இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஊழியர்களுக்கும் போதகர்களுக்கும் ஒரு சிறு வேண்டுகோள்


வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
ஊழியர்களுக்கும் போதகர்களுக்கும் ஒரு சிறு வேண்டுகோள்
Permalink  
 


நீங்கள் நடத்தும் ஒவ்வொரு  கூட்டத்திலும் அல்லது  ஞாயிறு  ஆராதனையிலும்  
கடைசியாக ஆராதனையை  முடிக்கும் முன் என் ஆத்துமாவே கர்த்தரையே    ஸ்தோத்தரி  என்று சொல்வதற்கு முன்பு
 
 
போதகர்கள் மற்றும் சபை மக்கள் அனைவரும் சேர்ந்து
 
 
(1 ) தேவனே பூமியை குறித்து உம்முடைய சித்தம் எதுவோ அது நிறைவேறுவதாக
 
 
 
(2 ) தேவனே மனிதர்களை  குறித்து உம்முடைய சித்தம் எதுவே அது நிறைவேறுவதாக
 
 
 
(3 ) தேவனே  என்னை குறித்தும் என் சபையை குறித்தும் உம்முடைய சித்தம் எதுவோ அது நிறைவேறுவதாக என்று சொல்லி
 
 
அதன் பின்....
 
 
என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி என் முழு உள்ளமே அவருடைய பரிசுத்த நாமத்தை ஸ்தோத்தரி  என்று சொல்லுமாறு கேட்டு கொள்கிறேன்
 
 
சபை மக்கள் அனைவரும் சேர்ந்து இதை  ஒரு அறிக்கையாக வாசிக்க வேண்டும் என்று அதாவது போதகர் சொல்ல அதை அனைவரும் அப்படியே சொல்ல வேண்டும் என்றும்
 
சபைகளை நடத்தும் கூட்டங்களை நடத்தும் தேவனுடைய ஊழியர்களாகிய  
நீங்கள்  இந்த அறிக்கையை ஒவ்வொரு ஆராதனை முடிவிலும் சொல்லுமாறு தாழ்மையோடு கேட்டுகொள்கிறேன்
 
 ஏனென்றால்
 
 
தேவனின் சித்தத்தில் தான் எல்லா நன்மையான காரியமும் இருக்கிறது

இந்த உலகத்தின் மொத்த மீட்பும்  இருக்கிறது

ஆமென்....


-- Edited by EDWIN SUDHAKAR on Tuesday 6th of September 2011 04:02:07 PM

__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)



நமது நண்பர்

Status: Offline
Posts: 146
Date:
Permalink  
 

மிகவும் கனத்திற்குரிய  மேய்பரே./ ஊழியரே./ போதகரே. etc ....

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் உங்களுக்கு வாழ்த்துக்கள்.

இந்த உலகத்தில் உள்ள எந்த வேலையையும்விட நீங்கள்தான் உயர்வான வேலையை செய்கிறவர்கள் என்பதை எப்போதும்
மறந்து விடவேண்டாம்.

தேவ அன்பின் நிமித்தம் ஒருசில காரியங்களை தங்களுக்கு சொல்லி கொள்ளும்படி விரும்புகிறேன்.

நீங்கள் போதனையினால் அல்ல உங்கள் நடக்கையினால் ஜனங்களை திருப்புங்கள்.

சபையில் உள்ள ஒவ்வொருவரும் தங்களுடைய நடக்கையை கவனித்து பார்கிறார்கள்...

நீங்கள் போதிக்கும் எந்த ஒரு காரியத்தையும் முதலாவது செய்து காட்டுங்கள் அன்பா... இருந்தாலும் சரி....! கொடுக்கிற காரியமாய் இருந்தாலும் சரி....

இன்றைக்கு போதிப்பது வேறு நடப்பது வேறு என்று அநேகர் வாழ்வதை காணமுடிகிறது...

நீங்கள் உங்கள் சபைக்கு கிறிஸ்துவை முன்வைத்து நீங்கள் நடங்கள் அப்போது உங்கள் சபையில் உள்ள அணைத்து ஜனங்களும் உங்களுடைய நடக்கையை பின்பற்றுவார்கள்.

நீங்கள் அவர்களுக்கு முன்மாதிரி உங்களுக்கு கிறிஸ்துவே முன்மாதிரி.

நீங்கள்தான் தலை என்று நினைத்து தங்கள் இஷ்டம்போல் வாழ்வதை விட்டு உங்களுக்கு கிறிஸ்துவினால் கொடுக்கப்பட்ட ஆத்துமாக்களுக்காக
வாழ முயற்சி செய்யுங்கள்.

உங்களை வேண்டி கேட்டுக்கொள்கிறேன் உங்கள் சபைக்காகவும் உங்களுக்காக கொடுக்கப்பட்ட ஆத்துமாக்களுக்காக தேவ சித்தத்தை செய்யுங்கள்.

மற்ற சபையோடு ஒப்பிட்டு குறை சொல்லி உங்கள் தனித்தன்மையை இழந்துவிடாதீர்கள்.

உங்களிடத்தில் கொடுக்கபட்டவைகாளுக்காதான் உங்களிடம் விசாரிக்கப்படும் என்பதை கவனத்தில் கொண்டு செயல்பட்டால்
உங்கள் ஊழியம் அருமையான தேவனுக்கு சுகந்த வாசனையாய் இருக்கும்.

தேவன்தாமே இதை வாசிக்கிற அனைவரையும் ஆசிர்வதிப்பாரகா...



-- Edited by Stephen on Wednesday 7th of September 2011 03:05:55 PM

__________________

கற்பனையைக் கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும் அறியான். (பிரசங்கி 8 :5 ) 


வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
Permalink  
 

எலிசாவின் வேலைக்காரனான கேயாசியின் மூலமும் எலிசாவின் மூலம் நாம் சில ஆலோசனையை பார்க்கலாம்
 
 
 
11  இராஜாக்கள் : 5
 
20. தேவனுடைய மனுஷனாகிய எலிசாவின் வேலைக்காரன் கேயாசி என்பவன்
 
 
 
கேயாசியின் பெயர் வேதத்தில் அதிகமாக வருவதால் இவனும் எலிசாவுக்கு பின் அடுத்த ஸ்தானத்தில் இருந்து  இருப்பான்  என்று நினைக்கின்றேன்
ஆனால் இவன் செய்த ஒரே ஒரு காரியத்தின் நிமித்தம் ஒரு மேன்மையான தகுதியை இழந்துபோனான்
 
 
 
11  இராஜாக்கள் : 5
22. அதற்கு அவன்: சுகசெய்திதான்; தீர்க்கதரிசிகளின் புத்திரரில் இரண்டு வாலிபர் இப்பொழுதுதான் எப்பிராயீம் மலைத்தேசத்திலிருந்து என்னிடத்தில் வந்தார்கள்; அவர்களுக்கு ஒரு தாலந்து வெள்ளியையும், இரண்டு மாற்றுவஸ்திரங்களையும் தரவேண்டும் என்று கேட்க, என் எஜமான் என்னை அனுப்பினார் என்றான்.
 
 
 
இந்த கேயாசி உலக பொருட்கள்  மேல் ஆசை பட்டு தன எஜமான்  வேண்டாம் என்று மறுத்ததை தன்னுடைய எஜமானின்  பெயரை சொல்லி துணிகரமாய் பொய் சொல்லி பொருட்களை  வாங்குகின்றான்
இந்த தவறை செய்த அவன் மேன்மையான தகுதியை மட்டும் இழந்து போகாமல் பெரிய சாபத்திற்கு ஆளாகின்றான்
 
 
 
11  இராஜாக்கள் : 5
27. ஆகையால் நாகமானின் குஷ்டரோகம் உன்னையும் உன் சந்ததியாரையும் என்றைக்கும் பிடித்திருக்கும் என்றான்; உடனே அவன் உறைந்த மழை நிறமான குஷ்டரோகியாகி, அவன் சமுகத்தை விட்டுப் புறப்பட்டுப் போனான்.


 
ஊழியர்களே போதகர்களே உங்களுக்கு தான் இந்த வார்த்தை:
 
 
 
என் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சொல்லியிருக்கின்றார் இலவசமாய் பெற்றீர்கள் இலவசமாய் கொடுங்கள் என்று
இந்த வார்த்தை எந்த ஊழியர்களின் கண்ணிலும் போதகர்களின் கண்ணிலும் பெரிதாக தெரியவில்லை
ஏனென்றால்   பணமும் பொருளும் கண்ணை மறைக்கின்றது
 
 
 
எலிசாவை பாருங்கள் அற்புதம் செய்தான் அதன் பின் என்ன நடக்கின்றது என்று அற்புதம் பெற்று கொண்ட நாகமான் தான் சுகத்தை பெற்றுகொண்டதின்னிமித்தம் எலிசாவுக்கு காணிக்கைகளை
கொடுக்கின்றான்
 
 
 
11  இராஜாக்கள் : 5
 
15 . இப்போதும் உமது அடியேன் கையில் ஒரு காணிக்கை வாங்கிக்கொள்ள வேண்டும் என்றான்.
 
 
 
தேவனுக்கு உண்மையானவன் சொல்லும் பதிலை பாருங்கள்
 
 
 
11  இராஜாக்கள் : 5
16. அதற்கு அவன்: நான் வாங்குகிறதில்லை என்று கர்த்தருக்கு முன்பாக அவருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்; வாங்கவேண்டும் என்று அவனை வருந்தினாலும் தட்டுதல் பண்ணிவிட்டான்.

 
 
பார்த்தீர்களா நாகமான் வருந்தினாலும் எலிசா தட்டுதல் பண்ணிவிட்டான் என்று வேதத்தில் எவ்வளவு தெளிவாக போட்ட இருக்கின்றது சிலர் சொல்லலாம் வாங்குவது வாங்காததும் அவர் அவர்களுடைய  விருப்பம் என்று ஆனால் எலிசா வாங்காததர்க்கு என்ன காரணம் என்று பார்த்தால் நாமெல்லோரும் தலைகுனிந்து தான் போகவேண்டும்
 
 
 
11  இராஜாக்கள் : 5

 
26 . பணத்தை வாங்குகிறதற்கும், வஸ்திரங்களையும் ஒலிவத்தோப்புகளையும் திராட்சத்தோட்டங்களையும் ஆடுமாடுகளையும் வேலைக்காரரையும் வேலைக்காரிகளையும் வாங்குகிறதற்கும் இது காலமா?

 
 
ஊழியர்களே தீர்க்கதரிசிகளே பார்த்தீர்களே அப்பொழுதே பொருட்களை வாங்குவதற்கு இது காலமா என்று வசனம் சொல்லும் பொழுது
நமக்கு இந்த காலம் எப்படி இருக்க வேண்டும் என்று யோசித்து பாருங்கள் ?
 
 
ஆண்டவாராகிய இயேசு கிறிஸ்து சொன்ன  உபதேசங்கள் இப்பொழுது புரிகின்றதா ?
 
 
 
இயேசு கிறிஸ்து சீக்கிரமாய் வருகின்றார் சீக்கிரமாய் வருகின்றார் என்று வாயினால் சொல்லிக்கொண்டு தனக்கு ஆஸ்தியையும்
விட்டையும் கட்டிக்கொள்ள இது காலமா ?
 
 
 
இயேசு கிறிஸ்துவின் நாமத்தின் மூலம் அற்புதங்களையும் அதிசயங்களையும் செய்து கொண்டு மனிதர்களிடம் பொருட்களையும்
பணத்தையும் வாங்காதீர்கள்  ஏனென்றால் இயேசு கிறிஸ்து சொன்ன ஒரு வார்த்தை கூட சாதாரணமானது அல்ல
 
 
 
இலவசமாய் பெற்றீர்கள் இலவசமாய் கொடுங்கள் என்ற வார்த்தையை தான் திரும்பவும் சொல்கின்றேன்
 
 
தேவனுடைய ஊழியர்களே தீர்க்கதரிசிகளே கேயாசி மேன்மையான தகுதியை  இழந்து போனது போல நாமும் மேன்மையான பரலோகத்தை இழந்து போககூடாது  பணம் பொருள் விஷயத்தில் ஜாக்கிரதையாய் இருங்கள்......


-- Edited by EDWIN SUDHAKAR on Thursday 29th of December 2011 05:35:18 PM

__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard