பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் சினிமா படம் தயாரிப்பவர்கள் என்னதான் ஒரு சீரியசான கதையாக சொன்னாலும், இடையிடையே சில காமெடி சீன்களை புகுத்தி, படம் பார்ப்போருக்கு சற்று ஆசுவாசத்தையும் சிரிப்பையும் ஏற்ப்படுத்தி அவர்களை கவர நினைப்பது உலக சினிமா பாணி! ஆனால் இங்கு தேவனை பற்றி எழுதும் நமக்கோ அது போன்ற கேலியும் கிண்டலும் சற்றும் தேவையில்லாத ஓன்று!
நான் அறிந்தவரை வேதபுத்தகத்தில், உயிரோடு பரலோகம் ஏறிப்போகுமளவுக்கு வல்லமை பெற்றிருந்த எலியா தீர்க்கதரிசிமட்டும், ஒரே ஒருமுறை பாகாலின் மனுஷர்கள் உயிரில்லாத தெய்வங்களை திரும்ப திரும்ப கூப்பிட்டுகொண்டு தங்களைதாங்களே காயப்படுத்திக் கொண்டு ஆடியதை பார்த்து சகிக்கமாட்டாமல் இவ்வாறு கூறினான்!
I இராஜாக்கள் 18:27மத்தியானவேளையிலே எலியா அவர்களைப் பரியாசம்பண்ணி: உரத்த சத்தமாய்க் கூப்பிடுங்கள்; அவன் தேவனாமே, அவன் தியானத்தில் இருப்பான்; அல்லது அலுவலாயிருப்பான்; அல்லது பிரயாணம்போயிருப்பான்; அல்லது தூங்கினாலும் தூங்குவான்; அவனை எழுப்பவேண்டியதாக்கும் என்றான்.
அதுதவிர, ஆண்டவராகிய இயேசுவோ அல்லது பவுலோ அல்லது எந்த அப்போஸ்தலரோ அல்லது தீர்க்கதரிசிகளோ காமெடியாகவோ விளையாட்டு க்காகவோ அல்லது அடுத்தவரை கவரும்விதமாகவோ எதுவும் சொல்லவில்லை. அவர்கள் சொல்லியுள்ள எல்லா வார்த்தைகளுமே மிகுந்த பாடுகள் மத்தியில் சொல்லபட்டதும் மிகவும் சீரியசானதும் நித்தியத்தை தீர்மானிப்பதும் பாதாளத்தை மேற்கொள்ளும் வல்லமையுள்ளதாகவும் இருக்கிறது.
எழுத்து நடையிலும் சொல்லும் விதத்திலும் காமெடியும் கிண்டலும் கேலியும் இருந்தால், அதுபோன்ற கிண்டலும் கேலியும் செய்ய விரும்பும் அநேகருக்கு அது நிச்சயம் பிடிக்கும் என்பது பலர்அறிந்த உண்மை. ஆனால் அவ்வித கிண்டல் வார்த்தைகள் சம்பந்தப்பட்டவர்களையோ அதிகமாக பாதிக்கும் மேலும் இது போன்ற பரியாச வார்த்தைகள் ஆண்டவருக்கு நிச்சயம் பிடிக்காது! எனவேதான் "பரியாசக்காரர் உட்காரும் இடத்தில்கூட உட்காரகூடாது" என்று வசனம் சொல்கிறது!
கேலி கிண்டலுடன் எழுதுவதும் என்பது ஏறக்குறைய வேதம்குறிப்பிடும் "பரியாசம் பண்ணுதல்"என்ற தேவனுக்கு பிடிக்காதசெயலுக்குள்ளேயே அடங்குகிறது. பரியாசம்
பன்னுகிரவனின் குணநலன்கள் என்பதை குறித்த கருத்துக்களை கீழ்கண்ட திரியில் சொடுக்கி அறிந்துகொள்ளவும்!
நாம் இங்கு எழுதும் காரியங்கள் நமது 'நேரப்போக்குக்காகவோ அல்லது மனுஷனுக்கு கிளுகிளுபூடுவதர்க்காகவோ அல்லது யாரையும் கவருவதர்க்காகவோ
அல்லது கூட்டம் செர்ப்பதர்க்காகவோ அல்ல" என்பதை அறிய வேண்டும். நாம் எழுதும் ஒவ்வொரு வார்த்தைகளும் மிக முக்கியமானதும், நமது இம்மை மற்றும் மறுமை வாழ்வையும் இதை படிப்போரின் நித்திய வாழ்வையும் தீர்மானிப்பதாகவும் இருக்கிறது.
எனவே தேவனையும் அவர் வார்த்தைகளையும் பற்றி எழுதுபவர்கள் அவற்றின் முக்கியத்துவத்தையும் அதை நிராகரிப்போருக்கும் கிடைக்கும் தண்டனையையும்
கருத்தில்கொட்டு பரியாசம் கேலி கிண்டலை தவிர்த்து, கருத்துக்களை ஒழுங்காகவும் சற்றுசீரியசாகவும் சொல்வதே சிறந்தது என்பது எனது வேண்டுகோள்.
-- Edited by SUNDAR on Saturday 10th of September 2011 11:01:22 AM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)