இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: முகாந்திரமில்லாமல் குற்றம் சொல்பவர்கள் கவனத்திற்கு!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
முகாந்திரமில்லாமல் குற்றம் சொல்பவர்கள் கவனத்திற்கு!
Permalink  
 


அன்பு சகோதர சகோதரிகளே!
 
இந்த தளம் ஆரம்பிக்கபட்டு  இரண்டாவது வருடமாக நாம் இங்கு கருத்துக்களை எழுதி வருகிறோம்.  வேத வசனங்களையும் வேத கருத்துக்களையும் வியாக்கீனம் செய்வதற்கு அவரவர் ஒரு பாணியை பின்பற்றுகின்றனர். சிலர் ஒரு சிறிய கதையை  சொல்லி வேதவசனத்தை விளக்கலாம், சிலர் நடந்த உண்மை  சம்பவங்கள் அல்லது சாட்சிகளைசொல்லி ஆண்டவரின் மகிமையை விளக்கலாம், சிலர்  பிற வேதபண்டிதர்கள் எழுதிவைத்துள்ள கருத்தை அடிப்படையாக கொண்டு வேத வசனத்தை விளக்கலாம் சிலர் தங்கள் அனுபவங்களையே சாட்சியாக எழுதி வேத வசனங்களை விளக்கலாம். 
 
அனுபவ சாட்சியின் அடிப்படையில் எழுதப்பட்ட சாது சுந்தர்சிங், DGS தினகரன்,  பால் யாங்கி சோ மற்றும் பலரின்  புத்தகங்கள் அநேகருடைய ஆவிக்குரிய வாழ்வை
தட்டி எழுப்பும் ஒரு ஆயுதமாக அமைந்திருக்கிறது. நான் படித்து அறிந்து கொண்ட பென்னி ஹின் போன்ற  இன்னும் பலரின் உண்மை சாட்சிகள்  அவ்வப் போது என்னுடய ஆவிக்குரிய வாழ்வை அனல் மூட்டுவது உண்டு!
 
இந்த தளத்தை பொறுத்தவரை,  என்வாழ்வில் நடந்த அல்லது நான் அனுபவித்து அறிந்த  ஒரு உண்மை சம்பவத்தை  சொல்லி அதன் அடிப்படையில் அதனோடு தொடர்புடைய வேத வசனத்தை, வேத புத்தகத்தில் உள்ள இன்னொரு சம்பவத்தின் சாட்சிகள் மூலம் விளக்கி சொல்லிவருகிறேன். எந்த ஒரு கருத்தையும்  தியோரிட்டிகலாக சொல்லுவதைவிட பிராக்டிகலாக நடந்த சம்பவத்தின் மூலம்
விளக்குவது பலருக்கு கடினமான  காரியங்களை சுலபமாக  புரிந்துகொள்வதற்கு எதுவாக  அமையும் என்பது எனது கருத்து.
 
நமது  தளம் ஆரம்பித்ததில் இருந்தே கிறிஸ்த்தவர்கள் என்று தங்களை கூறிக் கொள்ளும் சில சகோதரர்களிடம் இருந்து எதிர்ப்பு வந்துகொண்டே இருக்கிறது என்பது நாம் அனைவரும் அறிந்ததே.  குறிப்பாக எந்த ஒரு தவறையும் சுட்டி காட்டி உறுதியாக குற்றம் சாட்ட முடியவில்லை என்றாலும் அன்றைய பரிசேயர் இயேசுவை காரண காரியமின்றி குற்றம் சுமத்தியதுபோல நம்மீது குற்றம் சுமத்த பலர் முயற்றுவருகின்றனர்.  
 
நான் தீர ஆராய்ந்து பார்த்ததில் இவர்கள் நம் எழுத்தில் இவர்கள் கண்டுபிடிக்கும்  எந்த ஒரு குற்றமும்  இவர்கள் சொந்த அறிவை உபயோகித்து கண்டுபிடித்தது அல்ல என்றும் ,வேத வசனங்களை சரியாக படிக்காததால் அல்லது வேதத்தை முழுமையாக ஒரு மூன்று முறையாவது படித்து உண்மையை அறியாததால் உண்டாந்தாகவோ அல்லது எவரோஒரு வெளிநாட்டுக்காரர் அல்லது ஒரு பாஸ்டர் அல்லது ஒரு சகவிசுவாசி  சொன்னதாகவோ இருப்பதை அறியமுடிகிறது.
 
அதாவது இவர்கள் எல்லாம் வேத வசனத்துக்கான உண்மை பொருளை சிரத்தை எடுத்து ஆண்டவர் பாதத்தில் அமர்ந்து விசாரிப்பதை விட்டுவிட்டு எவரோ எழுதி வைத்திருக்கும் காரியங்களை தொடர்ந்து ஒருவர் பின் ஒருவாராக ஏற்றுக் கொண்டும் போதித்துகொண்டும் வருகிறார்கள் என்பதை அறிய முடிகிறது.
 
பதில் தெரியாத கேள்விகள் எழுந்தால் அதை அப்படியே விட்டுவிட வேண்டும் அதைக்குறித்து அதிகம் விசாரிக்க கூடாது  என்பதும்  தங்கள் கொள்கைக்கு ஏற்ப வசனங்களை வளைப்பதும்  ஆண்டவர்  எதையும் யாருக்கும்  தெரியப்படுத்த மாட்டார் என்பதும், குறிப்பாக தாங்கள் அறிந்துகொண்டதர்க்கு மேலாக ஒன்றுமே இல்லை என்ற வரட்டு கவுரவமும் இவர்களை ஆண்டவரை விட்டு தூரபிரித்து
எந்த ஒரு காரியத்தின் உண்மை தனமையும்  அறியமுடியாமல் தடுத்து வருகிறது.  
 
ஆனால் நான் இங்கு எழுதும் எந்த கருத்தும் எவரும்  சொல்லிகொடுத்ததோ அல்லது   அல்லது எவரிடம் கேட்டு  அறிந்துகொண்ட கருத்தோ அல்ல. எனக்கு
வேதம் குறித்த ஒரு சந்தேகம் எழுந்ததால் அதை தேவனிடமே  விசாரிக்கிறேன்  அதற்க்கான பதிலை அறியும்வரை இரவும் பகலும் அதே சிந்தனையில்
ஆண்டவரை கேட்கிறேன் அவரும்:
 
நீதிமொழிகள் 1:23  இதோ, என் ஆவியை உங்களுக்கு அருளுவேன்; என் வார்த்தைகளை உங்களுக்குத் தெரிவிப்பேன்.
என்ற வசனத்தின் அடிப்படையிலும் 
எரேமியா 33:3 என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்.

என்ற வாக்கின் அடிப்படையிலும் அனேக உண்மைகளை எனக்கு தெரிவித் திருக்கிறார். நான் எந்த வசனத்தையும் புரட்டி பொருள்கொள்வது இல்லை. இருப்பதை இருக்கிரபிரகாரமாகவே பொருள்கொள்கிறேன்.  இறைவன் சம்பந்தமான அல்லது வேதம் சம்பந்தமான  எந்த கேள்விக்கும் தேவனிடம் இருந்து பதிலை பெற முடியும் என்று உறுதியாக விசுவாசிக்க்றேன். கரணம் நம்தேவன் இன்றும் என்றும் ஜீவனுள்ளவரும் தன்னை தேடுகிறவர்களுக்கு மிகவும் அருகில் இருப்பவருமாய் இருக்கிறார்.   
 
ஆகினும் உண்மையை உலகுக்கு தெரியவிடாமல் மறைத்து வரும், மறைக்க விரும்பும் சாத்தான் இங்கு எழுதப்படும் உண்மைகளை  யாரும் புரிந்துகொள்ள விடாமல் இருதயத்தை அடைப்பதோடு  நம்மீது ஆதாரமற்ற  குற்றம்சுமத்தி நம்மை மனமடிவாக்கவும் பலரை  தூண்டிவருகிறது.   
 
என்மீது குறை கண்டுபிடித்து குற்றம் சுமத்த விரும்பும் நண்பர்களுக்கு  நான் இங்கு பகிரங்கமாக எழுதிக்கொள்ள விரும்புவது என்னவெனில் இந்த தளத்தில் நான் எழுதியிருக்கும் பல விளக்கங்கள் சற்று வித்தியாசமாகத்தான் இருக்கும்  என்பதை நான் மறுக்கவும் இல்லை. அதை மாற்றபோவதும் இல்லை. காரணம் நான் கிறிஸ்த்தவர்கள்என்று தங்களை கூறிக்கொள்ளும் பலசகோதரர்களிடம் விளக்கம் கேட்டு சரியான விளக்கம் பெற முடியாத அல்லது அவர்களுக்கு தெரியாத காரியங்களுக்கே  இங்குவிளக்கம் கொடுத்திருக்கிறேன். எனது விளக்கங்களுக்கு மாற்று விளக்கம் கொடுத்து அது வசன அடிப்படையில் சரியாக இருக்கும் பட்ச்சத்தில் மாத்திரமே நான் எழுதியதை நீக்கிவிட தயாராக இருக்கிறேன்      
 
ஆனால்,  நான் அறிந்துகொண்ட கருத்துக்கள் அடிப்படையில் நான் இங்கு போதிக்கும் போதனைகளில் எது வேதத்துக்கு புறம்பாக இருக்கிறது என்பதை  சரியான வசன ஆதாரத்துடன்  விளக்கினலோ அல்லது இந்த கருத்து இப்படி சிலருக்கு இடரலை உண்டாக்கும் என்று சுட்டினாலோ நான் அதை ஆராய்ந்து உடனடியாக நீக்கிவிட வாஞ்சிக்கிறேன்.
 
காரணம், என்னுடய எழுத்துக்களால் யாருக்கும் எந்த ஒரு இடறலும் உண்டாக கூடாது என்பதில் நான் அதிகம் கவனமாக இருக்க விரும்புகிறேன்.
 
குறைகூற விரும்பும் யாராக இருந்தாலும் சரி ஒரு குறிப்பிட்ட கருத்தை எடுத்து அதை தனி திரியாக ஆரம்பித்து,  அவரவருக்கு ஆண்டவர் கொடுத்திருக்கும் ஞானத்தின் அடிப்படையில் வசன ஆதாரத்துடன் விவாதிப்போம்.  அதன் பின்னர் ஒரு முடிவுக்கு வரலாம்! சும்மா  பொத்தம்பொதுவாக ஒரு குற்றத்தை சொல்வதும்
 அதற்க்கான வசன ஆதாரத்துடன்   விளக்கம் கொடுத்ததும் காணாம் போய்விடுவதும் பின்னர் திடீர் என்று வந்து  குழப்புவதும் ஒரு சரியான முறை அல்ல!
 
மற்றபடி,
 
ஏசாயா 2:22 நாசியிலே சுவாசமுள்ள மனுஷனை நம்புவதைவிட்டுவிடுங்கள்; எண்ணப்படுவதற்கு அவன் எம்மாத்திரம்.
என்றும்
எரேமியா 9:4 நீங்கள் அவனவன் தன் தன் சிநேகிதனுக்கு எச்சரிக்கையாயிருங்கள், எந்தச் சகோதரனையும் நம்பாதிருங்கள்; எந்தச் சகோதரனும் மோசம்பண்ணுகிறான், எந்தச் சிநேகிதனும் தூற்றித்திரிகிறான்.
என்றும் 
ரோமர் 3:4   தேவனே சத்தியபரர் என்றும், எந்த மனுஷனும் பொய்யன் என்றும் சொல்வோமாக.
 
என்ற வசனத்தின் அடிப்படையிலும்,  நான் என் கண்ணால் தத்ரூபமாக் பார்த்ததன் அடிப்படயில் சொல்கிறேன் எல்லா மனுஷனுமே  பிசாசின் ஆவியால் பீடிக்கபட்டு பொய்யனாகவும் தனக்கு அடுத்தவனை  மோசம்போக்குகிறவர்களாகவுமே இருக்கிறார்கள். ஓரளவுக்கு உண்மை போன்று காரியங்களை சொல்லும் இந்த பிசாசின் ஆவிகள் ஒரு குறிப்பிட்ட அளவுக்குமேல் உண்மையை மறைத்து அதை யாரும் கண்டுகொள்ளாத விதம் தடுத்துவிடுகிறது.
 
யாருக்கும் ஓர வஞ்சனை செய்யாமல், வாஞ்சித்து கேட்போருக்கு சரியான உண்மையை தெரிவிப்பவர் மாம்சமான யாவருக்கு தேவனான கர்த்தர் ஒருவரே!  என்னை நீங்கள் நம்பவேண்டும் என்ற அசியம் இல்லை! ஆவியானவர் துணையுடன் ஆண்டவரிடம் கேட்டு உண்மையை அறியுங்கள். மாம்சமான மனுஷனை நம்பி மோசம்போகாதீர்கள் என்று அன்புடன் வேண்டுகிறேன்!


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

HMV


இனியவர்

Status: Offline
Posts: 53
Date:
RE: முகாந்திரமில்லாமல் குற்றம் சொல்பவர்கள் கவனத்திற்கு!
Permalink  
 


// நான் எந்த வசனத்தையும் புரட்டி பொருள்கொள்வது இல்லை. இருப்பதை இருக்கிரபிரகாரமாகவே பொருள்கொள்கிறேன். //

அது எப்படி ஐயா இத்தனை துணிகரமாக பொய் சொல்ல உங்களுக்கு தைரியம் வருகிறது? அதுவும் கர்த்தருடைய காரியத்தில்..? வசனத்தை மட்டுமா புரட்டுகிறீர்கள், வேதத்தின் முதல் அதிகாரத்தையே புரட்டுகிறீர்களே...

நீங்கள் சொல்லுவது போல நான் ஒன்றும் அறியாதவன் தான் எனவே நான் அறியாததை, 'இதுதான் சரி' என்று எடுத்துச்சொல்லும் தைரியம் எனக்கில்லை; ஆனால் நீங்களெல்லாம் விசேஷித்த வெளிப்பாடுகள் உடையவர்கள் அல்லவா, எனவே ஆண்டவருக்குப் பக்கத்திலேயே இருந்து பார்த்ததுபோல பொய்களை எழுதுகிறீர்கள்; ஆமா,சாத்தான் ஆதியிலிருந்தே ஆண்டவரோடு இருந்தான் அல்லவா..?

உங்களை அன்போடு திருத்த முயற்சிக்கும் எல்லாரையும் தூக்கியெறிவதுபோல என்னையும் நீங்கள் தூக்கியெறிவதற்கு முன் அண்மையில் உங்கள் தளத்தில் பதிக்கப்பட்டுள்ள இரண்டு பொய்களை இங்கே குறிப்பிடுகிறேன்; ஒன்று யெப்தா சம்பந்தமாக எட்வின் கூறியது; வேதம் நேரடியாகச் சொல்லாததை அப்படியே விடுவதற்கு உங்களுக்கு தாழ்மையில்லாத காரணத்தால் யெப்தா தன் மகளை பலிகொடுத்தான் என்று துணிகரமாக அறிவிக்கிறீர்கள்; ஆபேலைக் குறித்தும் ஈசாக்கை பலிகொடுக்க முயற்சித்த ஆபிரகாமைக் குறித்தும் எழுதியுள்ள எபிரேய ஆக்கியோன் யெப்தாவைக் குறித்து ஏன் (வேதம் முழுவதுமே...) எதுவும் சொல்லவில்லை என்று யோசிக்க உங்களுக்கு நேரமில்லை போலும்.

அதேபோல ஆதியாகமத்தின் முதல் அதிகாரம் வேறு இரண்டாம் அதிகாரத்தின் காரியங்கள் வேறு என்பது; கிறிஸ்தவத்தைத் தவிர வேறெந்த மார்க்கத்திலும் இதுபோல துணிகரமாக கருத்துகூறும் சுதந்தரம் இல்லை என்பது உங்களுக்கு வசதியாகிவிட்டது போலும்.



__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 233
Date:
Permalink  
 

Bro.HMV:

//ஆபேலைக் குறித்தும் ஈசாக்கை பலிகொடுக்க முயற்சித்த ஆபிரகாமைக் குறித்தும் எழுதியுள்ள எபிரேய ஆக்கியோன் யெப்தாவைக் குறித்து ஏன் (வேதம் முழுவதுமே...) எதுவும் சொல்லவில்லை என்று யோசிக்க உங்களுக்கு நேரமில்லை போலும்.//

Bro.HMV அவர்களின் கவனத்திற்கு:

எபிரெயர் 11:32 பின்னும் நான் என்ன சொல்லுவேன்? கிதியோன், பாராக், சிம்சோன், யெப்தா, தாவீது, சாமுவேல் என்பவர்களையும், தீர்க்கதரிசிகளையுங்குறித்து நான் விவரஞ்சொல்லவேண்டுமானால் காலம் போதாது.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
Permalink  
 

 

நீயாயாதிபதிகள் : 11 

 

39.  இரண்டுமாதம் முடிந்தபின்பு, தன் தகப்பனிடத்திற்குத் திரும்பிவந்தாள்; அப்பொழுது அவன் பண்ணியிருந்த தன் பொருத்தனையின்படி அவளுக்குச் செய்தான்; அவள் புருஷனை அறியாதிருந்தாள்

 

 

அவன் பண்ணியிருந்த பொருத்தனை படியே அவளுக்கு செய்தான் என்று வசம் தெளிவாய் சொல்லுயுள்ள கருத்தையே ஏற்க மறுக்கின்றார்கள்

 

 

 

நீங்கள் எபிரெயரில் ஒரு வார்த்தை யெப்தா என்று சொல்லி 

சுட்டிகாட்டியவுடன் அவர்கள் நம்பியாவிட

போகின்றார்கள் அதற்கும் ஒரு கருத்தை வைத்து இருப்பார்கள்   



__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)



நமது நண்பர்

Status: Offline
Posts: 146
Date:
முகாந்திரமில்லாமல் குற்றம் சொல்பவர்கள் கவனத்திற்கு!
Permalink  
 


HMV wrote ....
-------------------------------------------------------------------
அது எப்படி ஐயா இத்தனை துணிகரமாக பொய் சொல்ல உங்களுக்கு தைரியம் வருகிறது? அதுவும் கர்த்தருடைய காரியத்தில்..? வசனத்தை மட்டுமா புரட்டுகிறீர்கள், வேதத்தின் முதல் அதிகாரத்தையே புரட்டுகிறீர்களே...
--------------------------------------------------------------------
நண்பரே எந்த இடத்தில சுந்தர் பொய் சொல்லி இருக்கிரறேன்றும் உண்மை எதுவென்றும் தாங்கள் எதை வைத்து தீர்மானிகிறீர்கள்.....?

HMV wrote ....
--------------------------------------------------------------------
ஆண்டவருக்குப் பக்கத்திலேயே இருந்து பார்த்ததுபோல பொய்களை எழுதுகிறீர்கள்; ஆமா,சாத்தான் ஆதியிலிருந்தே ஆண்டவரோடு இருந்தான் அல்லவா..?
--------------------------------------------------------------------
நண்பரே தாங்கள் இவ்வளோ தெளிவாக சொல்லுவதை பார்த்தல் சுந்தர் ஆண்டவர் பக்கத்திலே உட்கார்ந்து இருந்ததை நீங்கள் அவருக்கு அருகில் இருந்து பார்த்தது போலவே சொல்லுகிறீர்கள்...உண்மையாக இருக்குமோ....

HMV wrote ....
--------------------------------------------------------------------
உங்களை அன்போடு திருத்த முயற்சிக்கும் எல்லாரையும் தூக்கியெறிவதுபோல என்னையும் நீங்கள் தூக்கியெறிவதற்கு முன் அண்மையில் உங்கள் தளத்தில் பதிக்கப்பட்டுள்ள இரண்டு பொய்களை இங்கே குறிப்பிடுகிறேன்;
-------------------------------------------------------------------
நண்பரே எனக்கு தெரிந்தவரை இந்த தளத்தில் யாரும் யாரையும் தூக்கி எறிந்ததாக தெரியவில்லை...
ஆனால் மற்ற தளத்தில் உள்ளவர்களால் இத்தளத்தில் உள்ளவர்கள் தூக்கியெறியப்பட்டு இருக்கிறார்கள்.

HMV wrote ....
-------------------------------------------------------------------
ஒன்று யெப்தா சம்பந்தமாக எட்வின் கூறியது; வேதம் நேரடியாகச் சொல்லாததை அப்படியே விடுவதற்கு உங்களுக்கு தாழ்மையில்லாத காரணத்தால் யெப்தா தன் மகளை பலிகொடுத்தான் என்று துணிகரமாக அறிவிக்கிறீர்கள்;
-------------------------------------------------------------------
நண்பரே இங்கு வசனம் சொல்லுவதை சற்று நிதானமாக கவனிக்கவும்.......

நீயாயாதிபதிகள் : 11

39. இரண்டுமாதம் முடிந்தபின்பு, தன் தகப்பனிடத்திற்குத் திரும்பிவந்தாள்; அப்பொழுது அவன் பண்ணியிருந்த தன் பொருத்தனையின்படி அவளுக்குச் செய்தான்; அவள் புருஷனை அறியாதிருந்தாள்

அவன் தான் பண்ணியிருந்த தன் பொருத்தனையின்படி அவளுக்குச் செய்தான் என்று வேதாம் கூறியுள்ளது...

ஒரவேளை அவன் மாற்றி செய்திருந்தால் அதையும் அல்லவா.......சொல்லப்பட்டு இருக்கலாம்.....அவன் தன நாவினால் சொன்னதை

அப்படியே நிறைவேற்றினான் என்றுதானே பொருள்.....



-- Edited by Stephen on Friday 14th of October 2011 09:03:52 PM

__________________

கற்பனையைக் கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும் அறியான். (பிரசங்கி 8 :5 ) 


வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
Permalink  
 

 Hmv  wrote  :
____________________________________________________________
அது எப்படி ஐயா இத்தனை துணிகரமாக பொய் சொல்ல உங்களுக்கு தைரியம் வருகிறது? அதுவும் கர்த்தருடைய காரியத்தில்..?
வசனத்தை மட்டுமா புரட்டுகிறீர்கள், வேதத்தின் முதல் அதிகாரத்தையே புரட்டுகிறீர்களே 
____________________________________________________________
 
 
 
 
தேவை இல்லாத வார்த்தைகளை எழுதி மனகஷ்டத்தையும் கோபத்தையும் ஏற்படுத்துகிறீர்கள்  நண்பரே ஆனாலும்  உங்களை போன்றவர்களை  தான்
எல்லோருக்கும் பிடிக்கின்றது
 
 
 
 
தேவனுக்கு பயந்து வீணான வார்த்தையோ  தரம் கட்ட வார்த்தையோ பேச  
கூடாது என்று நாங்கள் எங்கள் நாவை  அடக்கினால் நாங்கள்  எல்லோருக்கும்
கட்டவர்களாய் தெரிகின்றோம் ஏனென்றால் இப்படி செய்கின்றவர்கள் சொல்லுகின்றவர்கள்
எல்லாம் கள்ள போதகர்கள்.....


-- Edited by EDWIN SUDHAKAR on Friday 14th of October 2011 09:22:55 PM

__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)

HMV


இனியவர்

Status: Offline
Posts: 53
Date:
RE: முகாந்திரமில்லாமல் குற்றம் சொல்பவர்கள் கவனத்திற்கு!
Permalink  
 


நண்பர்களே நானும் இங்கே நட்பு நாடியே வந்திருக்கிறேன், ஆனால் உங்களுடைய நூதனமான உபதேசங்களும் விளக்கங்களும் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

திரு.அன்பு அவர்களே, நீங்கள் யெப்தா என்ற பெயர் எபிரேய புத்தகத்தில் இருப்பதாகக் கூறியது ரொம்ப சந்தோஷம், யெப்தாவின் பெயர் பராக்கிரமசாலிகள் வரிசையில் வருகிறதே தவிர யெப்தா தன் மகளை பலிகொடுத்தார் என்று இருக்கிறதா? சாலமோன் பெயர் இல்லாததால் அவர் நரகத்திலேயே இருப்பார் என்று சிலர் சொல்லுகிறார்களே அது குறித்தும் கொஞ்சம் யோசியுங்கள்; "யெப்தா தன் மகளை பலி கொடுத்தார்" என்ற வசனத்தை நண்பர்கள் யாராவது சுட்டிக்காட்டினால் நான் மகிழ்ச்சியடைவேன்; மேலும் ஆதியாகமம் முதலாம் அதிகாரத்தின் படைப்பும் இரண்டாம் அதிகாரத்தின் படைப்பும் வெவ்வேறானது என்பதையும் நிரூபிக்க வேண்டுகிறேன்.. இதுபோல வேதத்துக்கு சொந்த விளக்கங்களைத் தருவதற்கான உரிமையை எங்கே பெற்றீர்கள்,ஐயா..? உங்களிடம் விளக்கம் கேட்டால் சந்தேகம் கேட்கும் என்னிடமே கேள்வியை திருப்புவது ஏமாற்றமளிக்கிறது.



__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 233
Date:
முகாந்திரமில்லாமல் குற்றம் சொல்பவர்கள் கவனத்திற்கு!
Permalink  
 


யெப்தாவின் பொருத்தனைக்கும் இத்திரிக்கும் சம்பந்தமில்லை என்பதால், யெப்தாவின் பொருத்தனை பற்றிய எனது கருத்தை பின்வரும் திரியில் கூறியுள்ளேன்.

யெப்தாவின் மகளுடைய பலியும் கர்த்தரின் மௌமும்

இத்தொடுப்பைச் சொடுக்கி எனது கருத்தை அறிந்துகொள்ள வேண்டுகிறேன்.



-- Edited by anbu57 on Saturday 15th of October 2011 08:57:20 AM

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

SUNDAR WROTE:-
//யெப்தா காரியம் குறித்து ஆண்டவரிடம் விசாரித்து ஒரு முடிவுக்கு வரமுடியாமல் இருந்த காரணத்தால் நான் இதுவரை ஒரு முடிவான கருத்து எதையும் தெரிவிக்க வில்லை. . //
 
சகோ:  JOHN WROTE
This is funny :) . Bro. Sunder, I thank God that your god didn't advise you to tell your friends to follow jeptha! . You are still living in old testament time making yourself standing between God and man. I will come back soon to discuss your bible heresies in this forum /////

சகோ. ஜான் அவர்களே இந்த தளத்தில் எங்கும் நான் மனிதனுக்கும் தேவனுக்கும் மத்தியஸ்தன் என்பதுபோல் எழுதவில்லை அப்படி எங்கும் எழுதியிருந்தால் சுட்டி காண்பிக்கவும் நான் மாற்றிகொள்கிறேன். மாறாக என்னைக்கூட நீங்கள் நம்ப வேண்டாம் தேவனிடம் நேரடி தொடர்பு ஏற்ப்படுத்தி கொள்ளுங்கள் என்று அனேக இடங்களில் நான் எழுதியிருக்கிறேன்.
 
என் மீது ஏதாவது குற்றம் சொல்லவேண்டும் என்ற எண்ணத்தில் மும்முரமாக  இருப்பவர்களுக்கு கண்ணில் பட்டது எல்லாம் குறையாகதான் இருக்கும்.  குறை சொல்வதில் தவறில்லை ஆனால்  நியாயமான குறையாக சொல்லுங்கள். யெப்தா பலியிடவில்லை என்பதற்கு சரியான எந்த ஆதாரமும் கிடையாது அவன் பலியிட்டான் என்று சொல்வதற்கு எந்த ஆதாரமும் கிடையாது என்பதனாலேயே எனக்கு தேவனிடம் விசாரித்து வசன அடிப்படயில் ஒரு முடிவுக்கு வரமுடிய வில்லை.
 
நான் இந்த கருத்துக்கு எந்த பதிலும் கொடுப்பதற்கு முன்னே சகோ. HMV   "யெப்தா பலியிட்டான்" என்று நான்  சொன்னதாக பொய்யாக ஒரு  குற்றத்தை சுமத்துகிறார். அதை  மறுத்து  இல்லை நான் ஒரு முடிவுக்கே வரவில்லை என்று மறுப்பு கூறினால் நீங்கள் வந்து "நான் தேவனுக்கும் மனுஷனுக்கும் இடையில் மத்தியஸ்தம்  பண்ணுகிறேன்" என்று குற்றம் சாட்டுகிறீர்கள்.
 
வேதத்தில் நமக்கு புரியாத ஒருகாரியத்தை பற்றி ஒருவர் கேட்கும்போது தேவனிடம் அது குறித்து விசாரித்து எழுதுவது தவறுபோல் எனக்கு தெரிய வில்லை சகோதரரே. எவரோ வெளிநாட்டுக்காரர் எழுதிய வியாக்கீனத்தை எல்லாம் அப்படியே ஏற்றுக்கொள்ள மனமிருக்கும் உங்களுக்கு ஒரு காரியத்தை தேவனிடத்தில் விசாரித்தேன் என்பதை ஏற்றுக்கொள்ள மனதில்லாமல் இருப்பது ஆச்சரியமே. "என்னை கேள்" என்று சொல்லியிருக்கும் தேவன் பதில்தருவார் என்ற விசுவாசம் இல்லாமையே அதற்க்கு காரணம்! அதை அவிசுவாசத்தை   என்மீது ஏன் திணிக்க பார்க்கிறீர்கள் என்பது புரியவில்லை.  
 
முதலில் சாத்தான் பற்றிய  உங்கள் கருத்து சாத்தான் நியாயம் தீர்க்கபட்டது எப்போது?  எங்கிருந்து வந்தது அல்லது எந்த வெளிநாட்டுக்காரர் சொன்னது என்பதற்கு  சரியான விளக்கத்தை தாருங்கள் மற்ற கருத்துக்களை அப்புறம் பார்க்கலாம். 
 
நீங்களெல்லாம் தேவனை எவ்வளவு நேசிக்கிறீர்கள் அவரது வல்லமையை எவ்வளவாய் அறிந்திருக்கிறீர்கள் என்பது எனக்கு தெரியும்.  உங்கள் மன எண்ணமும் எனக்கு புரியும்! என்னை விட இவன் பெரியவனா?  நான் அறிந்து ள்ளதைவிட இவன் அதிகமாக அறிந்துகொண்டு விட்டானா?  இவன் சொல்வதை நாம் கேட்கப்வேண்டுமா? என்ற எண்ணமே இவாறேல்லாம் எழுத தூண்டுகிறது என்று கருதுகிறேன்.  உங்கள் போன்ற ஏற்கெனவே மூளை நிறைய வேதஅறிவை வைத்திருப்பவர்களை நாம் நம்பசொல்லவில்லை சகோதரரே. ஒரு குழந்தையை  போல ஒரு பாலகனைபோல இருப்பவர்கள் மாத்திரம் இதை படித்தால் போதும்.       ஏனெனில் தேவனின் ராஜ்ஜியம் அப்படிபட்டவர்களுடயதே!  
 
 
நான் சொல்வதை நம்பவும் மாட்டீர்கள்  நான் கேட்கும் கேள்விகளுக்கு பதிலும் தரமாட்டீர்கள்.  எவராது கொடுத்த வியாக்கீனத்தை ஏற்றுக்கொண்டு  சும்மா வார்த்தையை புரட்டி அதுஅப்படியல்ல இப்படி என்று அடித்து  சொல்வீர்கள்! அதை நான் நம்பவேண்டுமா? 
 
சபை பாஸ்டரில் இருந்து சாமான்ய மனுஷன்வரை எல்லோரையும் பேயாக  பிசாசின் ஆவியால் பீடிக்கபட்ட்வர்களாக என்கண்ணாலேயே பார்த்திருப்பதால், எதையம் தேவனிடம் விசாரிக்காமல்  நீங்கள் சொல்வதை நாம் நம்ப வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை.  
 
நான் திரித்துவத்துக்கு எதிரானவன் அல்ல, ஆண்டவாகிய இயேசுவை தூதர் என்ற நிலைக்கு தாழ்த்துகிறவன் அல்ல, பரலோகம் நரகம் இல்லை என்று மறுப்பவனும் அல்ல, ஆத்துமா என்பது இல்லை என்று சொல்பவனும் அல்ல, அபூர்வ காரியங்களை எழுதி பணம் சம்பாதிக்கும் நோக்கமும் எனக்கு இல்லை ஆனால், ஆதியில் நடந்த  சில கருகலான காரியங்களை  குறித்து தேவனிடம் அதிகமாக வாஞ்சையுடன் விசாரித்து அதுகுறித்து வெளிப்பாடு  பெற்றவன். கிறிஸ்த்தவத்தின்  எந்த கொள்கைக்கும் பங்கம் வராத அளவிலேயே அவைகளை இங்கு பதிவிடுகிறேன்.
 
நான் அறிந்தவைகளை இங்கு எழுதிவைக்க எனக்கு உரிமை இருக்கிறது! என்னை பற்றி முகாந்திரமில்லாமல் குற்றம் சொல்லாமல் நான் எழுதும் கருத்துக்களில் அடிப்படயில் என்ன தவறு இருக்கிறது, அது தவறு என்று நீங்கள் எவ்வாறு அறிந்தீர்கள், அது விசுவாசிகளை எவ்வாறு பாதிக்கும் என்பதை மாத்திரம் சொல்லுங்கள். மற்றபடி தேவையற்ற விமர்சனம் இங்கு வேண்டாம். தவறு இருக்கும் பட்சத்தில் நான் திருத்தி கொள்கிறேன்.  மடபடி என் தளத்தில் உள்ள எழுத்துக்களம் யாருக்கும் எந்த இடறலும் வராது என்பதை கர்த்தருக்குள் நான் நிச்சயித்திருக்கிறேன். அப்படி இடரலுண்டாக்கும் கருத்து இருந்தால் தேவன் எனக்கு நிச்சயம் சுட்டிகாட்டி நீக்க கட்டளையிடுவார் என்பது எனக்கு தெரியும். 
 
இந்த தளத்துக்கு  உண்மையான எதிரி எந்த மனுஷனும் அல்ல! அசுத்த ஆவிகளுடன் சேர்ந்து அனைவரையும் ஆட்டிபடைக்கும்  சாத்தான் ஒருவனே! ஆண்டவர் "என் வார்த்தையை கைகொள்ளுங்கள்" என்று திரும்ப  திரும்ப சொல்வதன் ரகசியத்தை அறிந்து. யாரும்  தேவனின் வார்த்தையின்படி சரியாக வாழ்ந்து தன்னை ஜெயம்கொண்டுவிடகூடாது என்பதில் விழிப்பாய் இருந்து உண்மையை உலகுக்கு அறியவிடாமல்  தடுத்து வருகிறான்.  ஆனால் ஆண்டவரை அறிந்துகொண்ட மனுஷனோ பித்தம் கொண்டவனாய் சாத்தனுடன் சமாதானம் செய்து கொண்டு சாவுக்கு சேவை செய்து சவம்போல் பணிந்து கிடக்கிறான்.  எல்லோரும் இப்படி அடிமையாய் கிடக்க இவனுக்கு மட்டும் என்ன வந்ததென்று 
எக்காளத்தில் என்னையும் எத்தனையோ முறை எத்தனையோ வழிகளில் அசைத்து பார்க்கிறார்! 
 
உலகத்தில் இருக்கும் அவனைவிட எனக்குள் இருக்கும் தேவன் பெரியவர் அல்லவா? எனவே இடறி வெட்கப்பட்டு போகிறான்!
 
எரேமியா 1:19 அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தம்பண்ணுவார்கள்; ஆனாலும் உன்னை மேற்கொள்ளமாட்டார்கள்; உன்னை இரட்சிக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
 
இது தேவன் எனக்காகவே சொல்லிய வார்த்தை


-- Edited by SUNDAR on Monday 17th of October 2011 11:42:12 AM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard