இந்த உலகத்தில் நடைபெறும் எந்த ஒரு காரியமானாலும், யாராவது ஒருவரின் அங்கீகாரத்தை எதிர்பார்த்தே செய்யப்படுகிறது என்று பொதுவாக கூறிவிட முடியும்! நாம் செய்யும் ஒரு செயலுக்கு மற்றவர்களிடம் அங்கீகாரம் அல்லது பாராட்டை பெறும்போது நாம் மிகவும் மகிழ்ந்து போகிறோம். படிப்பானாலும் சரி, வேலையானாலும் சரி, எழுத்தானாலும் சரி, சமையலானாலும் சரி, படமானாலும் சரி, ஆவிக்குரிய வட்டாரங்களில் ஒரு பிரசங்கமோ அல்லது ஆராதனையோ அல்லது பாடலோ அடுத்த மனுஷரால் அங்கீகரிக்க பட்டு பாராட்டபட்டால் அது சம்பந்தபட்டவரை மிகுந்த களிப்பாக்குகிறது.
உலக பார்வையில் இந்த "அங்கீகாரம்" என்பது பலரை ஊக்குவிக்கும் ஒரு காரணியாக இருந்தாலும் ஆவிக்குரிய நிலையில் தேவனின் பார்வையில், இந்த மனுஷ அங்கீகாரத்தை எதிர்பார்த்து ஒரு காரியத்தை செய்வது அல்லது செய்த காரியத்துக்கு மனுஷ அங்கீகாரத்தை எதிர்பார்ப்பது சரியா? என்று ஆராய்ந்தால் நிச்சயம் மனுஷனின் புகழ்ச்சிஎன்பது மற்றவர்களுக்கு கண்ணியாகவே அமையும். அதுவே அவனுக்கு ஒரு சோதனை களம் என்றுகூட கூறலாம்.
நீதிமொழிகள் 27:21வெள்ளிக்குக் குகையும், பொன்னுக்குப் புடமும் சோதனை; மனுஷனுக்கு அவனுக்கு உண்டாகும் புகழ்ச்சியே சோதனை.
புகழ்ச்சிக்கு மயங்காத மனுஷன் இல்லை எனலாம்! இந்த உலகம் உங்களை அதிகமாக அங்கீகரிக்கும் ஒரு நிலை இருந்தால் உங்களிடம் எங்கோ தவறு இருக்கிறது என்றே நான் கருதுகிறேன்! அப்படிபட்டவர்களுக்கு ஐயோ என்று ஆண்டவர் சொல்கிறார்.
ஆனால் இன்று கிறிஸ்தவ உலகில் நடப்பது என்ன? எத்தனைபேர் சக மனுஷர்களின் புகழ்ச்சியை/அங்கீகரிப்பை எதிர்பார்க்காமல் காரியங்களை செய்கின்றனர். நம்மை நாமே நிதானித்து அறியவேண்டியது அவசியம்!
ஆண்டவராகிய இயேசு இவ்வாறு சொல்கிறார்.
யோவான் 15:19நீங்கள் உலகத்தாராயிருந்தால், உலகம் தன்னுடையதைச் சிநேகித்திருக்கும்; நீங்கள் உலகத்தாராயிராதபடியினாலும், நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்துகொண்டபடியினாலும், உலகம் உங்களைப் பகைக்கிறது.
உலகத்தின் சிநேகிதத்தில் இருப்பவர்களை உலகம் நிச்சயம் போற்றும் அனால் உலகத்தாரல்லாதவர்களாகிய நம்மை உலகம் பகைக்கதான் செய்யும். நம்முடய காரியங்களுக்கு உலகத்தில் அங்கீகாரத்தைவிட எதிர்ப்பு அதிகம் இருக்கத்தான் செய்யும்.
I யோவான் 3:13என் சகோதரரே, உலகம் உங்களைப் பகைத்தால் ஆச்சரியப்படாதிருங்கள்.
எனவே இதில் ஆச்சர்யப்படுவதர்க்கு ஒன்றுமே இல்லை!
நான் வலைதளங்களில் எழுத ஆரம்பித்த காலங்களில் பலபொதுவான தளங்களில் ஆண்டவரை பற்றி அதிகமாக எழுதி, பலரது பாராட்டு கிடைக்கும் என்று காத்திருப்பேன். ஆனால் எனக்கு கிடைத்ததோ அவமானமே. என்னதான் முயற்சி செய்து உலக நடப்புகளை அப்படியே எழுதி, அதில் ஆண்டவரின் கருத்ததையும் புகுத்தி, மிகுந்த தாழ்மையுடன் எழுதினாலும், இருதயம் அடைபட்ட உலக நிலை மக்களுக்கு அது எரிச்சலையே ஏற்ப்படுத்தியது. எங்கும் அங்கீகாரம் கிடைக்கவில்லை எல்லோரும் என்னை ஒரு எதிரி நிலையிலேயே பார்த்தனர். நான் நேரடியாக பார்ப்பதுபோல் பார்த்த மரணத்துக்கு பின்னர் ஒரு வாழ்வு உண்டு என்பதையும் அங்கு பாதாளம் /நரகம்/ சொர்க்கம் இருக்கிறது என்ற கருத்தை பல மேதாவிகள் ஏற்க்க மறுத்து என்னுடய எழுத்துக்களை அங்கீகரிக்க மறுத்து என்னை பலவாறு திட்ட ஆரம்பித்தார்கள்.
மனுஷ அங்கீகாரத்தை எதிர்பார்த்து எழுதிய எனக்கு ஏமாற்றமும் துக்கமும்மே மிஞ்சியது. அதன்பின்னர் எழுதுவதையே விட்டுவிடலாம் என்று முடிவெடுத்து ஆண்டவரிடம் ஜெபித்த போது என் மனதில் கேட்கபட்ட கேள்வி "மனுஷ அங்கீகாரமா? அல்லது தேவனின் அங்கீகாரமா? எது உனக்கு தேவை?" என்பதே!
நித்தியத்துக்கும் நம்மோடு கூட இருந்து வாழ்விலும் தாழ்விலும் நம்மை வழிநடத்தும் தேவனின் அங்கீகாரத்துக்கு முன்னர் இன்று இருந்து நாளை இருந்த இடமே தெரியாமல் போகும் ஒரு புல்லைபோல் வாடிப்போகும் மனுஷனின் அங்கீகாரம் நமக்கு தேவைதானா?
மனுஷனின் அங்கீகாரத்தை தேடும் அநேகர், மற்றவர்களின் எதிர்பார்ப்புக்கேற்ப தங்களை வளைத்து, வழிதவறி போய்கொண்டு இருப்பதை அறிய முடிகிறது இன்றும் கூட ஒரு சினிமாக்காரன் படம் எடுக்கும்போது என்ன யுக்தியை கையாண்டால் அது மனுஷனுக்கு பிடிக்கும் என்று ஆராய்ந்து படம் தயாரிப்பது போல், கிறிஸ்த்தவ உலகிலும் ஆண்டவர் என்ன எதிர்பார்க்கிறார் என்ற உண்மையை உள்ளது உள்ளபடி சொல்வதற்கு பதில், மனுஷர்களிடம் பிரபல்யம் ஆவதற்கு அல்லது மனுஷர்களால் அங்கீகரிக்கபடுவதர்க்கு அனேக யுக்த்திகள் கையாளப்படுகிறது. அதில் ஆண்டவரே மையப் பொருளாக வைக்கபடுவதே வேதனையை தருகிறது.
அநேகர் சேர்ந்து பயம்காட்டி ராஜாவுக்கு இதமான காரியங்களை சொல்லவேண்டும் என்று ஆலோசனை கொடுத்தும், யாருக்கும் பயப்படாமல் கர்த்தர் சொல்லுவதை மட்டும்தான் சொல்லுவேன் என்று உறுதியாக நின்ற மிகாயா தீர்க்கதரிசிபோல நாம் துணிந்து நிற்க்கவேண்டியது அவசியம்.
I இராஜாக்கள் 22:14அதற்கு மிகாயா: கர்த்தர் என்னிடத்தில் சொல்வதையே சொல்லுவேன் என்று கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்.
மனுஷர்களின் அங்கீகாரத்தை எதிர்பார்த்து கிரியைகளை செய்த பரிசேயரையும் சதுரேயரையும் ஆண்டவர் கடுமையாக கடிந்துகொண்டதோடு அவர்களுக்கு ஐயோ! என்றுசொல்லி அவர்களுக்கு கடும் தண்டனைஉண்டு என்று உறுதிபடுத்தினார்.
எனவே அன்பானவர்களே! நம்மை பார்த்தும் ஆண்டவர் "ஐயோ!" என்று எண்ணி விடாதபடிக்கு என்ச்சரிக்கயாய் நடந்து மனுஷர்களிடம் புகழ்ச்சியையும் அங்கீ காரத்தையும் எதிர்பார்க்காமல் அதற்க்கேற்ப்ப நமது செயல்களை மாற்றாமல் யாருக்கும் பயப்படாமல் தேவனின் எதிர்பார்ப்பு என்னவென்று அறிந்து தேவன் சொல்வதை செய்யவும் அவருக்கு சித்தமானதையே எழுதவும் வாஞ்சிப்போம்!
தேவன் தாமே நம்மை பெலப்படுத்துவாராக!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
நீங்கள் இந்த பதிவை எழுதுவதற்கு முன்பு என்னுடைய அலுவலகத்தில் 2 நபர்கள் வேலைக்கு
புதிதாக வந்து சேர்ந்தார்கள் அவர்களை என் மேல் அதிகாரி ஒருவர் எல்லோருக்கும்
அறிமுகம் செய்துவைத்தார் அப்படி அறிமுகம் செய்த பொழுது என்னை பார்த்து இவருடைய
பெயர் சுதாகர் இந்த இடத்திலேயே மிகவும் முக்கியமான ஆள் என்று என்னை அந்த நபர்களிடத்தில் பெருமையாக சொல்லி கொண்டு இருந்தார்கள் சரி என்று நானோ இவர் என்னை கேலிசெய்கின்றார் என்று எண்ணி விட்டுவிட்டேன்
அதன் பின் முன்பு நான் சொன்ன அதிகாரியைவிட மிக பெரிய அதிகாரி ஒருவர் திரும்பவும் அவர்களிடம் இவர் தான் சுதாகர் இந்த இடத்திலேயே மிகவும் முக்கியமான ஆள் இவர் தான் இங்கு ஆல் இன் ஆள் என்று சொல்லி என்னை புகழ்ந்துதள்ளினார் எனக்கோ மனதில் பயங்கரமான சந்தோஷம் நான் ஒரு சாதாரண
ஆள் எனக்கும் மதிப்பு கொடுத்து என்னைபுகழ்ந்து மற்றவர்களிடத்தில்
சொல்கின்றார்களே என்று எண்ணி மிகவும் சந்தோஷப்பட்டேன்......
ஆனால் என் மீது அதிக அன்புள்ள என் தேவன் சகோ : சுந்தர் மூலம்
மனுஷ அங்கீகாரமா? தேவ அங்கீகாரமா? எது வேண்டும்? என்ற தலைப்பில் மனுஷனுடைய புகழ்சிகள் வீண் என்று திட்ட தெளிவாக தெரிவித்தி விட்டார்..
தேவனே உமக்கு கோடான கோடி நன்றியை தெரிவித்து கொள்கின்றேன்
இந்த உலகத்தில் நடைபெறும் எந்த ஒரு காரியமானாலும், யாராவது ஒருவரின் அங்கீகாரத்தை எதிர்பார்த்தே செய்யப்படுகிறது என்று பொதுவாக கூறிவிட முடியும்! நாம் செய்யும் ஒரு செயலுக்கு மற்றவர்களிடம் அங்கீகாரம் அல்லது பாராட்டை பெறும்போது நாம் மிகவும் மகிழ்ந்து போகிறோம். படிப்பானாலும் சரி, வேலையானாலும் சரி, எழுத்தானாலும் சரி, சமையலானாலும் சரி, படமானாலும் சரி, ஆவிக்குரிய வட்டாரங்களில் ஒரு பிரசங்கமோ அல்லது ஆராதனையோ அல்லது பாடலோ அடுத்த மனுஷரால் அங்கீகரிக்க பட்டு பாராட்டபட்டால் அது சம்பந்தபட்டவரை மிகுந்த களிப்பாக்குகிறது.
உலக பார்வையில் இந்த "அங்கீகாரம்" என்பது பலரை ஊக்குவிக்கும் ஒரு காரணியாக இருந்தாலும் ஆவிக்குரிய நிலையில் தேவனின் பார்வையில், இந்த மனுஷ அங்கீகாரத்தை எதிர்பார்த்து ஒரு காரியத்தை செய்வது அல்லது செய்த காரியத்துக்கு மனுஷ அங்கீகாரத்தை எதிர்பார்ப்பது சரியா? என்று ஆராய்ந்தால் நிச்சயம் மனுஷனின் புகழ்ச்சிஎன்பது மற்றவர்களுக்கு கண்ணியாகவே அமையும். அதுவே அவனுக்கு ஒரு சோதனை களம் என்றுகூட கூறலாம்.
நீதிமொழிகள் 27:21வெள்ளிக்குக் குகையும், பொன்னுக்குப் புடமும் சோதனை; மனுஷனுக்கு அவனுக்கு உண்டாகும் புகழ்ச்சியே சோதனை.
புகழ்ச்சிக்கு மயங்காத மனுஷன் இல்லை எனலாம்! இந்த உலகம் உங்களை அதிகமாக அங்கீகரிக்கும் ஒரு நிலை இருந்தால் உங்களிடம் எங்கோ தவறு இருக்கிறது என்றே நான் கருதுகிறேன்! அப்படிபட்டவர்களுக்கு ஐயோ என்று ஆண்டவர் சொல்கிறார்.
\\ உலக பார்வையில் இந்த "அங்கீகாரம்" என்பது பலரை ஊக்குவிக்கும் ஒரு காரணியாக இருந்தாலும் ஆவிக்குரிய நிலையில் தேவனின் பார்வையில், இந்த மனுஷ அங்கீகாரத்தை எதிர்பார்த்து ஒரு காரியத்தை செய்வது அல்லது செய்த காரியத்துக்கு மனுஷ அங்கீகாரத்தை எதிர்பார்ப்பது சரியா? என்று ஆராய்ந்தால் நிச்சயம் மனுஷனின் புகழ்ச்சிஎன்பது மற்றவர்களுக்கு கண்ணியாகவே அமையும். அதுவே அவனுக்கு ஒரு சோதனை களம் என்றுகூட கூறலாம். \\
அன்பு சகோதரர் சுந்தர் அவர்களுக்கு இயேசுவின் நாமத்தில் வாழ்த்துகள்.
மனிதர்களிடம் அங்கீகாரம் தேடாமல் செய்கிற வேலை எதுவாக இருந்தாலும் தேவனுக்காய் முழு மனதோடு செய்ய வேண்டும் என் வேதம் போதிக்கிறது.
1. எந்த மனுஷனும் மேலான அதிகாரமுள்ளவர்களுக்குக் கீழ்ப்படியக்கடவன்; ஏனென்றால், தேவனாலேயன்றி ஒரு அதிகாரமுமில்லை; உண்டாயிருக்கிற அதிகாரங்கள் தேவனாலே நியமிக்கப்பட்டிருக்கிறது
இந்த உலகத்தில் நாம் செய்யும் வேலை மட்டும் அல்ல, ஆண்டவரின் ஊழியம் கூட நாம் பெருமை பாராட்ட ஒன்றுமே இல்லை. எல்லாமே ஆண்டவரின் பெரிதான கிருபை தான் இவைகளை எல்லாம் செய்ய வேண்டிய வகையில் செய்ய உதவி செய்கிறது.
மனிதர்களின் அங்கீகாரம் தேடாத படி, மனிதர்களின் புகழ்ச்சிக்கு மயங்கி விடாத படி ஆண்டவர் தன்னுடைய மக்களை அரவணைத்து காத்துக் கொள்ளுவார். நம் மனதில் கொஞ்சம் பெருமை உண்டாகி விட்டாலும், உடனே ஆண்டவர் உணர்த்திவிடுவார்.
சகோதரரின் பதிவு என் உள்ளத்தை தொட்டது, மிகவும் பிரயோஜனமுள்ளதாக இருந்தது, வேத வசனங்களை நினைவு கூறவும் வைத்தது.