கடந்த நாட்களில் பல காரியங்களை என்னுடய மனதில் போட்டு குழப்பி கொண்டிருந்தபோது ஆணடவர் முக்கியமான சில வசனங்கள் மூலம் எனக்கு சில உண்மைகளை உணர்த்தினார் அதில் மிகவும் முக்கியமனது " நீ பயப்படாமல் இரு" என்பதே!
எசேக்கியேல் 3:9உன் நெற்றியை வச்சிரக்கல்லைப்போலாக்கினேன், கன்மலையைப் பார்க்கிலும் கெட்டியாக்கினேன்; அவர்கள் கலகமுள்ள வீட்டாரென்று நீ அவர்களுக்குப் பயப்படாமலும் அவர்கள் முகங்களுக்குக் கலங்காமலும் இரு என்றார்.
நீ கலங்கினால் அல்லது பயந்தால் அவர்களால் தோற்கடிக்க பட கூடும் என்றும் திட்டமாய் எச்சரித்தார்!
ஏசாயா 51:7 நீதியை அறிந்தவர்களே, என் வேதத்தை இருதயத்தில் பதித்திருக்கிற ஜனங்களே, எனக்குச் செவிகொடுங்கள்; மனுஷரின் நிந்தனைக்குப் பயப்படாலும், அவர்கள் தூஷணங்களால் கலங்காமலும் இருங்கள்.
தேவனின் வார்த்தைகளை சொல்லும் ஒரு மனுஷனுக்கு இருக்கவேண்டிய முதல் தகுதி என்று வேதம் குறிப்பிடுவது எதற்கும் பயப்படாத ஒரு நிலையே. மனுஷர்களுக்கும் மற்றவர்களுக்கும் பயந்த ஒருவர் ஒருநாளும் தேவனின் வார்த்தைகளை உரத்து பேசிவிட முடியாது. தேவன் சொல்லாத வார்த்தைகளை
பேசும் அரசியல்வாதிகளே எதற்கும் பயப்படாமல் துணிந்து உலக காரியங்களை பேசும்போது தேவனின் வார்த்தைகளை சொல்லும் நாம் எதற்கும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.
தன்னுடய வார்த்தைகளை வாயில் வைத்த எசேக்கியேலுக்கு தேவன் இவ்வாறு கட்டளையிடுகிறார்:
எசேக்கியேல் 2:6மனுபுத்திரனே; நீ அவர்களுக்குப் பயப்படவேண்டாம்; அவர்கள் வார்த்தைகளுக்கும் அஞ்சவேண்டாம்; நெரிஞ்சில்களுக்குள்ளும் முள்ளுகளுக்குள்ளும் நீ தங்கியிருந்தாலும், நீ அவர்கள் வார்த்தைகளுக்குப் பயப்படாமலும் அவர்கள் முகத்துக்குக் கலங்காமலுமிரு; அவர்கள் கலகவீட்டார்.
இங்கு தேவன் புறஜாதி ஜனங்களை பற்றி இந்த வார்த்தை கூறவில்லை. தான் ஜனமாகிய இஸ்ரவேலரை குறித்தே இவ்வாறு கலக வீட்டார் என்று குறிப்பிடு கிறார். காரணம் பொதுவாக அனேக தீர்க்கதரிசிகளுக்கு புறஜாதிகாரர்களால் எந்த பாதிப்பும் வராது! தன் ஜனங்களுக்கு உள்ளேதான் அதிகமாக எதிர்ப்பு இருக்கும். ஆண்டவராகிய இயேசுவை சிலுவையில் அறைந்ததுகூட எந்த புரஜாதிகாரரும் கிடையாது அவரது சொந்த ஜனங்களே அவரை சிலுவையில் அறைந்தார்கள்.
ஆகினும் இவர்களது முகங்களுக்கு பயப்படகூடாது என்று கர்த்தார் திட்டமாக
கூறுகிறார். பயந்துபோனால் தீயவர்கள் நமை மேற்கொண்டு விடுவர்கள் என்றும்,
அவ்வாறு பயந்துபோய் ஓடிய ஒரு தீர்க்கதரிசியின் முடிவையும் எனக்கு காண்பித்தார்:
எரேமியா 26:20. கீரியாத்யாரீம் ஊரானாகிய செமாயாவின் குமாரன் உரியா என்னும் ஒரு மனுஷனும் கர்த்தருடைய நாமத்திலே தீர்க்கதரிசனம் சொல்லுகிறவனாயிருந்தான்; அவன் எரேமியாவின் வார்த்தைகளுக்குச் சரியாக இந்த நகரத்துக்கும் இந்த தேசத்துக்கும் விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொன்னான்.
21. யோயாக்கீம் ராஜாவும் அவனுடைய சகல பராக்கிரமசாலிகளும் பிரபுக்களும் அவன் வார்த்தைகளைக் கேட்டபோது, ராஜா அவனைக் கொன்றுபோடும்படி எத்தனித்தான்; அதை உரியா கேட்டு,பயந்து, ஓடிப்போய், எகிப்திலே சேர்ந்தான்.
22. அப்பொழுது யோயாக்கீம்ராஜா அக்போரின் குமாரனாகிய எல்நாத்தானையும் அவனோடேகூட வேறே சிலரையும் எகிப்துவரைக்கும் அனுப்பினான் 23 இவர்கள் உரியாவை எகிப்திலிருந்து கொண்டுவந்து, அவனை யோயாக்கீம் ராஜாவினிடத்தில் விட்டார்கள்;அவன் பட்டயத்தாலே அவனைவெட்டி, அவன் உடலை நீச ஜனங்களின் பிரேதக்குழிகளிடத்திலே எறிந்துவிட்டான்
தேவ ஜனங்களின் பயம் சாத்தானின் பலம்! நாம் பயந்துபோய் ஓடினால் அவன்
விரட்டிவந்து நம்மை பிடித்துவிடுவான் எனவே அன்பானவர்களே கர்த்தருக்கு பயப்படுங்கள் மற்ற எந்த பயத்தையும் புறம்பே தள்ளுங்கள்.
கர்த்தராகிய தேவன் என்னை மும்பையில் நடத்திய நாட்களில் நான் அவரது பேச்சை கேடடு என்குபோகிறேன் என்பதே தெரியாமல் அவரோடு நடக்க ஆயத்த மானபோது அவர் எனக்கு மிக திட்டமாக சொல்லி எச்சரித்தது என்னவெனில்:
ஏசாயா 8:12இந்த ஜனங்கள் கட்டுப்பாடு என்று சொல்லுகிறதையெல்லாம் நீங்கள் கட்டுப்பாடு என்று சொல்லாமலும், அவர்கள் பயப்படுகிற பயத்தின்படி நீங்கள் பயப்படாமலும், கலங்காமலும்,13. சேனைகளின் கர்த்தரையே பரிசுத்தம்பண்ணுங்கள்; அவரே உங்கள் பயமும் அவரே உங்கள் அச்சமுமாயிருப்பார்.
அதாவது கர்த்தருக்கு பயப்படுகிறவன் இந்த உலகத்தில் நடக்கும் எந்த சம்பவத்துக்குள் அல்லது இந்த உலகத்தில் மனுஷர்கள் வைத்துள்ள எந்த கட்டுப்பாட்டுக்கும் இந்த உலகத்தில் உள்ள எவனுக்கும்கூட சற்றும் பயப்பட வேண்டியதே இல்லை என்பதே இதன் பொருள்.
"அங்கு இப்படியிருக்கிறதே" "இங்கு இவ்வளவு பிரச்சனைகள் இருக்கிறதே" "ஊரெல்லாம் நோய் வருகிறதே" என்றெல்லாம் சற்றும் கலங்க வேண்டாம். அது எதுவுமே நம்மை அணுக முடியாது. நாம் கர்த்தருக்கு பயந்து உண்மையாக இருக்கும்பட்சத்தில் ஒரு திருடனுக்கு நம்வீட்டை பார்க்குமளவுக்கு கண்தெரியாது அவன் கண்கள் குருட்டாட்டம் பிடித்துபோகும். அடுத்த வீடுவரும் வரும் பிரச்சனை நமது வீட்டை அணுகமுடியாது ஆண்டவரே வேலியாய் இருந்து நம்மை பாதுகாப்பார். எனவே கண்டவற்றையும் குறித்து பயப்படுவதை இன்றே விட்டொழியுங்கள்!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)