இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கிதியோன் உண்டாகிய ஏபோத் என்ன வஸ்திரமா? அல்லது சிலையா?


இளையவர்

Status: Offline
Posts: 29
Date:
கிதியோன் உண்டாகிய ஏபோத் என்ன வஸ்திரமா? அல்லது சிலையா?
Permalink  
 


நியா: 8 : 27. அதினால் கிதியோன் ஒரு ஏபோத்தை உண்டாக்கி, அதைத் தன் ஊரான ஒப்ராவிலே வைத்தான்; இஸ்ரவேலரெல்லாரும் அதைப் பின்பற்றிச் சோரம்போனார்கள்; அது கிதியோனுக்கும் அவன் வீட்டாருக்கும் கண்ணியாயிற்று.

யாத் 28 : 4 அவர்கள் உண்டாக்கவேண்டிய வஸ்திரங்களாவன; மார்ப்பதக்கமும், ஏபோத்தும், அங்கியும், விசித்திரமான உள்சட்டையும், பாகையும், இடைக்கச்சையுமே. உன் சகோதரனாகிய ஆரோன் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படி, அவனுக்கும் அவன் குமாரருக்கும் பரிசுத்த வஸ்திரங்களை உண்டுபண்ணவேண்டும்.

மேல உள்ள வசனங்களில் ஏபோத்து என்பது வஸ்திரம் என்று யாத்திராகமம் கூறுகிறது அதே ஏபோத்தை கிதியோன் பொன்னினால் செய்தான் என்றும் இஸ்ரவேலரெல்லாரும் அதைப் பின்பற்றிச் சோரம்போனார்கள்; அது கிதியோனுக்கும் அவன் வீட்டாருக்கும் கண்ணியாயிற்று என்று நியாதிபதிகள் கூறுகிறது.
 

கிதியோன் செய்த "ஏபோத்" என்ன? அது பொன்னினால் செய்த ஒரு வஸ்திரமா? அல்லது அது ஒரு சிலையா? சகோதரர்கள் விளக்கவும்.



__________________


நமது நண்பர்

Status: Offline
Posts: 146
Date:
Permalink  
 

Muthu wrote:

--------------------------------------------------------------------------------------------------

கிதியோன் செய்த "ஏபோத்" என்ன? அது பொன்னினால் செய்த ஒரு வஸ்திரமா? அல்லது அது ஒரு சிலையா? சகோதரர்கள் விளக்கவும்.

--------------------------------------------------------------------------------------------------

முத்து அவர்களே,
 
ஏபோத் என்பது வஸ்திரம் என்று வைத்து கொள்ளுங்கள் அல்லது சிலை என்று வைத்து கொள்ளுங்கள்.
 
இரண்டில் ஏதோ ஒன்று அல்லது இரண்டிற்கும் பயன்படுத்தபட்டுள்ளது என்று வைத்து கொள்ளுங்கள்.
 
இதிலிருந்து தாங்கள் தெரிந்துகொள்ள போவது என்னவென்று தெரிந்து கொள்ளலாமா....!  


-- Edited by Stephen on Friday 26th of August 2011 02:53:01 PM

__________________

கற்பனையைக் கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும் அறியான். (பிரசங்கி 8 :5 ) 


இளையவர்

Status: Offline
Posts: 29
Date:
RE: கிதியோன் உண்டாகிய ஏபோத் என்ன வஸ்திரமா? அல்லது சிலையா?
Permalink  
 


அன்பு சகோதரருக்கு இயேசுவின் நாமத்தில் வாழ்த்துகள்.
 
ஸ்டீபன் wrote :
 
\\ ஏபோத் என்பது வஸ்திரம் என்று வைத்து கொள்ளுங்கள் அல்லது சிலை என்று வைத்து கொள்ளுங்கள். இரண்டில் ஏதோ ஒன்று அல்லது இரண்டிற்கும் பயன்படுத்தபட்டுள்ளது என்று வைத்து கொள்ளுங்கள். இதிலிருந்து தாங்கள் தெரிந்துகொள்ள போவது என்னவென்று தெரிந்து கொள்ளலாமா....! \\
 
தவறாக கேள்வி எழுப்பியிருக்கிறேன் என்றால் சகோதரர் மன்னிக்கவும்.
 
என்னுடைய நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கையில், "ஏபோத் என்றால் வஸ்திரம் என்று வேதத்தில் வாசித்து இருக்கிறேன், ஆனால் கிதியோன் பொன்னினால் ஏபோத் உண்டாக்கினான் என்றும், அது அவர்களுக்கு கண்ணியாயிற்று என்றும், அவர்கள் செய்தது என்ன அந்த வஸ்திரத்தை போல ஒரு சிலையா? அல்லது வேறு எதாவது சிலையா?" என்று என்னிடம் கேள்வி எழுப்பினார்.
 
நானும் கூட இது ஒரு உருவ வழிபாடு என்று உணர்ந்தாலும் அது எப்படிபட்டது என்று அறிந்து கொள்ள விரும்பினேன். யாராவது தெரியாதவர்கள் கேட்டால் பதில் சொல்லகூடும் என்ற எண்ணத்தில் கேள்வி எழுப்பியிருக்கிறேன். அநேகருடைய ஆலோசனை மற்றும் விளக்கங்களை அறிந்து கொள்ள விரும்பினேன்.
 
ஏதோ கேள்வி கேட்க வேண்டும் என்ற எண்ணத்தில் அல்லது வேறு எந்த நோக்கத்திலும் கேட்கவில்லை சகோதரரே.
 
இயேசுவின் நாமம் வாழ்த்தப்படுவதாக.


__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

Muthu wrote:
  
என்னுடைய நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கையில், "ஏபோத் என்றால் வஸ்திரம் என்று வேதத்தில் வாசித்து இருக்கிறேன், ஆனால் கிதியோன் பொன்னினால் ஏபோத் உண்டாக்கினான் என்றும், அது அவர்களுக்கு கண்ணியாயிற்று என்றும், அவர்கள் செய்தது என்ன அந்த வஸ்திரத்தை போல ஒரு சிலையா? அல்லது வேறு எதாவது சிலையா?" என்று என்னிடம் கேள்வி எழுப்பினார்.
 
நானும் கூட இது ஒரு உருவ வழிபாடு என்று உணர்ந்தாலும் அது எப்படிபட்டது என்று அறிந்து கொள்ள விரும்பினேன். யாராவது தெரியாதவர்கள் கேட்டால் பதில் சொல்லகூடும் என்ற எண்ணத்தில் கேள்வி எழுப்பியிருக்கிறேன். அநேகருடைய ஆலோசனை மற்றும் விளக்கங்களை அறிந்து கொள்ள விரும்பினேன்.
  
 
 

சகோரதரர் முத்து அவர்களே தாங்கள் சந்தேகத்தின் அடிப்படையில் விளக்கம் பெற வாஞ்சித்து எழுதிய இதுபோன்ற கருத்துக்களை நான் வரவேற்கிறேன்!  இதுபோன்ற கேள்விகளை தாங்கள் தாராளமாக கேட்கலாம்.     

தாங்கள் குறிப்பிடுவதுபோல் எபோத்து என்பது  ஆசாரியர்கள் தோளில் போட்டுக் கொள்ளும் ஒரு வஸ்த்திரமே  என்பதை நாம் சில வசனங்களின் அடிபடையில் அறிய முடிகிறது.

யாத்திராகமம் 28:4 அவர்கள் உண்டாக்கவேண்டிய வஸ்திரங்களாவன; மார்ப்பதக்கமும், ஏபோத்தும், அங்கியும், விசித்திரமான உள்சட்டையும், பாகையும், இடைக்கச்சையுமே. உன் சகோதரனாகிய ஆரோன் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படி, அவனுக்கும் அவன் குமாரருக்கும் பரிசுத்த வஸ்திரங்களை உண்டுபண்ணவேண்டும்.

ஓசியா 3:4 இஸ்ரவேல் புத்திரர் அநேகநாள் ராஜா இல்லாமலும், அதிபதி இல்லாமலும், பலி இல்லாமலும், சிலை இல்லாமலும், ஏபோத் வஸ்திரம் இல்லாமலும், தேராபீம் இல்லாமலும் இருப்பார்கள்.

இந்த எபோத்து  வஸ்த்திரம்  செய்யப்பட தேவையான பொருட்கள் என்னவென்பதை நாம் கீழ்கண்ட வசனத்தின் மூலம்  அறிய முடியும்:   

யாத்திராகமம் 28:6 ஏபோத்தைப் பொன்னினாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் விசித்திரவேலையாய்ச் செய்யக்கடவர்கள்.

யாத்திராகமம் 35:9 ஆசாரியருடைய ஏபோத்திலும் மார்ப்பதக்கத்திலும் பதிக்கத்தக்க கோமேதகம் முதலிய இரத்தினங்களுமே.

யாத்திராகமம் 35:27 பிரபுக்கள் ஏபோத்திலும் மார்ப்பதக்கத்திலும் பதிக்கும் கோமேதகம் முதலிய இரத்தினங்களையும்,

இந்த எபோத்தானது பொன்னினாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் செய்யப்பட்டு அதில் இரத்தின கற்கள் பதிக்கபட்டிருக்கும் என்று கருதுகிறேன்.   இந்த எபோத்தின் வழியாக

கர்த்தரிடத்தில் விசாரிக்கும்போது அதில் பதிக்கபட்ட கற்கள் ஒளிரும் நிறத்தை  வைத்து அவர்கள் ஒரு முடிவுக்கு வருவார்கள் என்பது எனது கருத்து. 
 
இந்த எபோத்தின் மூலம் கர்த்தரின் வார்த்தையை கேட்டறிந்த பல சம்பவங்கள்
வேதத்தில் உண்டு!   
 
I சாமுவேல் 30:7 தாவீது அகிமெலேக்கின் குமாரனாகிய அபியத்தார் என்னும் ஆசாரியனை நோக்கி: ஏபோத்தை என்னிடத்தில் கொண்டுவா என்றான்; அபியத்தார் ஏபோத்தைத் தாவீதினிடத்தில் கொண்டுவந்தான்.
 
8. தாவீது கர்த்தரை நோக்கி: நான் அந்தத் தண்டைப் பின் தொடரவேண்டுமா? அதைப் பிடிப்பேனா? என்று கேட்டான். அதற்கு அவர்: அதைப் பின்தொடர்; அதை நீ பிடித்து, சகலத்தையும் திருப்பிக்கொள்வாய் என்றார்.

எனவே  கர்த்தரின் ஆசாரியர்கள் அணியும் அந்த   ஏபோத் வஸ்த்திரத்தின்  மூலம் கர்த்தரின் வார்த்தையை கேட்டறிதல் என்பது கர்த்தரால் அங்கீகரிக்கபட்ட செயல்தான்.   
 
ஆனால் கிதியோனின்  நாட்களில் நடந்தது என்ன? அவன் செய்த காரியங்களில் எது பாவமானது என்பதை நாம் ஆராய்ந்தோம் என்றால்:
 
நியாயாதிபதிகள் 8: 24. பின்பு கிதியோன் அவர்களை நோக்கி: ....நீங்கள் அவரவர் கொள்ளையிட்ட கடுக்கன்களை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றான். அவர்கள் இஸ்மவேலராயிருந்தபடியினால் அவர்களிடத்தில் பொன்கடுக்கன்கள் இருந்தது.
 
26. பிறைச் சிந்தாக்குகளும், ஆரங்களும், மீதியானியரின் ராஜாக்கள் போர்த்துக்கொண்டிருந்த இரத்தாம்பரங்களும், அவர்களுடைய ஒட்டகங்களின் கழுத்துகளிலிருந்த சரப்பணிகளும் அல்லாமல், அவன் கேட்டு வாங்கின பொன்கடுக்கன்களின் நிறை ஆயிரத்து எழுநூறு பொன் சேக்கலின் நிறையாயிருந்தது.

27. அதினால் கிதியோன் ஒரு ஏபோத்தை உண்டாக்கி, அதைத் தன் ஊரான ஒப்ராவிலே வைத்தான்; இஸ்ரவேலரெல்லாரும் அதைப் பின்பற்றிச் சோரம்போனார்கள்; அது கிதியோனுக்கும் அவன் வீட்டாருக்கும் கண்ணியாயிற்று.
 
இந்த காரியம் கண்ணியாக கருதப்பட அனேக காரணங்கள் இருக்கலாம்.
 
1. இந்த எபோத்தானது கொள்ளையிடப்பட்ட அந்நிய தேசத்தாரின் இரத்தாம்பரம் மற்றும் பொன்னினால் செய்யப்பட்டது. (கர்த்தரின் எபோத்தோ  ஜனங்களின் காணிக்கையில் செய்யப்பட்டது) 
 
2. இந்த எபோத்தை உருவாக்கிய கிதியோன் இதை கர்த்தரின் கட்டளை அடிப்படையில் கர்த்தருக்காக  உருவாக்கியதாக எந்த ஆதாரமும் இல்லை. 
 
3. இந்த கிதியோன் ஒரு ஆசாரியன் என்று எங்கும் சொல்லப்படவில்லை எனவே ஆசாரியரல்லாத மற்றவர்கள் அதை பயன்படுத்துவது தவறாக இருக்கலாம். 
 
4.ஜனங்கள் கர்த்தரை பின்பற்றுவதற்கு பதிலாக அந்த ஏபோத்தை பின்பற்றினார்கள்  என்பதுபோல் வசனம் சொல்கிறது.
 
அதாவது நம்முடய கையில் இருக்கும் வேதாகமத்தை ஒரு ஏபோத்தாக எடுத்து கொண்டால்,  பரிசுத்த ஆவியால் நடத்தப்பட்டு, வேதத்தில் உள்ள வசனத்தின்படி வாழ விளைவோருக்கு அது சரியான பாதையை காட்டும். மற்றபடி ஏனோதானோ என்று பரிசுத்தமற்ற வாழ்க்கையை வாழ்ந்துகொண்டு  "கார் வாங்கலாமா? கடன் வாங்கலாமா?  வீடு கட்டலாமா வேண்டாமா" என்பது போன்ற கேள்விகளுக்கு
உடனுக்குடன் பதிலறிய  பைபிளை திறந்து ஒரு வசனத்தை படித்து பார்த்தால் அது சோரம்போகவே வழிசெய்யும் என்பதையே இந்த கருத்து நமக்கு உணர்த்துகிறது!          

இந்த ஏபோத்தின் நோக்கமானது 
 பின்னாட்களில் தடம் புரண்டு அதை  விக்கிரகங்களிடத்தில் வைத்து குறிகேட்கவும் ஆரம்பித்தார்கள்  என்பதை அறியமுடிகிறது.  
 
நியாயாதிபதிகள் 17:5 மீகா, சுவாமிக்கு ஒரு அறைவீட்டை நியமித்து வைத்திருந்தான்; அவன் ஒரு ஏபோத்தையும் சுரூபங்களையும் உண்டுபண்ணி, தன் குமாரரில் ஒருவனைப் பிரதிஷ்டை பண்ணினான்; இவன் அவனுக்கு ஆசாரியனானான்.
 
தேவன்  ஏதாவது ஒரு நல்ல நோக்கத்தில் செய்யும் அல்லது செய்யசொல்லும் காரியம், சாத்தானால்  எப்படியெல்லாம் தடம்புரட்டபட்டு  புரண்டு புரண்டு புதை குழிக்குள் கொண்டுபோகிறது என்பதை இதன் மூலம் அறிய முடிகிறதல்லவா?   


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



இளையவர்

Status: Offline
Posts: 29
Date:
Permalink  
 

தங்களின் வேத விளக்கத்திற்கு மிகவும் நன்றி சகோதரரே.
 
தங்களின் உற்சாக வார்த்தைகளுக்கு மிகவும் நன்றி. ஏபோத்தை தரித்துக் கொண்டவர்கள் எப்படி கர்த்தரின் வார்த்தைகளை உரைக்கிறார்கள் என புரிந்து கொள்ளும் வகையில் பதிவிட்டுள்ளீர்கள். இனி நானே வேதத்தில் தேடி பார்த்த பின்பு மீண்டும் புரியவில்லை என்றால் கேள்வியை எழுப்புகிறேன்.
 
தேவன் உங்களையும் உங்கள் ஊழியங்களையும் ஆசீர்வதிப்பாராக!.
 
 
அந்தோணி முத்து


__________________


நமது நண்பர்

Status: Offline
Posts: 146
Date:
கிதியோன் உண்டாகிய ஏபோத் என்ன வஸ்திரமா? அல்லது சிலையா?
Permalink  
 


Muthu wrote

-----------------------------------------------------------------------------------------------

தவறாக கேள்வி எழுப்பியிருக்கிறேன் என்றால் சகோதரர் மன்னிக்கவும்.

-----------------------------------------------------------------------------------------------

நீங்கள் கேள்வி கேட்பதை நான் ஒன்றும் தவறாக நினைக்கவில்லை, என்னை தவறாக நினைக்க வேண்டாம்.

சகோதர சுந்தர் எழுதிய சில காரியங்கள் எனக்கும் தேவையான பதிலை கொடுத்துள்ளது.

கர்த்தருடைய நாமத்தினால் அன்பின் வாழ்த்துக்கள் சகோதரரே......



-- Edited by Stephen on Monday 29th of August 2011 11:16:21 AM

__________________

கற்பனையைக் கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும் அறியான். (பிரசங்கி 8 :5 ) 


இளையவர்

Status: Offline
Posts: 35
Date:
RE: கிதியோன் உண்டாகிய ஏபோத் என்ன வஸ்திரமா? அல்லது சிலையா?
Permalink  
 


நன்றி இயேசப்பா ,இந்த பதிலிலிருந்து நான் தெரிந்துகொண்ட காரியம் என்னவென்றால் " கர்த்தர் தான் காரியத்தை வாய்க்க செய்தார் என்று ஆண்டவருக்கு நன்றி சொல்லாமல் ஏபோத்தின் மூழமாகதான் ஜெயம் கொண்டேன் என்று ஏபோத்திற்கு முதலிடம் கொடுத்துவிட்டார் அதை பின்பற்றி இஸ்ரவேலர் சோரம் போனார்கள்." நாமும் அந்த மாதிரியான காரியங்கள் நம்மிடத்தில் இருந்தால் அதை நம்மை விட்டு விலக்க வேண்டும். நன்றி சகோதரரே

__________________
Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard