பரிசுத்த வேதாகமத்தின் உண்மை தன்மை, வேத வசனங்களின் வல்லமை, கிறிஸ்த்துவின் கிரையபலியால் வரும் மீட்பு, இயேசுவின் தெய்வதன்மை, இயேசுவின் வார்தைகள்படி வாழ்தல் போன்ற கிறிஸ்த்தவத்தின் அடிப்படை கொளகைகளில் மற்ற கிறிஸ்த்தவ சகோதரர்களின் கொள்கைகளில் இருந்து நாம் எவ்விதத்திலும் மாறுபடவில்லை என்றாலும், நமக்கு கிடைத்த சில அரிய வெளிப்பாடுகள் மற்றும் தேவ வழிநடத்துதல் அடிப்படையில் நாமறிந்த சில மேலான செய்திகளை வசன ஆதாரத்தோடு நம்முடய தளத்தில் பதிவிட்டு வருகிறோம்.
பதில் சொல்லமுடியாத கேள்வி என்று எதுவும் இல்லை என்பதை நிரூபிப்பதோடு, தேவன் தம்முடய செயலில் எல்லாம் நீதியுள்ளவர் அவர் எவ்விதத்திலும் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்கும் நோக்கத்தோடுதான் இங்கு அனேக கருத்துக்கள் எழுதபடுகின்றன.
இந்நிலையில் இங்கு நாம் எழுதும் பல செய்திகள் பொதுவான கிறிஸ்த்தவ கொள்கைகளைவிட சற்று மாறுபட்டு இருப்பதால் பல புதியதாக வரும் விசுவாசிகள் இந்த செய்திகளிநிமித்தம் இடரலடைய வாய்ப்புள்ளதுபோல் இருக்கலாம். ஆனால் என்னை பொறுத்தவரை நாம் எங்கும் யாருக்கும் இடரலுண்டாக்கும் செய்திகளை எழுதுவது இல்லை. ஒரு செய்தி யாருக்காவது இடரலுண்டாக்கும் என்று கருதினால் அதை உடனே நீக்கிவிடுகிறோம்.
இந்நிலையில் கீழ்கண்ட திரிகளில் உள்ள செய்திகளால் யாரும் இடரலடைய வாய்ப்புண்டா?
இங்குள்ள இதுபோன்ற வேறு ஏதாவது திரிகளில் யாருக்காவது இடரலை ஏற்ப்படுத்தும் செய்திகள் இருக்குமாயின் அது எவ்விதத்தில் இடரலுண்டாக்கும் என்பதை ஓரிரு வரிகளில் சகோதரர்கள் தெரிவிக்கும்படி அன்புடன் கேட்டு கொள்கிறேன்.
மத்தேயு 18:6 என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிற இந்தச் சிறியரில் ஒருவனுக்கு இடறலுண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல்லைக் கட்டி, சமுத்திரத்தின் ஆழத்திலே அவனை அமிழ்த்துகிறது அவனுக்கு நலமாயிருக்கும்.
என்று ஆண்டவராகிய இயேசு சொல்லியிருப்பதால், இந்த விஷயத்தில்நாம் மிகவும் ஜாக்கிரதையாக இருபது நல்லது. இயேசுவின் மேலுள்ள விசுவாசத்தை வர்த்திக்க பண்ணும் வார்த்தைகளை தவிர இயேசுவின் மேலுள்ள விசுவாசத்தை குறைக்கும் எந்த ஒரு வார்த்தையோ அல்லது கருத்தோ இங்கு எழுதப்படுவதை நாம் நிச்சயம் தவிர்க்க வேண்டும்.
எனவே இந்த தளத்தின் கருத்துக்களை படிக்கும்அன்பான சகோதரர்களே! தாங்கள் தயவுசெய்து தாங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி அன்புடன் வேண்டுகிறேன். இடரலுண்டாக்கும் என்று நீங்கள் கருதினால் அது எவ்விதத்தில் என்பதை ஓரிரு வரிகளில் தெரிவித்தால் அது எமக்கு மிகுந்த பிரயோஜனமாக அமையும் என்று கருதுகிறேன்.
நீங்கள் சரியான ஒரு முடிவுக்கு வரும்முன்னர் கீழ்கண்ட கட்டுரையை ஒருமுறை
அதாவது இயேசு தரும் இரட்சிப்பை ஒருவருக்கு எடுத்துசொல்லி ஒரு ஆத்துமாவை கிறிஸ்த்துவின் கரத்துக்குள் கொண்டுவருவது ஒரு மேலான பணி என்றாலும், தேவனின் சித்தமாகிய "எல்லோரும் மீட்கப்படவேண்டும்" என்ற சித்தத்தை நிறைவேற்ற முனையும் இன்னொரு பணியும் இருக்கிறது. எல்லோரும் மீட்கப்பட வேண்டும்" என்று சித்தம் கொண்டுள்ள தேவன், அதற்க்கு ஏதாவது ஒரு வழி வைத்திருப்பார் அல்லவா? தேவனின் சித்தம் சம்பந்தமான அந்த பணி அநேகருக்கு தெரிவதும் இல்லை! சொன்னால் அதை புரிந்துகொள்வதும் இல்லை. வேதம் முழுவதும் பணியை பற்றிய செய்தி பரந்து கிடக்கிறது. அதை புரிய வைப்பது சம்பந்தமான செய்திகளே இங்கு அதிகம் எழுதப்படுகின்றன.
ஆகினும் எல்லோர் மேலும் விழுந்த முதல் பணியாகிய சுவிசேஷத்தின் அடிப்படையில் மீட்பு என்ற பணியை பாதிக்காத விதமாகவும், மீட்கப்பட்ட எவரும்
இடரலடயாத விதமாகவும் எங்கள் கருத்துக்களை சொல்ல விளைகிறோம்
அவ்வளவே!
இயேசு இறுதியாக சொன்ன இரண்டு கட்டளைகளில் இந்த இரண்டு பணியும் அடங்கியிருக்கிறது:
மத்தேயு 28:19. நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,
20நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்
முதல்பணி:
சகல ஜாதிகளையும் சீஷராக்கி ஞானஸ்தானம் கொடுத்தால்
இரண்டாம் பணி:
இயேசு கட்டளையிட்ட யாவையும் கைகொள்ளும்படி உபதேசித்தல்.
முதல் பணி அனைவரும் அறிந்த ஆத்தும ஆதாய பணியாகும். இரண்டாம் பணியாகிய அவரது கற்பனையை சரியாக கைகொள்ளுவதே சாத்தானை ஜெயம் கொண்டு அனைவருக்கும் மீட்பை கொண்டுவரும் தலையாய பணியாகும்.
வெளி 22:14ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள்
இந்த தலையாய இரண்டாம்பணியை இயேசுவை ஏற்றுக்கொண்டுள்ள நம் போன்றவர்கள் மட்டுயே செய்ய முடியும், இயேசுவை ஏற்றுக்கொண்ட ஒருவனே ஜெயம்கொள்ள முடியும்! என்பதால் அதை பற்றிய முழு விளக்கங்களையே இங்கு எழுதி வைக்கிறேன்!
எல்லோருக்கும் மீட்பு என்ற திட்டமே தேவனிடம் இல்லை (அதாவது தேவனுக்கு எல்லோரும் மீட்கப்பட்டுவிட வேண்டும் என்ற சித்தம் இருந்தாலும் எல்லோரையும் மீட்கும் திட்டம் எதுவும் அவரிடம் இல்லை) என்று கருதுபவர்கள் தேவனை சரிவர புரியாதவர்கள். மனுஷர்களாகியநாமே நமக்கு ஏதாவது விருப்பம் உண்டானால் அதை எப்படியாவது நிறைவேற்ற ஏதாவது ஒரு வழியை கண்டு பிடிக்கிறோம். இவ்வாறு இருக்கையில்:
I தீமோ 2:4எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.
என்று வசனம் சொல்வதால், தேவன் "எல்லோரும் மீட்கப்பட வேண்டும்" என்ற தன் சித்தத்தை நிறைவேற்ற நிச்சயம் ஏதாவது ஒரு வழி வைத்திருப்பர் என்பதை நம்பி ஏற்க்க விரும்பாதோர், தேவனின் வல்லமையே சந்தேகிப்பவர்கள் என்றே நான் கருதுகிறேன். எனவே அவர்களை பற்றி எனக்கு கவலை இல்லை.
இந்ததளத்தில் எழுதப்படும் செய்திகளின் முக்கியத்துவம் பலருக்கு புரியாமல் இருக்கலாம் ஆனால் ஆண்டவர் ஒருவருக்கு புரியவைத்தால் நிச்சயம் புரியும்! எனவே தங்களை பெரிய பாஸ்டர்/ வேத விறப்பண்ணர் என்று கருதிக்கொண்டு இங்குள்ள கருத்துக்களின் முக்கியத்துவம் அறியாதவர்கள் சொல்லும் விமர்சனத்தை நாம் கண்டுகொள்வதில்லை.
மாறாக இங்குள்ள கருத்துக்கள் சொல்லபட்டுள்ள விதத்தில் யாருக்காவது
இடறல் உண்டாக்குவது போல் இருந்தால் அது எவ்வாறு இடரலுண்டாக்கும் என்ற ஒரு சிறிய விளக்கத்தோடு எமது பார்வைக்கு கொண்டுவரும்படி அன்புடன் வேண்டுகிறேன்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
//இங்குள்ள கருத்துக்கள் சொல்லபட்டுள்ள விதத்தில் யாருக்காவது இடறல் உண்டாக்குவது போல் இருந்தால் அது எவ்வாறு இடரலுண்டாக்கும் என்ற ஒரு சிறிய விளக்கத்தோடு எமது பார்வைக்கு கொண்டுவரும்படி அன்புடன் வேண்டுகிறேன்.//
அன்பான சகோதரரே!
இப்பதிவில் தாங்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க எனது கருத்தைப் பதிக்க ஆசிக்கிறேன்.
சுந்தர்:
//எல்லோருக்கும் மீட்பு என்ற திட்டமே தேவனிடம் இல்லை (அதாவது தேவனுக்கு எல்லோரும் மீட்கப்பட்டுவிட வேண்டும் என்ற சித்தம் இருந்தாலும் எல்லோரையும் மீட்கும் திட்டம் எதுவும் அவரிடம் இல்லை) என்று கருதுபவர்கள் தேவனை சரிவர புரியாதவர்கள். மனுஷர்களாகியநாமே நமக்கு ஏதாவது விருப்பம் உண்டானால் அதை எப்படியாவது நிறைவேற்ற ஏதாவது ஒரு வழியை கண்டு பிடிக்கிறோம். இவ்வாறு இருக்கையில்:
I தீமோ 2:4எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.
என்று வசனம் சொல்வதால், தேவன் "எல்லோரும் மீட்கப்பட வேண்டும்" என்ற தன் சித்தத்தை நிறைவேற்ற நிச்சயம் ஏதாவது ஒரு வழி வைத்திருப்பர் என்பதை நம்பி ஏற்க்க விரும்பாதோர், தேவனின் வல்லமையே சந்தேகிப்பவர்கள் என்றே நான் கருதுகிறேன்.//
இப்பதிவின் மூலம், “எல்லோருக்கும் மீட்பு” எனும் திட்டம் தேவனிடம் இருப்பதாகக் கூறுகிறீர்கள். தேவனிடம் ஒரு திட்டம் இருந்தால், அது நிச்சயம் நிறைவேறும் என்பதில் ஐயமில்லை; எனவே, “எல்லோருக்கும் மீட்பு” எனும் தேவதிட்டத்தின் நிறைவேறுதலின் அடிப்படையில் “எல்லோருக்கும் மீட்பு” என்பது உறுதியாகி விடுகிறது. கிட்டத்தட்ட இதே கருத்தைத்தான் “கோவைபெரியன்ஸ்” தளத்தாரும் கூறுகின்றனர்.
இக்கருத்தை நம்புபவர்கள், “நாம் எப்படி வாழ்ந்தாலும் பரவாயில்லை, தேவனின் “எல்லோருக்கும் மீட்பு” திட்டத்தின்படி நாமும் நித்திய ஜீவனைப் பெற்றுவிடுவோம்” எனக் கருத வாய்ப்புண்டு.
நீங்கள் சொல்கிறபடியான தேவதிட்டம் ஒன்று மெய்யாகவே இருந்தால், பிரச்சனை எதுவுமில்லை. ஏனெனில் அத்திட்டத்தின் மூலம், உலகிலுள்ள அத்தனைபேரும் மீட்கப்பட்டு, நித்திய ஜீவனைப் பெற்றுவிடுவார்கள்.
ஆனால் நீங்கள் சொல்வது போன்றதொரு தேவதிட்டம் இல்லாமற்போய்விட்டால்? அத்திட்டத்தை நம்பி இவ்வுலக வாழ்வை தங்கள் மனம்போல் வாழ்ந்தோரின் கதி என்னவாகும்? அவர்கள் நித்திய ஜீவனைப் பெறமுடியாமற் போகக்கூடுமல்லவா? அதாவது நீங்கள் சொல்கிற இந்த தேவதிட்டம் அவர்களுக்கு இடறலாகிப் போகக்கூடுமல்லவா?
நித்தியஜீவனைப் பெறுவதற்கு ஒவ்வொரு தனிமனிதனும் என்ன செய்யவேண்டுமென தேவன் எதிர்பார்க்கிறாரோ, அதைச் செய்யாமல் ஒருவனும் நித்தியஜீவனை சுதந்தரிக்க மாட்டான் என்பது எனது கருத்து. இதற்கு ஆதாரமாக ஏராளமான வேதவசனங்கள் உண்டு; அவை உங்களுக்கு நன்றாகத் தெரியும்.
இதை எண்ணிப்பார்த்து தொடர்ந்து செயல்படும்படி வேண்டுகிறேன்.
இக்கருத்தை நம்புபவர்கள், “நாம் எப்படி வாழ்ந்தாலும் பரவாயில்லை, தேவனின் “எல்லோருக்கும் மீட்பு” திட்டத்தின்படி நாமும் நித்திய ஜீவனைப் பெற்றுவிடுவோம்” எனக் கருத வாய்ப்புண்டு.
இதை எண்ணிப்பார்த்து தொடர்ந்து செயல்படும்படி வேண்டுகிறேன்.
சகோதரர் அன்பு அவர்களே தாங்களின் மேலான கருத்துக்கும் சுட்டுதலுக்கும் மிக்க நன்றி.
நான் அடிக்கடி எழுதும் "எல்லோருக்கும் மீட்பு" என்ற வார்த்தை எவர் எப்படி வாழ்ந்தாலும் "எல்லோருக்கும் நித்திய ஜீவன்" என்பது போன்றொரு புரிதலை தருமாகில் அதற்காக நான் மன்னிப்பு கோருகிறேன்.
நன்மை தீமையே என்னவென்று அறியாத நிலையில் ஆதாம் ஏவாள் செய்த மீருதலுக்கே தண்டனை உண்டு என்ற நிலையில் இருக்கும்போது, நன்மை தீமையை அறிந்து தேவனையும் அவரது சித்தத்தையும் அறிந்து அதன் பின்னர் தெரிந்து செய்யும் மீறுதலுக்கு நிச்சயம் தண்டனை உண்டு என்பது சர்வ நிச்சயம் அல்லவா?
அவரவர் கிரியைக்கு தக்க பலனை அடைவதே நியாய தீர்ப்பு! அதிலிருந்து ஒருவரும் தப்ப முடியாது. அவரர் செய்த கிரியைக்கான பலனை அடைந்த தீரவேண்டும் என்பது எழுதப்பட்ட தேவ நீதி!
வெளி 22:12இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது.
என்று ஆண்டவர் சொல்லியிருக்கிறாரே!
எனவே கிரியை என்பது எவ்வளவு முக்கயத்துவம் வாய்ந்தது என்பதை நான் சரியாகவே அறிந்திருக்கிறேன்.
இந்நிலையில் நான் எழுதும் "எல்லோருக்கும் மீட்பு" என்ற என்னுடய கருத்து முற்றிலும் வேறுபட்டது அதற்க்கான சரியான விளக்கத்தை கர்த்தருக்கு சித்தமானால் வேறொரு திரியில் விரைவில் தருகிறேன்.
தங்களின் ஆலோசனையினால் என் கருத்துக்கள்மூலம் ஒரு தவறான புரிதலுக்குள் நடத்தபடுவது தவிர்க்கப்பட்டது என்று கருதி தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)