இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சுந்தர் அவர்களின் வேதபோதனைக்கு வசன ஆதாரம் தேவை!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
சுந்தர் அவர்களின் வேதபோதனைக்கு வசன ஆதாரம் தேவை!
Permalink Closed


John wrote:

 அவர் கட்டளைகளை கைகொள்பவனுக்கு மரணமே இல்லை என்று உளறி விட்டு இப்போது ஏன் மாற்றுகிறீர்கள்? அவர் வரும்போது உயிரோடு இருக்கிற கிறிஸ்தவர்கள் மரிக்காமல் மறுரூபம் ஆவர்கள் என்று வேதம் சொல்லுகிறது இங்கே எங்கே கட்டளை வந்தது?


மரணமே இல்லாததற்கும்,  நித்திரை என்னும் "மரணம் அடையாமல் மறுரூபம் ஆவதற்கும்" என்ன பெரிய வேறுபாடு கண்டுவிட்டீர்கள் எனக்கு இரண்டும் ஒன்றுபோல்தான் தெரிகிறது. நான் என்ன எழுதுகிறேன் என்பதையே அறியமுடியாமல் எப்படியாவது என்னை எதிர்க்கவேண்டும் என்ற நோக்கில் இருக்கும் தங்களுக்கு  எல்லாம் உளறல் போலவே தெரியும்.  நான் தொடக்கத்தில் இருந்தே நித்திரை அடையாமல் மறுரூபம் ஆவதைத்தான் "மரணத்தை   ஜெயித்தல்" என்று எழுதிக்கொண்டு இருக்கிறேன். பவுல் அந்த ரகசியத்தை அறிந்திருந்தும் அவரால்  முடியாமல் போனது அவர் மரித்தார். ஆனால   வசனத்தின் அடிப்படையில் அது சாத்தியமே "அதுவே  மரணத்தை ஜெயித்தல்" என்பதுதான் நான் எழுதும் கருத்தின் அடிப்படை அதுவே.  

  
SUNDAR wrote: 
 /////2. யோவா 8:51 ஒருவன் என் வார்த்தையைக் கைக்கொண்டால், அவன் என்றென்றைக்கும் மரணத்தைக் காண்பதில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
இந்த வசனத்தில் சொல்லபட்டிருப்பது இரண்டாம் மரணம் என்றால், இயேசுவின் வார்த்தைகளை கைகொண்டவன் மட்டும்தான் இரண்டாம் மரணத்தை காணாமல் இருக்க முடியுமா? இயேசுவின் மலை பிரசங்கத்தில் போதித்துள்ள எலலா வார்த்தையையும் கருத்தில்கொண்டு பதில் தாருங்கள்.//
John wrote:
////அவருடைய வார்த்தையை கைகொண்டவன், கைகொள்வதின் நிமித்தம் மாத்திரம் தான் பரலோகம் போவான் என்றால் கிறிஸ்து மாத்திரம் தான் பரலோகத்தில் இருப்பார்.///
 
தெரிகிறதல்லவா?  ஒருவன் செத்த பின்தானே பரலோகம் போகமுடியும்?பிறகு இயேசு "மரணத்தை காண்பதில்லை" என்று சொல்வது,  முதல் மரணத்தை குறித்துதான் என்று புரிவதற்கு தங்கள் இருதயம் ஏன் அடைத்துகொண்டது. அங்கேயும் விடமாட்டேன் இங்கேயும்
விடமாடடேன் என்று பிடிவாதம் பிடித்து  வசனத்தை சுற்றிவிட்டு
குழப்புகிறீர்கள்.        
 
இயேசுவின் வார்த்தையை கைகொள்ள மாட்டீர்கள் ஆனால் மரணத்தை ஜெயித்து பரலோகம் போய்விடுவீர்கள் அப்படிதானே?   
 
இயேசுவின் வார்த்தையையே invalid ஆக்குகிறீர்கள்.
 
"ஒருவன் என் வார்த்தையைக் கைக்கொண்டால், அவன் என்றென்றைக்கும் மரணத்தைக் காண்பதில்லை" என்று  இயேசு சொல்வது இரண்டாம் மரணத்தை குறிக்குமானால். இயேசுவின் வார்த்தைகளை முழுமையாக கைகொண்டு நடக்காத நீங்கள் இரண்டாம் மரணத்தை காண்பீர்கள் என்பதை ஒத்துகொள்ளுங்கள்.  இல்லை நான் விசுவாசத்தின் அடிப்படையில் இரண்டாம் மரணத்தை ஜெயித்து விடுவேன் பரலோகம் சேர்ந்துவிடுவேன் என்று கருதினால் இயேசு இங்கு முதலாம் மரணத்தை குறித்துதான் சொல்கிறார் என்பதை  ஏற்றுக்கொள்ளுங்கள்.    
 
சுத்தி சுத்தி வரும்  வேலை எல்லாம் இங்கு வேண்டாம்.  
 
மேலும் வசனம் இங்கு பொதுவாக "மரணம்" என்று சொல்லுகிறது அதன் முன்னால் "இரண்டாம்" என்ற வார்த்தையை சேர்க்க யாருக்கும் எந்த அதிகாரமும் இல்லை. 
  
John wrote:    
 ////கிழே உள்ள வசனங்களை அப்படியே எடுத்து கொண்டால் நீங்கள் பரலோகம் போவிர்களா? அல்லது இரண்டாம் மரணம் அடைவீர்களா?
வெளி 21:8 பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார்.
I கொரிந்தியர் 6:9 அநியாயக்காரர் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று அறியீர்களா? வஞ்சிக்கப்படாதிருங்கள்; வேசிமார்க்கத்தாரும், விக்கிரகாராதனைக்காரரும், விபசாரக்காரரும், சுயபுணர்ச்சிக்காரரும், ஆண்புணர்ச்சிக்காரரும்,////
 
இது என்ன கேள்வி? இந்த கேள்விக்குதான் மேலேயே நீங்கள் பதில் சொல்லியிருக்கிறீர்களே! இயேசு மேலுள்ள விசுவாசத்தை சரியாக காத்துகொண்டாலே போதும் அது ஒருவரை இரண்டாம் மரணத்தில் இருந்து தப்புவிக்கும். 
 
ரோமர் 4:5 ஒருவன் கிரியை செய்யாமல் பாவியை நீதிமானாக்குகிறவரிடத்தில் விசுவாசம் வைக்கிறவனாயிருந்தால், அவனுடைய விசுவாசமே அவனுக்கு நீதியாக எண்ணப்படும்.
 
இது கிறிஸ்த்தவர்கள் எல்லோருமே அறிந்தது.  ஆனால் இயேசுவின் வார்த்தைகள்படி வாழ்ந்தால்  முதலாம் மரணத்தில் இருந்துகூட தப்பிக்க முடியும் என்பதை குறித்துதான் இங்கு விவாதிக்கிறோம்.  ஆ! இவன் கிரியை குறித்து பேசுகிறான் கிருபையை நிராகரிக்கிறான் என்று சொல்லாதீர்கள். கிருபை என்பது முதலில் அது நம்மை  இரண்டாம் மரணத்தில் இருந்து ரட்சிக்கும். கிரியை என்பது அடுத்து அது நமை முதல் மரணத்தில்  இருந்தும் ரட்சிக்க முடியும் என்பதே உண்மை!    
இயேசு சும்மா தேவியில்லாமல் என் வார்த்தையை கைகொள்ளுங்கள்  கைகொள்ளுங்கள் என்று சொல்லி செல்லவில்லை.   
 
 
SUNDAR
1. யோவான் 11:25 இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்;
இந்த வசனத்தில் இயேசு "மரித்தாலும்" என்று சொல்வது முதல் மரணத்தையா அல்லது இரண்டாம் மரணத்தையா?//
John wrote: 
முதல் அல்லது மாம்ச மரணத்தை
SUNDAR  
//யோ 26. உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா என்றார்.
இந்த வசனத்தில் இயேசு "மரியாமலும்" என்று சொல்வது முதல் மரணத்தையா அல்லது இரண்டாம் மரணத்தையா//
John wrote: 
இரண்டாவது அல்லது ஆவிக்குரிய மரணத்தை.
 
அடுத்தடுத்து இயேசு சொன்ன இரண்டு வசனங்களை எடுத்து சொல்லி, என் வார்த்தையில் உள்ள உண்மைகளை நிரூபிக்க முயன்றாலும் "முதலில்   சொன்னது முதலாம் மரணம் இரண்டாம் வசனம் சொல்வது இரண்டாம் மரணம்" என்று தங்கள் இஷடத்துக்கு வசனத்தை வளைத்து சமாளித்து பிடிவாதமாக நின்று விசுவாசிக்க
மறுத்தால்,  என்னால் எங்கிருந்து புது புது வசனத்தை கொண்டுவந்து காட்ட முடியும் சகோதரரே?  தங்கள் விருப்பம்போல் ஜீவவார்த்தைக்கு  முன்னால்  முதல்,  இரண்டு என்று அடைமொழிகளை  சேர்த்துக்
கொள்ள இது என்ன வெங்காய வியாபாரமா?  உங்கள் பொருள் கொள்ளுதல்  உங்களோடு இருக்கட்டும் என்னிடம் வந்து தேவையற்ற கேள்விகளை கேட்பதற்கு யாருக்கும் எந்த அருகதையும் இல்லை. வசனத்தை உள்ளதை உள்ளதுபோல் பொருள் கொள்ளுங்கள் இல்லை யெனில் நான் பத்து வசனத்தை சொன்னாலும் நீங்கள ஏற்க்கபோவது இல்லை.  உங்கள் செத்த விசுவாசத்தை கொண்டுவந்து இங்கு காட்ட வேண்டாம்.  என்னுடைய கருத்துக்களுக்கு வசன ஆதாரம் கேட்டீர்கள் கொடுத்துவிட்டேன் அவ்வளவே!  
           
கிறிஸ்த்தவ மார்க்கவே விசுவாசத்தின் மேல் கட்டபட்ட ஓன்று இந்நிலையில்  நேரடியாக சொல்லபட்ட வார்த்தைகளையே புரட்டி  புரட்டி பொருள் கொள்ளும்  தங்கள் போன்றவர்களிடம் வாதிடுவதில் எந்த பயனும் இல்லை.  வசனங்களை விசுவாசிக்க சக்தியில்லாத மந்த இருதயத்துக்கு எல்லாம் திரும்ப திரும்ப விளக்கம் சொல்ல என்னால் முடியாது.   
 
John wrote:
////பரிசேயரை போல என்னை நியாயம் தீர்ப்பதை நிறுத்துங்கள். என் தேவனுக்கும் எனக்கும் தெரியும் நான் கிருபையை லைசென்சாக எண்ணிக் கொண்டு பாவம் செய்கிறேனா அல்லது அவருடையை சிலுவை ரத்தத்தில் நம்பிக்கை வைத்து பரலோக ராஜ்ஜியத்தை பலவந்தம் செய்கிறேனா என்பது.///
 
உங்களை நான் எங்கும் நியாயம் தீர்க்கவில்லையே. நீங்களே உங்கள்மேல்வரும் தீர்ப்பை எழுதுகிறீர்கள். உங்கள் வார்த்தைகளின்  அடிப்படையில்தானே நான் சொல்கிறேன்  "ஒருவன்  என்  வார்த்தையை கைகொண்டால் அவன் மரணத்தை காண்பதில்லை" என்று இயேசு  சொல்வது இரண்டாம் மரணதைதான்  குறிக்கிறது என்று  தீர்த்தால், அவர் வார்த்தையை கைகொள்ளாத  நீங்கள்  எப்படி இரண்டாம்  மரணத்துக்கு தப்பிக்க முடியும்?  உங்களை நீங்களேதான்  நியாயம் தீர்த்துகொள்கிறீர்கள்!   
  
John wrote:
////நீங்கள் செய்வதை தொடர்ந்து செய்தால் உங்களை மாத்திரம் அல்ல இன்னும் அநேகரை கிருபையில் இருந்து விழ செய்து விடுவீர்கள்!///
 
இறுதியில் எதாவது குறை சொல்லவேண்டும் என்று என்மீது அபாண்டமான பழியை போடவேண்டாம்.  நான் இங்கு கிருபையின் மேன்மையை குறைத்து எழுதியிருக்கும் ஏதாவது ஒரு வார்த்தையை எடுத்து  காண்பியுங்கள். முதலில் இயேசுவை சொந்த ரட்சகராக ஏற்றுக்கொள்ளவேண்டும் அதுவே ஒருவரை இரண்டாம் மரணத்தில் இருந்து இரட்சிக்கும் அது முக்கியம். அத்தோடு இயேசுவின் வார்த்தைகளை கைகொண்டு வாழ பிரயாசம் எடுக்க வேண்டும் என்பதே எனது போதனை.
 
இது இரண்டுமே வேதத்தில் திரும்ப திரும்ப சொல்லபட்டுள்ள வார்த்தைகள்தான். இதன் அடிப்படையில் என்மீது பழிபோட்டால் அது வேதத்தின் மீது பழி போடுவதற்குத்தான் சமமாகும்.   

 



-- Edited by SUNDAR on Thursday 19th of January 2012 10:56:02 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



இனியவர்

Status: Offline
Posts: 59
Date:
Permalink Closed

//பவுல் அந்த ரகசியத்தை அறிந்திருந்தும் அவரால் முடியாமல் போனது அவர் மரித்தார்.//

ஆக பவுல் மரணத்திற்கு ஏற்ற பாவம் செய்துவிட்டதால் மரித்து விட்டார் அப்படித்தானே?  அப்புறம் ஏன் கிழே உள்ள வசனத்தில் இப்படி எழுதினர் 

I கொரிந்தியர் 4:4 என்னிடத்தில் நான் யாதொரு குற்றத்தையும் அறியேன்; ஆகிலும் அதினாலே நான் நீதிமானாகிறதில்லை; என்னை நியாயம் விசாரிக்கிறவர் கர்த்தரே. 


 //ஆனால வசனத்தின் அடிப்படையில் அது சாத்தியமே "அதுவே மரணத்தை ஜெயித்தல்" //

மரிக்காமல் மறுரூபம் ஆகுபவர்கள் அவர் வரும்போது உயிரோடு இருப்பவர்கள் என்று தான் வசனம் சொல்லுகிறது. பவுல் உங்களை போல எனக்கு மாம்ச மரணம் இல்லை என்று உளறி கொண்டு திரிந்து இருந்தால் கிழே உள்ள வசனத்தை எழுதியிருக்க மாட்டார்!

பிலிப்பியர் 3:10 இப்படி நான் அவரையும் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும், அவருடைய பாடுகளின் ஐக்கியத்தையும் அறிகிறதற்கும், அவருடைய மரணத்திற்கொப்பான மரணத்திற்குள்ளாகி, எப்படியாயினும் நான் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்திருப்பதற்குத் தகுதியாகும்படிக்கும்,

//"ஒருவன் என் வார்த்தையைக் கைக்கொண்டால், அவன் என்றென்றைக்கும் மரணத்தைக் காண்பதில்லை" என்று இயேசு சொல்வது இரண்டாம் மரணத்தை குறிக்குமானால். இயேசுவின் வார்த்தைகளை முழுமையாக கைகொண்டு நடக்காத நீங்கள் இரண்டாம் மரணத்தை காண்பீர்கள் என்பதை ஒத்துகொள்ளுங்கள்.//

ஒருவன் என் வார்த்தையைக் கைக்கொண்டால் என்பது பாவமே இல்லாத ஒரு நிலை என்று நீங்கள் கருதினால் அதற்கும் கிறிஸ்துவை தவிர ஒருவருக்கும் தகுதி இல்லை! மாறாக வார்த்தையை கைகொள்வது என்றால் அவர் தேவனுடைய குமாரன் என்ற வார்த்தையை விசுவாசித்து அவரை ஏற்று கொள்ளுவது. பாவமில்லாமல் நான் வாழ்கிறேன் அதலால் எனக்கு மரணமே இல்லை என்று சொல்லுகிறவன் தேவனை பொயயராக்குகிறவன். அதைத்தான் நீங்கள் செய்துகொண்டு இருக்கிறீர்கள்!

//இது கிறிஸ்த்தவர்கள் எல்லோருமே அறிந்தது. ஆனால் இயேசுவின் வார்த்தைகள்படி வாழ்ந்தால் முதலாம் மரணத்தில் இருந்துகூட தப்பிக்க முடியும் என்பதை குறித்துதான் இங்கு விவாதிக்கிறோம். ஆ! இவன் கிரியை குறித்து பேசுகிறான் கிருபையை நிராகரிக்கிறான் என்று சொல்லாதீர்கள். கிருபை என்பது முதலில் அது நம்மை இரண்டாம் மரணத்தில் இருந்து ரட்சிக்கும். கிரியை என்பது அடுத்து அது நமை முதல் மரணத்தில் இருந்தும் ரட்சிக்க முடியும் என்பதே உண்மை! //

அவருடைய வார்த்தைகளை கைகொண்டு நடந்த சீஷர்கள் எல்லாம் முதல் மரணத்தை எதிர்பார்த்தார்கள், மரித்தும் போனார்கள். கிருஸ்துவே சிஷர்கள் வசனத்தைக் கைக்கொண்டார்கள் என்று சொல்லுகிறார் அப்புறம் ஏன் மரித்தார்கள்?

யோவான் 17:6 நீர் உலகத்தில் தெரிந்தெடுத்து எனக்குத் தந்த மனுஷருக்கு உம்முடைய நாமத்தை வெளிப்படுத்தினேன். அவர்கள் உம்முடையவர்களாயிருந்தார்கள், அவர்களை எனக்குத் தந்தீர், அவர்கள் உம்முடைய வசனத்தைக் கைக்கொண்டிருக்கிறார்கள்.

// என்னுடைய கருத்துக்களுக்கு வசன ஆதாரம் கேட்டீர்கள் கொடுத்துவிட்டேன் அவ்வளவே! //


கிழித்தீர்கள்! சாத்தான் கிறிஸ்துவிடம் வசனம் சொன்னது போல Out of Context ல் எதோ சப்பை கட்டு கட்டினீர்கள் என்பதை உங்கள் பதில்களை வாசித்தாலே புரியும். சரி நாங்கள் Context பத்தி கவலை படமாட்டோம் அப்படியே கதை புத்தகம் போல வாசிப்போம் என்று நீங்கள் பிடிவாதம் பிடித்தால் கிழே உள்ளவசனங்களில் வரும் மரணம் எந்த மரணம்? முதல் மரணமா??


மத்தேயு 8:22 அதற்கு இயேசு: மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம் பண்ணட்டும், நீ என்னைப் பின்பற்றி வா என்றார்.

எபேசியர் 2:1 அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்ப்பித்தார்.

கொலோசெயர் 3:3 ஏனென்றால், நீங்கள் மரித்தீர்கள், உங்கள் ஜீவன் கிறிஸ்துவுடனே தேவனுக்குள் மறைந்திருக்கிறது.

//நான் இங்கு கிருபையின் மேன்மையை குறைத்து எழுதியிருக்கும் ஏதாவது ஒரு வார்த்தையை எடுத்து காண்பியுங்கள்.//

நான் செய்கிற கிரியையின் நிமித்தம் என்னக்கு முதல் மரணமில்லை என்று நினைப்பதை விட கிருபையை எப்படி அசிங்கப்படுத்தலாம் என்று நினைக்கிறீகள்?



-- Edited by John on Friday 20th of January 2012 03:54:59 AM



-- Edited by John on Friday 20th of January 2012 03:55:54 AM

__________________


இனியவர்

Status: Offline
Posts: 59
Date:
Permalink Closed

//இது என்ன பதில் சகோதரரே? ஒரே இயேசு கிறிஸ்து அடுத்தடுத்து வசனங்களில் "மரித்தாலும்", "மரியாமலும்" என்று சொல்கிறார். ஒன்றை முதல் மரணம் என்றும் இன்னொன்றை இரண்டாம் மரணம் என்று தீர்மானிக்கும் அதிகாரம் எங்கிருந்து தங்களுக்கு கிடைத்தது. இப்படி ஒரு அருத்தம் எடுத்து வியாக்கீனம் பண்ணினால் அவரவர் எப்படி வேண்டுமானாலும் வியாக்கீனம் பண்ணலாமே. அப்படியெல்லாம் தங்கள் இஸ்டத்துக்கு வியாக்கீனம் பண்ணுவதை கேட்பதற்கு வேறு ஆட்களை பாருங்கள். //

அது வேதம் கொடுக்கும் அதிகாரம். ஒரு வசனத்தை வியாக்கியானம் செய்யும் போது அது மற்றவசனங்களில் முரண்படக்கூடாது.

கிழே உள்ள ஒரே வசனத்தில் வருகிற இரண்டு மரித்தோறும் ஒன்றா? சரியாக வியாக்கியானம் பண்ண Context ரொம்ப முக்கியம்!

மத்தேயு 8:22 அதற்கு இயேசு: மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம் பண்ணட்டும், நீ என்னைப் பின்பற்றி வா என்றார்.


__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink Closed

சகோ. ஜான் அவர்களே  தாங்கள் கேட்டுள்ள பல கேள்விகளுக்கு நான் ஏற்கெனவே பதில் கொடுத்தாகி விட்டது. இனியும் தொடந்து  விவாதித்துகொண்டு இருப்பதில் எந்த பயனும்இல்லை. 

 

கிறிஸ்த்துவை பிசாசு சோதித்தபோது அது வசனத்துக்கு வெளியில் போகிறது என்றுசொல்லி அவர் மறுக்கவில்லை. சாத்தான் கேட்ட கேள்விக்குஅவன் வசன ஆதாரம்கொடுத்துதான் கேள்விகேட்கிறான்.  இயேசுவோ தேவனை பரீட்சை பார்க்ககூடாது என்ற காரணத்தால்தான் அதை செய்ய மறுக்கிறாரே அன்றி உங்கள் கருத்துபோல் அது வசனத்துக்குவெளியே இருப்பதால் அல்ல. அதை அவரே அவருடய வாயால் சொல்கிறார்.  "தேவனை பரீட்சைபாராதிருப்பாயாக என்று எழுதியிருக்கிறது" என்று. உங்கள் கற்பனையை கலந்து பயன்படுத்தவேண்டாம்.         

 

என் வார்த்தையை கைகொள்பவன்தான் மரணத்தை காண்பதில்லை  என்று இயேசு சொன்னது இரண்டாம் மரணத்தைத்தான் குறிக்கிறது என்று உறுதியாக நம்பும் பட்சத்தில்  இயேசுசொன்ன வார்த்தையை கைகொள்ளாதவனுக்கு   இரண்டாம் மரணம் நிச்சயம்  உண்டு.  இதை யாரும்மாற்றிவிட முடியாது. இயேசுவின் வார்த்தைகள் சொன்னது சொன்னதுதான்.      

 

இப்பொழுது நான் விசுவாசித்து எழுதும் கருத்தின்மேல் நம்பிக்கை இல்லாத நீங்கள் உங்கள் வேதாகமத்தில் இருந்து கீழ்கண்ட வசனத்தை நீக்கிவிடுங்கள். 

 

மத்தேயு 19:26  தேவனாலே எல்லாம்கூடும்என்றார்

மாற்கு 9:23  விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம்கூடும் என்றார்.
மாற்கு 10:27தேவனாலே எல்லாம்கூடும்என்றார்.
மாற்கு 14:36அப்பாபிதாவே, எல்லாம்உம்மாலேகூடும்;

லூக்கா:1 37.தேவனாலே கூடாத காரியம்ஒன்றுமில்லை என்றான்.

இதில் எல்லாம் கூடும்/ கூடாததுஒன்றுமில்லை  போன்ற வார்த்தைகளுக்கு டிஸ்நெரியில் பொருள்  பாருங்கள்.  "தேவனால் கூடாதது எதுவும் இல்லை" என்று எத்தனையோ வசனங்கள் சொன்னாலும்"வானத்தின் மதகுகளைகர்த்தர் திறந்தாலும் இப்படி
நடக்குமா" பழைய ஏற்பாட்டில் ஒரு பிரதானி கேட்டதுபோல் கேட்கும் மனுஷன்ர்கள் முன்னால் முத்துக்களை  போடுவதில்  எந்த பிரயோஜனமும்இல்லை. 

 

இதுபோல் எந்த கருத்தையும் நான் இனி எழுதபோவது இல்லை! விட்டுவிடுவோம்.

 

  



__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



இனியவர்

Status: Offline
Posts: 59
Date:
Permalink Closed

//இதில் எல்லாம் கூடும்/ கூடாததுஒன்றுமில்லை போன்ற வார்த்தைகளுக்கு டிஸ்நெரியில் பொருள் பாருங்கள். "தேவனால் கூடாதது எதுவும் இல்லை" என்று எத்தனையோ வசனங்கள் சொன்னாலும்"வானத்தின் மதகுகளைகர்த்தர் திறந்தாலும் இப்படி நடக்குமா" பழைய ஏற்பாட்டில் ஒரு பிரதானி கேட்டதுபோல் கேட்கும் மனுஷன்ர்கள் முன்னால் முத்துக்களை போடுவதில் எந்த பிரயோஜனமும்இல்லை. //


வேத ஆதாரம் இல்லாமல் தப்பு தப்பாய் வியாக்கியானம் செய்து விட்டு ஒன்றுக்கும் பதில் தராமல் ஓடுகிறீர்கள்! நான் என்னுடைய கற்பனை கேள்விகளை கேட்கவில்லை வேத வசனத்திற்கு விளக்கம்தான் கேட்கிறேன்.

பவுல் மாம்ச மரணமில்லா வாழ்கையை எதிர்பார்த்து இருந்தால் ஏன் அவர் மரணம் அடைந்தார்? மாம்ச மரணம் நிகழ அவர்செய்த பாவம் என்ன? கிழே உள்ள வசனத்தை எழுதினர்?

I கொரிந்தியர் 4:4 என்னிடத்தில் நான் யாதொரு குற்றத்தையும் அறியேன்; ஆகிலும் அதினாலே நான் நீதிமானாகிறதில்லை; என்னை நியாயம் விசாரிக்கிறவர் கர்த்தரே.

பிலிப்பியர் 3:10 இப்படி நான் அவரையும் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும், அவருடைய பாடுகளின் ஐக்கியத்தையும் அறிகிறதற்கும், அவருடைய மரணத்திற்கொப்பான மரணத்திற்குள்ளாகி, எப்படியாயினும் நான் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்திருப்பதற்குத் தகுதியாகும்படிக்கும்,

அவருடைய வசனத்தை கைகொள்ளுகிறவர்களுக்கு இரண்டாம் மரணம் இல்லை என்றால் கிழே உள்ள வசனத்தின் படி சீஷர்கள் அனைவரும் மரித்து இருக்க கூடாது

யோவான் 17:6 நீர் உலகத்தில் தெரிந்தெடுத்து எனக்குத் தந்த மனுஷருக்கு உம்முடைய நாமத்தை வெளிப்படுத்தினேன். அவர்கள் உம்முடையவர்களாயிருந்தார்கள், அவர்களை எனக்குத் தந்தீர், அவர்கள் உம்முடைய வசனத்தைக் கைக்கொண்டிருக்கிறார்கள்.

கிழே உள்ள வசனங்களில் உள்ள மரித்தவர்கள் யார்?


மத்தேயு 8:22 அதற்கு இயேசு: மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம் பண்ணட்டும், நீ என்னைப் பின்பற்றி வா என்றார்.

எபேசியர் 2:1 அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்ப்பித்தார்.

கொலோசெயர் 3:3 ஏனென்றால், நீங்கள் மரித்தீர்கள், உங்கள் ஜீவன் கிறிஸ்துவுடனே தேவனுக்குள் மறைந்திருக்கிறது.


தளத்தை பார்வையிடும் மற்ற சகோதரார்கள் நான் கேட்கும் கேளிவிகளில் நியாயம் இல்லை என்று கருதினால் அதை எனக்கு விளக்கும் படி கேட்கிறேன்.



-- Edited by John on Saturday 21st of January 2012 05:00:58 AM

__________________


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
Permalink Closed

John wrote:

தளத்தை பார்வையிடும் மற்ற சகோதரார்கள் நான் கேட்கும் கேளிவிகளில் நியாயம் இல்லை என்று கருதினால் அதை எனக்கு விளக்கும் படி கேட்கிறேன்.

 


 சகோ. ஜான் அவர்களே நாங்கள் ஒண்ணும் தெரியாமல் இங்கு எழுதவும் இல்லை. யார் சொல்லும் எந்த ஒரு காரியத்தையும்  அடுக்கடுக்கான கேள்விகள் ஆதாரம்  இல்லாமல்  ஆமோதிக்கவும் இல்லை. நீங்கள் கேட்கும்  கேள்வியில் நியாயம் இல்லை என்று நானே சொல்லுவேன். 

இயேசுவின் உபதேசத்தில் "மரணம்" சம்பந்தபட்ட வார்த்தை சுமார் 30௦க்கு மேற்பட்ட  இடத்திலும்  "மரித்தோர்" சம்பந்தபட்ட  வார்த்தை சுமார் 60௦க்கு மேற்ப்பட்ட இடத்திலும் வருகிறது. இவற்றில் ஏறக்குறைய எல்லா வசனமுமே  முதல் மரணத்தை  குறிப்பதாகவே தெரிகிறது.  இந்நிலையில் சுந்தர் தனது கருத்துக்கு ஆதாரமாக காண்பிக்கும் அந்த இரண்டு வசனங்களை மட்டும் "இரண்டாம் மரணம்" என்று சொல்லி நீங்கள் பிடிவாதம் பிடிப்பது நிச்சயம்  நியாயம் இல்லை சகோதரரே.  கடவுள் இல்லை என்று பிடிவாதம் பிடிப்பவனுக்கு எப்படி கடவுளை கட்ட முடியாதோ அதுபோல் இவ்வளவு தெளிவாக சொல்லும் வசனங்களை மாற்றினால் ஆண்டவர் வந்தால்தான் ஆதாரம் தரமுடியும் மேலதிகமாக என்ன சொல்ல முடியும்? 

 
பொறுத்திருங்கள் ஜெபிக்கலாம் 'தேவனால் கூடாதது எதுவும் இல்லை" எனவே தங்களின்  கேள்விகளுக்கு  பதில் வரலாம்.   
 
இன்னொண்ணு  பவுலை பற்றி திரும்ப திரும்ப கேட்டு, பவுலை சாட்சியாக வைத்து உங்களின்  கருத்தை நியாயப்படுத்த விரும்புகிறீர்கள். ஆனால் பவுல் சொன்னதுபோல் இன்று நானும் "என்னிடம் எந்த குற்றமும் இல்லை" என்று  சொல்ல முடியும்.  நீங்களும் சொல்ல முடியும். 
 
ஆனால் இங்கு இயேசுவே என்ன சொல்கிறார் 
 
என்னைக்குறித்து நானே சாட்சிகொடுத்தால் என் சாட்சி மெய்யாயிராது. யோ 5:31
 
ஆனானபட்ட தேவ குமாரனே என்னை குறித்து நான் சாட்சி கொடுக்கமுடியாது என்று சொல்லும் போது அடுத்து வந்த பவுல் எம்மாத்திரம்?
 
எனவே இதெல்லாம் காரியத்துக்கு உதவாத கேள்விகள்போல் எனக்கு தெரிகிறது.
 


__________________


இனியவர்

Status: Offline
Posts: 59
Date:
Permalink Closed

//என்னைக்குறித்து நானே சாட்சிகொடுத்தால் என் சாட்சி மெய்யாயிராது. யோ 5:31

ஆனானபட்ட தேவ குமாரனே என்னை குறித்து நான் சாட்சி கொடுக்கமுடியாது என்று சொல்லும் போது அடுத்து வந்த பவுல் எம்மாத்திரம்?//

பாதியோடு நிறுத்தினால் எப்படி சகோ. நேசன்?

யோவான் 8 :14. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: என்னைக்குறித்து நானே சாட்சிகொடுத்தாலும், என் சாட்சி உண்மையாயிருக்கிறது; ஏனெனில் நான் எங்கேயிருந்து வந்தேனென்றும், எங்கே போகிறேனென்றும் அறிந்திருக்கிறேன்; நீங்களோ நான் எங்கேயிருந்து வருகிறேனென்றும், எங்கே போகிறேனென்றும் அறியீர்கள்.

இயேசு தன்னை குறித்து சாட்சிகொடுத்தாலும் அவருடைய சாட்சி உண்மை, அவர் வாயை திறந்து எதாவது சொன்னால் அது தேவன் சொல்லுவதற்கு சமம் ஏனென்றால் அவர் எப்போதும் தனியே இருப்பதில்லை.

யோவான் 8 :16. நான் நியாயந்தீர்த்தால், என் தீர்ப்பு சத்தியத்தின்படியிருக்கும்; ஏனெனில் நான் தனித்திருக்கவில்லை, நானும் என்னை அனுப்பின பிதாவுமாக இருக்கிறோம்.

இயேசு தன்னுடைய மாம்சத்தில்மாத்திரம் தன்னை குறித்து சாட்சிகொடுத்தால் அது மெய்யாயிராது ஆனால் அவர் தனியே இருப்பதே இல்லை

யோவான் 8:29 என்னை அனுப்பினவர் என்னுடனேகூட இருக்கிறார், பிதாவுக்குப் பிரியமானவைகளை நான் எப்பொழுதும் செய்கிறபடியால் அவர் என்னைத் தனியே இருக்கவிடவில்லை என்றார்.

பவுல் தனியே தன்னை குறித்து எழுதவில்லை ஆவியானவரே எழுதினார் ஆகையால் அந்த வசனம் தவறு அல்ல!

//வார்த்தை சுமார் 60௦க்கு மேற்ப்பட்ட இடத்திலும் வருகிறது. இவற்றில் ஏறக்குறைய எல்லா வசனமுமே முதல் மரணத்தை குறிப்பதாகவே தெரிகிறது. இந்நிலையில் சுந்தர் தனது கருத்துக்கு ஆதாரமாக காண்பிக்கும் அந்த இரண்டு வசனங்களை மட்டும் "இரண்டாம் மரணம்" என்று சொல்லி நீங்கள் பிடிவாதம் பிடிப்பது நிச்சயம் நியாயம் இல்லை சகோதரரே.//
நான் கேட்ட கேள்விகளை மீண்டும் படியுங்கள். எதையாவது வசன ஆதாரம் இல்லாமல் கேட்டு இருக்கிறேனா? திரு.சுந்தர் அவர்கள் சொன்ன கருத்துக்கு முரணாக உள்ள தேவனுடைய வார்த்தைகளை பதித்து உள்ளேன். இப்போது உள்ள கேள்வி நீங்கள் திரு. சுந்தரை விசுவாசிகிறீர்களா? அல்லது தேவனை விசுவாசிகிறீர்களா?

பவுல் மாம்ச மரணமில்லா வாழ்கையை எதிர்பார்த்து இருந்தால் ஏன் அவர் மரணம் அடைந்தார்? மாம்ச மரணம் நிகழ அவர்செய்த பாவம் என்ன? கிழே உள்ள வசனத்தை எழுதினர்?

I கொரிந்தியர் 4:4 என்னிடத்தில் நான் யாதொரு குற்றத்தையும் அறியேன்; ஆகிலும் அதினாலே நான் நீதிமானாகிறதில்லை; என்னை நியாயம் விசாரிக்கிறவர் கர்த்தரே.

பிலிப்பியர் 3:10 இப்படி நான் அவரையும் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும், அவருடைய பாடுகளின் ஐக்கியத்தையும் அறிகிறதற்கும், அவருடைய மரணத்திற்கொப்பான மரணத்திற்குள்ளாகி, எப்படியாயினும் நான் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்திருப்பதற்குத் தகுதியாகும்படிக்கும்,

அவருடைய வசனத்தை கைகொள்ளுகிறவர்களுக்கு இரண்டாம் மரணம் இல்லை என்றால் கிழே உள்ள வசனத்தின் படி சீஷர்கள் அனைவரும் மரித்து இருக்க கூடாது

யோவான் 17:6 நீர் உலகத்தில் தெரிந்தெடுத்து எனக்குத் தந்த மனுஷருக்கு உம்முடைய நாமத்தை வெளிப்படுத்தினேன். அவர்கள் உம்முடையவர்களாயிருந்தார்கள், அவர்களை எனக்குத் தந்தீர், அவர்கள் உம்முடைய வசனத்தைக் கைக்கொண்டிருக்கிறார்கள்.

கிழே உள்ள வசனங்களில் உள்ள மரித்தவர்கள் யார்?


மத்தேயு 8:22 அதற்கு இயேசு: மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம் பண்ணட்டும், நீ என்னைப் பின்பற்றி வா என்றார்.

எபேசியர் 2:1 அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்ப்பித்தார்.

கொலோசெயர் 3:3 ஏனென்றால், நீங்கள் மரித்தீர்கள், உங்கள் ஜீவன் கிறிஸ்துவுடனே தேவனுக்குள் மறைந்திருக்கிறது.


தளத்தை பார்வையிடும் மற்ற சகோதரார்கள் நான் கேட்கும் கேளிவிகளில் நியாயம் இல்லை என்று கருதினால் அதை எனக்கு விளக்கும் படி கேட்கிறேன்.

 



-- Edited by John on Tuesday 24th of January 2012 12:36:52 AM

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink Closed

சகோ. ஜான் அவர்களின் எல்லா கேள்விக்கு என்னிடம் பதில் உண்டு. ஆனால் "தேவனால் எல்லாம் கூடும்" "தேவனால் கூடாதது  எதுவும் இல்லை" "விசுவசித்தவனுக்கு எல்லாம் கூடும்" போன்ற பல்வேறு  வசனங்களை விசுவாசிக்க முடியாமல் "பாவியிலும் பிரதான பாவி நான்" என்று சொல்லி, தன்னுடய  சொந்த அபிப்பராயம் என்று சொல்லியே  சில காரியங்களை எழுதியிருக்கும் பவுலை,  தேவனை  விட   அதிகமாக  விசுவாசிப்பதால் அவருக்கு நான் எதையம்  சொல்ல விரும்பவில்லை.    
 
"மரணத்தை ஜெயிக்கமுடியும்" என்பதற்கான வேத வாசன ஆதாரத்தின் தொகுப்பை மாத்திரம் இங்கு தருகிறேன்
 
நியமனங்கள்: (பாவமே மரணத்துக்கு காரணம், பாவம் இல்லாமல் மரணம் இல்லை)  
 
ரோமர் 6:23 பாவத்தின் சம்பளம் மரணம்;  (இதில் இரண்டு மரணமும் அடங்கும்)
 
பாவ மன்னிப்பின் வழி!
 
எபிரெயர் 9:22  இரத்தஞ்சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது.
 
வாக்குதத்தங்கள்:
சங்கீதம் 68:20  ஆண்டவராகிய கர்த்தரால் மரணத்திற்கு நீங்கும் வழிகளுண்டு.
 
ஓசியா 13:14  அவர்களை மரணத்துக்கு நீங்கலாக்கி விடுவிப்பேன்
நீதிமொழிகள் 12:28 நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை.
 
நிறைவேருதல்கள்: இயேசுவின்  இரத்தம் சகல (முதல் மற்றும் இரண்டாம் மரணத்துக்குரிய எல்லா) பாவத்தையும் நீக்கும்!    
 
I யோவான் 1:7  ; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.)
 
வழிமுறைகள்:இயேசுவை விசுவாசித்தல் முதல்படி. அவர் வார்த்தையை கைகொள்ளுதல் இரண்டாம் படி
 
யோவான் 11:26 உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்; 
 
யோவான் 8:51 ஒருவன் என் வார்த்தையைக் கைக்கொண்டால், அவன் என்றென்றைக்கும் மரணத்தைக் காண்பதில்லை
 
எவ்வாறு நிறைவேறும்:
சாவுக்கேதுவான  சரீரம் உயிர்ப்பிக்கப்பட்டு அது நித்திரை அடையாமல்(மரிக்காமல்) மறுரூபம் ஆகும்!
 
ரோமர் 8:11 அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்.
 
I கொரிந்தியர் 15:51 இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன்; நாமெல்லாரும் நித்திரையடைவதில்லை; ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம்.
 
நான் மேலே "மரணம்" என்றும் குறிப்பிட்ட எந்த வசனத்துக்கு முன்னும் "இரண்டாம்" என்ற வார்த்தை  கிடையாது. இரண்டாம்  மரணம் என்பது நியாயத்தீர்ப்புக்கு பின்னுள்ளது அதுபற்றி வேதம் தெளிவாக  இரண்டாம் மரணம் என்று குறிப்பிட்டிருக்கிறது.   
 
வெளி 20:14 அப்பொழுது மரணமும் பாதாளமும் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டன. இது இரண்டாம் மரணம்.
 
எனவே! சொல்லபட்டவசனத்துடன் வேறு எழுத்துக்களையும் உறுப்புக்களையும் சேர்த்துக்கொண்டு விவாதம்பண்ண யாருக்கும் அதிகாரம் இல்லை! மேலதிக விளக்கம் தரவும் நான் விரும்பவில்லை!  
 
"சாகவே சாவாய்"  என்று தேவன் சபித்த   எல்லா சாபங்களும்
"பிழைக்கவே பிழைப்பான்" என்ற  தீர்க்கதரிசியின் வார்த்தைகள்  மூலம் விமோச்சனம் பெறுகிறது. எனவே பாவத்தால் வந்த எல்லாவித மரணமும்  பரிகாரியாகிய இயேசுவால் முடிவுக்கு வரும்!  
 
தேவன் சொன்னதை பல்வேறு வசன ஆதாரத்தோடு இங்கு எழுதி வைத்துள்ளேன்! இதற்க்கு மேலும் இந்த உண்மையை  விசுவாசிக்க முடியாதவர்கள், தேவனின் சர்வ வல்லமையை மட்டுமல்ல இயேசுவின் இரத்தத்தின் வல்லமையாகிய சகல
பாவங்களையும்  சுத்திகரிக்கும் வல்லமை மற்றும் கிருபையின்
மிக மேன்மையான நிலையாகிய எல்லா மரணத்தையும் ஜெயித்தல் போன்றவற்றையும் மறுதலிக்கிறது!
 
நான் எழுதும் எல்லா காரியங்களுக்கும் ஓரிரு  வசன ஆதாரம் கொடுத்துதான்  எழுதுகிறேன் ஆனால் இங்கோ தெளிவாக சொல்லபட்ட வசன  ஆதாரங்களையே பலர் புரட்டுவதால் என்னால்  இனி வசன ஆதாரம் எதுவும் தரமுடியாது.  எனவே இந்த திரியை பூட்டிவிட பரிந்துரைக்கிறேன்.   


-- Edited by SUNDAR on Thursday 26th of January 2012 02:30:12 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

«First  <  1 2 3 | Page of 3  sorted by
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard