ஆண்டவராகிய இயேசு பல இடங்களில் தன்னை பற்றி கூறுகையில் இவ்வாறு கூறுகிறார்!
வெளி 2:8முந்தினவரும் பிந்தினவரும், மரித்திருந்து பிழைத்தவருமானவர் சொல்லுகிறதாவது; வெளி 1:17 பயப்படாதே, நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன்; வெளி 1:11அது நான் அல்பாவும் ஓமெகாவும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன்
அதாவது இயேசு தன்னை "முந்தினவரும் அவர்தான் பிந்தினவரும் அவர்தான்" என்று கூறுகிறார்.
அவர் சர்வ சிருஷ்டிக்கும் முந்தினவர் என்பதை நாம் அறிவோம். அதை குறித்து வேதம் நமக்கு வேதம் இவ்வாறு போதிக்கிறது
மேலும் மரித்தோரில் இருந்து எழுந்ததிலும் அவர் "முதல்பேறுமாக" இருக்கிறார் என்று வேதம் சொல்கிறது
கொலோசெயர் 1:18எல்லாவற்றிலும் முதல்வராயிருக்கும்படி, அவரே ஆதியும் மரித்தோரிலிருந்து எழுந்த முதற்பேறுமானவர்.
இவ்வாறு அவர் சர்வ சிருஷ்டிக்கும் முந்தினவராக இருப்பதால் அவருககாக அவரின் மூலமே மற்ற சிருஷ்டிகள் எல்லாம் படைக்கபட்டதாலும் அவரை "முந்தினவர்" என்று சொல்வது புரியவருகிறது.
ஆனால் இயேசு தன்னை "பிந்தினவர்" என்றும் குறிப்பிட காரணம் என்ன? அறிந்த சகோதரர்கள் சற்று விளக்கவும்.
-- Edited by SUNDAR on Thursday 20th of October 2011 08:30:14 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
பழைய ஏற்பாட்டில் வரும் பின் வரும் வசனங்களும் இதனை குறிப்பிட்டு இயேசுவை தேவன் என அறிக்கை செய்கின்றன..
ஏசாயா 44:6 நான் முந்தினவரும், நான் பிந்தினவருந்தானே; என்னைத்தவிர தேவன் இல்லையென்று, இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தரும், சேனைகளின் கர்த்தராகிய அவனுடைய மீட்பரும் சொல்லுகிறார்.
ஏசாயா 41:4 அதைச் செய்து நிறைவேற்றி, ஆதிமுதற்கொண்டு தலைமுறைகளை வரவழைக்கிறவர் யார்? முந்தினவராயிருக்கிற கர்த்தராகியநான்தானே; பிந்தினவர்களோடும் இருப்பவராகிய நான்தானே.
இயேசுவானவர் முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறார் (first and last )
தொடக்கமும் முடிவும்(அல்பா ஒமேகா ) ,ஆரம்பமும் கடைசியுமாகவும்(beginning and end ) இருக்கிறார் என வேதம் சொல்கிறது!!
வெளி 22:13 நான் அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன்.
யோவான் 1:3 சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.
என வேதம் சொல்லுகிறதை பார்க்கும்போது அவர் தொடக்கம்,அல்பா,முந்தினவர் என்பதை தெளிவாய் அறிய இயலும். ஆனால் அவர் பிந்தினவர்,கடையானவர்,முடிவானவர் என்பதை உலக முடிவு பற்றி பேசும் தீர்க்கதரிசன புத்தகங்களில் மாத்திரமே பார்க்க இயலுகிறது(ஏசாயா,வெளி.)
இதற்கான காரணம், இயேசுவிற்கும் உலக முடிவிற்கும் உள்ள தொடர்பே!!
இதிலிருந்து நான் அறிந்து கொண்டது என்ன வென்றால், எப்படி உலகம் அவர் மூலமாய் உண்டாயிற்றோ, அதே போலவே அவருக்காகவும்,அவர் மூலமாகவும் நீதியின் படி சங்கரிக்கபடும்.
கடல் அகன்று,நகரமும்,பாதாளமும் தள்ளப்பட்டு அக்கினி கடலாய் மாறும்.சூரியனில்லாத வேறொரு பூமி வேறொரு வான மண்டலத்தில் சிருஸ்டிக்கபடும். கர்த்தரின் பிரசன்னம் அதை பிரகாசிபிக்கும்.
இறுதி நியாயதீர்ப்பு செய்யும் அதிகாரம் கர்த்தராகிய இயேசுவிற்கு பரிபூரணமாய் ஒப்புக்கொடுக்கப்பட்டிருப்பதினாலும்,
நியாயதீர்ப்பு அவரினாலும்,அவரை முன்னிட்டும் ஏற்படுவதாலும்,முடிவு அவரின் கையில் இருந்து வருகிரபடியினாலும் அவரே கடையானவர்,பிந்தினவர்,முடிவானவர் என அறியபடுகிறார்.
அவருடைய சரீரத்தில் நாம் அனைவரும் மணவாட்டியை பங்கடைய போகிறபடியினால் அவரே இறுதி சிருச்டியாய் நிலைநிர்பார். நாமும் அவரில் நிலை கொண்டிருப்போம் என்பது என்னுடைய மற்றொரு விசுவாசத்துடன் கூடியதான புரிதல்..
சகோதரரின் புரிதலையும் பதிலையும் அறிய ஆவல்!
GLORY TO GOD THE LORD
-- Edited by JOHN12 on Friday 26th of April 2013 04:01:20 PM
வேதபுத்தகத்தில் அவர் சகல சிருஷ்டிக்கும் முந்தினவர் என்று எழுதப்பட்டுள்ளது
கொலோசெயர் 1:15 அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர்.
முந்தினவர் என்பதன் பொருள் அனைவரும் அறிந்ததே ஆனால் பிந்தினவர் என்பதன் பொருள் தான் சரியாக தெரியவில்லை எனக்கு தெரிந்த சில கருத்துகளை பதிவிடுகின்றேன்
கிழே கொடுக்க பட்டுள்ள வசனத்தை நன்கு கவனித்தால் முந்தின மனுஷன் என்று ஆதாமையும்இராண்டாம் மனுஷன் இயேசு என்றும் சொல்லப்பட்டுள்ளது
I கொரிந்தியர் 15:47முந்தின மனுஷன் பூமியிலிருந்துண்டான மண்ணானவன்; இரண்டாம் மனுஷன் வானத்திலிருந்துவந்த கர்த்தர்.
ஆதாம் முதல் மனுஷன் என்றால் ஆபேல் காயின் இரண்டாம் மனுஷன் அல்லவா ஆனால் இங்கு ஏன் ஆண்டவராகிய இயேசுவை இரண்டாம் மனுஷன் அதாவது பிந்தினவர் என்று கூட குறிப்பிடாமல் ஆதாம் முதல் மனிதன் என்றும் இயேசு இரண்டாம் மனிதன் என்றும் தெளிவாய் குறிபிடப்பட்டுள்ளது
ஆணும் பெண்ணும் சேர்ந்ததினால் உண்டான மனிதர்கள் எல்லாம் மனிதர்கள் இல்லையா ?
பவுல் சொல்வது போலவே இவர்கள் இருவரும் வித்தியாசமானவர்கள் தான் ஆதாம் தேவனால் படைக்க பட்ட முதல் மனிதன்இயேசு மனுஷனாக தேவனால் அனுப்ப பட்டஇரண்டாம் மனிதன்.
இதுவரை தான் என்னால் யோசிக்க முடிந்தது
மேலும் இந்த தலைப்பின் பதிலை சகோதர்களிடம் எதிர்பார்கின்றேன்
-- Edited by EDWIN SUDHAKAR on Friday 26th of April 2013 05:13:42 PM
__________________
காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)
அனாதியான தேவன், தன் வார்த்தையானவரை முதன் முதலில் ஜெனிப்பித்தார். இதுவே சூன்யத்தில் உண்டான முதல் சலனம். வார்த்தையானவர் மட்டுமே தேவனால் நேரடியாக ஜெனிப்பிக்கப்பட்டவர். இந்த தனித்தன்மையினாலேயே இவர் ஒரே பேறான குமாரன் என அழைக்கப்படுகிறார். மற்ற சிருஸ்டிப்புக்கள் அனைத்தும் வார்த்தையினால் படைக்கப்பட்டவை.
கொலோசெயர் 1:15 அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர்.
இதனால் இவர் ஆதி அல்லது காலத்தின் ஆரம்பம் என அழைக்கப்படுகிறார்.
இவரை முதலாவதாக கொண்டு தன் படைப்பை, தேவன் தொடங்கினார். இவரை கொண்டு, இவருக்காக அனைத்தும் படைக்கப்பட்டன. இதனால் இவர் சிருஸ்டிப்பின் தொடக்கமாய் இருக்கிறார். இதனால் இவர் முந்தினவர் ஆகிறார்.
அகர முதல எழுத்தெல்லாம், ஆதி பகவன் முதற்றே உலகு
ஆதியாகமத்தில் முதல் அத்தியாயத்தில் அடிக்கடி வரும் "அது அப்படியே ஆயிற்று" என வரும் வார்த்தை மூல மொழியில் "அவர் அப்படியே ஆனார்" என்று உள்ளது. இங்கு வரும் அவர் என்பது வார்த்தையானவரை குறிக்கிறது. (இந்த உலகில் முதன் முதலில் உருவான உயிர்களின் இணைகளும், விருட்சங்களும் தேவனே என்று இந்து உபனிடதம் ஒன்று கூறுகிறது.)
ஆல்பா என்பது கிரேக்க மொழியின் முதல் எழுத்து. ஒமேகா என்பது இறுதி எழுத்து. இந்த இரண்டு வார்த்தைகளுக்குள் கிரேக்க மொழியின் எல்லா எழுத்துக்களும் அடங்கும். இந்த எழுத்துக்கள் ஒன்று சேர்ந்து வார்த்தைகள் பிறக்கின்றன. அவை ஒரு அர்த்தத்தை கொடுக்கின்றன.
இப்போது "அ" என்று ஒரு பேப்பரில் எழுதுகிறேன்,. இது ஒரு தொடக்கத்தை குறிக்கிறது. ஆனால் எந்த அர்த்தத்தையும் கொடுக்கவில்லை. இயேசு கிருஸ்து சிருஸ்டிப்பின் தொடக்கம் மட்டுமல்லாது அதன் அர்த்தமும் ஆவார். அதாவது அவர் தொடக்கமும், முடிவுமன்றி அதன் மூலம் வரும் அர்த்தமும் ஆவார். அதாவது அவர் தேவ விருப்பத்திற்கான, தேவ செயலுக்கான, தேவ சித்தத்திற்கான துவக்கமும், தொடர் செயலும், முடிவும் ஆவார்.
(Christ is not only the first but also the beginning, the beginning of God’s economy and God’s operation. God’s operation began and will end with Christ. This Christ is also the content and continuation of God’s operation, because He is not only the beginning and the ending but also the Alpha and the Omega.
In other words, the Son, Jesus Christ, is everything. He is the first and the last, the beginning and the ending of God’s operation, and the content and continuation of whatever God is doing. Because the Greek letters from Alpha to Omega comprise all the letters of the Greek alphabet, we may say that Christ is every letter for us to compose words, sentences, paragraphs, chapters, and books. Hallelujah, He is everything!
In 3:14 we are told that the Son is the origination of the creation of God. This is an important concept. The translators have been troubled by this verse. Some have said that Christ is the originator, not the origination. However, the meaning here is not originator but origination. Christ is the origination of God’s action to create the universe. - விட்னஸ் லீ என்ற தேவ ஊழியர் எழுதியது.)
ஆண்டவராகிய இயேசு பல இடங்களில் தன்னை பற்றி கூறுகையில் இவ்வாறு கூறுகிறார்!
வெளி 2:8முந்தினவரும் பிந்தினவரும், மரித்திருந்து பிழைத்தவருமானவர் சொல்லுகிறதாவது; வெளி 1:17 பயப்படாதே, நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன்; வெளி 1:11அது நான் அல்பாவும் ஓமெகாவும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன்
அதாவது இயேசு தன்னை "முந்தினவரும் அவர்தான் பிந்தினவரும் அவர்தான்" என்று கூறுகிறார்.
அவர் சர்வ சிருஷ்டிக்கும் முந்தினவர் என்பதை நாம் அறிவோம். அதை குறித்து வேதம் நமக்கு வேதம் இவ்வாறு போதிக்கிறது
மேலும் மரித்தோரில் இருந்து எழுந்ததிலும் அவர் "முதல்பேறுமாக" இருக்கிறார் என்று வேதம் சொல்கிறது
கொலோசெயர் 1:18எல்லாவற்றிலும் முதல்வராயிருக்கும்படி, அவரே ஆதியும் மரித்தோரிலிருந்து எழுந்த முதற்பேறுமானவர்.
இவ்வாறு அவர் சர்வ சிருஷ்டிக்கும் முந்தினவராக இருப்பதால் அவருககாக அவரின் மூலமே மற்ற சிருஷ்டிகள் எல்லாம் படைக்கபட்டதாலும் அவரை "முந்தினவர்" என்று சொல்வது புரியவருகிறது.
ஆனால் இயேசு தன்னை "பிந்தினவர்" என்றும் குறிப்பிட காரணம் என்ன? அறிந்த சகோதரர்கள் சற்று விளக்கவும்.
-- Edited by SUNDAR on Thursday 20th of October 2011 08:30:14 PM
ஆண்டவராகிய இயேசு முந்தினவர் என்பதற்கு விளக்கம் மேலேயுள்ள பதிவில் தெளிவாக இருக்கிறது.
அவர் "பிந்தினவர்" என்று சொல்லப்பட காரணம் என்னவெனில்
ஆதாம் முதல் மனுஷன்! ஆண்டவராகிய இயேசு கடைசி மனுஷன் அல்லது இரண்டாம் ஆதாம் அல்லது பிந்தின ஆதாம் அவருக்கு பின்னர் எந்த மனுஷனும் புதிதாக இந்த உலகுக்குள் வரவும் இல்லை படைக்கப்படவும் இல்லை.