இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஆச்சர்யமூட்டும் கீழ்படிதல்!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
ஆச்சர்யமூட்டும் கீழ்படிதல்!
Permalink  
 


ஆதாம் ஏவாளில் படைப்பில் இருந்து இன்றுவரை தேவன்  தன்னுடைய  திட்டங்களை சரியாகவே நிறைவேற்றி வருகிறார் என்பதை நாம்  அனேக வசனங்களின் மூலம் அறிய முடியும்!
 
யோபு 42:2 தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன்.
  
இந்த உலகில் எல்லாமே தேவனின் சித்தப்படி அவருடைய திட்டமே நிறைவேறி வருகிறது என்பதை யாரும்  மறுக்க முடியாது காரணம்
  
பிரசங்கி 3:11 அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்; உலகத்தையும் அவர்கள் உள்ளத்திலே வைத்திருக்கிறார்; ஆதலால் தேவன் ஆதிமுதல் அந்தம்மட்டும் செய்துவரும் கிரியையை மனுஷன் கண்டுபிடியான்.
 
இவ்வாறு தேவன்  தன்னுடய  திட்டத்தை  சரியாக நிறைவேற்றி  வருவது மெய்யாக இருந்தாலும்  அவர் நேரடியாக பூமிக்கு வந்து எந்த ஒரு செயலையும் அதிரடியாக
செய்யவில்லை! 
 
பிறகு அவர்  யாரைகொண்டு இந்த திட்டங்களை நிறைவேற்றுகிறார்? என்பதை சற்று கவனித்தீர்களானால், அவருக்கு கீழ்படிந்து நடந்த நம்போன்ற மனுஷர்களை
கொண்டுதான் அவரது திட்டங்களை சரியாக நிறைவேற்றி வருகிறார்.
 
பூமியின் வம்சங்களை எல்லாம் ஆசீர்வதிக்க வேண்டும் என்று எண்ணிய கர்த்தர் நேரடியாக அவ்வாறுசெய்யாமல், தேவனின் வார்த்தைக்கு எதிர்கேள்வி கேட்காமல் கீழ்படிந்து தன் இனத்தை விட்டு புறப்பட்ட ஆப்ரஹாம் என்னும் மனுஷனின் சுயநலமற்ற  கீழ்படித்தலின் அடிப்படையில்  அவனுக்குள் பூமியின் வம்சங்களை எல்லாம் ஆசீர்வதித்தார்
 
ஆதியாகமம் 28:14  உனக்குள்ளும் உன் சந்ததிக்குள்ளும் பூமியின் வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும்.
 
அதேபோல், எகிப்த்தின் அடிமைதனத்தில் வேதனைபட்டு முறையிட்டு கொண்டிருந்த இஸ்ரவேல் ஜனங்களை மீட்டு கானான் என்னும் தேனும் பாலும் ஓடும் தேசத்துக்கு கொண்டு செல்வது தேவனின் திட்டம் என்றாலும், அதை அவர் தன்னுடய சர்வவல்ல செயலின்படி உலக வரைபடத்தில் இருந்த எகித்தை தூக்கி கானானில் வைத்து கானானை தூக்கி எகிப்த்தில் வைப்பது போன்ற அதிரடி செயல்கள்  செய்யாமல், மிகுந்த சாந்த குணம் மற்றும் கீழ்படிதலுள்ள  மோசேயை கொண்டு இஸ்ரவேல் ஜனங்களை வழி நடத்தினார்.
 
இவ்வாறு தேவனின் திட்டம் மற்றும் சித்தம் நிறைவேறுவதற்கு மனுஷர்களின் கீழ்படிதல் மிக மிக அவசியமாகிறது.
 
அத்தோடு மட்டுமல்லாமல் ஏனென்று கேட்காமல் கீழ்படியும்  மனுஷர்கள் மற்றும் உயிரிகள் மேல் மற்ற மனுஷர்களின் அக்கிரமங்களை சுமத்தி அக்கிரமகாரர்களின்
அக்கிரமத்த்தை நிவர்த்தி செய்யும் சம்பவங்களும் வேதத்தில் உண்டு!
 
பாவம்செய்த ஒருமனுஷனின் அக்கிரமத்தை ஏதுமறியாமல் கீழ்படியும் ஒரு ஆட்டு கடாவின்மேல் சுமத்தினார்!
 
லேவியராகமம் 16:22 அந்த வெள்ளாட்டுக்கடா அவர்களுடைய அக்கிரமங்களையெல்லாம் தன்மேல் சுமந்துகொண்டு, குடியில்லாத தேசத்துக்குப் போவதாக
 
இஸ்ரவேலரின் அக்கிரமத்தை கீழ்படிதலுள்ள தீர்க்கதரிசியாகிய எசேக்கியேல் மேல் சுமத்தினார்!
 
எசேக்கியேல் 4:4 நீ உன் இடதுபக்கமாய் ஒருக்களித்துப் படுத்து, அதின்மேல் இஸ்ரவேல் வம்சத்தாரின் அக்கிரமத்தைச் சுமத்திக்கொள்; நீ அந்தப்பக்கமாய் ஒருக்களித்திருக்கும் நாட்களின் இலக்கத்தின்படியே அவர்களுடைய அக்கிரமத்தைச் சுமப்பாய்.
 
தேவனது சித்தத்துக்கு முழுமையாக கீழ்படிந்த ஆண்டவராகிய இயேசுவின் மீது இந்த உலகத்தின் அக்கிரமம் எல்லாம் சுமத்தப்பட்டது!  
 
ஏசாயா 53:11  என் தாசனாகிய நீதிபரர் தம்மைப் பற்றும் அறிவினால் அநேகரை நீதிமான்களாக்குவார்; அவர்களுடைய அக்கிரமங்களைத் தாமே சுமந்துகொள்வார்.
 
மேலேயுள்ள செய்திகள் மூலம் ஒரேஒரு மனுஷனின் சுயநலமற்ற நிபந்தனையற்ற எதிர்கேள்வியில்லாத கீழ்படிதல் என்பது தேவனது திட்டம் நிறைவேருவதக்கும்
அவனுக்கு மட்டுமல்ல இந்த மனுஷகுலத்துக்கே  ஆசீர்வாதமாக அமைந்திருப்பதை நாம் பார்க்க முடிகிறது!  
 
இந்நிலையில், வேத புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள அனேக வேதாகம மனுஷர் களுக்குள் தங்களுக்கு ஆச்சர்யமூட்டும் அளவுக்கு கீழ்படிதலுடன் நடந்து கொண்டுள்ள தங்களுக்கு மிகவும்  பிடித்த  ஒருவரை சகோதரர்கள் தேர்ந்தெடுத்து  அவரின் கீழ்படிதல் எவ்விதத்தில் ஆச்சர்யமாகவும் மற்றவர்களுக்கு படிப்பினை யாகவும் அமைந்துள்ளது என்று விளக்கினால் பலருக்கு விசுவாசத்தை வளர்க்க
பயனுள்ளதாக அமையும் என்று கருதுகிறேன்!  
 
 


-- Edited by SUNDAR on Wednesday 28th of September 2011 11:00:07 AM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

வேதாகம  மனிதர்களுக்குள் எனக்கு மிகுந்த ஆச்சர்யத்தை உண்டாக்கும் அளவுக்கு ஒரு  கீழ்படிதலை  காண்பிதவர் ஒரு ஸ்திரியே! ஆண்டவராகிய இயேசு எப்படி  ஒரு புறஜாதி ஸ்திரியாகிய சமாரிய ஸ்திரியின் விசுவாசத்தை பார்த்து "ஸ்திரியே உன் விசுவாசம் பெரிது" என்று வியந்து பாராட்டினாரோ அதேபோல் மிகுந்த கீழ்படித லுளள  இந்த ஸ்திரியும் இஸ்ரவேலரல்லாத அந்நிய ஜாதியாகியா மோவாபி ஸ்திரியே!

ஆம்! "ரூத்" என்ற பெயர் கொண்ட அந்த ஸ்திரியின் ஆச்சர்யமூட்டும் கீழ்படிதலி மித்தம் அவளுக்கென்று ஒரு தனி புத்தகம் வேதாகமத்தில் ஒதுக்கப்பட்டிருபதில் ஆச்சர்யமேதுமில்லை!

பொதுவாக உலக நிலைப்படி மருமகள் மாமியார் என்றாலே  எலியும் பூனையும்

போல இருவருக்கும் பிடிக்கவே பிடிக்காது. மருமகளுக்கும் மாமியாருக்கும் சண்டை நடக்காத வீடே இல்லை எனலாம்!  இந்நிலையில் தன் மாமிக்கு அதிகமாக கீழ்படிந்த  இந்த ஸ்திரியின் கதையை படிக்கும் போதெலாம் இவளால் எப்படி  இவ்வளவு  அதிகமான கீழ்படிதலுக்குள் கடந்துபோக முடிந்தது என்று எண்ணி எண்ணி வியக்கிறேன்
 
"ரூத்" எனப்படும் இந்த மோவாபிய ஸ்திரியின் கீழ்படிதலில் நாம் ஆராயும்போது   அந்த கீழ்படிதலில்  மூன்று முக்கிய அம்சங்கள் இருப்பதை அறிய முடியும் அதைபற்றி சுருக்கமாக   இங்கு பகிர்ந்து  கொள்ள விரும்புகிறேன்.
 
1. எதிபார்ப்பற்ற கீழ்படிதல்
2. அர்ப்பணிப்புடன் கூடிய கீழ்படிதல்       
3 .நிபந்தனையற்ற  முழுமையான கீழ்படிதல்!    
     
1. எதிர்பார்ப்பற்ற கீழ்படிதல்        
இந்த உலகில் மன்ஷர்கள் செய்யும் அனேக காரியங்கள்  ஏதாவது ஒரு எதிர் பார்ப்பின் அடிப்படையிலேயே செய்யப்படுகிறது. ஆனால் இங்கோ தான் இரண்டு
மகன்களையும் இழந்து எந்த ஒரு உதவியும் செய்யமுடியாத நிலையில்  இருக்கும் ஒரு வயதான  மாமிக்கு  இந்த  ரூத்  கீழ்படிந்தது என்பது, நிச்சயம்  எந்த ஒரு
எதிர்பார்ப்பும் இல்லாத  கீழ்படிதல்தான்.       
 
ரூத் 1
11. நகோமி: என் மக்களே, நீங்கள் திரும்பிப்போங்கள்; என்னோடே ஏன் வருகிறீர்கள்? உங்களுக்குப் புருஷராகும்படிக்கு, இனிமேல் என் கர்ப்பத்திலே எனக்குப் பிள்ளைகள் உண்டாகுமோ?12. என் மக்களே, திரும்பிப்போங்கள்; நான் வயதுசென்றவள்; ஒரு புருஷனுடன் வாழத்தக்கவளல்ல; 
 
அதாவது அவள்  பின்னால் நீங்கள் போவதால் யாருக்கும் எந்த பயனும் ஏற்ப்பட போவதில்லை என்பதை தெளிவாக அறிந்திருந்தும் பணமோ பொருளோ அல்லது வேறு எந்த  சொத்து சுமகமோ இல்லாத  அவளை ரூத் விடாமல் பின்பற்றியது எந்த எதிர்பார்ப்பும் இல்லாத ஒரு  ஆச்சர்யமான கீழ்படிதலே!   
 
2 அற்பணிப்புடன் கூடிய கீழ்படிதல்:
"முழுமனதோடு முழுவதுமாக தன்னை அற்பணித்து" பிறருக்கு  கீழ்படிந்து நடக்கும் நிலை என்பதுஒரு ஈடு இணை இல்லாதது. அப்படியொரு நிலையை இந்த ரூத்தின் கீழ்படிதலில் நாம்  காணமுடியும்.   

16. அதற்கு ரூத்: நான் உம்மைப் பின்பற்றாமல் உம்மைவிட்டுத் திரும்பிப் போவதைக்குறித்து, என்னோடே பேசவேண்டாம்; நீர் போகும் இடத்திற்கு நானும் வருவேன்; நீர் தங்கும் இடத்திலே நானும் தங்குவேன்; உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம்; உம்முடைய தேவன் என்னுடைய தேவன்.

17. நீர் மரணமடையும் இடத்தில் நானும் மரணமடைந்து, அங்கே அடக்கம்பண்ணப்படுவேன்; மரணமேயல்லாமல் வேறொன்றும் உம்மை விட்டு என்னைப் பிரித்தால், கர்த்தர் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர் என்றாள்.
 
ரூத் மிக உறுதியாக சொல்கிறாள். "நீர் இருக்கும் இடத்தில்தான் நான்
மரணமடையும் மட்டும் இருப்பேன். வேறு எதுவுமே  நம்மை பிரிக்க முடியாது"  என்று! சின்ன ஒரு மன கசப்பு வந்தாலே விட்டுவிட்டு எங்கேயாவது கண்காணா
தேசத்துக்கு ஓடிப்போக நினைக்கும் அநேகர் இருக்கும் இந்த உலகத்தில் ரூத் சொன்ன  இந்த வார்த்தைகள் அவளுடைய கீழ்படிதலில் உள்ள முழு அர்ப்பணிப்பையும் முழு உறுதியையும் நமக்கு உணர்த்துகிறது.   
 
3 .நிபந்தனையற்ற  முழுமையான கீழ்படிதல்!    
அநேகருக்கு கீழ்படியும் நல்ல எண்ணம் இருக்கும் ஆனால் " இதை சொன்னால் மட்டும் கேட்கமாட்டேன் அல்லது அதை செய்யசொன்னால் மட்டும் எனக்கு பிடிக்காது" என்ற நிபந்தனையோடு பலரது கீழ்படிதல் இருப்பதை பார்க்கலாம் . அனால் இங்கோ ரூத்த்துக்கு அவள் மாமி இவ்வாறு கட்டளையிடுகிறார்      
 
ரூத் 3:4. அவன்(போவாஸ்)  படுத்துக்கொண்டபோது, அவன் படுத்திருக்கும் இடத்தை நீ பார்த்திருந்து போய், அவன் கால்களின்மேல் மூடியிருக்கிற போர்வையை ஒதுக்கி நீ படுத்துக்கொள்
 
இந்த காரியத்தை சற்று ஆழமாக  பார்க்கும்போது, நகோமி ரூத்தின் நன்மைக்காக
இந்த காரியத்தை செய்ய சொன்னாலும் இந்த காரியம் எந்த ஒரு பெண்ணும் செய்ய கூச்சப்படும் ஒரு காரியமாகவே தெரிகிறது.  அதாவது இன்னொரு
ஆண்மகன் படுத்திருக்கும் இடத்தில் போய், அவனது  போர்வையை விலக்கி படுத்துகொள்  என்று சொல்கிறாள். ஆனால் அதற்க்கு ரூத் சொல்வதை பாருங்கள்:      
ரூத் 3:5. அதற்கு அவள்: நீர் எனக்குச் சொன்னபடியெல்லாம் செய்வேன் என்றாள்.
6. அவள் களத்திற்குப்போய், தன் மாமி தனக்குக் கற்பித்தபடியெல்லாம் செய்தாள்
.

 
"நீர் என்ன சொன்னாலும் எந்த கேள்வியும் இல்லாமல் அப்படியே கீழ்படிவேன்"  என்பதுவே ரூத்தின் நிபந்தனையற்ற முழுமையான கீழ்படிதலுக்கு ஆதாரம்!
 
நியாயப்பிரமாண கட்டளைப்படி "மோவாபியர்கள்" கர்த்தரின் சபைக்கு உட்படவே  முடியாது!   
 
உபாகமம் 23:3 அம்மோனியனும் மோவாபியனும் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது; பத்தாம்தலைமுறையிலும் என்றைக்கும் அவர்கள் கர்த்தருடைய
சபைக்கு உட்படலாகாது.
 
ஆனால் இந்த ரூத்தின் விஷேஷமான கீழ்படிதலிநிமித்தம்  தேவன் அவளை இஸ்ரவேலரோடு  செர்த்துகொண்டதோடு  மட்டுமல்லாமல்  நாம் ஆண்டவராகிய இயேசுவின் வம்சாவளியில் வரும் ஸ்திரி என்ற ஒரு  மகிமையான ஸ்தானத்தை கொடுத்து  உயர்த்தியதில் ஆச்சர்யம் எதுவும் இல்லை!
 
இப்படி ஒரு கீழ்படிதலுள்ள மனுஷனையே தேவன்தேடுகிறார். இப்படிபட்டவர்களை கொண்டே தேவன் பெரிய காரியங்களை சாதிக்க முடியும்!  பட்சபாதம் பண்ணுகிர வரையோ தேவனுக்கு நிபந்தை போட்டு கீழ்படிபவரையோ, "இது அது அல்ல, அது இது அல்ல" என்பதுபோல் வசனத்தை புரட்டுகிரவகளை வைத்து தேவனால் ஓன்று செய்யவே முடியாது.
 
"எது செய்யக்கூடியது எது செய்யகூடாதது" என்பதை போதித்து சரியான வழியில் ஒருவரை நடத்த தேவஆவியானவருக்கு தெரியும். நீங்கள் அவரிடம் ரூத்தைபோல எந்தஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் உயிரையும் கொடுக்கதுணியும் அர்ப்பணிப்புடன் கூடய  முழுமையான கீழ்படிதலை காட்டினால் அவர் உங்களை எந்த ஜாதி எந்த மதம் என்றுகூட பார்க்காமல் உங்களை பயன்படுத்தமுடியும்! அப்படிபட்ஒருவரையே  சாத்தானை ஜெயம்கொள்ளும் நிலைவரை உயர்த்த தேவனால் முடியும்!
 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
Permalink  
 

வேதாக மனிதர்களில் அதிக கீழ்படிதல் உள்ளவர் என்று நான் கருதுவது இயேசுவின் தாயாகிய மரியாளைதான்.
 
இறை தூதன் ஒருவன் வந்து ஆண்டவரின் திட்டத்தை மரியாளிடம் சொன்னபோது,   புருஷன் இல்லாது கர்ப்பவதி யாவது எவ்வளவு கேவலமானது என்பதும் அதனால் ஏற்ப்படும் நிந்தை மற்றும் பரியாசங்கள் அனைத்தையும் அறிந்திருந்தும் மிகுந்த விசுவாசத்துடன் அவர் ஆண்டவருக்கு அப்படியே  கீழ்படிய துணிந்தது  மிகுந்த ஆச்சர்யமான் ஓன்று
 
லூக் 1:38 அதற்கு மரியாள்: இதோ, நான் ஆண்டவருக்கு
 அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது என்றாள்
 
அந்த அன்னை போலவே நாமும் உலகத்தில் ஏற்ப்படும் நிந்தை அவமானத்தை சித்தித்து பார்க்காமல் இறைவனின் சித்தத்துக்கு கீழ்படிந்து நடந்தால் ஆண்டவரால் நம்மை பலருக்கு பயனுள்ள பாத்திரமாக  வனைய  முடியும்.  
    
  


__________________
Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard