இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பரிந்து பேசும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து


இளையவர்

Status: Offline
Posts: 27
Date:
பரிந்து பேசும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து
Permalink  
 


பரிந்து பேசும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து
 
ஆண்டவராகிய இயேசு நமக்காக  மரித்தார் என்பது அனைத்து கிருஸ்தவர்களும் அறிந்த ஒன்று. அனால் அவர் இன்றும் நமக்காக  பரிந்து பேசிக்கொண்டிருக்கிறார் என்பது சிலருக்கு  மட்டுமே  தெரியும்.
இயேசு கிறிஸ்துவின் அன்பு எல்லையற்றது என்பது பலரும் அறியாத ஒன்று.
 
நம்முடைய தாய், தகப்பன் கூட நம்மேல் இவ்வளவு அன்பு வைக்கமாட்டார்கள். அவர்கள் கூட நாம் செய்த தவறுகளை சில சமையம் மன்னிக்கமாட்டார்கள். அனால் வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரங்கள் கொடுக்கப்பட்ட 
இயேசு கிறிஸ்து,  நாம் எத்தனை முறை தவறு செய்தாலும் அதை மன்னிப்பதோடு மட்டும் அல்லாமல் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிரவருமாய் இருக்கிறார்.
இதற்க்கு ஆதாரமாய் வேதத்தில் பின்வரும் வசனமும் உண்டு.
 
யோவான் : 2 : 1 
என் பிள்ளைகளே, நீங்கள் பாவஞ்செய்யாதபடிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன்; ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார்.
 
நாம் பாவம் செய்தால் ஒவ்வருமுறையும் இயேசு கிறிஸ்துவே  சிலுவையில் 
அரையப்படும் வேதனை அனுபவிக்கிறார். இதற்க்கு ஆதாரமாக பின்வரும் வேதவசனம் இவ்வாறு கூறுகிறது......
  
எபிரெயர் 6:6 மறுதலித்துப்போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால், மனந்திரும்புகிறதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாதகாரியம்.
 
இப்படி சிலுவை வேதனை அனுபவித்தும், நமக்காக பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிராறேன்றல் அவருடைய
அன்பு எவ்வளவு பெரியது என்பதை நாம் புரிந்து கொள்ளமுடியும்.
 
ஆகையால் நமது நன்மைக்கு இல்லாமல் போனாலும், பரிந்து பேசும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்காக
நாம் பாவம் செய்யாமல் இருப்போம்.


 


-- Edited by Sugumar S T on Monday 5th of September 2011 06:26:01 PM

__________________

Sugumar Samuel T

யோவான் 8:32சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார்.



MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
Permalink  
 

Sugumar S T wrote:
பரிந்து பேசும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து
 
யோவான் : 2 : 1 
என் பிள்ளைகளே, நீங்கள் பாவஞ்செய்யாதபடிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன்; ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார்.
 
நாம் பாவம் செய்தல் ஒவ்வருமுறையும் இயேசு கிறிஸ்துவே
சில்லுவையில்  அரையப்படும் வேதனை அனுபவிக்கிறார். இதற்க்கு ஆதாரமாக பின்வரும் வேதவசனம் இவ்வாறு கூறுகிறது......
  
எபிரெயர் 6:6 மறுதலித்துப்போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால், மனந்திரும்புகிறதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாதகாரியம்.
 
ஆகையால் நமது நன்மைக்கு இல்லாமல் போனாலும், பரிந்து பேசும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்காக நாம் பாவம் செய்யாமல் இருப்போம். 


 மிகவும்  அருமையான  ஒரு  கருத்து சகோதரரே.

இயேசுவை ஏற்றுக்கொண்டால் மட்டும்  போதும் அவரது கற்பனையும் கைகொள்ளவேண்டிய அவசியமில்லை என்று பலர் போதிக்கின்றனர். பாவத்தினால் வரும் தண்டனை தெரியாமல் விளையாட்டுத்தனமாக இருக்கின்றனர். அவர்களது கருத்துப்படி ஒருவேளை இயேசுவை ஏற்றுக் கொண்ட வர்களுக்கு மீட்பு என்பது நிச்சயமான ஒன்றாக இருக்கலாம். ஆனால் ஒவ்வொருமுறை அவர்கள்  பாவம் செய்யும் போதும் ஆண்டவராகிய இயேசுவை மீண்டும் சிலுவை வேதனைக்கு கொண்டு செல்கின்றனர் அத்தோடு அவரை பிதாவிடத்தில் போய் நமக்காக கூனி  குறுகி நின்று பரிந்து பேசவைக்கிறார்கள் என்பதையாவது அறியக்கடவர்கள்.
 
இன்னும் சிலர் அதற்கும்  ஒடுபடி மேலேபோய். இயேசுவின் இரத்தத்தால் எல்லோருக்கும் மீட்பு உண்டு என்று போதித்து யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் ஆனால் மீட்பு நிச்சயம்உண்டு என்பதுபோல் போதிக்கின்றனர்.
 
அவர்கள்  கருதுவதுபோல் எல்லோருக்கும் மீட்பு என்பது ஒருவேளை இருக்கலாம். ஆனால் நீங்கள் ஒவ்வொரு முறை பாவம் செய்யும்போது  நமது ஆண்டவராகிய  இயேசுவுக்கு மீண்டும் சிலுவை வேதனையை வாங்கி கொடுத்து, அவரை  பிதாவின் முன்பை நமக்காக கெஞ்ச வைக்கிறீர்கள் என்பதை அறியுங்கள்.
 
ந்த காரியத்திநிமித்தமாவது பாவம் செய்வதில் இருந்து  விலகுவதில் அக்கறை காட்டுங்கள். உங்கள் தவறான போதனைகளை விட்டொழியுங்கள்.   
 


-- Edited by இறைநேசம் on Tuesday 30th of August 2011 03:39:30 PM

__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 233
Date:
Permalink  
 

//இயேசுவை ஏற்றுக்கொண்டால் மட்டும்  போதும் அவரது கற்பனையும் கைகொள்ளவேண்டிய அவசியமில்லை என்று பலர் போதிக்கின்றனர்.//

//இன்னும் சிலர் அதற்கும்  ஒருபடி மேலேபோய். இயேசுவின் இரத்தத்தால் எல்லோருக்கும் மீட்பு உண்டு என்று போதித்து யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் ஆனால் மீட்பு நிச்சயம்உண்டு என்பதுபோல் போதிக்கின்றனர்.

அவர்கள்  கருதுவதுபோல் எல்லோருக்கும் மீட்பு என்பது ஒருவேளை இருக்கலாம். ஆனால் நீங்கள் ஒவ்வொரு முறை பாவம் செய்யும்போதும் நமது ஆண்டவராகிய  இயேசுவுக்கு மீண்டும் சிலுவை வேதனையை வாங்கி கொடுத்து, அவரை  பிதாவின் முன்பாக நமக்காக கெஞ்ச வைக்கிறீர்கள் என்பதை அறியுங்கள்.
 
ந்த காரியத்திநிமித்தமாவது பாவம் செய்வதில் இருந்து  விலகுவதில் அக்கறை காட்டுங்கள். உங்கள் தவறான போதனைகளை  விட்டொழியுங்கள்.//
தீத்து 1:16 அவர்கள் தேவனை அறிந்திருக்கிறோமென்று அறிக்கைபண்ணுகிறார்கள், கிரியைகளினாலோ அவரை மறுதலிக்கிறார்கள்; அவர்கள் அருவருக்கப்படத்தக்கவர்களும், கீழ்ப்படியாதவர்களும், எந்த நற்கிரியையுஞ்செய்ய ஆகாதவர்களுமாயிருக்கிறார்கள்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.
Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard