சபை என்பது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்த்து இரத்தம் சிந்தி சம்பாதித்துள்ள ஜனங்களின் கூட்டத்தை குறிக்கும் என்று கருதுகிறேன்.
புதிய ஏற்பாட்டு சபை என்பது பழையஏற்பாட்டு சபையை போல் அல்லாமல் யார் வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் வந்து இணைந்து கொள்ளலாம் என்னும் நிலையில் உள்ளது.
உலகில் உள்ள எல்லோருக்கும் இந்த சபை குறித்த அழைப்பு
உண்டு. யூதனென்றும் கிரேக்கன் என்றும் பாகுபாடு இல்லை. எவர் இரட்சிக்கபட்டு இயேசுவின் இரத்தத்தால் பாவங்கள் கழுவப்பட்டாரோ அவர் இந்த சபையின் உறுப்பினர் ஆகிவிட முடியும்.