இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பரிசுத்த ஆவியானவர் நமக்குள் இல்லாமல் நாம் இயேசுவை கர்த்தர் என்று சொல்லலாமா


வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
பரிசுத்த ஆவியானவர் நமக்குள் இல்லாமல் நாம் இயேசுவை கர்த்தர் என்று சொல்லலாமா
Permalink  
 


1 . கொரிந்தியர்: 12

3. பரிசுத்த ஆவியினாலேயன்றி இயேசுவைக் கர்த்தரென்று ஒருவனும் சொல்லக்கூடாதென்றும், உங்களுக்குத் தெரிவிக்கிறேன் 
 
 
 
மேலே நான் குறிப்பிட்டுள்ள வசனத்தின் படி பார்த்தால் ஒருவர்
இயேசுவை கர்த்தர்  என்று சொல்ல வேண்டும் என்றால் பரிசுத்த ஆவியை பெற்று இருக்க வேண்டும்
 
 
அல்லது பரிசுத்த ஆவியானவர் துணை இல்லாமல் இயேசுவை கர்த்தர் என்று சொல்ல கூடாது என்று பவுல் சொல்வது போல் தெரிகின்றது
 
 
 
இயேசுவை தேவன் எல்லா நாமத்திற்கு மேலாக உயர்த்தினார் என்பது உண்மை அவருக்கு கர்த்தர் என்ற நாமத்தை கொடுத்தவரும் அவரே
 
 
 
 
பிலிப்பியர் ; 2
 
9 ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி,
 
 
10 இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும்,
 
 
11 பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்
 
 
 
நான் கேட்க வரும் கேள்வி என்னவெனில் பவுல் பரிசுத்த 
ஆவியினாலேயன்றி இயேசுவை கர்த்தர் என்று ஒருவரும் சொல்ல கூடாது என்று சொல்கின்றார்
 
 
 
ஆனால் இப்பொழுது பவுல் சொல்வதை யாரும் கடைபிடிப்பது    போல் தெரியவில்லை
 
 
 
 
ஒருவேளை பவுல் சொல்வது தவறா ?     அல்லது
 
 
நான் இந்த வசனத்தை புரிந்து கொண்ட விதம் தவறா ?       இல்லை
 
 
தேவ குமாரனை கர்த்தர் என்று சொல்லும் தகுதி பரிசுத்த ஆவியானவரை பெற்றவர்களுக்கு தான் உண்டா ?
 
 
 
 
விளக்கம் தெரிந்த சகோதரர்கள் இதன் உண்மை என்னவென்று தெரிவிக்கும் படி கேட்டுகொள்கின்றேன்.............


-- Edited by EDWIN SUDHAKAR on Wednesday 21st of September 2011 09:01:59 PM

__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

EDWIN SUDHAKAR wrote:
1 . கொரிந்தியர்: 12
3. பரிசுத்த ஆவியினாலேயன்றி இயேசுவைக் கர்த்தரென்று ஒருவனும் சொல்லக்கூடாதென்றும், உங்களுக்குத் தெரிவிக்கிறேன் 
 
தேவ குமாரனை கர்த்தர் என்று சொல்லும் தகுதி பரிசுத்த ஆவியானவரை பெற்றவர்களுக்கு தான் உண்டா ?
 
 விளக்கம் தெரிந்த சகோதரர்கள் இதன் உண்மை என்னவென்று தெரிவிக்கும் படி கேட்டுகொள்கின்றேன்.............

சகோதரர்  எட்வின்  அவர்களே  தாங்கள் குறிப்பிட்டுள்ள இந்த வசனத்தை  பற்றிய எனது புரிதல் என்னவெனில் 

1 . கொரி: 12: 3பரிசுத்த ஆவியினாலேயன்றி இயேசுவைக் கர்த்தரென்று ஒருவனும் சொல்லக்கூடாதென்றும், உங்களுக்குத் தெரிவிக்கிறேன் 

இங்கு "சொல்ல கூடாதென்றும்"  என்று மொழிபெயர்க்கபட்டுள்ள  வார்த்தைக்கு "சொல்ல முடியாது" என்றும் பொருளகொள்ள முடியும்.     

ஆங்கில வசனம் இதை தெளிவு படுத்துகிறது.
 
12:3  So ......; that no one is able to say by the Spirit of God that Jesus is cursed; and no one is able to say that Jesus is Lord, but by the Holy Spirit.
  
இந்த பொருளின் அடிப்படையில் பார்த்தால் பரிசுத்த ஆவியை பெறாத எவரும் இயேசுவை கர்த்தர் என்று சொல்லமுடியாது அல்லது பரிசுத்த ஆவியை பெறாத எவரும் இயேசுவை ஒரு கடவுள்என்று ஏற்றுக்கொள்ளமுடியாது என்றே பொருள் கொள்ள முடிகிறது.
 
இன்றும் கிறிஸ்த்தவ உலகில் பரிசுத்த ஆவியானவரை ஒரு வல்லமை என்று சொல்லி அவரை பெற்றுக்கொண்டிராத யகோவா சாட்சிகள் மற்றும் வேத மாணவர்கள் கூட்டம் இயேசுவை ஒரு  தூதர் என்று போதித்தி அவரே கர்த்தர்/ கடவுள்/ தேவன் என்று ஏற்றுக்கொள்வது இல்லை
 
இதையே இந்த வசனம் "பரிசுத்த ஆவியால் ஒருவர்  போதிக்கபடவில்லை என்றால் அவரால் இயேசுவை கர்த்தர் என்று ஏற்றுக்கொள்ள முடியாது" என்றுதான் கூறுகிறது என்றே நான் கருதுகிறேன்.
 
மேலதிக விளக்கம் ஏதாவது  இருந்தால் சகோதரர்கள் இங்கு விளக்கலாம்


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard