இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சகோ. எட்வின் சுதாகருக்காக ஜெபித்து கொள்ளுங்கள்

MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
சகோ. எட்வின் சுதாகருக்காக ஜெபித்து கொள்ளுங்கள்
Permalink  
 
இந்த தளத்தில் நம்மோடு இணைத்து பதிவுகளை  தந்து வந்த சகோ. எட்வின் சுதாகர் நேற்று காலையில் இருசக்கர வாகன த்தில் அலுவலகம் வந்துகொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டு காலில் பலமான காயம் ஏற்ப்பட்டுள்ளது.
 
இறைவனின் பெரிதான கிருபையால் எலும்பில் எதுவும்  முறிவு ஏற்ப்படவில்லை என்றாலும் அவர்கள்  ஒரு வாரத்துக்கு நடமாடகூடாது என்று டாக்டர்கள் அறிவுறுத்தி யுள்ளனர்.
 
எல்லோரும் அதிசயிக்கும் வண்ணம் அவர் விரைவில் குணமடைந்து நடமாடவும், மீண்டும் அவரது பணிகளை தொடரவும் இரக்கங்களின் தேவனை நோக்கி  பிராத்திப்போமாக!
 
"மஹா கிருபையுள்ள எங்கள் நல்ல தகப்பனே இந்த அருமையான நாளுக்காக நன்றி ஐயா!  இந்த நாளிலும் கூட எங்கள் அருமை சகோதரர் எட்வின் சுதாகருக்காக உம் பாதத்தை நோக்கி கெஞ்சுகிறோம். விபத்துக்குள்ளான சகோதரனின் கால் தசைகள் மீண்டும் சரியான நிலைக்கு திரும்பவும், எந்த பாதிப்பும் இல்லாமல்  விரைவில் அவர் எழுந்து நடந்து பழைய நிலைக்கு திரும்பி அவரது அன்றாட அலுவல்களில் ஈடுபடவும் ஆண்டவர் தாமே கிருபையோடு  இரங்கும்படி மன்றாடுகிறோம்.      
 
உம்முடய நாமம் மாத்திரம் மகிமைபடட்டும்! இயேசுவின்  இனிய நாமத்தில் பிதாவே!
 
ஆமென்!

__________________
HMV

இனியவர்

Status: Offline
Posts: 53
Date:
RE: சகோ. எட்வின் சுதாகருக்காக ஜெபித்து கொள்ளுங்கள்
Permalink  
 
கர்த்தருடைய காரியங்களில் துணிகரமாகக் கருத்து சொல்லாதிருக்க எட்வின் அவர்கள் எச்சரிக்கப்பட்டிருக்கிறார்;அதிக கேடுண்டாதிருக்க இனி அவர் பரிசுத்த வேதாகமம் சம்பந்தமான காரியங்களில் அதிக ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்;

திரு.சுந்தர் அவர்களுக்கும் இது ஒரு நல்ல படிப்பினையாக இருக்கட்டும்; வேதத்தை எடுத்து போதிக்கவும் தியானிக்கவும் தேவனுடைய விசேஷித்த இரக்கமும் கிருபையும் வேண்டும்;அதைக் குறித்து சிறிதும் கவலை கொள்ளாமல் ஏட்டிக்கு போட்டி என்று எதையாவது எழுதிவிட்டு போகக் கூடாது.

எஸ்றா போன்ற வேத பண்டிதர்களே கருத்து சொல்ல அஞ்சிய காரியங்களில் புறசாதி மனுஷனான சுந்தர் போன்றவர்கள் காளான்களைப் போல எழும்பி கண்டதையும் போதிப்பதைக் காண சகிக்கவில்லை.

__________________

மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2008
Date:
சகோ. எட்வின் சுதாகருக்காக ஜெபித்து கொள்ளுங்கள்
Permalink  
 
HMV wrote:

உங்களை  போன்றவர்களுக்கு இந்த கருத்தை எழுதுவீர்கள் என்பதை நான் கர்த்தருக்குள் நிச்சயம் எதிர்பார்தேன்! சிலருக்கு விபத்து நடக்கவில்லை என்பதால் அவர்கள் சரியாக  இருக்கிறார்கள் சரியாக நடக்கிறார்கள் என்றோ  அல்லது ஒரு சிலருக்கு விபத்து நடந்துவிட்டால் அவர் தவறாக போதிக்கிறார் அல்லது தவறாக நடக்கிறார் என்றோ பொருள் கொள்வோமாகில் இன்று உலகில் ஒருவரும் ஒன்றையும் போதிக்க முடியாது.

பவுலுக்கு வந்த துன்பங்களை அவர் பட்டியலிட்டிருப்பார் பாருங்கள். அவரும் கூட பல அறிய கருத்துக்களை  துணிந்து கூறியிருக்கிறார் தானே?

உலகத்தில் உபத்திரியமும் துன்பமும் யாருக்கு வராமல் இல்லை?  இநிலையில் விபத்து நடந்த ஒருவரை குறித்து நீங்கள் எழுதியிருக்கும் காரியங்கள் ஆன்மீக் காரியங்களில் உங்களுக்கு இருக்கும் IMMATURITY தன்மையையுமே வெளிக்காட்டுகிறது.     

II தீமோத்தேயு 3:12

அன்றியும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்.

என்றுதானே வேதம் சொல்கிறது.  துன்பத்தையும் துக்கத்தையும் அனுபவிக்காமல் சொகுசாக வாழ்கிறவர்கள் தான் தங்களின் ஆன்மீக நிலை குறித்து மறுபரிசீலனை செய்யவேண்டும்.  

காலம் காலமாக  யாரோ  வெளிநாட்டவன்  சொன்ன   விளக்கங்களை  கண்மூடித்தனமாக  பின்பற்றி வேதபாடம்  என்று பாடம்படித்துவிட்டு  வேதவார்த்தைகளை உள்ளபடி விசுவாசிக்க முடியாமல் விலகிகொண்டிருக்கும் கூட்டங்களுக்கு  நான் சொல்வதில் உள்ள மேலான விசுவாசமும் அதிலுள்ள  உண்மை புரியப்போவது  இல்லை.  இங்குள்ள கருத்துக்கள் அநேகருக்கு பயனுள்ளதாக இருக்கிறது என்பதை பல சகோதரர்கள்
எனக்கு போன்பண்ணி தெரிவித்துவிட்டார்கள்.தங்களைப்போல அதிமேதாவிகளுக்கு இதை ஏற்க்க முடியாது!   
 
இங்கு கூறப்படும் கருத்துக்களில் தேவனை மேன்மைபடுத்தும் கருத்துக்களே யன்றி தேவனையும் அவர் வல்லமையையும் மட்டுப்படுத்தும் விதத்தில் அமைந்த எந்த கருத்தும் இல்லை! அப்படி எதுவும் இருந்தால் தெரிவியுங்கள்.
 
என்னுடய எழுத்துக்களால் சாத்தானின் ராஜ்ஜியம் ஆட்டம் கண்டுகொண்டிருப்ப தாலும் அவன் முடிவு மிகவும் நெருங்கிவிட்டதாலும் பாதாளத்துக்குள் வரை சென்று, திரும்பவும் கர்த்தரால் மீட்கப்பட்டுள்ள என்னை எதுவுமே அவனால் செய்யமுடியாது என்ற காரணத்தாலும் எனக்கு துணை வருபவர்களை  தாக்குகிறான். 
 
ஆண்டவரை அறிந்துகொண்டதில் இருந்து கடந்த இருபது வருடமாக இந்த காரியங்களைதான்  நான் போதித்து வருகிறேன். அந்த இருபது வருடங்களில் என்னுடய உடம்பில் ஒரு இன்ஜெக்சன்கூட போட்டது கிடையாது. எனக்கு நீங்கள் எச்சரிக்கை செய்யாதீர்கள். உங்கள் நிலைமையை நீங்கள் கவனித்துகொள்ளுங்கள். சாத்தானால் என்னை தொடவே முடியாது என்பது அவனுக்கே தெரியும். ஆனால் ஆண்டவர் கரத்தில் நான் என்னை ஒப்புகொடுக்கிறேன். நான் தவறாக ஒரேஒரு வார்த்தை எழுதினாலும் கூட நாளை அல்ல இன்றே அவர் எனக்கு உணர்த்திவிடுவர்.  
 
அடுத்தவருக்கு நடந்துவிட்டது என்று நியாயம் தீர்க்க துணியாதீர்கள். வேறு எதுவும் நான் உங்களுக்கு எழுத விரும்பவில்லை!
 
சத்துரு வெட்கப்பட்டு போகும்படி ஆண்டவர் விரைவில் நம சகோதரனை எழுப்பி கொண்டுவருவார்!
 
-- Edited by SUNDAR on Saturday 22nd of October 2011 10:54:32 AM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

HMV

இனியவர்

Status: Offline
Posts: 53
Date:
RE: சகோ. எட்வின் சுதாகருக்காக ஜெபித்து கொள்ளுங்கள்
Permalink  
 
SUNDAR wrote:
HMV wrote:

கர்த்தருடைய காரியங்களில் துணிகரமாகக் கருத்து சொல்லாதிருக்க எட்வின் அவர்கள் எச்சரிக்கப்பட்டிருக்கிறார்;அதிக கேடுண்டாதிருக்க இனி அவர் பரிசுத்த வேதாகமம் சம்பந்தமான காரியங்களில் அதிக ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்;

திரு.சுந்தர் அவர்களுக்கும் இது ஒரு நல்ல படிப்பினையாக இருக்கட்டும்; வேதத்தை எடுத்து போதிக்கவும் தியானிக்கவும் தேவனுடைய விசேஷித்த இரக்கமும் கிருபையும் வேண்டும்;அதைக் குறித்து சிறிதும் கவலை கொள்ளாமல் ஏட்டிக்கு போட்டி என்று எதையாவது எழுதிவிட்டு போகக் கூடாது.

எஸ்றா போன்ற வேத பண்டிதர்களே கருத்து சொல்ல அஞ்சிய காரியங்களில் புறசாதி மனுஷனான சுந்தர் போன்றவர்கள் காளான்களைப் போல எழும்பி கண்டதையும் போதிப்பதைக் காண சகிக்கவில்லை.

பவுலுக்கு வந்த துன்பங்களை அவர் பட்டியலிட்டிருப்பார் பாருங்கள். அவரும் கூட பல அறிய கருத்துக்களை  துணிந்து கூறியிருக்கிறார் தானே?

/...

ஆண்டவரை அறிந்துகொண்டதில் இருந்து கடந்த இருபது வருடமாக இந்த காரியங்களைதான்  நான் போதித்து வருகிறேன். அந்த இருபது வருடங்களில் என்னுடய உடம்பில் ஒரு இன்ஜெக்சன்கூட போட்டது கிடையாது. 

 அப்படியானால் ஆண்டவருடைய எச்சரிப்பின் சத்தத்தை எப்படி அறிவீர்கள், ஐயா..? எட்வினும் பவுலடிகளும் ஒன்றா..? எட்வின் அளவுக்கு பவுலடிகளுக்கு ஞானம் இருந்ததா என்ன..? நீங்கள் ஊசி போட்டதில்லை என்பது ரொம்ப சந்தோஷம்...ஆனா உங்கள் மனைவி பிள்ளைகளுக்கும் இது பொருந்துகிறதா..? உங்களைப் போல‌ ரொம்ப சுயநலமானவர்களை நான் பார்க்கவில்லை;ஆண்டவர் ஒரு மனிதனை உணர்த்த அவன் பிள்ளைகளுக்கு அக்கிரமத்தை பலிக்கப்பண்ணுவார் என்பதை நீங்கள் அறியவில்லையே... நீங்கள் இப்போது எழுதும் அருவருப்பான விளக்கங்களின் விளைவினை உங்கள் சந்ததி சந்திக்கும் ஐயா..! நம்முடைய முன்னோர்களின் வரலாறே அதற்கு சாட்சி..? நீங்கள் பாலாசீர் லாறி போன்றோரை மிஞ்சுவீர்களோ... அவருடைய சந்ததியைப் பாரும்..!

__________________

மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2008
Date:
சகோ. எட்வின் சுதாகருக்காக ஜெபித்து கொள்ளுங்கள்
Permalink  
 
தங்கள் கருத்துக்கும் வாழ்த்துதல்கலுக்கும் மிக்க  நன்றி.  இதுபோன்ற பல  சாப வார்த்தைகளை பயன்படுத்துகிறவரும்  யார் என்பது எனக்கு நன்றாகே தெரியும்!
 
HMV என்ற  பெயருக்கு  பதில் HIV என்ற பெயருக்கு பின்னால் ஒளிந்துகொண்டால் உங்களுக்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். 
 
உங்கள போன்று முகாந்திரமில்லமல் குறைசொல்பவர்களிடம் எனக்கு எந்த வாக்குவாதமும் வேண்டாம்  என்று  கருதுகிறேன்! 
 
மொத்தத்தில் ஓன்று மட்டும் எனக்கு புரிகிறது. அதாவது சாத்தான் அதுதான் பிசாசு என்மேல் கடும் கோபமாக இருக்கிறன் என்பதே அது!  
 
என்னை ஒன்றும் செய்ய முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் என்னுடைய சந்ததியை சபிக்க ஆள் அனுப்பியிருக்கிறான் போலும்! 
 
அனால் என் சந்ததிக்கு ஆண்டவர் அருமையான வாக்குத்தத்தம் தந்திருக்கிறார்:
 
யாத்திராகமம் 20:6 என்னிடத்தில் அன்புகூர்ந்து, என் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறைமட்டும் இரக்கஞ் செய்கிறவராயிருக்கிறேன்.
உபாகமம் 5:10 என்னிடத்தில் அன்புகூர்ந்து, என் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறைமட்டும் இரக்கஞ்செய்கிறவராயிருக்கிறேன்.

தேவனின் கற்பனையை கைகொண்டு வாழும் என் சந்ததிக்கு ஆயிரம் தலை முறைவரைக்கும் தேவனின்  இரக்கம்  இருக்கையில் இந்த சாபமோ அல்லது தங்கள் எதிர்பார்ப்போ நடக்காது ஐயா!
 
ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக

-- Edited by SUNDAR on Saturday 22nd of October 2011 05:09:27 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

HMV

இனியவர்

Status: Offline
Posts: 53
Date:
Permalink  
 
SUNDAR wrote:
மொத்தத்தில் ஓன்று மட்டும் எனக்கு புரிகிறது. அதாவது சாத்தான் அதுதான் பிசாசு என்மேல் கடும் கோபமாக இருக்கிறன் என்பதே அது!  
 
 ஐயா, ஒருபாவமும் அறியாத என்மீது வீண்பழி சுமத்திவிட்டு உம்மை இயேசுநாதர் ரேஞ்சுக்கு உயர்த்திக்கொள்ளாதிரும்;நான் சாத்தானோ சாத்தானின் தூதுவனோ அல்ல; நீர் இயேசுவோ இயேசுவின் அடியவரோ அல்ல; இயேசுவானவர் போதிக்காதவற்றையெல்லாம் சொந்த ஞானத்திலும் ஒளியின் தூதனுடைய் வேடத்தைத் தரித்தவனான பொல்லாங்கனுடைய மாயத்தினாலும் தரிசித்து குப்பைகளைக் கிளறும் உங்கள் சந்ததிகளுக்கு சாபத்தையே வைத்துசெல்லுகிறீர்கள் என்று கருதுகிறேன்;

"என்று கருதுகிறேன்" எனும் வார்த்தையினால் எதைவேண்டுமானாலும் எழுத உரிமை படைத்த நீங்கள் என்னைக் கட்டுப்படுத்த இயலுமா என்ன? உங்களிடம் நான் வாக்குவாதம் செய்யமுடியுமா? இதுவரை ஊசி கூட போட்டதில்லை என்று சொல்லும் உங்கள் அறியாமையை சுட்டிக்காட்டவே முயற்சித்தேனேயன்றி உங்களை சபித்ததாகத் தோன்றவில்லை; நீங்கள் சபிக்கப்பட்டவராக இருந்தாலும் உங்களைக் காப்பாற்றும் வழி எனக்குத் தெரியாது; வேதத்துடன் கூட்டினால் என்ன விளைவு என்பதையும் வேதத்தில் இருப்பதை மறைக்க முயற்சித்தால் என்ன தீர்ப்பு என்பதையும் வேதமே தெளிவாக சொல்லுகிறதே..?

நான் யார் என்பதை குறித்து கவலைப்படாமல் உங்கள் பரிதாப நிலையைக் குறித்து யோசித்து பாருமய்யா...பொது விவாத மேடையில் எதிர்கருத்தை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் இல்லாத நீர் எப்படி கர்த்தருடைய வேதத்தை எடுத்து போதிக்கமுடியும் என்கிறேன்..!

-- Edited by HMV on Sunday 23rd of October 2011 01:24:20 AM

__________________

மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2008
Date:
Permalink  
 
கடந்த சனிக்கிழமை மாலை சுமார் 6.30௦ மணிக்கு ஆவியானவர் என்னோடு  இடை பட்டு இந்த திரியில் நான் எழுதியிருக்கும் சில வார்த்தைகளி நிமித்தம் என்னை கடிந்துகொண்டார்.  யார் எப்படி தரமற்ற வார்த்தைகளை எழுதினாலும் நீ  அடுத்தவர் மனதை புண்படுத்தும் ஒரு சிறிய வார்த்தை கூட பயன்படுத்த கூடாது என்று திட்டமாட எனக்க உணர்த்திய அவர், உன் வார்த்தைகளினிமித்தம் யார் மனகஷ்டம் அடைந்தாலும் அது உன்னை பாதிக்கும் என்றார். சுமார் அரை மணி நேரம் அவர் துக்கப்பட்டதிநிமித்த்ம் எனக்கு மிகுந்த மன கஷ்டத்தை  உண்டானது. பின்னர் என்னை மிகவும் தாழ்த்தி அவரிடம் மன்னிப்பு கேடடு பின்னர் சமாதானம் அடைந்தேன்.
 
சம்பந்தபட்டவர்களிடமும் அதற்காக மன்னிப்பு கோருகிறேன். அத்தோடு  இனி எந்த ஒரு கடின வார்த்தையையும் இங்கு பயன்படுத்தகூடாது என்று முடிவு செய்திருக்கிறேன்.
 
நீண்ட நாட்களுக்கு முன் இதுபோன்று சம்பவம் இந்த் தளத்தின் மூலம் நிகழ்ந் துள்ளது. அதனிமித்தம் ஒருசகோதரர் தளத்தில் இருந்து வெளியேற்றபட்டார். அதன்பின்னர்   நான் யாரிடமும் தேவையற்ற விவாதம் வேண்டாம் என்று விலகி விலகி போனாலும் நம்மை சோதிப்பதேர்க்கென்று  யாராவது வந்துவிடுகிறார்கள் என்ன செய்வது?
 
ஒரு எதிரியாக இருந்தாலும் அவருக்கு விபத்து என்றால் பரிதபிப்பதுதான் சிறந்த மனித பண்பு. ஆண்டவராகிய இயேசு தன்னை சிலுவையில் அறைந்த்வர்களுக்கே மன்னிப்பு கொடுக்கும்படி வேண்டினார். ஆனால்இங்கோ ஒரு சகோதரனுக்கு விபத்து என்று கேள்விபட்டதும் ஒரு  சிறு மன வருத்தம்கூட தெரிவிக்காமல் கடினமாக எச்சரிக்கை செய்ததிநிமித்தம்  ஏற்கெனவே  மிகுந்த மனகஷ்டத்தில் இருந்த நான் அவ்வாறு எழுத நேர்ந்துவிட்டது.
 
மீண்டும்  இதுபோல கடின வார்த்தைகள் எதுவும் இங்கு எழுதப்படுவதை தவிர்க்க முகாந்திரமில்லாமல் குற்றம் சொல்ல முற்பட்டு கடின வார்த்தைகளை பயன் படுத்தும் யாருடைய பதிவையும் உடனே நீக்கிவிடுவது நல்லது என்று கருதுகிறேன். விளக்கம் கோர விரும்புவோர் சம்பந்தபட்ட  திரியிலோ அல்லது தனியாக ஒரு திரி ஆரம்பித்தோ தங்கள் எதிர்ப்புகளை முன்வைக்கலாமேயன்றி சும்மா பொத்தம் பொதுவாக இடையிடயே புகுந்து அருவருப்பு/சகிக்கவில்லை/  சந்ததிகளை இழுத்தல்/ பைத்தியக்காரன்/ விபச்சாரி  என்றெல்லாம் எழுதுவது சரியானது அல்ல.
 
மற்ற சில கிறிஸ்த்தவ தளங்கள் போல சண்டை  போடுவதர்க்கோ சாபம் விடுவதற்கோ அல்லது அடுத்தவரை குறைகூறிக்கொண்டு திரிவதர்க்கோ இந்த் தளம் செயல்படவில்லை. 
 
ஆண்டவரின் மகிமையை மாத்திரம்  பிரஸ்தாபபடுத்துவதர்க்கு இந்த தளத்தை  பயன்படுத்துவோமாக!
      
-- Edited by SUNDAR on Monday 24th of October 2011 11:13:38 AM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

HMV

இனியவர்

Status: Offline
Posts: 53
Date:
RE: சகோ. எட்வின் சுதாகருக்காக ஜெபித்து கொள்ளுங்கள்
Permalink  
 
SUNDAR wrote:
சம்பந்தபட்டவர்களிடமும் அதற்காக மன்னிப்பு கோருகிறேன். அத்தோடு  இனி எந்த ஒரு கடின வார்த்தையையும் இங்கு பயன்படுத்தகூடாது என்று முடிவு செய்திருக்கிறேன்.

 "காயத்தின் தழும்புகளும், உள்ளத்தில் உறைக்கும் அடிகளும், பொல்லாதவனை அழுக்கறத் துடைக்கும்." (நீதிமொழிகள்.20:30)

ஐயா, உங்களை உயர்த்திக்கொள்ளும் நோக்கத்தில் என்னை குற்றஞ்சாட்டுகிறீர்களே..? கடவுளையே நம்பியிருப்போருக்கு அவர் அறியாமல் ஏதும் நடைபெறாது என்பதை ஏற்கிறீர்கள் தானே,அப்படியானால் எட்வினுக்கு நேர்ந்த சிறு விபத்து நிச்சயமாகவே கடவுளுடைய எச்சரிப்பு என்பதே என்னுடைய எண்ணம்.

கடவுள் தகப்பனைப் போல சிட்சிக்கிறார், சாத்தானோ இரத்தம் சிந்த துன்புறுத்துகிறான். எட்வின் விபத்தில் (என்று நான் நினைக்கிறதில்லை, ஒவ்வொரு விபத்துமே நியமிக்கப்பட்டதே...) சிக்கினாலும் அதிகக் கேடு சம்பவிக்காத காரணம் கடவுளுடைய இரக்கமே.

இனியும் பரிசுத்த வேதாகமத்தில் இறையியல் கொள்கைகளுக்கும் முரணாக சொந்த ஞானத்தைப் பயன்படுத்தி வியாக்கியானங்கள் செய்வதை உடனே நிறுத்தாவிட்டால் கடும்விளைவுகள் உண்டாகும்;ஏனெனில் இது தேவதா காரியமல்லவா, இதில் வருவோர் போவோரெல்லாம் இஷ்டத்துக்கு கருத்து கூறக்கூடாது.

கர்த்தருடைய பெட்டி விழுந்துவிடக்கூடாதே என்ற நல்லெண்ணத்தில் எட்டிப்பிடித்தவனை கொலை செய்த பயங்கரமான தேவன் நான் ஆராதிப்பவர். நீங்கள் புத்தனும் முகமதுவும் சந்தித்த லூசிபரையும் பரிசுத்த தேவனையும் இணைத்து யோசிக்கிறீர்கள். உம்மோடு நேருக்கு நேர் நின்று போராட எனக்கும் ஞானம் போதவில்லை ஐயா..!

__________________

மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2008
Date:
Permalink  
 
சங்கீதம் 34:19 நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும், கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார்.
 
என்ற வார்த்தைகளின்படி சிறு விபத்தில் மாட்டிகொண்ட சகோ. எட்வின் சுதாகர் அவர்களை, கர்த்தர் விடுவித்து மீண்டும் கொண்டுவந்ததற்காக நாம் அவர்ருக்கு நன்றி செலுத்துவோம்.
 
மற்றபடி,
 
பக்கத்து தளத்தில் இருந்துகொண்டு அடுத்தவர்களிடம் சிண்டுமுடிவதே வேலையாய் கொண்டிருந்த சிலர் மாற்றுபெயருக்குள் இருந்துகொண்டு  இங்கு வந்து புகுந்து சிண்டுமுடிந்தே தீருவேன் என்று நிற்கும் நிலையில் அவர்களுடன் நமக்கு எந்த பேச்சும் இல்லை.
 
கர்த்தர் தாமே அவர்களுக்கும் நமக்கும் இடையே நின்று நியாயம் தீர்ப்பாராக!
 
சகோதரர் அவர்கள்  நலம் பெற்று வந்துவிட்டதால் இந்த திரி மூடப்படுவது நலம் என்று கருதுகிறேன்.
 
__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
சகோ. எட்வின் சுதாகருக்காக ஜெபித்து கொள்ளுங்கள்
Permalink  
 
HMV wrote:

__________________________________________________________________

கர்த்தருடைய காரியங்களில் துணிகரமாகக் கருத்து சொல்லாதிருக்க எட்வின் அவர்கள் எச்சரிக்கப்பட்டிருக்கிறார்;அதிக கேடுண்டாதிருக்க இனி அவர் பரிசுத்த வேதாகமம் சம்பந்தமான காரியங்களில் அதிக ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்

 ___________________________________________________________________

சகோதரன் HMV அவர்களே நீங்கள் என் தவறுகள் நிமித்தம் அதாவது தேவனுடைய கற்பனை கட்டளைகள் போன்றவற்றை கை கொள்ளாததினால் நான் தண்டிக்க பட்டேன் என்று சொல்லிருந்தால் நிச்சயமாக உங்களை பாராட்டி ஆம் சகோதரனே நீங்கள் சொல்வது தான் உண்மை என்று சொல்லிருப்பேன்

ஆனால் நீங்களே நான் கர்த்தருடைய காரியங்களில் துணிகரமாகக் கருத்து சொன்னதினால் தான் தண்டனை என்று சொல்கின்றீர்கள்

சரி சகோதரனே நீங்கள் சொல்கின்றபடி நான் வேதத்திற்கு விரோதமான கருத்தை எழுதியிருந்தால் அது உங்களுக்கு இடறலாய் இருந்துயிருந்தால் என்னை மன்னித்து விடுங்கள் இனி நான் எந்த காரியம் எழுதினாலும் தேவனிடத்தில் ஜெபித்து பின் எழுதிகின்றேன்

SUNDAR WROTE :

_____________________________________________________

சகோதரர் அவர்கள்  நலம் பெற்று வந்துவிட்டதால் இந்த திரி மூடப்படுவது நலம் என்று கருதுகிறேன்.
________________________________________________________________________________

எனக்காக ஜெபித்த  தள நிர்வாகிக்கும் மற்ற சகோதரர்களுக்கும் என் நன்றியை   தெரிவித்து கொள்கின்றேன்
 
என் தேவன் உங்களை அவருடைய சித்தத்திலே நடத்தி உங்களை ஆசிர்வதிப்பாராக
 
இப்பொழுது இந்த திரியை மூடிவிடலாம் இடையில் எழுதியதற்கு மன்னிக்கவும்......

-- Edited by EDWIN SUDHAKAR on Monday 24th of October 2011 03:18:28 PM

__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)

HMV

இனியவர்

Status: Offline
Posts: 53
Date:
RE: சகோ. எட்வின் சுதாகருக்காக ஜெபித்து கொள்ளுங்கள்
Permalink  
 
EDWIN SUDHAKAR wrote:

HMV wrote:

__________________________________________________________________

கர்த்தருடைய காரியங்களில் துணிகரமாகக் கருத்து சொல்லாதிருக்க எட்வின் அவர்கள் எச்சரிக்கப்பட்டிருக்கிறார்;அதிக கேடுண்டாதிருக்க இனி அவர் பரிசுத்த வேதாகமம் சம்பந்தமான காரியங்களில் அதிக ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்

 ___________________________________________________________________

சகோதரன் HMV அவர்களே நீங்கள் என் தவறுகள் நிமித்தம் அதாவது தேவனுடைய கற்பனை கட்டளைகள் போன்றவற்றை கை கொள்ளாததினால் நான் தண்டிக்க பட்டேன் என்று சொல்லிருந்தால் நிச்சயமாக உங்களை பாராட்டி ஆம் சகோதரனே நீங்கள் சொல்வது தான் உண்மை என்று சொல்லிருப்பேன்

ஆனால் நீங்களே நான் கர்த்தருடைய காரியங்களில் துணிகரமாகக் கருத்து சொன்னதினால் தான் தண்டனை என்று சொல்கின்றீர்கள்

சரி சகோதரனே நீங்கள் சொல்கின்றபடி நான் வேதத்திற்கு விரோதமான கருத்தை எழுதியிருந்தால் அது உங்களுக்கு இடறலாய் இருந்துயிருந்தால் என்னை மன்னித்து விடுங்கள் இனி நான் எந்த காரியம் எழுதினாலும் தேவனிடத்தில் ஜெபித்து பின் எழுதிகின்றேன்

SUNDAR WROTE :

_____________________________________________________

சகோதரர் அவர்கள்  நலம் பெற்று வந்துவிட்டதால் இந்த திரி மூடப்படுவது நலம் என்று கருதுகிறேன்.
________________________________________________________________________________

எனக்காக ஜெபித்த  தள நிர்வாகிக்கும் மற்ற சகோதரர்களுக்கும் என் நன்றியை   தெரிவித்து கொள்கின்றேன்
 
என் தேவன் உங்களை அவருடைய சித்தத்திலே நடத்தி உங்களை ஆசிர்வதிப்பாராக
 
இப்பொழுது இந்த திரியை மூடிவிடலாம் இடையில் எழுதியதற்கு மன்னிக்கவும்......

-- Edited by EDWIN SUDHAKAR on Monday 24th of October 2011 03:18:28 PM

 நண்பர் எட்வின் அவர்கள் நலம்பெற்று திரும்பியது குறித்து மகிழ்ச்சியடைகிறேன்; எனது துணிச்சலான கருத்துக்களால் தங்கள் மனம் புண்பட்டிருக்குமானால் அதற்காக மனம் வருந்துகிறேன்; திரு.சுந்தர் அவர்கள் என்னை அந்நியமாக பார்த்து ஏதேதோ யூகமான சேதிகளைச் சொல்லுகிறார்; மாற்று கருத்து சொல்லுவோரை எதிரிகளாக பாவிக்காதிருங்கள் என்று வேண்டுகிறேன்;நான் யார் என்பதை அறிய வேண்டுமானால் நீங்கள் மின்னஞ்சல் அனுப்பி விசாரிக்கலாம்;ஆனால் என்மீது பழிபோடுகிறீர்கள்; எனவே நான் இனி இங்கு எழுதுவது குறித்து அதிகம் யோசிக்கிறேன்.ஆனாலும் திரு.சுந்தர் அவர்களின் விசேஷித்த நற்குணங்கள் போற்றுதற்குரியது.உங்களிடம் கடவுளுக்கு பயப்படும் பயம் இருக்கிறது என்றே கருதுகிறேன்.

__________________

மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2008
Date:
Permalink  
 
HMV wrote:

மாற்று கருத்து சொல்லுவோரை எதிரிகளாக பாவிக்காதிருங்கள் என்று வேண்டுகிறேன்; நான் இனி இங்கு எழுதுவது குறித்து அதிகம் யோசிக்கிறேன். ஆனாலும் திரு.சுந்தர் அவர்களின் விசேஷித்த நற்குணங்கள் போற்றுதற்குரியது.உங்களிடம் கடவுளுக்கு பயப்படும் பயம் இருக்கிறது என்றே கருதுகிறேன்.

சகோ. HMV அவர்களே எனக்கு அனேக எச்சரிப்புகளை விடுத்து கடுமையான  வார்த்தைகளை பிரயோகித்த  தாங்களின் திடீர் என்று இப்படி மாற்றம் அடைய  காரணம் என்பதை நான் கொஞ்சம் அறிந்து கொள்ளலாமா?

இதை நான் கேட்பதற்கு காரணம் இந்த தளத்துக்குள் யாரும் புகுந்து தேவையற்ற வார்த்தைகளை அவ்வளவு சீக்கிரம் உபயோகித்துவிட முடியாது என்று நான் உறுதியாக விசுவசிக்கிறேன். தேவனின் காவல் இந்த தளத்துக்கு உண்டு என்பதை நான் பலமுறை அறிந்திருக்கிறேன் மேலும் அவ்வாறு காவல்காக்க வேண்டும் என்றும் நான் தேவனிடம் மற்றாடி வருகிறேன். இந்த வேலை அவருடயது அவருக்கு விருப்பமில்லை அவர் காவல் காக்கவில்லை என்றால் மூடிப்போட்டு விட்டு வேறுஒரு ஊழியத்தை பார்க்க  போய்கொண்டே இருப்பேன்.

தாங்கள் இந்த தளத்தில் நீங்கள் நீண்ட நாட்களாக உறுப்பினராக இருந்தும் ஒரு முழுமையான கட்டுரையோ செய்தியோ எதுவும் இங்கு தரவில்லை. முன்ன மெல்லாம் ஆதரவான கருத்துக்களை தெரிவித்த நீங்கள் திடீர் என்று கடினமாகி வார்த்தைகளை பதிவிட்டீர்கள். நான் தங்களுக்கு சில பதில்களை எழுதினாலும் என்னிடம் எதவாது தவறு இருந்தால் வெளிப்படுத்தும்படி ஆண்டவரிடம் இது குறித்து ஜெபித்து வந்தேன்.

இப்படிபட்ட சூழ்நிலையில் தங்களின் இந்த மாற்றமான  பதிவு ஆச்சர்யத்தை தருகிறது எனவேதான் இந்த கேள்வியை  முன்வைக்கிறேன். விருப்பம் இருந்தால் ஆண்டவர் ஏவினால் பதில் தரவும்.

மேலும் ஒரு காரியத்தை நான் இங்கு தெரிவித்து கொள்ள விரும்புகிறேன். ஒரு மனுஷனின் இருதய கடினமே பிறரை அதற்க்கு ஏற்றாற்போல் கடினமாகுமே யன்றி  நான் யாரையும் எதிரியாகவோ அல்லது வேண்டாதவனாகவோ பார்ப்பதில்லை. இரண்டுபேரும் கடினமாகவே எழுதிக் கொண்டு போனால் அது பார்ப்பவர்களுக்கு கிறிஸ்த்துவை காட்டாது என்ற காரணத்தினாலேயே ஆண்டவரின் உணர்த்துதலை அறிந்து என்னை தாழ்த்திக்கொள்ள விரும்பினேன்.

இந்த தளத்தில் எழுதுவதும் எழுதாததும் தங்கள் தனிப்பட்ட  விருப்பம். ஆனால் கிறிஸ்த்தவர்கள் சரியாக தெரியவில்லை என்று ஒதுக்கிவிடும் அனேக முக்கியமான கேள்விகளுக்கு ஆண்டவரிடம் இருந்து பதில் அறிய விளையும் எங்களை நீங்கள் வெறுத்து ஒதுக்கவேண்டாம் என்று அன்புடன்  கேட்டு கொள்கிறேன்.

இக்காரியங்களை நான் அறிந்து எழுத விளைவதற்கு காரணம் நான் ஒரு காலத்தில் என்னிடம் சுவிசேஷம் சொல்ல வந்தர்வர்களிடம் இதுபோன்ற சில சிக்கலான கேள்விகளை கேடடு அவர்கள் எனக்கு பதில் சொல்லமுடியாமல் போன காரணத்தால் நான் ஆண்டவரை நிராகரித்து வந்தேன். பின்னர் ஆண்டவரிடமும் கூட "நான் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் சரியான பதிலை தந்தாள் மட்டுமே  நான் உம்மை ஏற்றுக்கொள்வேன்" என்று உறுதியாக நின்றேன். அதே நேரத்தில் "நீர் அவ்வாறு எனக்கு தெரிவித்தால் உம்முடைய வார்த்தைக்கு நான் முழுமையாக கீழ்படிந்துவாழ முழுமனதோடு  முயற்ச்சிப்பேன்" என்றும் கூறினேன் எனவேதான் ஆண்டவர் எனக்கு சில அறிய உண்மைகளை  உணர்த்தினார்.

என்னைபோல யாரும்  கிறிஸ்த்தவர்களிடம் எல்லா கேள்விக்கும் பதில் இல்லை என்று தேவனை நிராகரிக்ககூடாது என்ற நோக்கிலேயே இங்கு பல கேள்விகளுக்கு ஆண்டவரிடம் விசாரித்து  பதில் எழுதுகிறேன். மற்றபடி வேறு எந்த நோக்கமும் இல்லை. அதை ஏற்ப்பதும் நிராகரிப்பதும் தங்கள் விருப்பம்.

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard