இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சுந்தர் அவர்களின் வேதபோதனைக்கு வசன ஆதாரம் தேவை!


இனியவர்

Status: Offline
Posts: 59
Date:
சுந்தர் அவர்களின் வேதபோதனைக்கு வசன ஆதாரம் தேவை!
Permalink Closed


நிறைய வேத விரோத காரியங்களை நீங்கள் போதிப்பதால் ஒவ்வொன்றாக இங்கே பார்க்கலாம்.

//அடுத்து வேதத்துக்குபுறம்பான என்னுடைய போதனை என்னவென்பதை கொஞ்சம் சுட்டுங்கள் அதற்க்கு வசன ஆதாரம் தருகிறேன்.  //

என்ற தங்களின் கூற்று படி கிழே காணப்படும் கருத்துகளுக்கு  ஏதாகிலும் வேத ஆதாரம் உண்டா?

 //நீண்ட நாட்களுக்கு முப்பு  நடந்த ஒரு காரியங்கள் இங்கு  எனக்கு ஆவியில உணர்த்தபட்டிருக்கலாம்  என்றே நான் கருதுகிறேன். இந்த உலகைவிட்டு இறைவனிடம் போய் சேருவதற்கு நான்கு வழிகள் இருந்ததாகவும் ஆனால் அந்த எல்லா வழிகளும் சாத்தானால்  அடைக்கபட்டு  ஒருவரும் சாத்தானின் பிடியில் இருந்து கடந்து  வெளியில் வரமுடியாத  ஒருநிலை ஏற்ப்பட்டது.  அதாவது, யார் மரித்தாலும் சாத்தானின் இடமாகிய பாதாளத்தில் இரங்கவேண்டிய  ஒரு நிலை உண்டானதால், தேவனே பூமிக்கு ஆண்டவராகிய இயேசுவாக வந்து தன் ஜீவனை கொடுத்து ஒரு புது வழியை உண்டாக்கியிருக்ககூடும்  என்பதுவே எனக்கு தெரிவிக்கபட்ட காட்சிகள் சொல்லும்  உண்மை என்று நான் கருதுகிறேன்//

//எனவே ஒரு மனுஷன் இயேசுவை ஏற்றுக்கொண்டு ஆதிபாவத்தில் இருந்து விடுபடும்போது பாவத்தினால் உண்டான மாம்ச மரணத்தையே ஜெயிக்கும் வல்லமையையும் அவன் பெறுகிறான்.//

 



-- Edited by SUNDAR on Tuesday 18th of October 2011 03:39:47 PM

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink Closed

John wrote:
//அடுத்து வேதத்துக்குபுறம்பான என்னுடைய போதனை என்னவென்பதை கொஞ்சம் சுட்டுங்கள் அதற்க்கு வசன ஆதாரம் தருகிறேன்.  //

என்ற தங்களின் கூற்று படி கிழே காணப்படும் கருத்துகளுக்கு  ஏதாகிலும் வேத ஆதாரம் உண்டா?

//எனவே ஒரு மனுஷன் இயேசுவை ஏற்றுக்கொண்டு ஆதிபாவத்தில் இருந்து விடுபடும்போது பாவத்தினால் உண்டான மாம்ச மரணத்தையே ஜெயிக்கும் வல்லமையையும் அவன் பெறுகிறான்.//


இயேசுவை ஏற்றவர் தேவனின் பிள்ளை ஆகுதல்

யோவான் 1:12 அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்.
 
மரணத்தை ஜெயிக்க கொடுக்கபட்ட வாக்குத்தத்தம்
 
யோவான் 8:51 ஒருவன் என் வார்த்தையைக் கைக்கொண்டால், அவன் என்றென்றைக்கும் மரணத்தைக் காண்பதில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

சாவுக்கு நேராக இருக்கும் சரீரம் உயிர்பிக்கப்படுதல்  
 
ரோமர் 8:11 அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்
 
சரீரம் மரணமில்லாத நிலையை அடைதல் அல்லது மரணத்தை ஜெயித்தல்.
 
I கொரிந்தியர் 15:51. இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன்; நாமெல்லாரும் நித்திரையடைவதில்லை; ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம்.
 
 
//நீண்ட நாட்களுக்கு முப்பு  நடந்த ஒரு காரியங்கள் இங்கு  எனக்கு ஆவியில உணர்த்தபட்டிருக்கலாம்  என்றே நான் கருதுகிறேன். இந்த உலகைவிட்டு இறைவனிடம் போய் சேருவதற்கு நான்கு வழிகள் இருந்ததாகவும் ஆனால் அந்த எல்லா வழிகளும் சாத்தானால்  அடைக்கபட்டு  ஒருவரும் சாத்தானின் பிடியில் இருந்து கடந்து  வெளியில் வரமுடியாத  ஒருநிலை ஏற்ப்பட்டது.  அதாவது, யார் மரித்தாலும் சாத்தானின் இடமாகிய பாதாளத்தில் இரங்கவேண்டிய  ஒரு நிலை உண்டானதால், தேவனே பூமிக்கு ஆண்டவராகிய இயேசுவாக வந்து தன் ஜீவனை கொடுத்து ஒரு புது வழியை உண்டாக்கியிருக்ககூடும்  என்பதுவே எனக்கு தெரிவிக்கபட்ட காட்சிகள் சொல்லும்  உண்மை என்று நான் கருதுகிறேன்//
 
 
ஆவியில் எனக்கு உணர்த்தப்பட்டதன் அடிப்படையல் நான் எழுதியிருக்கும் காரியங்கள் குறித்த  தங்களின்  கேள்வி நான் சற்றும் எதிர்பாரதுதான், ஆனான் கர்த்தருக்கு சித்தமானால் விரைவில் விடை தருகிறேன்.

 



-- Edited by SUNDAR on Tuesday 17th of January 2012 03:29:54 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



இனியவர்

Status: Offline
Posts: 59
Date:
Permalink Closed

//மரணத்தை ஜெயிக்க கொடுக்கபட்ட வாக்குத்தத்தம்

யோவான் 8:51 ஒருவன் என் வார்த்தையைக் கைக்கொண்டால், அவன் என்றென்றைக்கும் மரணத்தைக் காண்பதில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

சாவுக்கு நேராக இருக்கும் சரீரம் உயிர்பிக்கப்படுதல்

ரோமர் 8:11 அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்

சரீரம் மரணமில்லாத நிலையை அடைதல் அல்லது மரணத்தை ஜெயித்தல்.

I கொரிந்தியர் 15:51. இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன்; நாமெல்லாரும் நித்திரையடைவதில்லை; ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம்.//

எனக்கு மட்டும்தான் குழப்பமா? இந்த தளத்தில் பங்குபெறும் சகோ. நேசன், சகோ. சுதாகர், சகோ. ஸ்டீபன் மற்றும் சகோ. HMV போன்றோர் முதலாம் மரணத்தை குறித்துதான் யோவான் 8:51 ல் பேசியிருக்கிறார் என்று விசுவாசிக்கிறீர்களா? பவுல் மற்றும் பேதுரு போன்றவர்களால் முதலாம் மரணத்தை ஜெயிக்க முடியவில்லையே? ஏன்? அவர்கள் கிறிஸ்துவின் வார்த்தையை ஏற்று கொள்ளாத காரணத்தாலா? I கொரிந்தியர் 15:51. சொன்ன பவுல் மரித்துப்போனாரே?


__________________
HMV


இனியவர்

Status: Offline
Posts: 53
Date:
Permalink Closed

நண்பர் ஜான் அவர்களே,
நேசன் என்பவரும் சுந்தரும் ஒருவரே. மற்றவர்கள் அவருடைய துதிபாடிகள். நான் இங்கே ஒரு விசித்திரப் பிறவியைப் போல.பேதுரு போன்றோர் மரணத்தைக் குறித்து கேட்டீர்களல்லவா, நன்றாக மூச்சை இழுத்துவிட்டுக் கொள்ளுங்கள், சொல்லுகிறேன், திரு.சுந்தர் அவர்கள் மறுசுழற்சி கொள்கையை நம்புகிறவர், ஆதலால் பேதுரு போன்றவர்கள் மரித்தாலும் வேறொருவர் ரூபத்தில் இன்னும் வாழுகிறார்கள். ஏனெனில் இயேசுவை அறிந்திராத பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களுக்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அவர்களுக்கு மீண்டும் பிறக்கும் வாய்ப்பும் இயேசுவின் மூலமான இரட்சிப்பைப் பெறும் வாய்ப்பும் கொடுக்கப்படுகிறது. இந்து தேவர்கள் தேவியர் எல்லாருமே ஏற்கனவே வாழ்ந்த மனிதர்களே, அவர்களும் வெவ்வேறு ரூபத்தில் பிறந்துகொண்டுதானிருக்கிறார்கள். இன்னும் ஏதாவது விவரம் வேண்டுமானால் திரு.சுந்தர் அவர்களையே கேளுங்கள்.



__________________


இனியவர்

Status: Offline
Posts: 59
Date:
Permalink Closed

நான் இங்கே ஒரு விசித்திரப் பிறவியைப் போல

கவலைப்படாதீர்கள் சகோ. HMV உங்களுக்கு நான் Company கொடுக்கிறேன் :)


//திரு.சுந்தர் அவர்கள் மறுசுழற்சி கொள்கையை நம்புகிறவர், ஆதலால் பேதுரு போன்றவர்கள் மரித்தாலும் வேறொருவர் ரூபத்தில் இன்னும் வாழுகிறார்கள். ஏனெனில் இயேசுவை அறிந்திராத பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களுக்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.//


இதை ஒப்புகொள்ளுகிறீர்களா சகோ. சுந்தர்? மறு பிறவியில் நம்பிக்கை உள்ளவரா நீங்கள்? எப்படி இந்த 'கிறிஸ்தவ' மறுபிறப்பு (?) கொள்கை நடைபெறுகிறது என்று விளக்குவீர்களா?

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink Closed

HMV wrote:

நண்பர் ஜான் அவர்களே,
நேசன் என்பவரும் சுந்தரும் ஒருவரே. மற்றவர்கள் அவருடைய துதிபாடிகள். 


HMV அவர்களே தேவையற்ற வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம்.  நீங்கள் யாருடய துதிபாடி என்பதும் உங்கள் பின்னர் யார் இருந்து  இவ்வாறு எழுத தூண்டுகிறார் என்பதும் எனக்கு தெரியும். உங்கள் வார்த்தையின் வாசனையின் மூலம் அது நன்றாகவே தெரிகிறது.   

இங்குள்ள சகோதரர்கள் அனேக கேள்விகளை எழுப்பி பலமுறை எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் வேத அடிப்படையில் விளக்கம் கிடைத்த  என்னுடய வார்த்தைகளை நம்புகின்றனர். குட்டையை குழப்பும் நோக்கத்துடன் பொய் தகவலுடன் உள்ளே நுழைந்து பதிவிடும்  உங்களுக்கு உண்மை ஒருபோதும் புரிந்துவிடபோவது இல்லை.உங்களுக்கு புரிந்தும் ஒன்றும் ஆகிவிட போவதும் இல்லை.    

 
HMV WROTE
// பேதுரு போன்றோர் மரணத்தைக் குறித்து கேட்டீர்களல்லவா, நன்றாக மூச்சை இழுத்துவிட்டுக் கொள்ளுங்கள், சொல்லுகிறேன்,  பேதுரு போன்றவர்கள் மரித்தாலும் வேறொருவர் ரூபத்தில் இன்னும் வாழுகிறார்கள்.///
 
இது நான் எங்கும் சொல்லியிருக்காத ஒரு புதுமையான கருத்து. உங்கள் சொந்த கருத்தை என்மீது திணிக்க வேண்டாம். இல்லை எனில் இதுபோன்ற கருத்து இந்த தளத்தில் எங்கு இருக்கிறது என்று சுட்டுங்கள்.
 
HMV WROTE
////திரு.சுந்தர் அவர்கள் மறுசுழற்சி கொள்கையை நம்புகிறவர் ஏனெனில் இயேசுவை அறிந்திராத பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களுக்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அவர்களுக்கு மீண்டும் பிறக்கும் வாய்ப்பும் இயேசுவின் மூலமான இரட்சிப்பைப்பெறும் வாய்ப்பும் கொடுக்கப்படுகிறது. இந்து தேவர்கள் தேவியர் எல்லாருமே ஏற்கனவே வாழ்ந்த மனிதர்களே, அவர்களும் வெவ்வேறு ரூபத்தில் பிறந்துகொண்டுதானிருக்கிறார்கள். இன்னும் ஏதாவது விவரம் வேண்டுமானால் திரு.சுந்தர் அவர்களையே கேளுங்கள்.///
 
இது நான் நம்பும் என்னுடய கருத்துதான்.  இந்த கருத்தில் உங்களுக்கு ஏற்பு
இல்லை எனில். இயேசு ஒருவரை தவிர பிதாவிடம்  போகும் வழி எதுவும் இல்லை என்னும் நிலையில் பழைய ஏற்பாட்டு  காலத்தில் வாழ்ந்த மனுஷர்களின்நிலை என்னவென்பதை விளக்கவும். (சும்மா தேவன் பார்த்து கொள்வார் என்று விட்டேந்தி பதில் எல்லாம் வேண்டாம். தேவன் எல்லாவற்றையும் கிரமமான முறையிலேயே செய்வார்)
 
ஆனால் பழய ஏற்பாட்டுகாரார்களுக்கு மீண்டும் பிறப்பு இருக்க வாய்ப்பிருக்கிறது என்பதற்கு ஆதாரமான வசனத்தை நான் தருகிறேன்.

 



-- Edited by SUNDAR on Wednesday 19th of October 2011 11:15:01 AM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink Closed

சகோ. ஜான் அவர்களே ஒரு குறிப்பிட்ட கருத்தை எடுத்து அக்கருத்தை பற்றிய
எனது நிலை என்ன அதற்க்கு வசனஆதாரம் என்னஎன்பதை நான் தெரிவிக்கிறேன். அதே கருத்துக்கு உங்கள் நிலை என்ன அதக்கு வசன ஆதாரம் என்னவென்பதை தெரிவியுங்கள்  பின்னர் அக்கருத்து குறித்து ஒரு முடிவுக்கு வர எதுவாக  இருக்கும். 
 
நான் ஒரு கருத்தை குறித்து விளக்கம் கொடுத்தால் நீங்கள் புதிதாக ஒன்றை ஆரம்பிப்பதும் இன்னொரு கருத்துக்கு விளக்கம் கொடுக்கும்முன்னால் இன்னொரு
கேள்வியை கேட்பதும் இப்படி இருந்தால் ஒரு உண்மையையும் அறிய முடியாது. அவ்வாறு கேள்விகளை அடுக்குவதற்கு நீங்கள் ஒரு வாத்தியாரோ  நான் ஒரு மாணவனோ அல்ல.
 
மேலும் இடையிடையே "எல்லோரும் இதைத்தான்  நம்புகிறீர்களா?"  என்றொரு கேள்வியையும் எழுப்பவேண்டாம்.  மற்றவர்கள் என்ன விசுவாசிக்கிறார்கள் என்பது கேள்வியல்ல "நாம் விசுவாசம்தான நம்மை இரட்சிக்கும்". எனது கருத்தை நம்புவதும் நம்பாததும் அவரவர் இஸ்டம். இந்த தளத்தில் எனதுகருத்தை நம்புகிறவர்களும்  இருக்கிறார்கள் நம்பாதவர்களும் இருக்கிறார்கள். தேவனுக்கும் நமக்கும் இடையில் உள்ள உறவுக்கு இடையே  மற்றவர்களுக்கு இடமில்லை எனவே மற்றவர்களை பற்றி எதுவும் சிந்திக்காமல்  வசனம் என்ன சொல்கிறது என்பதை மாத்திரம் தியானிக்கலாம்     
 
 
  
முதலில் மாம்ச மரணத்தை பற்றி வசன அடிப்படையில்  நான் விளக்கியுள்ள கருத்தை பற்றி ஒரு தெளிவான ஒரு முடிவுக்கு வந்துவிட்டு பின்னர் மற்ற கருத்தை பற்றி பார்க்கலாம் என்று கருதுகிறேன்.
 
SUNDAR wrote 
//மரணத்தை ஜெயிக்க கொடுக்கபட்ட வாக்குத்தத்தம்
யோவான் 8:51 ஒருவன் என் வார்த்தையைக் கைக்கொண்டால், அவன் என்றென்றைக்கும் மரணத்தைக் காண்பதில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.///
  
Bro. John Wrote
////எனக்கு மட்டும்தான் குழப்பமா? இந்த தளத்தில் பங்குபெறும் சகோ. நேசன், சகோ. சுதாகர், சகோ. ஸ்டீபன் மற்றும் சகோ. HMV போன்றோர் முதலாம் மரணத்தை குறித்துதான் யோவான் 8:51 ல் பேசியிருக்கிறார் என்று விசுவாசிக்கிறீர்களா?////
 
முதலாம் மரணத்தைத்தான் அது குறிக்கிறது என்றும் அது எவ்வாறு சாத்தியம் என்பதற்கும் தொடர்ந்து வசன ஆதாரம் தந்துள்ளேன்  அனால் அது  இரண்டாம் மரணத்தை பற்றிதான் சொல்கிறது என்று நீங்கள் மட்டுமல்ல  பலரும்  எண்ணு கிறார்கள். இரண்டாம் மரணத்தை "இரண்டாம் மரணம்" என்று வேதம்  தெளிவாக சொல்லியிருக்க  நீங்கள் இதை ஏன் இரண்டாம் மரணம் என்று எடுத்துகோள்கிறீர்கள்?
 
மாற்கு 9:23 இயேசு அவனை நோக்கி: நீ விசுவாசிக்கக்கூடுமானால் ஆகும், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் என்றார்.
 
"விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும்" என்று இயேசு சொல்லியிருக்க அதற்க்கு தொடர்புடய வசனங்களும் வேதத்தில் இருக்க முதல் மரணத்தை ஜெயித்து மறு ரூபம் ஆகமுடியும் என்று விசுவாசிக்கும் எனது விசுவாசத்தை ஏன் ஐயா சோதிக்கிறீர்கள்? உங்களுக்கு விசுவாசம் இல்லைஎன்றால் விட்டுவிடுங்கள் "நீங்கள் விசுவாசிக்கிறபடி உங்களுக்கு ஆகட்டுமே.  
 
மேலும் நான் இப்படி வசனத்தின் அடிப்படையில் மரணத்தை ஜெயிக்கமுடியும் என்று சொல்வதால் தங்கள் போன்றவர்களுக்கு ஏன் மன கஷ்டம் வருகிறது? "தேவனால் எல்லாம் கூடும்" என்று வேதம் சொல்லியிருக்க இந்த அற்ப மாம்ச மரணத்தை ஜெயிக்கவைக்க அவரால் முடியாதா  என்ன? வேத வார்த்தையின் வல்லமையை மட்டுபடுத்துவதோடு உங்கள் விசுவாச குறைவால் தேவனின் கரத்தையும் ஏன் மட்டுபடுத்துகிரீர்கள்?
 
மாம்ச மரணத்தை ஜெயித்து மறுரூபம் ஆகமுடியும் என்றும் அதை செய்ய தேவனால் கூடும் என்றும் மேலேயுள்ள வசனத்தின் அடிப்படையில் நான் உறுதியாக விசுவாசிக்கிறேன்.  அதை தேவன் நிச்சயம் நிறைவேற்றுவார்!   
      
 
Bro. John Wrote
////பவுல் மற்றும் பேதுரு போன்றவர்களால் முதலாம் மரணத்தை ஜெயிக்க முடியவில்லையே? ஏன்? அவர்கள் கிறிஸ்துவின் வார்த்தையை ஏற்று கொள்ளாத காரணத்தாலா? I கொரிந்தியர் 15:51. சொன்ன பவுல் மரித்துப்போனாரே?////
 
ஆண்டவராகிய இயேசு சொன்னதுபோல், பவுலோ அல்லது பேதுருவோ நான் இயேசுவின் வார்த்தைகள் அனைத்தையும் சரியாக கைகொண்டு வாழ்கிறேன் என்றோ வாழ்ந்து முடித்தேன் என்றோ எங்கும் சொல்லவில்லை. அவர்களுக்கு நியமிக்கபட்டஓட்டம் வேறு! அதை அவர்கள் சரியாக ஓடி முடித்தார்கள் கீழ்கண்ட வசனத்தை சுதந்தரித்து கொண்டார்கள்!
 
யோவான் 11:25 இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்;
 
இதுவே இரண்டாம் மரணத்தை ஜெயித்தல்!
 
ஆகினும் அதனிவிட மேன்மையான இந்த வசனம் இன்னும் இருக்கிறது 
 
யோவான் 11:26 உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்; 
 
எல்லாவற்றிக்கும் ஒரு காலம் உண்டு என்று வேதம் சொல்கிறது! அதற்க்கேற்ப்ப இந்த வசனம் நிறைவேறும் காலம் இப்பொழுது வந்திருக்கிறது என்று நான் விசுவாசிக்கிறேன். பவுல் பேதுரு  ஏன் மரணத்தை ஜெயிக்கவில்லை அவர்களுக்கு ஏன்அப்படி நடக்கவில்லை என்பதற்கு எனக்கு காரணம்தெரியாது, அது தேவனுக்கே தெரியும். ஆகினும் நான் அறிந்தவரை ஆவியின் முதல் பலனை பெற்றவர்கள் கூட சரீர மீட்பை தரும் ஒருவர்  வருவதற்கு எதிர்பார்த்திருப்பதாக பவுல் சொல்கிறார்.
 
ரோமர் 8:23 அதுவுமல்லாமல், ஆவியின் முதற்பலன்களைப் பெற்ற நாமுங்கூட நம்முடைய சரீரமீட்பாகிய புத்திரசுவிகாரம் வருகிறதற்குக் காத்திருந்து, நமக்குள்ளே தவிக்கிறோம்.
 
அவர் காத்திருந்தது கனியும் காலம் இது என்று நான் கருதுகிறேன்.
 
சங்கீதம் 68:20 நம்முடைய தேவன் இரட்சிப்பை அருளும் தேவனாயிருக்கிறார்; ஆண்டவராகிய கர்த்தரால் மரணத்திற்கு நீங்கும் வழிகளுண்டு.
 
நமது வேதாகமத்தில் மரணத்துக்கு நீங்கும் வழி நிச்சயம் வெளிப்படுத்தபட்டுள்ளது    


-- Edited by SUNDAR on Wednesday 19th of October 2011 04:17:28 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



நமது நண்பர்

Status: Offline
Posts: 186
Date:
மனிதனால் மரணத்தை ஜெயிக்க முடியுமா?
Permalink Closed


இறைவனை பற்றி சொல்லும் ஒரு தளத்தில், அதன் உறுப்பினர் (நிர்வாகி) ஒருவர், மனிதன் மரணத்தை வெல்ல முடியும் என வேதத்திலிருந்து தான் உணர்ந்து கொண்டதாக, தனக்கு வெளிப்படுத்தப்பட்டதாக கட்டுரைகள் எழுதியுள்ளார். அவர் தன் கருத்தை வேத வசனங்களை ஆதாரமாக கொண்டு சொன்ன போதிலும், அதை அனேகர் நம்பினதாக தெரியவில்லை. மற்றும் அவர் மற்ற தள சகோதரர்களால் விமர்சிக்கப்பட்டார். ஏனென்றால் அவர் சொன்னது போல யாரும் இதுவரை மரணத்தை வென்று உயிரோடு வாழ்ந்ததாக தெரியவில்லை. (சாது சுந்தர் சிங் இமயமலையில் தான் பார்த்ததாக சொன்ன ஒருவரை தவிர்த்து)

 

ஆனால் வேத வசனத்தின்படி, இந்த கருத்து உண்மையே என்றும், யாரும் இதுவரை அந்த நிலையை அடையவில்லை என்பதால் இந்த கருத்து பொய்யாகி விடாது என்றும், வேத வசனத்தின்படி இந்த கருத்தை ஒரு விசுவாசி விசுவாசிப்பதில் தவறில்லை என்றும்  வாட்ச்மேன் நீ என்னும் தேவ ஊழியர் "The Spiritual Man" என்னும் தனது புத்தகத்தில் "Overcoming Death"  என்னும் தலைப்பில் வேத வசன ஆதாரங்களோடு விளக்கியுள்ளார். இந்த வேத வசனங்களை விசுவாசித்து தங்கள் வாழ்னாளை அதிகப்படுத்தி கொண்டவர்களும் உண்டு.

 

இந்த புத்தகம் ஆங்கிலத்தில் உள்ளது. இந்த பகுதியை தமிழாக்கம் செய்யும் அளவுக்கு எனக்கு நேரம் இல்லை என்பதால் இதை பற்றி அறிய விரும்புவோர் இந்த புத்தகத்தைஇணையத்தில் இலவசமாக இறக்கம் செய்து கொள்ளலாம். அதன் முகவரி  

 

http://www3.telus.net/trbrooks/The_Spiritual_Man.pdf

 

(ஆனால் இவ்வாறு மரணத்தை வெல்லப் போகிறவர் ஒருவரே என்றும், அவரை கொண்டுதான் தேவன் சாத்தானை அழிக்க போகிறார் என்றும் இறைவனை பற்றி சொல்லும் தள உறுப்பினர் சொல்லுவது (ரீல்) ரொம்ப ஓவர். இந்த உலகில் உள்ள அனைத்து மனிதர்களுக்குள்ளும் கிருஸ்து உருவாகி, அதன் மூலம் சாத்தான் அழிக்கப்படுவதுதான் தேவனுடைய பூரண விருப்பம்)



__________________


இனியவர்

Status: Offline
Posts: 59
Date:
RE: சுந்தர் அவர்களின் வேதபோதனைக்கு வசன ஆதாரம் தேவை!
Permalink Closed




//முதலாம் மரணத்தைத்தான் அது குறிக்கிறது என்றும் அது எவ்வாறு சாத்தியம் என்பதற்கும் தொடர்ந்து வசன ஆதாரம் தந்துள்ளேன் அனால் அது இரண்டாம் மரணத்தை பற்றிதான் சொல்கிறது என்று நீங்கள் மட்டுமல்ல பலரும் எண்ணு கிறார்கள். இரண்டாம் மரணத்தை "இரண்டாம் மரணம்" என்று வேதம் தெளிவாக சொல்லியிருக்க நீங்கள் இதை ஏன் இரண்டாம் மரணம் என்று எடுத்துகோள்கிறீர்கள்?//


கிழே உள்ள வசனத்தின் படி பவுல் மரணபிரமாணத்தில் இருந்து விடுதலை பெற்று விட்டார் பின்னே ஏன் மரித்தார்?

ரோமர் 8:2 கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே.

கிழே உள்ள வசனத்தின் படி "பிணம்" எழுந்து இன்னொரு பிணத்தை அடக்கம் செய்யுமோ?

மத்தேயு 8:22 அதற்கு இயேசு: மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம் பண்ணட்டும், நீ என்னைப் பின்பற்றி வா என்றார்.

__________________
HMV


இனியவர்

Status: Offline
Posts: 53
Date:
Permalink Closed

John wrote:

கிழே உள்ள வசனத்தின் படி பவுல் மரணபிரமாணத்தில் இருந்து விடுதலை பெற்று விட்டார் பின்னே ஏன் மரித்தார்?


 அவர் தனக்கு சித்தமானபடியெல்லாம் செய்வார்,அவரை நோக்கி நீர் ஏன் இதை செய்கிறீர் என்று கேட்கத்தக்கவன் ஒருவனுமில்லை, இது அவருடைய தளம், எதுவேண்டுமானாலும் எழுதுவார், இஷ்டமிருந்தா பாருங்க, இல்லாவிட்டா வெளியேறுங்க, நீங்க என்ன இஸ்லாமியரைப் போல அவர் கழுத்தை வெட்டவா போறீங்க, பைபிள் எல்லோருக்கும் சொந்தம் என்பதால் நின்றுகொண்டும் படிப்பான், படுத்துக்கொண்டும் படிப்பான், தலைகீழாகப் பிடித்துக்கொண்டும் படிப்பான், தலைகீழாக நின்றுகொண்டும் படிப்பான், நீங்கள் யார் அதை கேட்பதற்கு..? ரொம்ப கேள்வி கேட்டீங்கன்னா தளத்தைவிட்டே நீக்கப்படுவீர்..!

அவர் யாரு தெரியுமா, ஆதிகாலத்துல சிவபெருமான்...வேதகாலத்திலோ யோசுவா... இப்படி அவர் இல்லாத காலமே இருந்ததில்லை;உங்களுக்கு நீங்க யாருடைய மறுபிறவி என்று தெரியணுமின்னா நல்ல பிள்ளையா லட்சணமா அடக்க ஒடுக்கமா இருந்து கற்றுக்கொள்ளணும் சரியா..?



__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink Closed

John wrote:
//முதலாம் மரணத்தைத்தான் அது குறிக்கிறது என்றும் அது எவ்வாறு சாத்தியம் என்பதற்கும் தொடர்ந்து வசன ஆதாரம் தந்துள்ளேன் அனால் அது இரண்டாம் மரணத்தை பற்றிதான் சொல்கிறது என்று நீங்கள் மட்டுமல்ல பலரும் எண்ணு கிறார்கள். இரண்டாம் மரணத்தை "இரண்டாம் மரணம்" என்று வேதம் தெளிவாக சொல்லியிருக்க நீங்கள் இதை ஏன் இரண்டாம் மரணம் என்று எடுத்துகோள்கிறீர்கள்?//


கிழே உள்ள வசனத்தின் படி பவுல் மரணபிரமாணத்தில் இருந்து விடுதலை பெற்று விட்டார் பின்னே ஏன் மரித்தார்?

ரோமர் 8:2 கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே.

கிழே உள்ள வசனத்தின் படி "பிணம்" எழுந்து இன்னொரு பிணத்தை அடக்கம் செய்யுமோ?

மத்தேயு 8:22 அதற்கு இயேசு: மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம் பண்ணட்டும், நீ என்னைப் பின்பற்றி வா என்றார்.

சகோதரர் அவர்களே இயேசுவின் கீழ்கண்ட வசனப்படி அவரை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவரும் ஆதாமின் பாவத்தால் உண்டான மரணத்தை விட்டு நீங்கி விடுகின்றனர்.

யோவான் 5:24 என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட் படாமல், மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
 
அவ்வாறு இயேசுவை ஏற்றுக்கொள்ளாதவர்கள், ஆதாமின் மரணத்தை தாங்கள் சரீரத்தில் சுமதுகொண்டு இருப்பதால் அவர்கள் தேவனின் பார்வையில் மரித்தவர் களாகவே கருதப்படுகின்றனர். அதையே இங்கு இயேசு குறிப்பிடுகிறார். இங்கு நாம் சகல மரணத்தையும் ஜெயித்தலை பற்றியே விவாதிக்கிறோம்.    
 
பவுல்  மட்டுமல்ல  இயேசுவை  ஏற்றுக்கொண்டு ஆவியில் மறுபடி பிறக்கும் ஒவ்வருவரும் பாவம்  மரணம்  என்னும்  பிரமாணத்தில்  இருந்து  விடுதலை ஆகிவிடுகின்றனர். அவ்வாறு விடுதலை ஆகிறவர்கள் சரீரத்தை உயிர்ப்பிக்கும்
கிரியை  இல்லாமல் இருந்தால் அவர்கள் சரீரம் உயிர்பிக்கபடாமல்  மரணத்தை தழுவ, அவர்கள் ஆவியில் உயிர்ப்பிக்கபடுவார்கள். ஆனால் இயேசுவின் வார்த்தையை  கைகொண்டு வாழ்ந்து கிருபையோடு கிரியையும் இருந்தால்மட்டுமே சரீர மரணத்தை ஜெயிக்க முடியும்.  எனவேதான் இயேசு என் வார்த்தைகளை கைகொண்டு வாழ்பவன் மரணத்தைக் காண்பதில்லை என்றார்.  
 
யோவான் 8:51 ஒருவன் என் வார்த்தையைக் கைக்கொண்டால், அவன் என்றென்றைக்கும் மரணத்தைக் காண்பதில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
 
அனால் தாங்கள்  சொல்வதுபோல் மேலேயுள்ள வசனம்  "இயேசுவின் வார்த்தைகளை கைகொண்டவன் மட்டும்தான் இரண்டாம் மரணத்தை காண்பதில்லை" என்ற பொருள் வருமாகில், நீங்களே சற்று யோசித்து பாருங்கள் எத்தனைபேர் இயேசுவின் வார்த்தையை சரியாக கைகொண்டு  வாழ்ந்து  "தனக்கு உண்டானவற்றை விற்று பிச்சை கொடுத்து, இரண்டு அங்கியிருந்தால் ஒன்றை இல்லாதவனுக்கு கொடுத்து, ஒரு கன்னத்தில் அடித்தவனுக்கு மறு கன்னத்தை திருப்பிகொடுத்து   வாழமுடியும்? 
 
மெய்யாகவே  மெய்யாகவே என்று அழுத்தி சொல்லபட்டை அவ்வசனம் அவ்வாறு பொருள் தருமாயில் ஒருவருமே இரண்டாம் மரணத்துக்கு தப்பிக்க முடியாது. எல்லோருமே இரண்டாம் மரணத்தை சந்திக்க நேரும்.  உங்கள் விசுவாசம் அவ்வாறு இருக்குமாயின் உடனே இயேசுவின் எல்லா வார்த்தைகளையும் கைகொண்டு வாழ பிரயாசம்எடுங்கள் இல்லையேல் உங்கள் விசுவாசத்தின்படிதான் உங்கழுக்கு நடக்கும்.  
  
பாவம் செய்த ஆதாமுக்கு தேவன் கொடுத்த சாபம் "சாகவே சாவாய்" என்பதுவே  அதனாலேயே மாம்சமரணமும் உலகத்தில் பிரவேசித்தது. அந்த சாபத்துக்கு நேர் எதிராக மரணத்தை ஜெயிக்கும்படிக்கு தேவன் மனுஷனுக்கு  கொடுத்துள்ள  வாக்குத்தத்தம் "பிழைக்கவே பிழைப்பாய்" என்பது. இந்த வாக்குத்தத்தம் தேவனின் சாபத்துக்கு பரிகாரமாக இருக்கிறது.  இதைகுறித்த விளக்கத்தை கீழ்கண்ட திரியில் வசன ஆதாரத்துடன் பார்க்கலாம்
 

 



-- Edited by SUNDAR on Thursday 20th of October 2011 01:54:49 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



இனியவர்

Status: Offline
Posts: 59
Date:
Permalink Closed

// யோவான் 5:24 என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட் படாமல், மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.//

மேலே சொல்லப்பட்டது இரண்டாம் மரணமா அல்லது முதல் மரணமா?


//அவ்வாறு இயேசுவை ஏற்றுக்கொள்ளாதவர்கள், ஆதாமின் மரணத்தை தாங்கள் சரீரத்தில் சுமதுகொண்டு இருப்பதால் அவர்கள் தேவனின் பார்வையில் மரித்தவர் களாகவே கருதப்படுகின்றனர்.//

மேலே சொல்லப்பட்டது இரண்டாம் மரணத்தில் மரித்தவர்களா அல்லது முதல் மரணத்தில் மரிப்பவர்களா?


//பவுல் மட்டுமல்ல இயேசுவை ஏற்றுக்கொண்டு ஆவியில் மறுபடி பிறக்கும் ஒவ்வருவரும் பாவம் மரணம் என்னும் பிரமாணத்தில் இருந்து விடுதலை ஆகிவிடுகின்றனர். //

மேலே சொல்லப்பட்டது இரண்டாம் மரணமா அல்லது முதல் மரணமா?


__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink Closed

சகோதரர் அவர்களே கீழ்கண்ட வசனங்கள் எல்லாம் எந்த மரணத்தை குறிக்கிறது என்பது தங்களுக்கு தெரியும் என்று கருதுகிறேன்!  
 
மத்தேயு 10:21 சகோதரன் தன் சகோதரனையும், தகப்பன் தன் பிள்ளையையும், மரணத்துக்கு ஒப்புக்கொடுப்பார்கள்
மத்தேயு 26:38 அப்பொழுது, அவர்: என் ஆத்துமா மரணத்துக்கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது;
யோவான் 12:33 தாம் இன்னவிதமான மரணமாய் மரிக்கப்போகிறாரென்பதைக் குறிக்கும்படி இப்படிச் சொன்னார்.
அப்போஸ்தலர் 22:4 நான் இந்த மார்க்கத்தாராகிய புருஷரையும் ஸ்திரீகளையும் கட்டி, சிறைச்சாலைகளில் ஒப்புவித்து, மரணபரியந்தம் துன்பப்படுத்தினேன்.
அப்போஸ்தலர் 9:37 அந்நாட்களில் அவள் வியாதிப்பட்டு மரணமடைந்தாள்
  
இன்னும் இதேபோல் அநேகமான வசனங்கள்  குறிப்பிடும் மரணத்தைபற்றியே தாங்கள் சுட்டியுள்ள வசனமும் குறிப்பிடுகிறது.  பொதுவாக "மரணம்" என்று வசனம் சொல்லும் வார்த்தையானது முதலாம் மரணத்தையே குறிக்கும் அல்லது இரண்டு மரணத்தையும் சேர்த்து வேண்டுமானால் குறிக்குமேயன்றி தாங்கள் குறிப்பிடுவது போல் இரண்டாம் மரணத்தை மாத்திரம்  குறிப்பிட வாய்ப்பு இருப்பது போல் தெரியவில்லை. இரண்டாம் மரணத்தை இரண்டாம் மரணம் என்று வேதம் தெளிவாக சொல்கிறது.
 
மற்றபடி "மரணம்" என்று பொதுவாக வேதம் சொல்லும் ஒரு வார்த்தையை  தங்களுக்கு ஒத்துவராத  இடத்தில் "இரண்டாம் மரணம்" என்றும் ஒத்துவரும் 
இடத்தில்  "முதலாம் மரணம்" என்றும் நிர்ணயித்து கொண்டது மனுஷ போதனையே!
 
Bro. John Wrote:   
// யோவான் 5:24 என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட் படாமல், மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.//
மேலே சொல்லப்பட்டது இரண்டாம் மரணமா அல்லது முதல் மரணமா?///
 
இயேசுவை ஏற்றுக்கொண்ட ஒரு மனுஷன் இரண்டு மரணத்தையும் விட்டு நீங்கி ஜீவனுக்கு உட்பட்டு விடுகிறான். அவன் முதல் மரணத்தை ஜெயிப்பதும் முதல் மரணத்திடம் தோற்பதும் அவன் கிறிஸ்த்துவின் வார்த்தையை கைகொள்வதன் அடிப்படையில் தீர்மானிக்கப்படும்.  
 
Bro. John Wrote:   
//அவ்வாறு இயேசுவை ஏற்றுக்கொள்ளாதவர்கள், ஆதாமின் மரணத்தை தாங்கள் சரீரத்தில் சுமதுகொண்டு இருப்பதால் அவர்கள் தேவனின் பார்வையில் மரித்தவர்களாகவே கருதப்படுகின்றனர்.//
மேலே சொல்லப்பட்டது இரண்டாம் மரணத்தில் மரித்தவர்களா அல்லது முதல் மரணத்தில் மரிப்பவர்களா?//
 
இயேசுவை ஏற்றுக்கொள்ளாதவர்கள் இரண்டு மரணத்தையும் தாங்கள் சரீரத்தில்சுமந்துகொண்டு திரிகிறார்கள்.  
 
Bro. John Wrote:   
//பவுல் மட்டுமல்ல இயேசுவை ஏற்றுக்கொண்டு ஆவியில் மறுபடி பிறக்கும் ஒவ்வருவரும் பாவம் மரணம் என்னும் பிரமாணத்தில் இருந்து விடுதலை ஆகிவிடுகின்றனர். //
மேலே சொல்லப்பட்டது இரண்டாம் மரணமா அல்லது முதல் மரணமா?////
இங்கும் அதே பொருள்தான்!  ஆவியில் பிறக்கும் ஒவ்வொருவரும் இரண்டு மரணத்தில் இருந்தும் விடுதலை ஆகின்றார்கள் ஆனால் முதல் மரணத்தை ஜெயிப்பது அவர்கள் இயேசுவின் வார்த்தையை கைகொண்டு நடந்தால் மட்டுமே நிறைவேறும்.
 
வசனம் இவாறு சொல்கிறது:
 
I யோவான் 1:7 அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.
 
சகல பாவங்களில் இருந்தும் ஒரு மனுஷன் விடுவிக்கபட்ட பிறகு எந்த பாவத்தின் அடிப்படயில் முதலாம் மரணம் மட்டும் வரமுடியும் சகோதரரே?   பாவத்தின்  சம்பளம்தானே  மரணம்!  இங்கு முதலாம்  மரணம் இரண்டாம் மரணம் என்ற பேச்சுக்கே இடமில்லை, இயேசுவின் இரத்தத்தில் கழுவபட்ட மாத்திரத்தில் அவன்  மரணம் ஜீவன் என்ற பிரமாணத்தில் இருந்து விடுபட்டு இரண்டு மரணத்தையும் ஜெயிக்கிறவன் ஆகிறான்.     
 
ஆனால் இவ்வாறு இயேசுவை ஏற்றுக்கொண்டு மரணத்தில் இருந்து விடுதலை பெற்றவர்கள் பூமியில் தொடர்ந்து வாழும் நாட்களில்  இயேசுவின் வார்த்தைகளை மீறி, மீண்டும் மரணத்துக்கேதுவான பாவங்களை செய்யும்போது அவர்களை மீண்டும் மாம்ச மரணம்  ஆட்கொண்டுவிடுகிறது.
 
இயேசுவின் ஏற்றுக்கொண்டபின்னர் ஒருவர் ஒரேஒரு மரணத்துகேதுவான பாவத்தை செய்தாலும் அதன்பின்னர் வேறொரு பலி இல்லாத காரணத்தால், அவர் மாம்சத்தில் மரித்தே ஆகவேண்டும். இயேசுவை ஏற்றுக் கொண்டவர்களிடையே உள்ள விசுவாச குறைவாலேயே ஒருவரும் மரணத்தை ஜெயிக்க முடியாமல் இதுபோன்று இன்றுவரை   எல்லோருக்கும் மரித்து மரணம் நிறைவேறி வருகிறது!
 
உங்கள் விசுவாசம் உங்களோடு இருக்கட்டும் சகோதரரே! இயேசுவின் இரத்தத்தால் வரும்  மீட்பின் வல்லமையை ஏன் மட்டுபடுத்துகிறீர்கள்? அல்லது இயேசுவின் பலியால் கிடைத்துள்ள மேலான சிலாக்கியத்தை ஏன் நம்ப மறுக்கிறீர்கள்? இது வரை எல்லோரும் மரிக்கிரார்களே என்று உலகத்தை பார்க்காதீர்கள் வார்த்தையை எழுதிகொடுத்த சர்வ வல்ல தேவனை  பாருங்கள் விசுவாசிப்பவர்களுக்கு  அது சாத்தியமே என்பது புரியவரும்!
 
 
 
 
மாற்கு 9:23  நீ விசுவாசிக்கக்கூடுமானால் ஆகும், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் என்றார்.
 
 



__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 233
Date:
Permalink Closed

சகோ.சுந்தர் அவர்களே!

யோவான் 5:24 மற்றும் 8:51 வசனங்களின் அடிப்படையில் நீங்கள் சொல்கிற கருத்தை அப்பட்டமாக மறுப்பதற்கில்லை. அவ்வசனங்களின் அடிப்படையில் நீங்கள் கொண்டுள்ள விசுவாசம் போற்றுதற்குரியதே. ஆகிலும் பின்வரும் வசனத்திற்கு உங்கள் பதில் என்ன என்பதை தெரிந்துகொள்ள ஆவலாயுள்ளேன்.

1 கொரி. 15:22 ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறதுபோல, கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.

இவ்வசனத்தின்படி பார்த்தால், ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்க வேண்டும்தானே? இக்கேள்விக்கு உங்கள் பதில் என்ன?



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink Closed

anbu57 wrote:

சகோ.சுந்தர் அவர்களே!

யோவான் 5:24 மற்றும் 8:51 வசனங்களின் அடிப்படையில் நீங்கள் சொல்கிற கருத்தை அப்பட்டமாக மறுப்பதற்கில்லை. அவ்வசனங்களின் அடிப்படையில் நீங்கள் கொண்டுள்ள விசுவாசம் போற்றுதற்குரியதே. ஆகிலும் பின்வரும் வசனத்திற்கு உங்கள் பதில் என்ன என்பதை தெரிந்துகொள்ள ஆவலாயுள்ளேன்.

1 கொரி. 15:22 ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறதுபோல, கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.

இவ்வசனத்தின்படி பார்த்தால், ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்க வேண்டும்தானே? இக்கேள்விக்கு உங்கள் பதில் என்ன?


சகோதரர்  அவர்களே! 

ஆதாமுக்குள் எல்லோரும் மரிக்கிறோம் என்பது முற்றிலும் உண்மையே.

அது எப்படியெனில் ஆதியில் ஆதாம்   தேவன் விலக்கிய கனியை புசித்த நாளில்  இருந்து அவனுக்கு சாவு என்பது நிச்சயமான ஒன்றாகி விட்டது. அதாவது  அந்த கனியை புசித்த நாளில் இருந்தே அவன் சாவை நோக்கியே பயணித்துக்கொண்டு இருந்தான். அதாவது அவன் தேவன் சொன்னதுபோல் கனியை புசித்த நாளிலேயே ஆவியில் மரித்துபோனான்  அந்த மரணம் மாம்சத்தில் வெளிப்பட  தொளாயிரத்து முப்பது வருஷம் ஆனது.

இதை ஒத்த உதாரணத்துடன் சொல்வோமாகில் நமது ஊர் பக்கங்களில் தலை இல்லாமல் இருக்கும் ஒரு மொட்டை பனைக்கு நிகராக கூறமுடியும். நாம்  மேலே எட்டி பார்க்காமல் கீழேயே பார்த்துகொண்டுபோனால் அந்த தலையில்லா பனையும் கூட ஒரு எண்ணிக்கையாகவே தெரியும் ஆனால் அதன் ஜீவன் முடிந்து விட்டது என்றும், ஒருநாள் அது விழுந்துவிடும் என்பதும் அதன் தலைபகுதியை பார்த்தால் தான் தெரியும். 

அதேபோல் இந்த உலகத்தில் எண்ணிக்கைக்கு கோடி கணக்கில் ஜனங்கள் இருந்தாலும் அவர்கள் எல்லோரும் மரித்தவர்களே! இயேசுவை ஏற்றுக்கொண்ட ஜனங்கள் மட்டுமே ஜீவனுள்ளவர்கள் என்ற நிலைக்கு வருகிறார்கள். காரணம் இயேசு ஒரு மனுஷனுக்கு  புது ஜீவன் கொடுக்கிறார். அதாவது  கொல்லப்பட்ட ஜீவனில்லா  நிலையில் இருக்கும் ஒரு மனுஷன்  இயேசுவால் உயிர்பிகக படுகிரான்.

I கொரிந்தியர் 15:45  பிந்தின ஆதாம் உயிர்ப்பிக்கிற ஆவியானார்.
எபேசியர் 2:1 அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்ப்பித்தார்.

செத்தவனை தானே உயிர்பிக்க முடியும்! அதாவது மனுஷன் என்பவன் ஏற்கெனவே மரித்த  நிலையிலேயே  இருக்கிரானேயன்றி அவன் ஜீவனுள்ள நிலையில் இல்லை. அவன் பிறக்கும்போதே மரணத்தை நோக்கியே போகிறான் அது நிறைவேறும் நாள்தான் வேருபடுமேயன்றி அவன் உண்மையில்  ஒரு மரித்தவனே என்பது இயேசுவின்  இந்த கூற்றை கவனித்தால் புரியும். .

மத்தேயு 8:22 அதற்கு இயேசு: மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம் பண்ணட்டும், நீ என்னைப் பின்பற்றி வா என்றார்.
 
எதையும் ஆவிக்குரிய கண்களிலேயே பார்க்கும் இயேசுவுக்கு உயிரோடு இருக்கும் மனுஷர்கள்கூட    மரித்தவர்களாகவே தெரிந்தனர். காரணம் ஆதாமின் பாவத்தால் அவர்கள் மரித்திருந்ததை அவர் பார்க்க முடிந்தது.  இதையே பவுல் எல்லோரும் மரிக்கிறார்கள் என்று சொல்லியிருக்கிறார்.  
 
ஒரு விதைக்குள் ஜீவன் இருக்கிறதா அது நிலத்தில் போடப்பட்டால் உயிரடைந்து வளருமா என்பதை ஒரு விதையை பார்த்த மாத்திரத்தில் சொல்லிவிட முடியாது. அதுபோல் மாம்சம் என்பது ஒன்றுமே இல்லை. அதுவரும் கூடு!  அதை வைத்து
எந்த ஒரு முடிவுக்கும் நாம் வரவே முடியாது.  ஒரு மனுஷனை கொல்லுவதும் உயிர்ப்பிப்பதும் ஆவியே  அன்றி அங்கு மாம்சத்துக்கு எந்த பங்கும் இல்லை.
 
யோவான் 6:63 ஆவியே உயிர்ப்பிக்கிறது, மாம்சமானது ஒன்றுக்கும் உதவாது;
   
சுருக்கமாக சொன்னால்,  ஆதாமின் பாவத்தால் மனுஷன் என்பவன் செத்த நிலையில் இருக்கிறான். அதையே பவுல் "ஆதாமுக்குள் எல்லோரும் மரிக்கிறது போல" என்று எழுதுகிறார். அந்த மரித்த நிலையில் இருக்கும் மனுஷனுக்குள்
இயேசு தரும் ஜீவனை பிரவேசிக்கும்போது அவன் உயிர்பிக்கபடுகிறான். அவ்வாறு  ஆவியில் அவன் உயிர்பிக்கபட்டால் மாத்திரமே அவன் உயிரடைவான், இல்லை யேல் மரித்த நிலையில் இருக்கும் அவன் ஒருநாள் விழுந்து அழிந்து போவான்.   
 
அடுத்து. 
பவுல் சொல்லும் இந்தகூற்று, நிகழ்கால நடைமுறை  சம்பவத்தின் அடிப்படையில் விமர்சிக்கப்படும் ஒரு கூற்றாகவும் எடுத்து பொருள்கொள்ள வாய்ப்பிருக்கிறது. 
 
ஆதாமின் பாவத்தில் எல்லோரும் பூமியில் சரீர மரணத்தை சந்தித்து கொண்டிருப் பதை பார்த்த பவுல் "இப்படி மரிப்பதுபோல"  என்று சொல்ல முடியும். ஆனால் இவற்றின் இந்தகூற்றை அவரின் இன்னொரு கூற்றுகூட மாற்றிவிட வாய்ப்புண்டு!
 
I கொரிந்தியர் 15:51 இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன்; நாமெல்லாரும் நித்திரையடைவதில்லை;
 
இங்கு நித்திரை என்பது முதலாம் மரணத்தை குறிக்கும் சொல்லாக உள்ளது. இது நிறைவேறும்போது பவுல் சொல்லியிருக்கும் நடைமுறை கூற்று மாறிவிடும். அது போல்  இயேசுவின் வார்த்தைகளும்!ஒருவரிடத்தில் அது நிறைவேறும்போது அது நடைமுறை உண்மையை மாற்றி அமைத்துவிடும்!
 


-- Edited by SUNDAR on Saturday 22nd of October 2011 05:05:28 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

1 2 3  >  Last»  | Page of 3  sorted by
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard