இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கிறிஸ்தவர்கள் வரதட்சணை வாங்கலாமா / கொடுக்கலாமா .....?


நமது நண்பர்

Status: Offline
Posts: 146
Date:
கிறிஸ்தவர்கள் வரதட்சணை வாங்கலாமா / கொடுக்கலாமா .....?
Permalink  
 


கிறிஸ்தவர்கள் வரதட்சணை வாங்கலாமா / கொடுக்கலாமா .....?

இந்த பதிவை படிக்கும் அனைவரும் தங்களுடைய மேலான கருத்தை தெரிவித்தால் இது அநேகருக்கு மிகவும் ப்ரோயோஜனமாய் இருக்கும்.

இன்றைய சூழ்நிலையை பார்க்கும்போது அனேக சகோதரிகளுக்கு திருமணம் செய்யமுடியாமல் இருபதற்கு இதுவே மிக பெரிய காரணமாய் இருக்கிறது.

இன்றைக்கு மிக சாதரணமாக 10 சவரம் நகையும் ஒரு பெரிய Byke வரதட்சணை கொடுக்க வேண்டிய சூழல் இருக்கிறது.

இன்றைக்கு சுமாராக 1 சவரம் 21000 ஒரு byke 80 ,000 ,௦௦௦௦௦ ரூபாயும் இருக்கிறது.

ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்த பெண்ணுக்கு இப்படிப்பட்ட சூழ்நிலையில் திருமணம் செய்யா முடியமால் அநேகர் தவிப்பதை கேள்விப்பட்டு இருக்கிறேன். .

அநேகர் நகை வாங்காமல் பணமாய் கொடுதுடுங்கனு சொல்றாங்க. பெண்கள் நகை அணியாமல் இருந்தால் நகையை விரும்புவதையும் விட்டுவிட்டால் விலை வாசி குறையும் அல்லவா.....!

பெண்கள் நகை விரும்புவதினால் தானே விலைவாசி ஏறிக்கொண்டே போகிறது.... அதை ஒருபொருட்டகா மதிக்காமல் விட்டால் எப்படி இருக்கும்.......!

வேதத்திலே கடைசி நாட்களில் பொன்னையும், வெள்ளியையும் சீ சொல்லி வீதியிலே எரிந்து விடுவார்கள் என்று சொல்ல பட்டு இருக்கிறது.

இப்போதே அவைகளை மீதுள்ள ஆசைகளை விட்டுவிட்டால் நமக்கு தேவன் நாம் நடக்கும் தெருவையே தங்கமாக மாற்றி தரபோகிறாரே...!

நம்மால் எல்லாருக்கும் சொல்ல முடியாவிட்டாலும் நாம் இதை செய்யாலாமே.....



-- Edited by Stephen on Friday 2nd of September 2011 02:04:05 PM

__________________

கற்பனையைக் கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும் அறியான். (பிரசங்கி 8 :5 ) 


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
RE: கிறிஸ்தவர்கள் வரதட்சணை வாங்கலாமா / கொடுக்கலாமா .....?
Permalink  
 


Stephen wrote:

கிறிஸ்தவர்கள் வரதட்சணை வாங்கலாமா / கொடுக்கலாமா .....?

இந்த பதிவை படிக்கும் அனைவரும் தங்களுடைய மேலான கருத்தை தெரிவித்தால் இது அநேகருக்கு மிகவும் ப்ரோயோஜனமாய் இருக்கும்.

 


 மணமாகும்  பெண்களுக்கு பொருள்/ பணம்/ ஆபரணங்கள்/ அடிமைகள்/ நிலங்கள்/ஊர்கள் போன்றவற்றை  தகப்பன் வீட்டில் இருந்து சீதனம் கொடுப்பது என்பது பூர்வ   காலத்தில் இருந்தே  இருந்திருக்கிறது என்பதை விவிலியத்தின் மூலம் அறியமுடிகிறது.

 
I இராஜாக்கள் 9:16 எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் புறப்பட்டுவந்து, அந்தக் கேசேர்பட்டணத்தைப் பிடித்து, அதை அக்கினியால் சுட்டெரித்து, அதிலே குடியிருந்த கானானியரைக் கொன்றுபோட்டு, அதைச் சாலொமோனின் மனைவியாகிய தன் குமாரத்திக்குச் சீதனமாகக் கொடுத்திருந்தான்.
 
ஆனால் ஆபிரஹாம் சந்ததியில் ரெபாக்காள் விஷயத்தில் ஈசாக்குக்கு கொள்ளப்போகும் பெண்ணுக்கும் அவர் வீடாருகும்
சீதனம்கொடுத்ததை வசனத்தில் காணமுடிகிறது
 
ஆதியாகமம் 24:53. பின்பு அந்த ஊழியக்காரன் வெள்ளியுடைமைகளையும், பொன்னுடைமைகளையும், வஸ்திரங்களையும் எடுத்து, ரெபெக்காளுக்குக் கொடுத்ததுமன்றி, அவளுடைய சகோதரனுக்கும் தாய்க்கும் சில உச்சிதங்களையும் கொடுத்தான்.
 
வசதி படைத்தவர்கள் "மகள் போகும் இடத்தில் நன்றாக இருக்கட்டும்" என்று எண்ணி தியாகமாக எண்ணி கொடுத்த வெகுமதிகள் இன்று தராதரம் பார்க்காமல் கட்டாயப்படுத்தி,  தராவிட்டாலும் கேட்டு பிடுங்கும் நிலைக்கு வந்து வரதட்சணை என்ற பெயரில் பகல் கொள்ளையாக மாறியுள்ளது. 
 
வரதட்சணை வாங்குவதும் கொடுப்பதும் குற்றம் என்று சட்டம் இருப்பதால். இதுபோன்று வெகுமதிகளை கேட்டு வாங்கும் எவருமே சட்டத்துக்கு முன்னால் குற்றவாளியாகின்றனர். 
 
வசனமானது மேலான அதிகாரங்களுக்கு கீழ்படிய சொல்வதால்.  
 
ரோமர் 13:1 எந்த மனுஷனும் மேலான அதிகாரமுள்ளவர்களுக்குக் கீழ்ப்படியக்கடவன்; ஏனென்றால், தேவனாலேயன்றி ஒரு அதிகாரமுமில்லை; உண்டாயிருக்கிற அதிகாரங்கள் தேவனாலே நியமிக்கப்பட்டிருக்கிறது.
 
மேலான அதிகாரங்களால் இயற்றபட்ட சட்டத்துக்கு முன்னால் குற்றவாளி என்றால் வேத வசனத்துக்கு முன்னும் அவர் குற்றவாழியே! 
  
அனேக அபலை பெண்களின் வாழக்கையில் அதிகமாக விளையாடும் இந்த வரத்ட்சனை பற்றி இன்னும் கருத்துக்களை எதிர்பார்க்கிறோம்.  
 


__________________


நமது நண்பர்

Status: Offline
Posts: 146
Date:
கிறிஸ்தவர்கள் வரதட்சணை வாங்கலாமா / கொடுக்கலாமா .....?
Permalink  
 


கிறிஸ்தவர்கள் வரதட்சணை வாங்கலாமா / கொடுக்கலாமா .....?

கிறிஸ்தவ சகோதரன் ஒரு கிறிஸ்தவ பெண்ணைத்தான் திருமணம் செய்வார்கள் அப்படியிருக்க

ஒருவருக்கொருவர் தேவ அன்பின் நிமித்தம் ஏன் தியாக மனப்பான்மையோடு ஏற்று கொள்ளகூடாது.

உண்மையான  தேவ அன்பு இருக்குமாயின் ஒவ்வொரும் இதை சிந்திக்க வேண்டும்.
 
ஒருவேளை தாங்கள் நல்ல வசதியுள்ளவர்களாய்  இருந்தால் தங்களுடைய பெண்ணுக்கு அவர்களுடைய விருப்படி தாரளமாக கொடுக்கலாம்.
 
ஆனால் இன்றை நிலைமையோ அப்படியில்லை. 10  சவரம் போடுங்க 20  சவரம் போடுங்க என்று பிடுங்கி கொண்டிருக்கிறார்கள்.
 
இதனால் எத்தனையோ சகோதிரிகளுக்கு திருமண வயதை கடந்தும் தீர்மானம் செய்யா 
முடியாமல் அனேக பெற்றோர் தவித்து கொண்டிருப்பதை பார்த்து 
மிகவும் கவலையாக இருக்கிறது.
 
நாம் மற்றவர்களுக்கு உதவி செய்வேண்டும் , மற்றவர்களை நேசிக்க வேண்டும்,
 தேவ அன்பை வெளிபடுத்த வேண்டும் என்று வெறும் வாயின் வார்த்தையோடு மட்டுமே பேசிகொண்டிருந்தால் 
இது கர்த்தருக்கு பிரியாமாய் இருக்குமோ....
 
முடியாதவர்களுக்கு நம்மால் முடிந்த அளவிற்கு ஏதாகிலும் செய்வதல்லவா..!  தேவ அன்பு...!
 
இன்றைக்கு அநேகர்  வாய்கிழிய பேசுகிறார்கள் ஆனால் செயலிலோ ஒன்றும் இல்லை.
 
இன்னும் ஒருசிலர் நீங்கள் செய்வதை செய்யுங்கள் என்று சொல்லிவிட்டு பின்னாடி போய் தங்கள் இஷ்டத்துக்கு பேசுகிறார்கள்.
இதனாலையே எங்கயாவது கடன் வாங்கியாவது எப்பேர் பாடுபட்டாவது செய்கிறார்கள்.
 
ஏன் இந்த அவலநிலை...!
 
இந்த சமுதாயத்தில் தேவ அன்பை இப்படி வெளிபடுத்தினால் இது அநேகருக்கு முன்பாக ஆச்சர்யமாய் இருக்குமல்லவா..!
 
கிறிஸ்தவத்தின் சாராம்சம்தான் என்ன......! அன்புதானே.... வேறே எதாகிலும் உண்டோ...!
 
உன்னைப்போல் பிறரை நேசி என்று நம் ஆண்டவர் சொல்லவில்லையா.. பிறரை நேசிக்கிறேன் என்று சொல்லிவிட்டு வரதட்சணை என்ற பெயரில் எத்தனையோ உயிரை 
 பலி வாங்கி கொண்டு இருக்கிறோம்.  


-- Edited by Stephen on Wednesday 7th of September 2011 02:29:05 PM

__________________

கற்பனையைக் கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும் அறியான். (பிரசங்கி 8 :5 ) 


வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
Permalink  
 

ஸ்டீபன் wrote
____________________________________________________________________
இன்றைக்கு அநேகர்  வாய்கிழிய பேசுகிறார்கள் ஆனால் செயலிலோ ஒன்றும் இல்லை.
 
இன்னும் ஒருசிலர் நீங்கள் செய்வதை செய்யுங்கள் என்று சொல்லிவிட்டு பின்னாடி போய் தங்கள் இஷ்டத்துக்கு பேசுகிறார்கள்.
இதனாலையே எங்கயாவது கடன் வாங்கியாவது எப்பேர் பாடுபட்டாவது செய்கிறார்கள்.
 
ஏன் இந்த அவலநிலை...!
 
இந்த சமுதாயத்தில் தேவ அன்பை இப்படி வெளிபடுத்தினால் இது அநேகருக்கு முன்பாக ஆச்சர்யமாய் இருக்குமல்லவா..!
 
கிறிஸ்தவத்தின் சாராம்சம்தான் என்ன......! அன்புதானே.... வேறே எதாகிலும் உண்டோ...!
__________________________________________________________________
 
 
சகோதரர் அவர்களே
 
பணம் பொருள் என்னும் போதையில் மயங்காதவன் எவனும் கிடையாது
இந்த பூமியில் உள்ள மனிதர்கள் எல்லாம் இந்த போதையில் தான் மாட்டி கொண்டு இருக்கிறார்கள்
 
 
தேவன் மேல் அன்பாய் இருப்பது என்பது  ஒன்று
தேவனுக்கு பயபடுவது என்பது ஒன்று
 
அதனால் தான் வேதத்தில் அவன் கர்த்தருக்கு பயந்து நடந்தான் என்று
(ராஜாக்களை குறித்து அனேக முறை சொல்லி இருக்கும் ) ஏனென்றால் கர்த்தருக்கு பயபடுகிரவர்கள் மட்டுமே அவர் கட்டளைக்கு கீழ்படிய முடியும்
 
தீமையை  விட்டு விலகுவதே கர்த்தருக்கு பயப்படும் பயம் என்று வேதம்
தெளிவாக சொல்கிறது
 
கர்த்தருக்கு பயபடுகிரவர்கள் அவருடைய கட்டளையை கை கொள்வார்கள் என்றும் 
வேதம் சொல்கின்றது 
 
 
நீங்கள் சொல்கிறபடி இத்தனை சவரம் போடுங்கள் பணம் கொடுங்கள் என்று 
சொல்லும் கிறிஸ்தவம் கூட்டம் அனைவரும் 
தேவன் மேல் அன்பு உள்ளது என்று சொல்லிக் கொண்டு தேவனுக்கு 
பயபடாதவர்களாய் இருக்கின்றார்கள்  
 
இந்த கிறிஸ்தவ கூட்டம் எப்பொழுது கர்த்தருக்கு 
பயபடுகிறதோ அப்பொழுதே அவர்களுக்குள் இருக்கிற தீமையான் செயலையும் குணத்தையும் தூக்கி எரிந்து விடுவார்கள்
 
 
கர்த்தருக்கு பயந்தவர்கள் சகலத்தையும் அறிவார்கள் என்று வசனம் சொல்லி இருக்க அவர்களுக்குள் இருக்கும் குனங்களையும் நிச்சயம் அறிவார்கள்
 
 
தெய்வ பயம் இல்லாதவர்கள் இப்படிதான் செய்வார்கள் அவர்களுக்கு நாம் என்ன சொன்னாலும் எடுபடாது என்பது என் கருத்து..........


-- Edited by EDWIN SUDHAKAR on Wednesday 7th of September 2011 06:45:26 PM

__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
RE: கிறிஸ்தவர்கள் வரதட்சணை வாங்கலாமா / கொடுக்கலாமா .....?
Permalink  
 


வரதட்சணை குறித்த இந்த திரியில் சகோதரர்களின் கருத்துக்கள் அருமை. சகோதரர் ஸ்டீபன்  அவர்களின்  ஆதங்கமும் அக்கரையும் கேள்விகளும் எல்லோருக்கும் ஒரு விழிப்புணர்வை ஏற்ப்படுத்தவேண்டும் என்று வாஞ்சிக்கிறேன். 
 
நான் இதுவரை பார்த்தவரை  எந்த ஒரு பெரிய ஊழியக்காரரும் ஒரு சாதாரண விசுவாசியாகிய பெண்ணை மணந்ததாககூட அறியமுடியவில்லை.  எல்லோருமே தாங்கள் நிலைக்கு பலபடிகள் மேலேயுள்ள பையனையும் பெண்ணையுமே தேடுகின்றனர்.  உலகத்தார் எதிர்பார்க்கும் அந்தஸ்த்தைவிட ஒருபடி மேலேயான அந்தஸ்த்தை தேடுகின்றனர். இவர்களில் யாரையும் நம்மால் திருந்த்த முடியாது என்பது  நிதர்சனம். எனவே நம்போன்ற சாதாரண விசுவாசிகளாவது  சற்று தேவனின் வார்த்தைகளை கருத்தில் கொண்டு காரியங்களை நடப்பிப்பது நல்லது.  
 
வரதட்சணை என்ற பெயரில் திருமணத்தின்போது நகை/பணம்/பொருள் இவைகளை கட்டாயப்படுத்தி வாங்குவது ஒரு தவறான செயல் என்பதை யாரும்
மறுக்க முடியாது. இவ்வித காரியங்களை செய்யும் கிறிஸ்த்தவர்கள் நிச்சயம் தேவனின் பார்வையில் பிறர் பணத்தை கொள்ளையடிக்க துணியும் கொள்ளையர்களே என்பதே எனது கருத்து. அதே நேரத்தில் இந்த காரியங்களின் மறுபக்கத்தை சற்று ஆராய்ந்தால் தன்னுடய மகள் நன்றாக வாழவேண்டும் என்ற எண்ணத்தில் தகுதிக்கு மீறிய இடத்தில் மணமகனை தேடும் பல பெற்றோர்களும் கூட வரதட்சணை என்ற நோய் வளர்வதற்கு ஒரு காரணமாக இருப்பதை ஏற்றே ஆகவேண்டும்.
 
"யாராலும் யாரையும் வாழவோ தாளவோ வைத்துவிட முடியாது தேவன் ஒருவரே ஒவ்வொருவருடைய எதிர்கால வாழ்வையும்  தீர்மானிக்கிறவர்" என்ற உண்மையை சரியாக அறிந்துகொண்டால் இந்த காரியத்திலிருந்து நாம் சுலபமாக விடுபட்டு விடலாம்.
 
எரேமியா 17:10 கர்த்தராகிய நானே ஒவ்வொருவனுக்கும், அவனவன் வழிகளுக்கும் செய்கைகளின் பலன்களுக்கும் தக்கதைக் கொடுக்கும் படிக்கு, இருதயத்தை ஆராய்கிறவரும் உள்ளிந்திரியங்களைச் சோதித்தறிகிறவருமாயிருக்கிறேன்.
அவனவன் வழிக்கு தகுந்த பலனே அவனவனுக்கு நிச்சயம் கிடைக்கும்.
வசதியுள்ள இடத்தில் வாழபோய் வாழாவெட்டியானவர்களும் உண்டு ஒன்று மில்லாத குடுபத்துக்கு வாக்கபட்டுபோய் கொடீஸ்வரரானவர்களும் உண்டு.  இதை நிர்ணயிப்பது மனிதனால் கூடாது. தேவனாலேயே கூடும்.  தேவன் தன்னை நம்பிய
யாரையும் கைவிடுவதில்லை! ஆனால் நாம் நம்முடய சுய பெலத்தின் அடிப்படையில் மிகப்பெரிய வரனயோ அல்லது மிக அழகான பெண்ணையோ தேட முயன்றால் தேவன் உங்களை உங்கள் பாதையிலேயே விட்டுவிடுவார்.  பின்னர் அதனால் வரும் பின்விளைவுகளையும் நாமே சுமக்கவேண்டும். இந்த உலகின் ஐஸ்வர்யமும் அந்தஸ்த்தும் என்றுமே மனுஷனின் நித்திய வாழ்வுக்கு கேட்டைத்தான் விளைவிக்கும் என்ற உண்மையை முதலில் உணரவேண்டும்
 
 
 
தேவனை முழுமையாக நம்பி பொறுமையோடு இருப்போமானால் அவர் நிச்சயம் சரியானதொரு வாழ்வை சரியான நேரத்தில் அமைத்து கொடுப்பார். ஆனால் இங்கு
அநேகர் வெகுவிரைவில் பொறுமை இழந்துவிடுவதே  இங்கு  பிரச்சனைக்கு காரணமாகிறது. மிக முக்கியமாக அநேகருக்கு "தேவன்பேரில் முழு நம்பிக்கை  இல்லை" என்பதை நான் கண்கூடாக அறிந்துள்ளேன். மிகப்பெரிய விசுவாசிகள் கூட  சில உலக காரியங்களை குறிப்பிட்டு "இவைகளை எல்லாம் நாம்தான் முயற்சி எடுத்து  செய்யவேண்டும், தேவன் இதில் தலையிடமாடார்" என்பதுபோல் பேசுகின்றனர்.  இதை எல்லாம் கேட்பதற்கு எனக்கு சிரிப்புதான் வருகிறது. தேவனின் சித்தம்  இல்லாமல் தேவபிள்ளைகள் வாழ்வில் எந்த ஒரு அணுவும் கூட அசையாது. 
 
ஏசாயா 44:24  நானே எல்லாவற்றையும் செய்கிற கர்த்தர் .
 
சிறிய காரியமானாலும் பெரிய காரியமானாலும் தேவனே எல்லாவற்றையும் செய்கிறவர் என்ற உண்மையை நாம் அறியவேண்டும்.       
 
இங்கு கிறஸ்தவர்களுக்கு வரதட்சணை பற்றிய என்னுடைய சுருக்கமான கருத்து என்னவெனில்!
 
மணமகனானவிருக்கும்  சகோதரனுக்கு:
இவ்வளவு பணமோ பொருளோ வேண்டும் என்று கட்டாயப்படுத்தி வசூலிப்பது  எவ்விதத்தியும் தேவனுக்கு நிச்சயம் பிடிக்காது. ஆகினும்  உங்கள் உள்எண்ணம்
எப்படியாகிலும் பணம் வசூலிப்பதாக இருந்தால், உங்கள விருப்பத்தை  நிறைவேற்றும் அளவுக்கு வசதிபடத்தவர்களைதவிர மற்ற இடங்களில் பெண்ணை பார்க்க துணியாதீர்கள். நல்ல பெண்ணாக இருக்கிறது என்று வசதி குறைந்த வீட்டில் பெண்ணை பார்த்து இவ்வளவு கொடு அவ்வளவுகோடு என்று வற்ப்புருத்தாதீர்கள். தேவன் ஏதாவது ஒரு வெகுமதியைதான் தருவார்! நல்ல வசதியை எதிர்பார்த்தால் அங்கு குணம் மோசமாக இருக்கலாம் அல்லது அழகில்லாமல் இருக்கலாம் அல்லது ஏதாவது ஒரு குறை இருக்கலாம்.  நல்ல குணத்தை  எதிர்பாத்தால் அங்கு பணமோ அழகோ இல்லாமல் இருக்கலாம். உங்களுக்கு எது முக்கியம் என்பதை நன்றாக தீர்மானித்து பின்னர் அதற்க்கு ஏற்றாற்போல் பெண்ணை தேடுங்கள். கண்ட இடத்தில் போய் பெண்ணை பார்த்து 
வரதட்சணை கேட்டு பின்னர் வேண்டாம் என்று சொல்லி எல்லோரையும் வேதனை படுத்தாதீர்கள். நீங்கள் ஆணாக பிறந்த காரணத்தினால் அகம்பாகம்கொண்டு அடுத்தவருக்கு  உருவாக்கிவைத்த வேதனைகள் எங்கும் போய்விடாது உரெல்லாம்
சுற்றினாலும் ஓர்நாளில்  திருபவும்  உங்களையே தேடிவரும் என்பதை மறக்கவேண்டாம்.    
   
அமைக்கபோகும் புதிய திருமண வாழ்வில் நீங்கள் எப்படி 50௦% பொறுப்போ அது போலவே உங்கள் வாழ்க்கை துணையும் பொறுப்பு. எனவே ஒருவர் வீட்டில்இருந்து
பிடுங்கி வரப்பட்ட பணம் பொருள்கள் போன்றவற்றை கொண்டு சொகுசு வாழ்க்கை வாழ ஆசைப்படாமல். அவரவர் உழைத்து சம்பாதித்த பணத்தில் உங்கள் வாழ்க்கைக்கு தேவையான பொருட்களை நீங்களே வாங்கி வாழ்க்கையை துவங்குங்கள். அப்பொழுதுதான் பொருட்களின் மதிப்பும் தெரியும் அதுவே உங்கள் புதிய திருமண வாழ்க்கைக்கு  ஆசீர்வாதமுள்ளதாகவும் அமையும்!    
 
மணமாகவிருக்கும் சகோதரிமார்களுக்கு:
திருமணமாகாத சகோதரிமார்கள் நமக்கு திருமணமே ஆகாமல் போய்விடோமோ  என்றோ  அப்படி கணவன் கிடைப்பானா  இப்படி கணவன் கிடைப்பானா  என்று சற்றும் பயப்பட்டாமல், தேவனை உங்கள் தகப்பனாக பாவித்து உங்கள் மன விருப்பங்களை அவரிடம் மாத்திரம் தெரிவித்து நம்பிக்கையோடு இருங்கள். அவர் நிச்சயம் உங்கள் இருதய சிந்தனைகளை அறிந்து நிறைவேற்றுவர். உங்கள் இருதய சிந்தனைகளே உங்களுக்கு சரியான வரனை கொண்டுவரும் அடிப்படை காரணியாகும். கேடான சிந்திகளும் கேடான எண்ணமும் உள்ளவர்களுக்கு அதற்க்கு ஏற்ற பெண்/பிள்ளையே கிடைக்கும். இருதயத்திலும் மாம்சத்திலும்  தன் பரிசுத்தத்தை காத்து நடக்கும் ஒரு சகோதரிககு தேவன் கொடுக்கும் கணவனானவன் எங்கும் தேடினாலும் கிடைக்காத ஒரு பெரிய பொக்கிஷமாகவே  இருப்பான்.   எனவே உங்கள் பரிசுத்தத்தின் நிலையானது சோதிக்கபடும்போது அதில் தேவனை சார்ந்துகொண்டு பரிசுத்தத்தை காத்துகொள்வது அவசியம். மிக முக்கியமாக உங்கள் தாய் தகப்பனுக்கு கீழ்படிந்து உங்களை அலங்கரியுங்கள். ரூத்தின் சரித்திரத்தை அறிவோம். அவளின் அதிசயமான கீழ்படிதலே அவளுக்கு அபூர்வமான ஒரு வாழ்க்கையை மீண்டும் அமைத்துகொடுத்தது எனவே எந்நிலையிலும் கீழபடிதலை கற்றுக்கொள்ளுங்கள். ஆண்டவர் நம்முடய ஒவ்வொரு செய்கையும் கவனிக்கிறார் என்பதை அறிந்து செயல்படுங்கள்.        
 
மணமக்களின் தாய் தகப்பன்மார்களுக்கு:
தாய் தகப்பன்மார்களை பொறுத்தவரை உங்கள் வீட்டில் இருக்கும் பெண்களை ஒரு பாரமாக எண்ணாதீர்கள். தேவனை முழுவதும்  நம்புங்கள். பிள்ளைகளை கர்த்தருடைய கரத்தில் ஒப்புகொடுத்து ஜெபியுங்கள். அவர்கள் உங்கள் பிள்ளை என்பதைவிட தேவனால் உங்களுக்கு கொடுக்கப்பட்ட ஈவு. எனவே உங்கள் பொறுப்பை தேவனுக்கு அந்த பிள்ளைகள்மீது பொறுப்பு அதிகம். அவர் நிச்சயம் ஏற்றவேளையில் அனைத்தையும் வாய்க்கசெய்வார். எந்த ஒரு காரியமும் காரணமில்லாமல் இந்த உலகில்  நடக்கவில்லை. உங்கள் மகளோ மகனோ  எவ்வளவுநாள் உங்களுடன் இருக்கவேண்டும் என்று தேவன் தீர்மாநித்துளாரோ அவ்வளவுநாள் உங்களுடன்தான் இருப்பார்கள். அந்த நாட்கள் கணக்கு முடியும்போது ஆட்டமேட்டிககாக அவர்கள் உங்களை விட்டு தாங்கள் வாழ்வை அமைக்க கடதுபோவார்கள். நாம் அவசரபட்டு அனுப்ப முயன்றால் போன வேகத்தில் திரும்பி உங்கள் வீட்டில் வந்து நிற்ப்பார்கள் என்பதை மறக்க வேண்டாம்.
 
சகோ. ஸ்டீபன் அவர்கள் எழுதியதுபோல் ஒவ்வொரு கிறிஸ்தவரும் "தான் கிறிஸ்த்தவன்" என்பதை வெறும் வாய்வார்த்தையிலும், பைபிளை தூக்கிக்கொண்டு அலைவதிலும், சபைக்கு ஓடுவதிலும்  காட்டுவதைவிட உங்கள் அன்றாட வாழ்க்கையில் செயலில் காட்டுங்கள். எல்லோருக்கும் ஒரு முன்மாதிரியான வாழ்வை வாழ்ந்து காட்டுங்கள். திருமணத்தின் போது பெண் வீட்டால் எவ்வளவு செலவு செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களோ அதில் சரிபாதி செலவை நீங்களும் ஏற்றுக்கொள்ளுங்கள். அடுத்தவரிடம் 5 காசுகூட ஓசியில் வாங்குவதை விரும்பாதீர்கள். ஓசியில் வந்தபணமோ பொருளோ ஒருநாளும் நிலைக்காது!   
       
இன்னும் இந்த கருத்து குறித்து அநேகம் எழுத வாஞ்சயுண்டு ஆகினும் நேரமின்மையால் இத்துடன்  முடிக்கிறேன்.
 
கர்த்தருக்கு சித்தமானால் இந்த திரியின் தலைப்போடு சம்பந்தமுள்ள என்னுடய திருமணத்தில் நடந்த உண்மை சம்பவங்களை விரைவில் பதிவிடுகிறேன். சகோதரர்கள் விரும்பினால் தங்களுக்கு தெரிந்த நல்ல சாட்சியுள்ள அல்லது எல்லோருக்கும் எச்சரிப்பை தரக்கூடிய திருமண சம்பவங்களை இங்கு பதிவிடலாம்.   
 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



நமது நண்பர்

Status: Offline
Posts: 146
Date:
கிறிஸ்தவர்கள் வரதட்சணை வாங்கலாமா / கொடுக்கலாமா .....?
Permalink  
 


சகோ : சுந்தர் அவர்கள் எழுதிய அணைத்து காரியங்களும் என் இருதயத்தில் உள்ள காரியங்களே.

நான் நினைத்ததை மிக அழகாக சரியாக எழுதி இருக்கிறிர்கள் தங்களுக்கு நன்றி.

உங்களை எழுத வாய்த்த தேவனுக்கு கோடாகூடி நன்றி.



-- Edited by Stephen on Thursday 8th of September 2011 12:55:56 PM

__________________

கற்பனையைக் கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும் அறியான். (பிரசங்கி 8 :5 ) 
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard