விவிலியத்தில் எழுதியுள்ளபடி ஆதாமும் ஏவாளும் இறைவன் விலக்கிய கனியை புசித்து பாவம் செய்ததால் அவர்கள் இறைவனின் சாபத்துக்கு ஆளாகி வேதனை துன்பம் வலி மரணம் என்னும் உணர்வுகளை அனுபவித்தே ஆகவேண்டும்
என்ற நிலைக்குள்ளானார்கள்.
ஆனால மிருகங்களுக்கு எந்த நன்மைதீமையும் தெரிவதில்லை.
அவைகளை இறைவன் எங்கும் சபித்ததாகவும் தெரியவில்லை
ஆனால் இந்த உலகில் பிறக்கும் எல்லா உயிரினங்களும் கடும்
வேதனையை அனுபவிக்க காரணம் என்ன?
பசுவிடம் பால் கரப்பவன் ஊசியை அதன்மேல் குத்திவைத்து ரத்தம் வரும்வரை பாலை கரக்கிறான்.
நாய் படாத பாடு என்று அடிக்கடி சொல்வோம். நாயானது அவ்வளவு பாடுபடுகிறது.
காட்டில் வாழும் உயிரினங்களை துன்பபடுத்த கொன்று தின்ன என்று ஒவ்வௌன்றுக்கும் ஒவ்வொரு எதிரி இருக்கிறது
அது போதாதென்று, ஈ கொசு உண்ணி என்று மிருகங்களை
அவ்வப்போது துன்புறுத்த வகை வகையான வேறு உயிரிகள்
இருக்கிறது.
யோபு 39:3அவைகள் நொந்து குனிந்து தங்கள் குட்டிகளைப் போட்டு, தங்கள் வேதனைகளை நீக்கிவிடும்.
என்ற வசனத்தின்படி மிருகங்களும் நொந்து வேதனையோடு தான் குட்டிகளை போடுகின்றன.
ஏவாள் இறைவனால் சபிக்கபட்டாள் அவளும் அவளது சந்ததியும் பிள்ளைபெறும்போது பிரசவ வலியை அனுபவிக்கின்றார்கள்! இந்த ஒருபாவமும் அறியா மிருங்கள் என்ன தவறு செய்தன இவைகளை சபித்தது யார்?
இந்த கேள்விக்கு எனக்கு நீண்டநாளாக சரியான பதில் தெரியவில்லை. தெரிந்தவர்கள் சற்று விளக்கமாக பதில் தரும்படி அன்புடன் கேட்டுகொள்கிறேன்.
-- Edited by இறைநேசம் on Friday 9th of September 2011 04:42:27 PM
இந்த அளவுக்கு சிந்திக்கும் உங்களிடம் நிச்சயமாகவே பதிலும் இருக்கும்; ஆனாலும் அதிகப்படியான தாழ்மையினால் இவ்வாறு தெரிந்துகொள்ள கேட்பது போல கேட்கிறீர்கள் என்று நினைக்கிறேன்; நீங்களே சொல்லிவிடுங்கள்,ஐயா.
17: பின்பு அவர் ஆதாமை நோக்கி: நீ உன் மனைவியின் வார்த்தைக்குச் செவிகொடுத்து, புசிக்க வேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தபடியினாலே, பூமி உன் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும்
இந்தவசனத்தை நன்கு கவனித்து பார்த்தால் ஆதாம் பாவம் செய்தது நிமித்தம் இந்த பூமியே சபிக்க பட்டு போனது என்று தெரியவரும்
ஆதாம் பாவம் செய்ததினால் கர்த்தர் இந்த பூமியை சபித்தார்
பூமி என்று சொல்லும் பொழுது அந்த பூமியில் இருக்கும் அனைத்தும் அடங்கிவிடும் என்று கருதுகிறேன்
இந்த காரணத்தினால் தான் இந்த பூமியில் உண்டான மிருகங்கள் முதல் பறவைகள் வரை வேதனை அனுபவிக்க வேண்டியதாய் உள்ளது இந்த வேதனையும் தண்டனையும் ஆதாமின் பாவத்தினாலே வந்தது என்பது என் கருத்து
இன்னும் ஒன்றை சொல்ல விரும்புகிறேன் மிருகங்கள் மட்டும் அல்ல இப்பொழுது இருக்கிற மரம் செடி பூக்கள் இவையெல்லாம் அழிந்து போக காரணம் ஆதாமின் பாவத்தினாலே வந்தது
இல்லையென்றால் ஜீவன் உள்ளவர் படைத்த எதற்கும் மரணம் என்பதே இருந்து இருக்காது என்பது என் கருத்து
ஆதாமின் பாவமே இந்த பூமியில் இருக்கிற எல்லாம் மிருகங்களும் வேதனை அனுபவிக்க காரணமாய் இருந்தது இருக்கலாம் என்றே கருதுகிறேன்
தள நண்பர்கள் பதிவை எதிர் பார்க்கிறேன்..................
-- Edited by EDWIN SUDHAKAR on Friday 9th of September 2011 07:47:17 PM
__________________
காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)
இந்த அளவுக்கு சிந்திக்கும் உங்களிடம் நிச்சயமாகவே பதிலும் இருக்கும்; ஆனாலும் அதிகப்படியான தாழ்மையினால் இவ்வாறு தெரிந்துகொள்ள கேட்பது போல கேட்கிறீர்கள் என்று நினைக்கிறேன்; நீங்களே சொல்லிவிடுங்கள்,ஐயா.
என்மேல் இவ்வளவு நம்பிக்கை வைத்திருப்பதற்கு நன்றி அன்பரே. என்றாலும் அதற்க்கு நான் பாத்திரவான் அல்ல என்றே கருதுகிறேன் எனக்கு கேள்வி கேட்கமட்டும்தான் தெரியும். கேள்விகளை கேட்பது என்பது மிகவும் சுலபம். அதிலும் இறைவனை பற்றிய காரியங்களில் மூளையை சற்று குழப்பினாலே இது ஏன் எதற்கு எப்படி என்ற ஆயிரம் கேள்வி சுலபமாக எழுந்துவிடும். நான் கேட்ட அநேகமான கேள்விக்கு இங்கு பதில் இருக்கிறது ஆகினும் சில கேள்விகள் இன்றுவரை பதிலின்றியும் இருக்கிறது.
ஆதியாகமம்3 17: பின்பு அவர் ஆதாமை நோக்கி: நீ உன் மனைவியின் வார்த்தைக்குச் செவிகொடுத்து, புசிக்க வேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தபடியினாலே, பூமி உன் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும்
இந்தவசனத்தை நன்கு கவனித்து பார்த்தால் ஆதாம் பாவம் செய்தது நிமித்தம் இந்த பூமியே சபிக்க பட்டு போனது என்று தெரியவரும்
இந்த கேள்வியை பொறுத்தவரை "பூமி தேவனால் சபிக்கபட்டதால் அதில் பிறக்கும் எல்லா உயிரினங்களும் துன்பபடுகின்றன" என்ற பதில் ஒரு பொருத்தமான பதிலாகவே தெரிகிறது. ஆகினும் ஆதாமின் மீறுதலுக்கு பிற உயிரினங்கள் பாடு அனுபவிப்பது நியாயமா என்பது புரியவில்லை. அதேநேரேம் ஆதாம் செய்த பாவத்தால் மொத்த மனுஷ வர்க்கமே சாபத்துகுள்ளான போது மற்ற உயிரினங்கள் எம்மாத்திரம் என்றும் எண்ண தோன்றுகிறது.
வசன ஆதாரத்துடன் நல்ல பதில் தந்துள்ள சகோ. எட்வின் சுதாகர் அவர்களுக்கு நன்றி.
17: பின்பு அவர் ஆதாமை நோக்கி: நீ உன் மனைவியின் வார்த்தைக்குச் செவிகொடுத்து, புசிக்க வேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தபடியினாலே, பூமி உன் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும்
ஆதாமின் பாவத்தினிமித்தம் உருவான சாபத்தை பற்றி வேதம் இவ்வாறு சொல்கிறது
சர்ப்பத்துக்கான சாபம்:
ஆதி 3:14. அப்பொழுது தேவனாகிய கர்த்தர் சர்ப்பத்தைப் பார்த்து: நீ இதைச் செய்தபடியால் சகல நாட்டுமிருகங்களிலும் சகல காட்டுமிருகங்களிலும் சபிக்கப்பட்டிருப்பாய், நீ உன் வயிற்றினால் நகர்ந்து, உயிரோடிருக்கும் நாளெல்லாம் மண்ணைத் தின்பாய்;
15. உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார்.
உன் தலை நசுக்கப்படும் என்பதே!
ஸ்திரிக்கான சாபம்!
16. அவர் ஸ்திரீயை நோக்கி: நீ கர்ப்பவதியாயிருக்கும்போது உன் வேதனையை மிகவும் பெருகப்பண்ணுவேன்; வேதனையோடே பிள்ளை பெறுவாய்; உன் ஆசை உன் புருஷனைப் பற்றியிருக்கும், அவன் உன்னை ஆண்டுகொள்ளுவான் என்றார்.
பிரசவ வேதனை மற்றும் புருஷனை பற்றிய கவலை!
ஆதாமுக்கான சாபம்!
17. பின்பு அவர் ஆதாமை நோக்கி: நீ உன் மனைவியின் வார்த்தைக்குச் செவிகொடுத்து, புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தபடியினாலே, பூமி உன் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும்; நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் வருத்தத்தோடே அதின் பலனைப் புசிப்பாய். 18. அது உனக்கு முள்ளும் குருக்கும் முளைப்பிக்கும்; வெளியின் பயிர்வகைகளைப் புசிப்பாய். 19. நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்குத் திரும்புமட்டும் உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய்; நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய் என்றார்.
பூமியின்பலனை வருத்ததோடு புசிப்பது இறுதியில் மண்ணுக்கு திரும்புவது.
ஸ்திரியை பார்த்து தேவன் மண்ணுக்கு திரும்புவாய் என்று சொல்லவில்லை என்றாலும் ஸ்திரி ஆதாமின் எலும்பில் இருந்து உருவாக்கபட்டபடியால் அவளும் மண்ணுக்கு திரும்புகிறாள் என்று வைத்துகொள்ளலாம்.
ஆனால் மற்ற உயிரினங்களை பார்த்து தேவன் மண்ணுக்கு திரும்புவீர்கள் என்று சொல்லவில்லை ஆனாலும் எல்லா உயிரினங்களும் மரித்து மண்ணுக்குத்தான் திரும்புகின்றன.
மேலும் தேவன் ஆதாமிநிமித்தமே பூமியை சபித்து இவ்வாறு சொல்கிறார்:
17.பூமி உன் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும்; ..................... 18. அது உனக்கு முள்ளும் குருக்கும் முளைப்பிக்கும்
இதில் எங்கும், மற்ற உயிரினங்களை சபித்தது போலவோ அல்லது மற்ற எல்லா உயிரினங்களும் வேதனைப்படும் என்பது போலவோ அல்லது மிருகங்கள் ஒன்றை ஓன்று கொன்று தின்னும் என்பது போலவோ எந்த வார்த்தை அமைப்பும் இல்லை என்றே நான் கருதுகிறேன்.
எனவே பூமியை சபித்தது பாவம் செய்த மனுஷன் வேதனையை அனுபவிக்க வேயன்றி, மற்ற உயிரினங்களும் வேதனையை அனுபவிக்க என்று நாம் எடுத்து கொள்வது சரியான ஒரு கருத்தா?
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)