பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகம் ஒருவரிடத்தில் இருக்கும்பொழுது, மற்றவர்கள் அந்த நபருக்கு எதுவும் போதிக்க வேண்டிய
அவசியம் இல்லை.பரிசுத்த ஆவியானவரே சகலத்தையும்
அவருக்கு போதிக்கிறார். இதற்கு ஆதாரமாக
வேதத்தில் பின்வரும் வசனங்கள் உண்டு...
I யோவான் 2:20 நீங்கள் பரிசுத்தராலேஅபிஷேகம் பெற்றுச் சகலத்தையும் அறிந்திருக்கிறீர்கள். I யோவான் 2:27 நீங்கள் அவராலே பெற்ற அபிஷேகம் உங்களில் நிலைத்திருக்கிறது, ஒருவரும் உங்களுக்குப் போதிக்கவேண்டுவதில்லை; அந்தஅபிஷேகம் சகலத்தையுங்குறித்துஉங்களுக்குப் போதிக்கிறது; அது சத்தியமாயிருக்கிறது, பொய்யல்ல, அது உங்களுக்குப் போதித்தபடியே அவரில் நிலைத்திருப்பீர்களாக.
பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகம் நம்மிடத்தில்
வரும்போது நாம் ஆவிக்குரியவர்களாய்
மாறி, ஆவிக்குரிய அனைத்து காரியங்களையும் நாம் புரிந்து அதை மற்றவர்களுக்கும் சம்பந்தபடுத்தி அதை புரிய வைக்க முடியும். இதற்க்கு ஆதாரமாக வேதத்தில் பின்வரும் வசணமும் உண்டு...
I கொரிந்தியர் 2:13 அவைகளை நாங்கள் மனுஷஞானம் போதிக்கிற வார்த்தைகளாலே பேசாமல், பரிசுத்த ஆவி போதிக்கிற வார்த்தைகளாலே பேசி, ஆவிக்குரியவைகளை ஆவிக்குரியவைகளோடே சம்பந்தப்படுத்திக்காண்பிக்கிறோம்.
ஆதலால் பரிசுத்த ஆவியானவரை வாஞ்சித்து பெற்று கொண்டு ஆவிக்குரிய ஞானத்தை பெறுவோமாக.
-- Edited by Sugumar S T on Tuesday 13th of September 2011 04:54:53 PM
__________________
Sugumar Samuel T
யோவான் 8:32சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார்.
I கொரிந்தியர் 2:13 அவைகளை நாங்கள் மனுஷஞானம் போதிக்கிற வார்த்தைகளாலே பேசாமல், பரிசுத்த ஆவி போதிக்கிற வார்த்தைகளாலே பேசி, ஆவிக்குரியவைகளை ஆவிக்குரியவைகளோடே சம்பந்தப்படுத்திக்காண்பிக்கிறோம்.
ஆதலால் பரிசுத்த ஆவியானவரை வாஞ்சித்து பெற்று கொண்டு ஆவிக்குரிய ஞானத்தை பெறுவோமாக.
சகோதரர் சுகுமார் அவர்களே வேத வசனத்துடன் பரிசுத்த ஆவியானவர் போதிப்பதை மிக அழகாக சொன்னீர்கள்
மேலும் நீங்கள் பரிசுத்த ஆவியானவரை பற்றி அறிந்து கொள்ள விரும்பினால்சகோ: சுந்தர் அவர்கள் எழுதிய பரிசுத்த ஆவியானவர் ஒரு விளக்கம்என்ற பதிவை கிழே உள்ள தொடுப்பை சொடுக்கி
பரிசுத்த ஆவியானவரை இன்னும் அதிகமாய் அறிந்து கொள்ளுங்கள்
எனக்கு மிகவும் பிரோஜினமாய் இருந்ததால் உங்களுக்கு சொல்கின்றேன்...