தயவு செய்து வேதத்தில் உள்ளவற்றை தாம் நினைத்தவாறு சொல்ல வேண்டாம்..
இது தவிர முதல் படைக்கப்பட்டது வேறு பின்பு ஆதி 2 அதிகாரத்தில் படைக்கப்பட்டது வேறு என்று சொல்லி யாரையும் குழப்பாதீர்கள்..
சிஸ்ட்டர் உங்களால சில கருத்துக்களைபுரிய முடியவில்லை அல்லது ஏற்றுக்கொள்ள முடியவில்லை எனவே திரும்ப திரும்ப ஒரே வடடத்தில் நின்று கேள்விகளை கேட்கிறீர்கள்
எனக்கு அறிவுரை சொல்லிவிடடீர்கள் அல்லவா அதை நான் ஏற்றுக்கொள்கிறேன் உங்களை நான் மேலும் குழப்ப விரும்பவில்லை எனவே அதுபற்றி உங்களிடம் விவாதிக்க விரும்பவில்லை.
SORRY NO COMMENTS PLS.
-- Edited by SUNDAR on Thursday 13th of October 2016 06:33:32 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
இந்த தேவர்கள் என்று குறிப்பிடப்படுவது மனுஷன் உண்டாக்கினதாக இருக்கலாம் தானே
ஏனெனின் மோசேயின் காலத்தில் இஸ்ரேல் ஜனங்கள் அவ்வாறு தானே தனக்கென தேவர்களை உண்டாக்கி கொண்டார்கள்.
மேலும் ஆரம்பத்தில் அதாவது ஆதியிலேயே வேதத்தில் தேவர்கள் என்றோ தெய்வங்கள் என்றோ குறிப்பிடப்பட வில்லையே மனிதன் பாவம் செய்த பின்பு தானே அவைகள் குறிப்பிடப்படுகின்றது. மேலும் தேவன் ஓரிடத்திலும் தேவர்களை குறித்து சொல்லவில்லையே... அதாவது
யாத்திராகமம் 20:
22அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால், நான் வானத்திலிருந்து உங்களோடே பேசினேன் என்று கண்டீர்கள்.
23நீங்கள் எனக்கு ஒப்பாக வெள்ளியினாலே தெய்வங்களையும் பொன்னினாலே தெய்வங்களையும் உங்களுக்கு உண்டாக்கவே வேண்டாம்.
இவ்வாறு தேவன் ஜனங்களிடம் சொல்ல சொல்லி மோசேயிடம் சொல்கிறார் அப்படியானால் ஜனங்கள் தானே தேவர்களை உருவாக்குகிறார்கள்.
தேவர்களை உண்டாக்கியது யார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் ?
இதே திரியில் மேலே எல்லாம் விளக்கமாக எழுதியிருக்கிறேன் சிஸ்ட்டர் எதோ புதிதாக வந்ததுபோல் மீண்டும் அதே கேள்வியை திரும்ப கேட்கிறீர்கள்.
அடுத்தது, நான் எதையும் நினைத்தோ அல்லது புரிந்தோ விளங்கியோ அல்லது யாரிடமும் கேட்டோ எழுதவில்லை பல நாடகள் தேவனால் அபிஷேகிக்கப்பட்டு தேவனால் போதிக்கப்பட்டு எழுதியிருக்கிறேன் எனவே மனுஷர்கள் மூலம் அறிந்துகொண்டு உங்கள் புரிதல்களுக்கும் எனது விளக்கங்களும் வேறுபாடு இருக்கத்தான் செய்யும்.
நான் மேலே எழுதியிருக்கும் ஒவ்வொன்றுக்கும் பக்கத்திலேயே வசன ஆதாரமும் எழுதியிருக்கிறேன் நன்றாக படித்து பாருங்கள். நீங்கள் வேறுமாதிரி புரிந்துகொண்டால் அதற்க்கு நான் பொறுப்பல்ல. மேலும் உங்கள் புரிதல்கள் மற்றும் ஒரு சாதாரண கிறிஸ்த்தவர்களின் புரிதல்கள் பைபிள் காலேஜில் சொல்லிக்கொடுக்கப்படும் புரிதல்கள் என்னவென்பது எனக்கும் தெரியும். நான் எழுதியிருப்பதை நம்பமுடிந்தால் நம்புங்கள் இல்லை நான் குழப்புகிறேன் என்று நினைத்தால் விட்டுவிட்டு உங்கள் புரிதல்களின்படி வாழுங்கள் அதனால் எந்த பாதிப்பும் உண்டாகாது.
பல்வேறு பதில் இல்ல கேள்வியுடன் இருந்தது, நான் எழுதியிருப்பதை ஆண்டவர் ஏவுதலால் ஏற்கிறவர்களுக்கு மட்டுமே நான் விளக்கம் தர வாஞ்சிக்கிறேன் அவர்களால் மாத்திரமே இதை சரியாக புரியமுடியம். மற்றபடி யாரிடமும் விவாதம் பண்ணி இக்கருத்தை நிலைநாடட நான் விரும்பவில்லை அதற்க்கு அவசியமும் இல்லை.
-- Edited by SUNDAR on Saturday 15th of October 2016 01:27:46 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)