அன்புள்ள பிதாவுக்கு ,வணக்கங்கள் பல ,….
தற்போது பூமியின் நிலைமை மிகவும் மோசமாகிகொண்டிருக்கிறது ,
எனவே தங்கள் குமாரனைதற்போது இங்கே அனுப்பும் போது ,ஒரு அடையாள அட்டை( IDENTITY CARD) உடன் அனுப்பவும்.
ஏன் என்றால் 2011 ஆண்டுகளுக்கு முன்பு மனிதன் கொஞ்சமாவது , இரக்கம் உள்ளவனாக இருந்தான்,
ஆனால் தற்போது அவன் அந்த லூசிபரை விட பல மடங்கு தன்னை பெருமையாக நினைக்க தொடங்கிவிட்டான்,
அந்த காலத்தில் ஒரு லூசிபர் மட்டும் தான், ஆனால் இங்கே சபைக்கு ஒரு லுசிபராவது இருக்கிரார்கள் .
அது போக நான் தான் பிதாவின் குமாரன் என்று அவருக்கு பல போட்டிகள் உள்ளது .
நீங்கள் அனுப்பும் போது , எங்களுக்கு குழப்பம் வராமல், குமாரனை அடையாளம் காண, எங்களுக்கு கிருபை தாரும்.,
ஏனென்றால் நாங்கள் எங்கள் பிள்ளைகளையே அடையாள அட்டை வைத்தே அடையாளம்
காண்கிறோம் , மற்றவை அடுத்த கடிதத்தில் நன்றி. அப்பாவின் பதிலை எதிர்பார்த்திருக்கும்.
பிதாவுக்கு அன்புள்ள
குரு...........
--------------------------------------------------------------------------
http://onlyfalse.wordpress.com/2011/04/27/%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81/
-----------------------------------------------------------------------------------------