தேவனுடைய ஊழியர்கள் வரங்களை வாஞ்சித்து கேட்பது தவறு இல்லை
ஆனால் அது தேவனுடைய சித்தமா என்று கேட்காமல்
அதையே பிடிவாதமாக கேட்டு பெற்று கொள்வது தான் தவறு
வரங்கள் என்பது சாதாரணமானது அல்ல அந்த வரங்களினால் வரும் பிரச்சனைகளும் சாதாரனமானவைகள் அல்ல
எனக்கு தெரிந்து ஒரு ஊழியக்காரர் ஒரு வாலிப கூட்டத்தில் பிரசங்கம் செய்து முடித்த பின் எல்லோருக்காகவும் ஜெபித்தார்
அவர் ஜெபிக்கும் பொழுது அவர்களுக்குள் இருக்கும் ஆவியை அப்படியே சொல்லி அவர்களை கிழே விளவைப்பார் போதகர்கள் ஊழியர்களை கூட கிழே விளவைத்ததை நான் பார்த்து இருக்கிறேன் ஒருவர் கூட விழாமல் இருக்கமாட்டார்கள்
ஒருமுறை நானும் அவரிடம் ஜெபிக்கும் படி சென்றிருந்தேன் அவர் ஜெபிக்கும் பொழுது நான் கிழே விழவேயில்லை தீடிரென்று அவர் என் தலையில் கையை வைத்தார் அவர் யார் தலைகளிலும் கைகளை வைக்காமல் கிழே விளவைப்பார் ஆனால் நான் கிழே விழவில்லை என்று தெரிந்ததும்
அவர் என் தலையில் கைகளை வைத்து பலமாக அழுத்தினார் அவர் நோக்கம்
எப்படியாவது என்னை கிழே தள்ளவேண்டும் நானோ கடைசிவரை கிழே விழவில்லை அவர் நல்ல ஊழியர்தான் ஆனால் ஒரு அற்ப காரியம் அதாவது எல்லோரும் விழுந்தார்கள் இவன் விழவில்லையே என்று ஒரு கட்ட எண்ணம் அவருக்குள் உருவானது
ஆம் சகோதர்களே இது போல ஒரு அற்பகாரியத்தினால் ஏற்படும் விளைவே நம்மை தேவனுக்குள் பிரிவை ஏற்படுத்திவிடும்
பல தீர்கதரிசிகள் கூட நோட்டீஸ் பேனர்களில் தீர்கதரிசனம் வரம் பெற்றவன் என்று பெயரை போட்டுகொண்டு வஞ்சிக்கப்பட்டு போகின்றார்கள் கூட்டங்களை நடத்தும் பொழுதும் தீர்க்கதரிசனும் வருகின்றதோ இல்லையோ ஆனால் அவர்கள் தீர்கதரிசனம் சொல்லியே ஆக வேண்டும் என்ற கட்டாய நிலை உண்டாகும் நேரத்தில் அவர்கள் பொய்களை சொல்ல வேண்டியுள்ளது
காரணம் நோட்டீஸ் பேனர்களில் தீர்கதரிசனம் வரம் பெற்றவன் என்ற பெயர் தான்
வரங்களை பெற்ற தீர்கதரிசி எப்படி இருக்க வேண்டும்
ஆமோஸ் : 7
14. ஆமோஸ் அமத்சியாவுக்குப் பிரதியுத்தரமாக: நான் தீர்க்கதரிசியுமல்ல, தீர்க்கதரிசியின் புத்திரனுமல்ல; நான் மந்தை மேய்க்கிறவனும், காட்டத்திப்பழங்களைப் பொறுக்குகிறவனுமாயிருந்தேன்.
15. ஆனால் மந்தையின் பின்னாலே போகிறபோது என்னைக் கர்த்தர் அழைத்து, நீ போய் என் ஜனமாகிய இஸ்ரவேலுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொல்லு என்று கர்த்தர் உரைத்தார்
தேவனுடைய தீர்கதரிசியான ஆமோஸ் என்பவருக்கு என்ன ஒரு தாழ்மை பாருங்கள் தீர்கதரிசியாய் இருந்தாலும் அங்கு கர்த்தருடைய சித்தத்தை மட்டுமே சொல்கின்றார்
இப்படியே தாழ்மையோடு இருந்து தேவனுடைய சித்தத்தை மட்டும் நினைத்து கொண்டு அவர் சொல்வதை மட்டும் செய்யுங்கள் நான் ஒரு தீர்கதரிசி என்று பெருமைகொல்லாமல் தாழ்மையோடு இருங்கள்
நோட்டீஸ் பேனர்களில் தீர்கதரிசனம் வரம் பெற்றவன் என்ற பெயரை போடாமல் இருங்கள் இல்லையென்றால் அதுவே உங்களுக்குஒரு கன்னியாய் இருக்கும் என்பதை மறவாதீர்கள்
வரம் என்பது பெருமையை கொண்டு வரும் (கொண்டு வருபவன்சாத்தான் )
வரம் மேட்டிமையை கொண்டு வரும் (கொண்டு வருபவன் சாத்தான் )
வரம் பெற்ற தேவ ஊழியர்களே ஜாக்கிரதையாய் இருந்து தேவனுடைய சித்தத்தின் படி செய்யுங்கள தேவனுடைய சித்தம் இல்லையென்றால்
நீங்கள் பெற்ற வரும் ஒன்றுக்கும் பிரோஜினம் இல்லை என்பதை மறவாதீர்கள்
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இன்னும் அருமையாக சொல்கின்றார்
மத்தேயு : 7
21. பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.
(3) ராஜாக்களுக்கும் பெரிய அதிகாரிகளுக்கும் தீர்க்கதரிசனம் சொல்வது பெரிய காரியம் அல்ல
தேவனுடைய சித்தத்தின் படி செய்து முடிப்பதே மேலே சொன்ன எல்லாவற்றையும் விட பெரியது....... "
பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.
மத்தேயு 7 : 21
மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?
மாற்கு 8 : 36
நீ வெட்கபடாத ஊழியக்காரனாயும் சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்துப் போதிக்கிறவனாயும் உன்னைத் தேவனுக்கு முன்பாக உத்தமனாக நிறுத்தும்படி ஜாக்கிரதையாயிரு.
II தீமோத்தேயு 2 : 15
சுவிசேஷத்தை எங்களிடத்தில் ஒப்புவிக்கத்தக்கதாய், தேவன் எங்களை உத்தமரென்றெண்ணினபடியே, நாங்கள் மனுஷருக்கு அல்ல, எங்கள் இருதயங்களைச் சோதித்தறிகிற தேவனுக்கே பிரியமுண்டாகப் பேசுகிறோம்.
நீ வெட்கபடாத ஊழியக்காரனாயும் சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்துப் போதிக்கிறவனாயும் உன்னைத் தேவனுக்கு முன்பாக உத்தமனாக நிறுத்தும்படி ஜாக்கிரதையாயிரு.
II தீமோத்தேயு 2 : 15
சகோதரர்கள் சொல்வதுபோல், வரம்பெற்றவனை விட இறைவனுக்கு முன்பாக தன்னை உத்தமனாக காத்து கொள்பவனே தேவ சித்தங்களை சரியாக நிறைவேற்ற முடியும்.
அநேகர் பெரிய பெரிய பாவங்களை மட்டும்தான் பாவம் என்று கருதுகிறார்கள் ஆனால் இறைவனோடு ஐக்கியப்படும்
ஒரு பரிசுத்த நிலையை அடைவதற்கு சிறிய சிறிய தவறுகள் அல்லது மீறுதல்கள் கூட தடையாக அனேக நேரங்களில் அமைந்துவிட வாய்ப்புண்டு.
உதாரணமாக "கபடு" என்று சொல்லப்படும் மாய்மாலத்தை அநேகர் அறிந்திருக்கலாம். அது பார்வைக்கு பெரிய பாவம் போல தெரியாது. ஆனால் அந்த "மாயமாலமே" பரிசேயர் சதுரேயர் என்ற அன்றைய போதகர் கூட்டத்தில் இருந்த பெரிய பாவம் என்று கருதுகிறேன். அதை இயேசு மிக அதிகமாக கண்டிந்து கொண்டதை நாம் அறியமுடியும்.
அடுத்து "பெருமை" என்னும் பாவம். இதுவும் பார்ப்பதற்கு பெரிய பாவம்போல தெரிவதில்லை. அதுஒரு மனுஷனுக்குள் இருந்தால் கூட அது அவனுக்கே பல நேரங்களில் புரிவ தில்லை. வரம் பெற்ற பிரபல ஊழியர்களுக்குள் இந்த
பெருமை தானாகவே வந்து அமர்ந்துக்கொண்டு, அவர்களை லூசிப்பரின் ரேஞ்சுக்கு உயர்த்திவிடும். அதிலிருந்து தப்பிப்பது மிக மிக கடினமான காரியம்.
எனவே வரங்களையும் வசதியையும் தேடுவதை விட்டு மாசற்ற சுத்த இருதயத்தோடு தேவனுக்கு முன்னாக நடப்பதோடு, ஒருவரிலொருவர் அன்பு கூறுவதிலும் கபடில்லா சுத்தஇருதயத்தோடு இருக்கவேண்டும் என்றே இறைவன் அதிகம் விரும்புகிறார் என்பது வசனம் சொல்லும் கருத்து.
பேதுரு 1:22ஆகையால் நீங்கள் மாயமற்ற சகோதர சிநேகமுள்ளவர்களாகும்படி, ஆவியினாலே சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்து, உங்கள் ஆத்துமாக்களைச் சுத்தமாக்கிக்கொண்டவர்களாயிருக்கிறபடியால், சுத்த இருதயத்தோடே ஒருவரிலொருவர் ஊக்கமாய் அன்புகூருங்கள்;
-- Edited by இறைநேசம் on Monday 19th of September 2011 09:35:54 PM
நான் டிவியில் போதகர்களுடைய பிரசங்கங்களை கேட்க்கும் பொழுது சிலர் போதர்களினால் மிகுந்த மனகஷ்டங்கள் அடைந்துள்ளேன்
அதாவது மிக பெரிய போதர்கள் இன்றைய முக்கிய செய்தி என்பது போல இன்றைக்கு எல்லா கூட்டகளிலும் இந்த காரியங்களை மட்டும் தான் பேசுகின்றார்கள் அது என்னவன்றால்
(1 ) அன்னியபாஷை மற்றும் தீர்க்கதரிசனவரம் (2 ) ஆசிர்வாதாம்
ஆசிர்வாதடிவியில் எனக்கு தெரிந்து ஒரு மிக பெரிய போதகர் நான் பார்க்கும் பொழுதெல்லாம் அன்னிய பாஷை மற்றும் தீர்க்கதரிசனவரம் இதை தவிர வேறு எந்த ஒரு வார்த்தையும் அதிகமாய் பேசி நான் பார்த்ததே இல்லை
தேவனுடைய கட்டளைக்கு கீழ்படிந்து வாழுதல் அன்பு, இரக்கம், தானம், தர்மம், தாழ்மை, சகிப்புதன்மை, பொறுமை, நிதானம், உண்மை, நீதி இப்படிபட்ட வார்த்தைகள் நான் அவருடைய பிரசங்கத்தில் கேள்விபடவே இல்லை என்று நினைக்கின்றேன்
ஆம் எப்பொழுது பார்த்தாலும் அன்னியபாஷை மற்றும் தீர்க்கதரிசன வரம் இவை இரண்டு தான் அவர் வேதத்தில் கற்று கொண்டாரா என்பது கூட புரியவில்லை இதில் ஒரு தவறும் இல்லை ஆனால் இதினால் ஒரு ப்ரோஜினமும் இல்லை என்பதே நான் கூற வரும் கருத்து
ஒரு முறை இரு முறை சொல்லலாம் அதற்காக சொல்லிக் கொண்டே இருப்பது என்பது சாத்தானின் தந்திரங்களில் அதாவது வலைகளில் விழுவதுபோல
எத்தனை மக்கள் எத்தனை வாலிபர்கள் அவர்களுக்கு தேவனுடைய கற்பனைகளையும் நீதியையும் அதிகமாக சொல்லி கொடுத்திருந்தால் 1000 த்தில் 100 நபர்களாவது தேவனுக்கு கீழ்படிந்து உண்மையாய் வாழ்ந்து இருப்பார்கள் ஆனால் இப்பொழுது எல்லோரும் வரங்களை மட்டுமே தேவனிதில் எதிர்பார்த்து கொண்டு இருப்பார்கள்
என் சகோதர்களே வரங்களை தேவனிடத்தில் வாஞ்சித்து கேட்பதைவிட அவருடைய கட்டளைகள் கற்பனைகள் படி வாழ பெலத்தையும் அவருடிய பரிசுத்த ஆவியையும் வாஞ்சித்து பெற்றுகொள்ளுங்கள் கர்த்தருடைய கட்டளைகளை கைகொண்டு நடப்பதினால் கர்த்தரும், ஏசுவும் மிகவும் சந்தோஷபடுவார்கள்
சர்வத்தையும் படைத்த நம் தேவனுக்கு நாம் என்னத்தை அவருக்கு கொடுக்க முடியும் பணமா பொருளா நாம் வாயினால் சொல்லும் ஷ்தோத்திரமா இவைகளை செய்வதினால் அவர் சந்தோஷபடுவாரா இல்லவே இல்லை மனிதன் அவரை பிரியபடுத்த வேண்டும் அல்லது நம்மை உண்டாக்கினவர் நம்மை குறித்து சந்தோஷபடுத்த வேண்டும் என்று நினைத்தால்
அவருடைய கட்டளை கற்பனைகள் போன்றவற்றிக்கு கீழ்படிந்து எல்லாவற்றிலும் உண்மையாய் வாழுங்கள் அதுதான் ஒரு மனிதன் தேவனுக்கு கொடுக்கும் சந்தோஷம்
தேவனால் அபிஷேகிக்க பட்ட போதகர்களே ஊழியர்களே வரம் என்பது மனிதர்களை கடவுளிடம் திருப்ப தான் அதை விட்டு விட்டு மனிதர்களை வரங்களிடம் திருப்பிவிடாதீர்கள்
தயவு செய்து மனிதர்களை தேவனுடைய கட்டளைக்கும் கற்பனைக்கும் கீழ்படியும் படி தேவனிடத்தில் திருப்புங்கள் இது தான் உண்மையான ஊழியம்..................
-- Edited by EDWIN SUDHAKAR on Friday 4th of November 2011 11:45:11 AM
__________________
காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)