9 கீழே இருக்கிற பாதாளம் உன்னிமித்தம் அதிர்ந்து, உன் வருகைக்கு எதிர்கொண்டு, பூமியில் அதிபதிகளாயிருந்து செத்த இராட்சதர் யாவரையும் உன்னிமித்தம் எழுப்பி, ஜாதிகளுடைய எல்லா ராஜாக்களையும் அவர்களுடைய சிங்காசனங்களிலிருந்து எழுந்திருக்கப்பண்ணுகிறது.
வேதத்தில் லூசிபர் தான் சாத்தான் என்று எல்லோருக்கும் தெரியும் ஆனால் அந்த லூசிபருக்கு பெருமை எப்படி வந்தது என்று பார்த்தல்
லூசிபருக்கு முன்பே அசுத்த ஆவி இருந்து இருக்கின்றது
பூமியில் அதிபதிகளாயிருந்து செத்த இராட்சதர் யாவரையும் உன்னிமித்தம் எழுப்பி யாவரையும் உன்னிமித்தம் எழுப்பி
அந்த இராட்சதர்கள் லூசிபேரை பார்த்து நீயும் எங்களைப்போலப் பலட்சயமானாயோ, எங்களுக்குச் சமானமானாயோ என்று சொல்கின்றார்களே
சொல்லும் இராட்சதர்கள் யார் ?
எங்களுக்குச் சமானமானாயோ என்ற சொல்லை பார்த்தல் லூசிபர் என்பவன் சாத்தான் என்று வேதம் சொல்கின்றது அப்பொழுது அவர்களை போல் ஆனான் என்றால் அவர்களும் சாத்தானா ?
சகோ : சுந்தர் சொன்ன கருத்துகள் இப்பொழுது தான் புரிகிறது
இந்த கருத்தின் அடிப்படையில், சாத்தானுக்கு உண்டான பெருமை என்பது எவ்வாறு தோன்றியது என்பது தெரியாது ஆனால் தேவன் அதை அனுமதிக்க வில்லை என்பது உறுதி. அதாவது சாத்தான் பெருமை அடைந்து விழுந்து போனதற்கு தேவன் காரணமல்ல. தேவனின் இடமாகிய பரலோகத்தில் இருக்கும் பரிசுத்தத்தை சாத்தான் இழந்தான் அதனால் தள்ளப்பட்டு போனான்.
உதாரணமாக "நன்மை தீமை அறியும் கனியை புசித்தால் நீ சாவாய்" என்பது தேவனின் நியமனம் அதை அறிந்தும் ஆதாம் மீறியதால் ஏதேன தோட்டத்தை விட்டு தள்ளபட்டுபோனான். இதில் தேவனின் பங்கு எதுவும் இல்லை. நித்திய கட்டளையை மீறினான் அதனால் தள்ளப்பட்டு போனான்.
தேவனின் சித்தம் இல்லாமல் அது நடந்தது அதற்க்கு தேவன் பொறுப்பல்ல தேவனது சித்தம் இல்லாமலும் சில பல காரியங்கள் இந்த உலகில் நடக்கும் என்பதற்கு ஆதாரமான வேத வசனம்!
ஏசாயா 54:15உனக்கு விரோதமாய்க் கூட்டங்கூடினால், அது என்னாலே கூடுகிற கூட்டமல்ல;
இவ்வசனம் தேவனது அனுமதி/சித்தம் இல்லாமல் சிலர் கூட்டம் கூடமுடியும் என்பதை நம்மக்கு உணர்த்துகிறது. அதுபோல் தேவனின் எந்த செய்கையும் இடைபடாமல் சாத்தான் பெருமை பிடித்து விழுந்து தீயவனாகிபோனான்
II கொரிந்தியர் 6:14நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது?
இவ்வசனம் தேவனுக்கும் அநீதிக்காரனாகிய சாத்தானுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறுகிறது.
3. அசுத்தம்/தீமை என்பது ஆதியிலிருந்தே இருந்திருக்கலாம்!
"தீமை / அசுத்தம்" என்பது ஆதியிலிருந்தே இருக்கிறது அதனால் தூண்டப்பட்டு தூதன் பெருமையடைந்தான் அதனால் தள்ளப்பட்டு சாத்தானாகி போனான் என்பதே இந்த கருத்து.
ஆதியிலே தேவ ஆவியானவர் என்னும் பரிசுத்தமான ஆவியானவர் ஒருவரே ஜலத்தின் மீது அசைவாடிக்கொண்டு இருந்தார் என்றும் அவரரே உலகத்தையும் அனைத்தையும் படைத்தார் என்று வேதம் சொல்கிறது. "பரிசுத்தமான ஆவி" மட்டுமே இருந்த இந்த உலகில் அதற்க்கு நேர்எதிரான "அசுத்த ஆவிகள்" பற்றிய அனேக செய்திகள் எழுதப்பட்டுள்ளன. இவை எவ்வாறு உருவானது என்பதற்கான சரியான விளக்கம் வேதத்தில் இல்லாததால் இந்த அசுத்த ஆவிகளும் ஆதியிலே தோன்றியிருக்கலாம் என்று அனுமானிக்க வாய்ப்பிருக்கிறது.
இந்த "அசுத்த ஆவிகள்" அனைவரையும் கெடுக்கும் வல்லமை வாய்ந்ததாக இருப்பதை அறிய முடிகிறது. இவைகளே சாத்தானின் மனதில் பெருமை என்ற எண்ணத்தை கொண்டுவந்திருக்கலாம் என்று முடிவு செய்யவும் வாய்ப்பிருக்கிறது. ஏனெனில் தேவன் அனைத்துக்கும் காரணமான அசுத்த ஆவியை தேசத்தை விட்டு வெளியேற்றுவேன் என்று வாக்கு செய்திருக்கிறார்.
சகரியா 13:2அசுத்த ஆவியையும் தேசத்திலிருந்து போய்விடவும் பண்ணுவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
இயேசு மற்றும் அப்போஸ்த்தலர்கள் அனேக நேரங்களில் அசுத்த ஆவிகளை துரத்தும் பணியை மேற்கொண்டுள்ளார்
லூக்கா 8:29அந்த அசுத்த ஆவி அவனை விட்டுப்போகும்படி இயேசு கட்டளையிட்டபடியினாலே அப்போஸ்தலர் 8:7அநேகரிலிருந்த அசுத்தஆவிகள் மிகுந்த சத்தத்தோடே கூப்பிட்டு அவர்களை விட்டுப் புறப்பட்டது.
தேவனின் பரிசுத்த ஆவிக்கு விரோதமாக போராடும் இந்த அசுத்த ஆவிகள் மற்றும வான மண்டலத்தின் பொல்லாத ஆவிகள் எங்கிருந்து வந்தன என்பது பற்றிய விளக்கம் இல்லை என்றாலும் இவைகளே ஆதியில் தேவதூதன் மனதில் பெருமையை விதைத்திருக்கலாம அதனாலேயே அவன் சாத்தானாக மாறியிருக்கலாம் எனபதே இந்த தெரிவு!
என்றோ அல்லது யோசிக்க வேண்டிய ஒன்று தான் என்றோ ஒரு வார்த்தை கூட சொல்ல வில்லை
அனேக கிறிஸ்த்தவர்களுக்கு பழைய ஆதி காரியங்களை திரும்ப புரட்டி பார்க்க மனதில்லை என்பதால் இருக்கலாம். அல்லது அவர்களுக்கு பதில் தெரியாத கேள்விகள் எதுவும் இல்லாமல் இருக்கலாம். அல்லது அதை திருப்பி பார்ப்பதால் எதுவும் பயனில்லை என்ற எண்ணம் இருக்கலாம். அல்லது இங்குவந்து எழுதக்கூட யாருக்கும் மனதில்லாமல் இருக்கலாம்.
தேவன் பரிசுத்தர் என்று வசனம் சொல்கிறது. அவர்தான் ஆதி/ அந்தம் இல்லாத அநாதியானவர் என்றும் வேதம் சொல்கிறது பரிசுத்தமே உருவாய்கொண்ட அவரிடம் இருந்து அசுத்தமான ஆவி ஓன்று உருவாக நிச்சயம் வாப்பிருக்காதே. தீமையே இல்லாதஅவரிடம்இருந்து தீமைஉருவாக வாய்ப்பில்லையே.
இந்த கருத்தின் அடிப்படயில் பார்த்தால் தீய அல்லது அசுத்த ஆவிகள் லூசிபருக்கு முன்னமே இருந்திருக்கலாம் அந்த அசுத்த ஆவியால் பாதிக்கபட்டே லூசிபருக்கு பெருமை உண்டாயிருக்கலாம் என்றே என்ன தோன்றுகிறது.
1..யோவான் 8:44.."அவன் பொய்யனும் பொய்யுக்குப் பிதாவுமாய் இருக்கிறபடியாள்...'' என கூறுகிறது. அவனுக்கு (லூசிபருக்கு) முன்பே அசுத்த ஆவி இருந்திறுந்தால் பொய்யுக்குப் அசுத்த ஆவியை அல்லவா தகப்பன் என கூறிர்க்க வேண்டும். ஆனால் சாத்தனை பொய்யுக்கு தகப்பன் என ஏன் கூற வேண்டும்?
2.முதல் அதிபதி(ஆதி1:26) மற்றும் முதல் மனிதன் ஆதாம்.ஆதாம் பூமியில் இருக்கும்போதே லூசிபர் சாத்தானக மாறி விட்டான், பரலோகத்தை விட்டு புமியில் விழுந்து தல்லபட்டுவிட்டான்(வெளி12:7-9;ஆதி2:16,17;3அ) லுசிபர் சத்தானாக பரலோகத்தில் இருக்குகம் போதே மறிவிட்டான் (ஏசா14:12-14;எசே28:12-18).ஆதாம் புமியில் பாடைப்பதர்க்கு ஆறு நாளுக்கு முன்பே பூமி வெருமையாக இருந்தது(ஆதி1:2). லூசிபருக்கு முன்பே அசுத்த ஆவி இருந்தது என்றாள் பூமியில் இருந்திருக்க வாய்ப்பே இல்லை. ஆனாள் நீங்கள் காட்டும் வசனத்தில் பூமியில் இருந்ததாககூறுவது, அசுத்த ஆவியை அல்ல.
ஏசாயா 43:13 நாள் உண்டகாததற்கு முன்னும் நானேஇருக்கிறேன்;
எனச்சொல்லத்தக்கவர் தேவன் மாத்திரமே!! பிசாசால் அவ்வாறு கூற இயலாது. மேலும்,பிசாசும், அசுத்த ஆவியும் ஒன்றே.. வெவேறு அல்ல.. பிசாசு உருவாகும் முன்னரே அவன் இருந்ததாக காட்டுகிற காரியம் ஆபத்தானது.. அது அவனை ஆடிக்கு முன் பிறப்பிக்கப்பட்டவனாக காட்டும். இது சரியற்றதாகும்!!!!
//யார் இந்த செத்த இராட்சதர்கள் ? 10 அவர்களெல்லாரும் உன்னை நோக்கி: நீயும் எங்களைப்போலப் பலட்சயமானாயோ? எங்களுக்குச் சமானமானாயோ? என்று சொல்லுவார்கள். அந்த இராட்சதர்கள் லூசிபேரை பார்த்து நீயும் எங்களைப்போலப் பலட்சயமானாயோ, எங்களுக்குச் சமானமானாயோ என்று சொல்கின்றார்களே சொல்லும் இராட்சதர்கள் யார் ? எங்களுக்குச் சமானமானாயோ என்ற சொல்லை பார்த்தல் லூசிபர் என்பவன் சாத்தான் என்று வேதம் சொல்கின்றது அப்பொழுது அவர்களை போல் ஆனான் என்றால் அவர்களும் சாத்தானா ?///
இந்த காரியம் வரப்போகும் அந்திக்கிறிஸ்துவிற்குகடுத்தது !!! அவன் தனது இருதயத்தை தேவனை போலாகும் ஒரு மனுசன். அவன் இலக்கம் ஒரு மனிதனின் இலக்கமாய் இருக்க போகிறது!! அவனுக்கு முன் வீழ்ந்து போய் அவன் ராஜியத்திற்கு அடிகோலிய மற்ற ராஜாக்கள், போலி குருமார்கள்,பிசாசை பின் பற்றி சோரம் போன அதிகார வர்கத்தினர் தாம் அந்த ராட்சஷர்கள்.. மேற்படி விளக்கம் தேவைப்படின் தருகிறேன்!!!
Glory to God!!
-- Edited by JOHN12 on Wednesday 4th of September 2013 06:51:34 PM
பிசாசு உருவாகும் முன்னரே அவன் இருந்ததாக காட்டுகிற காரியம் ஆபத்தானது..
Glory to God!!
ஆம்! ஆபத்தான காரியங்களை அறிந்துகொள்ளாமல் விட்டுவிடுவதே அநேகருக்கு நல்லது.
இந்த உலகம் முழுவதும் எப்படிப்பட்ட ஒரு ஆபத்தை நோக்கி போய்கொண்டு இருந்தால், வல்லமை மிக்க தேவனே இந்த பூமிக்கு மாம்சமாக வந்து சித்திரவதை அனுபவித்து சாக வேண்டிய அவசிய நிலை உண்டாயிருக்கும் என்ற உண்மையை அறிந்து விட்டாலே அனேக உண்மைகள் புரிந்துவிடும்.
எந்த ஒரு காரியத்திலும் தேவனிடம் விசாரித்து உண்மையை சரிவர அறியாமல் "இது இப்படித்தான்" என்று தீர்மானமாக சொல்லும் பட்சத்தில் உண்மையை அறிவது கடினம்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
..தேவனிடம் இருந்து தெரிந்து கொண்டதை மறைக்கிறதும், வெளிப்படும் உண்மையை தடுப்பதும் மிக தவறு !!!
அன்பான சகோதரரே எனக்கு தெரிவிக்கபட்ட எந்த ஒரு காரியத்தையும் நான் மறைத்துவைக்கவில்லை. இந்த தளத்தில் ஆங்காங்கே பல்வேறு தலைப்புகள் அடிப்படையில் எழுதி வைத்துவிட்டேன். அது புரிய வேண்டியவர்களுக்கு நிச்சயம் புரியும்.
தேவன் எனக்கு தெரிவித்த செய்தியில் மிகவும் முக்கியமானது மரணத்தை ஜெயித்து மறுரூபம் ஆகமுடியும் என்பதே!
சுமார் 7 வசன ஆதாரங்களுடன் இந்த வெளிப்பாட்டை நான் எழுதிய போது, கிறிஸ்த்தவர் என்று தங்களை பறைசாற்றோவோர் அநேகர் அதை ஏற்காமல் கடும் விவாதம் பண்ணினார்கள். மிக முக்கியமாக Mr. ஜான் என்னும் நண்பர் ஒருவர் கடுமையாக எதிர்த்தார் என்னை மிகவும் மனமடிவாக்கினார். ஏழு வசன ஆதாம் உள்ள வெளிப்பாட்டையே ஏற்க்கமுடியாதபோது ஓரிரு வசன ஆதாரம் உள்ள வெளிப்பாட்டை "பொய்" என்று சொல்லி மறைத்து / மறுப்பதற்கு சாத்தனுக்கு அனேக நேரம் செல்லாது.
எனவே என்மீது எந்த பழியும் சுமாராதபடிக்கு இந்த தளத்தில் எல்லாமே எழுதப்பட்டுள்ளது.
என்னை விசுவாசிக்கவிட்டாலும் தேவனிடம் இங்குள்ள செய்திகளின் உண்மை தன்மையை விசாரித்தால அவர் நிச்சம் பதில் தருவதோடு இதன் தொடர்ச்சியையும் நிச்சயம் தெரிவிப்பார் என்று நான் உறுதியாக விசுவாசிக்கிறேன்.
தேவன் ஜீவனுள்ளவர் அவர் இன்றும் என்றும் தன்னை நோக்கி கூப்பிடுவோர்க்கு பதில் தருபவர். பதில் இல்லாத கேள்வி என்று அவரிடம் எதுவும் இல்லை. சுய திருப்தி அடைந்தவர்களுக்கு அவரிடம் எந்த பதிலும் இல்லை.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
அசுத்த ஆவி லுசிபரை இடற செய்தது என்றால்,அசுத்தாவியை இடரும் படி செய்தது எது? /யார்?
//அன்பான சகோதரரே எனக்கு தெரிவிக்கபட்ட எந்த ஒரு காரியத்தையும் நான் மறைத்துவைக்கவில்லை. //
நானும் எக்காரியத்தையும் மறைக்க நினைகிறதில்லை. தேவன் நமக்கு சொல்லிகொடுப்பவை எதுவும் வசனத்திற்கு மாறுபாடாய் இருக்க இயலாது !! தீர்கதரிசனத்தின் ஆவி இயேசுவை பற்றிய சாட்சி எனவும்..கர்த்தராகிய இயேசுவின் வார்த்தை ஒழிந்து போவதில்லை எனவும் வேதம் கூறுகிறதே!!!
// ஏழு வசன ஆதாம் உள்ள வெளிப்பாட்டையே ஏற்க்கமுடியாதபோது ஓரிரு வசன ஆதாரம் உள்ள வெளிப்பாட்டை "பொய்" என்று சொல்லி மறைத்து / மறுப்பதற்கு சாத்தனுக்கு அனேக நேரம் செல்லாது. //
ஒரு வசன ஆதாரம் நாம் சொல்ல வரும் கருத்துக்கு எதிராக இருக்குமானாலும், நாம் புரிதலை சரி செய்து கொள்ள தேவ சமூகத்தை நாட வேண்டும் என்பது எனது கருத்து..
//என்னை விசுவாசிக்கவிட்டாலும் தேவனிடம் இங்குள்ள செய்திகளின் உண்மை தன்மையை விசாரித்தால அவர் நிச்சம் பதில் தருவதோடு இதன் தொடர்ச்சியையும் நிச்சயம் தெரிவிப்பார் என்று நான் உறுதியாக விசுவாசிக்கிறேன்.//
நானும் இங்கு பதியப்படுகிற காரியங்களை ஆராய்கிறேன்,தேவ சமூகத்தில் இவைகளை வைத்து யோசிக்கிறேன். பதில்களை ஏற்ற சமயங்களில் பதிகிறேன்.
//சுய திருப்தி அடைந்தவர்களுக்கு அவரிடம் எந்த பதிலும் இல்லை. //
ஆம்.. இயேசுவில்லாமல் சுயத்தில் திருப்தி அடைந்தவன் எவனும் கர்த்தரிடத்தில் வெளிப்பாடுகளை பெறுவதில்லை. ஆனால் கர்த்தராகிய இயேசுவை உண்மையில் பெற்றிருப்பவன் எவனும் திருப்தி அடைந்திருக்கிறான். அவனுக்கு பதில் அளிக்கபடிருபதாலேயே அவனால்திருப்தி அடைய இயலும்!!!
தலைப்பை பொறுத்தவரையில் தாங்கள் வெளிப் பாடு என கூறி பின் அனுமானிப்பில் முடிதிருகிறீர்கள். தேவனுடைய வெளிப்பாடுகள் எப்போதும் தீர்கமான முடிவுகளையே பெற்றிருக்கும் என்பதை வேதமும் அதில் உள்ள ஒவ்வொரு சாட்சிகளும் தெரிவிகின்றனவே!!! ஆம் என்றும் ஆமென் எனவும் கன்மலையை நொறுக்கும் சம்பட்டிகளை போன்றவைகளுமானவைகள் அவைகள்.
பொதுவாக வெளிப்படுத்துதல் வேதத்திற்கு உள்ளாக பலசமயங்களிலும்,சில சமயங்கள் வெளியிலும் ஆனால் வேதத்தோடு தொடர்புடையதாக தரபடுகிறது.
அந்த வகையில்,பதிவின் தலைப்பு வெளிப்பாடுகளை தொட அவசியம் இல்லாமல்,பிரகாசமான கண்களுக்கு அவசியம் இல்லாமல் வேதத்தில் உள்ள நேரடி வசன ஆதாரங்களை கொண்டே பதில் அளிக்கப்பட கூடியதாக உள்ளது. லுசிபரை குறித்து கர்த்தர் கூறும்போது
எசேக்கியேல் 28:17 உன் அழகினால் உன் இருதயம் மேட்டிமையாயிற்று; உன் மினுக்கினால் உன் ஞானத்தைக் கெடுத்தாய்; உன்னைத் தரையிலே தள்ளிப்போடுவேன்; ராஜாக்கள் உன்னைப் பார்க்கும்படி உன்னை அவர்களுக்கு முன்பாக வேடிக்கையாக்குவேன்.
அழகினால் லுசிபர் இருதயம் மேட்டிமையாகி,மினுக்கினால் அவன் ஞானத்தை கெடுத்தான் என்பதாக தேவனே தெளிவாய் தம் தீர்க்கதரிசி வழியாக கூறி இருக்க, அசுத்தாவி அவனை கெடுத்தது என கூறுவது எப்படிப்பட்ட வெளிபாடு?எப்படிப்பட்ட அனுமானம்?
மேலும் அவன் ஞானத்தின் அழகையே வேதம் சொல்லுகிறது!! அது அவனை மன மேட்டிமையை ஏற்படுதினது!!!
எசேக்கியேல் 28:7 இதோ, ஜாதிகளில் மகா பலவான்களாகிய மறுதேசத்தார் உனக்கு விரோதமாய் வரப்பண்ணுவேன்; அவர்கள் உன் ஞானத்தின் அழகுக்கு விரோதமாய்த் தங்கள் பட்டயங்களை உருவி, உன் மினுக்கைக் குலைத்துப்போடுவார்கள்.
//தேவனின் பரிசுத்த ஆவிக்கு விரோதமாக போராடும் இந்த அசுத்த ஆவிகள் மற்றும வான மண்டலத்தின் பொல்லாத ஆவிகள் எங்கிருந்து வந்தன என்பது பற்றிய விளக்கம் இல்லை என்றாலும் இவைகளே ஆதியில் தேவதூதன் மனதில் பெருமையை விதைத்திருக்கலாம அதனாலேயே அவன் சாத்தானாக மாறியிருக்கலாம் எனபதே இந்த தெரிவு!//
நான் தியானத்தில் அறிந்தவைகலையே சொல்லுகிறேன்!!
வெளி 12:4 அதின் வால் வானத்தின் நட்சத்திரங்களில் மூன்றிலொருபங்கை இழுத்து, அவைகளைப் பூமியில் விழத்தள்ளிற்று; பிரசவவேதனைப்படுகிற அந்த ஸ்திரீ பிள்ளைபெற்றவுடனே, அவளுடைய பிள்ளையைப் பட்சித்துப்போடும்படிக்கு அந்த வலுசர்ப்பம் அவளுக்கு முன்பாக நின்றது.
வலுசர்பத்தின் வாலால் இழுத்துபோட பட்ட நட்சத்திரங்களே விழுந்து போன,மார்க்கம் தப்பிப்போன தூதர்கள். இவர்கள் பிசாசின் தூதராகி போனார்கள். இவர்கள் பிசாசானவனுக்கு (விழுந்துபோன கேருப் )வல்லமையிலும்,மகிமையிலும் சமமற்றவர்கள். அவனால் வஞ்சிக்கபட்டவர்கள். அவ்வாறு இல்லாவிடில் அவன் வாலினால் சாதாரணமாக வீழ தள்ளபட்டிருக்கமாடார்களே !!!
விழுந்து போன வலுசர்பத்தின் ராஜ்யமே பிசாசின் ராஜ்யம். இது அவனது தூதர்களையும் உள்ளடக்கியது.. பாருங்கள்
லூக்கா 11:18 சாத்தானும் தனக்குத்தானே விரோதமாய்ப் பிரிந்திருந்தால் அவன் ராஜ்யம் எப்படி நிலைநிற்கும்? இப்படியிருக்க, பெயெல்செபூலைக்கொண்டு நான் பிசாசுகளைத் துரத்துகிறேன் என்கிறீர்களே.
வெளி 12:7 வானத்திலே யுத்தமுண்டாயிற்று; மிகாவேலும் அவனைச் சேர்ந்த தூதர்களும் வலுசர்ப்பத்தோடே யுத்தம்பண்ணினார்கள்; வலுசர்ப்பமும் அதைச்சேர்ந்த தூதரும் யுத்தம்பண்ணியும் ஜெயங்கொள்ளவில்லை.
II பேதுரு 2:4 பாவஞ்செய்த தூதர்களை தேவன் தப்பவிடாமல், அந்தகாரச் சங்கிலிகளினாலே கட்டி நரகத்திலே தள்ளி நியாயத்தீர்ப்புக்கு வைக்கப்பட்டவர்களாக ஒப்புக்கொடுத்து;
யூதா 1:6 தங்களுடைய ஆதிமேன்மையைக் காத்துக்கொள்ளாமல், தங்களுக்குரிய வாசஸ்தலத்தை விட்டுவிட்ட தூதர்களையும், மகா நாளின் நியாயத்தீர்ப்புக்கென்று நித்திய சங்கிலிகளினாலே கட்டி, அந்தகாரத்தில் அடைத்து வைத்திருக்கிறார்.
இவ்வசனங்களில் பிசாசனவனைன் தூதர்களை குறித்து சொல்லப்பட்டுள்ளது..லூசிபர்,பிசாசு,சாத்தான்,பேய்,சாத்தானின் தூதன்,பிசாசுகள்,சொதனைக்காரன்,அலகை,பொய்யின் ஆவி,போல்லாத ஆவிகள்,தவளையை போன்ற மூன்று ஆவி,மிருகம்,கள்ள தீர்கதரிசி(கள் ), விழுந்து போன தூதர்கள்(நட்சத்திரங்கள் ),மார்க்கம் தப்பி போன நட்சத்திரங்கள்,அந்தி கிறிஸ்த்து(கள்) ,வலுசர்ப்பம்,விரியன் பாம்பு,அசுத்த ஆவி என வருகிற பதங்கள் அனைத்தும் கர்த்தருக்கு சத்ருக்கலாகவே வேதம் சித்தரிகின்றது.. இவைகளின் ராஜ்ஜியம் பாபிலோனின் ராஜ்ஜியம். பிற்காலத்தில் அழிக்கபடப்போகிற ராஜ்ஜியம் என வேதம் (வெளி )சொல்கிறது.
இந்த அசுத்த ஆவியும்,அசுத்த ஆவிகளும் பிசாசினத்தில் இருந்து தூன்றுபவையே...
வெளி 16:13 அப்பொழுது, வலுசர்ப்பத்தின் வாயிலும் மிருகத்தின் வாயிலும் கள்ளத்தீர்க்கதரிசியின் வாயிலுமிருந்து தவளைகளுக்கு ஒப்பான மூன்று அசுத்த ஆவிகள் புறப்பட்டுவரக்கண்டேன்.
வெளி 16:14 அவைகள் அற்புதங்களைச் செய்கிற பிசாசுகளின் ஆவிகள்; அவைகள் பூலோகமெங்குமுள்ள ராஜாக்களைச் சர்வவல்லமையுள்ள தேவனுடைய மகாநாளில் நடக்கும் யுத்தத்திற்குக் கூட்டிச்சேர்க்கும்படிக்குப் புறப்பட்டுப்போகிறது.
பரிசுதவியனவர் எவ்வாறு சபையோரை ஒருங்கினைகிராரோ,அதைப்போலவே ஆனால் அதற்கெதிராக பிசானவனும் தம்முடையவர்களை ஒருங்கினைகிறான். (பிசாசின் திரித்துவத்தை பற்றி நான் எழுதினவைகள் நினைவில் கொள்ள தக்கவைகள்!!)
பிசாசின் ராஜ்யத்தில் பங்குள்ளவர்ககாக அவனது தூதர்களும்,சகல பாவிகளும் இருப்பார்கள். ராஜ்ஜியம் அசுதாவியால் (பிசாசின் ஆவியால் ) ஒருங்கினைக்கபட்டதாய் இருக்கும்.காரியம் இவ்வாறு இருக்க ஆதி முதலாய் பாவம் செய்கிற சாத்தானை அசுதாவி இடரும் படி செய்தது என கூறுவது எவ்வாறு சரியாகும்..
எபிரெயர்
1 அதிகாரம்
13. மேலும், நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்று தூதர்களில் யாருக்காவது எப்போதாகிலும் அவர் சொன்னதுண்டா?
பணிவிடை ஆவியாய் இருக்கவேண்டிய பிரதான தூதன் தன்னை தான் கெடுத்துக்கொண்ட போதே அவன் பெற்றிருந்த பணிவிடை ஆவி அசுத்தாவியாய் மாறினது.
மேலும் கீல்படியாமையின் வரலாற்றை யூதா தெரிவிக்கும் போது, தூதர்களின் விழுகையிலிருந்தே ஆரம்பிக்கிறார். அசுத்தாவியிலிருந்து அல்ல!!! அசுத்தாவியின் விழுகையில் இருந்தும் அல்ல.
யூதா
1 அதிகாரம்
6. தங்களுடைய ஆதிமேன்மையைக் காத்துக்கொள்ளாமல், தங்களுக்குரிய வாசஸ்தலத்தை விட்டுவிட்ட தூதர்களையும், மகா நாளின் நியாயத்தீர்ப்புக்கென்று நித்திய சங்கிலிகளினாலே கட்டி, அந்தகாரத்தில் அடைத்து வைத்திருக்கிறார்.
அவர்கள் யாருடைய தூண்டுதலின் பேரிலும் வாசஸ்தலத்தை விட்டுவிட்டதாக வேதத்தில் இல்லை.ஆகவே காரியம் இவ்வாறு இருப்பதால் அசுத்தாவி லுசிபரைக் கெடுத்தது என்பது தவறு . மேற்படி விளக்கங்கள் அநேகம் உண்டு. தேவைப்படின் தருகிறேன்.
பரிசுத்த ஆவியாகிய தேவன் எப்படி அநாதியாகவே பரிசுத்தரோ அதேபோல் அசுத்தாவியானது தோன்றும்போதே அசுத்தமானது. அசுத்தம் தோன்ற பரிசுத்தராகிய தேவன் என்றுமே காரணர் அல்ல! பரிசுத்தம் தோன்றியது போலவே அசுத்தமும் தோன்றியது. பரிசுத்தமாகிய தேவன் அசுத்தத்தை நிரந்தரமாக ஒழிக்கும் நீண்ட திட்டமே இந்த உலகின் நடபடிகள்.
JOHN12 wrote:
//ஒரு வசன ஆதாரம் நாம் சொல்ல வரும் கருத்துக்கு எதிராக இருக்குமானாலும், நாம் புரிதலை சரி செய்து கொள்ள தேவ சமூகத்தை நாட வேண்டும் என்பது எனது கருத்து..///
உலகத்தில் பிறந்த எல்லோரும் மறித்துக்கொண்டு இருக்கும்போது மரணத்தின் ஜெயித்து மறுரூபம் ஆகமுடியும் என்ற கருத்தை நம்மால் யூகித்து கூட பார்க்க முடியாது. தேவனே அதை 7 வசன ஆதாரத்தின் அடிப்படையில் தெரியப்படுத்தினார் அவ்வாறு இருக்கையில் உலக நடப்புகளை காரணம் காட்டி அதை மறுப்பதை நான் எதற்க்க வேண்டிய அவசியம் இல்லை.
நான் 7 வசன ஆதாரத்துடன் சொல்லும் கருத்துக்கு ஒரு வசனம் எதிராக இருக்குமாயின், எதிராக இருக்கும் அந்த வசனத்துக்கு நன் சொல்லும் 7 வசனங்கள் மறுப்பு தெரிவிக்குமே அதை மாத்திரம் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?
JOHN12 wrote:
/// பணிவிடை ஆவியாய் இருக்கவேண்டிய பிரதான தூதன் தன்னை தான் கெடுத்துக்கொண்ட போதே அவன் பெற்றிருந்த பணிவிடை ஆவி அசுத்தாவியாய் மாறினது.///
பரிசுத்தராகிய தேவனால் உருவாக்கபட்ட ஒரு ஜீவனானது கெடுப்பதற்கு தீமை என்ற எதிர் சக்தி இல்லாமல் யாரும் தன்னை தானே கெடுத்துகொள்ள முடியாது. ஆதாமும் ஏவாளும் சர்ப்பம் என்ற கேட்டின் மகன் வரும் வரை தன்னை தானே கெடுத்துகோள்ளவில்லை. அவர்களை சாத்தான் என்னும் தீய சர்ப்பம்தான் தூண்டிவிட்டு அவர்களை கெடுத்தது.
அதேபோல் தேவனால் சிருச்டிக்கபட்டு ஞானத்திலும் அழகிலும் சிறந்தவனாக இருந்த லூசிபரை மேட்டிமை கொள்ள செய்த ஏதோ ஓன்று நிச்சயம் இருந்திருக்க வேண்டும்.
அதற்க்கு ஆதாரமாகவும், "லூசிப்பரின் விழுகைதான் தீமையின் தொடக்கம்" என்ற தங்களின் கருத்து சரியானது அல்ல என்பதை நிரூபிக்கவும் நான் கீழ்கண்ட வசனத்தின் இங்கு சாட்சியாக வைக்க விரும்புகிறேன்
ஏசாயா 14:9. கீழே இருக்கிற பாதாளம் உன்னிமித்தம் அதிர்ந்து, உன் வருகைக்கு எதிர்கொண்டு, பூமியில் அதிபதிகளாயிருந்து செத்த இராட்சதர் யாவரையும் உன்னிமித்தம் எழுப்பி,
லூசிப்பரின் வீழ்ச்சிக்கு தொடர்ச்சியாக வரும் இந்த வசனத்தில் லூசிபர் பாதாளத்தில் தள்ளப்படும்போது "நீயும் எங்களைபோல பலட்ச்சமானாயோ" என்று கேட்கும் ஒரு ராட்சதர் கூட்டம் லூசிப்பருக்கு முன்னேயே தள்ளபட்டு அங்கே இருந்திருக்கிறது என்பதை மேலேயுள்ள வசனம் நமக்கு விவரிக்கிறது. எனவே லூசிப்பைருக்கு முன்னமே ராட்சசர்கள் பாதாளத்தில் தள்ளபட்டார்கள் என்றும் அவர்களைப்போலவே லூசிபரும் தள்ளபட்டான் என்றும் நாம் அறிய முடிகிறது
எனவே நான் மீண்டும் சொல்கிறேன் லூசிப்பரின் வீழ்ச்சி தீமையின் தொடக்கம் அல்ல! அதற்க்கு முன்னமே ராட்சசர்கள் என்ற ரூபத்தில் தீமை பூமியில் இருந்தது. அவர்களே அசுத்த ஆவியின் இன்னொரு ரூபம் அவர்களைப்போலதான் தள்ளப்பட தூதனாகிய லூசிப்பர் மாறினானேயன்றி மற்றபடியல்ல! அந்த ராட்சசர்கள் பற்றி வேதத்தில் பல இடங்களில் குறிப்புகள் உள்ளன.
மேலும் தேவன் மகா பரிசுத்த ஆவியானவர்! அவர் ஒருவரே அனாதியாய் இருக்கும் பட்சத்தில் அவர் மூலம் உருவான ஒருவன், இன்னொரு அசுத்த சக்தியின் தூண்டுதல் இல்லாமல் அசுத்தமான சக்தியாக மாற எந்த வாய்ப்பும் இல்லை.
I யோவான் 3:9தேவனால்பிறந்த எவனும் பாவஞ்செய்யான், ஏனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது; அவன் தேவனால்பிறந்தபடியினால் பாவஞ்செய்யமாட்டான்.
என்று வேதம் சொல்வதன் சரியான பொருள் என்ன?
நீங்களும் நானும் தேவனால் பிறந்தவர்கள்தானே நாம் பாவமே செய்வதில்லையா? "நான் பாவமே செய்வதேயில்லை" என்று என்னால் உறுதியாக சொல்லமுடியாது காரணம் "நாம் அனேக விஷயங்களின் தவறுகிறோம்" தேவ மனுஷனாகிய தாவீது பாவம் செய்தான், தேவனோடு கூடவே இருந்த யூதாஸ் பாவம் செய்தான், ஆவியானவர் சபைக்குள் இருந்த அன்னிய சாப்பீறாள் பாவம் செய்தார்கள்
அவ்வாறிருக்க வசனம் இவ்வாறு சொல்ல காரணம் என்ன?
தேவன் மகா பரிசுத்தராக இருப்பதால் அவரால் பிறந்த எவனும் பாவம் செய்யவே மாட்டான் செய்யவும் முடியாது! அவனை செய்ய தூண்டி செய்ய வைப்பது சாத்தானே. பவுல் சொல்வதுபோல "அவன் செய்ய விரும்பாததை செய்ய வைக்கிறது".
எனவே ஆதியில் இருந்து இன்றுவரை தேவனால் படைக்கபட்ட ஒரு ஜீவன் பாவம் செய்கிறது என்றால் அது ஏதோ ஒரு அசுத்த சக்தியால் தூண்டப்பட்டுதான் பாவம் செய்கிறதேயன்றி மற்றபடி "தேவனால் பிறந்த எவனும் தானாக பாவம் செய்யமுடியாது".
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
லூசிப்பரின் வீழ்ச்சிக்கு தொடர்ச்சியாக வரும் இந்த வசனத்தில் லூசிபர் பாதாளத்தில் தள்ளப்படும்போது "நீயும் எங்களைபோல பலட்ச்சமானாயோ" என்று கேட்கும் ஒரு ராட்சதர் கூட்டம் லூசிப்பருக்கு முன்னேயே தள்ளபட்டு அங்கே இருந்திருக்கிறது என்பதை மேலேயுள்ள வசனம் நமக்கு விவரிக்கிறது. எனவே லூசிப்பைருக்கு முன்னமே ராட்சசர்கள் பாதாளத்தில் தள்ளபட்டார்கள் என்றும் அவர்களைப்போலவே லூசிபரும் தள்ளபட்டான் என்றும் நாம் அறிய முடிகிறது
எனவே நான் மீண்டும் சொல்கிறேன் லூசிப்பரின் வீழ்ச்சி தீமையின் தொடக்கம் அல்ல! அதற்க்கு முன்னமே ராட்சசர்கள் என்ற ரூபத்தில் தீமை பூமியில் இருந்தது. அவர்களே அசுத்த ஆவியின் இன்னொரு ரூபம் அவர்களைப்போலதான் தள்ளப்பட தூதனாகிய லூசிப்பர் மாறினானேயன்றி மற்றபடியல்ல! அந்த ராட்சசர்கள் பற்றி வேதத்தில் பல இடங்களில் குறிப்புகள் உள்ளன.
மேலும் தேவன் மகா பரிசுத்த ஆவியானவர்! அவர் ஒருவரே அனாதியாய் இருக்கும் பட்சத்தில் அவர் மூலம் உருவான ஒருவன், இன்னொரு அசுத்த சக்தியின் தூண்டுதல் இல்லாமல் அசுத்தமான சக்தியாக மாற எந்த வாய்ப்பும் இல்லை///
இதற்க்கு ஏற்கனவே நான் பதிலை எழுதி இருக்கிறேன் சகோதரா!!!
இந்த காரியம் வரப்போகும் அந்திக்கிறிஸ்துவிற்குகடுத்தது !!! அவன் தனது இருதயத்தை தேவனை போலாகும் ஒரு மனுசன். அவன் இலக்கம் ஒரு மனிதனின் இலக்கமாய் இருக்க போகிறது!! அவனுக்கு முன் வீழ்ந்து போய் அவன் ராஜியத்திற்கு அடிகோலிய மற்ற ராஜாக்கள், போலி குருமார்கள்,பிசாசை பின் பற்றி சோரம் போன அதிகார வர்கத்தினர் தாம் அந்த ராட்சஷர்கள்.. மேற்படி விளக்கம் தேவைப்படின் தருகிறேன்!!!
நீங்கள் அந்தி கிறிஸ்துவை பணம் என்கிறதாக கருதுகிற படியினால் இவைகளை உணருவது தங்களுக்கு கடினமாக இருக்கும்..
இந்த காரியம் வரப்போகும் அந்திக்கிறிஸ்துவிற்குகடுத்தது !!! அவன் தனது இருதயத்தை தேவனை போலாகும் ஒரு மனுசன். அவன் இலக்கம் ஒரு மனிதனின் இலக்கமாய் இருக்க போகிறது!! அவனுக்கு முன் வீழ்ந்து போய் அவன் ராஜியத்திற்கு அடிகோலிய மற்ற ராஜாக்கள், போலி குருமார்கள்,பிசாசை பின் பற்றி சோரம் போன அதிகார வர்கத்தினர் தாம் அந்த ராட்சஷர்கள்.. மேற்படி விளக்கம் தேவைப்படின் தருகிறேன்!!!
நல்லது சகோதரரே! அந்த மனுஷன் பிசாசு வீழ்வதற்கு முன்னரே பாதாளத்தில் வீழ்ந்து கிடந்தான் என்று வேதம் சொல்கிறதல்லவா?
திரியின் தலைப்பு "லூசிபருக்கு முன்னர் அசுத்தம் தீமை உலகில் இருந்ததா?" என்பதுதான்.
லூசிபர் வீழ்வதற்கு முன்னர் ஒரு கூட்டம் பாதாளத்தில் வீழ்ந்து கிடந்தார்கள் என்றும் அவர்கள் லூசிபரை பார்த்து "நீயும் எங்களைபோல் ஆனாயோ?" என்று கேட்டார்கள் என்றும் வசனம் சொல்கிறது.
எனக்கு ஒரே ஒரு பதிலை மாத்திரம் தாருங்கள் "லூசிபருக்கு முன்னர் தீமை /கீழ்படியாமை /பாவம் உலகில் இருந்தததா இல்லையா?
லூசிபாரின் வீழ்ச்சிக்கு முன்னரே தீமை பாவம் வீழ்ச்சி உலகில் இருந்தது என்பதற்கு நான் கீழே வசன ஆதாரம் தந்துள்ளேன் அதை தாங்கள் ஏற்கிறீர்காளா?
ஏசாயா 14:9. கீழே இருக்கிற பாதாளம் உன்னிமித்தம் அதிர்ந்து, உன் வருகைக்கு எதிர்கொண்டு, பூமியில் அதிபதிகளாயிருந்து செத்த இராட்சதர் யாவரையும் உன்னிமித்தம் எழுப்பி, 10அவர்களெல்லாரும் உன்னை நோக்கி: நீயும்எங்களைப்போல பலட்சயமானாயோ?
எங்களுக்குச் சமானமானாயோ?என்றுசொல்லுவார்கள்.
Bro. John12 Wrote
"அவன் தனது இருதயத்தை தேவனை போலாகும் ஒரு மனுசன்"
"ஒரு மனுஷன்" என்று ஒருமையில் சொல்கிறீர்கள் ஆனால் வேதம் சொல்கிறது "எங்களுக்குச் சமானமானாயோ?என்றுசொல்லுவார்கள்" என்று பன்மையில் ஒரு கூட்டம் சொல்வதுபோல் சொல்கிறதே!
-- Edited by SUNDAR on Wednesday 16th of October 2013 12:06:43 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
4.அந்நாட்களில்இராட்சதர்பூமியிலேஇருந்தார்கள்; பின்பு தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளோடே கூடுகிறதினால், இவர்கள் அவர்களுக்குப் பிள்ளைகளைப் பெற்றபோது, இவர்களும் பூர்வத்தில் பேர்பெற்ற மனுஷராகிய பலவான்களானார்கள்.
ஒருவேளை நீங்கள், "ஆதியில் தேவனோடு தோன்றிய இராட்சதர்கள் தான் நோவாவின் காலத்தில் வாழுந்தார்கள்" என்றால், அதற்கும் வாய்ப்பில்லை.
ஏனென்றல்
1.ஆதியில் தோன்றியிருக்க கூடும் என்று நீங்கள் நினைக்கும் இராட்சதர்கள், மாம்சத்தில் வெளிபட்டிருக்க முடியாது. மாம்சத்தில் வெளிபட்டிருக்க முடியாததினால், அதிபதிகளாகவும் இருந்திருக்க முடியாது........
2.ஏனென்றால் தேவனோடு தோன்றியிருந்தால் அது அவரை போல ஆவியாக தான் இருந்திருக்க வேண்டும்.
திரியின் தலைப்பு "லூசிபருக்கு முன்னர் அசுத்தம் தீமை உலகில் இருந்ததா?" என்பதுதான்.
லூசிபர் வீழ்வதற்கு முன்னர் ஒரு கூட்டம் பாதாளத்தில் வீழ்ந்து கிடந்தார்கள் என்றும் அவர்கள் லூசிபரை பார்த்து "நீயும் எங்களைபோல் ஆனாயோ?" என்று கேட்டார்கள் என்றும் வசனம் சொல்கிறது.
எனக்கு ஒரே ஒரு பதிலை மாத்திரம் தாருங்கள் "லூசிபருக்கு முன்னர் தீமை /கீழ்படியாமை /பாவம் உலகில் இருந்தததா இல்லையா?
லூசிபாரின் வீழ்ச்சிக்கு முன்னரே தீமை பாவம் வீழ்ச்சி உலகில் இருந்தது என்பதற்கு நான் கீழே வசன ஆதாரம் தந்துள்ளேன் அதை தாங்கள் ஏற்கிறீர்காளா
அன்பு சகோதரர் சுந்தர் அவர்களே....
நாம் இந்த வசனத்தில் கவனிக்க வேண்டிய வார்த்தையை Highlight செய்துள்ளேன்... அதனை முதலில் கவனிக்க வேண்டுகிறேன்...
9. கீழே இருக்கிற பாதாளம் உன்னிமித்தம் அதிர்ந்து, உன் வருகைக்கு எதிர்கொண்டு, பூமியில்அதிபதிகளாயிருந்துசெத்தஇராட்சதர் யாவரையும் உன்னிமித்தம் எழுப்பி, ஜாதிகளுடைய எல்லா ராஜாக்களையும் அவர்களுடைய சிங்காசனங்களிலிருந்து எழுந்திருக்கப்பண்ணுகிறது.
இங்கு Highlight செய்யப்பட்ட வார்த்தை: பூமியில்அதிபதிகளாயிருந்துசெத்தஇராட்சதர்
இந்த வார்த்தைக்கு அர்த்தமானது என்னவென்றால்....
அதாவது பூமியில் வாழ்ந்து, பின்னர் அதிபதிகலாய் மாறி, பின்னர் மரித்த இராட்சதர் என்று பொருள் படும்....
இந்த வசனத்தின் மூலம் அவர்கள்:
பூமியில் வாழ்ந்தார்கள் என்று உறுதி ஆகிறது...
பூமியில் அதிபதிகளாக இருந்தார்கள் .
பூமியில் செத்தார்கள்...
என உறுதி ஆகுகிறது
இதை வைத்து பார்க்கும் பொழுது, அந்த இராட்சதர் எனப்படும் அந்த அசுத்த ஆவிகள், அல்பாவும் - ஒமேகவும் ஆகிய தேவன் உண்டாகும் பொழுது தோன்றி இருக்க வாய்ப்பில்லை.
ஏனென்றால் பூமியில் வழக்கை என்பது தேவன் பூமியை படைத்த பின்பே...
இதில் கவனிக்க வேண்டிய விஷயம், பூமி வெறுமையாய் இருந்தது என்று...
அப்படி வெறுமையை இருந்த பூமியில், நீங்கள் நினைக்கும் விதமாக தேவன் தோன்றிய பொழுது, தோன்றி இருக்க கூடும் என்று நீங்கள் நினைக்கும் இராட்சதர் அதிபதிகளாக இருந்திருக்க முடியாது...
உண்மையில் இராட்சதர்கள் வாழ்ந்த காலம் ஆதியாகமம் குறிப்பிடும் காலமே...
__________________
Sugumar Samuel T
யோவான் 8:32சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார்.
அன்பு சுகுமார் அவர்களே தாமதமான விளக்கங்களுக்கு மன்னிக்கவும்.
Bro. Sugumar Wrote:
///அதாவது பூமியில் வாழ்ந்து, பின்னர் அதிபதிகலாய் மாறி, பின்னர் மரித்த இராட்சதர் என்று பொருள் படும்....
இந்த வசனத்தின் மூலம் அவர்கள்:
பூமியில் வாழ்ந்தார்கள் என்று உறுதி ஆகிறது...
பூமியில் அதிபதிகளாக இருந்தார்கள் .
பூமியில் செத்தார்கள்...
என உறுதி ஆகுகிறது
இதை வைத்து பார்க்கும் பொழுது, அந்த இராட்சதர் எனப்படும் அந்த அசுத்த ஆவிகள், அல்பாவும் - ஒமேகவும் ஆகிய தேவன்உண்டாகும் பொழுது தோன்றி இருக்க வாய்ப்பில்லை.////
தாங்கள் சொல்வது எல்லாம் உண்மைதான் ஆனால் எனது கருத்து வேறு. லூசிபர் வீழ்ச்சிக்கு முன்னரே ராட்சசர்கள் என்ற தீயவர்கள் இருந்தார்கள் என்றுதான் எழுதிநேநேயன்றி, அவர்கள்தான் தேவன் உண்டாகும்போது தோன்றியவர்கள் என்று நான் எழுதவில்லை.
"பரிசுத்தமான தேவ ஆவியானவர்" உண்டாகும்போது தோன்றியது "அசுத்த ஆவி" என்னும் தீய ஆவி ஆகும். அதாவது தேவன் எப்படி "பரிசுத்த ஆவியாக" இருக்கிறாரோ அதுபோல் அசுத்தமான ஆவியும் தானாக தோன்றியது என்பதுதான் எனது கருத்து.
அந்த அசுத்த ஆவியால் பீடிக்கபட்டவர்களே வேதம் குறிப்பிடும் ராட்சசர்கள் என்ற கூட்டம். அவர்கள் லூசிபருக்கு முன்னரே ஒரு தீய கூட்டமாக உலகில் வாழ்ந்து மறித்து பாதாளத்தில் வீழ்ந்து கிடந்தார்கள். அதன் பின்னரே லூசிபரும் அங்கு செல்கிறான்.
Bro. Sugumar Wrote:
////1.ஆதியில் தோன்றியிருக்க கூடும் என்று நீங்கள் நினைக்கும் இராட்சதர்கள், மாம்சத்தில் வெளிபட்டிருக்க முடியாது. மாம்சத்தில் வெளிபட்டிருக்க முடியாததினால், அதிபதிகளாகவும் இருந்திருக்க முடியாது........
2.ஏனென்றால் தேவனோடு தோன்றியிருந்தால் அது அவரை போல ஆவியாக தான் இருந்திருக்க வேண்டும்.
பூமியின் படைப்பு என்பது தேவனால் மட்டுமே கூடியது ஆனால் அந்த படைப்பினுள் புகுந்து அதை கெடுத்து அல்லது ராட்ச்சசகர்கலாக மாற்றியது தான் அசுத்த ஆவியின் செயல்பாடு.
நல்லவனாகிய யூதாசுக்குள் சாத்தான் புகுந்ததும் எப்படி அவன் கெட்டவனாகி இயேசுவை காட்டிகொடுக்க சென்றானோ அதேபோல் தேவனால் படைக்கபட்ட மனுஷர்கள் அசுத்த ஆவி புகுந்ததிநிமித்தம் ராட்ச்சசர்களாக மாறி தீயவர்களாகி மறித்து பின்னர் தேவனால் பாதாளத்துக்கு அனுப்பபட்டுபோனார்கள்.
Bro: சுகுமார் Wrote
///ஆதலால் ஏற்கனவே விழுந்த சாத்தானை(அதாவது நடந்து முடிந்த ஒன்றை) எதிர்காலத்தில் நடப்பது போன்று சொல்ல வேண்டிய அவசியம் இல்லை
இதில் எதிர்கால வினைஎச்சங்களை(Future Verbs) பார்க்கலாம்...
Future verbs (Shall) , (சொல்லுவார்கள்).///
சகோதரர் சுகுமார் அவர்களே நாம் விவாதிக்கும் வசனமானது சாத்தான் வானத்தில் இருந்து பாதாளத்துக்கு தள்ளப்பட தீர்க்கபட்ட நேரத்தில் அந்த நேரத்தில் நடக்கும் நிகழ கால செயல்பாடு மற்றும் அடுத்து உடனடியாக நடக்கபோகும் எதிகால செயல்பாட்டை குறிப்பதான தொடர் நிகழ்ச்சசியை சொல்லும் கூற்றாக அமைந்துள்ளது
இந்த சம்பவத்தை விவரிக்க கீழ்கண்ட ஒரு உதாரணத்தை கூற விரும்புகிறேன்:
(திகார் சிறையில் அனேக கொலைகள் குற்றங்கள் செய்த கொடிய குற்றவாளிகள் இருக்கிறார்கள் இந்நிலையில் ஸ்பெக்ரம் வழக்கில் கைதான வசதியான மந்திரி ஒருவரும் குற்றவாளி என்று தீர்க்கபட்டு தண்டனை பெரும் நிலையில், தீர்ப்பை அளித்த நீதிபதி சொல்லும் வசனத்துக்கு ஒத்த வார்த்தைகளை சற்று கவனியுங்கள்)
திகார் சிறையானது உன்னிமித்தம் அதிர்ந்து உன் வருகைக்கு எதிர்கொண்டு நாட்டில் கொலை கொள்ளை செய்து சிறையில் இருக்கும் குற்றவாளிகள் யாவரையும் உன்னிமித்தம் யோசிக்கசெய்கிறது. அவர்கள் எல்லோரும் உன்னை நோக்கி நீயும் எங்களைபோல் ஆனாயோ என்று சொல்லுவார்கள்
உன் ஆடம்பரமும் சுகபோக வாழ்வும் சிறையிலே தள்ளபட்டு போனது
மிகப்பெரிய VIPக்கு மகனே, நீ மதுரையில் இருந்து வந்தாயே, ஊழல் செய்து பணம் சம்பாதித்தவனே நீ தமிழ் நாட்டில் இருந்து விரட்டபட்டாயே.
நான் மக்களின் பணத்தை ஊழல் செய்து அதிகமாக சம்பாதிப்பேன் என்று சொன்னாயே கொள்ளை அடித்துவிட்டு தப்பித்துவிடலாம் என்று எண்ணினாய் ஆனாலும் நீ வசமாக மாட்டிகொண்டாயே.
இதற்க்கு ஒத்ததாகவே நான் சுட்டியிருக்கும் வசனமும் உள்ளது. அதாவது இறந்தகாலம் + நிகழ காலம் + எதிர்காலத்தில் அடுத்து நடக்கபோகும் நிகழ்ச்சி இவற்றை உள்ளடக்கியதாக அந்த வசனம் இருக்கிறது. எனவே என்றோ வீழ்ந்து முடிந்துபோன சம்பவத்தில் உலக முடிவில் வரபோகும் அந்தி கிறிஸ்த்துவோடு சம்பதபடுத்த எந்த முகாந்திரமும் இல்லை.
Bro. Sugumar Wrote
///ஆகையால் சகோதிரர் John அவர்கள் கூறியது போல,ஏசாயா அதிகாரத்தில் கூறி இருக்கும் வசனம் அந்திகிருஸ்துவை பற்றியதாகவே இருக்கும் என்று எனக்கு தோன்றுகிறது...///
இந்த கருத்தின்படி பார்த்தால் லூசிபர் விழும்போது "அந்தி கிறித்துக்கள் அவனை பார்த்து நீயும் எங்களை போல் ஆனாயோ? என்று கேட்பார்களோ?
அந்தி கிறித்து என்பவன் யார்? அவன் வேறு லூசிபர் வேறா? அவன் எங்கிருந்து விழுந்தான்? அந்தி கிறிஸ்த்துவை கெடுத்தது யார்?
அந்தி கிறிஸ்த்து ஒரு மனுஷன் என்றால், மனுஷர்களை கிறிஸ்த்துவை விட்டு விலக வைத்து கெடுக்கும் ஒரே தீய சக்தி லூசிபர் தானே?
பரிசுத்தம் (நண்மை) & அசுத்தம் (தீமை) இரண்டுதான் உலகில் இருக்கிறது . நன்மைக்கு அதிபதி தேவன் / தீமைக்கு அதிபதி லூசிபர் என்றால்
அந்திகிரித்துவாகிய தீமை, தனது அதிபதியாகிய லூசிபரை பார்த்து "எங்களை போல் ஆனாயோ?" என்று கேட்பதில் எந்த பொருளும் இல்லையே!
எனவே லூசிபர் விழும்போது அவனை பார்த்து "நீயும் எங்களைபோல் ஆனாயோ" என்று கேட்கும் கூட்டத்தார் நிச்சயம் லூசிபரோடு சம்பந்தமில்லாத ஒரு கூட்டத்தார்! அவர்கள் அசுத்த ஆவியால் பிடிக்கபட்ட கூட்டத்தாராகதான் இருக்க முடியும் அந்த அசுத்த ஆவியானது ஆதியிலே தோன்றியது என்பதோடு தேவனோடு இருந்த லூசிபரையும் தேவனுக்கு நிகராக அவனை சித்திக்க வைத்து கெடுத்தது அதுதான் என்பது எனது கருத்து.
-- Edited by SUNDAR on Wednesday 20th of November 2013 04:58:37 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)