இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பாவங்களை விட்டுவிட ஆலோசனை பெறலாம்/தரலாம்!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
பாவங்களை விட்டுவிட ஆலோசனை பெறலாம்/தரலாம்!
Permalink  
 


விசுவாசிகளாகிய  நாம்னைவருமே  கிறிஸ்த்து இயேசுவுக்குள் பரிசுத்தமாக்கப்பட அழைக்கபட்டவர்கள். நம்மை பரிசுத்தமாக்குகிறவர் கர்த்தரே என்றாலும் நம்மால் முடிந்த அளவு நாம் பாவங்களை விட்டொழித்து  பரிசுத்தமாக வாழ்வதற்கு முயற்ச்சிப்பது அவசியம்
 
I பேதுரு 1:15 உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள்.
 
என்று வேதம் சொல்லுவதால், நாம் நம்முடைய பரிசுத்தத்தை  காத்து கொள்வதர்க்கு மிகுந்த பிரயாசம் எடுத்தல் அவசியமாகிறது
 
ஒரு மனுஷனின் பரிசுத்தத்தை கெடுப்பது பாவங்களே. இவ்வித பாவங்கள் கொலை விபச்சாரம்  போன்ற பெரிதான் பாவங்களாக வெளியரங்கமாக இல்லை என்றாலும், மனதளவில் உண்டாகும்   "கபடு" "வன்கண்" "பொறாமை" "வஞ்சகம்" கெடுத்து
பேசுதல், கேலி பேசுதல், போட்டுகொடுத்தல், பொருளாசை போன்ற சிறு சிறு செயல்களாககூட  இருக்கலாம். இவைகள் ஒரு மனுஷனின் பரிசுத்தத்தை கெடுக்க கூடும்.
 
மனுஷனை தீட்டாக்கும் காரியங்கள் என்று ஆண்டவராகிய இயேசு குறிப்பிட்ட காரியங்களை சற்று கவனிக்கவும்
 
மாற்கு 7:21 எப்படியெனில், மனுஷருடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாத சிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும்,
22. களவுகளும், பொருளாசைகளும், துஷ்டத்தனங்களும், கபடும், காமவிகாரமும், வன்கண்ணும், தூஷணமும், பெருமையும், மதிகேடும் புறப்பட்டுவரும்.
23. பொல்லாங்கானவைகளாகிய இவைகளெல்லாம் உள்ளத்திலிருந்து புறப்பட்டு மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என்றார்.
 
இதுபோன்ற பொல்லாங்கான காரியங்களால் மனுஷன் தீட்டுபடுவதால் அவன் தேவனுக்கேற்ற பரிசுத்த நிலையை அடைய முடிவதில்லை.
 
ஆகினும் நம்மிடமுள்ள இதுபோன்ற மறைவான பாவங்களை கண்டறிந்து அதை மேலும் மறைக்காமல்,  அறிக்கை செய்து விட்டுவிடுவோமாகில் நாம் தேவனிடம் இரக்கம்பெற்று  பரிசுதத்த்தில் வளர முடியும்.
 
யோவான் 1:9 நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.
 
இங்கு முக்கியமாக  நான் சொல்லவருவது என்னவெனில். தேவன் இவ்வுலகில் எல்லோரையும் ஒரே குணாதிசயங்களுடன் படைக்கவில்லை. ஒருசிலருக்கு பணத்தின்மேல் அதிக  அக்கறை இருக்கும் ஒரு சிலருக்கு ஆஸ்த்தியின் மேல் அக்கறை இருக்கும் ஒரு சிலருக்கு பாலியல் காரியங்களில் அதிக அக்கறை இருக்கும் ஒரு சிலருக்கு சினிமா/ போதை பொருட்கள்/ பாடல்கள்  என்று ஒவ்வொருவருக்கு ஒவ்வொருவித ரசனை இருக்கிறது !      
 
ஒரு சில விசுவாசிகள் சற்றும் பொருட்படுத்தாமல்  சுலபமாக  விட்டு விடக்கூடிய பாவ காரியங்கள் வேருசிலருக்கோ விடவேமுடியாத ஒருகடினமான செயலாகவும் அதை செய்யாமல் தவிர்க்க வாஞ்சித்தும் முடியாதநிலையில் இருக்கலாம். எனவே ஒருவருடைய ஆலோசனை இன்னொருவருக்கு அவசியமாகிறது    
 
எபிரெயர் 3:13  உங்களில் ஒருவனாகிலும் பாவத்தின் வஞ்சனையினாலே கடினப்பட்டுப் போகாதபடிக்கு, இன்று என்னப்படுமளவும் நாடோறும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லுங்கள்.
 
யாக்கோபு 5:16 நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள்.
 
என்று  வசனம் சொல்வதால் நாம் ஒருவருக்கொருவர் ஜெபம் பண்ணவும் ஒருவருக்குள்ள  விடமுடியாத பாவங்களை அறிக்கை செய்து விட்டுவிடவும் அல்லது விட்டுவிட ஆலோசனை பெறவும் இந்த திரியை நாம் பயன்படுத்தலாம்.    
 
I இரா 8:46 பாவஞ்செய்யாத மனுஷன் இல்லையே
யோவான் 1:8 நமக்குப் பாவமில்லையென்போமானால் நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது.
 
என்று வசனம் சொல்வதால், தள சகோதரர்கள் தாங்கள் விடமுடியாமல் தவிக்கும் சிறு சிறு தவறுகள் அல்லது நீண்ட நாட்களாக விடமுடியாமல் தவித்து பின்னர் தேவனின் கிருபையால் விடுதலை பெற்ற சம்பவங்கள் ஏதாவது இருக்குமாயின் இங்கு பதிவிடலாம். பிறருக்கு ஆலோசனையாகவும் தங்களுக்கு தேவையான ஆலோசனையை பெறவும் அது பயனுள்ளதாக அமையும் என்று கருதுகிறேன்.
 
சும்மா அடுத்தவரை குறைகூறிக்கொண்டு திரிவதில் எந்த பயனும்  இல்லை! நம்மை நாமே சோதித்தறிந்து மறைவான பாவங்களில் இருந்து விடுபடுவோம்!  
 
இந்த திரியிலுள்ள செய்திகள்  அநேகருக்கு பயனுள்ளதாக அமைய ஆண்டவர்தாமே கிருபை செய்வாராக!


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

என்னுடய  தரப்பில்  இருந்து நான் முதல் சாட்சியை இங்கு பதிவிட விரும்புகிறேன்.
 
தேவனை அறியும் முன்பு நான் மிக அதிகமாக செகரெட் பிடிப்பவனாக இருந்தேன். இரட்சிப்புக்கு கடந்து வந்தும்கூட என்னால் அந்த சிகரெட் பழக்கத்தை விடமுயாமல் தவித்தேன். சிகரெட்டை விடுவவதற்க்காக பான் பராக்  உபயோகித்தேன். ஆனால் நடந்ததோ சிகரெட்/பான்பராக் இரண்டையுமே விடமுடியாமல்போனது. என் மனதில் இந்த காரியங்கள் குறித்து நீண்ட நாட்கள் எந்த ஒரு உருத்துதலும் இல்லாமல் இருந்தது காரணம்  கீழ்கண்ட என்னை சமாதானபடுத்தியது. 
 
மாற்கு 7:15 மனுஷனுக்குப் புறம்பே இருந்து அவனுக்குள்ளே போகிறதொன்றும் அவனைத் தீட்டுப்படுத்தமாட்டாது; அவன் உள்ளத்திலிருந்து புறப்படுகிறவைகளே அவனைத் தீட்டுப்படுத்தும்
 
ஆகினும்  'சிகரெட்டில் இருந்து  உள்ளே செல்லும் புகையானது  உடம்பை கெடுக்கிறது' எனவே கீழ்கண்ட வசனம் எனக்கு ஒரு பெரிய எச்சரிப்பாக இருந்தது.
 
கொரிந்தியர் 3:17 ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக்கெடுத்தால், அவனை தேவன் கெடுப்பார்; தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது; நீங்களே அந்த ஆலயம்.
 
பாவங்களை குறித்து கண்டித்து உணர்த்து பரிசுத்த ஆவியானவர் சிகரெட் பிடிக்கும் அனேக நேரங்களில் என்னுள் அதிக வேதனைபடுவதை என்னால் உணரமுடிந்தும் ஆகினும் என்னால் அந்த பழக்கத்தை நீண்ட நாட்களாக விடமுயாமல் இருந்தது.
 
யாரை பார்த்தாலும் ஆண்டவரின் பெருமையை பற்றியும் தேவனின் வல்லமை  பற்றியும் அதிகமாக பேசும் எனக்கு இந்த சிகரெட்/பான்பராக் விஷயத்தில் இரட்சிக்கபடாத ஒரு நண்பன் எனக்கு அறிவுரை சொல்லும் நிலையில் கீழாக இருந்தேன். இந்த காரியங்கள் எனக்கு மிகுந்த மன வேதனையை தந்தது. பரிசுத்தமான ஆண்டவரைப்பற்றி பேசும் அதே வாயால் அசுத்தமான இந்த சிகரெட்டையும் பான் பராக்கையும் தின்பது சரியான செயலே அல்ல என்பதை அறிந்து அதிகமாக வருத்தபட்டேன். மேலும் நான் இவாறு செய்யும் காரியம் பிறருக்கு இடரலை ஏற்ப்படுத்த வாய்ப்புண்டாக்கும்படியும் இருந்தது.      இந்நிலையில்: 
 
II கொரிந்தியர் 5:17 இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின.
 
என்று வசனம் சொல்கிறதே ஆண்டவரே! ஆனால் நான் என்னுடய பழய காரியமாகிய இந்த சிகரெட் பிடிப்பதை விடமுடியாமல் விக்கிறேனே.  இந்த தேவையற்ற காரியங்கள விடுவதற்கு பெலன் வேண்டும் என்று  ஆண்டவரை நோக்கி அதிகமாக ஜெபிக்க ஆரம்பித்தேன். அத்தோடு நான் முடிவெடுத்த ஒரு காரியம் என்னவெனில். "கர்த்தரின் நாளாகிய ஒரு நாள், அதாவது ஞாயிற்று கிழமைகளில் மாத்திரமாவது சிகரெட் பிடிக்கவே கூடாது" என்று திடமாக முடிவெடுத்தேன்.கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும், மிக சுலபமாக அதை நிறைவேற்றிவிட்டேன்.  ஆனால் மற்ற நாட்களில் சிகரெட் பிடிப்பதை நிறுத்த வில்லை.
 
ஒருவர் பிடிக்கும் சிகரெட் புகையானது பக்கத்தில் இருக்கும் அடுத்தவரைதான் அதிகம் பாதிக்கும் என்று படித்ததால். நான் பிடித்த  சிகரெட்புகையால்  பாதிக்கபட்ட என்னுடைய மனிவியோ அல்லது பக்கத்து வீட்டுகாரரோ ஆண்டவரிடம் என்னைப் பற்றி புகார் செய்துவிட கூடாது என்று எண்ணி  ஒரு சிகரெட்டை வாங்கி கொண்டு
ஆள் இல்லாத இடம் தேடி அலைவேன். மொட்டை மாடி அல்லது ரயில்வே லைன் என்று எங்காவது அலைந்து  அந்த சிகரெட்டை புகைத்துவிட்டு வருவேன். ஆகினும் நான் புகைத்துக் கொண்டு இருக்கும்போதுதான் எவராவது அந்த பக்கம் வேணுமென்றே வருவார்கள். உடனே நான் அவர்களைவிட்டு தள்ளி ஓடுவேன். காற்றின் திசையை அறிந்து புகையை ஊதுவேன். 
 
ஆகினும் நிம்மதி இல்லை ஆவியானவர் துக்கபட்டுகொண்டே இருந்தார். விட்டுவிட வேண்டும் என்று மனதில் உறுதியாக முடிவெடுத்து விட்டுவிடுவேன். ஆனால் மனகஷ்டங்கள் அதிகவேலை பழுக்கள் ஏற்ப்ப்படும்போது மீண்டும் ஆரம்பித்து விடுவேன் .   
 
இந்நிலையில் ஒருமுறை இந்நிலையில் ஒருநாள் நியாயாதிபதிகள் புத்தகத்தில் 11.1ல்  உள்ள  எப்தாவின் காரியங்கள்  காரியங்களை படிக்கும்போது  கீழ் கண்ட வசனம் என்னை அதிகமாக  கவர்ந்தது:  
 
நியாயாதிபதிகள் 11:35  நான் கர்த்தரை நோக்கி என் வாயைத் திறந்து சொல்லிவிட்டேன்; அதை நான் மாற்றக் கூடாது
 
அவ்வசனத்தின் அடிப்படையில் கர்த்தரிடம் ஒரு காரியத்தை வாயை திறந்து சொல்லிவிட்டால் பின்னர் மாற்றவே கூடாது என்று ஏற்கெனவே  முடிவெடுத் திருந்தேன். அதன்படி வாழ்ந்தும்  வந்தேன். அந்த முடிவின்  அடிப்படையில்  கர்த்தரிடம் வாயை திறந்து "ஒரு வாரம் சிகரெட் பிடிக்கமாட்டேன்"என்று சொல்லி விடுவேன். அதுபோல் ஒருவாரம் சிகரெட் பிடிக்காமல் விட்டுவிடுவேன். பின்னர் ஒரு மாதம் ஒரு வருடம் என்று வாயை திறந்து  சொல்லிவிட்டு அதன்படி சிகரெட் பிடிக்காமல் இருந்தேன். இறுதியில் ஆண்டவரின் வருகை மட்டும் போதை தரக்க்கூடிய எந்த ஒரு பொருளையும்  உட்கொள்ளவோ  அல்லது புகைக்கவோ மாட்டேன் என்று வாயை திறந்து ஆண்டவரிடம் சொல்லி அப்படியே கடந்த 4-5 வருடமாக முற்றிலும்  விட்டுவிட்டேன்.
 
இவ்வாறு இந்த "சிகரெட், பான்பராக், ஹான்ஸ்" போன்ற பழக்கத்தில் இருந்து விடுபட தேவன் எனக்கு கிருபை தந்தார்.
 
தீய பழக்கங்கள் மட்டுமல்ல நமது பரிசுத்தத்தை கெடுக்கும் எந்த ஒரு ஒரு காரியத்தையும் இவ்வாறு தேவனிடம் வாயை திறந்து சொல்லி அதை விட்டுவிட முயற்ச்சிக்கலாம் என்பது எனது வலியுறுத்துதல்  ஆகும். ஆகினும் இவ்விஷயத்தில் நாம்  அதிக எச்சரிக்கயுடன் இருப்பது அவசியம் காரணம் கர்த்தரிடத்தில் வாயை திறந்து சொல்லகூடாது சொல்லிவிட்டால் பின்னர் அதை மீறவே கூடாது   
 
எண்ணாகமம் 30:2 ஒருவன் கர்த்தருக்கு யாதொரு பொருத்தனை பண்ணினாலும், அல்லது யாதொரு காரியத்தைச் செய்யும்படி ஆணையிட்டுத் தன் ஆத்துமாவை நிபந்தனைக்குட் படுத்திக் கொண்டாலும், அவன் சொல்தவறாமல் தன் வாயிலிருந்து புறப்பட்ட வாக்கின்படியெல்லாம் செய்யக்கடவன்.

 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



நமது நண்பர்

Status: Offline
Posts: 146
Date:
Permalink  
 

கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு மகிமை உண்டாவதாக......

நம்முடைய வாழ்க்கையில் எந்த ஒரு காரியம் நம்மை தேவனுடைய பார்வையிலும் நம்முடைய பார்வையிலும் குற்றவாளிகளாய் தீர்க்கிறதோ அந்த காரியத்தை நாம் செய்யாமலிருப்பது நல்லது.

ஒரு காரியத்தை இனிமேல் நான் செய்யமாட்டேன் என்று என்னும்போதுதான் அந்த காரியம் வலிய நம் முன்னே வருகிறது....

ஏனென்றால் நாம் நினைப்பதை செய்யாமல் எப்படியாகிலும் மாம்சத்திற்கு உடன்பட்டு தேவனிடத்தில் குற்றவாளிகளாய் நம்மை நிறுத்தவேண்டும் என்பதே சாத்தனுடைய திட்டம்.


நம்மால் அந்த காரியத்தை செய்யமுடியாவிட்டாலும் தேவனே நான் எப்படியாகிலும் இந்த காரியத்தை செய்யாமல் இருக்க தயவு கூர்ந்து எனக்கு உதவி செய்யும் என்று உண்மையாய் கெஞ்சும் போது தேவன் ஒரு சில சந்தர்பங்களை உருவாக்கி தருகிறார்.

சோதனையிலே நாம் தப்பித்துகொள்ளும்படியான ஒரு போக்கையும் வழியையும் உண்டாக்குகிறவர்தான் நம் தேவன்.

நாம் இருதயத்திலுள்ள வாஞ்சையின்படிதான் கர்த்தர் நம்மை விட்டுவிடுகிறார்.


நமக்கு சுயாதீனத்தை கொடுத்து இருக்கிற தேவன் நம்முடைய விருப்பதை மீறி தானாக ஒன்றும் செய்கிறதில்லை.

உண்மையாய் அவரிடத்தில் கெஞ்சும்போது தேவன் நாம் தப்பித்து கொள்ளுவதற்கான வழியை ஏற்படுத்தி தருகிறார்.


ஏதாகிலும் ஒருவிதத்தில் தேவன் ஒருசில சந்தர்பங்களை கொடுப்பார் அதற்கு கீழ்பட்டு விலகாத பட்சாதில் இப்போதல்ல எப்போதும் என்னால் முடியவில்லை என்று சொல்லிக்கொண்டுதான் இருக்கவேண்டும்.

 
தேவனே வந்து நம்மை அப்படியே முழுவதுமாக மாற்றிவிட்டால் அல்லது நம்மை அவரே முழுவதுமாக எல்ல இடங்களிலும் ஆளுகைகை செய்தல் நமக்கும் இயந்திரங்களுக்கும் வித்தியாசம் இருக்காது.


எந்த காரியத்தை விடவேண்டுமானாலும் அல்லது எந்த காரியத்தை செய்ய வேண்டுமானாலும் உதடுகள் மாத்திரமல்ல இருதயமும் எண்ணமும் ஆவியும் ஆத்துமாவும் சிந்தையும் விரும்ப வேண்டும்.

இல்லையெனில் நாம் ஒருநாளும் இருக்கிற நிலையில் இருந்து மாறமுடியாது............



__________________

கற்பனையைக் கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும் அறியான். (பிரசங்கி 8 :5 ) 


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

என் கண்களே என்னை பிசாசாக காட்டியது!

கடந்த நாளில் என் முகத்தை செல்போன் முன் கேமராவில் பார்த்தபோது என் கண்களை பார்க்க நான் ஒரு பிசாசுபோல் தெரிந்தேன். என் கண்களில் ஒரு 
பிசாசு தன்மை இருப்பது தெரிந்தது. ரொம்ப ஷாக் ஆகிவிடடேன்.

எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது. என்ன ஆண்டவரே நான் எதோ கொஞ்சமாவது பரிசுத்தவான் என்று எண்ணிக்கொண்டு இருக்கிறேன் இப்படி நான் ஒரு பிசாசாக இருக்கிறேனே என்று வருத்தத்தோடு ஆண்டவரிடம் சொல்லிக்கொண்டே இருந்தேன்.

இரவு ஜெபத்தின்போது ஆண்டவர் வெளிப்படுத்தியது:

நீ பிசாசை எங்கும் வெளியில் போய் தேடவேண்டிய அவசியம் இல்லை அது உன் சரீரம்தான் என்றார்.

உடனே எனக்கு என்னுடைய தற்போதைய நிலை என் மனதில் வந்தது.

ஆண்டவராகிய இயேசு "கண்ணானது சரீரத்தின் விளக்காயிருக்கிறது; உன் கண் தெளிவாயிருந்தால், உன் சரீரமுழுவதும் வெளிச்சமாயிருக்கும்; உன் கண் கெட்டதாயிருந்தால் உன் சரீரம் முழுவதும் இருளாயிருக்கும்" லூக்கா 11:34

என்று சொல்லியிருப்பதால், எனது கண்களை சரி செய்துவிடடால் சரீரத்தை எப்படியாவது சரிரத்தை வெளிச்சம் ஆகிவிடலாம் என்ற நோக்கில் கடந்த சில மாதமாக என் கண்களை தேவனுக்கு ஏற்ற விதமாக சரிசெய்ய வேண்டும் என்று ஜெபத்தோடு கடுமையாக போராடிக்கொண்டு இருக்கிறேன். ஆனாலும் அது தானாக அடிக்கடி பெண்கள் பக்கம் திரும்பி விடுகிறது. அவர்களை பார்த்து அவர்களின் உருவம் மனதை தொடும்போதுதான் சீ பார்க்கக்கூடாது என்ற எண்ணமே நினைவுக்கு வருகிறது. பின்னர் கண்களை திரும்புகிறேன்.

எனவே என் கண்ணாது நான் மனதார விரும்பாத ஒரு காரியத்தை செய்ய என்னை தூண்டி என்னை தேவனுக்கு பிடிக்காத ஒரு காரியத்தை செய்ய தூண்டும் பிசாசாக இருப்பதால்தான் தேவன் என் கண்ணை அவ்வாறு காண்பித்தார் என்பதை புரிந்துகொண்டேன்.

23. ஆகிலும் என் மனதின் பிரமாணத்துக்கு விரோதமாய்ப் போராடுகிற வேறொரு பிரமாணத்தை என் அவயவங்களில் இருக்கக் காண்கிறேன்; அது என் அவயவங்களில் உண்டாயிருக்கிற பாவப்பிரமாணத்துக்கு என்னைச் சிறையாக்கிக் கொள்ளுகிறது.

ஆண்டவரே நானும் எவ்வளவோ முயற்சி செய்கிறேன் உம்மிடமும் தினமும் என் கண்கள் உமக்கு சித்தமானதை மாத்திரம் பார்க்கவேண்டும் என்று ஜெபிக்கிறேன் ஆனாலும் என்னால் என் கண்களை சரிசெய்ய முடியவில்லையே என் கண்களின் பிசாசுத்தன்மையை போக்க வழியே இல்லையா பவுல் கூட,

ரோமர் 7:24 நிர்ப்பந்தமான மனுஷன் நான்! இந்த மரணசரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்?

என்று சொல்லியிருக்கிறாரே என்று புலம்பியபோது

"மனுஷனின் சொந்த பலத்தால் இது கூடாததுதான் தேவ ஆவியின் நிறைவால் மாத்திரமே அது கூடும். உன் சொந்த கண்களில் உள்ள பிசாசுத்தன்மையை அடையாளம் காணும் அளவுக்கு ஆவியின் நிறைவை பெற்றிருக்கும் நீ அதே ஆவியின் பெலத்தோடு தொடர்ந்து முயற்சி செய் உன் சரீரத்தின் செயல்பாடு தேவ ஆவியில் செயல்பட்டொடு சங்கமிக்கும்போது இது சாத்தியமே. உன் கிரியைக்கு பலன் உண்டு" என்றும் உணர்த்தப்பட்டுள்ளது.

ரோமர் 8:13 மாம்சத்தின்படி பிழைத்தால் சாவீர்கள்; ஆவியினாலே சரீரத்தின்செய்கைகளை
அழித்தால் பிழைப்பீர்கள்

மாம்சத்தின் கிரியைகளை அழிக்க தொடர்ந்து முயற்சிப்போமாக.



__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



நமது நண்பர்

Status: Offline
Posts: 138
Date:
Permalink  
 

தொடர்ச்சியாய் சுய புணர்ச்சி செய்தல். பாலியல் படங்களை பார்த்தல். விபச்சாரப் பாவத்தில் சிக்கிய நிலை போன்ற இப்படிப்பட்ட பிரச்சனைகளால் பாதிக்கப்படுபவர்களுக்கு நாம் என்ன ஆலோசனை கொடுக்கலாம்?

வாலிபர்கள் மத்தியில் ஊழியம் செய்யும் போது வாலிபர்கள் இப்படியான பிரச்சனைகளுக்கு ஆலோசனை கேட்டு வரும் போது தடுமாறிப் போகிறேன்..



__________________

https://siluvayadi.blogspot.com   click this  வேதம் கற்போம்.  ROBERT DINESH



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

பாலியல் சிந்தனை என்பது மனுஷனின் மூளையில் தானாகே உருவாகி விஸ்வரூபம் எடுக்கும் ஒரு மாம்ச செயல்பாடு என்பதால் தாங்கள் சொல்வதுபோன்ற வாலிபர்களின் காரியங்கள் என்பது வெறும் ஆலோசனையால் மாத்திரம் விட்டுவிடக்கூடியது அல்ல. இவ்வகை காரியங்களை விட்டொழிப்பது  மிகவும் கடினம்.
 
ஆகினும் தேவனால் கூடாதது எதுவும் இல்லை என்பதால் எனக்கு தெரிந்த சில ஆலோசனைகளை நான் சொல்கிறேன்.
 
முதலில் இவ்வகை காரியங்கள் வசன அடிப்படையில் பாவமானது/ தேவனுக்கு பிடிக்காதது/ ஒருவரை நரகத்துக்கு கொண்டு செல்வது என்பதை வசனங்கள் மூலம் தெளிவாக போதிக்க வேண்டும். 
 
அடுத்து தேவனுக்கும் நமக்கும் உள்ள நெருக்கத்தை அதிகரிக்க ஆலோசனை சொல்ல  வேண்டும். அவ்வாறு அதிகரிக்கும்போது சிறிது நேரம் கிடைத்தாலும் தேவனுடன் பேசவேண்டும் என்ற எண்ணம் தோன்றுமேயன்றி மற்ற காரியங்களில் மனது செல்லாது.
 
அடுத்து பரிசுத்த ஆவியின் நிறைவை நிச்சயம் பெறவேண்டும் ஆவியானவர் செயல்பாடு இல்லாமையே இவ்வகை பாவங்கள் தலை தூக்க காரணம். பரிசுத்த ஆவியை பெற்று அதை எப்பொழுதும் ஊதி அனல் மூட்டி வைத்திருந்தால் இவ்வகை காரியங்களை செயும்போது ஆவியானவர் மிகுந்த துக்கப்படுவார் பின்னர் தானாக அதை நிறுத்த வழி ஏற்படும்.
 
இறுதியாக மிக முக்கியமாக எந்த மாம்ச பாவமானாலும் நம் சுய முயற்சியால் விட்டுவிடுவது என்பது மிக கடினம்தான். எனவே அதை விடவேண்டும் என்றால் முதலில் அந்த பாவத்தின் மீது ஒரு வெறுப்பை நம் மனதில் கொண்டுவரவேண்டும். பின்னர் தேவனிடம் "ஆண்டவரே நான் இந்த காரியங்களை விட முடியாமல் தவிக்கிறேன். உண்மையில் அதில் இருந்து விடுதலை வேண்டும்  என்று வாஞ்சிக்கிறேன் ஆனால் என் பெலத்தால் முடியவில்லை எனக்கு பெலன் தாரும் ஆண்டவரே என்று இடைவிடாது ஜெபிக்க வேண்டும்" ஒரு வேளை பத்துத்தரம் விழுந்தாலும் வேதனையோடு மீண்டும் மீண்டும் அதற்க்கு ஜெபித்துக்கொண்டே இருக்கவேண்டும். 
 
"இதெல்லாம் பெரிய தப்பு இல்லை ஆண்டவர் கண்டுக்க மாடடார்" என்ற எண்ணமோ / "இதை செய்வதால் நான் பெரிய பாவி ஆண்டவர் என்னை சேர்த்துக்கொள்ளவே மாடடார்" என்ற வெறுப்போ  வரவே கூடாது. 
 
பாவத்தில்வி இருந்து வி டுபட நம் ஆழ் மனத்தில் எவ்வளவு வாஞ்சை இருக்கிறது நாம் அந்த பாவத்தை எவ்வளவு வேறுக்கிறோம் என்பதன அடிப்படையில் தேவன் வெகு விரைவில் விடுதலை தருவார். 
 
மனுஷனால் கூடாதது தேவனால் கூடும். 
 
பாவத்தின் மீது நமக்கு இருக்கும் வெறுப்பையும் அதை விட்டுவிட நாம் வாஞ்சிக்கும் எண்ணத்தையும்தான் அவர் நோக்குவாரேயன்றி பாவம் எதுவென்று அவர் நோக்க மாடடார்.
 
யோவான் 8:11  இயேசு அவளை நோக்கி: நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை; நீ போ, இனிப் பாவஞ்செய்யாதே என்றார். 

 



__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard