எல்லாம் வல்ல, உள்ள, பொருள். அண்டத்தின் மூலக் காரணமே இது தான். ஆகாசம், வாயு, அக்னி, ப்ருத்வி, நீர் எல்லாமே இதிலிருந்து வந்தவை
(அக்னி புரா-377). இதை " கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்." என்பர்.
இது காலம்,அண்டங்களை கடந்தது. ஸத்(உண்மை), சித்(அறிவு), ஆனந்தம்- மூன்றுமே இதனுடைய தன்மைகள். ரிக் வேதம் கூறுகிறது;;
அஸ்திதித்வம்(Non Existence), ஸ்திதித்வம் இரண்டும் ஆரம்ப நிலையில் கிடையாது. இதுவே இருந்தது. இதன் இரண்டு பிரிவுகள்-- பரப்ரம்மன், அபரப்ரம்மன். முதலாவது (அம்ருத) அருவமானது, இரண்டாவது (ம்ருத)ரூபம் உடையது.
உலகம் அபரப்ரம்மன். முதலாவது நிர்குணப்ரம்மன். இதை பற்றி விரிவாக உபநிஷத்துக்கள் விளக்குகின்றன.
இதை பார்க்க முடியாதது, வர்ணிக்க முடியாதது,எண்ண முடியாதது,புரியாதது, என நூல்கள் கூறுகின்றன.........
__________________
காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)
1. ஸ்ருஷ்டிக்கு முன்னால் நான் ஒருவனே இருந்தேன்;;வேறு ஒன்றுமில்லை!!! என்னை அப்போது "பரப்ரம்மம்,சித்ஸ்வரூபி, ஆத்மரூபி, ஸம்விதஸ்வரூபி என்றெல்லாம் அழைப்பர்;
2. அந்த நிலையை விவரிக்க முடியாது(அநிர்தேஸ்யம்),விவாதங்களுக்கு அப்பாற்பட்டது(அபரதர்க்யம்), எதனுடன் சரிபார்க்கமுடியாதது(அநௌபம்யம்), பிறப்பு, யவனம்,மூப்பு,இறப்பு(அநாமயம்)இவைகளுக்கும் அப்பாற்பட்டது;;இந்த எனது ரூபத்தில் தான் "மாயா சக்தி" வாழ்கிறது;
3.இந்த மாயா சக்தியை இருப்பதென்றோ, இல்லையென்றோ கூறமுடியாது;;ஆக இருந்தும் இல்லாமலும் உள்ளது;; இதை மிக ஆராய்ந்தால் தவறான கருத்துகளும், ஏன் தவறே ஏற்படும்;;அது என்னிடம் இரு நோக்கோடு உள்ளது;;
4. சூடில்லாமல் நெருப்பில்லை; ஒளி இல்லாமல் சூரியனில்லை;; கிரணங்கள் இல்லாமல் சந்திரன் இல்லை;; இவைகளை போல் நானும் மாயாசக்தியும் ஒன்றுக்குள் ஒன்றாக உள்ளோம்;;இது நிரந்தரம்;
5. எப்படி எண்ணங்கள். செயல்கள், காலம் தூக்கத்தில் அடங்கியிருக்கிறதோ, அதே போல் ஜீவராசிகளின் செயல்கள் உணர்ச்சிகள் மாயையில் அடக்கம்;
6.மாயையின் மூலமே நான் தான்;;"ஆவர்ண" என்ற பூச்சால் என்னுடைய ஸ்வபாவம் மறைந்திருக்கும்;;
7. ப்ரம்மத்துடன்(சைதன்ய) சேர்ந்ததால் இம்மாயை,இந்த அண்டத்தின் பொருளாகவும், காரணமாகவும் ஆகிறது
8. இதை பலர் பலவிதமாக அழைப்பர்--தபஸ், தமஸ், ஜட, ஞான,மாயா,ப்ரதான,ப்ரக்ருதி, அஜா-அவற்றில் சில;;
9. இதை சைவ சித்தாந்தத்தில் "விமர்ஸ" என்வும்,வேத கால முனிவர்கள்"அவித்யா" எனவும் அழைப்பர்;
10. ஆக வேதங்கள் மாயையை பல பெயர்களில் அழைக்கிறது;;காண்பதால்"ஜட" என அழைக்கின்றனர்;; இது உண்மையான அறிவை அழிப்பதால்,"அஸத்" எனவும் அழைப்பர்;
12/13. சைதன்யத்திடம் ஒளி இல்லாமலிருந்தால், ஒளி பெற ஒரு சாதனம் தேவை;;சைதன்யத்திற்கு சுயம்ப்ரகாசமிலையென்றால் அது"அந்வஸ்தா தோஷம்" அடைகிறது;; அதாவது முடிவில்லாமை எனப் பொருள்;; ஆக அதற்கு ஒன்று ஒளி அளிக்கிறதென்றால், அந்த "அதற்கு" யார் ஒளி தருகிறார்கள் என தர்க்கம் சுற்றிக் கொண்டேயிருக்கும்;; ஒரே காலத்தில் ஒரு பொருள் செயலாகவும் ,செயற்படுபொருளாகவும் இருக்க முடியாது!! ஆகையால் மலைக்கரசரே!!! தெரிந்து கொள்ளுங்கள், சைதன்யம் சுயம்ப்ரகாசம் கொண்டது;; மற்றவைகளுக்கு ஒளி அளிக்கிறது;; ஆக சைதன்யம் நிரந்தரம்(Eternal);;
14. பார்க்கும் பொருட்கள் யாவும் கனவு,உறக்கம், விழீப்பு என மூன்று நிலகளுக்குட்பட்டது;ஆனால் சைதன்யத்திற்கு இயை யாவும் கிடையாது;
15. வாதத்திற்கு , சைதன்யம் மூன்று நிலைகளுக்குட்பட்டால் அதற்கு ஒரு சாட்சி தேவை;;சைதன்யம் சுயம்ப்ரகாசம் உடையது என நீரூபணம் ஆன பின் சாட்சி எத்ற்கு தேவை?;சாட்சி இருக்க முடியாது;;
16 மேற் கூறிய காரணங்களால் வேதாந்த விற்பன்னர்கள், சைதன்யத்தை நிரந்தரம் என்றும், இதுவே பக்திக்கு மூலம் என்றும் கூறுவர்;; இந்த அன்பின் வடிவத்தை"ஆனந்தரூபம்" என்பர்;;
17 "நானில்லை" என எந்த வாழும் ஜீவராசிகள் நினைப்பதில்லை;;எல்லாமே "நான், எனது", என்பதை பற்றி பெருமை கொள்கிறது!! இது ஒரு அன்பு வடிவமாக எல்லோரிடமும் உள்ளது;;இதுவே நான்,
18; என்னை பிரிக்க முடியாது என்பது ஸத்தியம்;; அறிவு என்பது ஆன்மாவின் பக்தி மாத்திரமல்லாமல் அதன் ஸ்வரூமமே;; அது ஒரு பகுதியாக இருந்தால் ஆன்மா ஒரு ஜடப் பொருளாக இருக்கவேண்டும்;;
19. ஜடத்தின் தொடர்பில்லாத ஆன்மாவை பிரிக்க முடியாது;;அது ஒரு நிலை, தத்துவம்;;
20. ஆக ஆன்மா ஞானஸ்வரூபம், சுகஸ்வரூபம்,ஸத்யஸ்வரூபம்;; இதற்கு எதனுடனும் தொடர்பு கிடையாது; இருமையும் (Duality) கிடையாது;
21/22/23/24/25. பூர்வ வாசனையினால் உந்தப்பட்ட மாயாசக்தி, 24 தத்துவங்கள் கொண்டு இந்த அண்டத்தை உருவாக்கி;; சாஸ்திரங்கள் யாவும் என் நிலையை(பொருளற்ற, அரூபமான) போற்றுகின்றன;; இந்நிலையே காரணங்களுக்கு காரணமகவும்,தத்துவங்களுக்கு மூலமாகவும் உள்ளது;; இதுவே அறிவு, செயல்,(Knowledge,action,volition) போன்றவைகளுக்கு மூலம்;;இதை "ஹ்ரீம்" கார மந்திரத்தின் மூலம் உணர முடியும்;; 26/27/28/29/30. இந்த மூலத்திலிருந்து பஞ்சபூதங்கள் உருவாயின;;ஒலி ஸ்வரூபம்--ஆகாசம்; ஒலி,ஸ்பரிசம்--வாயு;; ஒலி,ஸ்பரிசம்,ரூபம்--அக்னி;;ஒலி,ஸ்பரிசம்,ரூபம்,சுவை--நீர்;;ஒலி,ஸ்பரிசம்,ரூபம்,சுவை, மணம்--பூமி;; இந்த ஐந்து தன்மாத்ரைகளிலிருந்து தான் லிங்கஸ்வரூபம் அல்லது சூக்ஷம சரீரம் உருவாகிறது;;
31/32. இந்த அண்டம், இந்த பஞ்ச பூதங்களில் பீஜ ரூபத்திலுள்ளது;; பஞ்சீகிரண என்ற வழிப்படி இந்த ஐந்தும் இரண்டாக பிளவுபடுகின்றன;; ஆக இந்த பத்து பிளவுகளிலிருந்து தான் எல்லாமே உருவாகின்றன;;
33. ஒவ்வொரு பஞ்சபூதங்களின் பாதியும், மறுபடியும் நான்காக பிரிகின்றன;;அந்த 1/8(அரைக்கால்) பாகங்கள் மற்ற அரை பாகங்களுடன் சேர்ந்து,கலந்து ஸ்தூல சரீரங்கள் உருவாகின்றன;;
34. விராட ரூபமென்பது ஸ்துலசரீரங்களின் மொத்த உருவம்!! மெல்லிய பாகங்கள் (காது போன்றவை, உள் மனசு) இந்த பிரிவுகளின் மென்மையான பாகங்களிலிருந்து வெளிப்படுகின்றன;;
35/36/37. இந்நிலைகளின் வேறுபாட்டால் "அந்தகரணம்" நான்கு நிலைகளை பெறுகிறது;; சந்தேகம்,எண்ணங்கள் எழும் போது "மனம்";;; சந்தேகமின்மையால், அதாவது நிச்சியத்துவத்தால்"புத்தி"; ஒன்றையே திருப்பி திருப்பி ஆராய்ந்தால் அது"சித்தம்";; நான் என்ற நினைப்பே"அஹம்காரம்";;ஆக நான்கு நிலைகள்;;
38/39. கரடு முரடான "ரஜஸ்" என்ற நிலையிலிருந்து ஐந்து உணர்ச்சிகளும் அதன் சம்பந்தமான உருப்புகளும் உருவாகின்றன;;அவை--வாய், கைகால், மரபு அணுக்கள் உருவாகும் உறுப்பு, கழிவு உறுப்புகள்;;பிறகு அதிலிருந்தே ஐந்து வகை மூச்சுகள்--ப்ரான(இதயம்),அபான(ஆசனவாய்),ஸமான(தொப்புள்),வ்யான(உடல் முழுதும்),உதான(தொண்டை) உருவாகின்றன;;
40/41/42. ஐந்தறிவு(ஞாநேந்திரியங்கள்), ஐந்து செயல்கள்(கர்மேந்திரியங்கள்), ஐந்து வாயுக்கள், மனம், புத்தி, இவை யாவும் கலந்த 17 தத்துவங்களை உடலில் அடக்கியுள்ளது;; இதுவே சூக்ஷம் சரீரம்(நமது உடல்), என்றும் இதனுடைய இயற்கை நிலை (ப்ரக்ருதி) இரு வகைபடும்--மாயை, அவித்யா;;அவித்யா குணங்கள் நிறைந்தது;;
43/44. இந்த மாயையில் வெளிப்படும் ப்ரம்ம சைதன்யமே "ஈஸ்வரன்";; இதுவே ஆன்மா;; முழுமை பெற்றது;; எல்லாவற்றையும் உருவாக்குகிறது;;எங்கும் வ்யாபித்திருப்பது; ஆன்மா சிறிது அவித்யாவிலும் தென்படலாம்;;
45/46/47/48/49. இந்த ஜீவன் துக்கங்களின் உறைவிடம்;;வித்யா, அவித்யாவினால் மூன்று விதமான சரீரங்கள் உருவாகுகின்றன;;அவை--பொருள் மீது மோகம், பொருள் இருப்பதால் கர்வம்-- இதை விஸ்வ என்பர்;;சூக்ஷமத்திற்கு அல்லது உடலுக்கு தனித்துவம் அளிப்பது--தைஜஸ என்பர்;; உடல் கூறை அறிந்தவை--ப்ராக்ஞா என்பர்;; இந்த ஜீவனுக்கு தனிஸ்வரூபமுள்ளது--வ்யஸ்திரூப;; ஆனால் ஈஸ்வரனோ--ஸமஸ்த்யாத்மகன்--அதாவது அவன் ஜீவனுக்கெல்லாம் ஜீவன், அல்லது ஜீவனுள் ஜீவன்!!!;
__________________
காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)
சகோ. எட்வின் அவர்களே இந்து மதத்தின் தத்துவங்கள் என்பது தோல்வியடைந்துபோன ஓன்று! அதனால்தான் அம்மதத்தில் இருக்கும் ஜனங்கள் மனம்திரும்பவேண்டும் இயேசுவை தங்கள் சொந்த ரட்சகராக ஏற்க்கவேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிறார்.இந்நிலையில் அவைகளை பற்றி இங்கு தியானிப்பதால் எந்த பயனும் இல்லை என்றே கருதுகிறேன். தேவர்கள் எல்லாம் பாவத்தில் வீழ்ந்து போனவர்கள் என்று ஏற்கெனவே நாம் பார்த்தோம், நமது கர்த்தரோ எல்லா தேவர்களிலும் மேலானவர் என்றும் வசனம் சொல்கிறது! எனவே மாற்றுதேவர்கள் பற்றிய இந்த கருத்துக்களை இங்கு நாம் ஆராய்வது நமக்கு அவசியமா?
மனுஷனின் இரட்சிப்புக்கு நேரான வழி காட்டுவதொடு ஒன்றான மெய் தேவன் பற்றிய அனைத்து செய்திகளும் நமது பரிசுத்த வேதாகமத்திலேயே இருக்கிறது. அடைக்கபட்டுபோன மற்ற வழிகளை விட்டுவிட்டு வேதாமம் என்னும் ஒரே வழியில் போகுதலே சிறந்தது என்று கருதுகிறேன். எனவே மற்ற புத்தகங்களையும் மாற்று மதத்தவர்கள்எழுதும் கருத்துக்களையும் ஆராய்வதைவிட வேதாகமத்தை
அதிக அக்கறையுடன் படித்து அதிகமதிகமாக தியானித்தால் அனைத்து உண்மை களையும் அறிந்துகொள்ளலாம்.
அத்தோடு இரவும் பகலும் வேத வார்த்தைகள்மேல் தியானமாய் இருக்கிறவர்கள் தான் பாக்கியவான்கள் என்று வேதம் சொல்கிறது!
-- Edited by SUNDAR on Tuesday 18th of October 2011 03:38:38 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
இதை குறித்து அவர் முன்பே எழுதிவிட்டார் இருந்தாலும் நீங்கள் ஏதாவது குறை கூற வேண்டும் அல்லவா அதினால் அவர் முன்பு எழுதிய பதிவை கிழே கொடுக்கின்றேன் வாசித்து உங்கள் ஊழியத்தை நிறைவேற்றுங்கள்
பொறுமையாக வாசியுங்கள் இதை நீங்கள் புரிந்து கொள்ள கேட்கவில்லை என்பது எனக்கு தெரியும் இந்த தலைப்பில் எந்த வார்த்தையை வைத்து சுந்தரை குறை கூறலாம் என்பது உங்கள் என்னாமாய் இருக்கும் பொறுமையாய் வாசிங்க இந்த பதிவில்உங்களுக்கு அதிகமாய்
கிடைக்கும்...................
-- Edited by EDWIN SUDHAKAR on Wednesday 19th of October 2011 04:27:39 PM
__________________
காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)
//பொறுமையாக வாசியுங்கள் இதை நீங்கள் புரிந்து கொள்ள கேட்கவில்லை என்பது எனக்கு தெரியும் இந்த தலைப்பில் எந்த வார்த்தையை வைத்து சுந்தரை குறை கூறலாம் என்பது உங்கள் என்னாமாய் இருக்கும் பொறுமையாய் வாசிங்க இந்த பதிவில்உங்களுக்கு அதிகமாய் கிடைக்கும்................... //
உணர்ச்சி வசப்படதீர்கள் நண்பரே. திரு. சுந்தர் அவர்களை நான் ஒன்றும் தரக்குறைவாக பேசவில்லையே! கருத்துக்களுக்கு வசனம் ஆதாரம் கேட்பது எந்த விதத்தில் தவறு என்று விளக்குவீர்களா?