இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கோபத்தினால் வரும் தண்டனை


வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
கோபத்தினால் வரும் தண்டனை
Permalink  
 


எனக்கும் என் மனைவிக்கும் சில நாட்கள் முன்பு ஒரு சிறிய வாய் சண்டை வந்ததால்நான் காமடிக்காக ஒரு வார்த்தையை சொன்ன உடன்  அவள் சீரியஸாக அந்த வார்த்தையை எடுத்து கொண்டுஎன்னை மிகவும் மனமடிவு ஆக்கிவிட்டால்
எனக்கோ பயங்கரமான கோவம் வந்து விட்டது
 
நான் அவளிடம் இது ஒரு பெரிய காரியமே அல்ல அதை ஒரு பொருட்டாக எண்ணி  இப்படி பேசுகிறாயே சரி நான் சொன்னது தவறு தான் போதுமா என்று விட்டு விட்டேன் ஆனால் அவளோ அதை விடாமால் பேசிக்கொண்டே இருந்தால் சரி இனிமேல் பக்கத்தில் இருந்தால்  அவளிடம் கோப பட  நேரிடும் என்று அறிந்து வேதத்தை வாசிக்க தொடங்கினேன்
 
 
அதை பார்த்த அவள் அப்பொழுதும் என் பக்கத்தில் வந்து கோபமாக பேசி கொண்டே இருந்தால் பேசி கொண்டே இருந்த அவள் தீடிரென்று
என் கையில் உள்ள வேதத்தை அவள் வலது கையால் தட்டிவிட்டாள் எனக்கு பயங்கர கோபம் வந்தது தேவன் உனக்கு என்ன செய்ய போகிறார் பார் என்று என் வாய் சொல்ல வந்தது ஆனாலும் நான் சொல்ல வில்லை அப்படியே விட்டுவிட்டேன்
 
 
ஆனால் எனக்கோ  மனதில் ஒரே எண்ணம் அவளுக்கு தேவன் தண்டனை கொடுப்பாரா என்ற பயம் அன்று இரவே தேவனே எங்களுக்கு சமாதானத்தை தாரும் என்று என் மனதில் சொன்ன உடன் சில நேரங்கள் கழித்து எங்களுக்கு சமாதானத்தை தந்தார்
 
 
அடுத்த நாள் நான் வேலைக்கு வந்த பின் என் மனைவிடத்தில் இருந்து போன் வந்ததுஎன் மனைவி என்னிடம் நான் வீட்டில் உள்ள வேலைகளை  செய்யும் பொழுது என் கையில் கத்தி பட்டு காயம் ஏற்பட்டு விட்டது என்று
நானோ ஏதோ வேளையில் கீறல் ஏற்பட்டு இருக்கும் என்று எண்ணி அதை அப்படியே விட்டு விட்டேன், வீட்டிற்கு  போன பின்பு  தான் தெரிந்தது அவள் வலது உள்ளகையில் கத்தி குத்தி விட்டாதால்
 
 
அவளால் சாப்பிட முடியவில்லை
எந் ஒரு  வேலையும் செய்ய முடியவில்லை
நேற்று இரவு அவள் தூங்கவும் இல்லை
மிகவும் வேதனை பட்டு கொண்டு இருந்தால்
 
 
அப்பொழுது தான் நான் உணர்ந்தேன் நேற்று இரவு நான் வேதத்தை படிக்கும் பொழுது அவள் அதை தன வலது கையால் தட்டிவிட்டதை அதற்காக தான் தேவன் இவளுக்கு இதை நியமித்தார் என்று அதன் பின் தேவனே அவள் செய்த தவறை மன்னியும்அவளுக்கு தூக்கத்தை தாரும்  என்று தேவனிடம் விண்ணப்பம் செய்தேன் ஆனாலும் அந்த வழியால் அவளால் தூங்க முடியவில்லை சரி என்று நான் தேவனே உம சித்தத்தின் படியே செய்யும் என்று சொல்லி ஆனாலும் என் மனைவியின் தவறை பண்ணியும் என்று தேவ ஆவியானவரிடம் சொல்லி தூங்கிவிட்டேன்
 
இந்த சம்பவத்தை நான் ஏன் சொல்கிறேன் என்றால் ஒரு சிறிய கோபத்தினால் செய்த காரியத்தின் நிமித்தம் இப்பொழுது எவ்வளவு பெரிய வேதனையை அனுபவிக்க வேண்டியதாய் இருக்கின்றது பாருங்கள்

 
கோபம் மனிதனை கொள்ளும்
                    
கோபத்தினால் பாவம் உண்டாகும்
 
பாவத்தினால் தண்டனை வரும்
 
தண்டனையினால் வேதனையும் துன்பமும் அடைய வேண்டியதாய் இருக்கும்
 
தேவையா இது.?
 
இந்த பொல்லாத கோபத்தைவிட்டு விடுங்கள் சகோதரர்களே சகோதரிகளே........


-- Edited by EDWIN SUDHAKAR on Wednesday 7th of September 2011 01:53:09 PM

__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

கோபம்கொள்வது பாவம் என்று வேதம் சொல்லவில்லை. கோபம் கொள்ளாத மனுசனை பார்ப்பதும் அரிது என்றே நான் கருதுகிறேன். கோபம்/தாபம்/அன்பு/ அக்கரை/அரவணைப்பு போன்றவை எல்லா உயிரினங்களுக்கும் உள்ள இயற்க்கை பண்பாக இருக்கிறது.   
 
ஆனால்:   சங்கீதம் 4:4 நீங்கள் கோபங்கொண்டாலும், பாவஞ்செய்யாதிருங்கள்;
 
என்று வசனம் நம்மை எச்சரிக்கிறது. 
 
அடக்கமுடியாத கோபமானது நமது மனதை  மூர்க்கமாகி  ஏதாவது பாவம் செய்ய தூண்டிவிடுகிறது  பாவம் நம்மை தண்டனைக்கு நேராக வழிநடத்துகிறது என்பதை ஒரு உண்மை சம்பவத்தின் மூலம் சகோதரர் எட்வின் அறியத்தந்துள்ளார். நான் மிக அதிகமாக  கோபப்படும் பலரை பாத்திருக்கிறேன். அவர்கள்  கோபப்படும்போது அவர்கள் கைகால்கள் எல்லாம் நடுங்குவதொடு  மதுபானத்தில் வெறிகொண்டவன் போல வெறிகொண்டு, தன் சுய கட்டுப்பாட்டை இழந்துவிடுகின்றனர்.  அந்நேரம்
அவர்கள் வாயில் இருந்து என்ன வார்த்தைகள் வருகிறது என்பதை அவர்களால் நிர்ணயிக்க முடியாது. அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை நிர்ணயிக்கும்  திறனும் அவர்களுக்கு இருக்காது எனவே அவர்கள் கட்டுப்பாட்டை இழந்து வாய் வார்த்தையாலோ அல்லது செயலாலோ பாவம் செய்து விடுகின்றனர். இதை தவிர்ப்பதற்கு கோபம் உருவாகும் போதே அதை கட்டுக்குள் கொண்டுவருவது நல்லது.   
 
இங்கு கோபத்தை பற்றி மேலும் ஒரு  முக்கிய கருத்தை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்:
 
வேத புத்தகத்தை வாசித்தோம்  என்றால் கடும் கோபம்கொண்ட பலரை பார்க்க முடியும். அத்தோடு  நம் தேவனாகிய கர்த்தரும்  கடும் கோபம் கொண்டதற்க்கு பல உதாரணங்கள் உண்டு 
 
சகரியா 7:12 சேனைகளின் கர்த்தர் தம்முடைய ஆவியின் மூலமாய் முந்தின தீர்க்கதரிசிகளைக்கொண்டு சொல்லியனுப்பின வார்த்தைகளையும் கேளாதபடிக்குத் தங்கள் இருதயத்தை வைராக்கியமாக்கினார்கள்; ஆகையால் மகா கடுங்கோபம் சேனைகளின் கர்த்தரிடத்திலிருந்து உண்டாயிற்று.
 
சாத்தானும் கொபம்கொண்டதற்க்கு வசன ஆதாரம் உண்டு 
 
வெளி 12:12  பிசாசானவன் தனக்குக் கொஞ்சக்காலமாத்திரம் உண்டென்று அறிந்து, மிகுந்த கோபங்கொண்டு, உங்களிடத்தில் இறங்கினபடியால்,உங்களுக்கு ஆபத்துவரும் என்று சொல்லக்கேட்டேன்.
 
தேவனின் கோபமானது ஒருவரும் சாத்தனுடன் நித்திய அக்கினிக்கு போய்விடாமல் எல்லோரும் மீட்படைய வேண்டுமே என்ற அக்கரையிலும் ஆதங்கத்திலும் உண்டாவது ஆனால் சாத்தானின் கோபமோ தனக்கு நியமிக்கப்பட்டுள்ள காலத்துக்குள் எப்படியாது ஒரு கூட்ட ஜனங்களை தனிடத்தில் தக்கவைத்து கொள்ளவேண்டும் என்ற எரிச்சலில் உண்டானது.  ஏனெனில் எல்லோரையும் விட்டுவிட்டால் தனக்கு முடிவு வந்துவிடுமே என்ற பயத்தில் உண்டானது!  
 
எனவே அன்பானவர்களே, அடுத்தவர் மேலுள்ள அன்பு / அக்கறை மற்றும் ஏதாவது
ஒரு நல்ல காரியத்தினிமித்தம் சிறிது கோபம் கொள்வதில் எந்த தவறும் இல்லை.
ஆகினும்  நம்போன்ற மனுஷர்களின் கோபத்தால் எந்த ஒரு காரியமும் ஆகப் போவது இல்லை. அத்தோடு     
   
யாக்கோபு 1:20 மனுஷருடைய கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்கமாட்டாதே.
  
என்று வசனம் சொல்வதால், நம்முடைய கோபத்தால் தேவ நீதி நிறைவேறுவதில் தடங்கல்தான் உண்டாகுமே தவிர  தேவனுக்கு எந்த ஒரு நன்மையும் ஏற்ப்படாது என்பதை அறிந்து, யாரும் கோபம் மூட்டினால்கூட அதை முளையிலேயே கிள்ளிவிட்டு சகோ. எட்வின் செய்ததுபோல வேதம் வாசிப்பதில் மனதை  பிரயோகிப்பது சிறந்தது.
     


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard