இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஆசீர்வாதத்தின் இரகசியம்


வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
ஆசீர்வாதத்தின் இரகசியம்
Permalink  
 


இப்பொழுது உள்ள உலகில் மனிதர்கள் தங்களுக்கு ஆசிர்வாதம் வேண்டும் என்று அதாவது
சொந்த வீடு
நோய் இல்லாத வாழ்வு
தேவை கேற்ப பணம்
கஷ்டம் மற்றும் துன்பம் இல்லாத  வாழ்க்கைவேண்டும்
 
என்று எல்லா மதத்தினரும்  கோவிலுக்கு போனால் நன்மை கிடைக்கும்
இந்த தரிசனம் பார்த்தல் நம் வாழ்வில் ஆசிர்வாதம் வரும் பெரிய ஊழியர்கள் போதகர்கள்  மீட்டிங்கில்  கலந்து கொண்டால்  சுகமான வாழ்வு உண்டாகும் என்று பல மதங்களில் உள்ளவர்கள் தங்கள் சுகமான வாழ்க்கைகாக கடவுளை தேடாத கோவில் இல்லை பார்க்காத போதகர்கள் இல்லை
 
நன்மையான வாழ்வு கடவுளை தேடினாலோ அல்லது பல ஊழியர்களை பார்த்தாலோ வராது
 
தேவன் சொன்னபடி நடந்து அவர் விரும்பும் செயல் படுத்தும் கிரியைகளை நாமும் செய்தால்தான் வரும்
 
கலாத்தியர் : 5  : 22 -23
 
(1 ) அன்பு
(2 ) சந்தோசம்
(3 ) சமாதனம்
(4 ) நீடிய பொறுமை
(5 ) தயவு
(6 ) நற்குணம்
(7 ) விசுவாசம்
(8 ) சாந்தம்
(9 ) இச்சை அடக்கம்
 
மேலே சொல்ல பட்ட 9  கனிகளான தேவனுடைய குணங்களை நம் வாழ்வில் நடக்கும் காரியங்களில்
 
அதாவது  
 
கோவபடுகிரவர்களிடத்தில் அன்பையும்
துன்பபடுத்துகிரவர்கள்   இடத்தில நீடிய பொறுமையையும்
துர்குணம் உள்ளவர்களிடத்தில் நற்குணத்தையும்
சண்டைபோடுகிறவர்கள் இடத்தில சமாதானத்தையும்
நாம் வெளிபடுத்தினால் போதும்
 
 
மேல் சொன்ன 9 குணங்களை உங்கள் வாழ்கையில் கடை பிடித்து பாருங்கள் நீங்கள் தேடிய நமையான வாழ்வும் சுகமான
வாழ்கையும் ஆசிர்வாதமான காரியங்களும் உங்கள் வாழ்கையில் வரும்
இதை நான் சொல்லவில்லை நம் தேவனாகிய கர்த்தர் சொன்னது
 
நன்மை செய்தால் மேன்மை இல்லையோ
 என்று நம் தேவனும்
 
முதலாவது தேவனுடிய நீதியையும் அவருடைய  
ராஜ்ஜியத்தையும்  தேடுங்கள் அப்பொழுது இவைகள் எல்லாம் உங்களுக்கு
கூட கொடுக்கப்படும்
 
என்று நம் தேவனுடைய குமாரனும் சொல்லி இருக்கிறார்கள்
 
 
இப்படி பட்ட பலிகள் மேல் தேவன் பிரியமாய் இருக்கிறார்
 
மேலே சொன்ன குணங்களை விட்டு விட்டு போதகர்களை தேடிக் கொண்டும்  பல ஊழியங்களில் கலந்து கொண்டு இருந்தாலும்
 
உன்மேல் உள்ள அன்பினால் சில நன்மைகளை செய்வாரே அன்றி அவர் இருதயம் குளிர்ந்து செய்யமாட்டார்.
 
என்பது என் கருத்து
 
ஆசிர்வாததின் இரகசியம் கற்பனையை கைகொள்வதே...............


-- Edited by EDWIN SUDHAKAR on Monday 22nd of August 2011 09:02:30 PM

__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)



MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
Permalink  
 

EDWIN SUDHAKAR wrote:
 நன்மை செய்தால் மேன்மை இல்லையோ  என்று நம் தேவனும்
 
முதலாவது தேவனுடிய நீதியையும் அவருடைய  ராஜ்ஜியத்தையும்  தேடுங்கள் அப்பொழுது இவைகள் எல்லாம் உங்களுக்கு கூட கொடுக்கப்படும்
 
ஆசிர்வாததின் இரகசியம் கற்பனையை கைகொள்வதே...............
-------------------------------------------------------------------------------------------
 
சகோ. எட்வின் சுதாகர் அவர்களே சபிக்கபட்ட இந்த பூமியில் இந்த புதியஏற்பாட்டு யுகத்தில் கற்பனையை
கைகொண்டு  நடப்பதால் இந்த உலகுக்குரிய ஆசீர்வாதம் எதுவும் கிடைக்கும் என்று 
எதிர்பார்த்தால் அது தவறு  என்பதே எனது கருத்து. வேணுமென்றால் நோய் நொடியில்லாத ஒரு ஆசீர்வாதம் கிடைக்கலாம்.

அன்பு பொறுமை சமாதானம் சந்தோசம் விட்டுகொடுத்தல் போன்ற பண்புகளை முழுவதும் நிறைவேற்றி கேட்பவனுக்கு எல்லாம் கடன் கொடுத்து, வஸ்த்திரத்தை கேட்டால் அங்கியையும் கொடுத்துவிட்டால் நாம்  நிச்சயம் உலக ஆசீர்வாதத்தோடு இருக்கமுடியாதே.  

எனவே இங்கு தேவன் ஆசீர்வாதம் என்றும் மேன்மை என்றும் குறிப்பிட்டுள்ளது எல்லாம் மறுமைக்குரிய  ஆசீர்வாதமாகவும் மறுமைக்குரிய மேன்மையாகவும் எடுத்துகொள்ளலாம் என்று கருதுகிறேன்



__________________


நமது நண்பர்

Status: Offline
Posts: 146
Date:
Permalink  
 

இறைநேசன் Wrote:
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
சகோ. எட்வின் சுதாகர் அவர்களே சபிக்கபட்ட இந்த பூமியில் இந்த புதியஏற்பாட்டு யுகத்தில் கற்பனையை
கைகொண்டு நடப்பதால் இந்த உலகுக்குரிய ஆசீர்வாதம் எதுவும் கிடைக்கும் என்று
எதிர்பார்த்தால் அது தவறு என்பதே எனது கருத்து. வேணுமென்றால் நோய் நொடியில்லாத ஒரு ஆசீர்வாதம் கிடைக்கலாம்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
சகோ: இறைநேசன் சொல்வது உண்மையே.....

இந்த உலகம் பிசாசுக்கு ஒப்பு கொடுக்கபட்டு இருக்கிறபடியால் அவனுக்கு இஷ்டமானவனுக்கு நான் இவைகளை கொடுக்கிறேன் என்று சொல்லி இருக்கிறானே...

இன்னொருபுறம் இயேசு கிறிஸ்துவும்


மத்தேயு - 6 : 33 ல்

முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள் பின்பு இவைகளெல்லாம் கூட கொடுக்கப்படும் என்றும் சொல்லி இருக்கிறாரே..

இவைகளெல்லாம் என்று எவைகளை குறித்து சொல்லி இருக்கிறார் என்று விளக்கினால் நன்றாய் இருக்கும்.

நீதி : 28 : 20 ல்

உண்மையுள்ள் மனுஷன் பரிபூரண ஆசிர்வாதம் பெறுவான் என்று சொல்லபட்டு இருக்கிறதே...

இதில் பரிபூரணம் என்றால் என்னவென்று விளக்கினால் நன்றாய் இருக்கும்.

 



-- Edited by Stephen on Friday 9th of September 2011 06:54:36 PM

__________________

கற்பனையைக் கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும் அறியான். (பிரசங்கி 8 :5 ) 


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

சகோதரர் ஸ்டீபன் அவர்களே! பழைய ஏற்பாட்டு காலத்து ஆசீர்வாதமானது இங்கு உலக சம்பந்தமான மாம்சத்துகேற்ற ஆசீர்வாதம். அதையே ஆப்ரஹாம்/ தாவீது/ சாலமோன் போன்றவர்கள் சுதந்தரித்தனர். ஆனால் புதிய ஏற்பாட்டு ஆசீர்வாத மென்பது இம்மைக்குரியது அல்ல என்பதை தாங்கள் சரியாக  விளங்கிக்கொள்ள புதிய ஏற்பாட்டு காலத்தில் ஆசீர்வாதம் பெற்ற ஓரிருவரை பற்றி நாம் இங்கு பார்க்கலாம். 
 
இயேசுவின் தாயாகிய மரியாள் "ஸ்திரிகளுக்குள் ஆசீர்வதிக்கபட்டவள்" என்று  ஆவியில் நிறைந்து எலிசபெத்து அவளை வாழ்த்துகிறாள்.
 
லூக்கா 1:42 உரத்தசத்தமாய்: ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள்.
 
ஆனால் மரியாளோ திருமணத்துக்கு முன்னமே கர்ப்பம் தரித்து நிந்தையும் பரியாசமும் அடைந்திருப்பாள் அவளது கணவனாகிய யோசேப்பே அவளை ரகசியமாக தள்ளிவிட நினைத்திருந்தார் என்று வேதம் சொல்கிறது. இதைவிட கேவலம் வேறு எண்ண வேண்டும்?   இயேசுவை பெற்றெடுத்த பின்னும்கூட மரியாள் உலகத்துக்குரிய  பெரிய ஆசீர்வாதம் பெற்றதுபோல் வேதத்தில் எங்கும் இல்லை.  மாறாக  சிமியோன் மரியாளை பற்றி சொல்லும்போது  
 
லூக்கா 2:35 உன் ஆத்துமாவையும் ஒரு பட்டயம் உருவிப்போகும் என்றான்.
 
மரியாளுக்கு சொல்லபட்ட தீர்க்கதரிசனத்தின் முடிவாக இது  இருந்தது. அவர்களை
பற்றிய முழு நடபடிகள் வேதத்தில் இல்லை என்றாலும்  பரிசுத்த ஆவியை 
பெந்தேகோஸ்தே நாளில்  முதல் பலனாக பெற்ற கூட்டத்தில் அவர்கள் ருந்தார்கள். அதுவே அவர்கள் பெற்ற பெரிய ஆசீர்வாதம் என்று நான்
கருதுகிறேன்.  
 
அடுத்து எலிசபெத்து ஆவியில் நிறைந்து சொன்ன வார்த்தை உன் கர்ப்பத்தின் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டது.
 
மரியாளின் கர்ப்பத்தின்கனியான ஆண்டவராகிய  இயேசுவைபற்றி எல்லோருக்கும் தெரியும். இந்த உலகில் அவர் எவ்வாறு அலைந்து திரிந்தார்  
 
மத்தேயு 8:20  நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப்பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு; மனுஷகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை என்றார்.
 
தலை சாய்க்ககூட இடமில்லை என்று புலம்பிய இயேசு  அனேக நிந்தனைகள் வேதனைகளுக்கு மத்தியில்  சிலுவையிலே தலையை சாய்த்தார்.  அவர் இந்த
உலகத்துக்குரிய எந்த ஆசீர்வாதத்தையும் அனுபவித்ததாக தேரியவில்லை. ஆனால்  
 
யோவான் 3:34 தேவனால் அனுப்பப்பட்டவர் தேவனுடைய வார்த்தைகளைப் பேசுகிறார், தேவன் அவருக்குத் தமது ஆவியை அளவில்லாமல் கொடுத்திருக்கிறார்.
  
அவர் தேவனுடய வார்த்தைகளை பேசியதும் தேவன் தன்னுடய ஆவியை அவருக்கு அளவில்லாமல் அருளியிருந்ததுமே அவர் பெற்ற மிகப்பெரிய ஆசீர்வாதம் என்று நான் கருதுகிறேன்.
 
அடுத்ததாக ஆண்டவராகிய இயேசு கிறிஸ்த்து பரமேரிப்போகும் முன்னர் தன் கைகளை உயர்த்தி தன்னுடய பதினோரு சீடர்களை  ஆசீர்வதித்ததாக வேதம் சொல்கிறது.  
 
லூக்கா 24: 33. எருசலேமுக்குத் திரும்பிப்போய், பதினொருவரும் அவர்களோடிருந்தவர்களும் கூடியிருக்கக்கண்டு:36. இவைகளைக்குறித்து அவர்கள் பேசிக்கொண்டிருக்கையில், இயேசு தாமே அவர்கள் நடுவிலே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார் 50 பின்பு அவர் பெத்தானியாவரைக்கும் அவர்களை அழைத்துக்கொண்டுபோய், தம்முடைய கைகளை உயர்த்தி, அவர்களை ஆசீர்வதித்தார்.

இவ்வாறு இயேசுவால் நேரடியாக ஆசீர்வாதம் பெற்ற இந்த 11 பேர்களில் பலருடைய வாழ்க்கை வரலாறுகள் நமக்கு தெரியும். சுவிசேஷத்தினிமித்தம் அவர்கள் பட்டபாடுகளும்  வேதனைகளும் அடிகளும்/வலிகளும் சொல்லி மாளாது. இதில் பலருடைய மரணம் கூட மிக கொடூரமான முறையில் அமைந்துள்ளது. 
 
இப்பொழுது சொல்லுங்கள் புதிய ஏற்பாட்டு ஆசீர்வாதம் இந்த உலகுக்குரியதா என்று?    
 
புதியஏற்பாட்டு ஆசீர்வாதம் எதுவென்று கீழ்கண்டவசனம் தெளிவாக சொல்கிறது.  
 
எபேசியர் 1:3 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார்
 
ஆம்!  ஆவிக்குரிய சகல ஆசீர்வாதமே நமக்கு அருளபட்ட ஆசீர்வாதம் ஆகும்.
 
இனி தங்களுடய கேள்விக்கு வருகிறேன்:
 
சகோ. ஸ்டீபன்  
////மத்தேயு - 6 : 33 ல்முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள் பின்பு இவைகளெல்லாம் கூட கொடுக்கப்படும் என்றும் சொல்லி இருக்கிறாரே..
இவைகளெல்லாம் என்று எவைகளை குறித்து சொல்லி இருக்கிறார் என்று விளக்கினால் நன்றாய் இருக்கும்.///    
 
நீங்கள் இந்த வசனத்தை கொஞ்சம் முழுமையாக கருத்தில் கொண்டு பர்க்கவேண்டும்.
 
மத்- 6 : 31. ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று கவலைப்படாதிருங்கள்.
32. இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறார்கள்; வைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார்.
33. முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்
 
இங்கு இவைகளெல்லாம் என்று இயேசு குறிப்பிட்டது எவைகள் என்பதற்கான பதில் மேலேயுள்ள வசனத்தில் இருக்கிறது உண்பது/ உடுப்பது/ குடிப்பது இம் மூன்றை பற்றித்தான் "இவைகளெல்லாம்" என்று 32ம் வசனத்திலும் சொல்கிறார் 33ம் வசனத்திலும் சொல்கிறார்.
 
இந்த "உண்பது உடுப்பது குடிப்பதை" தவிர வேறு ஏதாவது இன்னும் அதிகமாக
வேண்டும் என்று நீங்கள் எண்ணி தேடினால் அது ஆசையில்தான் அடங்கும்.
 
பவுலோ அதையும் கொஞ்சம் சுருக்கிவிட்டார்.   
 
தீமோத்தேயு 6:8 உண்ணவும் உடுக்கவும் நமக்கு உண்டாயிருந்தால் அது போதுமென்றிருக்கக்கடவோம்.
 
ஆனால் இன்று தேவ  ஊழியர்கள் என்று சொல்லும் அனேகர் "நாங்கள்  ஒரு காலத்தில் மிகவும் கஷ்டப்பட்டோம்"  ஆனால் இன்று எங்களுக்கு இரண்டு வீடுகள் இருக்கிறது கார் வண்டி இருக்கிறது  "ஆண்டவர் எங்களை அதிகமாக  ஆசீர்வதித் திருக்கிறார்" என்று கூசாமல் சொல்கிறார்கள். யார் பணத்தால் வந்த ஆசீர்வாதாமோ
தெரியவில்லை.
 
எனவே சகோதரரே நாம் இருக்கும் இந்த கடைசி காலம் என்பது நிச்சயமாக  உலக ஆசீர்வாதங்களை சுதந்தரிக்கும் காலம் அல்ல!
 
II இரா 5:26. பணத்தை வாங்குகிறதற்கும், வஸ்திரங்களையும் ஒலிவத்தோப்புகளையும் திராட்சத்தோட்டங்களையும் ஆடுமாடுகளையும் வேலைக்காரரையும் வேலைக்காரிகளையும் வாங்குகிறதற்கும் இது காலமா? 27. ஆகையால் நாகமானின் குஷ்டரோகம் உன்னையும் உன் சந்ததியாரையும் என்றைக்கும் பிடித்திருக்கும் என்றான்; 
 
பழைய ஏற்பாட்டு காலத்தில் பல தீர்க்க தரிசிகள் மட்டுமே அவ்வாறு ஒரு வாழ்க்கையை வாழ்ந்தார்கள் அனால் இந்த புதிய ஏற்பாட்டு காலத்தில் இயேசுவை ஏற்று ஆவியை பெற்ற எல்லோருமே தேவனின் வார்த்தையை சொல்லும் தீர்க்கதரிசிகள்தான். எனவே அவர்களுக்கொத்த வாழ்கையை நாமும் வாழ்வது அவசியம்.
 
ஆமாம்! உங்களை ஓன்று கேட்கிறேன், நீங்கள் எதை ஆசீர்வாதம் என்று எண்ணுகிறீர்கள்?
 
தேவ ஆவியானவரின் வல்லமையால் முழுவதும் நிறப்பபட்டு ஒரே ஒரு நாள் அவரின் நடத்துதலின் கீழ்  நீங்கள் நடந்து பார்த்தால், இந்த உலகமும் அதில் உள்ள எல்லாஆசீர்வாதமும் வெறும் குப்பை என்பது  சந்தேகமற தெரிந்துபோகும். அநேகர் அதிலுள்ள மேன்மையான சந்தோசம் பற்றி தெரியாமல்  குப்பைகளை
சேர்த்து குவித்து அதன்மேல் நம்பிக்கை வைத்துகொண்டிருக்கிறார்கள்.
 
சாலமோனைபோல ராஜாவாக வாழ்ந்து முதிர் வயதில் மரிப்பதைவிட  ஒரு எரேமியாபோல் ஒரே எசேக்கியேல்  எண்ணில்லா துன்பங்கள் அனுபவித்தாலும் தேவ ஆவியின் வல்லமையில் வாழ்வதையே நான் விரும்புகிறேன்   
    
அந்த ஆவியின் வல்லமையிலேயே ஆசீர்வாதத்தின் மேன்மை இருக்கிறதேயன்றி இந்த குப்பை கூளமான உலகின் உள்ள எந்த ஒரு பொருளிலோ அல்லது பணத்திலோ இல்லை என்பதை உணர்ந்து. தேவனின் ஆவியால் முழுவதும் நிரப்பபடுவதே  நீங்கள் இரவும் பகலும் எதிர்பார்க்கும் பெரிய ஆசீர்வாதமாக  கருதுங்கள் ஆண்டவர்  உங்களை தான் ஆவியில் வல்லமையால் நிசசயம் 
நிரப்புவார்.. 
 
(இங்கு  எழுதப்படும்  உபதேசங்கள்  மற்ற கிறிஸ்த்தவ தளங்களைவிட சற்று மாறுபடடதாககும் கைகொண்டு நடக்க சற்று  கடினமாகவும்  இருக்கும். எனவே அநேகர் இத்தளைத்தைவிட்டு விலகிபோவது நாம் அறிந்ததே, அன்று இயேசு கடினமானஉபதேசத்தை சொன்னபோதுகூட  அநேகர் அவரைவிட்டு விலகி போனார்கள் அல்லவா?)      
 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
Permalink  
 

சகோதரர் சுந்தர் அவர்களே 
 
வேத  வசனத்தின் மூலம் ஆசிர்வாதங்களைபற்றி மிக அழகாய் தெளிவாய் சொன்னீர்கள் 
இந்த பிமிக்குரிய ஆசிர்வாதம்  பற்றியும் மறுமைக்குரிய ஆசிர்வாதத்தை பற்றியும் நன்கு அறிந்து கொண்டேன்
 
 
இது ஒரு கடினமான உபதேசம் என்று சொல்பர்கள் உலகத்து குரியவர்கள் என்றே நான் கருதுகிறேன்
 
 
தேவ ஆவியானவர் உங்களோடு இருக்கிறார் என்பதை உங்கள் வார்த்தையின்  மூலம் ஒவ்வொரு நாளும் தெரியபடுத்துகிரீர்கள்
 

சகோ : சுந்தர் அவர்களே நீங்கள் சொன்ன காரியங்களில் சில காரியங்கள் எனக்கு தெரிந்து இருந்தாலும் இந்த உலகத்தில் உள்ள மனிதர்கள் கடவுளை தேடுவதற்கு முக்கிய காரணமே ஆசிவாததிற்கு மட்டும் அதாவது சொந்த வீடு கார் இவைகளுக்காக மட்டுமே

 
அதற்காக தான்
 
edwin  wrote......... 
_____________________________________________________________
மேல் சொன்ன 9 குணங்களை உங்கள் வாழ்கையில் கடை பிடித்து பாருங்கள் நீங்கள் தேடிய நமையான வாழ்வும் சுகமான
வாழ்கையும் ஆசிர்வாதமான காரியங்களும் உங்கள் வாழ்கையில் வரும்
_____________________________________________________________
 
 
 
ஆசிர்வாதம் வேண்டும் என்று அப்பொழுதாவது தேவனுடைய கற்பனைகளை கைகொல்வார்களே என்று நினைத்து தான் இந்த காரியங்கள் எழுதினேன் 
நானும் உணர்ந்து விட்டேன் அதாவது மனிதர்களுக்கு பிரியமானவைகளை பேச கூடாது என்று
 
 
sundar  wrote
________________________________________________________
இங்கு  எழுதப்படும்  உபதேசங்கள்  மற்ற கிறிஸ்த்தவ தளங்களைவிட சற்று மாறுபடடதாககும் கைகொண்டு நடக்க சற்று  கடினமாகவும்  இருக்கும். எனவே அநேகர் இத்தளைத்தைவிட்டு விலகிபோவது நாம் அறிந்ததே, அன்று இயேசு கடினமானஉபதேசத்தை சொன்னபோதுகூட  அநேகர் அவரைவிட்டு விலகி போனார்கள் அல்லவா?)    
_______________________________________________________
 
 
உங்களை போல ஆட்கள் தான் தேவனுக்கு தேவை...........


-- Edited by EDWIN SUDHAKAR on Monday 12th of September 2011 11:51:29 AM

__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
Permalink  
 

இந்த பூமியிலே பணம் பொருள் எந்த  அளவுக்கு இருக்கின்றதோ அந்த 
அளவுக்கு வீடுகள் கட்ட முடியும் வசதியாய் வாழமுடியும்
 
 
பணம் இல்லாதவர்கள் வாடகை வீட்டை கூட இந்த வீட்டுக்கு எவ்வளவு வாடகை என்று கேட்டுதான் குடியேற முடியும்
 
 
இந்த காரியம் எல்லாம் இந்த பூமியிலே  நடக்கின்ற ஒன்று
 
 
 
 
 
ஆனால் என் அன்பு சகோதரர்களே  பரலோகத்தில் அப்படி அல்ல:
 
 
 
ஒருவன் எந்த அளவுக்கு நீதி நீயாயமாய் நடந்து தானம்  தர்மம் செய்கின்றானோ எந்த அளவுக்கு மற்றவர்களுக்கு கொடுத்து உதவுகின்றானோ அவனுக்கு அதற்கேற்ற படி பரலோகத்தில் பெரிய
வீடு கொடுக்க படும்
 
 
 
தான தர்மம் செய்யாதவன்  எவனோ அவனுக்கு பரலோகத்தில் இடம் கொடுக்க படும் ஆனால் பிளாட்பார்ம் தான் புரியவில்லையா
அவன் பரலோகத்தில் தான் இருப்பான் ஆனால் அவனுக்கு வீடு என்பது இருக்காது
 
 
 
 
இந்த  காரணத்தினால் தான் நம்  ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து
 
 
லூக்கா : 16
 
 
9. நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் மாளும்போது உங்களை நித்தியமான வீடுகளிலே ஏற்றுக் கொள்வாருண்டாகும்படி,
அநீதியான உலகப்பொருளால் உங்களுக்குச் சிநேகிதரைச் சம்பாதியுங்கள்
 
 
 
நித்தியமான வீடுகளிலே என்ற வார்த்தையை கவனிக்கவும்
 
 
 
ஆம் சகோதர்களே நீயாதீர்ப்புக்கு  பின் தேவன் பரலோகத்தில் ஒவ்வொருவனுடைய கிரியைக்கு ஏற்றபடி வீடுகள் வசதிகள் கொடுக்கும் பொழுது சிலருக்கு பரலோகத்தில் இடம் இருக்கும் ஆனால் அவர்கள் தங்க வீடு இருக்காது
 
 
 
அந்த நேரத்திலே அவர்கள்  இந்த பூமியிலே யார் யாருக்கு உதவி செய்தார்களோ  அதாவது நீங்கள்   பணத்தின் மூலம் உடைகள்
மற்றும்  பொருட்கள் மூலம் எத்தனை நபருக்கு உதவி செய்தீர்களோ  
 
 
 
அவர்கள் நித்தியமான வீட்டில் இருக்கும் பொழுது நீங்கள் இந்த பூமியிலே அவர்களுக்கு உதவி  செய்த காரணத்தினால் உங்களையும் அவர்கள் நித்தியமான வீட்டில் சேர்த்து கொள்ளலாம்
 
 
 
இந்த உலகத்தில் இன்பமாய் வாழுகின்றவர்களே உங்களிடம் உள்ள பொருட்களின் மூலம் பணத்தின் மூலம் இல்லாதவர்களுக்கு உதவி செய்யுங்கள்
 
 
ஏனென்றால் பரலோகத்தில் பணமும் உலக பொருளும் உங்களுக்கு நித்தியமான வீட்டை கட்டி தர உதவாது
உங்கள் நல்ல நீதியான கிரியைகளே உங்களுக்கு நித்தியமான வீட்டை கொடுக்கும் என்பதை மறவாதீர்கள்
 
 
 
அழிந்து போகின்ற பொருட்களால் உங்களுக்கு நண்பர்களை சம்பாதித்து கொள்ளுங்கள் நீங்கள் மரித்தால் உங்களை அவர்களுக்கு கொடுக்க பட்டு உள்ள நித்தியமான வீட்டில் சேர்த்து கொள்வார்கள்...........


-- Edited by EDWIN SUDHAKAR on Saturday 1st of October 2011 01:10:43 PM

__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
Permalink  
 

இன்று கிறிஸ்தவர்கள் அநேகர் ஆசிர்வாதமாக இருக்க வேண்டும் என்று எண்ணி செழிப்புக்காக தேவனை தேடுபவர்களும்  உண்டு அதில் பல ஊழியர்களும் அடங்குவார்கள்
 
 
 
சிலர் ஆசிர்வாதம் என்றால் எல்லாம் தேவனிடத்தில் இருந்து மட்டும் தான் வரும் என்று நினைத்து  கொண்டு நாம் ஆசிர்வாதமாக அதாவது  வசதியாக உள்ளோம் என்று
நினைத்து தேவன் தான் நம்மை ஆசிவதிருக்கின்றார் என்று பெருமை பட்டு கொள்கின்றனர் ஆனால் அந்த
ஆசிர்வாதத்தில் வித்யாசங்கள் உள்ளன
 
 
 
தேவனிடத்தில் இருந்து எல்லாம் நன்மையையும் ஆசிர்வாதமும் வரும் என்பது உண்மை  அதை யாரும் மறுக்க முடியாது
ஆனால் நாம் ஒன்றை அறிந்து கொள்ள வேண்டும்
 நாம் என்ன அறிந்து கொள்ள வேண்டும் என்றால் சாத்தானிடத்தில் இருந்து கூட ஆசிர்வாதமும் நன்மைகளும் வரும்
 
 
 
என்னடா இவன் இப்படி ஒரு குண்டை  தூக்கி போடுகின்றான் எந்த ஒரு நன்மையையும் ஜோதிகளின் பிதாவிடத்தில் இருந்து தான் வருகின்றது என்று வேதம் சொல்கின்றது ஆனால் இவனோ சாத்தானிடத்தில் இருந்து கூட ஆசிர்வாதமும் நன்மையையும் வரும் என்று சொல்கின்றானே என்று யோசிக்கின்றீர்கள் என்று நினைக்கின்றேன்
 
 
 
சகோதர்களே ஜோதிகளின் பிதாவிடத்தில் வருகின்ற நன்மைகள் உண்மையும் மனிதன் மேலுள்ள அன்பின் நிமித்தம் வருகின்ற மாசில்லாத தூய்மையான நன்மைகள்
 
 
 
யாக்கோபு : 1 
 
17 .நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது; அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை
 
 
 
ஆனால் சாத்தானிடத்தில் இருந்து வருகின்ற நன்மைகள் ஆசிர்வாதம் எல்லாம் ஒரு மனிதனை கவில்பதர்க்கும் ஒரு மனிதனை நரகத்தில் தள்ள செய்வதற்கும் அவனுக்கு 
தண்டனை வாங்கி கொடுப்பதற்கு  தவிர வேறொன்றுக்கும் அல்ல
 
 
 
வசன ஆதாரம் :
 
 
யோவான்   : 10
 
 
10. திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான்
 
 
 
சாத்தான் பொருளாதார ஆசிர்வாதம் கொடுக்க முடியும் என்பதற்கு வசன ஆதாரம்
 
 
லுக்கா : 4 
 
6 இவைகள் எல்லாவற்றின்மேலுமுள்ள அதிகாரத்தையும் இவைகளின் மகிமையையும் உமக்குத் தருவேன், இவைகள் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது; எனக்கு இஷ்டமானவனுக்கு இவைகளைக் கொடுக்கிறேன்
 
 
 
ஏசுவுக்கு உலகத்துடைய மகிமையை காட்டி மயக்கிவிடலாம் என்று நினைத்தான் ஆனால் அவர் யார் தன் வார்தையையை மனிதனுக்காக   தியாகம் செய்த மகிமையானவரின் மகனல்லவா அவருக்கு சொல்லியா
கொடுக்கவேண்டும்
 
 
 
இன்று அதே போல தான் ஊழியர்ககளை கவிழ்க்க பொருளாதார ஆசிர்வாதம் செழிப்பு என்று இந்த உலகத்தில் உள்ளவர்களை மயக்கி விளவைக்கின்றான் பலர் விழுந்து போய்விட்டு மற்றவர்களையும் விழவைக்க  போதிக்கின்றார்கள்
 
 
 
எனவே சகோதர்களே ஊழியர்களே சொல்வதை கேளுங்கள் பொருளாதார ஆசிர்வாதம் என்பது சாத்தானின் மூலம் கூட உங்களை கவில்பதர்க்கும்  வரும் என்பதை  நினைவில் கொண்டு ஜாக்கிரதையாய் இருங்கள்
 
 
 
ஏனென்றால் இயேசு கிறிஸ்து சொல்லியிருக்கின்றார்
பணக்காரன்  பரலோகத்தில் வருவது எப்படி இருக்கும் என்றால்
ஊசியின் ஓட்டையில்  ஒட்டகம் நுழைவது  போல் இருக்குமாம் யோசித்து பாருங்கள் ஊசியின் ஓட்டையில்  ஒட்டகம் போகுமா என்று ?
 
 
24. மேலும் ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப்பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்
 
 
 
ஆசிர்வாதத்தை பொறுத்தவரையில் மிகுந்த ஜாக்கிரதையாய் இருங்கள் மிகுந்த ஜாக்கிரதையாய் இருங்கள் அந்த ஆசிர்வாதமும்  நன்மைகளும் எண்டு இருந்து வருகின்றது
என்பதி நாம் நம் நடக்கையின் மூலமே அறிந்து கொள்ளலாம்
புரிகின்றவர்களுக்கு புரியும் என்று நினைக்கின்றேன்......


-- Edited by EDWIN SUDHAKAR on Thursday 1st of December 2011 06:56:09 PM

__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
Permalink  
 

good discussions.. I found a good place to grow spritually..


Praise the load..

__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
Permalink  
 

Plz clarify my questions,

 

1)aasirvadhangalai palaya yerpadu matrum pudhia yerpadu endru pirippadhan avasiam enna..

 

2)Aasirvadhangal vithyasapadugindranava?

 

3)Pudhia yerpadu kaalathilum aasirvadhangal niapramaanam matrum karpanai sarndhadha..

 

4)U all comming to tell that God is not interested to make us rich? am i correct!

 

 

 



__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
Permalink  
 

plz.. anyone can Tell me, how to replay in tamil..

 



__________________


நமது நண்பர்

Status: Offline
Posts: 146
Date:
Permalink  
 

welcome dear Mr.JOHN12 to this site.

you can use this site for write in tamil.

http://www.bibleuncle.blogspot.com/p/tamileditor.html

thanks,

Stephen.  



-- Edited by Stephen on Thursday 1st of December 2011 07:05:46 PM



__________________

கற்பனையைக் கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும் அறியான். (பிரசங்கி 8 :5 ) 


வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
Permalink  
 

அன்பு சகோ : JOHN12  அவர்களே இந்த தளத்தில் நீங்கள் கலந்து கொண்டதற்காக 
இயேசு கிறிஸ்துவின் நாமத்தின் மூலம் உங்களுக்கு வாழ்த்துதலை தெரிவித்து கொள்கின்றேன்
 
 
 
மேலும் நீங்கள் தமிழில் சுலபமாக  எழுத கீழ் காணும் சுட்டியை  சொடுக்கவும்
 
 
 
 
 
 
புரிதலுக்கு நன்றி
எட்வின் சுதாகர்
 
 


-- Edited by EDWIN SUDHAKAR on Thursday 1st of December 2011 07:46:41 PM

__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
Permalink  
 

JOHN12   WROTE  :
============================================================================
Plz clarify my questions,

 1)aasirvadhangalai palaya yerpadu matrum pudhia yerpadu endru pirippadhan avasiam enna..

 2)Aasirvadhangal vithyasapadugindranava?

 3)Pudhia yerpadu kaalathilum aasirvadhangal niapramaanam matrum karpanai sarndhadha..

 4)U all comming to tell that God is not interested to make us rich? am i correct!

===========================================================================

 

சகோ : JOHN12  அவர்களே நிச்சயம் உங்கள் சந்தேகங்களுக்கு தள சகோதர்கள் பதில் தருவார்கள் என்று நம்புகின்றேன்

 

நீங்களும் தேவனுக்குள் நாங்கள் பலப்பட உங்கள் அனுபவிதிலிருந்து    அனேக  நல்ல கருத்துகள் தருபடியாக  கேட்டுகொள்கின்றேன்



-- Edited by EDWIN SUDHAKAR on Thursday 1st of December 2011 08:06:32 PM

__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

JOHN12 wrote:

Plz clarify my questions,

1)aasirvadhangalai palaya yerpadu matrum pudhia yerpadu endru pirippadhan avasiam enna..

2)Aasirvadhangal vithyasapadugindranava?

3)Pudhia yerpadu kaalathilum aasirvadhangal niapramaanam matrum karpanai sarndhadha..

 4)U all comming to tell that God is not interested to make us rich? am i correct! 


சகோதரர்  அவர்களே, தாங்கள் கேட்டிக்கும் கேள்விகளை அமர்ந்து தியானித்தபோது ஒரு புத்தகம் எழுதும் அளவுக்கு அது நீண்டு கொண்டே போகிறது. ஆசீர்வாதம் என்பது ஒரு கூட்டு வார்த்தை அதில் அனேக பிரிவுகள்  அடங்கியிருக்கிறது. மேலும் ஆசீர்வாதம் என்றால் என்னவென்ற கருத்து மனுஷர்களுக்கு மனுஷர் வேறுபடலாம். ஒருவர் பணத்தை ஆசீர்வாதமாக கருதலாம் சிலர் சுகத்தை இன்னொருவர் தேவனின் வார்த்தைகள்படி வாழ்வதையோ அல்லது ஆண்டவருக்காக அள்ளி கொடுப்பதையோ அச்சீர்வாதமாக எண்ணலாம்.

எனவே தாங்கள் கேள்விக்கு ஒரிரு வரியில்  பதில் சொன்னால்  அதிலிருந்து தங்களுக்கு வேறுபல கேள்விகள் எழும்பும்.  எனவே  தாங்கள் எதை ஆசீர்வாதம் என்று கருதுகிறீர்கள் என்பதை சற்று தெரிவிக்கவும்.  கர்த்தருக்கு சித்தமானால்  ஓரளவுக்கு விளக்கமான பதில் ஒன்றை தர  வாஞ்சிக்கிறேன்.

அதற்க்கு இடையில்:
JOHN12 Wrote:
 /////4)U all comming to tell that God is not interested to make us rich? am i correct!////
 
என்ற தங்களின் கேள்விக்கான என்னுடய பதில் கீழ்கண்ட திரியில் பதிவிட்டுள்ளேன்   
 
 
அந்த குறிப்பிட்ட கேள்வி பற்றிய தங்களின் கருத்துக்களை அங்கு தெரிவிக்கலாம்!


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

HMV


இனியவர்

Status: Offline
Posts: 53
Date:
Permalink  
 

JOHN12 wrote:

plz.. anyone can Tell me, how to replay in tamil..


 நண்பரே தமிழில் எழுத எளிமையானதொரு மென்பொருள் பின்வரும் லிங்கில் கிடைக்கும்.அதனை உங்கள் கம்ப்யூட்டரில் நிறுவிக்கொண்டு ஆல்ட்+2 என்று அழுத்தினால் போதும்,நீங்கள் எங்குவேண்டுமானாலும் தமிழிலேயே எழுதலாம்.வேறொரு இடத்தில் எழுதி காப்பி பேஸ்ட் பண்ணவேண்டியதில்லை. முயற்சித்துவிட்டு சொல்லுங்கள்.

http://software.nhm.in/products/t12r



__________________
Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard