///2. நீதிமான்களின் இரத்தமே சாத்தானை நியாயம் தீர்க்கும் என்பதனால் பல நீதிமான்களை தேவன் சாத்தானின் கையில் ஒப்புகொடுத்து அவர்களின் இரத்த பழியை சாத்தன்மேல் சுமத்தி அவனை நித்தியத்துக்கும் வெளியில் வரமுடியாதபடி அடைக்க இவ்வாறு காரியங்களை அனுமதிக்கலாம்!///
அதற்க்கு சகோதரர் ஜான் அவர்கள் இவ்வாறு பதிவிட்டுள்ளார்கள்
சாத்தான் உலகத்தோற்றத்திற்கு முன்பே நியாயம் தீர்க்கப்பட்டு விட்டான்.
இதுபோன்றதொரு வசனம் வேதத்தில் இருப்பதாக நான் அறியவில்லை ஒரு வேளை இந்த கூற்றுக்கு ஒத்த வசனம் வேதத்தில் இருக்குமாயின் எனக்கு தெரிவிக்கும்படி அன்புடன் கேட்கிறேன்.
ஒருவேளை அப்படியே சாத்தான் உலக தோற்றத்துக்கு முன்னரே நியாயம் தீர்க்கபட்டுவிட்டவன் என்றால் "அவர் உன் தலையை நசுக்குவார்" என்று உலகம்
தோன்றிய பிறகு தேவன் சாத்தானை குறித்து நியாயம் தீர்ப்பது ஏன்? அதற்க்கு சரியான காரணம் என்ன?
ஆதியாகமம் 3:15உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார்,
சகோதரர் கருத்துப்படி உலக தோற்றத்துக்கு முன்னரே சாத்தான் நியாயம் தீர்க்க பட்டுவிட்டான்! அதுபோல் "உலக தோற்றத்துக்கு முன்னரே யாரை முன் குறிக்க வேண்டுமோ அவர்களை கிறிஸ்த்துவுக்குள் தேவன் தெரிந்துகொண்டார்" என்று வசனமே சொல்கிறது.
எல்லாமே உலக தோற்றத்துக்கு முன்னரே முன்குறிக்கபட்டு/ தெரிந்து கொள்ளபட்டுவிட்டது என்றால் இப்பொழுது நாம் அதிக பிரயாசம் எடுத்து சுவிசேஷம் சொல்ல வேண்டிய அவசியம் என்ன? அல்லது சில சகோதரர்கள் சொல்வதுபோல் அது அவசியம் இல்லை என்று கருதுகிறீர்களா?
சகோ. ஜான் அவர்கள் இந்த கேள்விக்கு தகுந்த ஆதாரத்துடன் சரியான விளக்கம் தரவேண்டும் என்று அன்புடன் கேட்டுகொள்கிறேன். தாங்கள் வேதவசனம் பற்றிய விஷயத்தில் ஞானம் உள்ளவர் என்று நான் கருதுகிறேன். உங்கள் பதிலின் அடிப்படையிலேயே ஒரு முடிவுக்கு நான் வர முடியும். எனக்கு சரியான விளக்கம் கிடைக்கும் பட்சத்தில் அனுமானத்தின் அடிப்படையில் மேலே நான் எழுதிய கருத்துக்கு மன்னிப்பு கேட்டு என் கருத்தை வாபஸ் வாங்க நான் தயார்.
-- Edited by SUNDAR on Thursday 13th of October 2011 10:22:48 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
எல்லாமே உலக தோற்றத்துக்கு முன்னரே முன்குறிக்கபட்டு/ தெரிந்து கொள்ளபட்டுவிட்டது என்றால் இப்பொழுது நாம் அதிக பிரயாசம் எடுத்து சுவிசேஷம் சொல்ல வேண்டிய அவசியம் என்ன?
(சகோ. ஜான் அவர்களிடம் கேட்கபட்டு நீண்ட நாட்களாக பதில் இல்லாமல் இருக்கும் இந்த கேள்விக்கு நானே பதில் தருகிறேன் )
சென்னையில் இருந்து மும்பை செல்லும் தாதர் எக்ஸ்பிரஸ் என்ற தொடர் வண்டி மூன்று மாதம் கழித்து அதாவது 13/3/2012 அன்று எத்தனை மணிக்கு சென்னயில் இருந்து புறப்பட்டு எத்தனை மணிக்கு மும்பை சென்று அடையும் என்பது ரயில்வே துறையால் பல மாதங்களுக்கு முன்னவே அட்டவணை இடப்பட்டு அறிவிக்கப்பட்டு விடுகிறது. அப்படி ஒரு அட்டவனையை வெளியிட்டுவிட்டதால் அந்த வண்டி தானாகவே புறப்பட்டு தானாகவே மும்பை போய் சேர்ந்து விடாது. அந்த வண்டியை ஓட்டுவதற்கு தகுதிபடைத்தவர் மற்றும் அதற்க்கு தேவையான மின்சாரம்/டீசல், வழிகாட்டிகள் போன்ற பல் வேறு பணியாளர்களை அந்த குறிப்பிட்ட நாளில் அந்த வண்டியை ஒட்டி செல்வதற்கு தயார் செய்வது அவசியம். அவர்களும் தாங்கள் தாங்கள் கடமைகளை சரியான நேரத்தில் சரியாக செய்தால் மட்டுமே அரசாங்கத்தில் அந்த முன் நிர்ணயமானது சரியாக நடந்து, அந்த தாதர் எக்ஸ்பிரஸ் சரியான நேரத்தில் மும்பை சென்று அடைய முடியும்.
இதற்க்கு இடையில் ஒருவரோ அல்லது பலரோ ஏதாவது இடக்கு பண்ணினாலோ அல்லது தாங்கள் பணியை புறங்கணித்தாலோ அல்லது செய்ய மறுத்தாலோ அந்த திட்டத்தில் தடங்கல் ஏற்ப்படலாம். அரசாங்கம் வேறு ஒரு ஆளை நிரயித்து அந்த வேலையை செய்து முடித்துவிடும் எனது உறுதி! ஆனால் முன் நிர்ணயிக்கபட்டவர்கள் தவறும்போது கால தாமதம் ஏற்ப்பட வாய்ப்பு நிச்சயம் உண்டு.
இதே நிலைதான் இன்று தேவனின் திட்டங்கள் நிறைவேருதலிலும் நடந்து வருகிறது.
தேவனாகிய கர்த்தர் "இஸ்ரவேல் ஜனங்கள் 400௦ வருடங்கள் எகிப்த்து தேசத்தில் உபத்திரயப்படுவார்கள்" என்று சொல்லியிருந்தாலும். மோசே என்னும் தேவ மனுஷன் தேவனின் காரியத்துக்கு தயாராக சுமார் 30வருடங்கள் அதிக காலம் எடுத்துகோள்ளபட்டு 430௦ வருடம்தான் இஸ்ரவேலை எகிப்த்தை விட்டு வெளியேறினார்கள் என்று வேதம் சொல்கிறது.
அதுபோல் கானானை சுதந்தரிப்பதில் இடக்கு பண்ணி, துர்செய்தியை பரப்பினதிநிமித்தம் சுமார் 40 வருடங்கள் எல்லோரும் வனாந்திரத்தில் அலைந்து திரிய வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது.
ஆயியை ஜெயிக்கும் விஷயத்தில் ஆகான் தேவனின் கட்டளையை மீறி பொருட்களை திருடி வைத்ததால் அங்கும் சில நாட்கள் தடங்கல் ஏற்ப்பட்டது. இப்படி பல தடங்கல்கள் ஏற்ப்பட்டலும் தேவன் தான் வாக்குபண்ணிய கானானை சொன்னபடி சுதந்தரிக்க வைத்தார்.
இதிலிருந்து நாம் அறிந்து கொள்ளவேண்டியது என்னவெனில், தேவன் ஒரு வாக்கு கொடுத்துவிட்டார் என்பதாலோ அல்லது அவர் ஒரு காரியத்தை எழுதிவைத்துவிட்டார் என்பதாலோ அது தானாக நடந்து விடாது அவர் தான் முன்குறித்த மனுஷர்களை கொண்டே அந்த காரியத்தை நிறைவேற்றுகிறார். இந்நிலையில் அந்த காரியம் நிறைவேறும் பொருட்டு தேவன் பயன்படுத்தும் பாத்திரங்கள் தாங்கள் மேல் விழுந்த கடமைகளை சரிவர செய்தால் மட்டுமே தேவனின் திட்டம் சரியான காலங்களில் நிறைவேறும்.இல்லையேல் கால தாமதம் ஏற்ப்படலாம்!
அதேபோல் "சாத்தானை அக்கினி கடலில் தள்ளும்" திட்டமானது என்றோ தேவனால் முன் நிர்ணயிக்கபட்டு எழுதி நமது கையில் கொடுக்கபட்டு விட்டது.
வெளி 20:10மேலும் அவர்களை மோசம்போக்கினபிசாசானவன், மிருகமும் கள்ளத்தீர்க்கதரிசியுமிருக்கிற இடமாகிய அக்கினியும் கந்தகமுமான கடலிலே தள்ளப்பட்டான்.
இது தேவனால் முன்குறிக்கபட்டதும் நிச்சயம் நிறைவேறக்கூடிய வார்த்தைகள் ஆகும்! ஆனால் அது எழுதி கொடுக்கபட்டுவிட்டது என்பதற்காக அது அப்படியே தானாக நடந்துவிடாது. அதற்காக தேவன் நிர்ணயித்த மனுஷர்கள் இடும்பு பண்ணாமல் தங்கள் கடமைகளை சரியாக செய்தால் மட்டுமே காலம் நேரம் வரும்போது எல்லாம் சரியாக நிறைவேறும். அவ்வாறு இல்லை என்றால் கூட தேவன் யாரை கொண்டாவது தான் எழுதிக்கொடுத்ததை செய்து முடித்து விடுவார் ஆனால் தாமதம் ஏற்ப்பட வாய்ப்பிருக்கிறது.
எனவே இயேசுவை ஏற்றுக்கொண்டு தேவனின் கரத்துக்குள் வரும் ஒருவர் அவருக்கான தேவ திட்டம் என்னவென்பதை ஆராய்ந்து அவரவருக்கு தேவன் நியமித்த பணியை சிரத்தை எடுத்து செவ்வனே செய்தல் அவசியம்! அவ்வாறு செய்யாமல் இடும்பு பண்ணுகிறவர் களுக்கு தேவன் வாக்குபண்ணியுள்ள சுதந்திரத்தில் பங்கும் பாத்திரமும கிடக்காதே போகும்!
எனவே சாத்தானின் அழிவு என்பது ஆதியிலே முன்குறிக்க பட்டாலும் அது ஏற்ற காலத்தில் செவ்வனே நிறை வேறுவதற்கு தேவ பயன்படுத்தும் பிள்ளைகளின் ஜெபமும், விசுவாசமும், கிரியையும் நிச்சயம் அவசியம்!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
யாத்திராகமம் 12:40 இஸ்ரவேல் புத்திரர் எகிப்திலே குடியிருந்த காலம் நானூற்றுமுப்பது வருஷம்..
தாங்களும் அதனை குறிப்பிடீர்கள் என நம்புகிறேன்..தங்கள் பதிவில் காலம் 4300 என உள்ளது.. கர்த்தருடைய கிருபைனால் நாம் அழியாமல் பிழைத்திருகிறோம்..அவருடைய கிருபை நம் ஜீவனை பார்க்கிலும் நல்லது.. ஆகவே தான் நீயாயதீர்ப்பின் போது இரக்கம் மேன்மை பாரட்டும் என வசனம் உள்ளது..
நன்று..
மாறாத தேவ சித்தங்களும் உண்டு.. (இவைகள் நித்தியத்திற்கு அடுத்தவை)..இவைகளை நம் தேவன் திர்க்கதரிசிகளுடன் பகிர்ந்து கொள்கிறார்..
வேதத்தில் குறித்தகாலம் என குறிக்க பட்ட பின் வரும் வசனங்களை கவனிக்க.
யோவான் 7:30 அப்பொழுது அவரைப் பிடிக்க வகைதேடினார்கள்; ஆனாலும் அவருடைய வேளை இன்னும் வராதபடியினால் ஒருவனும் அவர்மேல் கைபோடவில்லை.
பிரசங்கி 3:11 அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்; உலகத்தையும் அவர்கள் உள்ளத்திலே வைத்திருக்கிறார்; ஆதலால் தேவன் ஆதிமுதல் அந்தம்மட்டும் செய்துவரும் கிரியையை மனுஷன் கண்டுபிடியான்.
குறித்த காலம்: II சாமுவேல் 24:15 அப்பொழுது கர்த்தர் இஸ்ரவேலிலே அன்று காலமே தொடங்கி குறித்தகாலம்வரைக்கும் கொள்ளைநோயை வரப்பண்ணினார்;
எரேமியா 46:17 எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் பாழாக்கப்பட்டான்; அவனுக்குக் குறித்த காலம் முடிந்ததென்று அங்கே சத்தமிட்டுச் சொல்லுகிறார்கள்.
தானியேல் 11:35 அறிவாளிகளைப் புடமிடுகிறதற்கும், சுத்திகரிக்கிறதற்கும், வெண்மையாக்குகிறதற்கும் அவர்களில் சிலர் விழுவார்கள்; முடிவுகாலபரியந்தம் இப்படியிருக்கும்; குறித்தகாலம் வர இன்னும் நாள் செல்லும்.
யோவான் 5:28 இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படவேண்டாம்; ஏனென்றால் பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங் காலம் வரும்;
யோவான் 16:25 இவைகளை நான் உவமைகளாய் உங்களுடனே பேசுகிறேன்; காலம் வரும், அப்பொழுது நான் உவமைகளாய் உங்களுடனே பேசாமல், பிதாவைக்குறித்து வெளிப்படையாக உங்களுக்கு அறிவிப்பேன்.
ஒருவேளை என்று வருகின்ற பின் வரும் வசனங்களை கவனிக்க..
இந்த "ஒரு வேளை " என்ற கால பொழுதுகளில் கர்த்தர் இரங்குவாரா அல்லது மாட்டாரா என தேவ ஊழியர்களும் தெளிவாக சொல்ல இயலாது..
I சாமுவேல் 6:5 ஆகையால் உங்கள் மூலவியாதியின் சாயலான சுரூபங்களையும், உங்கள் தேசத்தைக் கெடுத்துப்போட்ட சுண்டெலிகளின் சாயலான சுரூபங்களையும் நீங்கள் உண்டுபண்ணி, இஸ்ரவேலின் தேவனுக்கு மகிமையைச் செலுத்துங்கள்; அப்பொழுது ஒருவேளை உங்கள் மேலும், உங்கள் தேவர்கள் மேலும், உங்கள் தேசத்தின் மேலும் இறங்கியிருக்கிற அவருடைய கை உங்களை விட்டு விலகும்.
I சாமுவேல் 14:6 யோனத்தான் தன் ஆயுததாரியாகிய வாலிபனை நோக்கி: விருத்தசேதனம் இல்லாதவர்களுடைய அந்தத் தாணையத்திற்குப் போவோம் வா; ஒருவேளை கர்த்தர் நமக்காக ஒரு காரியம் செய்வார்; அநேகம்பேரைக் கொண்டாகிலும், கொஞ்சம் பேரைக் கொண்டாகிலும், ரட்சிக்கக் கர்த்தருக்குத் தடையில்லை என்றான்.
II சாமுவேல் 16:12 ஒருவேளை கர்த்தர் என் சிறுமையைப் பார்த்து, இந்த நாளில் அவன் நிந்தித்த நிந்தனைக்குப் பதிலாக எனக்கு நன்மையைச் சரிக்கட்டுவார் என்றான்.
18:28 ஒருவேளை ஐம்பது நீதிமான்களுக்கு ஐந்துபேர் குறைந்திருப்பார்கள்; அந்த ஐந்துபேர்நிமித்தம் பட்டணமுழுதையும் அழிப்பீரோ என்றான். அதற்கு அவர்: நான் நாற்பத்தைந்து நீதிமான்களை அங்கே கண்டால், அதை அழிப்பதில்லை என்றார்.
ஆதியாகமம் 27:12 ஒருவேளை என் தகப்பன் என்னைத் தடவிப்பார்ப்பார்; அப்பொழுது நான் அவருக்கு எத்தனாய்க் காணப்பட்டு, என்மேல் ஆசீர்வாதத்தை அல்ல, சாபத்தை வரப்பண்ணிக்கொள்வேனே என்றான்.
I இராஜாக்கள் 18:12 நான் உம்மை விட்டுப்போனவுடனே ஒருவேளை கர்த்தருடைய ஆவியானவர் உம்மை எடுத்து, நான் அறியாத இடத்திற்குக் கொண்டுபோவார்;
யோபு 1:5 விருந்துசெய்கிற அவரவருடைய நாள்முறை முடிகிறபோது, யோபு: ஒருவேளை என் குமாரர் பாவஞ்செய்து தேவனைத் தங்கள் இருதயத்திலே தூஷித்திருப்பார்கள் என்று சொல்லி, அவர்களை அழைத்தனுப்பி, பரிசுத்தப்படுத்தி, அதிகாலமே எழுந்து, அவர்கள் எல்லாருடைய இலக்கத்தின்படியேயும் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்துவான்; இந்தப்பிரகாரமாக அந்நாட்களிலெல்லாம் செய்துவருவான்.
எரேமியா 21:2 நீர் எங்களுக்காகக் கர்த்தரிடத்தில் விசாரியும்; பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் எங்களுக்கு விரோதமாய் யுத்தஞ்செய்கிறான்; ஒருவேளை கர்த்தர் தம்முடைய எல்லா அற்புதச் செயலின்படியேயும் எங்களுக்கு அநுக்கிரகஞ்செய்து, அவனை எங்களைவிட்டுப் போகப்பண்ணுவார் என்று சொல்லியனுப்பினபோது,
எரேமியா 36:7 ஒருவேளை அவர்கள் கர்த்தருடைய முகத்துக்கு முன்பாகப் பணிந்து விண்ணப்பம்பண்ணி, அவரவர் தங்கள் பொல்லாத வழியை விட்டுத் திரும்புவார்கள்; கர்த்தர் இந்த ஜனத்துக்கு விரோதமாகக் கூறியிருக்கிற கோபமும் உக்கிரமும் பெரியது என்று சொன்னான்.
எசேக்கியேல் 12:3 இப்போதும் மனுபுத்திரனே, நீ பரதேசம் போகும்படி பிரயாண சாமான்களை ஆயத்தப்படுத்தி, பகற்காலத்திலே அவர்கள் முன்பாகப் பிரயாணப்படு; உன் ஸ்தலத்தைவிட்டு வேறே ஸ்தலத்துக்கு அவர்களுடைய கண்களுக்கு முன்பாகப் புறப்பட்டுப்போ; அவர்கள் கலகவீட்டாரானபோதிலும் ஒருவேளை சிந்தித்து உணருவார்கள்.
யோவேல் 2:14 ஒருவேளை அவர் திரும்பி மனஸ்தாபப்பட்டு, உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் போஜனபலிகளையும் பானபலிகளையும் செலுத்துகிறதற்கான ஆசீர்வாதத்தைத் தந்தருளுவார்.
ஆமோஸ் 5:15 நீங்கள் தீமையை வெறுத்து, நன்மையை விரும்பி, ஒலிமுகவாசலில் நியாயத்தை நிலைப்படுத்துங்கள்; ஒருவேளை சேனைகளின் தேவனாகிய கர்த்தர் யோசேப்பிலே மீதியானவர்களுக்கு இரங்குவார்.
யோனா 1:6 அப்பொழுது மாலுமி அவனிடத்தில் வந்து நீ நித்திரைபண்ணுகிறது என்ன? எழுந்திருந்து உன் தேவனை நோக்கி வேண்டிக்கொள்; நாம் அழிந்துபோகாதபடிக்குச் சுவாமி ஒருவேளை நம்மை நினைத்தருளுவார் என்றான்.
யோனா 3:9 யாருக்குத்தெரியும்; நாம் அழிந்துபோகாதபடிக்கு ஒருவேளை தேவன் மனஸ்தாபப்பட்டு, தம்முடைய உக்கிர கோபத்தைவிட்டுத் திரும்பினாலும் திரும்புவார் என்று கூறச்சொன்னான்.
செப்பனியா 2:3 தேசத்திலுள்ள எல்லாச் சிறுமையானவர்களே, கர்த்தருடைய நியாயத்தை நடப்பிக்கிறவர்களே, அவரைத் தேடுங்கள்; நீதியைத் தேடுங்கள், மனத்தாழ்மையைத் தேடுங்கள்; அப்பொழுது ஒருவேளை கர்த்தருடைய கோபத்தின்நாளிலே மறைக்கப்படுவீர்கள்.
அப்போஸ்தலர் 8:22 ஆகையால் நீ உன் துர்க்குணத்தை விட்டு மனந்திரும்பி, தேவனை நோக்கி வேண்டிக்கொள்; ஒருவேளை உன் இருதயத்தின் எண்ணம் உனக்கு மன்னிக்கப்படலாம்.
பிசாசு மற்றும் அவன் தூதர்களின் முடிவு தெள்ள தெளிவாக தீர்க்கதரிசிகளால் காலஅளவோடு கூறப்பட்டு உள்ளது.. இது தாமதமாக வாய்ப்பில்லை..
ஆனால் உபத்திரவகாலம் கர்த்தர் நம் மேல் அச்சமயத்தில் காட்டும் இரக்கத்தை பொருத்தது.. வசனம் பின் வருமாறு உள்ளது ..
மத்தேயு24 :22. ஏனெனில், உலகமுண்டானதுமுதல் இதுவரைக்கும் சம்பவித்திராததும், இனிமேலும் சம்பவியாததுமான மிகுந்த உபத்திரவம் அப்பொழுது உண்டாயிருக்கும்..அந்நாட்கள் குறைக்கப்படாதிருந்தால், ஒருவனாகிலும் தப்பிப்போவதில்லை; தெரிந்துகொள்ளப்பட்டவர்களினிமித்தமோ அந்த நாட்கள் குறைக்கப்படும்.
சகோதரர்களே ..
நமக்கு பரிட்சயம் இல்லாதவைகளை நாம் அழுத்தமாக கூறி பழக வேண்டாம்.. இல்லையேல் நம்மை எச்சரிக்கும் வசனங்கள் நமக்கு உண்டு..
புலம்பல் 3:37 ஆண்டவர் கட்டளையிடாதிருக்கக் காரியம் சம்பவிக்கும் என்று சொல்லுகிறவன் யார்?
மத்தேயு 22:29. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் வேதவாக்கியங்களையும் தேவனுடைய வல்லமையையும் அறியாமல் தப்பான எண்ணங்கொள்ளுகிறீர்கள்.
I தீமோத்தேயு 4:7 சீர்கேடும் கிழவிகள் பேச்சுமாயிருக்கிற கட்டுக்கதைகளுக்கு விலகி, தேவபக்திக்கேதுவாக முயற்சிபண்ணு.
நமக்கு பரிட்சயம் இல்லாதவைகளை நாம் அழுத்தமாக கூறி பழக வேண்டாம்..
சகோ. ஜான்12 அவர்களே தங்கள் கருத்து மற்றும் விரிவான விளக்கத்துக்கு நன்றி! தேவனின் கட்டளை இல்லாமல் காரியம் இங்கு சம்பவிக்காது என்பதில் நானும் உறுதியாக இருக்கிறேன்.
பலநாட்களுக்கு முன்னர் கேட்கபட்டு பதில் இல்லாமல் இருந்த கீழ்கண்ட கேள்விக்கு நான் அறிந்த பதிலை இங்கு எழுதினேன்.
சுந்தர் Wrote/////சகோதரர் கருத்துப்படி உலக தோற்றத்துக்கு முன்னரே சாத்தான் நியாயம் தீர்க்க பட்டுவிட்டான்! அதுபோல் "உலக தோற்றத்துக்கு முன்னரே யாரை முன் குறிக்க வேண்டுமோ அவர்களை கிறிஸ்த்துவுக்குள் தேவன் தெரிந்துகொண்டார்" என்று வசனமே சொல்கிறது.
எல்லாமே உலக தோற்றத்துக்கு முன்னரே முன்குறிக்கபட்டு/ தெரிந்து கொள்ளபட்டுவிட்டது என்றால் இப்பொழுது நாம் அதிக பிரயாசம் எடுத்து சுவிசேஷம் சொல்ல வேண்டிய அவசியம் என்ன? அல்லது சில சகோதரர்கள் சொல்வதுபோல் அது அவசியம் இல்லை என்று கருதுகிறீர்களா?////
இந்த கேள்விக்கு நான் எழுதிய பதில் சரியாக இல்லாத பட்சத்தில் தாங்கள் இந்த கேள்விக்கு பதில் தர வேண்டுகிறேன்.
மேலும் எனக்குள்ள சில சந்தேகங்களை தாங்கள் தீர்க்கும்பொருட்டு ஆதியில் இருந்து இப்பொழுதுவரை நடக்கும் காரியங்கள் பற்றிய தங்கள் புரிதலை ஒரு சிறு கட்டுரையாக தனியாக தந்தால் எனது சந்தேகங்களுக்கு நிச்சயம் பதில் கிடைக்கும் என்று கருதுகிறேன். (வசன ஆதாரம் வேண்டியதில்லை நான் தேடிப்பார்த்து கொள்கிறேன்)
தயவு செய்து தருவீர்களா?
அல்லது அப்படிஒரு கட்டுரை எங்காவது இருந்தால் எனக்கு கொஞ்சம் தொடுப்பு தரமுடியுமா?
தங்கள் உதவியை எதிர்பார்க்கிறேன்!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
ஒரு பொதுவான கேள்வி.. நிச்சயம் பதில் அளிக்கபடவேன்டிய கேள்வி.. நீங்கள் கேட்கும் இதே கேள்வி தான் அநேகருடைய விசுவாசத்தை பல வேளைகளில் முடக்குகின்றது...
you wrote:///எல்லாமே உலக தோற்றத்துக்கு முன்னரே முன்குறிக்கபட்டு தெரிந்து கொள்ளபட்டுவிட்டது என்றால் இப்பொழுது நாம் அதிக பிரயாசம் எடுத்து சுவிசேஷம் சொல்ல வேண்டிய அவசியம் என்ன? அல்லது சில சகோதரர்கள் சொல்வதுபோல் அது அவசியம் இல்லை என்று கருதுகிறீர்களா?////
சகோதரே! வசனத்தின் படி எல்லாமே முன் குறிக்க பட்டுள்ளது என்பதை தாங்கள் வசனத்தின் படி அறிந்து உள்ளீர்கள்..நானும் விசுவாசிகின்றேன்..
அவ்வாறு விசுவசிக்காவிடில் தீர்க்க தரிசனங்களை பொய் என்று சொல்லி பெரும் பாவியாய் இருப்பேனே..
இந்த கேள்வியை நீங்கள் கேட்பதும் முன்குரிக்கபட்டதே (மல்கியா 3:16 )...ஏனெனில் எல்லாம் தேவகட்டளை படி நடக்கிறதை நன்கு அறிந்து உள்ளேன்.. (புலம்பல் 3:37 ஆண்டவர் கட்டளையிடாதிருக்கக் காரியம் சம்பவிக்கும் என்று சொல்லுகிறவன் யார்?) ஆனாலும் கர்த்தர் நாம் செயல் பட சுதந்திரம் தந்துள்ளார்.. நாம் அவர் கட்டளையை கை கொள்ளலாம் அல்லது கை கொள்ளாமல் போகலாம்.. எது எவ்வாராய் போயினும் தேவனுக்கு மகிமை உண்டாகும்..(இதன் பொருள் -மனிதர் துதிக்கவில்லை என்றால் கல்லுகளும் துதிக்கும்) ஆபகூக்கும் இதனையே அவர் புத்தகத்தில் வலயுருத்தி உள்ளார்..கனி கொடுத்தாலும் கொடுக்கவிட்டாலும் கர்த்தருக்கே மகிமை என்கிறார்..தேவனுக்குள் களிகூருதலே நம் பலம் என்கிறார்..
ஓடாமல் பரிசு கிடைக்காது.. புடம் இடாமல் சுத்த வெள்ளி கிடைக்காது.. நம் தேவன் நாம் சுத்த வெள்ளியாக இருந்து பரிசு பெற வேண்டும் என்கிறார்.. தேவையானதை நம் கையில் கொடுத்து விட்டார்..(சோதனையையும் நம் பலத்தை மீறி அவர் அனுமதிக்கிறதில்லை) நமக்கு செயல் பட சுதந்திரம் கொடுத்து.. பாவமற்ற வாழ்க்கைக்கு கட்டளை,கற்பனை,சாட்சிகளையும் தந்துள்ளார்..
நாம் பேசும் முன்பே நம் வார்த்தைகளை அறிந்திருக்கிற உன்னதமான தேவனை நம் பெற்றுள்ளோம். நாம் வேதனையில் இருக்கும்போது வாகுக்கடங்க பெருமூச்சுகளோடு வேண்டுதல் செயும் ஆவியானவரும் நமக்கு உண்டு..
என் கருத்துப்படி,
மத்தேயு 18:4 ஆகையால் இந்தப்பிள்ளையைப்போலத் தன்னைத் தாழ்த்துகிறவன் எவனோ, அவனே பரலோகராஜ்யத்தில் பெரியவனாயிருப்பான்
என்பதை நாம் அறிய வேண்டியது அவசியம்.. பரலோகத்தில் கொல்வனியும் கொடுபனையும் தன இல்லை..
அவரது பரலோகங்களில் உயர்வு தாழ்வு உண்டு ..பரலோகத்தில் பெரியவன் சிறியவன் உண்டு என்று வேதம் சொல்கிறது..
புடமிடப்படுகிரவரை பொன்,வெள்ளி, இவைகளுடன் பதர்களும்(ஆவி இல்லாத ஜனங்கள்-ஆவியை அவித்து போட்டவர்கள்) எரியும்.. எரியும் பொது எல்லாம் பிழம்பாக தான் தெரியும்..
புடமிட்ட பின் கொல்லன்(தேவன்) சுத்த உலோகத்தை பெறுவார்.அவர் விருதா வேலை செய்கிரவர் இல்லை..நஷ்டத்திற்கு விதைகிறவர் அல்ல..
சுவிசேஷம் அறிவிப்பது தேவசித்தம்.. தேவ சித்தம் நடப்பதற்கு கீழ் படிகிறவர்கள் தேவை.. கீழ்படிவதற்கு கீழ் படித்தலின் ஆவி தேவை.. என்ன சொல்ல இனி... எல்லாரும் ஒரே வேலை ஒரே கிரியை செய்தாலும் தேவதெறிந்து கொள்ளுதல் வேறு (ஒருவன் ஏற்றுகொள்ள படுவான்,ஒருவன் கைவிடபடுவான் என்று வாசிகிறோமே!! அவரது ஆடுகளை அவர் அறிந்திருக்கிறார்.. ஆடுகளும் அவர் சத்தம் அறியுமே...
முந்தினவர்களுக்கும், பிந்தினவர்களுக்கும் அவர் கூலி தருகிறார்..வேலை செய்யாதவர்களுக்கு காரிருளை நியமிக்கிறார்..நாம் சுவிஷேசத்தை அறிவித்தாலும்,அறிவிக்காவிட்டாலும் தேவசித்தம் நிறைவேறும்..ஏன் என்றால் சுவிசேஷத்தை அறிவித்த பின் தன முடிவு வரும்... நாம் அறிவிக்காவிட்டால் வேறொருவர் அறிவிப்பார்..தாமதிக்காமல் அறிவிப்பார்.அனால் நியயதீர்பின் போது நாம் காரயுளில் இருப்போம்.(எலியா, தீர்க்கதரிசிகளின் தான் ஒருவர் மாத்திரம் இருப்பதாக கருதி பயந்தார்..கர்த்தர் சொன்னது என்னவெனில்.. 7000 பேர் இருப்பதாக கூறினார்.. )
(I இராஜாக்கள் 19:18 ஆனாலும் பாகாலுக்கு முடங்காதிருக்கிற முழங்கால்களையும், அவனை முத்தஞ்செய்யாதிருக்கிற வாய்களையுமுடைய ஏழாயிரம்பேரை இஸ்ரவேலிலே மீதியாக வைத்திருக்கிறேன் என்றார்.)
கர்த்தர் நம்மை அவரவர் அளவின் படியான விசுவாசத்தின் படி படைத்தாராம்.. அவர் விசுவாசத்தை துவக்குகிரவராகவும் முடிகிரவராகவும் இருக்கிறார்.. நாம் பொதுவான இந்த விசுவாசத்தை காத்துக்கொள்ளும் போது ஒளியில் நடக்கிறோம்.. ஜீவா க்ரிடதையும் பெறுவோம்.. காக்க தவறும் போது ஜீவா புத்தகத்தில் நம் பேர் கிருக்கபடும்.. அவிசுவிசுவாசியை ரட்சித்து நம் இடத்தை நிரப்ப தேவனால் ஆகும்.. அழைத்தவரை போல நாமும் உண்மை உள்ளவர்களாய் இருக்கும் போது அவ்வாறு நிகழ்வதில்லை.. பூரண ஆசிர்வாததினால் ஆசிர்வதிக்கபடுவோம்..
II பேதுரு 1:3 தம்முடைய மகிமையினாலும் காருணியத்தினாலும் நம்மை அழைத்தவரை அறிகிற அறிவினாலே ஜீவனுக்கும் தேவபக்திக்கும் வேண்டிய யாவற்றையும். அவருடைய திவ்விய வல்லமையானது நமக்குத் தந்தருளினதுமன்றி,
II பேதுரு 1:10 ஆகையால், சகோதரரே, உங்கள் அழைப்பையும் தெரிந்துகொள்ளுதலையும் உறுதியாக்கும்படி ஜாக்கிரதையாயிருங்கள்; இவைகளை செய்தால் நீங்கள் ஒருக்காலும் இடறிவிழுவதில்லை.
என் கருத்துப்படி,, நாம் சுவிஷேச்சத்தை அறிவிப்பதும்,அறிவிக்காது பின்வாங்குவதும் அவரது முன்குரிப்பின் படி நடக்கிறது..
அனால் விசுவாசத்தை காத்துகொள்வது நம் விருப்பத்திற்கு விடப்பட்டுள்ளது..
நம் கர்த்தர் சர்வஞானி...
-- Edited by JOHN12 on Wednesday 14th of December 2011 11:51:20 AM