தேவனால் எல்லாம் செய்ய கூடும் என்றாலும், தேவன் மனிதனிடம் இருந்து நிறைய எதிர்பர்கிறார். உதாரணமாக தேவனால் மனிதனை இரட்சிப்பது எளிது என்றாலும், தேவன் மனிதனை
தன்னுடைய சொந்த முயற்சியிலேயே இரட்சிப்பை பெற வேண்டும் என்று நினைக்கிறார்.
பரிசுத்த ஆவியானவர் மூலம் தேவன் பாவத்தை குறித்து உணர்த்துகிறார். அதை எற்றுகொண்டு
மனம் திரும்பும் காரியத்தை மனிதனிடமே விட்டுவிடுகிறார்.
அதே போல் மனிதனிடம் இரட்சிபிர்காக பங்களிப்பையும் எதிர்பார்க்கிறார். ஒரு ஆத்துமாவை
இரட்சிபது தேவனுக்கு எளிது என்றாலும், ஒரு மனிதன் இரட்சிப்பு பெற விரும்பும் ஆத்துமாவுக்காகதேவனிடம் பரிந்து பேச வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.
*****************
எனக்கு தெரிந்த எளிதான காரியத்தை எழுதியிருக்கிறேன். சகோதரர்களுக்கு நிச்சயம் இது பற்றி
நிறைய தெரிந்திருக்கும் என எதிபார்க்கிறேன். தல சகோதரர்கள், இந்த தலைப்பை குறித்து எழுதுமாறு கேட்டுகொள்கிறேன்.
-- Edited by Sugumar S T on Wednesday 12th of October 2011 01:41:41 PM
-- Edited by Sugumar S T on Wednesday 12th of October 2011 01:42:23 PM
__________________
Sugumar Samuel T
யோவான் 8:32சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார்.
தேவன் ஒரு மனிதனிடம் என்ன எதிர் பார்க்கின்றார் என்றால்
சுருக்கமாக சொல்கின்றேன்:
மீகா : 6
8 .மனுஷனே, நன்மை இன்னதென்று அவர் உனக்கு அறிவித்திருக்கிறார்; நியாயஞ்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்
தேவன் நமக்கு நன்மை எது தீமை எது வென்று வேதத்தில் அறிவித்து உள்ளார் ஒருவரும் சாக்கு போக்கு சொல்ல முடியாதவாறு
வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்என்று வசனம் சொல்லும உட்கருத்தை பார்த்தால் தேவன் ஒரு மனிதனிடம்
எதிர்பார்ப்பதை தான் இந்த வசனத்தின் மூலம் கேட்க்கின்றார் என்று நான் நினைக்கின்றேன்
நீயாயம் என்பதில் எல்லாவித நற்க்கிரியையும் அடங்கி விடும் அதினால் தான் வேதத்தில் நீயாயப்பிரமானம் என்று நமக்கு சொல்லப்பட்டுள்ளது
வேதத்தில் தேவனும் தேவ குமாரனும் சொன்ன கற்பனைகள் கட்டளைகள் போன்றவற்றை கைகொண்டு ஒரு மனிதன் வாழ வேண்டும் என்பதையே தேவன் ஒவ்வொரு மனிதனிடமும் எதிர் பார்க்கின்றார்......
தேவனே ஒரு மனிதனுக்குள் எல்லாவற்றையும் செய்தால் அன்று யோபுவை குறித்து சாத்தான் கேட்டது போலவே கேட்பான்
யோபு : 1
10 நீர் அவனையும் அவன் வீட்டையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சுற்றி வேலியடைக்கவில்லையோ?
ஆனால் அவர் அதற்கு இடம் கொடுக்க மாட்டார்
நம் தேவன் நீதியும் நேர்மையும் ஆனவர் என்பதை நாம் அறிடவேண்டும் அவர் நீதிக்கு முன்பு தாவீது ஆனாலும் சரி மோசே ஆப்ரகாம் ஆனாலும் சரி கர்த்தருக்கு நீதி நீதி தான்
ஒரு மனிதனை தேவனே நடத்தினால் அது ஜெயம் ஆகாது இரட்சிப்பு ஆகாது தேவன் நடத்துவார் ஆனால் நன்மை தீமையை தேர்ந்தெடுப்பதை மனிதர்கள் கையில் தான் விட்டுவிடுவார் மேல் சொன்ன வசனம் இதற்கும் பொருந்துகின்றது
மீகா : 6
8 .மனுஷனே, நன்மை இன்னதென்று அவர் உனக்கு அறிவித்திருக்கிறார்
-- Edited by EDWIN SUDHAKAR on Thursday 13th of October 2011 10:18:07 PM
__________________
காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)
நான் மேலே சுருக்கமாக சொல்லிவிட்டேன் அதை கொஞ்சம் விரிவாக சொல்ல விரும்புகின்றேன்
1. இராஜாக்கள் ; 21
27ஆகாப் இந்த வார்த்தைகளைக் கேட்டபோது, தன் வஸ்திரங்களைக் கிழித்து, தன் சரீரத்தின் மேல் இரட்டைப் போர்த்துக் கொண்டு, உபவாசம்பண்ணி, இரட்டிலே படுத்துத் தாழ்மையாய் நடந்து கொண்டான்
ஆகாப் என்பவன் தேவனுடைய எச்சரிப்பின் செய்தியை கேட்டு தன்னை தாழ்த்தி கொண்ட படியினால் தேவன் அவனுக்கு
என்ன சொல்கின்றார் என்று பாருங்கள்
29 ஆகாப் எனக்கு முன்பாகத் தன்னைத் தாழ்த்தினதைக் கண்டாயா? அவன் எனக்கு முன்பாகத் தன்னைத் தாழ்த்துகிறபடியினால், நான் அவன் நாட்களில் அந்தப் பொல்லாப்பை வரப்பண்ணாமல், அவன் குமாரன் நாட்களில் அதை அவன் வீட்டின்மேல் வரப்பண்ணுவேன் என்றார்
மற்றும்.........
2 நாளாகமம் : 12
6. அப்பொழுது இஸ்ரவேலின் பிரபுக்களும் ராஜாவும் தங்களைத் தாழ்த்திக் கர்த்தர் நீதியுள்ளவர் என்றார்கள்
7.அவர்கள் தங்களைத் தாழ்த்தினதைக் கர்த்தர் கண்டபோது, கர்த்தருடைய வார்த்தை செமாயாவுக்கு உண்டாகி, அவர் சொன்னது: அவர்கள் தங்களைத் தாழ்த்தினார்கள், ஆகையால் அவர்களை அழிக்கமாட்டேன்
வேத புத்தகத்தில் அனேக சம்பவங்கள் ஆராயுந்து பார்த்தால் நமக்கு தெரிய வரும் தேவன் ஒருவனை அளிக்க போகின்றேன்
தண்டிக்க போகின்றேன் என்று சொல்லியும் அவர்களை அழிக்காமால் விட்டுவிடுகின்றார் காரணம்
அவர்கள் தேவனுடைய எச்சரிப்பை கேட்டு மனத்தாழ்மையாய் தங்களை தாழ்த்தி கொண்டதின் நிமித்தம்
ஆம் நண்பர்களே தேவன் ஒரு மனிதனிடம் தாழ்மையை அதிகம் எதிர் பார்க்கின்றார்
14. என் நாமம்தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி,ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு க்ஷேமத்தைக் கொடுப்பேன்.
நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கூட சிலுவை பரியந்தமும் தம்மை தாழ்த்தினார் என்று வேதம் சொல்கின்றது
யோசித்து பாருங்கள் நண்பரே நாம் தாழ்த்தினால் அது வேறு விஷயம் ஆனால் தேவனுடைய குமாரன் தன்னை தாழ்த்தி கொள்ள வேண்டுமா ? ஆனால் இயேசு இந்த பூமியில் தன்னை தாழ்த்தி கொண்டதினால் தான் ஜெயம் எடுத்து இருக்கின்றார்
இயேசுவை போலவே நாமும் இந்த பூமியிலே தேவனுக்கு முன்பாக நம்மை தாழ்த்தி ஜெயம் எடுப்போம்
நாம் ஒவ்வொருவரும் தாழ்மையாய் இருப்போம் சாத்தனின் சதி திட்டங்களை முறிப்போம்............
-- Edited by EDWIN SUDHAKAR on Wednesday 19th of October 2011 06:21:12 PM
__________________
காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)
தேவன் மனுஷனிடம் எதிர்பார்க்கும் முக்கிய காரியம் ஒன்றே ஒன்றுதான்! அது அவர் வார்த்தைக்கு கீழ்படிதலே! மற்ற சகோதரர்கள் சொன்ன அனைத்துமே இதனுள் அடங்கிவிடும் என்றே நான் கருதுகிறேன்.
தேவனால் உருவாக்கபட்ட ஆதாம் தேவன் வார்த்தைக்கு கீழ்படியாமல் விலக்கபட்ட கனியை புசித்ததால் சாத்தானிடம் தோற்றுபோய் தேவன் அவனுக்கு கொடுத்திருந்த எல்லா மேன்மையையும் இழந்ததோடு மனுஷனுக்காகவே படைத்து அவன் ஆண்டுகொள்ள கொடுத்த இந்த உலகத்தையும்கூட சாத்தானிடம் இழந்து போனான். அதன்மூலம் இந்த உலகத்தின் அதிபதி சாத்தான் ஆனான்!
இவ்வாறு இழந்துபோனதை தேட ஆண்டவராகிய இயேசு உலகுக்கு வந்தார்.
தான் வந்த காரியத்தை முடித்த இயேசு மனுஷனுக்கு இரட்சிப்பை அருளியதோடு இழந்துபோன உலகத்தை ஜெயித்தார்!
யோவான் 16:33திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார்.
ஜெயித்தும்கூட இன்றுவரை இந்த உலகத்தில் பாவம் மற்றும் துன்பம் சம்பந்தபட்ட விஷயத்தில் எந்த மாற்றமும் இல்லை. முன்னைவிட பாவம் இந்த பூமியில் அதிகரித்திருக்கிறதேயன்றி குறையவில்லை காரணம் சாத்தான் இன்னும் முழுமாக ஜெயிக்கபடவில்லை. எனவே தான் "உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு" என்று சொல்லி சென்றார். ஆகினும் சாத்தானை ஜெயிப்பதற்கான பலத்தை கொடுக்கும் வல்லமையின் ஆவியானவர் இயேசுவின் பலியின் மூலம் நமக்கு அருளபட்டிருக்கிறார்.
சத்துருவை பாதப்படியாக்கிபோடும் அந்த ஆவியானவரின் வல்லயின் மூலம் யாராவது ஒருவர் ஆண்டவராகிய இயேசுவின் வார்த்ததைகளை சரியாக கைகொண்டு வாழ்ந்து, சாத்தானின் எந்த தந்திரத்துக்கும் அடி பணியாமல் எதிர்த்து நின்று, இந்த பாவம் நிறைந்த உலகத்திலும் பரிசுத்தவாம வாழ்ந்து சாத்தானை ஜெயம் கொள்வதன் மூலமே
மனஷனின் ஆத்துமாவோடு இணைந்திருக்கும் சாத்தானை பிரித்து பாதாளத்தில அடைக்க முடியும்.
அப்படி ஜெயம்கொள்ளும் ஒரு மனுஷனையே தேவன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்.
சாத்தானை ஜெயிப்பதற்கு செய்யவேண்டிய வழிகள் நடைமுறைகள் அனைத்தையும் வேத வசனங்களில் அவர் எழுதி கொடுத்துவிட்டார். அவற்றை கைகொண்டு நடப்பதற்கு தேவையான பெலன் மற்றும் பாவம் எது என்பதை கண்டித்து உணர்த்தும் பரிசுத்த ஆவியானவரை யும் நமக்கு அருளிவிட்டார். அத்தோடு நியாயபிரமாணத்தில் இருந்து வெளிப்படுத்தின விசேஷம்வரை பைபிளில் அனேக இடங்களில் "என் வார்த்தையை கைகொள்ளுங்கள்" திரும்ப திரும்ப சொல்கிறார்.
ஆனால் சாத்தான் பெரிதாக்கி காட்டும் உலக இன்பத்தில் ஊறிப்போய், செவிகள் மற்றும் இருதயம் அடைக்கபட்டுப்போன நமக்கு அவ்வார்த்தைகள் நம் காதுக்கு எட்டுவதே இல்லை! வேறு எதை எல்லாமோ ஆராய்ச்சி பண்ணுகிறோம், எவன் தவறு செய்கிறான் யார் குற்றம் செய்கிறார்கள் யார் தவறாக போதிக்கிறார்கள் என்று அதிக மதிகமாய் ஆராய்வதோடு எங்கெல்லாமோ ஓடி இன்னும் எதவாது
புதிதாக கிடைக்காத என்றுதேடுகிறோம்! ஆனால் அவரது வார்த்தைக்கு அப்படியே செவிசாய்த்து வாழ்வதற்கு மட்டும் விரும்புவதில்லை.
சுருக்கமாக சொன்னால் இன்று உலகில் அநேகர் இயேசுவுக்காக இரத்த சாட்சியாக மரிப்பதற்கு தயார் ஆனால் இயேசுவின் வார்த்தைப்படி தன்னை ஒரு கன்னத்தில் அடித்தவனுக்கு மறு கன்னத்தை திருப்பிகொடுக்கவோ அல்லது தனக்குண்டானவைகளை விற்று தரித்திரனுக்கு கொடுக்கவோ தயாரில்லை!
தேவன் யாரையும் இரத்த சாட்சியாக மரிக்கவேண்டும் என்று சொல்ல வில்லை. ஆனால் பாவத்துக்கு விரோதமாக போராடுவதில் இரத்தம் சிந்தவும் தயாராக இருக்கவேண்டும் என்றே வசனம் சொல்கிறது
எபிரெயர் 12:4பாவத்திற்கு விரோதமாய்ப் போராடுகிறதில் இரத்தஞ்சிந்தப்படத்தக்கதாக நீங்கள் இன்னும் எதிர்த்து நிற்கவில்லையே.
வேத வசனங்களை மீறுவதே பாவம் தேவனின் கைகொண்டு வாழ்வதன் மூலமே பாவத்தை விட்டுவிலகி சாத்தானை ஜெயம்கொள்ள முடியும். வேதம் சொல்லும் அனைத்து கட்டளைகளும் கற்பனைகளும் சாத்தனை ஜெயம்கொள்ளுவதற்கு தேவன் காட்டியுள்ள வழிகள்தான்.
எனவே, தேவன் ஒவ்வொரு மனுஷனி டமும் எதிபார்ப்பது: யாராவது ஒரு மனுஷன் பரிசுத்த ஆவியின் வல்லமையை பெற்று வேதத்தில் சொல்லப்பட்டிருக்கும் வழிப்படி சரியாக நடந்து/வாழ்ந்து சாத்தானை ஜெயித்துவிட மாட்டானா? என்பதுதான். அதற்காகத்தான் இத்தனை மனுஷர்களை உலகத்தில் படைத்து படைத்து கொண்டு இருக்கிறார்.
ஒவ்வொரு மனுஷனை படைக்கும்போதும் "இவன் சாத்தானை ஜெயித்துவிட மாட்டானா" என்று எதிர்பார்க்கிறார். ஆனால் ஆவியில் அனலோடு கிறிஸ்த்தவத்தில் அடியெடுத்துவைக்கும் அநேகர், ஆண்டுகள சென்றுவிட்டால் ஆறிப்போய் உலகத்தோடு ஒத்துபோய் விடுகின்றனர். இன்றுவரை யாரும் அப்படி வாழ்வதற்கு தயாராக இல்லை எனவே 2000 வருடத்தை கடந்தும் இந்த உலகம் போய் கொண்டே இருக்கிறது.
மாற்கு 16:15.நோக்கி: நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள் மத்தேயு 28: 19. நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,
மத்தேயு 28:20நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்;
யோவான் 14:15நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்.
இயேசுவின் இந்த கடைசி இரண்டு வார்த்தைகளில் முதல் கட்டளையாகிய "சுவிசேஷம் சொல்லுதலை" மாத்திரம் பிரதானப் படுத்தும் சாத்தான் "அவர் வார்த்தையை கொள்ளும்படி" கட்டளை யிட்டதை முற்றிலும் மறைத்து விடுகிறான். அல்லது அதை ஒரு சாதாரண காரியம் ஆக்கிவிடுகிறான். காரணம் அதில் சாத்தானின் முடிவு இருக்கிறது.
இயேசுவின் சுவிசேஷத்தினிமித்தம் தாங்கள் ஜீவனையும் கொடுத்த அநேகரைபற்றி நாம் அறிந்திருக்கலாம் அது இயேசுவின் முதலாம் கட்டளைக்கு தொடர்புடைய வேறு நிலை. அவர்களை நாம் எவ் விதத்திலும் குறைத்து மதிப்பிட முடியாது. ஆனால் இயேசுவின் வார்த்தைகளின் படி வாழ்வது என்பது முற்றிலும் வேறுபட்ட ஒரு நிலை இங்கு "நான்" என்னும் "சுயம்" முற்றிலும் சாகவேண்டும்.
தாங்கள் "தேவன் மனுஷனிடம் என்ன எதிபார்க்கிறார்" கேள்வியை இங்கு முன்வைத்ததால், தங்களுக்கு என்னுடய வேண்டுதல் என்ன வெனில், நீங்கள் வேத வசனத்தை படித்திருப்பீர்கள் என்று கருதுகிறேன். படிக்கவில்லை என்றால் பைபிளை முழுமையாக குறைந்தது மூன்று முறையாவது படியுங்கள். உங்களுக்கு தெரிந்த வசனத்துக்கு எல்லாம் நீங்கள் சரியாக கீழ்ப்டிகிறீர்களா என்பதை ஆராய்ந்து உங்களை நீங்களே நிதானித்து அறியுங்கள் மீறுதல் களை விட்டொழிக்க பிரயாசம் எடுங்கள் அடுத்து என்ன செய்யவேண்டும் என்பதை தேவனே தெரிவிப்பார்.
ஒருமுறை ஒரு ஸ்திரி இயேசுவிடம் வந்து இவ்வாறு சொல்கிறார்:
லூக்கா 11:27ஜனக்கூட்டத்திலிருந்த ஒரு ஸ்திரீ அவரை நோக்கி: உம்மைச் சுமந்த கர்ப்பமும் நீர் பாலுண்ட முலைகளும் பாக்கியமுள்ளவைகளென்று சத்தமிட்டுச் சொன்னாள்.
அதற்கு இயேசு இவ்வாறு பதில் சொன்னார்:
28. அதற்க்கு அவர் : அப்படியானாலும், தேவனுடைய வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்துக்கொள்ளுகிறவர்களே அதிக பாக்கியவான்கள் என்றார்.
"யார் பாக்கியவான்கள்"என்று இயேசுவுக்கு சரியாக தெரிந்தது! அனால் அவரை பின்பற்றுகிறோம் என்று சொல்லும் அநேகருக்கு அது புரிய வில்லை! அது ஏன் என்பது எனக்கு தெரியவில்லை.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)