இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஆவிக்குரியவர்கள் காதலிப்பது பற்றி..........


வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
ஆவிக்குரியவர்கள் காதலிப்பது பற்றி..........
Permalink  
 


இன்று தேவனால் தெரிந்து கொள்ளபட்ட பல வாலிபர்கள் ஒரு பெண்ணின் மீது ஆசைபட்டு தங்களுடைய மேன்மையை  இழந்து  போனது உண்டு

 

 

 

 

 
 
வேதத்தில் சிம்சோன்:

 

 

 

நீயாதிபதிகள் : 16

 

17.தன் இருதயத்தையெல்லாம் அவளுக்கு வெளிப்படுத்தி: சவரகன்கத்தி என் தலையின்மேல் படவில்லை; நான் என் தாயின் கர்ப்பத்தில் பிறந்தது முதல் தேவனுக்கென்று நசரேயனானவன்என் தலை சிரைக்கப்பட்டால், என் பலம் என்னை விட்டுப்போம்அதினாலே நான் பலட்சயமாகி, மற்ற எல்லாமனுஷரைப்போலும் ஆவேன் என்று அவளிடத்தில் சொன்னான்

 

 

 

 

 

சிம்சோன் பற்றி நாம்  வேதத்தில்  தியானிக்கையில் அவன் ஒரு பெண்ணை விரும்பி நேசித்ததினாலே அழிந்து தேவனுடைய  மகிமையை  இழந்துபோனான் என்று வேதம் சொல்கின்றது

 

 

 

 

 

நீயாதிபதிகள் : 16

20. கர்த்தர் தன்னை விட்டு விலகினதை அறியாமல், எப்போதும் போல உதறிப் போட்டு வெளியே போவேன் என்றான்

 

 

 

 

 

ஆம் சகோதரர்கள் நாம் தேவனுக்கு என்று வாழ்ந்து நீதி நீயாயம் மற்றும்  அவருடைய கற்பனை கட்டளைகள் போன்றவற்றை கைகொள்ளும் பொழுது நமக்கு சாத்தானால் வைக்கபடும்  கன்னி  தான் இந்த காதல்

 

 

 

ஒரு பெண்ணின்  மீது  ஆசை பட்டபிறகு நாம் தேவனுக்கு ஒழுங்காக ஊழியம் செய்யமுடியாது தேவனுக்கு உண்மையாய் வாழ முடியாது

அதன்பின் அந்த பெண்ணுக்காக தான் ஊழியம் செய்யமுடியும்

 

 

 

அதாவது அந்த பெண்ணுக்கு பிடித்த இடங்களுக்கு செல்லுதல் பல மணிநேரம் செல்போனில் பேசி நேரத்தை வீணடித்தல் மொத்தத்தில் அந்த பெண்ணுக்கு பிரியமாக தான் நடக்க வேண்டும் என்று கட்டாய நிலை ஏற்படும்

 

 

 

 

 

 

ஓசியா ; 12

 

12 யாக்கோபு சீரியா தேசத்துக்கு ஓடிப்போய், இஸ்ரவேல் ஒரு பெண்ணுக்காக ஊழியஞ்செய்துஒரு பெண்ணுக்காக ஆடு மேய்த்தான்

 

 

 

நான் தேவனை அறிவதற்கு  முன்பு ஒரு பெண்ணை காதலித்தேன் என் வீட்டுக்கும் தெரிந்து விட்டது எங்கள் இவருடைய வீட்டிலும் ஒத்துக்கொண்டு விட்டார்கள் அதன் பின் தான் நான் தேவனை அறிந்து அவருடைய கட்டளைகளுக்கு கீழ்படிந்து வாழ்ந்தேன்

 

இப்படியே  இரண்டு வருடம் தேவனுக்கு உண்மையாய் வாழ்ந்து கொண்டு இருந்தேன் நான் அப்படி வாழ்ந்து கொண்டு இருக்கும் பொழுதே தேவன் எனக்கு தெரியபடுத்தி விட்டார் இந்த பெண் தான் எனக்கு சாத்தான் விரித்த வலை என்று

 

 

எங்கள் இவருடைய வீட்டுக்கு தெரிந்து விட்டதால் நாங்கள் சகஜமாக பேசினோம் ஆனால் நாட்கள் செல்ல செல்ல என் ஆவிக்குரியவாழ்க்கை முற்றிலும் மாறியது தேவனை மறந்தேன் நன்மை செய்வதையும் தேவனுக்கு கீழ்படிவதையும் விட்டு விட்டேன்

 

எப்படி என்று கேட்கின்றீர்களா சகோதரர்களே தேவனுடைய சிந்தையும் நினைப்பும் எப்பொழுதும்  இருந்தால் தானே தேவனுக்கு உண்மையாய் வாழ முடியும்

 

நான் தான் எப்பொழுது போன் வரும் எப்பொழுது வேலை முடிந்து போன் பேசுவோம் என்ற எண்ணம் இருந்தால் நான் எப்படி தேவனை நினைக்க முடியும் நான் வேதம் படிக்கவும் மற்றும் கிறிஸ்தவ பாடல்கள் போதனைகள் கேட்க கூட சாத்தான் என்னை பிரியாக விடவில்லை

 

  

முன்பு  நான் என் கைகளை ஏரெடுத்து  தேவனே என்று ஒரு வார்த்தை சொன்ன உடனே அவர் பிரசன்னம் என்னை சூழ்ந்து கொள்ளும் அந்த அளவுக்கு தேவனுக்கு உண்மையாய் வாழ்ந்து கொண்டு இருந்தேன்

 

ஆனால் சாத்தான் கண்ணியில் அகப்பட்டு பட்டு முற்றிலுமாய் அவருடைய மகிமையை இழந்து போனேன் சாத்தான் என் திருமணத்தையும் நீண்ட நாட்கள் தடைசெய்தான் ஆனால் என் தேவன் எனக்கு சொன்ன படியே நான் உன்னை காப்பேன் சுமப்பேன் ஏந்துவேன் தப்புவிப்பேன்

 

அவர் சொன்னபடியே என்னை சுமந்தார் காத்தார் தப்புவித்தார் அவருக்கு கோடான கோடி நன்றியை தெரிவித்து கொள்கின்றேன் இப்பொழுது அவருடைய மகிமைக்காக  பிரயாசப்பட்டு கொண்டு இருக்கின்றேன்

 

 

என் அனுபவத்தை இங்கு சொல்வதற்கு காரணம் வேறு யாரும் சாத்தான் கண்ணியில் விழ கூடாது என்ற நோக்க்தினாலேயே

 

சகோதர்களே என்னால் முடியும் நான் மனதை கட்டு பாட்டுக்குள் வைத்து இருப்பேன் நான் காதலித்தாலும் என் தேவனுக்கு உண்மையாய் இருப்பேன் என்று சொல்லாதீர்கள்

 

சாத்தான் என்பவன் உலக  அன்பினாலேயே உங்களை மடக்கி உங்களால் ஒன்றும் செய்ய கூடாத படிக்கு அதாவது உங்களுக்கு அதின் மேல் ஆசை இருக்கும் அந்த காரணத்தினால் உங்களால் தேவனிடத்தில் ஜெபிக்கவும் முடியாதபடிக்கு வலையில் சிக்கவைத்து விடுவான்

 

 தன்  சொந்த மனைவியிடத்தில் கூட  ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும் என்று வேதம் சொல்கின்றது

 

மிக : 5

7 .உன் மடியிலே படுத்துக்கொள்ளுகிறவளுக்கு முன்பாக உன் வாயைத் திறவாமல் எச்சரிக்கையாயிரு

 

 

அன்பானவர்களே நரியை போல மூளையை வைத்து கொண்டு அதாவது ஏமாற்றுகின்ற  மூளை அல்ல சாத்தான் என்பவன் கொண்டு வரும் ஒவ்வொரு காரியங்களிலும் நன்கு அறிந்து  அவன் கொண்டு வருகின்ற காரியங்களிலே நாம்  நேர்மையாய் நடந்து அவனை அவமான படுத்த  வேண்டும்

 

என் நண்பர்களே  ஒரு தலைப்பை எழுத வேண்டும் என்று  நான் எழுத வில்லை சாத்தானுடைய வலையில் ஆவிக்குரிய வாலிபர்கள் விழக்கூடாது என்ற என்னைதினாலேயே எழுதிகின்றேன் 

 

 

தேவனுக்கு உண்மையாய் வாழுங்கள் சாத்தான் கொண்டு வரும் கண்ணிகளை இடித்து போடுங்கள் ..............



-- Edited by EDWIN SUDHAKAR on Thursday 6th of October 2011 09:24:08 PM

__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard