தேவ பிள்ளைகளாகிய நம்முடய வாயில் இருந்து புறப்படும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் பிடிக்கப்படுகிறது என்பதை சகோதரர்கள் கருத்தில் கொள்ள வேண்டும். அவசரப்பட்டு பதறி பேசும் வார்த்தைகள் நம்மை படுகுழிக்கும் தள்ளிவிடும் வல்லமை உடையது!
நீதிமொழிகள் 6:2நீ உன் வாய்மொழிகளால் சிக்குண்டாய், உன் வாயின் வார்த்தைகளால் பிடிபட்டாய்,
முக்கியமாக நாம் ஒருமுறை பயன்படுத்திவிட்ட வார்த்தைகளை எந்த கிரயம் கொடுத்தாலும் திரும்ப பெற்றுவிட முடியாது! எனவே நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு வார்த்தைகளும் விசுவாசத்துக்கேதுவான மேலான வார்த்தைகளாகவே இருக்க பிரயாசம் எடுப்பது அவசியம்! நாம் பேசும் வார்த்தைகளின் அடிப்படை யிலேயே நமக்கு சம்பவிக்கும் காரியங்களும் அமையும்!
நீதிமொழிகள் 18:21மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள்.
நம்முடய வாயானது சாதாரணமானது அல்ல! அதிலிருந்து பிறக்கு ஒரே ஒரு மோசமான வார்த்தைகூட நமக்கு பெரிய கேட்டை உண்டாக்க கூடும் எனவேதான் இங்கு வசனம் மிக தெளிவாக சொல்கிறது மரணமானாலும் ஜீவனானாலும் நாவின் அதிகாரத்தில்தான் இருக்கிறதாம்! நாம் என்ன பேசுகிறோமோ அதுவே நமக்கு நேரிடலாம். எனவே தீமையான காரியங்களை விளையாட்டுக்கு கூட
பேசவேண்டாம்.
கானானை வேவு பார்க்க சென்று திரும்பிவந்த பன்னிருவரில் பத்துபேர் துர் செயதியை பரப்பினர் அதை கேட்டு ஜனங்கள் இவ்வாறு புலம்பினர்
எண்ணாகமம் 13:2. இஸ்ரவேல் புத்திரர் எல்லாரும் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக முறுமுறுத்தார்கள். சபையார் எல்லாரும் அவர்களை நோக்கி: எகிப்துதேசத்திலே செத்துப்போனோமானால் நலமாயிருக்கும்; இந்த வனாந்தரத்திலே நாங்கள் செத்தாலும் நலம். 3. நாங்கள் பட்டயத்தால் மடியும்படிக்கும், எங்கள் பெண்ஜாதிகளும் பிள்ளைகளையும் கொள்ளையாகும்படிக்கும், கர்த்தர் எங்களை இந்த தேசத்துக்குக் கொண்டுவந்தது என்ன? எகிப்துக்குத் திரும்பிப்போகிறதே எங்களுக்கு உத்தமம் அல்லவோ என்றார்கள்
இறுதியில் கர்த்தர் கோபமாகி அவர்களது வாயின் வார்த்தைகள்படியே சம்பவிக்கும் என்று சொல்லிவிட்டாரே!
எண்ணாகமம் 13: 28. நீங்கள் என் செவிகள் கேட்கச் சொன்னபிரகாரம் உங்களுக்குச் செய்வேன் என்பதை என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தர் உரைக்கிறார்.
எனவே அன்பானவர்களே உங்கள் வாயில் இருந்து புறப்படும் வார்த்தைகள் எதிலும் தேவனின் மகத்துவத்தையோ அல்லது வசனத்தின் மகத்துவத்தையோ குறைக்கும் அவிசுவாசமான பார்த்தைகள் புறப்படவேண்டாம்.
நாம் ஒவ்வொருவரும் பரிசுத்த வேதாகமத்தில் எழுதப்பட்டுள்ள அவார்த்தைகள் எல்லாம் தேவனால் அருளப்பட்டவை என்று மந்தர நம்பி ஏற்றுக்கொண்டுள்ளோம் அவ்வாறு இருக்கையில் அதில் உள்ள எந்த ஒரு வார்த்தையின்மேலும் எள்ளளவேனும் சந்தேகம் உருவாகவேண்டாம். முழு விசுவாசத்தோடு அதை நம்பி வாயினால் அடிக்கடி அறிக்கை செய்வோம்.
அடுத்தவர் மனதை புண்படுத்தும் வார்த்தைகளையோ அல்லது அடுத்தவரை கெடுத்து பேசும் வார்த்தைகளையோ பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க முயல்வோம். மறந்தும்கூட யாரையும் சபிப்பதர்க்கோ அல்லது சாபம் உண்டாக்கும் வார்த்தைகளை சொல்வதற்கோ துணிய வேண்டாம். யாரையும் பார்த்து "நீ கெட்டுபோவாய்" என்றோ "நீ நரகத்துக்குதான் போவாய்" என்றோ சொல்ல துணிய வேண்டாம். தேவ சாயலாக படைக்கபட்டுள்ள மனுஷனின் வார்த்தை வல்லமையுள்ளது, நம்மால் யாரும் எந்த ஒரு நிலையிலும் சிறு துன்பத்தி கூட அனுபவிக்காமல் இருப்பதற்கு நாம் எவ்வாறு நடக்கவேண்டுமோ அவ்வாறு நடப்போமாக.
விசுவாச வார்த்தைகளையும் விசுவாச பிரமாணங்களையும் அதிகம் பயன்படுத்தி வேத வசனங்களை அடிக்கடி நாவினால் அறிக்கை செய்து சத்தமாக பேசுவது நல்லது. உங்கள் விசுவாசத்தை உரக்க சத்தமிட்டு சொல்லலாம் அது அதிக
பயன்தரும்.
உதாரணமாக 'தேவன் என்னை தெரிந்துகொண்டிருக்கிறார்" " "அவர் என்னை நித்தமும் பாதுகாக்கிறார்" "சத்துரு என்னை தீண்ட முடியாது" "பொல்லாதவனின் கைக்கும் என்னை தப்புவிக்கிறார்" "தேவன் என்னை மீட்டுகொண்டுவிட்டார்" "எனக்கு நித்திய ஜீவன் வாக்களித்திருக்கிறார்" "அதை சுதந்தரிக்கும் பாதையில் என்னை நடத்தி என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வார் போன்ற வார்த்தைகளை நாம் தினமும் வாயை திறந்து சொல்வது நல்லது!
சங்கீதம் 73:24உம்முடைய ஆலோசனையின்படி நீர் என்னை நடத்தி, முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர்.
நமது விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்! அதை நமது வாய் வார்த்தைகளில் வெளிப்படுத்துவோமாக!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)