக்தி!
Permalink  
 


"நன்மையானதையே அருளும் தேவன்" என்ற தலைப்பில் சகோ  Johnson kennedy எழுதிய இந்த கட்டுரை, இந்த திரியின் தலைப்புக்கு வலு சேர்ப்பதால் இங்கு பதிவிடுகிறேன்.  
 
 
'நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே'. - (எரேமியா 29:11).
 
ஒரு விவசாயிக்கு இரண்டு பெண் பிள்ளைகள் இருந்தனர். ஒருவளை ஒரு விவசாயிக்கும், மற்றவளை ஒரு குயவனுக்கும் திருமணம் செய்து வைத்தார். தன் இரண்டு பிள்ளைகளையும் அடிக்கடி போய் பார்த்து வருவது அவரது வழக்கம். அப்படி ஒரு முறை அவர் மூத்தவள் வீட்டிற்கு சென்றபோது, அவள் தன் தகப்பனிடம், 'அப்பா, தேவன் நல்ல மழையை கொடுக்கும்படி அவரிடம் வேண்டி கொள்ளுங்கள். பயிர்கள் மழை இல்லாமையினால் வாடி போய் கொண்டு இருக்கின்றன' என்று கூறினாள்.
 
அவர் மற்ற பெண்ணை பார்க்க போனபோது, அவள், தன் தகப்பனிடம், 'அப்பா நல்ல வெயில் அடிக்கும்படி ஜெபித்து கொள்ளுங்கள். அப்போதுதான் என் கணவர் செய்த மண் பாத்திரங்கள் நன்றாக காய முடியும்' என்று கேட்டு கொண்டாள்.
 
இப்போது தகப்பனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. இரண்டு பேருக்காகவும் ஜெபிக்க வேண்டும்! ஆகவே கடைசியில் அவர் தைரியமாக, 'தேவனே உம்முடைய சித்தம் எதுவோ அதுவே ஆகக்கடவது' என்று ஜெபித்தார்.
 
நம் தேவன் நம்முடைய காலங்களை அறிந்தவரல்லவா? நம் இறந்த காலம், நிகழ் காலம் மற்றும் எதிர்காலங்களை அறிந்த தேவன், நமக்கு என்ன தேவை என்றும் அறிந்திருக்கிறார். ஒரு சிறு பிள்ளை கத்தி வேண்டும் என்று அடம் பிடித்தால், அதை அந்த பிள்ளைக்கு அதனுடைய பெற்றோர் தருவார்களோ? நிச்சயமாக இல்லை. அதுப்போல நாம் அநேக தேவைகளை குறித்து ஆண்டவரிடம் கேட்கலாம். ஆனால் நமக்கு எது நன்மை என்று தேவன் அறிந்திருக்கிறார். அவருடைய சித்தத்திற்கு ஒப்புவித்து நாம் ஜெபிக்கும்போது, அவர் நமக்கு நன்மையானதையே நிச்சயமாய் கொடுப்பார்.
 
நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே என்று நமக்கு வாக்குதத்தம் செய்த ஆண்டவர், தீமையானவற்றை அல்ல, நன்மையானவற்றையே கொடுக்க ஆயத்தமாயிருக்கிறார்.
 
ஒருவேளை நமக்கு கிடைத்திருக்கும் எந்த ஒரு காரியமும் நம்முடைய விருப்பமில்லாததாக இருக்கலாம். ஆனால், அவருடைய சித்தத்திற்கு ஒப்பு கொடுத்து ஜெபித்து, அதன்படி பெற்று கொண்டதை குறித்து, சோர்ந்து போகாமல், தேவன் எல்லாவற்றையும் நன்மையாகவே செய்வார் என்று நம்பிக்கையோடு, வாழ முயற்சிக்க வேண்டும். ஒருவேளை தற்போது நமக்கு தெரியாவிட்டாலும், பிற்காலத்தில் அது எத்தனை நன்மையானது என்று தெரியவரும்போது, கர்த்தரை துதிக்காமல் நம்மால் இருக்க முடியாது. '..கேளுங்கள், அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக்கொள்வீர்கள்' என்று வாக்குதத்தம் செய்தவர், நிச்சயமாகவே நம் சந்தோஷம் நிறைவாகும்படியே தந்தருளுவார். ஆமென் அல்லேலூயா!

......Bro. Johnson kennedy 



__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2008
Date:
RE: "எல்லாம் தேவ சித்தம்" என்று வாழ்வதே மிகசிறந்த தேவபக்தி!
Permalink  
 


Muthu wrote:
  
தங்களின் உதாரணத்தை அறிய விரும்புகிறேன்.
 

சுமார் 15 வருடங்களுக்கு எனது கண்ணில் சிறு கோளாறு  ஏற்பட்டு சற்று தூரத்தில் இருக்கும் பொருட்களை சரியாக பார்க்க முடியாத நிலை ஏற்ப்பட்டது. கண்ணை  பரிசோதனை செய்தபோது ஒரு பவர் கண்ணாடி போடவேண்டும் என்றும், இல்லை என்றால் விரைவில் கண் கெட்டுவிடும் என்றும் சொன்னார்கள்.  ஆனால் நானோ சிறிது நாட்கள் கண்ணாடி அணிந்து விட்டு பின்னர் "என்  தேவன் எந்த பொருளை எவ்வளவு தூரத்தில் எப்படி பார்க்கவேண்டும் என்று என் கண்ணை வைத்திருக் கிறாரோ அப்படியே நான் பார்க்கிறேன். அவரது சித்தத்துக்கு மீறி என் கண்ணை கூர்மையாக்கி எல்லாவற்றையும் பார்க்க நான் விரும்பவில்லை" என்று எண்ணி, கண்ணாடி அணிவதை நிறுத்தி  விட்டேன்.

சொல்லபோனால் தற்போது என் கண்களின் பார்வை திறன் அதிகரித்துள்ளதே தவிர வேறு எந்த பாதிப்பும் இன்றுவரை இல்லை! தேவனின் சித்தத்துக்கு நம்மை விட்டுகொடுத்தால் அது நன்மையாகவே அமையும்  என்பது எனது கருத்து.
  
இதற்க்கு  நேர்  எதிரான  இன்னொரு  நிலையை  பாருங்கள்! 
 
ஒரு சபையானது  சாலை ஓரத்தில் இருந்த அரசாங்க நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்தது. ஒரு நாள்  அரசாங்கத்தில் இருந்து அந்த ஆக்கிரமிப்பு இடங்கள் எல்லாம் இடித்து அகற்றப்படும் என்றும் அந்த இடத்தை உடனே காலி செய்யவும் என்று நோட்டீஸ் வந்தது.
 
உடனே சபையார் எல்லோரும் சேர்ந்து "அந்த இடம் உடைக்கப்பட கூடாது" என்று பரத்தோடு முழு இரவு ஜெபம் உபவாச ஜெபம்   எல்லாம் செய்து பலநாட்கள் ஜெபித்தனர். ஆண்டவர் அவர்கள் ஜெபத்தையும்  கேட்டார்! அந்த இடத்தை இடிக்கும் திட்டத்தை அரசாங்கம் கைவிட்டது. 
 
ஆனால் இந்த ஜெபத்தால் வெற்றிபெற்றது தேவனின் சித்தம் அல்ல சாத்தானின் திட்டமே வெற்றிபெற்றது என்று நான் நிச்சயமாக கூறுவேன்!  
 
இதுபோன்ற ஜெபம் தேவ நீதிக்கும் அவர் சித்தத்துக்கும் விரோதமானதும், தேவன் விரும்பாததும் ஆகும். முதலாவது தேவன் நீதியை தேடவேண்டும்  என்றுதான் வேதம் குறிப்பிடுகிறது. எனவே தேவனுக்குண்டான காரியங்களானாலும் கூட நீதியையே தேவன்  எதிர்பார்க்கிறார்
 
அதாவது நடக்கபோகும் ஒரு காரியத்தில் ஆவிக்குரிய நிலையின் நன்மை தீமை என்னவென்பதை நாம் சரியாக அராய்ந்து அறிந்தால்  நாம் நிச்சயம் இதுபோன்ற பிடிவாத ஜெபம் செய்யாமல் தேவனின் சித்தத்துக்கு விட்டு கொடுத்தே ஜெபிப்போம். இவ்வாறு சில காரியங்களில் நாம் பிடிவாதமாக இருந்து ஜெபிக்கும் ஜெபத்தால்  தேவனால் கேட்கப்பட்டாலும், பின்னாளில் அதனால் பல தீமைகள் ஏற்ப்பட வாய்ப்புண்டு!
 
வேதத்தின்படியே ஒரு உதாரணம் சொல்கிறேன்:
 
ராஜாவாகிய எசேக்கியா தேவனின் பார்வைக்கு செம்மையானதை செய்து தேவனுக்கு பிடித்தமாக நடந்தவன்
 
II இராஜா 18 : 1. ஓசெயாவின் மூன்றாம் வருஷத்திலே ஆகாஸ் என்னும் யூதாவுடைய ராஜாவின் குமாரனாகிய எசேக்கியா ராஜாவானான்.
5. அவன் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின்மேல் வைத்த நம்பிக்கையிலே, அவனுக்குப் பின்னும் அவனுக்கு முன்னும் இருந்த யூதாவின் ராஜாக்களிலெல்லாம் அவனைப்போல் ஒருவனும் இருந்ததில்லை.
 
அசீரியர்களின் படையெடுப்பின் போதுகூட  கர்த்தரை அதிகமாக  சார்த்துகொண்டு வெற்றிபெற்ற  இவன். ஒருநாள் மரணத்துக்கேதுவான வியாதிகொண்டான்:  
 
II இராஜா20:1 அந்நாட்களில் எசேக்கியா வியாதிப்பட்டு மரணத்துக்கு ஏதுவாயிருந்தான்; அப்பொழுது ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா என்னும் தீர்க்கதரிசி அவனிடத்தில் வந்து, அவனை நோக்கி: நீர் உமது வீட்டுக்காரியத்தை ஒழுங்குப்படுத்தும்; நீர் பிழைக்கமாட்டீர், மரித்துப்போவீர் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.

II இராஜாக்கள் 20:2 அப்பொழுது எசேக்கியா தன் முகத்தைச் சுவர்ப்புறமாகத் திரும்பிக் கொண்டு, கர்த்தரை நோக்கி: ஆ கர்த்தாவே, நான் உமக்கு முன்பாக உண்மையும் மன உத்தமமுமாய் நடந்து, உமது பார்வைக்கு நலமானதைச் செய்தேன் என்பதை நினைத்தருளும் என்று விண்ணப்பம்பண்ணினான். எசேக்கியா மிகவும் அழுதான்.

II இராஜாக்கள் 20:5 நீ திரும்பிப்போய், என் ஜனத்தின் அதிபதியாகிய எசேக்கியாவை நோக்கி: உன் தகப்பனாகிய தாவீதின் தேவனாயிருக்கிற கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: உன் விண்ணப்பத்தைக் கேட்டேன், உன் கண்ணீரைக் கண்டேன்; இதோ, நான் உன்னைக் குணமாக்குவேன்; மூன்றாம் நாளிலே நீ கர்த்தருடைய ஆலயத்துக்குப் போவாய்
 
இவ்வாறு எசேக்கிய ராஜாவின் அழுகையுடன் கூடிய விண்ணப்பத்தை கேடடு கர்த்தரே தன்னுடய முடிவை அல்லது தன்னுடய வார்த்தையை அல்லது சித்தத்தை மாற்றி அவனுக்கு அவனுடய ஆயுள் நாட்களில் சுமார் 15 வருடங்கள் கூட்டி கொடுத்தார்.
 
6. உன் நாட்களோடே பதினைந்து வருஷங்களைக் கூட்டுவேன்; உன்னையும் இந்த நகரத்தையும் அசீரியா ராஜாவின் கைக்குத் தப்புவித்து, என் நிமித்தமும் என் தாசனாகிய தாவீதின் நிமித்தமும் இந்த நகரத்துக்கு ஆதரவாய் இருப்பேன் என்று சொல் என்றார்.
 
ஆம்! ஒரு தனி மனிதனின் வேண்டுதலைஏற்று தேவனே தன்னுடய வார்த்தையை மாற்றி ஆயுட்காலத்தை கூட்டிகொண்டுத்த  இதற்கொத்த செயல் வேதாகமத்தில் எங்கும் நடந்ததாக எனக்கு தெரியவில்லை. 
 
ஆனால் இவ்வாறு மற்றாடிபெற்ற அந்த ஆயுட்காலத்தில் எசிக்கியா மன மேட்டிமை உள்ளவனாகி கர்த்தருடன் இருந்த நல்ல உறவை கெடுத்து கொண்டானேயன்றி அதற்க்கு ஏற்ற நன்றியுணர்வோடு நடந்துகொள்ளவில்லை. 
 
II நாளாகமம் 32:25 எசேக்கியா தனக்குச் செய்யப்பட்ட உபகாரத்திற்குத்தக்கதாய் நடவாமல் மேட்டிமையானான்; ஆகையால் அவன்மேலும், யூதாவின்மேலும், எருசலேமின்மேலும் கடுங்கோபமூண்டது.
 
31.  பாபிலோன் பிரபுக்களின் ஸ்தானாபதிகள் தேசத்திலே நடந்த அற்புதத்தைக் கேட்க அவனிடத்துக்கு அனுப்பப்பட்ட விஷயத்தில் அவன் இருதயத்தில் உண்டான எல்லாவற்றையும் அறியும்படி அவனைச் சோதிக்கிறதற்காக தேவன் அவனைக் கைவிட்டார்.
இப்படி நடந்துகொண்டதற்கு பதில், முன்னமே தேவன்  அவருடைய  சித்தப்படி அவனுக்கு மரணம்  நியமித்திருந்த நாளில் அவரது சித்தப்படி ஆகட்டும் என்று விட்டுகொடுத்து  அவருக்கு பிரியமான ஒருவனாக இருந்து செத்து போவதையே நலம் என்று நான் கருதுகிறேன்.  
 
எனவே அன்பானவர்களே! எந்த ஒரு காரியத்துக்கு ஜெபித்தாலும் ஜெபத்தை முடிக்கும்போது "ஆண்டவரே இது என்னுடய விண்ணப்பம் ஆகினும் உம்முடய சித்தப்படியே ஆகட்டும் என்றும், அது எனக்கு தனிப்பட்ட முறையில் நன்மை யாகிலும் தீமையாகிலும் விளைவிக்குமாகிலும் கூட  உம்முடய சித்தமே நிறைவேறட்டும் என்று ஜெபிபோமாக!
 
நியாயமான காரணமின்றி அவர் யாரையும் காரணமில்லாமல் துன்பத்துக்குள் வழிநடத்துவது இல்லை!
 
புலம்பல் 3:33 அவர் மனப்பூர்வமாய் மனுபுத்திரரைச் சிறுமையாக்கிச் சஞ்சலப்படுத்துகிறதில்லை.
 
அவ்வாறு அவர் சஞ்சலப்படுத்தினால் அதில் அநேகருக்கு பயனுள்ள ஒரு தெய்வீக நோக்கம் நிச்சயம் இருக்கும்
 
புலம்பல் 3:32 அவர் சஞ்சலப்படுத்தினாலும் தமது மிகுந்த கிருபையின்படி இரங்குவார்.
 
எனவே அவரது சித்தத்துக்கு முழுமையாக நம்மை விட்டுகொடுத்து வாழ்வதே சிறந்தது.
 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard