அவற்றில் எல்லாவற்றிக்குமே வசன ஆதாரம் எனக்கு தெரிவிக்கபட்டிருந்தாலும ஆதியில் இருந்து நடந்த காரியங்களை விளக்கமாக அறியாவிடில் அது புரிவதற்கு சற்று கடினமாக இருக்கலாம்
அந்த திரியில் எழுதப்பட்ட கருத்துக்கு எதிராக சகோ. சேகரியம் அவர்கள் கேட்ட சில கேள்விகளுக்கான விளக்கங்கள் இங்கே கொடுக்கபடுகின்றன. அந்த திரியில் எழுதப்படும் கருத்துக்கள் குறித்த எந்த எதிர் கருத்தாகினும் அல்லது விளக்கம் வேண்டுமானாலும் இங்கு பதிவிடலாம்!
SEKARIAM wrote
////அந்நிய தெய்வங்கள் சமாதானம் தருவது போல நடிக்கலாம் அதை நம்புவதோ அல்லது இப்படிச்சொல்வதோ மிக மிக தவறான காரியம் .///
சகோதரர் சேகரியம் அவர்களே! தாங்கள் சுட்டியுள்ள வார்த்தைகளை நான் எழுதியது ஏறக்குறைய தங்களில் கருத்தை ஒத்த புரிதல் நிலையோடுதான் ஆனால் அது ஒரு தவறான புரிதலை தந்திருக்குமானால் அதற்காக வருந்துகிறேன்.
நான் எழுதியது:
///தமிழ் நாட்டை வேறொரு இந்து சாமியின் ஆவி ஆழுகைசெய்வது எனக்கு தெரிந்தது. அதுமிகவும் நல்ல சாமியாக இருந்தது. தனது பக்தர்களை மிக கரிசனையோடும் சமாதானத்தோடும் காக்கும் வல்லமை உடையதாக இருந்தது. ஆனாலும் அந்த ஆவியும் இறைவனின் திட்டத்துக்கு கெடுதலாகவே இருந்தது எனக்கு தெரிவிக்கப்பட்டது.///
இங்கு எனக்கு முக்கியமாக தெரிவிக்கபட்ட கருத்து அதன் செயல்பாடுகள் தேவனின் திட்டத்துக்கு விரோதமாக இருந்தது என்பதுவே! எல்லோருமே அவரவர் பிள்ளைகளை சமாதானத்தோடுதான் பாதுகாக்க முயல்வார்கள். ஆனால் அவரின் செயல்கள் அரசாங்க திட்டத்துக்கு ஒத்துபோகிறதா இல்லையா என்பதன் அடிப்படையிலேயே அவர்கள் நல்லவர்களா அல்லது தீயவர்களா என்பது தீர்மானிக்கப்படும்.
அதுபோல் "அந்த சாமியானது தன்னுடய பிள்ளைகளுக்கு நல்லவராக இருந்தது! ஆனால் அதன் செயல்பாடோ தேவனின் திட்டத்துக்கு விரோதமாக இருந்தது" என்பதே நான் சொல்ல விளையும் கருத்து. தேவனின் திட்டத்துக்கு விரோதமாக என்று அடுத்து சொல்லும்போது முதலில் சொல்லபட்ட "நல்ல சாமி" என்ற வார்த்தை தானாக அடிபட்டுபோகிறது என்பதை கருத்தில் கொள்ளவும்!
SEKARIAM வ்ரோடே
///ஆக, இந்த பூமியில் இயேசு தருகிற சமாதனம் தவிர, வேறே சமாதனம் என்ற ஒரு விஷயம் இல்லை, இல்லை, இல்லவே இல்லை..
ஏனென்றால் இயேசு கிறிஸ்து ஒருவர் மாத்திரமேதான் ஆக்கினை அடைந்து சமாதானத்தை உண்டுபண்ணி இருக்கிறார்..///
சரியான கருத்துதான் ஆனால்
நான் உலகத்தில் கிடைக்கும் தற்காலிக சமாதானத்தைபற்றி எழுதியிருக்கிறேன்! ஆனால் தாங்களோ இயேசுவால் வெறும் நித்திய சமாதானத்தைபற்றி குறிப்பிடுகிறீர்கள் இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை இந்த திரியில் விளக்கியிருக்கிறேன்.
மாற்கு 10 : 18 அதற்கு இயேசு, நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனுமில்லையே ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
சகோதரரே "எங்கள் பக்கத்துவீட்டில் ஒரு நல்ல மனுஷர் இருக்கிறார் அவர் தன்னுடய பிள்ளைகளை சமாதானத்துடன் கவனித்து கொள்கிறார்" என்று சொல்வதில் எதுவும் தவறு இருக்கிறது போல் எனக்கு தெரியவில்லை. அப்படியொரு உண்மை சம்பவத்துக்கு எந்த வசன ஆதாரமும் கொடுக்க முடியாது
தன்னுடய பார்வைக்கு நல்லவராக தெரிபவரை நல்லவர் என்று சொல்ல நிச்சயம் உரிமை உண்டு!
ஆனால் இங்கு இயேசுவின் பார்வைக்கு தேவன் ஒருவரே நல்லவராக தெரிகிறார் எனவே அவர் "தேவன் ஒருவரை தவிர நல்லவர் ஒருவரும் இல்லை" என்று குறிப்பிடுகிறார். அவருடய கருத்தோடு நம்முடய உலக கருத்துக்களையும் ஒப்பிட்டு பார்ப்பது சரியல்ல. காரணம் இயேசு "தேவன் ஒருவரை தவிர நல்லவர் ஒருவரும் இல்லை" என்று சொல்லும் அதே வேதமே வேறு சிலரையும் நல்லவர் என்று சொல்கிறது
அப்போஸ்தலர் 11:24 அவன் நல்லவனும், பரிசுத்த ஆவியினாலும் விசுவாசத்தினாலும் நிறைந்தவனுமாயிருந்தான்;
இங்கு பர்னபாவை நல்லவன்என்று வேதம் சொல்வதை நாம் பார்க்க முடிகிறது!
எனவே ஒருவர் தனக்கு நல்லவனாக தெரியும் ஒருவரை நல்லவன் என்று சொல்வதில் தவறேதும் இல்லை என்றே கருதுகிறேன்!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)