வேத புத்தகத்தில் பல இடங்களில் தேவர்கள்/ தேவபுத்திரர்கள்/தேவகுமாரர்கள் என்பவர்களை பற்றிய செய்திகள் எழுதப்பட்டுள்ளன.
I கொரிந்தியர் 8:5வானத்திலேயும் பூமியிலேயும் தேவர்கள் என்னப்படுகிறவர்கள் உண்டு;
சங்கீதம் 82:1தேவசபையிலே தேவன் எழுந்தருளியிருக்கிறார்; தேவர்களின் நடுவிலே அவர் நியாயம் விசாரிக்கிறார்.
இவர்களை பற்றி வேதம் குறிப்பிடும்போது "பேய்கள்" என்றோ "சாத்தன்" என்றோ குறிப்பிடாமல் "அந்நிய தெய்வங்கள்" என்று அல்லது "அந்நிய தேவர்கள்" என்றே குறிப்பிடுகிறது!
எரேமியா 10:11வானத்தையும் பூமியையும் உண்டாக்காத தெய்வங்கள், பூமியிலும் இந்த வானத்தின்கீழும் இராதபடிக்கு அழிந்துபோகும் என்பதை அவர்களுக்குச் சொல்லுங்கள்.
II நாளாகமம் 25:15அப்பொழுது, கர்த்தர் அமத்சியாவின்மேல் கோபமூண்டவராகி, அவனிடத்துக்கு ஒரு தீர்க்கதரிசியை அனுப்பினார்; இவன் அவனை நோக்கி: தங்கள் ஜனத்தை உமது கைக்குத் தப்புவிக்காதேபோன ஜனத்தின் தெய்வங்களை நீர் நாடுவானேன் என்றான்.
ஏசாயா 36:19ஆமாத் அர்பாத் பட்டணங்களின் தேவர்கள் எங்கே? செப்பர்வாயீமின் தேவர்கள் எங்கே? அவர்கள் சமாரியாவை என் கைக்குத் தப்புவித்ததுண்டோ?
ஆனால் கர்த்தரோ இந்த தேவர்கள் எல்லோரிலும் பெரியவரயிருக்கிறார் என்றே வேதம் சொல்கிறது!
சங்கீதம் 95:3கர்த்தரே மகா தேவனும், எல்லா தேவர்களுக்கும் மகாராஜனுமாயிருக்கிறார்.
சங்கீதம் 96:4கர்த்தர் பெரியவரும், மிகவும் ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவருமாயிருக்கிறார்; எல்லா தேவர்களிலும் பயப்படத்தக்கவர் அவரே.
இவ்வாறு "தேவர்கள்" "தேவ புத்திரர்கள்" "தேவ குமாரர்கள்" என வேதம் குறிப்பிடும் ஜீவிகள் யார் என்பதை விளக்க தெரிந்தவர்கள் விளக்கலாம்!
(தேவ தூதர்களுக்கு "ANGELஸ்" என்ற தனி வார்த்தை இருக்கிறது, இங்கே "தேவ குமாரர்" என்பதற்கு Gen 6: 2sons of menஎன்று வசனம் தெளிவாக சொல்கிறது எனவே தேவ தூதர்களையும் தேவர்கள் மற்றும் தேவ
குமாரர்களையும் ஓன்று என்று எண்ணி குழம்பாமல் சரியான விளக்கம் தரவும்)
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
முதலாவது நீங்கள் தேவனுடைய படைப்பில் இரு படைப்புகள் உண்டு என்று தெரிந்து கொள்ள வேண்டும் அவருடைய முதல்படைப்பு தான் தேவர்கள் என்கின்ற இந்து சாமிகள் என்று நாங்கள் சொல்கின்றோம்
இருபடைப்பும் அதற்கு வசனஆதாரமும்கிழேஉள்ள தொடுப்பை சொடுக்கி தெரிந்துகொள்ளவும்.
1. தேவசபையிலே தேவன் எழுந்தருளியிருக்கிறார்; தேவர்களின் நடுவிலே அவர் நியாயம் விசாரிக்கிறார்.
தேவன் தேவர்களை நியாயம் விசாரிக்கின்றார் தேவன் அவர்களை என்ன நியாயம் விசாரிக்கின்றார் ?
2. எதுவரைக்கும் நீங்கள் அநியாயத் தீர்ப்புச் செய்து, துன்மார்க்கருக்கு முகதாட்சிணியம் பண்ணுவீர்கள்
தேவர்கள் நீதியையும்நியாயத்தையும் பூமியில் செய்தார்கள்என்பதும்அவர்கள் திடிரென்று மாறி அநியாய தீர்ப்பு செய்தார்கள் என்றும் துர்மார்கருக்கு உடந்தையாய் போனார்கள் என்று அறிந்த தேவன் அவர்களை எச்சரித்த பின்பும் தேவன்
அவர்களை மறுபடியும் நீதி செய்யுங்கள் என்று போதிக்கின்றார் என்பதை
கீழ் கண்டவசனம் மிக தெளிவு சொல்கின்றது
3. ஏழைக்கும் திக்கற்ற பிள்ளைக்கும் நியாயஞ் செய்து, சிறுமைப் பட்டவனுக்கும் திக்கற்றவனுக்கும் நீதி செய்யுங்கள்.
6. நீங்கள் தேவர்கள் என்றும், நீங்களெல்லாரும் உன்னதமானவரின் மக்கள் என்றும் நான் சொல்லியிருந்தேன்
இந்த வசனத்தை நன்கு கவனித்தால் தேவர்கள் என்பவர்கள் உன்னதமான நம் தேவனின் மக்கள் என்று சொல்லபட்டு இருக்கும்
உடனே நீங்கள் மக்கள்என்றதும் நம்மை போல மனிதர்களை தான் தேவன் குறிப்பிடுகின்றார் என்று என்ன வேண்டாம் அவர்கள் மனிதர்கள் அல்ல என்று கீழ்கண்ட வசனம் தெளிவாய் சொல்கின்றது
7ஆனாலும் நீங்கள் மனுஷரைப்போலச் செத்து, லோகப்பிரபுக்களில் ஒருவனைப் போல விழுந்துபோவீர்கள்
மனுஷரைபோல என்ற வார்த்தையை நன்கு கவனிக்கவும் SO..... அவர்கள் மனிதர்கள் அல்லதேவர்கள் என்றும் இந்த பூமியையும் துர்மார்கரையும் அளிக்க நியாயம் தீர்க்க உண்டாக்க பட்ட தேவனுடைய உன்னதமான மக்கள் என்றும் தெரிய வருகின்றது
மேலும் ஒரு காரியத்தை சொல்ல விரும்புகின்றேன்
இவர்களுக்கு செய்தியை சொல்ல தான் அதாவது மேலே சொன்ன
அணைத்து காரியமும் லூசிபர் மற்றும் அவனுடன் சேர்ந்த துதர்கள் மூலம்
தேவன் இந்த செய்தியை எச்சரிப்பை தேவர்களுக்கு
சொல்ல வேண்டும் என்று லுசிபேரை பரலோகத்தில் இருந்து
அனுப்பினார்
அவன் பூமிக்குள் வந்த உடனே தேவர்களிடம் கிரியை
செய்த அதே அசுத்த ஆவி லுசுபரையும் பிடித்து
கொண்டது
இந்த காரணத்தினால் தான் லுசிபெருக்கு பெருமையின் ஆவி
அவனுக்குள் வந்தது இல்லையென்றால் பரலோகத்தில் இருப்பவனுக்கு
எப்படி பெருமை வர முடியும். ?
இதற்க்கு மேலும் தேவர்கள் இல்லை என்றோ அல்லது இருக்கின்றார் என்றோ நம்பினால் நம்புங்கள் நம்பாவிடில் விட்டுவிடுங்கள்..........................
__________________
காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)
நாங்கள் இந்து சாமியை வணங்கி வந்த காலங்களில் எங்கள் ஊரில் கோவில் கொடையின்போது அம்மன் சாமியை ஒரு பல்லக்கில் தூக்கி வைத்து இரவு முழுவதும் பல்லக்கில் ஊரை சுற்றி வருவார்கள். அப்பொழுது ஒவ்வொரு வீட்டில் உள்ளவர்களும் அந்த சாமியும் வந்து ஆசி வாங்கி செல்வார்கள்.
ஒருமுறை நானும் அவர்களோடு சேர்ந்து இரவு முழுவதும் சுற்றி திரிந்தேன். அன்று சாமியை ஏற்றிக்கொண்டு அந்த பல்லக்கு ஒரு வீட்டுக்கு முன்னால் வந்தபோது அந்த வீட்டினுள் இருந்து ஒரு பெண் தலைவிரி கோலத்தில் வெளியே ஓடிவந்து அந்த சாமிக்கு முன்னால் ஆடிகொண்டு "ஏஏய் ஏஏய்" என்று அரற்றிக் கொண்டு நின்றது. இந்து சாமியாடிய பூசாரி, அந்த பெண்ணிடம் நீ யார் என்னவென்று விசாரித்தார் அது ஏதோ ஒரு பெயர் சொன்னது என்று நினைக்கிறேன். பின்னர் தன் கையில் இருந்த சவுக்கை எடுத்து இரண்டு மூன்று அடிகள் அடித்து, கொஞ்சம் திருநீரை எடுத்து பேயாடிய அந்த பெண்ணின் மீது வீசிவிட்டு, பக்கத்தில் கிடந்த ஒரு கல்லை தூக்கிக் கொண்டு ஓடும்படி சொல்லி அதட்டினார் அந்த பெண்ணும் அந்த பெரிய கல்லை தூக்கிகொண்டு ஓடி, ஓரிடத்தில் போட்டுவிட்டு பின்னர் நார்மல் நிலைக்கு திரும்பிவிட்டது.
இதுபோல் இந்து சாமிகளும் பலவிதமான பேய்களை துரத்திவிடுவதை என் கண்ணாலேயே பார்த்திர்க்கிறேன். போகாமல் பிடிவாதம் பிடிக்கும் பேய்கள் இறுதியில் அம்மிகல்லையோ எதையோ தூக்கிக்கொண்டு ஓடிவிடும்.
சாத்தானை சாத்தான் துரத்துவது எப்படி? என்ற இயேசுவின் வார்த்தை அடிப்படையில் "ஒரு பேயை இன்னொரு பேய் நிச்சயம் துரத்தாது" என்று வசனம் சொல்லும்போது, இது எப்படி நடக்கிறது? என்ற கேள்விக்கு அநேக நாட்கள் எனக்கு பதில் தெரியாமல் இருந்தது! ஒருவேளை மக்களை நம்பவைக்க வேண்டும் என்பதற்காக கூட்டு சேர்ந்து "நான் துரத்துவதுபோல் துரத்துகிறேன் நீ ஓடுவதுபோல் ஓடு" என்று தங்களுக்குள் ஒப்பந்தம் செய்துகொண்டு அவ்வாறு செய்கிறதோ" என்றுகூட கருதினேன்
ஆனால் வேதத்தில் உள்ள மேலே சொல்லப்பட்ட கருத்துக்களை ஆராய்ந்தால் சில ஆவிகளை துரத்தும் இந்து சாமிகள் நிச்சயம் பேய்கள் அல்ல என்று அறிய முடிந்தது.
இவர்களைதான் வேதம் "அந்நிய தெய்வங்கள்" அல்லது "தேவர்கள்" என்று சொல்கிறது! இந்த தேவர்கள் இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுதும் பல்வேறு பெயரில் இருந்திருக்கிறார்கள் என்பதற்கு வேத புத்தகம் சொல்லும் "தாகோன், அன்னமலேக்கு, பாகால், வானராங்கி" போன்ற பெயர்களே சாட்சி!
கீழ்கண்ட வசனம் பூமியல் அனேக தேவர்கள் இருக்கிறார்கள் என்பதை தெரிவிக்கிறது!
மகா தேவனும், எல்லா தேவர்களுக்கும் மகாராஜனுமாயிருக்கும் (சங்95:3) நாம் கர்த்தரோ எகிப்த்தை ஆழுகை செய்த தேவர்கள் மீதும் நம் கர்த்தர் நீதி செலுத்தினார் என்னும் வசனம் இருக்கிறது:
எனவே வேத வசனமே "தேவர்கள்" என்று சொல்லும் ஒரு கூட்டத்தாரை நாம் பிசாசுகள் என்று நமது இஸ்டத்துக்கு கூறிவிட முடியாது!
எலோஹீம் என்னும் தேவ ஆவியானவரால் ஆதியாகமம் முதலாம் அதிகாரத்தில் படைக்கபட்ட இந்த "தேவனின் குமாரர்கள்" தேவனாகிய கர்த்தரால் இரண்டாம் அதிகாரத்தில் மண்ணினால் படைக்கபாட்ட "மனுஷ குமாரர்கள் அல்ல". இரண்டு படைப்புக்கும் உள்ள வேறுபாட்டைபற்றிய விளக்கத்தை கீழ்கண்ட திரியில் பார்க்கலாம்!
இந்த தேவ குமாரர்களே பின்னாளில் மனுஷ குமாரர்களுடன் கூடி பிள்ளைகளை பெற்றார்கள் என்று வேதம் சொல்கிறது.
ஆதி 6:4 தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளோடே கூடுகிறதினால், இவர்கள் அவர்களுக்குப் பிள்ளைகளைப் பெற்றபோது, இவர்களும் பூர்வத்தில் பேர்பெற்ற மனுஷராகிய பலவான்களானார்கள்
லூசிப்பர் போலவே ஒரு மகிமையான நிலையில் இருந்து, அசுத்த ஆவிகளின் ஆக்கிரமிப்பால் விழுந்துபோன இவர்களை வணக்கவோ செவிககவோ கூடாது என்று ஆண்டவர் உறுதியாக எச்சரித்துள்ளார்! காரணம் இவர்களை சாத்தான் மேற்கொண்டுள்ளதால், இவர்கள் செய்யும் அனைத்து காரியங்களும் தேவனின் திட்டத்துக்கு விரோதமாக இருப்பதாகவே தேவன் எனக்கு தெரிவித்தார்! எனவே ஒன்றான மெய் தெய்வத்தை விட்டுவிட்டு இவர்களை பின்பற்றுகிறவர்களை தேவன் சங்கரித்துவிடும்படி மிக கடுமையாக எச்சரிக்கிறார்!
உபாகமம் 17:3நான் விலக்கியிருக்கிற வேறே தேவர்களையாவது சந்திரசூரியர் முதலான வானசேனைகளையாவது சேவித்து, அவைகளை நமஸ்கரிக்கிறதாகக் காணப்பட்டால் 5...............அப்படிப்பட்டவர்கள் சாகும்படி கல்லெறியக்கடவாய்.
உபாகமம் 8:19உன் தேவனாகிய கர்த்தரை நீ மறந்து, வேறே தேவர்களைப் பின்பற்றி அவர்களைச் சேவித்து, அவர்களைப் பணிந்து கொள்வாயானால், நிச்சயமாய் அழிந்துபோவீர்கள்
யோசுவா 24:20நீங்கள் கர்த்தரை விட்டு, அந்நிய தேவர்களைச் சேவித்தால், அவர் திரும்பி உங்களுக்குத் தீமை செய்து, உங்களை நிர்மூலமாக்குவார் என்றான்.
எனவே அன்பானவர்களே! தேவர்கள் என்றொரு கூட்டம் இருக்கிறது என்பதற்கு வேதத்தில் அனேக வசனங்கள் சாட்சியிருக்கிறது. ஆனால் எப்படி ஒரு லூசிப்பர் வீழ்ந்துபொனானோ எப்படி ஒரு ஆதாம் ஏவாள் வீழ்ந்து போனார்களோ அதேபோல அவர்களும் வீழ்ந்துபோனவர்களே!
ரோமர் 1:26இதினிமித்தம் தேவன் அவர்களை இழிவான இச்சைரோகங்களுக்கு ஒப்புக்கொடுத்தார்; அந்தப்படியே அவர்களுடைய பெண்கள் சுபாவ அநுபோகத்தைச் சுபாவத்துக்கு விரோதமான அநுபோகமாக மாற்றினார்கள்.
27. அப்படியே ஆண்களும் பெண்களைச் சுபாவப்படி அநுபவியாமல், ஒருவர்மேலொருவர் விரகதாபத்தினாலே பொங்கி, ஆணோடே ஆண் அவலட்சணமானதை நடப்பித்து தங்கள் தப்பிதத்திற்குத் தகுதியான பலனைத் தங்களுக்குள் அடைந்தார்கள்.
அதனால்தான் இந்து புராணகள் மட்டுமல்ல "ஆழம் சொல்லும் உண்மைகள்" என்ற புதை பொருள் ஆராட்சி புத்தகத்தில் வரும் அனேக அந்நியதேவர்களின் புராணங்கள் முழுவதும் அக்கிரமம்மும் ஆபாசம் நிறைந்ததாக இருக்கிறது.
தேவர்கள் என்று அழைக்கபடும் இவர்கள் தெய்வம் என்று வணங்கப்பட சற்றும் தகுதியில்லாத, மனுஷனை விட கேவலமான ஒரு நிலையை எட்டிவிட்டனர். சாத்தானும் தன்னுடைய பிடியினுள் இருப்பவர்களுக்கு இந்த் உலகத்தில் சில நன்மைகளை செய்து தன்னுடைய காரியத்தை சாதிபதுபோல இவர்களும் தங்களை செவிப்பவர்களுக்கு அநித்தியமான சில உலக நன்மைகளை தரலாம் ஆனால் அந்த நன்மைகளால் எந்த பயனும் இல்லை!
எனவே ஒன்றான மெய் தெய்வமாகிய பிதாவையும் அவர் அனுப்பியே பரிசுத்தராகிய இயேசுவையும் மாத்திரம் அறிந்து சேவிப்போம், நித்திய ஜீவனை சுதந்தரிப்போம்!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
மேலேயுள்ள திரியில் ஆதியாகமம் ஒன்றாம் அதிகாரத்தில் படைக்கப்படட மனுஷர்களுக்கும் இரண்டாம் அதிகாரத்தில் படைக்கப்படட மனுஷர்களுக்கும் உள்ள வித்தியாசத்தை வேத வசனத்தின்படி விளக்கியிருக்கிறேன்.
முதல் அதிகாரத்தில் வார்த்தையால் சிருஷ்டித்தவர் - தேவ ஆவியானவர் - அவர் உருவாக்கியவர்கள் தேவர்கள் & தேவ புத்திரர்கள்.
இரண்டாம் அதிகாரத்தில் மண்ணினால் மனுஷர்களை படைத்தவர் - தேவனாகிய கர்த்தர் - அவர் உருவாக்கியவர் மாம்சமான மனுஷன்.
நாம் இப்போது காணும் இந்த பூமி அஸ்திபாரம்போடும்போது முதலில் படைக்கப்படட தேவ புத்திரர்கள் ஏற்க்கெனவே இருந்தார்கள் அவர்கள் கெம்பீரித்தார்கள் என்பதை கீழ்கண்ட வசனம் சொல்கிறது
யோபு 38:4. நான் பூமியை அஸ்திபாரப்படுத்துகிறபோது நீ எங்கேயிருந்தாய்? நீ அறிவாளியானால் அதை அறிவி.5. அதற்கு அளவு குறித்தவர் யார்? அதின்மேல் நூல்போட்டவர் யார்? இதை நீ அறிந்திருந்தால் சொல்லு 6. அதின் ஆதாரங்கள் எதின்மேல் போடப்பட்டது? அதின் கோடிக்கல்லை வைத்தவர் யார்?அப்பொழுது விடியற்காலத்து நட்சத்திரங்கள் ஏகமாய்ப் பாடி, தேவபுத்திரர் எல்லாரும் கெம்பீரித்தார்களே.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
மனுஷனுக்கு வேலை செய்வதற்கு வல்லமையையும் மூளை அறிவையும் ஞானத்தையும் கொடுத்தது யார் சிஸ்ட்டர் அதே போல் அவர்களுக்கும் சில அறுப்பத வல்லமை தேவனால் கொடுக்கப்பட்ட்து.
ஆனால்மனுஷன் எப்படி சாத்தனிடம் தோற்றுபோனானோ அதேபோலவே அவர்களும் தீமையிடம் தோற்றுப்போனார்கள்எனவே அவர்களின் மொத்த வல்லமையும் தீமைக்கு சாதகமானது.
மனுஷன் மூளை அறிவால் கண்டுபிடித்த கணினியை பயன்படுத்தி அநேகரை சத்துரு கெடுப்பதுபோலவே
அந்த வல்லமையை பயன்படுத்திதான் சாத்தான் அற்புத அடையாளங்களை செய்து வருகிறான்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
/////sundar...முதல் அதிகாரத்தில் வார்த்தையால் சிருஷ்டித்தவர் - தேவ ஆவியானவர் - அவர் உருவாக்கியவர்கள் தேவர்கள் & தேவ புத்திரர்கள்.
இரண்டாம் அதிகாரத்தில் மண்ணினால் மனுஷர்களை படைத்தவர் - தேவனாகிய கர்த்தர் - அவர் உருவாக்கியவர் மாம்சமான மனுஷன்.
நாம் இப்போது காணும் இந்த பூமி அஸ்திபாரம்போடும்போது முதலில் படைக்கப்படட தேவ புத்திரர்கள் ஏற்க்கெனவே இருந்தார்கள் அவர்கள் கெம்பீரித்தார்கள் என்பதை கீழ்கண்ட வசனம் சொல்கிறது ///////// --------------------------------------------------------------------------------------
அண்ணா தெரிந்து கொள்ள விரும்புகிறேன்...
1. முதலாம் அதிகாரத்தின் மனிதர்களை படைக்கு முன்பே தேவன் பூமியை படைத்து விட்டாரே அப்படியாயின் அவர்கள் எப்படி பூமியை அஸ்திபார படுத்தும் போது கெம்பீரிக்க முடியும்? அல்லது முதல் அதிகாரத்தின் பூமியும் இப்போதுள்ள பூமியும் வேறு வேறா?
2. முதலில் படைக்க பட்டவர்கள் தான் தேவனுடைய சாயல், பின்னர் படைக்க பட்டவன் மண்ணானவன் என்றால் நாம் தேவனுடைய சாயல் இல்லையா?
3. ஏலோஹீம் யாவே என்பவர்கள் வேறு வேறா?
4. விழுந்து போன தேவர்களுக்கு தேவன் மீட்பின் திட்டம் ஏதும் செய்தாரா? அவர்களும் வஞ் சிக்கப்பட்டுதானே விழுந்தார்கள்? அப்படியானால் மீட்பின் திட்டம் தேவைதானே?
தயவு செய்து வேதத்தில் உள்ளவற்றை தாம் நினைத்தவாறு சொல்ல வேண்டாம்..
ஆதி 1 அதிகாரத்தில் ஆண்டவர் குறிப்பாக தான் படைத்தவற்றை சொல்லி விட்டு பின்பு 2 அதிகாரத்தில் விளக்குகிறார்..
இது தவிர முதல் படைக்கப்பட்டது வேறு பின்பு ஆதி 2 அதிகாரத்தில் படைக்கப்பட்டது வேறு என்று சொல்லி யாரையும் குழப்பாதீர்கள்..
வேதத்தில் படைப்பின் வரிசை மாறுபட்டு ஆதி 1,2 ஆம் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ளதை வைத்துக் கொண்டு நாம் நினைத்தவாறு கூற முடியாது. மற்றும் ஆதி 1 இல் குறிப்பிட்டு கூறிய தேவன் ஆதியாகமம் 2 ஆம் அதிகாரத்தில்
ஆதி 2:4 தேவனாகிய கர்த்தர் பூமியையும் வானத்தையும் உண்டாக்கின நாளிலே, வானமும் பூமியும் சிருஷ்டிக்கப்பட்ட வரலாறு இவைகளே.
என்று கூறி படைப்பை விளக்கி கூறுகிறார்..
மற்றும் ஆண்டவர் அந்நிய தெய்வங்களை படைக்கவில்லை.. அது மனிதனால் உருவாக்கப்பட்டது.. மோசேயின் காலத்தில் இஸ்ரேல் ஜனங்கள் தங்களுக்கு என்று தெய்வங்களை உருவாக்கி கொண்டார்கள் என்று வேதத்தில் கூறப்படுகிறது.. சர்வத்துக்கும் அதிபதியாகிய நமது தேவன் நேர்த்தியானவர்.,..
-- Edited by Debora on Thursday 13th of October 2016 12:36:38 PM
தயவு செய்து வேதத்தில் உள்ளவற்றை தாம் நினைத்தவாறு சொல்ல வேண்டாம்..
ஆதி 1 அதிகாரத்தில் ஆண்டவர் குறிப்பாக தான் படைத்தவற்றை சொல்லி விட்டு பின்பு 2 அதிகாரத்தில் விளக்குகிறார்..
இது தவிர முதல் படைக்கப்பட்டது வேறு பின்பு ஆதி 2 அதிகாரத்தில் படைக்கப்பட்டது வேறு என்று சொல்லி யாரையும் குழப்பாதீர்கள்..
வேதத்தில் படைப்பின் வரிசை மாறுபட்டு ஆதி 1,2 ஆம் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ளதை வைத்துக் கொண்டு நாம் நினைத்தவாறு கூற முடியாது. மற்றும் ஆதி 1 இல் குறிப்பிட்டு கூறிய தேவன் ஆதியாகமம் 2 ஆம் அதிகாரத்தில்
ஆதி 2:4 தேவனாகிய கர்த்தர் பூமியையும் வானத்தையும் உண்டாக்கின நாளிலே, வானமும் பூமியும் சிருஷ்டிக்கப்பட்ட வரலாறு இவைகளே.
என்று கூறி படைப்பை விளக்கி கூறுகிறார்..
மற்றும் ஆண்டவர் அந்நிய தெய்வங்களை படைக்கவில்லை.. அது மனிதனால் உருவாக்கப்பட்டது.. மோசேயின் காலத்தில் இஸ்ரேல் ஜனங்கள் தங்களுக்கு என்று தெய்வங்களை உருவாக்கி கொண்டார்கள் என்று வேதத்தில் கூறப்படுகிறது.. சர்வத்துக்கும் அதிபதியாகிய நமது தேவன் நேர்த்தியானவர்.,..
-- Edited by Debora on Thursday 13th of October 2016 12:36:38 PM
இருபடைப்பில் உள்ள இத்தனை முரண்பாடுகளை எடுத்து சொல்லியுள்ளேன். எல்லாவற்றையும் படைத்து மனுஷனை இறுதியில் படைத்தேன் என்றும் மனுஷனை படைத்து பின்னர் மற்ற ஜீவன்களை படைத்தேன் என்றும் சும்மா மாற்றி மாற்றி சொல்பவர் தேவன் அல்ல.
அதே நேரம் முதல் அதிகாரத்தில் "தேவன்" "(எலோஹீம்) என்று வரும் வார்த்தை பின்னர் இரண்டாம் அதிகாரத்தில் "தேவனாகிய கர்த்தர்" (யாவே) என்றெல்லாம் காரணம் இல்லாமல் இஷடத்துக்கு மாறுவதற்கு வேதம் ஒரு உலக கதை புஸ்தகம் அல்ல சிஸ்ட்டர்.
ANYWAY உங்களை அறிவுரைக்கு மிக்க நன்றி. நீங்கள் இதை நம்பவேண்டிய அவசியம் ஒன்றும் இல்லை. ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
1. முதலாம் அதிகாரத்தின் மனிதர்களை படைக்கு முன்பே தேவன் பூமியை படைத்து விட்டாரே அப்படியாயின் அவர்கள் எப்படி பூமியை அஸ்திபார படுத்தும் போது கெம்பீரிக்க முடியும்? அல்லது முதல் அதிகாரத்தின் பூமியும் இப்போதுள்ள பூமியும் வேறு வேறா?
ஆம் பிரதர். முதலில் சிருஷ்டிக்கப்படட எதையுமே நம் மாம்ச கண்களால் காண முடியாது. தேவன் நம் கண்ணை திறந்தால் இந்த உலகத்திலேயே அதை காண முடியும். ஆகாருக்கு தேவன் கண்ணை திறந்தபோது காண்பிக்கப்படட துறவு அப்படிபடடதுதான்.
எப்படி தேவன் படைத்த ஏதேன் தோடடம் மாம்ச கண்ணுக்கு மறைக்கப்பட்டு இருக்கிறதோ அதேபோல் அது மறைக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது மாம்சீகமான இந்த உலகத்தை படைத்தபோது முதலில் தெய்வீகமான உலகத்தில் படைக்கப்படட தேவ புத்திரர்கள் கெம்பீரித்தார்கள்.
///2. முதலில் படைக்க பட்டவர்கள் தான் தேவனுடைய சாயல், பின்னர் படைக்க பட்டவன் மண்ணானவன் என்றால் நாம் தேவனுடைய சாயல் இல்லையா?///
இவ்வசனத்தில் ஆதமின் வம்ச வரலாறு என்று சொல்லி தேவ சாயலில் உண்டாக்கினார் என்று சொல்வதால் எல்லா மனுஷர்களும் தேவ சாயலானவர்களே என்று அறிய முடிகிறது.
ஒரே வேறுபாடு முதலில் உள்ளவர்கள் வார்த்தை என்னும் ஆவியால் உருவானவர்கள் அவர்களுக்கு மண்ணினால் ஆன மாம்சம் கிடையாது. இரண்டாமபவர்கள் தேவன் கையின் கிரியையினால் மண்ணினால் ஆனவர்கள் அவர்களுக்கு மாம்சம் உண்டு.
///3. ஏலோஹீம் யாவே என்பவர்கள் வேறு வேறா?//
ஒரே தேவனின் இரண்டு வேறுபடட நிலைகள். எலோஹீம் என்பது பன்மை சொல் "தேவ ஆவிகளின் தொகுப்பு" யாவே தேவனும் அதனுள் அடங்குவார்.
///விழுந்து போன தேவர்களுக்கு தேவன் மீட்பின் திட்டம் ஏதும் செய்தாரா? அவர்களும் வஞ் சிக்கப்பட்டுதானே விழுந்தார்கள்? அப்படியானால் மீட்பின் திட்டம் தேவைதானே?///
நடக்கும் மீட்ப்பின் திடடம் எல்லோருக்கும் சேர்த்துதான் பிரதர்.
ஆதாம் ஏவாள் படைப்பே மீட்ப்பு திடடத்தின் முதல் பகுதிதான். எனவேதான் ஆண்டவர் ஆதாம் ஏவாள் இருக்கும் இடத்தில் சந்துருவை அனுமதித்தார் மேலும் ஆதம் பாவம் செய்தபோது அவனை அழித்து புதிய ஜோடியை உருவாக்காமல் தொடர்ந்தார்.
அதில் அநேக காரியங்கள் நடந்து முடிந்தாயிற்று பிரதர்.நாம் இப்போது நிறைவேறுதலின் நாடுகளில் இருக்கிறோம்.
நான் இங்கு அனைத்தையும் எழுதி வைத்ததன் காரணமே தேவன் தெரிவித்த எதையும் மறைக்க கூடாது என்பதற்குத்தான் உண்மையை அறிய விரும்புவோர் கேட்டு அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்க்கே.
நம்பமுடிந்தால் நம்புங்கள் சந்தேகம் இருந்தால் ஆண்டவரிடம் தொடர்ந்து கேட்டு விசாரித்து பாருங்கள். முற்றிலும் தவறு என்று நினைத்தால் விட்டுவிடுங்கள் யாரும் காடடாயம் நம்பவேண்டும் என்ற அவசியம் ஏதும் இல்லை. ஆண்டவராகிய இயேசுவை ஏற்றுக்கொண்டு அவர் காட்டிய வழியில் வாழ்ந்தால் போதும் அதுவே நம்மை நித்திய ஜீவனுக்கு கொண்டு செல்லும் . காலம் வரும்போது உண்மைகள் வெளியரங்கமாகும் அப்போது தெரிந்துகொள்ளுங்கள்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)