இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மரித்தோரும்! ஜீவனுள்ளோரும்!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
மரித்தோரும்! ஜீவனுள்ளோரும்!
Permalink  
 


நாம் சிறு வயதில் படித்த  பாடங்களில் இந்த  உலகிலுள்ள பொருட்கள் அனைத்தை யும்  "உயிருள்ள பொருட்கள்" "உயிரற்ற பொருட்கள்" இரண்டு பெரும் பிரிவுகளாக பிரித்து படித்திருக்கிறோம். அதாவது  "LIVING THINGS"  and  'NON LIVING THINGS". உயிருள்ள  பொருட்களின் முக்கிய பண்புகள் என்று குறிப்பிடும் போது நகருதல், சுவாசித்தல், உண்ணுதல், ஓய்வெடுத்தல், சந்ததிகளை உருவாக்குதல் என்றும், உயிரற்ற பொருடகளுக்கு இந்த பண்புகள் எல்லாம் கிடயாது என்றும் படித்திருக்கிறோம்.     
   
அதைபோலவே ஆன்மீக காரியங்களின் அடிப்படையில் இந்த உலகில் உள்ள மொத்த ஜனங்களையும்  "மரித்தோர்"  "ஜீவனுள்ளோர்"  என்று  இரண்டாக பெரும் பிரிவுகளாக பிரித்து "தேவன் ஜீவனுள்ளவ்ர்களுக்க் மட்டுமே தேவன்"  எனவும் வேதம்  குறிப்பிட்டுள்ளது.     
 
மத் 22:32 தேவன் மரித்தோருக்கு தேவனாயிராமல்,ஜீவனுள்ளோருக்கு
தேவனாயிருக்கிறார் என்றார்.
 
இந்த உலகில்  உயிரற்றவைகள் என சொல்லப்படுபவைகளுக்கும்  ஆவக்குரிய நிலையில் மரித்தோர்கள் என்று சொல்லபடுகிரவர் களுக்கும் இடையில் பெரிய வேறுபாடு உண்டு. அதாவது உலகில் உயிரற்ற பொருட்களோ அல்லது மரித்த ஒரு உயிரினமோ ஓடவோ நடக்கவோ சாப்பிடவோ செய்யாது! 
 
ஆனால்  ஆவிக்குரிய நிலையில் மரித்தொர்கள் எனபடுகிரவர்கள்"உண்ணுவார்கள், உறங்குவார்கள், ஓடுவார்கள், உற்பத்தி செய்வார்கள், உழைப்பார்கள்  ஆனாலும் இவர்கள் மரித்தவர்கள் என்று கூறப்படுகிறார்கள். காரணம் என்னவெனில் இவர்களால் தேவனுக்கோ அல்லது சக மனுஷனுக்கோ எந்தபயனும கிடையாது!
 
வேதம் குறிப்பிடும் அந்த மரித்தவர்கள் யார்?
 
உலகில் மனுஷனாக பிறக்கும் எல்லோருமே ஆவிக்குரிய நிலையில் மரித்தவர்களே!
 
ரோமர் 5:21 பாவம் மரணத்துக்கு ஏதுவாக ஆண்டுகொண்டது
ரோமர் 6:23 பாவத்தின் சம்பளம் மரணம்;
எசேக்கியேல் 18:4  பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்.
 
என்ற வசனங்களின் அடிப்படையில்  "பாவம் செய்கிறவன் எவனுமே மரித்தவனாகவும், மரணத்துக்கு பாத்திரவானாகவும்  இருக்கிறான்". உலகத்தில்  பாவம் செய்யாதவர்கள் ஒருவரும் இல்லை!  எனவே எல்லோருமே மரித்த நிலையில்தான் இந்த உலகில் வாழ்கிறோம். ஆதாமின் மீறுதலால் பாவத்தில் பிறக்கும் மனுஷன் பிறக்கும் போதே ஆவிக்குரிய மரித்த நிலையில்தான் இந்த பூமியில் பிறக்கிறார்! அவன் ஆவிக்குறிய நிலையில் மீண்டும்பிறந்து  புதுஜீவனை பெற்றாலேயன்றி அவன் வாழ்நாள் முழுவதும் மரித்தநிலையிலேயே வாழ்ந்து மரித்தவனாகவே வாழ்வை முடிப்பார்கள்! இதை குறித்து இயேசு இவ்வாறு குறிப்பிடுகிறார்:
 
யோவான் 3:3  ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான்
 
உதாரணமாக மழைகாலத்தில் உண்டான ஒருசிறு குட்டையை எடுத்துகொள்வோம. அது உருவாகும் போது கொஞ்சம் அசுத்தம் கலந்திருந்தாலும் ஓரளவுக்கு நல்ல தண்ணியாகவே இருக்கும். நாளடைவில் இந்த உலகில் உள்ள அசுத்தங்கள் அதிகமாக அதில் கலப்பதன் மூலம் ஒருநாளில் அது கெட்டுபோய் துர்நாற்றம் எடுக்க ஆரம்பித்து அடுத்தவர் ஆரோக்கியத்தை கெடுக்கும் ஒரு நீராக மாறிவிடும். 
 
இதுவே  ஒரு மனுஷனின் மரித்த நிலைக்கு இங்கு ஒப்பிடப்படுகிறது.
 
மனுஷனானவன் பிறக்கும்போது பாவத்தின் தன்மையை முழுவதும்  அறியாத ஒரு பாவியாக பிறக்கிறான். வளர வளர அனைத்து பாவ குணங்களும் அவனுக்குள் குடிவந்து விடுகிறது.
 
ஆதியாகமம் 8:21 ; மனுஷனுடைய இருதயத்தின் நினைவுகள் அவன் சிறுவயது
தொடங்கிப் பொல்லாததாயிருக்கிறது;  .
 
அவன் பெரிய மனுஷனாகியபோதோ அவன் மனதுக்குள் கள்ளம்கபடு, சூது    பொறாமை வேசித்தனம், இச்சை, வஞ்சம். அகம்பாவம் போன்ற உலகஅசுத்தங்கள் கலந்து யாருக்கும் பயனற்ற  ஒரு மோசமான நிலையை அடைகிறான்.
 
இவ்வாறு மழைகாலத்தில்உண்டாகி, நீண்டநாட்களாக பராமரிப்பில்லாமல் கிடந்தது நாற்றமெடுக்கும் ஒரு நீர் நிலை சுத்தமாக வேண்டுமென்றால் அங்கு என்ன நடக்க வேண்டும்?
 
இன்னொரு பெரிய மழை பெய்தால்கூட மீண்டும் கொஞ்சநாளில் அதேநிலைக்கு தான் வரும்! ஆனால் அந்தஇடத்தில் ஒரு பொங்கி பெருகும் நீரூற்று உண்டானால் எப்படியிருக்கும்? அல்லது ஒரு பெரிய ஜீவ நதி அந்த குட்டையோடு வந்து  கலக்குமானால் என்ன ஆகும்? அதிலுள்ள அசுத்தங்கள் எல்லாம் கண்காணா இடத்துக்குபோய் ஒருநாளில் எல்லாம் சுத்தமாகிவிடும்.
 
அது எவ்வாறு  நடக்கும்? 
 
யோ 7:38  என்னிடத்தில் (இயேசுவிடத்தில்)விசுவாசமாயிருக்கிறவ னெவனோ அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார்.
      
கலங்கிய குட்டையாக பாவத்தில்பிறந்து பாவத்தில் வளர்ந்து, துர்நாற்றம் எடுத்து கிடக்கும் மனுஷனின் இருதயத்துக்குள் ஜீவதண்ணீராகிய தேவ ஆவியானவர் ஊற்றப்பட்டால் மட்டுமே அந்த அந்த இருதயம் ஜீவன் பெற்று, அனதுள் இருந்த பழைய துர்நாற்றம் எல்லாம் விலகி புது ஜீவனை பெறுகிறது.
 
(இவ்வாறு பாவத்த்தால் மரித்து துர்நாற்றம் எடுத்து கிடக்கும் பாவத்திலிருந்து மனுஷனை மீட்டு அவனுக்கு ஜீவனை கொடுக்க வந்த சாமி எதாவது இருக்கிறதா?  எந்த புராணத்திலாவது அப்படிஒரு கடவுளைபற்றி கேள்விபட்டதுண்டா? நிச்சயமாக இருக்காது!  ஏனெனில் அவர்களது கதைகளை கேட்டாலே துர்நாற்றம் எடுக்கும்  அளவுக்கு இருக்கும்போது அவர்கள் எப்படி துர்நாற்றத்தை போக்க முடியும்?)
 
மரித்த மனுஷனுக்கு ஜீவன் உண்டாக்க வந்தவர் ஒருவரே! அவரே  நம் ஆண்டவர் இயேசு ஒருவரே!  
 
யோவான் 10:10  நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்.
 
யோவான் 11:25  , என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்;

இப்பொழுது ஜீவனுள்ளவர் யார்? மரித்தவர் யார்? என்பது ஓரளவுக்கு புரிந்திருக்கும் என்று கருதுகிறேன். கர்த்தருக்கு சித்தமானால் தொடரலாம்.....      
 
 


-- Edited by SUNDAR on Saturday 13th of August 2011 04:17:38 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard