இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: யெப்தாவின் மகளுடைய பலியும் கர்த்தரின் மௌனமும்


வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
யெப்தாவின் மகளுடைய பலியும் கர்த்தரின் மௌனமும்
Permalink Closed


சகோதரர்களே  யெப்தாவின் மகளுடைய பலியில் கர்த்தர் ஏன் ஒன்றும் பேசாமால் மௌனமாய்  இருந்தார் யெப்தாவே   பொருத்தனை பண்ணினான் 

யெப்தாவே  தன் மகளை  கர்த்தருக்கு பலியாக கொடுத்தான் இங்கு கர்த்தர் எதை குறித்தும் ஒன்றும் பேசவில்லை

 

 

 

நீயாதிபதிகள் ; 11

 

30.  அப்பொழுது யெப்தா கர்த்தருக்கு ஒரு பொருத்தனையைப் பண்ணி: தேவரீர் அம்மோன் புத்திரரை என் கையில் ஒப்புக்கொடுக்கவே ஒப்புக்கொடுத்தால்,

 

 

 

 31.  நான் அம்மோன் புத்திரரிடத்திலிருந்து சமாதானத்தோடே திரும்பி வரும்போது, என் வீட்டு வாசற்படியிலிருந்து எனக்கு எதிர்கொண்டு வருவது எதுவோ அது கர்த்தருக்கு உரியதாகும், அதைச் சர்வாங்க தகனபலியாகச் செலுத்துவேன் என்றான் 

 

 

 

யெப்தா  பொருத்தனை பண்ணும் பொழுது   என் வீட்டு வாசற்படியிலிருந்து எனக்கு எதிர்கொண்டு வருவது எதுவோ

 

 

 

எதுவோ என்று சொல்லும் பொழுது அவன் ஆடு மாடுகளை குறித்து  தான்  சொல்லியிருப்பான் என்று நான் நினைக்கின்றேன்

 

 

 

ஆனால் யெப்தா நினைத்தது வேறு அங்கு நடந்தது வேறு

 

 

 

 

34.  யெப்தா மிஸ்பாவிலிருக்கிற தன் வீட்டுக்கு வருகிறபோது, இதோ, அவன் குமாரத்தி தம்புரு வாசித்து நடனஞ்செய்து, அவனுக்கு எதிர்கொண்டு வந்தாள்; அவள் அவனுக்கு ஒரே பிள்ளையானவள்; அவளையல்லாமல் அவனுக்குக் குமாரனும் இல்லை குமாரத்தியும் இல்லை

 

 

 

35.  அவன் அவளைக் கண்டவுடனே தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு: ஐயோ! என் மகளே, என்னை மிகவும் மனமடியவும் கலங்கவும் பண்ணுகிறாய்; நான் கர்த்தரை நோக்கி என் வாயைத் திறந்து சொல்லிவிட்டேன்; அதை நான் மாற்றக்கூடாது என்றான்

 

 

 

 

யெப்தா  சொன்னது போல தன் மகளை கர்த்தருக்கு   பலியாக ஒப்புகொடுத்தான்

 

 

 

 

39.  இரண்டுமாதம் முடிந்தபின்பு, தன் தகப்பனிடத்திற்குத் திரும்பிவந்தாள்; அப்பொழுது அவன் பண்ணியிருந்த தன் பொருத்தனையின்படி அவளுக்குச் செய்தான்; அவள் புருஷனை அறியாதிருந்தாள்

 

 

 

 

 

 

என் கேள்வியும் பதிலும் இங்கு என்னவெனில்

 

 

 

சகோதரர்களே தேவன் மிருகத்தினுடைய பலியையே விரும்பவில்லை  என்று கீழே உள்ள  வசனங்கள்  நமக்கு சொல்கின்றது

 

 

இதற்க்கு முன்பு செலுத்திய பலிகள் ஏதோ ஒரு காரணத்தினால் தேவன் பலியிட சொல்லியிருப்பார் என்றும் தெரிகின்றது

 

 
 
சங்கீதம் 50:13 நான் எருதுகளின் மாம்சம் புசித்து, ஆட்டுக்கடாக்களின் இரத்தம் குடிப்பேனோ?
 
 
ஏசாயா 1:11 உங்கள் பலிகளின் திரள் எனக்கு என்னத்துக்கு என்று கர்த்தர் சொல்லுகிறார்; ஆட்டுக்கடாக்களின் தகனபலிகளும், கொழுத்த மிருகங்களின் நிணமும் எனக்கு அரோசிகமாயிருக்கிறது
   
 
சங்கீதம் 40:6 பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பாமல், என் செவிகளைத் திறந்தீர்; சர்வாங்க தகனபலியையும் பாவநிவாரண பலியையும் நீர் கேட்கவில்லை. 
 
 
சங்கீதம் 51:16 பலியை நீர் விரும்புகிறதில்லை, விரும்பினால் செலுத்துவேன்; தகனபலியும் உமக்குப் பிரியமானதல்ல.
 
 
 
ஓசியா 6:6 பலியை அல்ல இரக்கத்தையும், தகனபலிகளைப் பார்க்கிலும் தேவனை அறிகிற அறிவையும், விரும்புகிறேன்
 
 
 
 
மிருகத்தின் பலியையே விரும்பாத என் தேவனாகிய கர்த்தர் ஏன் யெப்தாவின் மகளுடைய பலியை ஏற்றுகொண்டார் என்று வசனம் சொல்லவில்லை என்பாதால் ஏன் கர்த்தர்  தடுக்கவில்லை கர்த்தர் ஏன் இதை குறித்து  ஒன்றும் பேசவில்லை  என்ற கேள்வியை இங்கு முன்வைக்கிறேன்
 
 
 
கர்த்தர்  காரணம் இல்லாமால் இந்த காரியத்தை அனுமதித்திருக்க மாட்டார் என்பது எனக்கு தெரியும்
 
 
ஆனால் அது என்ன காராணம் என்பதே என் கேள்வி
 
 
 
 
இதை குறித்து நான் சொல்வது என்னவெனில் இப்படி பட்ட பொருத்தனையை பின் வருபவர்கள் யாரும் செய்ய கூடாது
என்று அனுமதித்து  இருப்பார் என்றும்
 
 
 
அல்லது அவன் வாய் திறந்து சொல்லிவிட்டதால் அந்த பொருத்தனையை செய்தே ஆகவேண்டும் என்று கர்த்தர் அமைதியாக இருந்து விட்டார் என்பதுமே என்  கருத்து  
 
 
 
 
சகோதரர்களே உங்கள் விளக்கங்களை எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றேன்..........


-- Edited by EDWIN SUDHAKAR on Friday 7th of October 2011 07:56:16 PM

__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)

HMV


இனியவர்

Status: Offline
Posts: 53
Date:
RE: யெப்தாவின் மகளுடைய பலியும் கர்த்தரின் மௌனமும்
Permalink Closed


யெப்தா தன் மகளை பலி கொடுக்கவில்லை,அவள் கன்னியாகவே இருந்துவிட்டாள் என்பதே வேத வல்லுனர்களின் கருத்தாகும்.வேதத்திலும் இதற்கு ஆதாரமில்லை.தலைச்சன் மகனையே நரபலியாக கொடுப்பார்கள், பெண் பிள்ளையை அல்ல.எனவே தலைச்சன் பெண் பிள்ளையாக இருந்தால் பெற்றோர் மகிழுவார்கள்.



__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
யெப்தாவின் மகளுடைய பலியும் கர்த்தரின் மௌனமும்
Permalink Closed


HMV  WROTE  :

 

___________________________________________________________________________________

யெப்தா தன் மகளை பலி கொடுக்கவில்லை,அவள் கன்னியாகவே இருந்துவிட்டாள் என்பதே வேத வல்லுனர்களின் கருத்தாகும்.வேதத்திலும் இதற்கு ஆதாரமில்லை.தலைச்சன் மகனையே நரபலியாக கொடுப்பார்கள், பெண் பிள்ளையை அல்ல.எனவே தலைச்சன் பெண் பிள்ளையாக இருந்தால் பெற்றோர் மகிழுவார்கள்

_____________________________________________________________________________________

 

 

 

நீயாயாதிபதி : 11 

 

39.  இரண்டுமாதம் முடிந்தபின்பு, தன் தகப்பனிடத்திற்குத் திரும்பிவந்தாள்; அப்பொழுது அவன் பண்ணியிருந்த தன் பொருத்தனையின்படி அவளுக்குச் செய்தான்; அவள் புருஷனை அறியாதிருந்தாள்

 

 

 

சகோ : Hmv  அவர்களே மேலே குறிப்பிட்டு உள்ள வசனம்  மிக தெளிவாய் சொல்கின்றது

 

 

 

அப்பொழுது அவன் பண்ணியிருந்த தன் பொருத்தனையின்படி அவளுக்குச் செய்தான்

 

 

அவன் பண்ணியிருந்த பொருத்தனையின் படி அவளுக்கு செய்தான் என்று வசனம்  சொல்வது தவறு என்று  சொல்கின்றீர்களா

 

 

சரி சகோதரரே நீங்கள் யெப்தா பலியிடவில்லை என்பதற்கு வசன

ஆதாரம் தாருங்கள்

 

நான்  ஒரு வசனத்தை ஆதாரமாக தந்துள்ளேன் நீங்கள் ஏதாவது ஒரு வசன ஆதாரத்தை தாருங்கள்

 

நீங்கள் சொல்லும் கருத்தை நான் மறுக்கவில்லை உண்மை அதுவாக கூட இருக்கலாம் ஆனால் ஆதாராம் வேண்டும் அல்லவா அதற்காக தான் கேட்கின்றேன் ..................



-- Edited by EDWIN SUDHAKAR on Saturday 8th of October 2011 12:41:25 PM

__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)



இனியவர்

Status: Offline
Posts: 59
Date:
RE: யெப்தாவின் மகளுடைய பலியும் கர்த்தரின் மௌனமும்
Permalink Closed


//நீங்கள் சொல்லும் கருத்தை நான் மறுக்கவில்லை உண்மை அதுவாக கூட இருக்கலாம் ஆனால் ஆதாராம் வேண்டும் அல்லவா அதற்காக தான் கேட்கின்றேன் ..................//

உபாகமம் 12:31 உன் தேவனாகிய கர்த்தருக்கு அப்படிச் செய்யாயாக; கர்த்தர் வெறுக்கிற அருவருப்பான யாவையும் அவர்கள் தங்கள் தேவர்களுக்குச் செய்து, தங்கள் குமாரரையும் தங்கள் குமாரத்திகளையும் தங்கள் தேவர்களுக்கு அக்கினியிலே சுட்டெரித்தார்களே.


நரபலி கர்த்தருக்கு அருவருப்பானது! வேதத்தை நன்கு அறிந்த யெப்தா மகளை நரபலி கொடுத்து இருக்க வாய்ப்பில்லை. சகோ. HMV சொல்லுவது போல அவள் திருமணமாகாமல் (ஒரு ஆண் போல) தன்னை தேவனுடைய பணிக்கு ஒப்புக்கொடுத்தாள் என்று நிதானிக்கலாம். சொன்ன பொருத்தனையை மாற்றி அமைக்கவும் வேதத்தில் (சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு) இடமுண்டு.

சகோ. சுதாகர், இது போன்ற கேள்வி கேட்டு பதில் பெறுவதால் தங்களுக்கு என்ன பிரயோசனம் என்று எனக்கு விளங்கவி
ல்லை. சுந்தர் அவர்களின் வேதத்திற்கு புறம்பான அனுபவங்களையும், போதனைகளையும் குறித்து கேள்வி எழுப்பலாமே?


__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
யெப்தாவின் மகளுடைய பலியும் கர்த்தரின் மௌனமும்
Permalink Closed


John wrote:

சுந்தர் அவர்களின் வேதத்திற்கு புறம்பான அனுபவங்களையும், போதனைகளையும் குறித்து கேள்வி எழுப்பலாமே?


சகோதரர்   ஜான்  அவர்களே நேற்று காலையில்  அரிசியாலும் உழுந்தாலும் தயாரித்து   நான் சாப்பிட்ட இட்டிலியில் இருந்து இன்று காலையில்  இந்த கணினியில் நான் எழுதிகொண்டு இருப்பதுவரை எல்லாமே வேதத்துக்கு புறம்பான அனுபவங்களே.

வேத  புத்தகத்தில் இட்டிலி பற்றியும் சொல்லப்படவில்லை கணிணி  பற்றியோ ஏன் இந்த அக்டிவ் போர்ட் பற்றியோ கூட நேரடியாக  சொல்லப்படவில்லை.  வேதத்தின் படியே  நடந்ததை மட்டும்தான் நம்புவேன் என்றால் எவர் வாழ்க்கையில் நடந்த உண்மைகலய்ம் யாரும் ஏற்க்க முடியாது.
 
வசனத்தின் படிதான் உங்கள் வாழ்க்கையில் எல்லாம் நடக்கும் என்று கருதினால்  வேத புத்தகத்தில் எழுதப்படாத எந்த ஒரு காரியத்தையும் செய்யாதீர்கள் அல்லது வேதத்தில் சொல்லபடாத எந்த பொருளையும் பயன்படுத்தாதீர்கள். அல்லது வேதத்தில் எழுதப்பட்ட வர்த்தைபடியே ஒரு காரியத்தை நாள் சொல்லிவிட்டால் அதை அப்படியே செய்து முடித்துவிடுவீர்களா?
 
மத்தேயு 19:21 அதற்கு இயேசு: நீ பூரண சற்குணனாயிருக்க விரும்பினால், போய், உனக்கு உண்டானவைகளை விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும். பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார்.
 
இது வேதத்தில் நேரடியாக சொல்லப்பட்ட வசனம். "வசனத்தின்படிதான் வசனத்தின்படிதான்" என்று சொல்லும் எத்தனைபேர் உங்களுக்கு  உண்டானவற்றை விற்று தரித்திரருக்கு கொடுத்து விட்டு பின்னர் இயேசுவை பின்பற்றுகிறீர்கள்? 
 
சும்மா எது என்னவென்பது தெரியாமல்  தேவையற்ற வார்த்தைகள் ஏன் பயன்படுத்துகிறீர்கள்?
 
வேத  புத்தகம் என்பது  உங்கள் வாழ்க்கையை பற்றியோ அல்லது எனது வாழ்க்கையை பற்றியோ அல்லது  பிசாசின் வாழ்க்கையை பற்றியோ விவரிப் பதற்காக எழுதப்பட்டது அல்ல. "இரட்சிப்பை சுதந்தரிக்கும் நேர் வழியை தேவன் வேதத்தில் எழுதி வைத்திருக்கிறார்" அந்த  மகத்துவமான புத்தகத்தில் பாவத்திலேயே ஊறிகிடந்த என்னுடைய அனுபவத்தையோ அல்லது என்போன்ற எவருடைய அனுபவத்தை தேடினாலும் கிடைக்காது.
 
அடுத்து வேதத்துக்குபுறம்பான என்னுடைய போதனை என்னவென்பதை கொஞ்சம் சுட்டுங்கள் அதற்க்கு வசன ஆதாரம் தருகிறேன்.  
 


-- Edited by SUNDAR on Wednesday 12th of October 2011 11:07:46 AM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
Permalink Closed

John  wrote  :

_______________________________________________________________________

 

 உபாகமம் 12:31 உன் தேவனாகிய கர்த்தருக்கு அப்படிச் செய்யாயாக; கர்த்தர் வெறுக்கிற அருவருப்பானயாவையும் அவர்கள் தங்கள் தேவர்களுக்குச் செய்து, தங்கள் குமாரரையும் தங்கள் குமாரத்திகளையும் தங்கள் தேவர்களுக்கு அக்கினியிலே சுட்டெரித்தார்களே.

_________________________________________________________________________________  

 

 

 

சகோ  : ஜான்  அவர்களே  தேவன்  மனுஷர்களின்   பலியை  விரும்பவில்லை  

என்று  மிக  தெளிவாய்  வசனத்துடன்  ஒப்பிட்டு  சொன்னீர்கள்  மிக  அருமை  

 

 

 

 

கர்த்தர்  பலியை  ஏற்று  கொண்டார்  என்று  எங்கும்  வசனம்  சொல்லவில்லை  

குறிப்பாக  நான்  கேட்ட  கேள்வி அதுவல்ல    கர்த்தர்  ஏன்  யெப்தாவின்  பலியை  

குறித்து  மௌனமாய்  இருக்கின்றார்  என்பதே  என்  கேள்வி  


 

 

 

 

John    wrote  :

___________________________________________________________


நரபலி கர்த்தருக்கு அருவருப்பானது! வேதத்தை நன்கு அறிந்த யெப்தா மகளை நரபலி கொடுத்து இருக்கவாய்ப்பில்லை. சகோ. HMV சொல்லுவது போல அவள் திருமணமாகாமல் (ஒருஆண்போல) தன்னை தேவனுடைய பணிக்கு ஒப்புக் கொடுத்தாள் என்று நிதானிக்கலாம். சொன்ன பொருத்தனையை மாற்றி அமைக்கவும் வேதத்தில் (சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு) இடமுண்டு.

_________________________________________________________________________________

 

 

 

 

 

சகோ  : ஜான்  அவர்களே  மறு  படியும்  மறுபடியும்  யெப்தா  தன  மகளை   பலி  

கொடுக்கவில்லை  என்று  நீங்கள்  சொல்லாதீர்கள்  

 

 

 

 

யெப்தா   தன்  மகளை  பலி  கொடுத்தார்  என்பதை  வசனம்  மிகதெளிவாய்  

சொல்லும்  பொழுது  நீங்கள்  இல்லை  என்று   சாதிப்பது  ஏன்  என்று  தான்   எனக்கு  புரியவில்லை

 

 

 

 

நீயாயாதிபதி : 11 

 

39.  இரண்டுமாதம் முடிந்தபின்பு, தன் தகப்பனிடத்திற்குத் திரும்பிவந்தாள்; அப்பொழுது அவன் பண்ணியிருந்த தன் பொருத்தனையின்படி அவளுக்குச் செய்தான்; அவள் புருஷனை அறியாதிருந்தாள்

 

 

 

 

 

john  wrote  :

___________________________________________________________________________ 

சகோ. சுதாகர், இது போன்ற கேள்வி கேட்டு பதில் பெறுவதால் தங்களுக்கு என்ன பிரயோசனம் என்று எனக்கு விளங்கவில்லை.

________________________________________________________________________________________

 

 

 

 

 

யெப்தாவின்  பலியை குறித்து நான்  ஏன்  இங்கு  எழுதினேன்  என்றால்  கர்த்தர்  

மனிதர்களுடைய  பலியை விரும்புவார என்று தெரிந்து கொள்ளும் நோக்கத்திற்காகவே அவர் விரும்ப மாட்டார் என்பதே எனக்கு தெரியம் அதற்கான காரணத்தை அறியவே இந்த தலைப்பை எழுதினேன்

 

 

 

 

john  wrote   :

________________________________________________________________________

சுந்தர் அவர்களின் வேதத்திற்கு புறம்பான அனுபவங்களையும், போதனைகளையும் குறித்து கேள்வி எழுப்பலாமே?_______________________________________________________________________

 

 

 

சகோ  : சுந்தர்  அவர்கள்  வேதத்துக்கு  புறம்பாக என்ன   கருத்தை  எழுதினார்  

நான் கேள்வி கேட்பதற்கு என்று எனக்கு தெரியவில்லை   மாறாக அவர் கருத்துகளை படித்ததினால் தான் நான் இன்று கர்த்தரோடு பேசவும் 

அவரின்  நீதி நீயங்களை அறிந்து கொண்டும் வருகின்றேன் சுந்தர் போன்ற மனிதர்கள் இருப்பது  அபூர்வம் பின் நாட்களில் உங்களுக்கு தெரிய வரும்

 

 

 

 

 

சுந்தருடைய வார்த்தயை தவறு என்று சொல்கின்ற உங்களிடம் ஒரு வார்த்தை கேட்கின்றேன் இது வரை யாராவது ஒருவர் தேவனிடம் விசாரித்து தேவனே  சுந்தர் எழுதும்  காரியம் எப்படி பட்டதுஅதை ஏற்று கொள்ளலாமா  அல்லது விட்டுவிடலா என்று ஒரு நபர் கூட  இதுவரை

தேவன் எனக்கு தெரியபடுத்தினார் தேவன் எனக்கு சொன்னார் என்று சொல்லவில்லை காரணம் தேவன் அவர்களிடம் பேசவில்லை

 

 

 

 

இன்னொரு  முறை   அவர்  எழுதுவது  தவறு  வேதத்திற்கு  புறம்பானது  என்று சொல்லாதீர்கள்  உங்களால்  முடிந்தால்  அவர்  எழுதும்   கருத்துக்கு   மாற்று  கருத்தை  

எழுந்துங்கள்  அப்படி எழுத முடியவில்லை என்றால் விட்டுவிடுங்கள் என் நண்பரே......

 

 
 
சுந்தருடைய  கருத்து உங்களுக்கு வேதத்திற்கு புறம்பாக இருக்கலாம்
ஆனால் எனக்கு வேதத்தில்  தேவனுடைய  இருதயங்களை  அறிந்து கொள்ளவும் அவருடைய நீதி    நியாயங்களை தெரிந்து கொள்ளவும் ப்ரோஜினமாய் இருக்கின்றது ...........


-- Edited by EDWIN SUDHAKAR on Wednesday 12th of October 2011 01:33:17 PM

__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)

HMV


இனியவர்

Status: Offline
Posts: 53
Date:
RE: யெப்தாவின் மகளுடைய பலியும் கர்த்தரின் மௌனமும்
Permalink Closed


SUNDAR wrote:

John wrote:

சுந்தர் அவர்களின் வேதத்திற்கு புறம்பான அனுபவங்களையும், போதனைகளையும் குறித்து கேள்வி எழுப்பலாமே?


 அடுத்து வேதத்துக்குபுறம்பான என்னுடைய போதனை என்னவென்பதை கொஞ்சம் சுட்டுங்கள் அதற்க்கு வசன ஆதாரம் தருகிறேன்.  

 வேதத்துக்குப் புறம்பான விளக்கங்களெல்லாம் வேதத்துக்குப் புறம்பானது தானே, சுந்தர்..? அவை எவை என்பதை நீங்கள் தான் சொல்லவேண்டும்.

திரு.எட்வின் அவர்களே,

"அவள் புருஷனை அறியாதிருந்தாள்" என்று வசனத்தின் இறுதியில் இருப்பதை ஏன் கவனத்தில் கொள்ள மறுக்கிறீர்கள்?

இஸ்ரவேலிலே அதன் எல்லைகளுக்குள் கர்த்தர் நிமித்தம் நரபலி செலுத்தப்பட்டதில்லை, நரஜீவன்கள் சம்பந்தமான பொருத்தனையின்படி அவை கர்த்தருடைய சமூகத்தில் ஏற்கப்படாது, அது ஈடுசெலுத்தி மீட்கப்படவுங் கூடாது என்பதால் அந்த பெண் திருமணம் செய்துகொள்ளாமல் கன்னியாகவே இருந்துவிட்டாள் என்பதே ஏற்புடையதாகும்; இதனை வலியுறுத்துவது போல,

"இதினிமித்தம் இஸ்ரவேலின் குமாரத்திகள் வருஷந்தோறும் போய், நாலு நாள் கீலேயாத்தியனான யெப்தாவின் குமாரத்தியைக்குறித்துப் புலம்புவது இஸ்ரவேலிலே வழக்கமாயிற்று."

என்று இந்த வேதப்பகுதி நிறைவடைகிறது; மேலும் நேரடியாக சொல்லப்படாத எந்தவொரு காரியத்திலும் சாதாரண மனிதர்களாகிய நாம் அவசரப்பட்டு முடிவுக்கு வராதிருப்பது நல்லது.

நீங்கள் திரு.சுந்தர் அவர்களைப் புகழுவது குறித்து யாரும் கவலைப்படப்போவதில்லை. ஆனால் அவர் கருத்து கூற முயற்சிப்பது வேதத்தைக் குறித்து என்றால் அந்த உரிமைக்கு ஒரு எல்லை உண்டு என்பதை அவர் முந்தி அறியவேண்டும். வேதத்தில் இல்லாததை- வேதத்தில் இல்லாததைக் கொண்டு நிரூபிக்க முயற்சிப்பவன் மடையன் மட்டுமல்ல, பைத்தியக்காரன் ஆவான். விகாரமான விளக்கங்களைக் கொடுப்பவன் விபச்சாரி ஆவான்.



__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink Closed

HMV wrote:
வேதத்தில் இல்லாததைக் கொண்டு நிரூபிக்க முயற்சிப்பவன் மடையன் மட்டுமல்ல, பைத்தியக்காரன் ஆவான். விகாரமான விளக்கங்களைக் கொடுப்பவன் விபச்சாரி ஆவான்.

இந்த கேள்வியை பொறுத்தவரை நான் இதுவரை எந்த ஒரு விளக்கமும் கொடுக்கவில்லை அப்படியிருக்கையில், இப்படி ஒரு வக்கிரமான வார்த்தைகளை பயன்படுத்த வேதம் எந்த இடத்தில் சொல்கிறது சகோதரரே?  வேதத்துக்கு புறம்பான இந்த கருத்தையும் வார்த்தைகளையும் பயன்படுத்தும் நீங்கள் யார்?

இப்படி வேதத்துக்கு புறம்பாக நியாயம் தீர்க்கும்  உங்களை,  உங்கள் வார்த்தைகளே நியாயம்தீர்க்கும் என்பதை மறந்துவிட வேண்டாம்.

 

 

 



__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
யெப்தாவின் மகளுடைய பலியும் கர்த்தரின் மௌனமும்
Permalink Closed


உங்களுக்கு யெப்தா தன் மகளை பலிக்கொடுக்கவில்லை ஆனால் எனக்கு
யெப்தா  தான் பண்ணியிருந்த பொருத்தனையின் படி செய்தான் என்று
வேதம் சொல்லுவதால் யெப்தா  தன் மகளை பலி கொடுத்தான் என்று அறிந்து கொண்டேன்  சரி இத்தோடு இந்த விவாதத்தை முடித்து கொள்வோம்.
 
 
 
 
 
HMV  WROTE 
____________________________________________________________
 
நீங்கள் திரு.சுந்தர் அவர்களைப் புகழுவது குறித்து யாரும் கவலைப்படப்போவதில்லை
_____________________________________________________________
 
 
 
 
என் ஆத்துமாவுக்கு ப்ரோஜினமாய் யார் எழுதினாலும் நான் அவர்களை பாராட்டுவேன் புகழுவேன் அதுஎன் சுபாவம் உங்களை போல
தரம் கேட்ட வார்த்தைகளை பேசுவது என் வேலை அல்ல
 
 
 
 
HMV wrote:

வேதத்தில் இல்லாததைக் கொண்டு நிரூபிக்க முயற்சிப்பவன் மடையன் மட்டுமல்ல, பைத்தியக்காரன் ஆவான். விகாரமான விளக்கங்களைக் கொடுப்பவன் விபச்சாரி ஆவான்.

 
 
வேதத்தில் இருக்கின்ற படி நீங்கள் செய்வீர்கள் என்று  நான் நினைக்கின்றேன்
 
 
 
 
யாக்கோபு : 3
 
 
10 துதித்தலும் சபித்தலும் ஒரே வாயிலிருந்து புறப்படுகிறது. என் சகோதரரே, இப்படியிருக்கலாகாது
 
 
 
26 உங்களில் ஒருவன் தன் நாவை அடக்காமல், தன் இருதயத்தை வஞ்சித்து, தன்னைத் தேவபக்தியுள்ளவனென்று எண்ணினால் அவனுடைய தேவபக்தி வீணாயிருக்கும்
 
 
 
 
 
22 அல்லாமலும், நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள்
 
 
 
 
13 உங்களில் ஞானியும் விவேகியுமாயிருக்கிறவன் எவனோ, அவன் ஞானத்திற்குரிய சாந்தத்தோடே தன் கிரியைகளை நல்ல நடக்கையினாலே காண்பிக்கக்கடவன்.
 
 
 
 
 
ஒருவரையும் தவறாக பேச கூடாது என்று வேதம் சொல்கின்றது வேதத்தில் உள்ள இந்த வசனத்தை நீங்கள் கைகொண்டீர்களா சொல்லுங்கள் சகோ : Hmv
 
 
 
 
முதலாவது வேதத்தில் உள்ளவைகளை கைகொல்லுங்கள் வேதத்தில் 
சொல்லபட்டவைகலையே உங்களால் கைகொள்ள முடியவில்லை ஆனால் மற்றவர்கள் வேதத்தில் இல்லாத கருத்துகளை சொன்னால் 
பைத்தியக்காரன் விபசாரி
 
 
 
 
 
உங்களை போன்ற ஆட்களுக்கு தேவன் நேரில் தோன்றி சொன்னாலும் தேவனுக்கு கூட மனகஷ்டம் ஏற்படுத்தி விடுவீர்கள் என்று நினைக்கின்றேன்...................


-- Edited by EDWIN SUDHAKAR on Thursday 13th of October 2011 11:39:10 AM

__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 233
Date:
RE: யெப்தாவின் மகளுடைய பலியும் கர்த்தரின் மௌனமும்
Permalink Closed


Bro.HMV-க்காக ஒரு வசனத்தைத் தந்ததன் காரணமாக நானும் இத்திரியின் விவாதத்தினுள் இழுக்கப்பட்டுவிட்டேன்.

எபிரெயர் நிருபத்தில் ஆபேலின் பலியும் ஆபிரகாமின் பலிமுயற்சியும் சொல்லப்பட்டுள்ளது, ஆனால் யெப்தாவின் பலி சொல்லப்படவில்லை எனும் HMV-ன் விவாதம் சரியல்ல. ஒருசில விசுவாசிகளின் காரியங்களை விளக்கமாகச் சொன்ன எபிரெய ஆக்கியோன் சில விசுவாசிகளின் பெயரை மட்டும் குறிப்பிட்டுள்ளார், பல விசுவாசிகளின் பெயரைக்கூட குறிப்பிடவில்லை. இதற்கான காரணத்தை 11:32-ல் சொல்லியுள்ளார்.

ஆம், காலம் போதாததால் பல விசுவாசிகளின் விவரங்களையும் சொல்லவில்லை, பல விசுவாசிகளின் பெயரையும் சொல்லவில்லை. எனவே எபிரெயர் நிருபத்தில் யெப்தாவின் விவரம் சொல்லப்படாததால், அவர் தன் மகளைப் பலியிடவில்லை என்ற முடிவுக்கும் வரமுடியாது; அதில் யூதா, பெஞ்சமின், சாலொமோன் போன்றவர்களின் பெயர் இல்லாததால் அவர்களுக்கெல்லாம் நரகமே எனத் தீர்க்கவும் முடியாது.

மொத்தத்தில் எபிரெயர் நிருபத்தில் ஒருவரைப் பற்றியோ ஒருவரது சங்கதியைப் பற்றியோ எதுவும் சொல்லப்படாததை வைத்து அவர்களைக் குறித்து எந்த முடிவும் எடுக்க இயலாது. எனவே எபிரெயர் நிருபத்தில் சொல்லப்பட்டதை வைத்து தனது வாதத்தை வைக்கவேண்டாமென Bro.HMV-யைக் கேட்டுக்கொள்கிறேன்.

இனி, யெப்தா தன் மகளைப் பலிகொடுத்தாரா எனும் கேள்விக்கு வருகிறேன்.

வேதாகம வசனங்களில் ஒன்றுக்கொன்று இடையேயான தொடர்புகளின்படி பார்த்தால், யெப்தா தன் மகளை தகனபலியிட்டார் என்று சொல்லவே வாய்ப்பு உள்ளது.

நியாயாதிபதிகள் 11:30 அப்பொழுது யெப்தா கர்த்தருக்கு ஒரு பொருத்தனையைப் பண்ணி: தேவரீர் அம்மோன் புத்திரரை என் கையில் ஒப்புக்கொடுக்கவே ஒப்புக்கொடுத்தால், 31 நான் அம்மோன் புத்திரரிடத்திலிருந்து சமாதானத்தோடே திரும்பிவரும்போது, என் வீட்டு வாசற்படியிலிருந்து எனக்கு எதிர்கொண்டு வருவது எதுவோ அது கர்த்தருக்கு உரியதாகும், அதைச் சர்வாங்க தகனபலியாகச் செலுத்துவேன் என்றான்.

11:38 அவள் தன் தோழிமார்களோடும் கூடப்போய், தன் கன்னிமையினிமித்தம் மலைகளின்மேல் துக்கங்கொண்டாடி, 39 இரண்டுமாதம் முடிந்தபின்பு, தன் தகப்பனிடத்திற்குத் திரும்பிவந்தாள்; அப்பொழுது அவன் பண்ணியிருந்த தன் பொருத்தனையின்படி அவளுக்குச் செய்தான்;

ஆகிலும் உபாகமம் 12:31-ன் அடிப்படையில் திரு.ஜாண் வைத்துள்ள வாதத்தின்படி பார்த்தால், யெப்தா தன் மகளை பலியிட்டிருக்க மாட்டார் எனச் சொல்லவும் வாய்ப்புள்ளது.
அதேவேளையில், நரபலியை தேவன் அனுமதித்துள்ளார் என்பதற்கு பின்வரும் வசனங்கள் ஆதாரமாகத் தோன்றுகின்றன.

லேவியராகமம் 27:28 ஒருவன் தன் வசத்திலுள்ள நரஜீவனிலாவது, மிருகஜீவனிலாவது, காணியாட்சி நிலத்திலாவது, எதையாகிலும் கர்த்தருக்கென்று சாபத்தீடாக நேர்ந்துகொண்டால், அது விற்கப்படவும் மீட்கப்படவும் கூடாது; நேர்ந்துகொள்ளப்பட்டவைகளெல்லாம் கர்த்தருக்காகப் பரிசுத்தமாயிருக்கும். 29 நரஜீவனில் சாபத்தீடாக நியமிக்கப்பட்டவைகளெல்லாம் மீட்கப்படாமல் கொலைசெய்யப்படக்கடவது.

இவ்வசனங்களைக் கவனமாகப் படித்துப்பார்த்தால், இங்கு சொல்லப்பட்டுள்ள காரியம் “தேவனுக்குச் செலுத்தும் பலி” அல்ல, “சாபத்தீடானவற்றை விலக்குவது அல்லது அழிப்பது” என நாம் புரிந்துகொள்ளலாம்.

சாபத்தீடான எதையும் இஸ்ரவேலர்கள் தங்களிடம் வைத்திருக்கக் கூடாது என்பது தேவனின் கட்டளையாகும் (யோசுவா 6:18). ஆகிலும் சாபத்தீடாவற்றிலுள்ள வெள்ளி பொன் போன்றவை கர்த்தரிடத்தில் வரவேண்டும், அவை கர்த்தருக்குப் பரிசுத்தமாயிருக்கும் என யோசுவா 6:19 கூறுகிறது.

நரஜீவன்களில் சாபத்தீடாக நியமிக்கப்பட்டவை கொல்லப்படத்தான் வேண்டும் என லேவி. 27:29 கூறுகிறது. இங்கு “பலி” எனும் வார்த்தை பயன்படுத்தப்படவில்லை. “கொல்லுதல்” எனும் வார்த்தைதான் பயன்படுத்தப்பட்டுள்ளது. அமலேக்கியரில் சிறு குழந்தைகள் உள்ளிட்ட நரஜீவன்களை (1 சாமு. 15:3) தேவன் கொல்லச் சொன்னதற்கு சமமாகத்தான் லேவி. 27:29-லும் தேவன் கூறுகிறார் என நான் கருதுகிறேன்.

எனவே நரஜீவன்களின் பலியை தேவன் ஏற்பார் என்பதற்கு ஆதாரமான வேதவசனம் எதுவும் இல்லை என்றே நான் கருதுகிறேன். மாறாக நரஜீவன்களின் பலியை தேவன் அருவருக்கிறார் என்பதற்கு ஆதாரமான வசனம்தான் உள்ளது.

இதனடிப்படையில் பார்க்கையில், வேதத்தை அறிந்தவனான யெப்தா, தன் மகளைப் பலியிட்டிருக்க மாட்டார் எனக் கருதவே வாய்ப்புள்ளது.

யெப்தாவின் மகள் தன் கன்னிமைக்காகத்தான் 2 மாதம் துக்கங்கொண்டாடினாள் என வசனம் சொல்கிறதேயன்றி, தன் ஜீவனுக்காகத் துக்கங்கொண்டாடினாள் என வசனம் கூறவில்லை. கன்னிமையைக் காட்டிலும் ஜீவன் தானே முக்கியம்? எனவே ஜீவனை இழக்கவிருப்பவள் அதற்காக அல்லவா துக்கம் கொண்டாட வேண்டும்? அதைச் செய்யாமல் தன் கன்னிமைக்காகத் அவள் துக்கங்கொண்டாடியதை வைத்து பார்க்கும்போது, அவள் பலியிடப்பட்டிருக்க மாட்டாள் என்றே கருதத் தோன்றுகிறது.

ஆகிலும் எதையும் திட்டவட்டமாகச் சொல்வதற்கில்லை. இம்மாதிரி திட்டமாகத் தெரியாத விஷயங்களில் நாம் எதையும் தீர்மானமாகச் சொல்லாதிருப்பதே நல்லது என்பதே எனது கருத்து.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink Closed

anbu57 wrote:

 ஆகிலும் எதையும் திட்டவட்டமாகச் சொல்வதற்கில்லை. இம்மாதிரி திட்டமாகத் தெரியாத விஷயங்களில் நாம் எதையும் தீர்மானமாகச் சொல்லாதிருப்பதே நல்லது என்பதே எனது கருத்து.


யெப்தாவின் காரியம்குறித்த இந்த விவாதத்துக்கு பல்நோக்கு சிந்தனையில் வசன ஆதாரத்துடன் விளக்கம் கொடுத்து ஒருமுடிவை  ஏற்படுத்தியதர்க்காக மிக்க நன்றி சகோ. அன்பு அவர்களே. 

இந்த காரியம் குறித்து ஆண்டவரிடம் விசாரித்து ஒரு முடிவுக்கு  வரமுடியாமல் இருந்த காரணத்தால் நான் இதுவரை ஒரு முடிவான கருத்து எதையும் தெரிவிக்க வில்லை.  எனவே மூலபாசையில் இது குறித்து என்ன எழுதியிருக்கிறது என்று தங்களிடம் பார்த்து பதிடும்படி கேட்க வேண்டும் என்று எண்ணியிருந்தேன் இந்நிலையில் தங்கள் நடுநிலையான விளக்கத்துக்கு நன்றி. 

இந்த திரியில் நான் கருத்தே எதுவும் கூறாத பட்சத்தில்  சகோ. HMV  குறிப்பிடுவதுபோல  இங்கு நான் பொய்  எதுவும் சொல்லவில்லை என்பதை எல்லோருக்கும் தெரிவுபடுத்திகொள்ள விரும்புகிறேன்.

இயேசுவின் பிறப்புக்குபின்னர்  பலிகள்எல்லாமே முடிவுக்கு வந்துவிட்ட நிலையில் சர்ச்சைக்குரிய இந்த வசனத்தை குறித்து தெளிவு பெறுவதால் நடை முறை நிலையில் பெரிதாக பயன் எதுவும் இருப்பதுபோல் தெரியவில்லை  எனவே எனவே இந்த திரியை மூடிவிடும்படி நிர்வாகிக்கு பரிந்துரைக்கிறேன்.
 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



இனியவர்

Status: Offline
Posts: 59
Date:
Permalink Closed

//இந்த காரியம் குறித்து ஆண்டவரிடம் விசாரித்து ஒரு முடிவுக்கு வரமுடியாமல் இருந்த காரணத்தால் நான் இதுவரை ஒரு முடிவான கருத்து எதையும் தெரிவிக்க வில்லை. எனவே மூலபாசையில் இது குறித்து என்ன எழுதியிருக்கிறது என்று தங்களிடம் பார்த்து பதிடும்படி கேட்க வேண்டும் என்று எண்ணியிருந்தேன் இந்நிலையில் தங்கள் நடுநிலையான விளக்கத்துக்கு நன்றி. //

This is funny :) . Bro. Sunder, I thank God that your god didn't advise you to tell your friends to follow jeptha! . You are still living in old testament time making yourself standing between God and man. I will come back soon to discuss your bible heresies in this forum


__________________


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
Permalink Closed

யெப்தாவை குறித்து கொடுக்கபட்டுள்ள விபரத்தில்  கர்த்தர் எப்தாவுடன் எங்கும் நேரடியாக  பேசி பலி கேட்டதாகவோ அல்லது பலியை ஏற்றதாகவோ வசனம் எதுவும் இல்லை.
 
அம்மோன் புத்திரரை முறியடிக்கும் நோக்கத்துடன் கர்த்தரின் ஆவியானவர் அவன்மீது இறங்கியபின்னர், அவனாகவே ஒரு பொருத்தனையை செய்துகொண்டு அவனாகவே அதை நிறைவேற்றினான்.  அவ்வளவே.  
 
அவனுடய பொருத்தனையை எப்படி செலுத்தினான் என்பது குறித்த முழு விளக்கம் வேதத்தில் இல்லாத நிலையில்  தேவையற்ற விவாதங்களை தவிர்க்க இத்துடன் இந்த திரி மூடப்படுகிறது.
 
 
 
 

 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard