இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: "பந்தி"க்கு முந்து!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2008
Date:
"பந்தி"க்கு முந்து!
Permalink  
 


"பந்திக்கு முந்து படைக்கு பிந்து" என்ற பழ மொழி அனைவரும் அறிந்தது இதற்க்கு நேர் பொருளாக நாம் அறிவது  "விருந்துக்கு போகும்போது பந்தியில் முதலில் அமர்ந்து சாப்பிட்டுவிட வேண்டும் இல்லையேல் உணவு இல்லாமல் போய்விடலாம் அல்லது தரமற்ற உணவு கிடைக்கலாம் ஆனால்  யுத்தத்துக்கு படைகளோடு போகும் போது  பிந்தி கடைசி வரிசையில் போகவேண்டும் அப்படி போனால் முன்னால் போகிறவர்கள் எல்லோரும் மரித்தாலும் நாம் தப்பித்து கொள்ளலாம் என்று பொருள் கொள்ள முடியும்.    
 
ஆகினும் இதற்க்கான பொருள் வேறு என்று பலர் பலவேறு விதமாக விளக்கியுள்ளனர் அதில் ஓன்று 
 
"பந்திக்கு முந்து படைக்கு பிந்து பந்தி எண்பது வரிசை . படை எண்பது நால்வகைப் படைகள்.ஒரு அரசனும் படையெடுத்து செல்லும் போது தேர்ப்படை, யானைப்படை ,குதிரைப்படை ,காலாட்படை நிற்கும் . போர் முரசு கேட்டவுடன் வீரர்கள் தத்தம் இல்லங்களில் இருந்து ஓடிவந்து பந்தியில் நிற்பார்கள் . அதாவது வரிசையில் நிற்க முந்து (பந்திக்கு முந்து ) ஆனால் படையில் காலாட்படை கடைசியாகத் தான் செல்ல வேண்டும் அது தான் போர் முறை ..அதானால் படைக்கு பிந்து' 
 
இந்த பழமொழி நமது நாட்டில் வழக்கு  பழமொழி என்றாலும் நாம் ஆண்டவராகிய வாழ்ந்த இஸ்ரவேல் தேசத்திலும் பந்திக்கும் வந்தவர்கள் முதன்மையான இடத்தை தெரிந்துகொண்டதை இயேசு ஒருநாள் பார்த்திருக்கிறார்.  
 
லூக்கா 14:7 விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பந்தியில் முதன்மையான இடங்களைத் தெரிந்துகொண்டதை அவர் பார்த்து, அவர்களுக்கு ஒரு உவமையைச் சொன்னார்:
 
லூக்கா 14:8 ஒருவனால் கலியாணத்துக்கு நீ அழைக்கப்பட்டிருக்கும்போது, பந்தியில் முதன்மையான இடத்தில் உட்காராதே; 
 
பந்தியில் அமருவதற்கு முதன்மையான இடத்தை   நாம் தெரிந்து கொள்ள கூடாது என்பது ஆண்டவரின் கட்டளை. ஆனால் இந்த உலகில் பத்தியில் மட்டுமல்ல எந்தஒரு காரியத்திலும் முதலிடத்தை பிடிக்க போட்டா போட்டி அடிபிடி சண்டைகூட நடைபெற்று கொண்டு இருக்கிறது.  
 
ஆண்டவரை அறிந்துகொண்டுள்ள நாமோ பந்தில் அமருவது மட்டுமல்ல வேறு எந்த காரியத்துக்கும் முதன்மை இடத்தை  தேடி நாம் ஓடக்கூடாது.  தேவ பிள்ளைகளாகிய நாம் முடிந்த அளவு பிறருக்கும் தேவனை அறியாதவர்களுக்கும்  அவர்கள் தேவைக்கும் இடம்கொடுக்க வேண்டியது அவசியம். தேவனுக்கு மேலாக முதலிடத்தில் தன்னை உயர்த்த நினைத்தவன் சாத்தான். அவன் ஆவியால் பீடிக்கப்ட்டுளவர்கள் எல்லோருமே முதல் இடத்தையே தேடி ஓடுவார்கள்   
 
ஆனால நாமோ நமக்கு முன்னால் போகிறவர்கள்,  நம்மைவிட மேலானவர்களை  அல்லது நம்மைவிட வசதியாக இருப்பவர்களை பார்த்து பொறாமைபடாமல் அவர்கள் நன்றாக வசதியாக  இருப்பதற்காக பெருமைபடுங்கள்.  அவர் உங்களுக்கு  முன்னால் போவதில் நீங்கள் வயிரெரியாமல் அவன் முன்னால் போவதில் நீங்கள் மனதார மகிழ்ச்சியடையுங்கள். நமக்கு முதல் இடம் கொடுக்க பட்டாலும் அதை பிறருக்கு விட்டுகொடுக்க தயங்கவேண்டாம்!. உங்களின் நியாயமான காரியங்களைகூட நிறைவேற்றிக்கொள்ள அடுத்தவருக்கு முந்தி கொண்டு ஓட விரும்ப வேண்டாம். நமக்காக தேவன் நியமித்தது நாம் எவ்வளவு தாமதமாக போனாலும்கூட நமக்காக காத்திருக்கும்.   
 
அதாவது பிறருக்காக உங்களையும் உங்கள் தேவைகளையும் தியாகம் பண்ண துணியுங்கள். அதன் மூலம் மட்டுமே நாம் கிறிஸ்த்தவர்கள் என்ற உண்மையை உலகுக்கு உணர்த்த முடியும்!   
 
மத்தேயு 5:16 இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.
 
தொடர்ந்து பார்க்கலாம்.... 

 



-- Edited by SUNDAR on Wednesday 12th of October 2011 04:07:24 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



புதியவர்

Status: Offline
Posts: 9
Date:
Permalink  
 

அறுமை


__________________

 

காலம் நிறைவேறிற்று, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்று; மனந்திரும்பி, சுவிசேஷத்தை விசுவாசியுங்கள்மாற்கு:1:15

 



இளையவர்

Status: Offline
Posts: 20
Date:
Permalink  
 

உண்மையிலே மிகவும் நல்ல பதிவு

__________________
இதோ, சீக்கிரமாய் வருகிறேன், அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது.
வெளி 22:12


புதியவர்

Status: Offline
Posts: 5
Date:
Permalink  
 

"பந்திக்கு முந்து படைக்கு பிந்து" இது உண்மையிலே பந்திக்கு முந்தும் கை,படைக்கு பிந்தும் கை என்பதின் சுருக்கமே "பந்திக்கு முந்து படைக்கு பிந்து" இதன் உண்மையான அர்த்தம் பந்திக்கு முந்து என்பது , கல்யாண வீட்டில் அல்லது பிறருக்கு உணவு பரிமாறும் போது நம்முடைய கை, உணவு உண்பவர்க்கு அதிக அளவு வழங்க (கை நீள வேண்டும்) அது விருந்தினரை சிறப்பாக கவனிப்பதை குறிக்கிறது. படைக்கு பிந்து என்பது போரில் வேல் , வாள், அம்பு, போற ஆயுதங்களை சிறப்பாக வீச நம் கையை எவ்வளவு பின்தங்க செய்கிறோமோ அந்த அளவு சக்தி, வீரியம் , பலம் கிடைக்கும் (ஒருவர் எந்த அளவு கையை பின்னோக்கி வளைத்து ஒரு பொருளை வீசுகிறாரோ அந்த அளவு வேகம் அப்பொருளுக்கு கிடைக்கும்) .அதனால் போரில் எளிதாக வெற்றி பெறலாம்...இது தமிழரின் ஈகை குணமும் போர் குணத்தையும் அறியலாம் ......

-- Edited by TAMILAN on Wednesday 28th of December 2011 06:31:40 PM

__________________


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
Permalink  
 

TAMILAN wrote:

"பந்திக்கு முந்து படைக்கு பிந்து" இது உண்மையிலே பந்திக்கு முந்தும் கை,படைக்கு பிந்தும் கை என்பதின் சுருக்கமே "பந்திக்கு முந்து படைக்கு பிந்து" இதன் உண்மையான அர்த்தம் பந்திக்கு முந்து என்பது , கல்யாண வீட்டில் அல்லது பிறருக்கு உணவு பரிமாறும் போது நம்முடைய கை, உணவு உண்பவர்க்கு அதிக அளவு வழங்க (கை நீள வேண்டும்) அது விருந்தினரை சிறப்பாக கவனிப்பதை குறிக்கிறது. படைக்கு பிந்து என்பது போரில் வேல் , வாள், அம்பு, போற ஆயுதங்களை சிறப்பாக வீச நம் கையை எவ்வளவு பின்தங்க செய்கிறோமோ அந்த அளவு சக்தி, வீரியம் , பலம் கிடைக்கும் (ஒருவர் எந்த அளவு கையை பின்னோக்கி வளைத்து ஒரு பொருளை வீசுகிறாரோ அந்த அளவு வேகம் அப்பொருளுக்கு கிடைக்கும்) .அதனால் போரில் எளிதாக வெற்றி பெறலாம்...இது தமிழரின் ஈகை குணமும் போர் குணத்தையும் அறியலாம் ......

-- Edited by TAMILAN on Wednesday 28th of December 2011 06:31:40 PM


சகோ. தமிழன் அவர்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. 

தமிழர்களின் ஈகை குணத்தையும் வீரத்தையும் பறைசாற்ற சொல்லபட்ட ஒரு பழமொழி தற்போது "சாப்பிடுவதற்கு முதலில் போனால்தான் நல்ல சாப்பாடு கிடைக்கும்  எனவே அதற்க்கு முந்தி போகவேண்டும், என்றும் படையில் முன்னால் இருப்பவர்கள்தான் காயம் அடைய நேரிடும், எனவே பின்னால் பதுங்குவது நல்லது" என்பதுபோல் தவறான கருத்தைசொல்வதற்கு பயன்படுதபடுவதை நாம் கிராமங்களில் அறியலாம்.

நல்ல விளக்கத்தை பகிர்ந்தமைக்கு நன்றி!இறைவன் மேலும் ஞானத்தை தந்து தங்களை ஆசீர்வதிக்க வாழ்த்துகிறேன்.
 


__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 627
Date:
RE:
Permalink  
 


நல்ல பதிவு Sundar Anna அறுமை



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard