இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: காயினுடைய காணிக்கையை கர்த்தர் ஏன் அங்கீகரிக்கவில்லை ?


வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
காயினுடைய காணிக்கையை கர்த்தர் ஏன் அங்கீகரிக்கவில்லை ?
Permalink  
 


காயினுடைய காணிக்கையை கர்த்தர் ஏன் அங்கீகரிக்கவில்லை
 
 
 
ஆம் சகோதரர்களே நீண்ட நாட்களாக எனக்கு இதை குறித்து ஒரு சந்தேகம் இருந்தது
 
 
 
அதாவது தேவனுடைய இரண்டு பிள்ளைகளும் அவர்களிடம் இருந்தவைகளை தேவனுக்கு காணிக்கையாக கொண்டு வருகின்றார்கள்
அதில் ஒரு தவறும் இல்லை
 
 
ஆனால் தேவன் இங்கு ஆபேலையும் அவன் காணிக்கையை மட்டும் அங்கீகரிக்கின்றார் காயினையும் அவன் காணிக்கையையும்
அங்கீகரிக்கவில்லை
 
 
 
 
ஏன் கர்த்தர் காயினுடைய காணிக்கைகளை அங்கீகரிக்கவில்லை என்று பார்த்தால் காயின் தேவனுக்கு பிரியமான ஒருவனாய் இருக்க வில்லை என்று தெரிகின்றது
 
 
 
 
 
ஆதியாகமம் : 4
 
 
 
3. சிலநாள் சென்றபின்பு, காயீன் நிலத்தின் கனிகளைக் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தான்
 
 
 
4. ஆபேலும் தன் மந்தையின் தலையீற்றுகளிலும் அவைகளில் கொழுமையானவைகளிலும் சிலவற்றைக் கொண்டுவந்தான்
 
 
 
 
இங்கு  வசனத்தை கூர்ந்து கவனிக்கவும்   இங்கு கர்த்தர் காணிக்கைகளை  
அங்கிகரித்தார் என்று மட்டும் வசனம் சொல்லவில்லை
ஆபேலையும் மற்றும் அவன் கொண்டுவந்த காணிக்கையையும் கர்த்தர் அங்கிகரித்தார் என்று எழுதப்பட்டுள்ளது
 
 
 
4 . ஆபேலையும் அவன் காணிக்கையையும் கர்த்தர் அங்கிகரித்தார்.
 
 
 
 
 
வேதம் காயினை குறித்து சொல்லும் பொழுது
 
 
 
தேவன் காயின் கொண்டுவந்த காணிக்கைகளை மட்டும் அல்ல 
வசனத்தை தெளிவாய்  வாசித்து பாருங்கள் காயினையும்
மற்றும் அவன் காணிக்கையும் அதாவது அவனையும் அவன் காணிக்கையையும் கர்த்தர் அங்கீகரிக்கவில்லை
 
 
 
 
5காயீனையும் அவன் காணிக்கையையும் அவர் அங்கிகரிக்கவில்லை
 
 
 
 
 
ஒரு தகப்பனுக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கின்றார் என்று வைத்து கொள்வோம் இரண்டு பிள்ளைகளும் தன தகப்பனுக்கு கொடுக்க ஏதோ  ஒரு பொருளை வாங்கி கொண்டு வந்து தன தகப்பனிடம்
கொடுக்கும் பொழுது அந்த தகப்பன் யாருடைய பொருளை ஏற்று கொள்வான் இரண்டு பிள்ளைகளுடைய பொருட்களையும்  எற்றுகொள்வான்
அல்லவா
 
 
 
 
ஒரு உலகத்துக்குரிய தகப்பனே இப்படி இருக்கும் பொழுது அன்பு இறக்கமும் நிரைந்த நம் தேவன் ஏதோ ஒரு காரணமும்  இல்லாமால்
இப்படி செய்யமாட்டார்
 
 
 
 
தேவன் அவர்களுக்கு நன்மைகளையும் தீமைகளையும் தெரிவித்து இருந்தார் என்பதை கீழ் கண்ட வசனம் சொல்கின்றது
 
 
 
7. நீ நன்மைசெய்தால் மேன்மை இல்லையோ? நீ நன்மைசெய்யாதிருந்தால் பாவம் வாசற்படியில் படுத்திருக்கும்
 
 
 
 
 
 
காயினுடைய காணிகைகளுக்காக தேவன் அவனை அங்கீகரிக்கவில்லை 
என்பதை விட  அதற்க்கு முன்பே அவனிடம் உள்ள தீயகுனதினாலோ தேவன் அவனையும்  அவன் காணிக்கையையும் அங்கீகரிக்கவில்லை
என்றே நான் கருதிகின்றேன்...........


-- Edited by EDWIN SUDHAKAR on Monday 3rd of October 2011 05:30:50 PM

__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
Permalink  
 

காயினை  பற்றி இன்னும் வேதத்தை ஆராய்ந்த பொழுது எனக்கு தோன்றிய சந்தேகங்களை இங்கு பதிவிடுகின்றேன் 

 
 
 
கர்த்தர்  ஆபேலின் காணிக்கையையும் அவனையும் அங்கிகரித்தார் என்று வசனம் சொல்கின்றது
 
 
 
 
 
ஆதியாகமம் : 4
 
4 . ஆபேலையும் அவன் காணிக்கையையும் கர்த்தர் அங்கிகரித்தார்
 
 
 

 

 

என் சந்தேகங்கள்:

 
ஆபேல் காயினால்  கொல்லபடுவதர்க்கு  முன்பு கர்த்தர் ஏன் தடுக்க வில்லை ?
 
 
 
கர்த்தர் அங்கிகரித்த ஒருவனை கர்த்தர் அங்கிகரிக்காத ஒருவன் கையில் ஒப்புகொடுத்தது ஏன்  ?
 
 
 
காயின் ஆபேலை கொலை செய்வான்  என்று கர்த்தருக்கு முன்பே   
தெரியாதா ?
 
 
 
பின்பு ஏன் ஆபேல் இறந்த பிறகு கர்த்தர் இப்படி ஒரு வார்த்தையை சொல்ல வேண்டும் ?
 
 
 
 
 
10 அதற்கு அவர்: என்ன செய்தாய்? உன் சகோதரனுடைய இரத்தத்தின் சத்தம் பூமியிலிருந்து என்னை நோக்கிக் கூப்பிடுகிறது
 
 
 
 
 
விளக்கம் தெரிந்த சகோதரர்கள் எனக்கு விளக்கி சொல்லும்மாறு கேட்டுகொள்கின்றேன்.................


-- Edited by EDWIN SUDHAKAR on Thursday 6th of October 2011 02:59:51 PM

__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
RE: காயினுடைய காணிக்கையை கர்த்தர் ஏன் அங்கீகரிக்கவில்லை ?
Permalink  
 


EDWIN SUDHAKAR wrote:
  
 
தேவன் இங்கு ஆபேலையும் அவன் காணிக்கையை மட்டும் அங்கீகரிக்கின்றார் காயினையும் அவன் காணிக்கையையும் அங்கீகரிக்கவில்லை
 
 
  

 

காயீனையும் அவன்  காணிக்கையை தேவன்ஏன் அங்கீகரிக்கவில்லை என்பதற்கான
பதிலை நமக்கு எழுதிகொடுக்கபட்ட வசனத்தின் அடிப்படையிலேயே நாம் ஆராய்ந்தால்  
முதல் காரணம்: காயின்  பொல்லாங்கனால் உண்டாயிருந்தான்:
 
I யோவான் 3:12 பொல்லாங்கனால் உண்டாயிருந்து தன் சகோதரனைக் கொலைசெய்த காயீனைப்போலிருக்கவேண்டாம்;
 
அதாவது ஆதாம் ஏவாளை தன் வஞ்சகத்தால் கர்த்தரின் தோட்டத்தில் இருந்து வெளியேற வைத்த சாத்தான் அவர்களை கர்த்தரின் சமூகத்தை விட்டே விரட்டுவதற்கு பிரயாசம் எடுத்தான். அதில் காயீன் சிக்கியிருந்தான்.
 
மேலும்\ ஸ்திரியின் சந்ததிதான் தன்னுடய தலையை நசுக்கும் என்பதை தேவனின் சாபத்தின் மூலம் அறிந்துகொண்ட சாத்தான் அந்த  ஸ்திரியின் இரண்டு வித்துக்களில் ஒன்றாகிய காயீனின் உள் புகுந்துகொண்டான் எனவேதான் அவன் பொல்லாங்கனால் உண்டாயிருந்தான் என்று வேதம் சொல்கிறது.
 
தேவனுக்கு இந்த காரியம் நிச்சயம் தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது எனவேதான் அவன் காணிக்கையை அங்கீகரிக்கவில்லை!
 
இரண்டாம் காரணம் காயீன் காணிக்கையை தேர்ந்தெடுத்த விதம் சரியானது அல்ல!
 
ஆதி 4: 3. சிலநாள் சென்றபின்பு, காயீன் நிலத்தின் கனிகளைக் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தான்.
 
காயீன் சபிக்கபட்ட பூமியின் கனிகளை காணிக்கையாக கொண்டுவந்தான்  அத்தோடு  காயீன் தான் காணிக்கையை  தேர்ந்தெடுப்பதில் அதிக அக்கறை காட்டவில்லை
 
ஆபேலோ
4. ஆபேலும் தன் மந்தையின் தலையீற்றுகளிலும் அவைகளில் கொழுமையானவைகளிலும் சிலவற்றைக் கொண்டுவந்தான். 
 
கர்த்தரின் இருதயநிலையை அறிந்து காணிக்கை கொண்டுவந்தான். பிற்க்காலத்தில் தேவன் மிருக பலியை நிர்ணயம் பண்ணபோவதை முன்கூட்டிய அறிந்து விசுவாசத்தினால் மேலான காணிக்கையை செலுத்தினான்.
 
மேலும் ஆட்டு மந்தையில் கொழுமையானவைகள்  அதாவது காணிக்கையை தேர்ந்தெடுப்பதில் அக்கறைகாட்டி  சிறந்தவைகளையே தேவனுக்கு காணிக்கையாக கொண்டுவந்தான். 
 
இதில் நாம் அறிந்துகொள்ளவேண்டிய முக்கிய பாடங்கள்:
 
1. சரியான விசுவாசம் இல்லாமல் நாம் தேவனுக்கு பிரியமான எந்த ஒன்றையும் செய்துவிட முடியாது!
 
2. தேவனின் இருதய நிலைகளை அறிந்து நாம் செய்யும் செயலே தேவனால் அங்கீகரிக்கப்படும்.
 
3. சத்துருவுக்கு மனதில் இடம்கொண்டுத்துவிட்டு நாம் எந்த பெரிய காணிக்கையை செலுத்தினாலும் அது நிராகரிக்கப்படும்.
 
4. நாம்  காணிக்கையை தேர்ந்தெடுப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்பட்டு எது கொழுமையானதோ அதை கொடுக்க முன்வரவேண்டும்.
 
5. நாம் நன்மை செய்தால்தான் நமக்கு மேன்மை உண்டு! செய்யவேண்டிய
இடத்தில் எந்த உதவியும் செய்யாமல் இருதயத்தை அடைத்துவிட்டு,
கர்த்தருக்கு காணிக்கையை கொண்டுபோய் கொட்டுவதால் பயனில்லை!  
            
 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
காயினுடைய காணிக்கையை கர்த்தர் ஏன் அங்கீகரிக்கவில்லை ?
Permalink  
 


EDWIN  WROTE  :

===============================================================

என் சந்தேகங்கள்:

ஆபேல் காயினால்  கொல்லபடுவதர்க்கு  முன்பு கர்த்தர் ஏன் தடுக்க வில்லை ?

கர்த்தர் அங்கிகரித்த ஒருவனை கர்த்தர் அங்கிகரிக்காத ஒருவன் கையில் ஒப்புகொடுத்தது ஏன்  ?

காயின் ஆபேலை கொலை செய்வான்  என்று கர்த்தருக்கு முன்பே   தெரியாதா ?

பின்பு ஏன் ஆபேல் இறந்த பிறகு கர்த்தர் இப்படி ஒரு வார்த்தையை சொல்ல வேண்டும் ?

 10 அதற்கு அவர்: என்ன செய்தாய்? உன் சகோதரனுடைய இரத்தத்தின் சத்தம் பூமியிலிருந்து என்னை நோக்கிக் கூப்பிடுகிறது
==============================================================
 
 
 
 
 
சகோ : சுந்தர் அவர்களே மேலே  சொல்லப்பட்டுள்ள என் சந்தேகங்களை  
நீங்கள் விளக்கி சொல்வீர்கள் என்று நான்  உங்கள் பதிவை எதிர்பார்த்து
கொண்டு இருக்கின்றேன்.........


-- Edited by EDWIN SUDHAKAR on Friday 7th of October 2011 03:18:20 PM

__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

EDWIN SUDHAKAR wrote:
என் சந்தேகங்கள்:

ஆபேல் காயினால்  கொல்லபடுவதர்க்கு  முன்பு கர்த்தர் ஏன் தடுக்க வில்லை ?

கர்த்தர் அங்கிகரித்த ஒருவனை கர்த்தர் அங்கிகரிக்காத ஒருவன் கையில்ஒப்புகொடுத்தது ஏன்  ?

காயின்ஆபேலை கொலைசெய்வான்  என்று கர்த்தருக்கு முன்பே தெரியாதா ?

பின்பு ஏன் ஆபேல் இறந்த பிறகு கர்த்தர் இப்படி ஒரு வார்த்தையை சொல்ல வேண்டும் ?

 10 அதற்கு அவர்: என்ன செய்தாய்? உன் சகோதரனுடைய இரத்தத்தின் சத்தம் பூமியிலிருந்து என்னை நோக்கிக் கூப்பிடுகிறது
==============================================================
 
  

 

தாங்கள்  முன்வைத்துள்ள  சந்தேகங்கள்  தேவன் ஒருவராலே பதில் சொல்ல முடிந்த ஓன்று என்றே நான் கருதுகிறேன்!   
 
ஸ்திரிகளிடத்தில் பிறந்தவர்களில் மேன்மையானவன் என்று சொல்லபட்ட யோவான் ஸ்நானன் ஏன் அற்ப ஆயுசில் கொலை செய்யப்பட்டான்? அதுபோல் அனேக  நீதிமான்கள் பூமியில் துன்மார்க்கரால்  கொல்லப்பட்டு இரத்தம் சிந்தி யிருக்கிரார்கள் என்பதற்கு பல வசன ஆதாரங்கள் இருக்கிறது.
 
"என் உள்ளங்கையில் உன்னை வரைந்திருக்கிறேன்என்று சொல்லும் தேவனுக்கு தெரியாமல் இது நடந்திருக்க வாய்ப்பே இல்லை!  
 
தேவனுக்கு தெரியாமல் சாத்தானால் ஒன்றும் செய்துவிட முடியாது! 
 
ஆனால் கர்த்தர்  இதுபோன்ற காரியங்களை  ஏன் கர்த்தர் அனுமதித்தார் என்பது போன்ற அனேக கேள்விகளுக்கு பதில் சொல்வது கடினமான காரியம்! ஆகினும் என்னுடைய கருத்தை இங்கு தர வாஞ்சிக்கிறேன்!
 
"மனுஷன் எதை மேன்மையானது என்று நினைக்கிறானோ அது தேவனின்  பார்வைக்கு மேன்மையானது அல்ல" என்பதே எனது முதல் கருத்து! 
 
நம்போன்ற மனுஷர்கள்   ஆபேல் ஆரோக்கியமாக நீண்டநாட்கள் வாழ்ந்திருந்தால் அது மேன்மை என்று நினைக்கிறோம்.  ஆனால் தேவனின் பார்வையில்  அப்படி யல்ல. தேவன் என்ன திட்டத்தோடு ஒரு மனுஷனை பூமிக்கு அனுப்புகிறாரோ அந்த திட்டம் நிறைவேறுதலே மேன்மையானது என்று கருதுகிறவர்.  மனுஷனாக பிறந்த  ஆபேல் எப்படியாகிலும் மரித்தேஆகவேண்டும் என்ற நிலைக்குள் இருக்கும் போது, தேவன் தன்னுடய அநாதி தீர்மானத்தின்படி அவனுக்கு நியமிக்கபட்ட பணிகள் முடிந்திருந்ததால் அவனை யோவான் ஸ்நானன் போல கொலை செய்ய அனுமதித்திருக்கலாம்.
 
அடுத்ததாக:
மத்தேயு 23:35 நீதிமானாகிய ஆபேலின் இரத்தம் முதல் தேவாலயத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே நீங்கள் கொலைசெய்த பரகியாவின் குமாரனாகிய சகரியாவின் இரத்தம்வரைக்கும், பூமியின்மேல் சிந்தப்பட்ட நீதிமான்களின் இரத்தப்பழியெல்லாம் உங்கள்மேல் வரும்படியாக இப்படிச் செய்வீர்கள்
 
என்ற வசனத்தின் அடிப்படையில் காயீன் பொல்லாங்கனாகிய  சாத்தான் உண்டாகி  ஆபேலை கொலை செய்ய துணிந்ததால், எமோரியரின் அக்கிரமம் நிறைவேறா விட்டால் அவர்களை துரத்த முடியாது என்பதுபோல்,  இதுபோன்ற நீதிமான்களின் இரத்த பழியிநிமித்தமே சாத்தான் என்றுமே மீழமுடியாத ஒரு நிலையில்  கட்டப் படும்படி, தேவனால் இடம்கொடுக்கபட்டு  இப்படி நடந்திருக்கலாம்.       
 
அடுத்ததாக நான் தெரிவிக்க விரும்பும் விஷயம் என்னவெனில் மாம்ச மரணம் என்பது ஆத்துமாவுக்கு ஒரு ஒரு முடிவு அல்ல! எனவே ஆபேலின் கதை  அத்தோடு முடிந்துவிட்டதல்ல: 
 
எபிரெயர் 11:4 விசுவாசத்தினாலே ஆபேல் காயீனுடைய பலியிலும் மேன்மையானபலியை தேவனுக்குச் செலுத்தினான்; அதினாலே அவன் நீதிமானென்று சாட்சிபெற்றான்; அவனுடைய காணிக்கைகளைக்குறித்து தேவனே சாட்சிகொடுத்தார்; அவன் மரித்தும் இன்னும் பேசுகிறான்.
    
"அவன் மரித்தாலும் இன்னும் பேசிக்கொண்டுதான் இருக்கிறான்" என்று வேதம் சொல்கிறது! அவன் அடைந்த மகிமையும்  பேசும் வார்த்தைகளும் நமக்கு தெரியாமல் இருக்கலாம் ஆனால் தேவனுக்கு நிச்சயம் தெரியும் எனவேதான் ஆண்டவராகிய இயேசுவின் இரத்தத்தோடு  ஒப்பிட்டு பேசும் அளவுக்கு ஆபேலின் இரத்தம் மேன்மை பெற்றிருக்கிறது!
 


-- Edited by SUNDAR on Friday 7th of October 2011 08:52:31 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
Permalink  
 

சகோ : சுந்தர் அவர்களே உங்கள் வார்த்தைகளில் பல வார்த்தைகள் கற்பனையை 
கை கொள்கின்றவன் ஒரு தீங்கும் அறியான் என்ற கொள்கையை உடையவர்  நீர் 
 
 
அதாவது ஒருவன்  தேவனுக்கு உண்மையாய் வாழ்ந்தால் அவனை ஒன்றும் அணுகாது 
அவன் செய்யும் தவறுக்காக தான் தண்டனையை அடைவானே அன்றி வேர்
ஒன்றும் அவனை நெருங்க முடியாது 
 
 
இது தேவனின் நீதி  என்பதே உங்கள் நம்பிக்கையும் விசுவாசமும் ஆகும் அதை
நானும் ஏற்று கொள்கின்றேன்
 
 
 
அப்படி இருக்க ஆபேல் மற்றும் யோவான் போன்ற நீதிமான்கள் மரித்ததால்  அதுவும்
பொல்லாதவர்கள் கையில் மாட்டிகொண்டு கொடூரமாக மரித்தவர்களை தேவன் ஏன் காப்பாற்ற வில்லை
 
 
 
(1 ) சிங்கத்தின் குகையில் இருந்து தானியேலை காப்பாற்றிய தேவன்
(2 ) தானியேலின் நண்பர்கள் சாத்ராக் மேஷாக் ஆபேத்நேகோ போன்றவர்கள் அக்கினியில் இருந்து காப்பாற்றிய தேவன்
(இன்னும் பல காரியங்களை சொல்லலாம் )
 
 
 
அப்படி இருக்க தேவன் ஏன் ஆபேலையும் யோவானையும்  மற்றும் ஸ்தேவானையும்  பொல்லாதவர்களின் கையில்
ஒப்புகொடுக்க வேண்டும் இதில் தேவனின் நீதி என்ன என்பது எனக்கு  புரியவில்லை
 
 
 
எத்தனையோ நபர்கள் ரத்த சாட்சியாய் இன்றுவரை மரிக்கின்றார்களே  
அவர்களையும் தேவன் பொல்லாதவர்களின் கையில் ஒப்புகொடுத்தாரா
அவர்களும் தேவனின் சித்தனின் படி தான் மரித்தார்களா
 
 
 
சகோ: சுந்தர் அவர்களே எனக்கு தெரிந்து ஆபேல் யோவான் மரித்ததர்க்கும்   
கூட ஏதாவது நீதியான காரியம் இருக்க வேண்டும் என்று நினைக்கின்றேன் 
 
 
 
ஏனென்றால் சில நீதிமான்களை காப்பாற்றிய தேவன் சில நீதிமான்களை பொல்லாதவர்களின் கையில் ஒப்புகொடுப்பது 
என்பது எனக்கு குழப்பத்தை உண்டாக்கின்றது 
 
 
எனவே நீங்கள் எனக்கு தெளிவு படுத்தும் படி கேட்டுகொள்கின்றேன் ...........


-- Edited by EDWIN SUDHAKAR on Saturday 8th of October 2011 01:42:11 PM

__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
RE: காயினுடைய காணிக்கையை கர்த்தர் ஏன் அங்கீகரிக்கவில்லை ?
Permalink  
 


EDWIN SUDHAKAR wrote:
சகோ : சுந்தர் அவர்களே உங்கள் வார்த்தைகளில் பல வார்த்தைகள் 
கற்பனையை கை கொள்கின்றவன் ஒரு தீங்கும் அறியான் என்ற
கொள்கையை உடையவர்  நீர் 
 
 
அதாவது ஒருவன்  தேவனுக்கு உண்மையாய் வாழ்ந்தால் அவனை 
ஒன்றும் அணுகாது அவன் செய்யும் தவறுக்காக தான் தண்டனையை
அடைவானே அன்றி வேர் ஒன்றும் அவனை நெருங்க முடியாது 
 

கற்பனையை கைகொள்பவன் ஒரு தீங்கையும் அறியான் என்று வேதம் சொல்வதுஉண்மை ஆனால் ஆபேல் தேவனின் கற்பனையை கைகொண்டு நடந்தான் என்று எங்கும் வேதம் சொல்லவில்லை. எனவே அந்த  காரியம் இங்கு ஆபேலின் விஷயத்தில் பொருந்தாது.  

EDWIN SUDHAKAR wrote:

//சகோ: சுந்தர் அவர்களே எனக்கு தெரிந்து ஆபேல் யோவான் மரித்ததர்க்கும்  கூட ஏதாவது நீதியான காரியம் இருக்க வேண்டும் என்று நினைக்கின்றேன்/// 

நீதியான காரணம் என்று இரண்டு காரியங்களை நான் ஏற்கெனவே சொல்லிவிட்டேன் சகோதரரே.
 
1. தேவனை பொறுத்தவரை ஒரு மனுஷனை என்ன நோக்கத்தோடு பூமிக்கு அனுப்பினாரோ அந்த நோக்கம் நிறைவேறியதும் எதாவது ஒருவழியில் 
எடுத்துகொள்ள வாய்ப்புண்டு.
2. நீதிமான்களின் இரத்தமே சாத்தானை நியாயம் தீர்க்கும் என்பதனால் பல நீதிமான்களை தேவன் சாத்தானின் கையில் ஒப்புகொடுத்து அவர்களின் இரத்த பழியை சாத்தன்மேல் சுமத்தி அவனை நித்தியத்துக்கும் வெளியில் வரமுடியாதபடி அடைக்க இவ்வாறு காரியங்களை அனுமதிக்கலாம்!     
3. மனுஷன் பார்வைக்கு மேன்மையானது எல்லாம் தேவனின் பார்வைக்கு மேன்மையானது அல்ல.  உங்களை பொறுத்தவரை நூறு வருடம் வாழ்வது  மென்மையாக தெரியலாம் ஆனால் தேவனின் பார்வையில் "அவரது சித்தம் செய்து முடிப்பதே மேன்மையானது" 
4. இந்த பூமி சாத்தானின் ஆழுகையில் இருக்கிறது எனவே ஆபேல் இந்த  பூமியில்
மரித்ததில் எந்த இழப்பும் இல்லை! அவன் நித்தியத்தில் நல்ல இடத்தை பெற வாய்ப்புண்டு.
 
எனவே இந்த பூமியில் நல்லவனுக்கு வரும் சோதனைகள் துன்பங்கள் குறித்து நாம் நமது மாம்சத்துக்கேற்றவாறு சித்திக்காமல் தேவனின் சிந்தையோடு அதை
நோக்குவோமாக!   
    
 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



இனியவர்

Status: Offline
Posts: 59
Date:
Permalink  
 

// நீதிமான்களின் இரத்தமே சாத்தானை நியாயம் தீர்க்கும் என்பதனால் பல நீதிமான்களை தேவன் சாத்தானின் கையில் ஒப்புகொடுத்து அவர்களின் இரத்த பழியை சாத்தன்மேல் சுமத்தி அவனை நித்தியத்துக்கும் வெளியில் வரமுடியாதபடி அடைக்க இவ்வாறு காரியங்களை அனுமதிக்கலாம்! //

சாத்தான் உலகத்தோற்றத்திற்கு முன்பே நியாயம் தீர்க்கப்பட்டு விட்டான்.



//கற்பனையை கைகொள்பவன் ஒரு தீங்கையும் அறியான் என்று வேதம் சொல்வதுஉண்மை ஆனால் ஆபேல் தேவனின் கற்பனையை கைகொண்டு நடந்தான் என்று எங்கும் வேதம் சொல்லவில்லை. எனவே அந்த காரியம் இங்கு ஆபேலின் விஷயத்தில் பொருந்தாது.//

கற்பனையை கைக்கொண்டு ஒரு தீங்கும் அறியாமல் யாராவது இருக்கிறார்களா?

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

HMV wrote:
 

சகோதரர் அவர்களே எனது கருத்து என்னவென்பதை புரியாமல்  ஏதாவது குறை சொல்லவேண்டும் என்ற நோக்கில் ஆதரமற்ற கருத்துக்களை எழுதுகிறீர்கள். நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதே எனக்கு புரியவில்லை.  

HMV wrote:
///கற்பனை முழுவதையும் நிறைவேற்றியதற்காக வேதத்தில் யாருமே பாராட்டப்படவில்லை என்று பார்க்கிறோம்;///
 
நான் ஒன்றை சொன்னால் நீங்கள் ஒன்றை சொல்கிறீர்கள். யார் பாராட்டை  பெற்றார்கள் என்பதை குறித்து நான் இங்கு எழுதவில்லை. ஒருவருக்கு தீங்கு வருவதை குறித்தே இங்கு எழுதுகிறேன். அது தேவனின் வார்த்தைகளை  மீறுவதால் வருகிறது என்பதை  நிரூபிக்கும் அனேக வசனங்கள் வேதத்தில் உள்ளது.  
 
 HMV wrote:
////ஆனால் இங்கோ கற்பனையின் படி நடந்தால் தீங்கு வராது என்கிறார்;///
 
நான் சொல்லவில்லை சகோதரரே வசனம்தான் சொல்கிறது. வேதத்தை 
முழுமையாக படித்திருக்கிறீர்களா?    
 
பிரசங்கி 8:5 கற்பனையைக் கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும் அறியான்;
 
இந்த வசனம் நான் வைத்திருக்கும் வேதத்தில் இருக்கிறது. அதன் அடிப்படை யிலேயே எனது கருத்துக்களை பதிவிட்டேன்.  இந்நிலையில் ஒருவனுக்கு தீங்கு வந்தது என்றால் அவன் கற்பனையை  சரியாக கைகொள்ளவில்லை என்றுதான் பொருளே தவிர, வசனம் பொய் என்று சொல்லமுடியுமா? அனால் உங்களை போன்றோர் இந்த வசனம் உண்மையல்ல என்று நிரூபிக்க முயல்வதுபோல் இருக்கிறது. நான் எழுதிய கருத்து மிகதெளிவாக இருக்கிறது அதில் குற்றம் கண்டுபிடிக்க நினைக்கும் தங்களுக்குதான் அது புரியவில்லை என்று கருதுகிறேன்.  
 
HMV wrote:
////கற்பனையை நிறைவேற்றினாலே இரட்சிப்பு என்பது ஒரு கற்பனையான கருத்து.////
 
இயேசுவின்மேலான விசுவாசத்தினால் அல்லாமல் கற்பனையை நிறைவேற்றினால் இரட்சிப்பு என்பதுபோன்ற  ஒருகருத்தை நான் எங்கு பதிவிட்டிருக்கிறேன் என்பதை எனக்கு சுட்டி காட்டுங்கள் நான் இந்த தளத்தில் எழுதுவதை  நிறுத்தி விடுகிறேன். அபாண்டமாக பழி போடாதீர்கள் ஆண்டவருக்கு கணக்கு ஒப்புவிக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு வார்த்தைகளை எழுதுங்கள்.   
 
 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard