அதாவது தேவ ஆவியின் பெலத்தால் தேவனுக்கு எல்லா காரியங்களிலும் கீழ்ப்படிந்து தன்னுள் இருக்கும் சந்துருவை ஒரு மனுஷன் வெளியே விரடட வேண்டும் அதற்க்கு அத்தோடு அவன் மீண்டும் அவனுக்குள் வந்து தங்கமுடியாத ஒரு நிலை உருவாக்கப்பட வேண்டும். அதன்பின் சாத்தானுக்கு மனுஷன் மேல் அதிகாரம் இருக்காது. அதன் பின்னரே அவனை பாதாளத்தில் அடைக்க முடியும்.
கீழ்படியாமையில் இழந்துபோனதை கீழ்ப்படிதல் மூலமே செய்து முடிக்க முடியும்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
சரி அண்ணா ஆனால் உலகம் தோன்ற முதலே ஆண்டவராகிய இயேசுவின் மரணம் நியமிக்கப்பட்டிருக்குமாயின் தேவன் இயேசுவை சிலுவையில் பலியாக்க முன் குறித்திருந்தார் அப்படி இருக்கையில் அதை மனுஷன் பாவம் செய்வதன் மூலம் தான் சத்துருவை அழிக்கும் திட்டத்தை நிறைவேற்ற முடியுமா? மனுஷன் பாவம் செய்த பின் பாவ நிவாரணபலியாக இயேசு மரித்தால் மட்டுமே அவனை அழிக்க முடியும்?
இதற்கான பதிலையும் ஆதியில் இருந்து நடந்தது என்னவென்பதையும் நீங்கள் அறிய வேண்டும் என்றால் முதலில் ஆதியாகமம் ஒன்றாம் அதிகாரத்தில் உள்ள படைப்புக்கும் ஆதியாகமம் இரண்டாம் அதிகாரத்தில் உள்ள படைப்பும் இடையில்
அதை படித்து, முதல் படைப்பு வேறு இரண்டாம் படைப்பு வேறு என்பதை நீங்கள் ஏற்க வேண்டும்
அநேகர் இதை ஏற்காமல் வேறு எதாவது காரணம் சொல்கின்றனர் பின்னர் அவர்கள் கருத்தில் நான் கேள்வி கேடடால் அது தெரியாது தேவனிடம்தான் கேட்க்கவேணும் என்று சொல்கிறார்கள்.
ஓன்று யாருக்காவது முழுமை தெரிந்தால் எனக்கு சொல்லி தாருங்கள் இல்லை என்றால் நான் தேவனிடம் கேட்டு சொல்வதை ஏற்றுக்கொள்ளுங்கள் என்றுதான் நான் எல்லோருக்கும் சொல்கிறேன்.
ஆனால் யாரும் கேட்க்க மனதில்லாமல் போய்விடுகிறார்கள்.
நான் மேலே வேத வசன அடிப்படையில் சொல்லியுள்ள அந்த இரு வேறு படைப்புகளை அலசி ஆராய்ந்து நம்ப முடிந்தது என்றால்
பின்னர் வாருங்கள் மற்றதை பார்க்கலாம்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)