பல இந்துக்கள் அவர்கள் தங்கள் தெய்வத்தை வணங்கினாலும் நான்
அவர்களுக்கு இயேசுவை பற்றி சொல்லும் பொழுது நானும் இயேசுவை விசுவாசிக்கின்றேன் என்று எனக்கு தெரிந்து அனேக சகோதரிகளும் சகோதரர்களும் சொல்லி கேள்விப்பட்டு இருக்கின்றேன்
கிரியை அவசியம் என்பதை உறுதிப்படுத்த இரண்டு முக்கிய விளக்கத்தை தந்துள்ளீர்கள்.
1. பிசாசுகள்கூட "தேவன் உண்டு என்று விசுவாசித்து நடுங்குகிறது" ஆனால் அவைகளிடம் இறைவனுக்கு ஏற்ற கிரியை இல்லை என்பதாலேயே அவைகள் பிசாசு என்ற நிலையில் இருக்கின்றன
2. பிற மதத்தை சேர்ந்த பலரும் "இயேசுவை நானும் விசுவாசிக்கிறேன்" "எனக்கும் அவரை பிடிக்கும்" நானும் கிறிஸ்த்தவ சபைக்கு போவது உண்டு என்று சொல்லி பலமுறை நானும் கேட்டிருக்கிறேன். ஆனால் இவர்களிடம் விசுவாசத்துக்கு ஏற்ற கிரியை இல்லாத பட்சத்தில் அந்த விசுவாசத்தால் பயனேதும் இல்லை.
விசுவாசம் பெரியதுதான். அனால் "கிரியை இல்லாத விசுவாசம் செத்தது" என்பதை இதன்மூலம் சுலபமாக நாம் புரிந்துகொள்ள முடியும்.