கிறிஸ்துவர்கள் குலதெய்வக் கோவிலுக்கு செல்வது குறித்து வேதம் சொல்லுவது என்ன? அந்த குலதெய்வம் இந்துக்கள் தெய்வம் என்று வணங்குவார்கள். இதற்கு போக கூடாது என்று சொன்னால் சாமி குத்தம் ஆகிவிடும் என சொல்லுகிறார்கள். நம்முடைய முன்னோர்கள் காரணம் இல்லாமல் இவற்றை எல்லாம் செய்து இருக்க மாட்டார்கள் என பதில் வருகிறது. இவற்றிக்கு பயந்து அங்கு செல்வதை காண்கிறேன்.
கிறிஸ்துவர்கள் ஏன் குலதெய்வக் கோவிலுக்கு போக கூடாது என்பதை வேத விளக்கத்தோடு பதிவிட்டால் பிரயோஜனமாயிருக்கும். அது குடும்பத்தில் ஏற்படுத்தும் விளைவுகள் என்ன? அவர்களின் தலைமுறைகளை எப்படி பாதிக்கும் என்பதை விளக்கினால் பிரயோஜனமாயிருக்கும்.
இயேசுவை ஏற்று கொண்டு அவரை விசுவாசித்து நடக்கும் எந்த மனிதனும்
இனி வேறொரு கடவுளையும் குல தெய்வங்களையும் வணங்க கூடாது பார்க்க கூடாது அந்த இடத்திற்கு போகவும் கூடாது
அப்படி பட்ட காரியம் தேவனுக்கு கொஞ்சம் கூட பிடிக்காத ஒன்று
உதாரணத்திற்கு இரண்டு காரியங்களை சொல்ல விரும்புகிறேன்:
(1 ) தேவன் வெண்கல சர்ப்பத்தை உருவாக்கி அதை நோக்கி பார்க்கிரர்வர்கள் பிழைப்பார்கள் என்று சொன்னார் அப்படி நோக்கி
பார்த்தவர்கள் பிழைத்தார்கள்
பல நாட்கள் செல்ல செல்ல ஒரு கால கட்டத்தில் அந்த வெண்கல சர்ப்பத்தையே இஸ்ரவேல் ஜனங்கள்
வணங்க ஆரம்பித்து விட்டார்கள்
அது தேவனுடைய பார்வையில் பொல்லாதவையாய் இருந்தது
அதன் பின் தேவன் அதை ஒரு ராஜாவை வைத்து அகற்றினார்
தேவன் தான் வெண்கல சர்பத்தை உருவாக்க சொன்னார் நோக்கி பார்க்க சொன்னார்
அது அந்த நேரத்தில் அவர் செய்ய சொன்ன
ஒரு காரியம் அல்லது என் ஜனங்கள் இதை அப்படியே தொடர்கிறார்களா அல்லது இந்த காரியம் முடிந்த பிறகு அதை இடித்து போடுகிறார்களா என்று தேவன் அவர்கள் பக்தியை சோதிக்க அப்படி செய்து இருக்கலாம்
(இது என்னுடைய கருத்து )
ஆனால் அவர்களோ அதில் தோற்று போனார்கள்...
(2 )கிதியோன் என்பவன் தன்னிடத்தில் உள்ள பொன்களை வைத்து கொண்டு தன் ஊராகிய ஒப்ராவிலே ஓர் ஏபோத்தை உருவாக்கி வைக்கிறான் வேதம் சொல்கிறது அதுவே கிதியோனுக்கும் அவன் குடும்பத்திற்கும் கன்னி ஆயிற்று என்று
விளக்கம்:
வெண்கல சர்பத்தை தேவன் தான் உருவாக்க சொன்னார் என்பது உண்மை தேவனே இதை உருவாக்க சொன்னாரே என்று மக்கள் நினைத்து அந்த சிலையை பாதுகாத்து வணணங்கி வந்தார்கள் ஆனால் அது நம் தேவனுடைய பார்வையில் பொல்லாதவையாய் இருந்தது
தேவன் செய்ய சொன்ன சிலையை வணங்கினதே தேவன் பார்வைக்கு பொல்லாததாய் இருந்தது என்றால் தேவனுடைய குமாரனை ஏற்று
கொண்டு முன்பு வணங்கின குல தெய்வம் முன்னோர்களின் தெய்வம் என்று போனாலோ அல்லது அவர்களின் போட்டோவை வைத்தாலோ தேவனுக்கு எவ்வளவு கோபம் வரும் என்று எண்ணி பாருங்கள்
இன்னும் ஒன்று சொல்ல விரும்புகிறேன் கிறிஸ்தவ மக்கள் மற்றும் போதகர்கள்
ஆலன் பால் , சாது சுந்தர் செல்வராஜ், பால் தினகரன் மற்றும் அனேக போதகர்கள்
அவர்களுக்கே தெரியாமல் சில தவறுகளை செய்கிறார்கள்
(1 ) விக்ரகங்களை வணங்க கூடாது
(2 ) சொருபத்தை வணங்க கூடாது
என்று சொல்கிறார்கள் ஆனால் அவர்கள் Tv யில் பாடல்கள் போடும் பொழுது இயேசுவின் போட்டோ.
இயேசுவின் போட்டோ
(இது சொருபம் இல்லையா )
இந்துக்களுக்கு ஒரு சட்டம் கிறித்தவர்களுக்கு ஒரு சட்டம் என்ன கொடுமை சார் இது ...................
Muthu wrote ..............\\ நம்முடைய முன்னோர்கள் காரணம் இல்லாமல் இவற்றை எல்லாம் செய்து இருக்க மாட்டார்கள் என பதில் வருகிறது. இவற்றிக்கு பயந்து அங்கு செல்வதை காண்கிறேன். ...................//
மத்தேயு - 15 : 6 நீங்கள் உங்கள் பாரியம்பரியதினாலே ஏன் தேவனுடைய கட்டளைகளை அவமாக்குகிறிர்கள்.
சகோதரரே..... மனுஷனுடைய பாரம்பரியம் தேவனுடைய கட்டளைகளை அவமாக்குகிறது என்று இயேசு கிறிஸ்துவே மிக தெளிவாய் சொல்லி இருக்கிறாரே....!
தேவனை எங்கும் தொழுகொள்ளும் காலம் வரும் என்றும் அது இப்போதே வந்திருகிறது என்று சமாரியா பெண்ணிடம் இயேசு கிறிஸ்து சொல்லி விட்டாரே.... பின்பு ஏன் இப்படி பாரம்பரியம் இப்படிதான் செய்ய வேண்டும் வருசத்துக்கு ஒருமுறையாவது அங்கு செல்ல வேண்டும் இங்கு செல்ல வேண்டும் என்று எண்ணுவதெல்லாம் வேதத்தின்படி சரியானதல்ல என்றே நான் கருதுகிறேன்.
மனுஷருடைய கற்பனைகளை வீணாய் போதித்து தங்களுக்கு இஷ்டம்போல் ஆராதனை செய்கிறார்கள். பாரம்பரியத்தை கைகொள்ள நினைபவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வழிவிலகி போய்விடுவார்கள்.........
ஏனென்றால் பாரம்பரியமாய் செய்கிற எந்த காரியத்திலும் தேவன் பிரியபடுகிறவர் அல்ல ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாய் நடத்தி கொண்டிருக்கிறார்.
பாரம்பரியம் என்று சொல்லி கொண்டு தேவ கட்டளைகளை விட மனுஷ கட்டளைக்ளளுக்கு செவிசாய்த்து வழி விலக நேரிடும்.
தேவன் அனேக இடங்களில் ஒரு காரியத்தை செய் என்று சொன்னவரே பிற்காலங்களி செய்யாதே என்று சொல்லி இருக்கிறார்.
__________________
கற்பனையைக்கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும்அறியான்.(பிரசங்கி 8 :5 )
கிறிஸ்துவர்கள் குலதெய்வக் கோவிலுக்கு செல்வது குறித்து வேதம் சொல்லுவது என்ன? அந்த குலதெய்வம் இந்துக்கள் தெய்வம் என்று வணங்குவார்கள். இதற்கு போக கூடாது என்று சொன்னால் சாமி குத்தம் ஆகிவிடும் என சொல்லுகிறார்கள். நம்முடைய முன்னோர்கள் காரணம் இல்லாமல் இவற்றை எல்லாம் செய்து இருக்க மாட்டார்கள் என பதில் வருகிறது. இவற்றிக்கு பயந்து அங்கு செல்வதை காண்கிறேன்.
கிறிஸ்துவர்கள் ஏன் குலதெய்வக் கோவிலுக்கு போக கூடாது என்பதை வேத விளக்கத்தோடு பதிவிட்டால் பிரயோஜனமாயிருக்கும். அது குடும்பத்தில் ஏற்படுத்தும் விளைவுகள் என்ன? அவர்களின் தலைமுறைகளை எப்படி பாதிக்கும் என்பதை விளக்கினால் பிரயோஜனமாயிருக்கும்.
குலதெய்வம் கோவிலுக்கு போவது பற்றி சகோ.எட்வின் மற்றும் சகோ. ஸ்டீபன் கருத்துக்களுக்கு நன்றி. வசனத்தின் அடிப்படையில் தாங்களின் கருத்துக்கள் அருமை.
ஆண்டவரை அறியவேண்டியவிதத்தில் அறிந்து அவருக்காக ஊழியங்களை செய்து வரும் சகோ. முத்து அவர்கள் கேட்டுள்ள இந்த கேள்வி நிச்சயம் அவருக்காக இருக்க வாய்ப்பில்லை. வேறு யாருக்கோ பதில் சொல்லவே இந்த கேள்வியை முன்வைத்துள்ளார் என்றே நான் கருதுகிறேன். எனவே இந்த இன்னும் கொஞ்சம் விளக்கமாக பதிலளிப்பது அவசியம் என்று கருதுகிறேன்.
குலதெய்வம் கோவிலுக்கு போகவேண்டும் என்று முன்னோர்களில் கட்டளையின் அடிப்படையில் தீர்மானிக்கும் ஜனங்களுக்கு, அந்த குல தெய்வங்கள் என்பவர்கள் யார் என்பதை அறிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது.
மண்ணினால் மனுஷனை படைக்கும் முன்னர், தேவனால் படைக்கபட்ட ஆவி ஜீவிகளாகிய இவர்கள் உலகம் முழுவதும் மற்றும் வானத்திலும் பரவியிருந்தார்கள். இவர்களை நம்முடய வேதாகமம் "தேவர்கள்" என்று சொல்கிறது.
I கொரிந்தியர் 8:5வானத்திலேயும் பூமியிலேயும் தேவர்கள் என்னப்படுகிறவர்கள் உண்டு;
இந்த தேவர்களே நம்முடய நாட்டில் மட்டுமல்ல உலகில் உள்ள எல்லா தேசங்களிலும் முந்த நாட்களில் குலதெய்வங்களாக இருந்தனர்.
II இராஜாக்கள் 17:31ஆவியர் நிபேகாசையும் தர்தாக்கையும் உண்டாக்கினார்கள், செப்பர்வியர் செப்பர்வாயீமின் தேவர்களாகிய அத்ரமலேக்குக்கும் அன்னமலேக்குக்கும் தங்கள் பிள்ளைகளை அக்கினியில் தகனித்து வந்தார்கள்.
இப்படி, பாகால், தாகோன், தியானாள், அன்னமலேக்கு, வானராங்கி, போன்ற அனேக தேவர்கள் மனுஷர்களால் வணங்கபட்டு வந்தார்கள் என்பதை நாம் வேத புத்தகத்தின் மூலம் அறியமுடியும். அதேபோல் நமது நாட்டில் கருப்பசாமி, மாட சாமி, முனியசாமி போன்ற பல்வேறு சாமிகளும் அம்மன்களும் வணங்கப்படுகின்றனர்.
இவர்களில் சன்மார்க்கமாக நடந்து நல்ல காரியங்களை செய்யும் தெய்வங்களும் உண்டு துன்மார்க்கமாக நடந்து துர் காரியங்களை செய்யும் தேவர்களும் உண்டு. இந்த தேவர்கள் சாத்தானால் வஞ்சிக்கப்பட்டு ஒரு யுகத்தில் தேவனுக்கு பிடிக்காத துன்மார்க்க காரியங்களை செய்து தேவனால் தாள்ளபட்டு போனவர்கள்
ரோமர் 1:27அப்படியே ஆண்களும் பெண்களைச் சுபாவப்படி அநுபவியாமல், ஒருவர்மேலொருவர் விரகதாபத்தினாலே பொங்கி, ஆணோடே ஆண் அவலட்சணமானதை நடப்பித்து தங்கள் தப்பிதத்திற்குத் தகுதியான பலனைத் தங்களுக்குள் அடைந்தார்கள். (ஒரு ஆண் சாமி இன்னொரு ஆண்சாமியின்மேல் விரகதாபம் கொண்டு அவலட்ச்சனமானதை நடப்பித்தது)
26. இதினிமித்தம் தேவன் அவர்களை இழிவான இச்சைரோகங்களுக்கு ஒப்புக்கொடுத்தார்;
பல புராணங்களை படித்து பார்த்தால் இவர்கள் செய்த இதுபோன்ற தேவனுக்கு விரோத காரியங்களை அறிந்துகொள்ள முடியும். இந்த தேவர்களை பார்த்து நம் கர்த்தராகிய ஆண்டவர் இவ்வாறு எச்சரிக்கிறார்:
சங்கீதம் 82:6நீங்கள் தேவர்கள் என்றும், நீங்களெல்லாரும் உன்னதமானவரின் மக்கள் என்றும் நான் சொல்லியிருந்தேன். 7. ஆனாலும் நீங்கள் மனுஷரைப்போலச் செத்து, லோகப்பிரபுக்களில் ஒருவனைப்போல விழுந்துபோவீர்கள்.
எனவே இவர்கள்விழுந்துபோனவர்கள்! இந்த தேவர்களை எல்லாம் பூர்வ நாட்களிலேயே சாத்தான் தன்னுடய கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்து விட்டான். இன்று அவர்கள் வணங்கும் கோவில்களில் இருப்பது உண்மையான தேவர்களோ தெய்வங்களோ அல்ல! சாத்தானே அந்த தெய்வத்தின் பெயரில் அங்கு இருந்துக் கொண்டு "நீ என் கோவிலுக்கு வருஷம் ஒருமுறை வந்து பொங்கல் வைக்க வேண்டும், இல்லையேல் உன்னை தண்டிப்பேன்" என்று ஏமாற்றி மனுஷர்களை பயம்காட்டிகொண்டு தேவனுக்கு பிடிக்காத விக்கிரக ஆராதனை நோக்கி ஜனங்களை திருப்பி வருகிறான் என்பதை நாம் அறியவேண்டும்.
இந்து மதம் குறிப்பிடும் முப்பது முக்கோடி தேவர்களில் கிறிஸ்த்தவ பெற்றோர்களுக்கு பிறக்காத ஒவ்வொரு மனுஷர்கள் மேலும் அல்லது ஒவ்வொரு இந்து மனுஷ /மனுஷிகள்மேலும் ஒரு தேவரின் ஆவியோ அல்லது ஒரு தேவியின் ஆவியோ குடிகொண்டுள்ளது. அதுவும் அவர்களுள்ளிருந்து இயேசுவை ஏற்றுக்கொண்டு அவர் வழியே இரட்சிப்படயவேண்டிய கட்டாய நிலையில் இருப்பதால். அவைகளை தெய்வங்களாக பாவித்து கோவிலில் சென்று கும்பிடுவதில் எந்த பயனும் இல்லை!
மாறாக அவ்வாறு குலதெய்வ கோவிலுக்குபோய் விக்கிரகத்தை வழிபடுகிறவர்கள். "விக்கிரக ஆராதனை" என்ற மீறுதலுகுட்பட்டு தேவனின் ராஜ்யத்தில் பகுபெற முடியாமல் போய், கடும் தண்டனை அடைய நேரிடலாம்!
வெளி 21:8விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார்
ஒருவேளை அப்படியே அந்த தேவர்கள் அந்த கோவிலில் இருந்தாலும், அங்கு அவர்கள் சாத்தனை மீறி ஒன்றும் செய்துவிட முடியாது. அவர்களால் நன்மை யாகிலும் தீமையாகிலும் செய்யமுடியாது! அதாவது இந்த தேவர்கள் எல்லோருமே சாத்தானுக்கு கீழ்பட்டு போனவர்கள். அவர்கள் நல்லது செய்ய நினைத்தாலும் அவர்களால் செய்துவிட முடியாது. சாத்தான் அவர்களை தன்னுடய அநாதி திட்டமாகிய தேவனை விட்டு மனிதனை பிரிக்கும் செயலுக்கே பயன்படுத்தி வருகிறான். இதை அறியாமல் ஜனங்கள் மோசம்போகிரார்கள்.
நாம் அறிந்துகொண்டு வழிபடும் தேவனாகிய கர்த்தர் எல்லா தேவர்களிலும் உயர்ந்தவரும் வானத்தையும் பூமியையும் படைத்தவரும் ஆவார்
சங்கீதம் 95:3கர்த்தரேமகா தேவனும், எல்லா தேவர்களுக்கும் மகாராஜனுமாயிருக்கிறார்
சங்கீதம் 135:5கர்த்தர் பெரியவர் என்றும், நம்முடைய ஆண்டவர் எல்லா தேவர்களுக்கும் மேலானவர் என்றும் நான் அறிவேன்.
நாளாகமம் 16:25கர்த்தர் பெரியவரும் மிகவும் துதிக்கப்படத்தக்கவருமாயிருக்கிறார்; எல்லா தேவர்களிலும் பயப்படத்தக்கவர் அவரே.
அத்தோடு எல்லா தேவர்களையும் நியாயம் விசாரிப்பவரும் நாம் தேவனாகிய கர்த்தரே!
சங்கீதம் 82:1தேவசபையிலே தேவன் எழுந்தருளியிருக்கிறார்; தேவர்களின் நடுவிலே அவர் நியாயம் விசாரிக்கிறார்
எனவே அவர் நம்மிடம் "நீங்கள் அந்நிய தேவர்களுக்கு பயப்படவேண்டாம்" என்று
திட்டமாக கூறுகிறார்!
II இராஜாக்கள் 17:37அவர் உங்களுக்கு எழுதிக்கொடுத்த திட்டங்களின்படியும், முறைமைகளின்படியும், நியாயப்பிரமாணத்தின்படியும், கற்பனைகளின்படியும், நீங்கள் சகல நாளும் செய்கிறதற்குக் கவனமாயிருந்து அந்நிய தேவர்களுக்குப் பயப்படாதிருங்கள்
II இராஜாக்கள் 17:38நான் உங்களோடே பண்ணின உடன்படிக்கையை நீங்கள் மறவாமலும், அந்நியதேவர்களுக்குப் பயப்படாமலும், (இருங்கள்)
எனவே அன்பானவர்களே! குலதெய்வம் என்று எதுவும் இநத உலகத்தில் இப்போது
இல்லை. அந்த குலதெய்வ கோவில்களில் குடிகொண்டு இருப்பதெல்லாம் சாத்தான்களே. அவைகள் பயம்காட்டும் வார்த்தைகளுக்கு பயப்படாமல் எல்லா தெய்வங்களுக்கும் மேலான நாம் தேவனாகிய கர்த்தரின் சித்தப்படி நடந்து நம்முடய பாவங்களுக்கு பரிகார பலியான எல்லா நாமத்துக்கும் மேலான நாமமாகிய இயேசுவின் நாமத்தை மாத்திரம் பயன்படுத்துங்கள்.
எரே: 10:11வானத்தையும் பூமியையும் உண்டாக்காத தெய்வங்கள், பூமியிலும் இந்த வானத்தின்கீழும் இராதபடிக்கு அழிந்துபோகும் என்பதை அவர்களுக்குச் சொல்லுங்கள்.
-- Edited by SUNDAR on Tuesday 23rd of August 2011 08:06:23 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
சங்கீதம் 95:3கர்த்தரேமகா தேவனும், எல்லா தேவர்களுக்கும் மகாராஜனுமாயிருக்கிறார்
சங்கீதம் 135:5கர்த்தர் பெரியவர் என்றும், நம்முடைய ஆண்டவர் எல்லா தேவர்களுக்கும் மேலானவர் என்றும் நான் அறிவேன்.
நாளாகமம் 16:25கர்த்தர் பெரியவரும் மிகவும் துதிக்கப்படத்தக்கவருமாயிருக்கிறார்; எல்லா தேவர்களிலும் பயப்படத்தக்கவர் அவரே.
அத்தோடு எல்லா தேவர்களையும் நியாயம் விசாரிப்பவரும் நாம் தேவனாகிய கர்த்தரே!
சங்கீதம் 82:1தேவசபையிலே தேவன் எழுந்தருளியிருக்கிறார்; தேவர்களின் நடுவிலே அவர் நியாயம் விசாரிக்கிறார்
எனவே அவர் நம்மிடம் "நீங்கள் அந்நிய தேவர்களுக்கு பயப்படவேண்டாம்" என்று
திட்டமாக கூறுகிறார்!
II இராஜாக்கள் 17:37அவர் உங்களுக்கு எழுதிக்கொடுத்த திட்டங்களின்படியும், முறைமைகளின்படியும், நியாயப்பிரமாணத்தின்படியும், கற்பனைகளின்படியும், நீங்கள் சகல நாளும் செய்கிறதற்குக் கவனமாயிருந்து அந்நிய தேவர்களுக்குப் பயப்படாதிருங்கள்
"கிறிஸ்துவர்கள் குலதெய்வக் கோவிலுக்கு செல்வது" என்ற கேள்விக்கு சகோதரர்கள் அளித்த அணைத்து வேத விளக்கங்களுக்கும் மிக்க நன்றி. மிகவும் அருமை. நான் இந்த தொடுப்பை ஜெபத்துடன் பகிர்ந்துள்ளேன். தேவன் விடுதலை கொடுப்பார் என விசுவாசிக்கிறேன்.
சகோதரர்கள் அனைவரின் அன்பிற்கு நன்றி சொல்லுகிறேன்.
"சகோ: MUTHU அவர்களுக்கு சந்தேகங்கள் தீர்ந்து இருக்கும் என்று நினைக்கிறேன்"
நான் என்று இயேசுவை என் சொந்த இரட்சகராக, தெய்வமாக ஏற்றுக் கொண்டேனோ அன்று முதல் அவரைத்தவிர வேறு ஒரு தெய்வம் இல்லை என்று அவருக்காக வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். ஆனால் என் சொந்த ஜனங்கள் "குலதெய்வம்" என்று சொல்லிக்கொண்டு வருடா வருடம் அங்கு செல்வதை தவறு என்று உணர்த்தி, தேவன் வேதத்தில் எப்படி எல்லாம் தன்னைக் குறித்து சொல்லி இருக்கிறார் என்பதை அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்கிற ஆதங்கத்தில் கேள்வி எழுப்பினேன்.
தேவன் விடுதலை கொடுப்பார் என விசுவாசிக்கிறேன். தேவனின் நாமம் உயர்த்தப்படுவதாக.
விளக்கம் கொடுத்த அணைத்து சகோதர உள்ளங்களுக்கும் இயேசுவின் நாமத்தில் நன்றி தெரிவிக்கிறேன்.
என் சொந்த ஜனங்கள் "குலதெய்வம்" என்று சொல்லிக்கொண்டு வருடா வருடம் அங்கு செல்வதை தவறு என்று உணர்த்தி, தேவன் வேதத்தில் எப்படி எல்லாம் தன்னைக் குறித்து சொல்லி இருக்கிறார் என்பதை அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்கிற ஆதங்கத்தில் கேள்வி எழுப்பினேன்.
தேவன் விடுதலை கொடுப்பார் என விசுவாசிக்கிறேன். தேவனின் நாமம் உயர்த்தப்படுவதாக.
விளக்கம் கொடுத்த அணைத்து சகோதர உள்ளங்களுக்கும் இயேசுவின் நாமத்தில் நன்றி தெரிவிக்கிறேன்
சுந்தர்,உங்களது தெய்வத்தின் பெருமையைச் சொல்லுங்கள். ஆனால், தயை செய்து அடுத்தமதத்தினரையும், அவர்களது தெய்வங்களையும் இழிவாகப் பேசுவதை நிறுத்துங்கள்.
எங்கள் குலதெய்வங்களை துர்தேவதைகள் என்று சொல்ல உங்களுக்கு என்ன உரிமைஇருக்கிறது ?
எங்கள் குலதெய்வங்கள், உயிர்ப்போடு இன்றும் உலாவி வரும் ஆற்றல்கள். நல்ல குணங்களையும், ஒழுக்கத்தையும், நேர்மையையும் மனிதரிடம் உண்டாக்குகின்றனர்.கேட்ட வரத்தை உடனடியாகத் தரும் இரக்கமும், கருணையும் கொண்டவர்கள்.
அதற்காக நாங்கள் எங்கள் குலதெய்வம் மட்டுமே உயர்ந்தது, மற்ற தெய்வங்கள் எல்லாம்துர்தேவதைகள் என்று சொல்கிறோமா ? ஏன் கிறுத்துவர்களான நீங்கள் இப்படிமதவெறுப்போடு இருக்கிறீர்கள் ?
எங்களைப் பார்த்து துர்தேவதைகளைக் கும்பிடுகிறீர்கள் என்கிறீர்களே. என்றாவது, உங்களைப் பார்த்துச் சிலுவையில் செத்துத்தொங்கும் பிணத்தைக் கும்பிடுகிறீர்கள் என்று நாங்கள் சொல்லி இருக்கிறோமா ? இத்தனைக்கும் நாங்கள் சொல்வது உங்கள் மதக்கருத்துக்களின்படியே உண்மையும்கூட.
மதவெறியைப் பரப்பாதீர்கள் சகோதரரே. மனித உணர்வுகளை மதிக்கும் குணம் இந்துக்களுக்கு மட்டுமே இருக்கும் என்ற எண்ணத்தை உங்களைப் போன்றவர்கள் நடத்தைஏற்படுத்திவிடுகிறது.//////
சகோதரர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்! எந்த மதத்தையும் தாக்கி எழுதவேண்டும் என்பது என்னுடய நோக்கம் அல்ல. நான் எல்லோரையும் மதிக்ககூடியவன். என்னுடய எழுத்தால் உங்கள் மனம் புண்பட்டிருந்தால் தயவு செய்து மன்னிக்கவும்.
நான் தங்களின் எந்த ஒரு தெய்வத்தையும் தனிப்பட்ட முறையில் குறைத்து எழுதவில்லை என்று கருதுகிறேன். பொதுவாக இவ்வாறு எழுதியிருக்கிறேன்.
////இவர்களில் சன்மார்க்கமாக நடந்து நல்ல காரியங்களை செய்யும் தெய்வங்களும் உண்டு துன்மார்க்கமாக நடந்து துர் காரியங்களை செய்யும் தேவர்களும் உண்டு. இந்த தேவர்கள்
சாத்தானால் வஞ்சிக்கப்பட்டு ஒரு யுகத்தில் தேவனுக்கு பிடிக்காத துன்மார்க்க காரியங்களை செய்து தேவனால் தாள்ளபட்டு போனவர்கள்///
தங்களுக்கு நல்லது செய்யும் தெய்வங்களை நல்ல தெய்வங்கள் பட்டியலில் எடுத்து கொள்ளவும்.
ஆகினும் உண்மைகள் சில நேரங்களில் அதிகமான கசப்பாகவே இருக்கும். நான் மற்ற கிறிஸ்த்தவர்கள் போல் எதுவும் அறியாமல் கண்மூடித்தனமாக எழுதவில்லை. எனக்கு தேவன் தெரிவித்த உண்மைகளை நீங்கள் ஏற்க்கவில்லை என்றாலும் வள்ளலார் அவர்களின் வெளிப்பாடுகளை முழுவதும் படித்து பார்த்தாலே தாங்கள் வணங்கும் தெய்வங்கள் யார் என்பது சரியாக புரிந்துவிடும்.
தேவன் ஒருவரே! அதை எல்லா மதமும் சொல்கிறது. அவரே "ஒருவரும் சேரக்கூடாத ஒளியில் வாசம் செய்யும் தேவன்" மற்ற எல்லா சாமிகளுமே எல்லா வரத்தையும் அள்ளி கொடுத்தாலும் கூட அவர்கள் எல்லோருமே அந்த ஒரே தேவனால் உண்டக்கபட்டவர்களே. உங்கள் மதத்தின் தெய்வங்கள் பற்றிய உண்மைகளை நீங்கள் அறியவில்லை என்றால் நான் என்ன செய்ய முடியும்?
நான் இந்து தெய்வங்கள் யார் என்று அறிநதுள்ளதோடு, பல இந்து தெய்வங்கள் மேல் நல்ல மதிப்பு கொண்டவன் எனவே நான் யாரையும் தரம்கெட்ட முறையில் விமர்சிப்பது இல்லை! அவர்களால் இரட்சிப்பு இல்லை என்பதே என்னுடய கருத்து.
நான் செய்த ஒரு தவறினிமித்தம் ஆண்டவர் என்னை மனுஷர்கள் கையில் தண்டனைக்கு ஒப்புகொடுதபோது, எனக்கு பேய் விரட்ட வேண்டும் என்று ஒரு இந்து சாமி கோவிலுக்கு கொண்டுசென்றனர். அந்த கோவிலில் இடுப்பில் ஒரு சிறிய துண்டு துணியோடு இருந்த ஒரு இந்து தெய்வமே எனக்கு சில காரியங்களை தெரிவித்தது!
அவர்கள் நல்லவர்களாகஇருக்கலா, கொடூர அரக்கர்களை கொன்றொழித்தவர்களாகஇருக்கலாம் வரம் கேட்டாலும்கூட தரலாம் ஆனால் அவர்களால் சாத்தானை மீறி ஒன்றும் செய்து விடமுடியாது என்பது நான் அறிந்த அடுத்த கருத்து!
உங்களுக்கு அந்த தெய்வங்கள் எல்லாம் கொடுத்திருக்கிறது என்று திருப்தியடையாமல்,இந்த உலகில் அன்றாடம் ஆயிரம் வேதனைகளில் வாடி வதங்கி, செத்து பிழைக்கும் என்த்தையோ மக்களுக்காக பெருமூச்சுவிட்டு அழுது "அவர்கள் எல்லோருமே எல்லா நன்மைகளும் பெற்று நன்றாக இருக்கவேண்டும்" என்று தொடர்ந்து வேண்டுதல் செய்யுங்கள். அப்பொழுது ஆண்டவரே உங்களிடம் உண்மை என்னவென்பதை சொல்லுவார்.
இவ்வாறு எழுதுவதற்கு என்னை மன்னிக்க வேண்டும் சகோதரரே! சில முக்கிய உண்மைகளை எழுதியே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில்நான் இருக்கிறேன். நான் அறிந்த இந்த காரியங்களை எல்லாம் எழுதிவைக்கவில்லை என்றால் நான் தேவனிடம் அதற்கான பதில் சொல்லவேண்டும் என்று பயந்திருக்கிறேன்!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)