இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: உண்மை கிறிஸ்த்தவன் ஐஸ்வர்யாவான் ஆகமுடியுமா?


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
உண்மை கிறிஸ்த்தவன் ஐஸ்வர்யாவான் ஆகமுடியுமா?
Permalink  
 


இந்த கேள்விக்கு பதிலை விவாதிக்கும் முன்னர்  "உண்மையான கிறிஸ்த்தவன் என்றால் யார்" என்று எனக்கு  தெரிந்ததை  சொல்லிவிடுகிறேன்.
 
ஆண்டவராகிய இயேசுவை ஏற்றுக்கொண்டு  இரட்சிப்பை பெற்று   பாவங்கள் கழுவப்பட்டு இயேசுவின் போதனைபடி  பரிசுத்தமாக வாழ   பிரயாசம் எடுக்கும் ஒருவரையே உண்மை கிறிஸ்த்தவர் என்று நான்  குறிப்பிடுகிறேன்.
 
அப்படிபட்ட ஒருவர் ஐஸ்வர்யவானாக முடியுமா? என்பதே இங்கு எனது கேள்வி.
 
எனது கையில் ஒரு 10000 ரூபாய் சேர்ந்தாலே யாராவது கடன் வேண்டும் என்று வந்துவிடுகிறார்கள்  ஆண்டவரோ "உன்னிடத்தில் கேட்பவன் எவனுக்கும் கொடு, உன்னிடத்தில் கடன் வாங்க  விரும்புகிறவனுக்கு மனம் கோணாதே என்று சொல்கிறார். அதன் அடிப்படியில் ஒருவருக்கு கடன் கொடுத்தோம் என்றால் வாங்கும் வரை இத்தனைநாளில் தருவேன் என்று  திட்டமாக  சொல்லும் நண்பர்கள் பணம் வாங்கியபின்  காணாமல்  போய்விடுகின்றனர். கடன் வாங்கி விட்டு பிறகு சண்டைபோட்டு பேசாமல் பிரிவினை ஆகி இன்றுவரை பேசாமல் போனவர்களும் உண்டு.
 
இந்நிலையில்   லூக்கா 6:34 திரும்பக் கொடுப்பார்களென்று நம்பி நீங்கள் கடன்கொடுத்தால் உங்களுக்குப் பலன் என்ன?
 
என்று சொல்லும் இயேசு கடனை கொடுக்கும்போது அது திருப்பி கிடக்கும் என்று எண்ணாமல் உதாரத்துவமாக கொடுக்க சொல்லியிருக்கிறார்.
 
இப்படி அவர் வார்த்தையை கைகொண்டு நடந்தால்  நன் வாழ்ந்தால் நம்மிடம் பணம் காசு சேருவதற்கு வாய்ப்பு இருக்கிறதா?  யாரவது கடன் கேட்கும்போதோ அல்லது எதாவது உதவி கேட்கும்போதோ கையில் பணம் இருந்தாலும் இருதயத்தை அடைத்த்துகொண்டு இல்லை என்று சொன்னால் மட்டுமே நம்மிடம் உள்ள பணம் தப்பும்போல இருக்கிறது.
 
இந்நிலையில் கிறிஸ்த்துவின் வார்த்தையை கைகொண்டு நடப்பவர் ஐஸ்வர்யாவான் ஆகவே முடியாது என்றே கருதுகிறேன். 
 
இதுகுறித்து தள சகோதரர்கள் கருத்து என்ன?   
  
 
 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
Permalink  
 

லூக்கா : 18

18 . நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக் கொள்வதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டான்

 

அதற்க்கு இயேசு தேவனுடைய கற்பனையை கைகொள் என்று சொல்கின்றார்

 

20. விபசாரஞ் செய்யாதிருப்பாயாக, கொலை செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம் பண்ணுவாயாக என்கிற கற்பனைகளை நீ அறிந்திருக்கிறாயே என்றார்

 

ஆனால் அவன் தன சிறுவயது முதல் தேவனுடைய கற்பனைகளை கைகொண்டு வாழ்ந்து இருக்கின்றான்

 

21.அதற்கு அவன்: இவைகளையெல்லாம் என் சிறு வயது முதல் கைக்கொண்டிருக்கிறேன் என்றான்

 

 

அப்படி இருந்தும் இயேசு அவனிடம் உள்ள ஐஸ்வர்தை பார்த்து அதை ஒரு குறையாக அவனுக்கு சொல்கின்றார் என்றால் பார்த்து கொள்ளுங்கள்

 

 

22 இயேசு அதைக்கேட்டு: இன்னும் உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு; உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்றுத் தரித்திரருக்குக் கொடு

 

அவன் தேவனுடைய கற்பனைகளின் படி வாழ்ந்து இருந்தாலும் இயேசு அவனை பார்த்து  அவன் மிகுந்த ஆஸ்தி உள்ளவன் என்று கண்டு உனக்கு இருக்கும் ஆஸ்தியை  விற்று தரித்திறர்க்கு கொடு என்கின்றார்

 

அவரை பின்பற்றவேண்டும் என்றால் நமக்கு இருக்குஆஸ்தியை  மற்றவர்களுக்கு கொடுத்து தான் அவரை பின்பற்ற வேண்டும்என்று இருப்பதால்

 
 
ஒரு உண்மையான கிறிஸ்தவன் ஐஸ்வர்யவானாக ஆகா கூடாது  ஆகவும் முடியாது என்பதையே  இந்த சம்பவம் நமக்கு தெரியபடுத்துகின்றது.........


-- Edited by EDWIN SUDHAKAR on Wednesday 19th of October 2011 01:15:48 PM

__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard