அசுத்த ஆவி பிடித்ததுபோலவோ அல்லது அசுத்த ஆவி இருந்ததற்கோ எந்த அறிகுறியும் இல்லை?
இதைப்பற்றி அறிந்தவர் எழுதவும்....
"அசுத்த ஆவி" என்பது பழைய ஏற்பாட்டு காலத்திலும் இருந்துள்ளது என்பதற்கு ஒரே ஒரு வசனம் வேதத்தில் சாட்சியாக உள்ளது.
சகரியா 13:2அந்நாளிலே நான் விக்கிரகங்களின்பேரும் தேசத்திலிராதபடிக்கு அழிப்பேன்; அவைகள் இனி நினைக்கப்படுவதில்லை; தரிசனம் சொல்லுகிறவர் களையும், அசுத்த ஆவியையும் தேசத்திலிருந்து போய்விடவும் பண்ணுவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
இந்த வசனத்தின் அடிபடையில் பார்த்தால் அசுத்த ஆவி என்பது தேசத்தில் இருந்திருக்கிறது எனபதை அறியமுடிகிறது. உண்மையில் பார்த்தால் அதுஆதியில் இருந்தே இருந்திருக்கிறது. அதாவது தேவன் பரிசுத்தமானவர் அவரிடம் இருந்து அசுத்தமான ஓன்று தோன்றுவதற்கு எந்த ஒரு முகாந்திரமும் இல்லை. எனவே அசுத்த ஆவிகள் என்பது ஆதியில் இருந்தே இருந்திருக்கலாம் என்று என்றே நான் கருதுகிறேன்.
ஆனால் பழையஏற்பாட்டு காலத்தில் அந்த அசுத்தஆவிகள் எந்தஒரு மனுஷனையும் பிடித்ததாக வசனம் எதுவும் இல்லை. முதல் முதலில் அசுத்த ஆவி பிடித்த மனுஷனை பற்றிய செய்தி புதிய ஏற்பாட்டில் இயேசுகிறிஸ்த்து தனது ஊழியத்தை ஆரம்பித்த பிறகுதான் வருகிறது.
அதாவது பழைய ஏற்பாட்டில் அசுத்த ஆவிகள் தேசத்தில் இருந்தாலும் அதை "தேசத்தை விட்டு விரட்டுவது"என்பது ஒரு தீர்க்கதரிசனமாகவே இருந்தது. ஆனால் ஆண்டவராகிய இயேசு அந்த அசுத்த ஆவிகளை விரட்டும் வல்லமையை தானும் பெற்றிருந்ததோடு தன்னுடைய சீடர்களுக்குள் கொடுக்கிறார்.
மத்தேயு 10:1அப்பொழுது, அவர் தம்முடைய பன்னிரண்டு சீஷர்களையும் தம்மிடத்தில் வரவழைத்து, அசுத்த ஆவிகளைத் துரத்தவும், சகல வியாதிகளையும், சகல நோய்களையும் நீக்கவும் அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார்.
அதுவரை, தங்களை விரட்டுவார் இல்லாமல் ஜாலியாக அரசாங்கம் நடத்திவந்த அசுத்த ஆவிகளுக்கு ஆண்டவராகிய இயேசு வந்து அவைகளை விரட்ட ஆரம்பித்ததும் அவைகளுக்கு ஒரு மிரட்சி மற்றும் கோபம் கோபம் வந்திருக்க வேண்டும் என்று கருதுகிறேன்.
(ஒரு நாள் ஆண்டவர் என் மனைவியிடம் "உனக்கு அசுத்தத் ஆவியை விரட்டும் வரம் கொடுத்திருக்கிறேன்" என்று சொன்னாராம். அதன் அடிப்படையில் அவள் அசுத்த ஆவியை கட்டி ஜெபிக்க ஆரபிக்கவே, அதனால் ஒரு அசுத்த ஆவி மிகுத்த கோபம் அடைந்து, என் மனைவியிடம் வந்து. "ஏய் என்ன? சும்மா அசுத்த ஆவியை கட்டுகிறேன், அசுத்த ஆவியை கட்டுகிறேன் என்று ஜெபிக்கிறாய். என்னை பற்றி பேச்சு எடுக்க கூடாது என்று சொல்லி பயம்காட்டி விட்டு சென்றதாம். ஆகினும் அவள் கேட்காமல் ஒருமுறை ஒரு பெண்ணுக்கு பிடித்திருந்த அசுத்த ஆவியை விரட்டும்போது அது மிகப்பெரிய உருவமாக எழுந்து வந்து அவள் முன்னால் நிற்று கண்களை மூடி ஜெபித்துகொண்டிருந்த அவளை உற்று பார்த்துவிட்டு சென்றதாம். அதன்பிறகு அவளுக்கு அதிகம் உடம்புக்கு சரியில்லாமல் வந்து மிகுந்த துன்பபட்டாள் என்பது தனி கதை. மிகுந்த பரிசுத்தம் இல்லாமல் கண்டவர் மேலும் கைவைக்க வேண்டாம்)
அதுபோல் அசுத்தத்ஆவியை இயேசுவும் அவரது சீஷர்களும் துரத்த ஆரம்பித்ததும் அது எங்கும் போக வழியில்லாமல் அங்கும் இங்கும் அலைபாயவும் ஒருவரை விட்டு இன்னொருவருக்குள் போகவும் அனேக ஆவிகள் ஒரே ஒரு மனுஷன்மேல் வந்து தங்கவும் ஆரம்பித்திருக்கலாம்.
லூக்கா 11:24அசுத்த ஆவி ஒரு மனுஷனை விட்டுப்புறப்படும்போது, வறண்ட இடங்களில் அலைந்து, இளைப்பாறுதல் தேடியும் கண்டடையாமல்: நான் விட்டுவந்த என் வீட்டுக்குத் திரும்பிப்போவேன் என்றுசொல்லி,
இறுதியில் போக இடமில்லாமல் பன்றிகளுக்குள் கூட போனதாக வசனம் இருக்கிறது .
இந்த அசுத்தத்ஆவிகள் இயேசுவுக்கும் அவரது ஊழியர்கள் மற்றும் சீஷர்களுக்கும் பயந்தாலும்கூட அவைகளால் எங்கும் போகவே முடியாது. வசனம் சொல்வது போல் ஒருநாள் அது தேசத்தைவிட்டே விரட்டப்படும் காலம் வரும். அன்றுவரை திரும்ப திரும்ப இந்த பூமிக்குள்ளேயே தான் சுற்றி வரும்!
இன்று உலகில் நடக்கும் அனைத்து அநியாயம் அட்டூழியம் குண்டுவைத்தல் கொலை செய்தல் போன்ற அனைத்துக்கும் காரணம் தீய செயலுக்கும் காரணம் மனுஷர்களை பிடித்து ஆட்டிவரும் அசுத்த அவிகள்தான். அதை குறித்த செய்தியை கீழ்கண்ட திரியில் வாசிக்கலாம்.
(இந்த பதிவை நான் எழுதும்போதுகூட இரண்டு முறை பவர் கட் ஆகிப்போனது. எழுதியதில் சிலவற்றை காணவில்லை. பின்னர் நெட்வொர்க் வேலை செய்ய வில்லை. திரும்ப கம்பியூடரை ரீ பூட் செய்து எழுத அமர்ந்தபோது, முதலாளி வந்து பேசுவதற்காக உட்காந்து கொண்டார். நானும் விடாமல் போராடி முயன்று எழுதி விட்டேன். என்னை முறியடிக்கமுயன்று அது பலமுறை தொற்று போயிருக்கிறது. அதில் இதுவும் ஓன்று)
எனவே அன்பு சகோதரரே, அசுத்தஆவிகள் என்பது ஆதியில் இருந்தே இருக்கிறது ஆனால் ஆவியின் பிரமாணம் இல்லாத மாம்சபிரமாணம் இருந்த பழையஏற்பாட்டு காலத்தில் அதை விரட்டும் வல்லமை யாருக்கும் இல்லாமல் இருந்ததால், அவைகளின் கிரியைகள் பற்றி ஆவியில் உணர்ந்து சொல்லவோ எழுதவோ விரட்டவோ யாரும் இல்லை.
ஆனால் எப்பொழுது இயேசுவும் அவரது சீஷர்களும் அவைகளை விரட்ட ஆரம்பித்தார்களோ, அப்பொழுதே அது அதிகமாக கிரியை செய்ய ஆரம்பித்தது. எனவேதான் புதிய ஏற்பாட்டு காலத்தில் அசுத்த ஆவிகளைபற்றிய செய்தி அதிகம் வருகிறது.
-- Edited by SUNDAR on Friday 16th of September 2011 10:39:50 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)