சகொதிரர் சுந்தர் அவர்களே இந்த திரியில் நீங்கள் மிகவும் குழப்பமான கருத்துகளை பதிவு செய்து உள்ளீர்....
என் மூலம் தேவன் பேசிய வார்த்தைகளை பகிர்ந்துகொள்கிறேன்...
அன்பான சகோதரரே முதலில் தாங்கள் என்ன தெரிந்துகொண்டீர்கள் என்பதை தெளிவாக எழுதிவிட்டு என்னுடைய கருத்தில் எங்கு தவறு சுட்டிகட்டிவிட்டு பின்னர் என்னுடைய மூளையை தேங்காய் முளையா அல்லது மாங்காய் மூளையா என்று விமர்சிக்கலாமே!
குறை என்று கூறிவிட்டு பதில் சொல்லாமல் போவதற்கு அப்படி என்ன அவசரம்?
Sugumar S T wrote:
//மன்னிக்கவும் தேங்காய் மூலை என்ற வார்த்தையை நமது Prophet Bernard Blessingஅவர்கள் பயன்படுத்துவார்...///
அவர் பயன்படுத்தினால் நீங்களும் பயன்படுத்திவிட வேண்டியதுதானா? தங்களுக்கென்று சுயமான வார்த்தை எதுவும் இல்லையா? வேதாமத்தில் உள்ள வார்த்தையையோ அல்லது சுயமாக ஏதாவது வார்த்தையையோ பயன்படுத்தி இருக்கலாமே.
Sugumar S T wrote:
////என் மூலம் தேவன் பேசிய வார்த்தைகளை பகிர்ந்துகொள்கிறேன்..////
தாங்கள் தேவன் வெளிப்படுத்தியதை எழுதப்போகிறேன் என்று சொல்வதால் அதை அறிய ஆவலுடன் இருக்கிறேன். தேவன் ஒருவரே அவர் எனக்கு ஒரு மாதிரியும் தங்களுக்கு வேறு மாதிரியும் தெரியபடுத்த மாட்டார் என்று நம்புகிறேன்.
ஆகினும் ஒரு ஒரு கருத்தை நான் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்.
"தீமை" என்பது லூசிபருக்குள் முதன் முதலில் நுழைவதற்கு தேவன் நேரடியாகவோ அல்லது மறை முகமாகவோ காரணர் அல்ல எனபதை நான் திட்டவட்டமாக நம்புகிறேன்.
தேவன் என்ற பரிசுத்தர் மட்டுமே இருந்து "தீயவை" என்று எதுவுமே இல்லாத அந்த நேரத்தில் அவர் உண்டாக்கிய லூசிபருக்குள் தீமையான எண்ணம் எப்படி உருவானது?
இல்லாத ஓன்று எப்படி தானாக உருவாக முடியும்?
ஒருவருக்கு சுயாதீனத்தை கொடுத்தாலும் இருப்பதை மட்டும்தானே அவர் தெரிவு செய்ய முடியும்? இல்லாத ஒன்றை எப்படி தெரிவு செய்ய முடியும்?
உதாரணமாக
ஏதேன தோட்டத்துக்குள் ஆதாமுக்கு தேவன் சுயாதீனத்தை கொடுத்திருந்தாலும் அங்கு நன்மை தீமை கனி இல்லை என்றால் அவன் எப்படி தீமை செய்திருக்க முடியும்?
சரியான விளக்கம் தாருங்கள் பின்னர் எனக்கு தெரிவிக்கபட்டது தேங்காய் மூளையால் வந்ததா என்பதை குறித்து ஆராய எனக்கு வசதியாக இருக்கும்.
-- Edited by SUNDAR on Wednesday 12th of February 2014 02:41:59 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)